பட்டம் பற ... பற ... எப்படி பறக்கிறது...
பட்டம் என்பது சதுரமான ஒரு காகிதம் அதன் மீது ஒரு புறம் இருந்து வேகமான காற்று மோதுகிறது ... அப்படி மோதும் காற்று தடைப்பட்டு தொடர முடியாது ஆனால் பட்டம் தவிர்த்த பகுதிகளில் காற்று கடந்து செல்லும் எனவே பட்டத்தின் நேர் பின் புறம் காற்றின் அழுத்தம் குறையும் எனவே முன் பகுதியில் உள்ள கூடுதல் காற்ரழுத்தம் காரணமாக ஏற்படும் விசை பட்டத்தினை பின் நோக்கி தள்ளும்...அதே சமயம் பட்டம் தறைக்கு ஒரு கோணத்திலும் இருப்பதால் அதே கோணத்தில் காற்று செல்லும் அதனை தொடர்ந்து பட்டமும் மேல்னோக்கி தூக்கப்படும்.
இப்படியாக பட்டம் பறக்க ஆரம்ப்பிக்கிறது எளிதாக தெரிந்தாலும் இதன் அடிப்படை தான் விமானம் இயங்க காரணம்.
பெர்னோலி என்பவரின் நீர்மவியல் விதி இதில் செயல்படுகிறது
சுருக்கமாக அதனைப் பார்ப்போம்,
அழுத்தம் + இயக்க ஆற்றல்/ பருமன் = மாறிலி
இது தான் பெர்னோலியின் தத்துவத்தின் சூத்திர வடிவம்
where:
- v = fluid velocity along the streamline
- g = acceleration due to gravity
- h = height of the fluid
- p = pressure along the streamline
- ρ = density of the fluid
- எந்த ஒரு பொருள் அதன் எடைக்கு சமமான காற்றினை இடப்பெயர்ச்சி செய்கிறதோ அதனால் பறக்க முடியும் , மனிதனால் அவன் எடைக்கு இணையான காற்றினை இடப்பெயர்ச்சி செய்ய முடியுமானால் பறவை ஆகலாம்.நீரில் நீந்துவதும் இப்படி தான்! பறவைகள் அத்னால் தான் எடைகுறைவாக , குழல் போன்ற எலும்புகளும், கொண்டு உள்ளது எனவே எளிதாக பறக்க முடிகிறது.
4 comments:
பூங்காவில் தேர்ந்தெடுக்கப் பட்ட பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!
பின்னூட்டம் இல்லாவிட்டாலும் நிறைய பேர் இவற்றை படித்திருப்பார்கள் என நம்புகிறேன்!
நன்றி , ஜீவா,
கொஞ்சம் அதிகமாக மொக்கைப்பதிவா!!?? போய்டுச்சு இது அதான் யாரும் படிக்க வரவில்லை(உங்களை தவிர) :-))
பூங்காவா , இன்னும் அதைப்பார்க்கவில்லை... நீங்கள் என்ன வைத்து காமெடி கீமெடி பண்ணலையே ...:-))
வவ்வால்!
பட்டம் விட்டுள்ளேன். ஆனால் இதைப் புரிந்து விடவில்லை.
வாங்க யோகன், நன்றி,
அந்த காலத்தில் தெரிஞ்சுக்காமலே பட்டம் விட்ட ஆளு தானெ நாமளும்!
பட்டம் விடுகையில் இதெல்லாம் நமக்கு யார் சொல்லி தந்தாங்க தெரிஞ்சுக்க, இப்போ தான் அதன் மகத்துவமே தெரியுது!
ஆனால் இந்த காலத்தில் பல சிறுவர்களுக்கு பட்டம் விடும், அனுபவமே இல்லாமல் , தொலைக்காட்சிகளைப்பார்த்து தான் வளர்கிறார்கள்.
ஆனால் பட்டம் விடுகையில் மாஞ்சா நூல் எல்லாம் பயன்படுத்தாமல் சாதாரண நூலைத்தான் பயன்படுத்த வேண்டும் , மாஞ்சா நூலால் இங்கு சிலர் இறந்துள்ளார்கள்.
Post a Comment