Thursday, July 12, 2007

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

கடலில் அலையடித்தால் வீட்டில் விளக்கெறியுமா?

மின்சாரம் இல்லாத உலகில் இனி மனிதன் இருக்க மாட்டான் , நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டேயுள்ளது , பொறக்கும் போதே கைல செல்ஃபோன், கம்பியூட்டர் நு தான் பொறக்குறாங்க இப்போ, எல்லாத்துக்கும் மின்சாரம் வேணுமே, அரசு இலவச மின்சாரம் தருமா? அதுக்கு எங்கே போகும், ஆனால் கடல் தரும் மின்சாரம் அதுவும் இலவசமா, இது ஒரு மின்சார கனவு இல்லை , உண்மை!

பொதுவா மின்சாரம் , அனல் ,புனல்( எண்ணை ஊத்துற புனல் இல்லிங்கோ), அணு மின்சாரம் எனத்தான் தயாரிக்கப்படுகிறது , இவைகளால் பல சுற்று சூழல் மாசு ஏற்படுவதால் , தற்போது மரபு சாரா மின் உற்பத்தி பக்கம் அரசாங்கம் திரும்பியுள்ளது.

அப்படி மரபு சார மின்சார தயாரிப்புகளில்,

காற்றாலை,
சூரிய சக்தி ,
புவி வெப்ப சக்தி ,
கடல் அலை மின்சாரம் என தயரிக்கப்படுகிறது.

இப்பொ அலை அடிச்சா ஷாக் அடிக்கும் மின்சாரம் எப்படினு வருதுனு லேசா பார்ப்போம்!

கடலும் ,ஆறும் சந்திக்கும் இடங்கள் , அல்லது கடலை ஒட்டியுள்ள கடல் நீர் ஏரிகள்(லகூன்)
ஆகியவற்றில் ஒரு தடுப்பணைக்கட்டுவார்கள் அதில் ஒரு வாய்க்கால்,அல்லது குழாய்களை அமைத்து அதனுடன் டர்பைன் பொருத்தி அதனைக்கொண்டு மினுற்பத்தி செய்வார்கள்.இதனல் சில சுற்று சூழல் பாதிப்பு உண்டு , கழிமுகஙளில் வரும் பறவைகள் ,மற்றும் அது சார்ந்த உயிர் மண்டலம் பாதிக்கப்படும்.

இதனை தவிர்க்க கடலில் அலை மின்சார உற்பத்தி மைங்களை தற்போது அமைக்கிறார்கள்.

நடுக்கடலில் தூண்களை அமைத்து அதனுடன் டர்பைன் மற்றும் ஜெனெரேட்டர்கள் பொருத்தி நீர் அடி நீரோட்டத்தின் விசையை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள், இதிலும் ஒரு மேம்பாடு செய்து நீரில் மூழ்கி இருக்கும் டர்பைன்களும் அமைக்கிறார்கள்.நல்ல கடல் அடி நீரோட்டம் ,அலையடிக்கும் இடங்களில் மிக பெரிய அளவில் மின்னுற்பத்தி செய்யலாம்.

நிலவுக்கும் பூமிக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு சக்தி மாறுபாடுகளினால் அலை உற்பத்தி ஆகிறது எனவே ஒரு முறை அமைத்து விட்டால் காலா காலத்திற்கும் இலவச மின்சாரம் தான்!

23 comments:

Anonymous said...

வெரிகுட்...

நல்ல ஐடியா...இதனை இப்போ தான் முதல் முறை கேள்விப்படுகிறேன்...

அறிமுகத்துக்கும் நன்றி வவ்வால்....

வவ்வால் said...

வாங்க ரவி!

நன்றி! நீங்களே இப்போ தான் கேள்விபடுறிங்களா? ஆச்சரியமா இருக்கு(தொழில்னுட்ப கில்லடி ஆச்செ). ப்ரான்ஸ், அமெரிக்காவில் எல்லாம் கடல் அலை மின்சாரம் மூலமாக 1000 கணக்கான மெகா வாட்ச் மின் உற்பத்தி செய்கிறார்களாம்.

மாயன் said...

