Friday, August 10, 2007

தீ(வட்டி) நகர்! திரை விமர்சனம்!

எல்லா வகையானப் பதிவுகளையும் போட்டு நாமலும் ஒரு அனைத்து வட்டம்னு(all rounder) காண்பித்துக்கொள்வது என்று முடிவு பண்ணிட்டேன்!

அதனால் இன்றைய சிறப்பு பதிவு திரை விமர்சனம்!

தீநகர்னு ஒரு படம், ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் அல்ல பாடம் , எப்படி எல்லாம் ஒரு படத்தை எடுக்க கூடாது என்பதற்கு அருமையான சாம்பிள்.

கல்லுரியில் ஒரு கலாட்டா ,மாணவர் தலைவனே செய்கிறான் திமிரு நியாபகத்தில் அவனுக்கும் பவானினு பேரு வேற, அப்போ என்ன நடக்கும் சரியா ஹீரோ சார் வந்து சண்டை தான் போடுவார். அப்புறம் அட்வைஸ் வேற தறார். என்ன கொடுமை சார் இது!

இன்னும் எத்தனைக்காலத்திற்கு டைட்டானிக் ஹேங் ஓவர்லவே அலைவாங்க , நிச்சயம் ஆன பொண்ணா பார்த்து இவருக்கும் காதல் கசியுது!

படத்தில் கரனைப் பார்ப்பதே இம்சைனா பாடல் காட்சிகளில் இரட்டிப்பு இம்சை தருகிறார்!

வேலைவாய்ப்பகம் போகிறார் அங்கே வழக்கம் போல வேலை செய்யாம அரட்டை அடிக்கும் அலுவலர்,அது பார்த்து கோபப்படும் ஹீரோ, திருந்துங்கடா , எத்தன தடவை தான் இதையே காட்டுவிங்க!

வித்தியாசமா?!! அங்கேவே ஒரு டீக்கடை போடுறார். சரி அப்புறமாவது புதுசா எதாவது காட்டுவாங்களானு பார்த்தா , தூள் பாதிப்பில் ஒரு இன்ஸ்பெக்டர் கூட மோதிக்கிட்டு அதே போலா செல் போன்ல பேசி சவால் விட்டுனு , கடைசில எப்படி படத்தை முடிக்கிறதுனு தெரியாம மாணவர் சக்தி அது இதுனு சொல்லி வணக்கம் போடுறாங்க!

தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு தீநகர் நல்லாப்பயன்படும். இடை இடையே தூங்கிவிட்டேன்.நான் பார்த்த வரைக்கும் தான் விமர்சனம் செய்து இருக்கேன்.மீதிய யாராவது தூங்காம பார்த்தா வந்து பின்னூட்டத்தில் கதை சொல்லிட்டு போங்க!

சென்சார் போர்ட் கவனத்திற்கு!...பதிவுகளை மொக்கை பதிவு என்று லேபில் செய்வது போல படங்களையும் அப்படி லேபில் செய்யும் வசதி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்.

20 comments:

வடுவூர் குமார் said...

"வவ்வால்-தலைகீழ் விகிதங்கள்"- நிஜமாக சொல்லுங்கள்,படத்தை நேராகத்தான் பார்த்தீர்களா? :-))

Unknown said...

வவ்வால், எச்சரிக்கைக்கு நன்றி :)

ILA (a) இளா said...

ஏன்யா, இந்த கொலைவெறி.. :

கப்பி | Kappi said...

//சென்சார் போர்ட் கவனத்திற்கு!...பதிவுகளை மொக்கை பதிவு என்று லேபில் செய்வது போல படங்களையும் அப்படி லேபில் செய்யும் வசதி இருந்தா எத்தனை நல்லா இருக்கும்//

:))))

நான் எஸ்கேப்!! :))

சிவபாலன் said...

வவ்வால்

Ha Ha Ha..

கலக்கல் விமர்சனம்..

வவ்வால் said...

