அன்றாடம் நம் வீட்டிலும் சுற்றுபுறத்திலும் பார்க்கும் விலங்குகள் மற்றும் பறவைகளினை பொதுப்பெயரில் மட்டுமே பெரும்பாலோர் அறிந்து இருப்போம் அவற்றின் விஞ்ஞான பெயர்களை நினைவு கூர்வதில்லை, ஆத்தா வளர்த்த ஆடு ,கோழிக்கு என்ன அறிவியல் பேருனு தெரிஞ்சுக்கலாமா!
பொதுப்பெயர் - அறிவியல்ப்பெயர்
1)கோழி - கால்லஸ் டொமெஸ்டிகஸ் (Gallus domesticus)
2)வான்கோழி - மெல்லெக்ரிஸ் காலோபோவா (Melleagris gallopavo)
3)புறா - கொலம்பியா லிவியா ( Colombia livia)
4)வாத்து - ஆனஸ் பிளாடிரிங்கா(Anas platyrhyncha)
5)ஆடு - ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries)
6) செம்மறி ஆடு - கேப்ரா ஹிர்கஸ் (Capra hircus)
7) முயல் - ஒரிக்டோலாகஸ் க்யுனிகுலஸ ( Oryctolagus cuniculus)
8)பன்றி - சூஸ் க்ரோபா (Sus scrofa)
9) எறுமை - பபலஸ் பபாலிஸ் (Bubalus bubalis)
10)மாடு - போஸ் இன்டிகஸ் ( Bos indicus)
11) எருது - பைசன் பைசன் ((Bison bison)
12)குதிரை - ஈக்கஸ் கேபலஸ் (Equus caballus)
13) கழுதை - ஈக்கஸ் அசினஸ் (Equus asinus)
14) நாய் - கேனிஸ் பேமிலியாரிஸ் ( Canis familiaris)
15) பூனை - பெலிஸ் கேடஸ் (Felis catus)
கடைசியா சிங்கிளா வர சிங்கத்துக்கு பேரு தெரிஞ்சிக்காம போக கூடாதுல,
சிங்கம் - பேந்த்ரா லியோ (Panthera lio)
8 comments:
எருமையோட பேர்தாங்க சூப்பரு.
பபாலிஸ் புபாலிஸ்
அய்யா தொங்கும் வவ்வால்!
இதெல்லாம் சரி. மனிதனின் விலங்கியல் பெயர் Homo sapiens.
உலகில் 1100 வவ்வால் இனங்கள் உள்ளன. அதன் order Chiroptera.
ஒரு வித வவ்வாலின் பெயர் Corynorhinus townsendii.
மனிதனை யாரவது வளர்த்து தான் ஆக வேண்டும், வவ்வால் மற்றவர்களின் அறிவை வளர்க்கறேன் னு சொல்லுது...
தடாலடி போட்டியில் வென்றதற்கு வாழ்த்துக்கள்
வாங்க சின்ன அம்மினி நன்றி!
----------
முரட்டுகாளை அதான் கொம்பு எல்லாம் ஒடிச்சுட்டாங்களே அப்ப்புறமும் என்ன உறுமிக்கிட்டு lol ,
என் பேர எனக்கே சொல்ற மொத ஆள் நீங்க தானுங்கண்ணா!
வவ்வால் கு இரவு பகல் எல்லா நேரத்திலும் கண்ணு நல்லாத்தெறியும் அதான் மனிதன் அறியாத விஷயம் எல்லாம் அறிந்து வைத்துள்ளது!
=============
அனானி நன்றி , என்னங்கண்ணா என்ன வச்சு காமெடி ..கீமெடி பண்ணலையே!
வவ்வால்!
செம்மரி- செம்மறி
எறுமை-எருமை
எறுது-எருது
சற்றுப் பார்க்கவும்.
அடுத்து ஒட்டகம்,மான்,மாடு போன்றவற்ரறின் விலங்கியல் பெயரையும் தரவும்
யோகன் பாரிஸ்,
நன்றி!
இந்த றி, ரி யில் குழப்பம் வந்து மாறிவிடுகிறது , சில சமயங்களில் தானாகவே தட்டச்சும் போது தப்பாகி விடுகிறது. தவிர்க்கப்பட வேண்டிய பிழைகள் இவை. சரி செய்து விடுகிறேன்.
எறுமை என்பது தான் சரி என நினைக்கிறேன்.எருது , செம்மறி என்று நீங்கள் சொன்னபடி தான் வர வேண்டும் தவறாகி விட்டது இங்கு.
ஒட்டகம், மான் எல்லாவற்றுக்கும் பெயர்ப்போடலாம். தனியாகா போடுகிறேன். இது வெறும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் பெயர்கள் மட்டுமே.
எதுவுமே வாயிலேயே நுழைய மாட்டேங்குது. எப்படிதான் ஞாபகம் வெச்சிக்கிறாங்களோ. தகவலுக்கு நன்றி! அப்பப்போ இந்த பேர வெச்சு புளிப்பு காட்டுவோம் பாருங்க..
வாங்க இளா ,
நன்றி, ஹெ ...ஹே நீங்களும் அப்படி தானா, நானும் 4 பேரு தெரிஞ்சுக்கிட்டு 400 பேரு தெரிஞ்சாப்போல பில்ம் காட்டுவேன்.
எருதுக்கு பைசன் நு வருது, குதிரைக்கு ஈக்கஸ்னு வருது குதிரை ஏற்றதுக்கு ஈக்வெஸ்ட்ரியன் சொல்வாங்க அது போல ஒரு தொடர்பு படுத்தி படிச்ச நினைவில் வச்சுக்கலாம். ஆசிய யானைக்கு எலிபன்டஸ் மாக்ஸிமஸ், யானை ரொம்ப பெரிசுனு சொல்லிக்கிடு ஈசியாக நினைவில் வைக்க உதவும்.
Post a Comment