எப்பயோ ஒரு தடவ நிம்மதியா மக்கள் கடற்கரையில் பொழுதை போக்கிட்டு இருக்காங்க.. இனிமே அரசியல்வாதிங்க அங்கேயும் கர்சீப் போட்டு இடம் பிடிக்க நாயா பேயா அலைய ஆரம்பிச்சுடுவாங்க... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வவ்வால் said...

வாங்க மாயன்,

dont worry ,அரசியல்வாதிகளுக்குக்கு இன்னும் கடல் நீரை குடினீர் ஆக்கும் வித்தையே புரியவில்லை, இது எங்கே இருந்து புரிய போகிறது , நம் நாட்டு பல அரசியல்வாதிகளும் ஹார்வர்டில் படித்தேன் என்று சொல்லிக்கொள்வார்கள் கொஞ்சம் கூட பொது அறிவு இருக்காது, தயானிதிமாறன் எல்லாம் எம்.பி.ஏ என்பார் என்னத்த படிச்சாரோ!

1968இல் பிரான்சில் கடல் அலை மின்னுற்பத்தி செய்துள்ளார்கள். அதுவும் குறைந்த அளவு இல்லை 4000 மெஹாவாட்.நாம் என்னவென்றால் இன்னும் கூடாங்குளம் போல அணு உலைக்காட்டத்தான் ஆர்வம் கட்டுகிறோம். இந்தியாவில் 6000 கிலோ மீட்டாருக்கும் மேல் கடற்கரை உள்ளது. ஒரு இடத்திலாவது இப்படி செய்து இருக்க வேண்டாமா?

PPattian said...

நல்ல தகவல் வவ்வால். சீக்கிரமே நாமலும் இப்படி தயாரிப்போம் என நம்புவோம்.

PPattian said...

இதைப் படித்ததும் எனக்கு ஞாபகம் வந்தது இந்த புதிர்தான்..

Irrigation of the land with seawater desalinated by fusion power is ancient. What is it called?

வவ்வால் said...

வாங்க பட்டியன்,
நன்றி, நாமும் இப்படி மரபுசார முறைகளை பயன்படுத்தி மாசில்லா முறையில் மின் உற்பத்தி, நீர் சுத்திகரிப்பு செய்தால் தான் தேவைகளை சமாளிக்க முடியும்!

இத்னை மைகேல் மெக்லாரி என்பவர் சொல்லி இருக்கிறார் நீங்கள் முழுதாக அதை படிக்கவில்லையா அதில்யே அர்த்தமும் உள்ளதே "Irrigation of the land with seawater desalinated by fusion power is ancient. It's called 'rain'."


இதில் பியுஷன் பவர் என்று சொன்னதால் குழப்பம் வந்து விட்டதா, சூரியன் தான் இயற்கையான பியுஷன் பவர் உற்பத்தி மையம். அதன் வெப்பத்தில் தானே கடல் நீர் ஆவியாகி மழையாக பெய்கிறது.

அதுவும் இல்லாமல் அணு உலை மைங்களை மின் உற்பத்திக்கும் , கடல் நீர் குடிநீர் ஆக்குவதற்கும் பயன் படுத்திகொள்ளலாம்.

Anonymous said...

கடல் அலையிலே ஒரு உருளு உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது ன்னு நீர் எழுதுவீர்! இப்பொழுது ஏதொ அறிவு பூர்வமாக கலாய்க்கிறீர்... உம்முடைய டாடா இண்டிகாம் இணைப்பு நன்றாக உள்ளதா?

காணாமல் போன தலால் தெரு காளை.

வவ்வால் said...

வாங்க புல்ஸ்,,

தலால் தெரு காளையா , தறிக்கெட்டு அலையும் காளையா நீர், யாகூ விட்டு துறவறம் வாங்கியாச்சா? எட்டு புள்ளி ,பதினாறு புள்ளி கோலம் போடும் பொருளாதார புள்ளி ஆச்சே! ஏதோ அப்போ அப்போ எனக்கும் சிறு மூளை , பெரு மூளை வேலை செய்யுதுனு காட்டிக்க தான் இப்படிலாம் ஜல்லி அடிக்குறேன்.

