Sunday, July 29, 2007

வன விலங்குகளின் அறிவியல்பெயர்கள்!

மேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல்.
spotted deer
பொதுப்பெயர் - அறிவியல்பெயர்

1)ஆசிய யானை - எலிபஸ் மாக்ஸிமஸ் (eliphas maximus)

2)ஆப்ரிக்க யானை- லோக்சோடொன்டா ஆப்ரிகானா (loxsodonto africana)

3)நீர் யானை - ஹிப்பொபொட்டமஸ் ஆம்பிபியஸ் (hippopotomus amphibius)

4)காண்டா மிருகம் - டைசெரோஸ் பைகார்னிஸ் (diceros bicornis)

5)கருப்பு கரடி - உர்சஸ் அமெரிக்கனுஸ் (ursus americanus)

6)பாண்டா கரடி - ஆய்லுரோபோடா மெலனோலுகா (ailuropoda melanoleuca)

7)ஒட்டகசிவிங்கி - ஜிராபா கேமலோபார்டிலஸ் (giraffa camelopardilus)

8)அரேபிய ஒட்டகம்- கேமெலஸ் ட்ரோமெடரியஸ் (camelus dromedaris)

9) பேக்டீரியன் ஒட்டம் - கேமெலஸ் பேக்டெரியனுஸ் (camelus bacterinus)

10) வரிக்குதிரை - ஈக்யுடே ஈக்கஸ் (equidae equus)

11)கொரில்லா - கொரில்லா கொரில்லா (gorilla gorilla)

12) இந்திய நரி - வுல்ப்ஸ் பெங்காலன்சிஸ் (Vulpes bengalensis)

13) சிறுத்தை - பாந்ரா பார்டுஸ் (panthera pardus)

14)புலி - பாந்ரா டைகரிஸ் (panthera tigeris)

15)சிங்கம் - பாந்ரா லியோ (panthera lio)

16)வீட்டு எலி - முஸ் முஸ்குலஸ் (mus musculas)

17)மான்(Sambar) - செர்வஸ் யுனிகலர் (cervus unicolor)

18) புள்ளி மான் - செர்வஸ் ஆக்சிஸ் ஆக்சிஸ் (cervus axis axis)

19 comments:

பொன்ஸ்~~Poorna said...

யானை எத்தனை யானையடி.. ;)

Thekkikattan|தெகா said...

ஏன், ஏன், ஏன் இப்படி :D?

jeevagv said...

அடக் கடவுளே, எந்தப் பெயரும்(கொரில்லா தவிர) நினைவில் நிற்கும் எனத் தெரியவில்லையே?


'பெயர்களுக்கு பின்னால்' அப்படீன்னு புத்தகம் ஏதும் படிக்கறிங்களா?
:-)

வவ்வால் said...

வாங்க அம்மா பொன்ஸ்,

யானைனு போட்டதும் ஓடி வரிங்களே இத்தனை நாளா தெரியாத இந்த இடம் ,

இப்பொ இருக்கிறது 2 வகை யானை தான் ஐஸ் ஏஜ் காலத்தில் ஒன்று இருந்தது மாமூத் என்று , இதையும் மனிதன் வேட்டை ஆடி விளையாடாம இருந்தா தான் அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கும்.

வவ்வால் said...

தெ.கா

ரொம்ப பயப்படாதிங்க... அப்படி தான். ஏதோ நான் படிச்சத அப்படியே இந்த பக்கமும் தள்ளி விடுரேன்.

வவ்வால் said...

வாங்க ஜீவா,

பல பெயர்களும் அதன் லத்தின் அல்லது கிரீக் பெயராக தான் இருக்கும் , எல்லாப்பெயருக்கும் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். அதை தெரிந்து கொண்டால் எளிதில் நினைவில் வைத்து கொள்ளலாம். என்னிடம் ஒரு சில புத்தகங்கள் தான் இருக்கு , இணையத்தில் மேய்வதை தான் போடுகிறேன்! நான் 4 சைட்டில் படிப்பதை ஒரே இடத்தில் போட்டால் மற்றவர்களுக்கு வசதியாகத்தானே இருக்கும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
நன்றி, காண்டா மிருகம் எனப் போடவும்.
இப்போ நான் மிருகங்கள் சம்பந்தமான தளம் ஒன்றில் பார்க்கிறேன்.
ஆபிரிக்க யானைக்கும், ஆசிய யானைக்கும் உள்ள பிரதான வித்தியாசம் என்ன?

வவ்வால் said...

