ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!
மவுண்ட் ரோட் - அண்ணா சாலை
பூனமல்லி ஹை ரோட் - பெரியார் ஈ.வி.ஆர் சாலை
எட்வர்ட் எல்லியட்ச் ரோட் - டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை
எல்லியட் பீச் ரோட் - சர்தார் படேல் சாலை
மவ்பரிஸ் ரோட் - டி.டி.கே சாலை
கமாண்டர் இன் சீப் ரோட் - எத்திராஜ் சாலை
நுங்கம்பாக்கம் ஹை ரோட் - உத்தமர் காந்தி சாலை
வாரென் ரோட் - பக்தவசலம் சாலை
லாயிட் ரோட் - அவ்வை ஷண்முகம் சாலை
ஆலிவர் ரோட் - முசிரி சுப்ரமணியம் சாலை
மான்டியத் ரோட் - ரெட் கிராஸ் சாலை
பைகிராப்ட்ஸ் ரோட் - பாரதி சாலை
பர்ஸ்ட் லைன் பீச் ரோட் - ராஜாஜி சாலை
ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை
லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் - டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை
சேமியர்ஸ் ரோட் - பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.
கிரிபித் ரோட் - மகா ராஜபுரம் சந்தானம் சாலை
வால் டாக்ஸ் ரோட் - வ.வு.சி சாலை.
ஆர்காட் ரோட் - என்.எஸ்.கே சாலை
உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!
5 comments:
ரொம்ப நாளா எழுதணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்த விஷயம் இது வவ்வால். இதோ எனக்குத் தெரிஞ்சவரை
பதில். சரியா இல்லையான்னு சசென்னைவாசிகள் சொல்லணும்:-)
மவுண்ட் ரோட் - அண்ணா சாலை: இந்த ரோடு ஆயிரம்விளக்குஎல்லாம் தாண்டி GST ரோடுலே போய்ச் சேர்ந்துருது
பூனமல்லி ஹை ரோட் - பெரியார் ஈ.வி.ஆர் சாலை: இது செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிச்சு, அமிஞ்சிக்கரை, அரும்பாக்கம்வழி பூவிருந்தவல்லிக்குப்போகுது
எட்வர்ட் எல்லியட்ச் ரோட் - டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை: மயிலாப்பூர்
எல்லியட் பீச் ரோட் - சர்தார் படேல் சாலை:
மவ்பரிஸ் ரோட் - டி.டி.கே சாலை : ராயப்பேட்டை
கமாண்டர் இன் சீப் ரோட் - எத்திராஜ் சாலை :எழும்பூர்
நுங்கம்பாக்கம் ஹை ரோட் - உத்தமர் காந்தி சாலை : அண்ணாசாலையில் இருந்து நுங்கம்பாக்கம் வருது
வாரென் ரோட் - பக்தவசலம் சாலை : மயிலாப்பூர்
லாயிட் ரோட் - அவ்வை ஷண்முகம் சாலை: ராயப்பேட்டை
ஆலிவர் ரோட் - முசிரி சுப்ரமணியம் சாலை : மயிலாப்பூர்
மான்டியத் ரோட் - ரெட் கிராஸ் சாலை : எழும்பூர்
பைகிராப்ட்ஸ் ரோட் - பாரதி சாலை : திருவல்லிக்கேணி
பர்ஸ்ட் லைன் பீச் ரோட் - ராஜாஜி சாலை: பாரி முனை கடைசி. கடற்கரை ரயில்நிலையம் இருக்கும் ரோடு
ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை : ராயப்பேட்டை
லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் - டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை : அடையார்
சேமியர்ஸ் ரோட் - பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை. : ?????
கிரிபித் ரோட் - மகா ராஜபுரம் சந்தானம் சாலை: தி.நகர்.
வால் டாக்ஸ் ரோட் - வ.வு.சி சாலை. : செண்ட்ரல் ரயில் நிலையம் பக்கத்து ரோடு
ஆர்காட் ரோட் - என்.எஸ்.கே சாலை : கோடம்பாக்கம், வடபழனி
ஹாரிஸ் ரோடு - ஆதித்தனார் சாலை (புது பேட்டை )
அவ்வை சண்முகம் சாலை யின் பழைய பெயர் தெரியவில்லை (ராயபேட்டை யில்)
நல்ல வலைப்பூ!
தொடருங்கள்.
-ப்ரியமுடன்
சேரல்
துளசி கோபால்,
நன்றி! அயல்னாட்டில் இருந்தாலும் அத்தனை சாலைகளின் இருப்பிடமும் தெளிவாக சொல்றிங்க! இன்னும் நிறைய சாலைகளின் பெயர் மாறி இருக்கிற்து அகழ்வராய்ச்சி செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும்.
சேமியர்ஸ் ரோட் - பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை. :nandanam
---------------
முரளி,
நன்றி!
லாயிட்ஸ் சாலையின் பெயர் தான் அவ்வை ஷண்முகம் சாலை என தந்துள்ளேனே .
ஹாரிஸ் சாலைக்கு தான் யோசித்துகொண்டே இருந்தேன் , புதுப்பேட்டையில் வருமே என்று, சரியாக ஆதித்தனார் சாலை என்று சொல்லிவிடிடிகள்.
பாந்தியன் சாலைக்கு என்ன பெயர்?
============================
சேரல்,
வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
இத்தனை பெயருக்கும் சொந்தக்காரர் சென்னை.
Post a Comment