பத்மா said...

inthe idea nanga 1989 la oru project seithom itk.current frm waves due to difference in temperature.and waves motionnnu.appo yarum athe purinjukala.urupadama na senja oru modelkku prize koduthanga lol.nice nice

வவ்வால் said...

வாங்க பத்மா!

நீங்க காலத்திற்கு முந்தி இருக்குகிங்க அதான் அப்போ அது புரியல... பெரிய விஞ்ஞானியா இருப்பிங்க போல தெரியுதே!

நாஞ்சில் பிரதாப் said...

வவ்வால் அவர்களுக்கு ஒரு வணக்கம்

கடல்நீரி்ல் குடிநீர் தயாரிக்கும் கலையை கொஞ்சம் சொல்றீங்களா?

அப்புறம் அமாவசை அன்று கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்க காரணம் என்னங்க?

ரொம்ப நாள் இந்த சந்தேகம் ஒரே அரிப்பா இருக்குங்க.

வவ்வால் said...

வணக்கம் பிரதாப்குமார்,

நன்றி,

கடல்நீரைக்குடி நீர் ஆக்குவது பற்றி அனைவருக்கும் தெரிஉம் என நினைத்திருந்தேன். ஒரு பதிவு போடுகிறேன் பின்னுட்டத்தில் சொன்னால் பெரிதாக போய்விடும்.

//அப்புறம் அமாவசை அன்று கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்க காரணம் என்னங்க?//

கடல் அலை இரண்டு வகையினால் உருவாகிறது, ஒன்று பூமியின் சுழற்சியினால் ஒரு மையவிலக்கு விசை உருவாகி அலை ஏற்படும். ,மற்றது நிலவின் ஈர்ப்பு விசையினால்.

அம்மாவாசை அன்று மட்டுமல்ல முழு நிலவு அன்றும் கடல் அலை விசையோடு தான் இருக்கும். காரணம் அப்பொழுது தான் நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் குறைவாக இருக்கும். மேலும் பூமியின் மையவிலக்கு விசை , நிலவின் ஈர்ப்பு விசை இரண்டும் ஒரே நேர்க்கோட்டில் செயல்படும், எனவே அதிக ஆர்ப்பரிப்புடன் கடல் இருக்கும். எந்த இடத்தில் முழு நிலவு ,அல்லது அம்மாவாசை கான்கிறோமோ அந்த பகுதிக்கு நேராக நிலவு உள்ளது என்று பொருள். பிறை நிலவு எனில் பக்கவாட்டில் நிலவு இருப்பதாகும்.நிலவு ஒரு நீள்வட்டப்பாதையில் தான் பூமியை சுற்றி வருகிறது.

அரிப்பு ஏற்படுகிறதா கடல் தண்ணில குளிச்சா அரிக்கத்தான் செய்யும்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதைப் பற்றி இஸ்ரேலியப் பொறியியலாளர்களில் கருத்துக்கள் செய்முறை விளக்கங்கள் அடங்கிய நிகழ்ச்சியொன்று தொலைக்காட்சியில் பார்த்தேன்.
காற்று; அலை ,சூரிய- மின்சாரம் செவ்வனே செயற்பட்டால்; நமது நாடுகளுக்கு வரப்பிரசாதம்.
நல்ல தகவல்; தலைகீழாகத் தொங்கிலாலும் உங்கள் பார்வை நேர்.

வவ்வால் said...

யோகன் பாரிஸ்,

நன்றி!
//காற்று; அலை ,சூரிய- மின்சாரம் செவ்வனே செயற்பட்டால்; நமது நாடுகளுக்கு வரப்பிரசாதம்.//

உண்மை தான் , இயற்கையாக மரபு சாரா எரிபொருள், சக்திகளுக்கு நம் நாடு உகந்த இடம் , ஆண்டு முழுவதும் வெய்யில் , நீண்ட கடற்கரை( சுமார் 6000kms) ,காற்றுக்கும் பஞ்சம் இல்லை ஆனாலும் அணுமின்சாரம் ,அனல் மின்சாரம் என்று தான் திட்டம் போடுகிறார்கள் நம் அரசியல்வித்தகர்கள்.