வாங்க யோகன் பாரிஸ்,

நீங்கள் பார்க்கும் தளத்திலேயே இருக்குமே, ஆப்ரிக்க, ஆசிய யானை வேறுபாடு,ஆப்ரிக்க யானை அளவில் பெரியது, ஆண் , பெண் இரண்டுக்கும் தந்தம் இருக்கும் , ஆசிய யானை அளவில் சிறியது, ஆணுக்கு மட்டுமே தந்தம் இருக்கும். தலையில் இரண்டு வளைவு தோன்றும் என்று நிறைய போட்டு இருப்பார்கள்.

எனவே யானைப்பற்றி சிலவற்றை மட்டும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

1)யானைக்கூட்டத்திற்கு பெண் யானைத்தான் தலைமை தாங்கும்.
யானைகள் நான்கு கால்களையும் தரையில் ஊன்றியவாறு உடலை ஒரு வகையாக இடமும் வலமுமாக ஆட்ட முடியும் மற்ற விலங்குகளால் அது முடியாது! அதுவும் கூட வளர்ப்பு யானைகள் தான் இவ்வாறு செய்யும் கட்டிப்போட்டு இருப்பதால் உடல் மற்றும் கால்களுக்கு பயிற்ச்சி தர அப்படி!

2)யானைகளின் காது அகலமாக இருக்கும் அவற்றை ஆட்டிக்கொண்டே இருக்கும் , காரணம் அதன் உடலை குளிர்மையாக வைத்து இருக்கவும், பிற யானைகள் வெகு தூரத்திலிருந்து எழுப்பும் மீ ஒலி அழைப்புகளை கேட்கவும்.யானை பிளிர்வது மட்டும் அல்லாமல், கீச் என்று தும்முவது போல ஒரு ஓசை எழுப்பும் அது அல்ட்ரா சோனிக் சத்தம் ஆகும் பல கிலோ மீட்டர்களுக்கு கேட்கும்.

வவ்வால் said...

காண்டா மிருகம் பெயர் திருத்தியாச்சு யோகன் , அடிக்கடி கவனம் சிதறுவதால் ஏற்படும் பிழை , சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

jeevagv said...

//நான் 4 சைட்டில் படிப்பதை...//
நிச்சயமாக! தொடரவும்!

சதங்கா (Sathanga) said...

வவ்வாலுக்கு என்னனு போடலையே ;-)

வவ்வால் said...

நன்றி ஜீவா, நிச்சயமாக பயணங்கள் தொடரும்!

வவ்வால் said...

வாங்க சதங்கா,

வவ்வாலுக்கு ஏற்கனவே போனப்பதிவில் ஒருவர் பெயர் போட்டுவிட்டாரே , ஆனாலும் நிறைய வகையான வவ்வால்கள் இருப்பதால் பழம் தின்னி வவ்வாலுக்கு(பழம் மட்டும் இல்லை பழ ரசமும் குடிப்போம்ல) பெயரை சொல்கிறேன், ரோசெட்டஸ் லெஸ்செனால்டி (Rousettus leschenaulti )

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
யானை விபரத்துக்கு நன்றி!
அத்துடன் இதையும் சேர்க்கலாமா?
ஆசிய யானையைச் ஆசியர் சாப்பிடுவதில்லை, ஆபிரிக்க யானையை ஆபிரிக்கர்கள் சாப்பிடுகிறார்கள்.

வவ்வால் said...

யோகன் நன்றி!

அடக்கொடுமையே யானைக்கறி சாப்பிடுகிறார்களா, அதை வேக வைக்கவே ஒரு வாரம் ஆகுமே அப்புறமா எப்போ செரிக்கும்!

kaialavuman said...

oru vishayam parthirgala

Rhino-virku oru kombu adhavadhu mono corn; Aanal athan peril irupatho bi-corn
Ithai enna solvathu

கண்மணி/kanmani said...

யுரேகா...யுரேகா
வவ்வால் ஒரு விலங்கு...சாரி விலங்கியல் டீச்சர்

வவ்வால் said...

சீனு,
நன்றி!

ஒரு கொம்பு தான் அதன் அடியில் ஒரு சின்ன கொம்பு போல ஒன்று தெரியும் படம் இருந்தால் பாருங்கள்,, அதனால் பை கார்னிஸ் என்று வைத்திருக்கலாம் :-))

சரியான விளக்கம் தெரியவில்லை. எனக்கு தெரிந்ததை சொன்னேன்.
(பழைய பதிவை எல்லாம் படிக்குறிங்களே!!!)

வவ்வால் said...

கண்மணி,
//யுரேகா...யுரேகா
வவ்வால் ஒரு விலங்கு...சாரி விலங்கியல் டீச்சர்//
நன்றி!

என்னாச்சு எல்லாம் என்னோட பழைய பதிவுகளை தேடிப்படிக்கிறாங்க? வவ்வாலுக்கு எல்லாம் சொந்தங்கள் தானே அதான் விலங்குகள் மேல பாசம் :--))