Friday, June 15, 2007

செஞ்சிக்கோட்டை வாலிபன் ராஜா தேசிங்கு!

தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான். சென்னை,வேலூர் கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.

ஆடு மேய்க்கும் ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.புதையல் பணத்தில் கோட்டை கட்டியவர் பெயர் ஆனந்த கோன்,அவ்ரது மகன் கிருஷ்ணக் கோன் தான் கிருஷ்ண கிரி உருவாக காரணமாக இருந்தார் பின்னாளில்.

பின்னாளில் செஞ்சிக்கு புகழ் வரக்காரணமாக இருந்தவர் ராஜா தேசிங்கு , இவரைப்பற்றி எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களும் , கதைகளும் உண்டு.

ராஜ தேசிங்கின் வரலாறைப் பார்ப்போம், மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெரிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக , தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப்.இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சாமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார்.அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் மகமூத் கான் என்பவர் தலைமையில் அனுப்பினார்.

மகமூத் கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப் சிங் , ராஜபுத்திர வீரர் அவரது மகன் தான் ராஜ தேசிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்க சீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்ப்பட்டதால் சொருப் சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து ,அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப்.இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷா ஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார்.

ஷா ஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப் சிங்க்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜா தேசிங்கும் சென்றான்.தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான்.வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான் .அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை). அவர் சமைந்த நேரம் சரியான நேரம் இல்லை என்பதால் ஆறு மாதக்காலம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்ககூடது என தடை விதித்து விட்டார் பெண்ணின் தந்தை.முகம் பார்க்காமலேயே தான் திருமணம் நடந்து அந்தக்கால காதல் கோட்டை!

-தொடரும்.

15 comments:

Sowmya said...

\\" அந்தக்கால காதல் கோட்டை!" //
:)

வவ்வால் said...

வாங்க பெபி, நன்றி!

ஆகாசக்கோட்டை தான் கட்டக்கூடாது! :-))

ENNAR said...

வரலாற்று கதைகளை தொடருங்கள் நன்றாக உள்ளது ராஜாதேசிங்கு வரலாறு

ENNAR said...

வரலாற்றை தொடங்குங்கள் நான் படிக்கிறேன் வவ்வால்

வவ்வால் said...

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி என்னார் , அவ்வப்போது தொடர்ந்து எழுதுகிறேன்.

Anonymous said...

இப்பதிவு இப்பொழுதுதான் என் கண்ணில் பட்டது. தொடர்ந்து வரலாற்று கதைகளை எழுதி வாருங்கள் தோழரே. பதிவிற்கு நன்றி.

வவ்வால் said...

விக்னேஷ்,

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி, ஏதோ எனக்கு தெரிந்த வரலாற்றை எழுதி வருகிரேன் , நன்றாக இருந்தால் அது அதிர்ஷ்டம் தான். அடிக்கடி வாங்க!

நாஞ்சில் பிரதாப் said...

வரலாறிலும் புகுந்து விளையாடுறீங்களே

சரி ஒரு சந்தேகம் இது போன்ற வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆதாரங்கள் என்ன? இதை வைத்து இதுபோன்ற நிகழ்வுகள் கூறப்படுகின்றன.

வவ்வால் said...

பிரதாப்குமார்,
நன்றி!

இவை எல்லாம் அக்காலக்கட்டத்தை சார்ந்த நூல்களிலும், கல்வெட்டிலும் காணப்படுகிறது, மேலும் , பல நாட்டுபுறப்பாடல்கள்,கதைகள் மக்களிடையே உலாவி வருகிறது கதை,பாடல்களில் மிகைப்படுத்துதல் இருந்தாலும் சம்பவங்கள் நடந்தது என்ன என்று காட்டுமே. பல ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய folk கதைகளில் இருந்து மிகப்பெரிய சரித்திர உண்மைகளை கூட தோண்டி எடுத்துள்ளார்கள்."holy grail" and "king arthur"போன்றவை எல்லாம் இந்த வகை தான்.

சிவபாலன் said...

மிக நல்ல இடுக்கை.

தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

வவ்வால் said...

நன்றி சிவபாலன்!

G.Ragavan said...

செஞ்சிக் கோட்டைக்கும் காதல் கோட்டைக்கும் இப்பிடியொரு தொடர்பா! இதெல்லாம் நெறையச் சொல்லுங்கய்யா. தெரிஞ்சுக்கிறோம். தேசிங்கு ராஜாவும் பஞ்சகலியாணியும் கேள்விப்பட்டிருக்கோம். விரிவாச் சொல்லுங்க.

G.Ragavan said...
This comment has been removed by the author.
வவ்வால் said...

ராகவன் ,
நன்றி!
உங்க விருப்பபடியே அவ்வப்போது சரித்திரத்தை கொஞ்சம் சாறு புழிந்து கொடுக்கிறேன். அப்புறம் படிக்கிறவங்க பாடு திண்டாட்டம் தான்!(இந்த பக்கம் வந்தாலே நிறைய பேரு கொட்டாவி விடுறாங்க)

jansi kannan said...

செஞ்சிக்கோட்டை வரலாறு மிகவும் அருமை. தொடருங்கள். விழுப்புரம் அருகே உள்ளது. நானும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி என்ற செஞ்சிக்கோட்டைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளேன். மீண்டும் வரலாறுகளை எழுத வாழ்த்துக்கள்.