ஏன் மாற்று முறைகளை அதிகம் கண்டுகொள்வதில்லை என புரியவில்லை.

மனிதன் தலைகீழாக நின்றாலும் உருவங்கள் நேராகத்தான் தெரியும். அதுவும் நான் அந்தரத்தில் தலை கீழாக தொங்கினால் இன்னும் ஏரியல் வியுவ்ல நேரா நல்லாவே தெரியும்! :-))

குமரன் (Kumaran) said...

கடல் அலை மின்சாரம் பற்றிய விளக்கம் நல்லா இருக்கு. புவி வெப்ப சக்தி மின்சாரத்தைப் பத்தியும் படிச்சதா நினைவு இருக்கு. அதைப் பத்தியும் எழுதுங்களேன்.

வவ்வால் said...

வாங்க குமரன்,

நன்றி!

புவி வெப்ப சக்தி மின்சாரத்திற்கு இந்தியாவில் வழி இல்லை. கொஞ்சம் எரிமலை இருக்கனும். இல்லைனா அதிதீத வெப்பம் நிலத்தடியில் நிலவனும் அதன் பெர மட்டும் சொல்லிடு ஜக வாங்கினேன். பதிவு வேணா தனியா போட்ரலாம்.

மேலும் ஒரு கூடுதல் நன்றி, நீங்க சொன்னபிறகு தான் தமிழ்மணம் மாறியது தெரியும் இப்போ நானும் பின்னுட்ட பொருக்கியாகிட்டேன்! :-)) அதாவது மறுமொழி திரட்டியில் வந்துடேன் சும்ம டமாசு!

ILA (a) இளா said...

நவீனம்-புகுந்து விளையாடுது போங்க. நல்ல நல்ல பதிவா போடுறீங்களே, ஏதாவது ஆசான் தொழில் பார்க்குறீங்களா?

நாஞ்சில் பிரதாப் said...

சே...கொன்னுட்டீங்க வவ்வால்...ரொம்ப நன்றி...அப்புறம் அந்த கடல்நீர் பதிவை கண்டிப்பாக போடுங்க...
சரி அது ஏன் ரெர்ம்ப நாளா தலைகீழாவே பார்க்கறீங்க...கொஞ்சம் நிமிர்ந்தும் பாருங்க

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

நம்ம நாட்டுக்கு முதல் தேவை இப்போதைக்குச் சுத்தமான தண்ணீர்.
கடல் நீரைச் சுத்தம் செஞ்சு அதை ஊருக்குள்ளெ விநியோகிக்கக்கணும்.
தண்ணி தாராளமா இருந்தா சுத்தம் பேணும் மனப்பான்மை நம்ம மக்களுக்கு
வந்துருமுன்னு ஒரு நப்பாசைதான்.

அடுத்தது மின்சாரம்.

வவ்வால் said...

இளா,

வருகைக்கு நன்றி!

ஏதோ நான் படித்ததை அப்படியே கொஞ்சம் தமிழ் படுத்தி போடுகிறேன் எல்லாம் சுட்ட பழம் தான்!

வவ்வால் said...

பிரதாப்குமார்,
நன்றி!
ஏதோ படித்ததை எனக்கு புரிந்த அளவில் போடுகிறேன் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

எத்தனை மனிதர்கள்,எத்தனை பார்வைகள் எத்தனைக்கோணங்கள் எனவே இது வவ்வாளின் பார்வைக்கோணமாக இருந்து விட்டு போகட்டும் தொங்குவோம் தெம்பு இருக்க வரைக்கும் lol!

வவ்வால் said...

வாங்க துளசி கோபால் ,

நன்றி, உண்மை தான் தண்ணீர் மிக அவசியம் , அதே சமயம் மின்சாரம் தேவை, மாநகரங்களில் கூட மின் தடை ஏற்பாட்டுக்கொண்டு தான் இருக்கிறது, அண்ணாப்பல்கலையில் தங்கிய அப்துல்கலாம் கூட சமிபத்தில் மிந்தடையில் மாட்டி இருந்தாரே(இதே அவர் அதிபராக வந்து இருந்தால் இப்படி ஆகி இருக்குமா)