குமார் ,

ஏன் இந்த சந்தேகம், எப்படி பார்த்தாலும் நேராகத்தான் காட்சி தெரியும் அது தான் கண்களின் இயல்பு. நீங்க கரணின் ரசிகரா? என்ன கொடுமை சார் இது!

வவ்வால் said...

இளா,

எனக்கு கலை வெறி தான் இருந்துசு ஆன படம் பார்த்து அது கொலைவெறி ஆகி போச்சு!

வவ்வால் said...

தஞ்சாவுர்காரரே,

ஏதோ நம்மால் ஆனது , பாதைல பள்ளம் இருக்கு பார்த்து போங்கனு சொல்லிடேன்.

வவ்வால் said...

வாங்க கப்பி பய,

நீங்க உழார் தான்! ஆனா அப்படி ஒரு வசதியை கொண்டு வரணும், மக்களின் பணமும், நேரமும் விரயம் ஆவது தவிற்கப்படுமே!

வவ்வால் said...

வாங்க சிவபாலன்,

நன்றி, இப்போ தான் சில நல்லப்படங்கள் வந்து தமிழ் படத்துக்கு புத்துயிர் ஊட்டியது ,ஆனால் பின்னாலேயெ இப்படி பாடாவதி படங்கள் வந்து புத்தூர் கட்டுப்போடுகிறதே!

jeevagv said...

முதல் பத்தியும், கடைசி பத்தியும் கலக்கல்!

வவ்வால் said...

வாங்க ஜீவா,

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் , ஒருபடத்துல டைட்டிலும் , வணக்கம்னு போடுறதும் தான் நல்லா இருக்குனு சொல்றாப்போல இருக்கே! :-))

பரவாயில்லை ...ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்னு சொன்னதாக எடுத்துகிறேன்!

எதுக்கும் ஜகா வாங்காதவன் said...

ஏன்யா வவ்வால்,

காதநாயகி பத்தி ஒன்னும் எழுதலேயேபா

என்ன கொடுமை சார் இது!

Anonymous said...

I could manage to watch first few mins then stoped it.

www.123indianonline.com

வவ்வால் said...

ஜகா வாங்காதாவன் ,

கதாநாயகி சொல்லிகிறாபோலா இல்லையே :-))

வவ்வால் said...

அனானி

நீர் புத்திசாலியா கொஞ்ச நேரத்திலேயே உண்மையை கண்டு புடிச்சிட்ட :-))

ramachandranusha(உஷா) said...

எனக்கென்னமோ மாரியாத்தா படங்களில் கிராபிக் தேளு, பல்லிகளால் பாடாத பாடுபட்ட கரணுக்கு வந்த வாழ்வை பார்த்து
உமக்கு பொறாமைன்னு தோணுது :-))))

வவ்வால் said...

வாங்க ராமச்சந்திரனுஷா,

பொறாமையா , நல்லா சொன்னிங்க போங்க ...ஏன்னா நாந்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனக்கு போட்டியா கரண் வந்துடுவார்னு எனக்கு பீதி!

இப்படிப்பட்ட படத்தில் நடிப்பதை விட கரண் தேள்கடி வாங்குற படத்திலேயே நடிச்சு இருக்கலாம். இந்த படம் பார்க்கிறவங்களுக்கு தேள்கடி :-))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//தீநகர்னு ஒரு படம், ஃபில்ம் இன்ஸ்டிட்யூட் மாணவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் அல்ல பாடம் , எப்படி எல்லாம் ஒரு படத்தை எடுக்க கூடாது என்பதற்கு அருமையான சாம்பிள்.//


ரசித்தேன்.


நித்திரைக்கு சிரமம் வரும் போது பார்க்கிறேன்.

வவ்வால் said...

யோகன்,
நன்றி!
சில படங்கள் தூக்க மாத்திரையை விட நன்கு பயன் அளிக்கவல்லவை. ஆனால் சில படங்கள் ரத்த கொதிப்பை உண்டாக்கும் :-))