Friday, September 07, 2007

அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில் ,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள் ,,

சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony),
மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

LetterMorse
Adi-dah
Bdah-di-di-dit
Cdah-di-dah-dit
Ddah-di-dit
Edit
Fdi-di-dah-dit
Gdah-dah-dit
Hdi-di-di-dit
Idi-dit
Jdi-dah-dah-dah
Kdah-di-dah
Ldi-dah-di-dit
Mdah-dah


N dah-dit
Odah-dah-dah
Pdi-dah-dah-dit
Qdah-dah-di-dah
Rdi-dah-dit
Sdi-di-dit
Tdah
Udi-di-dah
Vdi-di-di-dah
Wdi-dah-dah
Xdah-di-di-dah
Ydah-di-dah-dah
Zdah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ், லாண்ட் மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

10 comments:

ஊற்று said...

ஹாய் வவ்வால், நல்ல செய்தி சொல்லியிருக்கிங்க... உஙளுக்கு ஹாம் பழக்கமுண்டா? தெரிந்தால் நானும் அறிய ஆவல். தமிழ் ப்ளாகில் ஒரு உருப்படியான விஷயம், பாராட்டுக்கள்.

சிவபாலன் said...

வவ்வால்

மிக அருமையான பதிவு!

கல்லூரி மாணவர் தங்கும் விடுதியில் என் அறை நண்பன் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றான். அப்போழுது இதைப் பற்றி கொஞ்சம் தெரியும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி!

வவ்வால் said...

ஊற்று,

நல்லப்பேரா இருக்கே, இப்போ தான் இந்த பக்கம் வரிங்கனு நினைக்கிறேன், நன்றி! இது எனக்கு முன்னரே அறிமுகம் ஆகிய ஒன்று!ஆனால் நான் தேர்வெழுத முயற்சி செய்கிறேன் தற்பொழுது தான்!(விக்கிரமாதித்தன் கதை தான் அவ்வப்போது நல்லாபடிச்சிடனும்னு முடிவுகட்டி ஒரு வாரம் ஆர்வம் காட்டுவேன் அப்புறம் அவ்வளவு தான்)

ஊற்று இன்னும் கொஞ்சம் ஊற்று...ஊற்று... அதாவது அடிக்கடி வாங்கனு சொல்றேன் :-))

வவ்வால் said...

சிவபாலன் ,
நன்றி!

உண்மையில் ஹாம் ஒரு நல்ல விஷயம் அந்த லைசென்ஸ் வாங்குவது தான் படுத்தும். உங்கள் நண்பர் வாங்கிவிட்டாரா அப்போ பெரிய ஆள் தான்! நான் விக்கிரமாதித்தானாக தொடர்கிறேன் வாங்கிடலாம்னு நம்பிகையில் :-))

நீங்களும் முயற்சி செய்யலாமே, அமெரிக்காவில் இந்தியாவை விட கொஞ்சம் எளிது என்று கேள்வி!

சிவபாலன் said...

வவ்வால்

அந்த நண்பன் கொஞ்சம் வித்தியாசமானவன். வழி நெடுக ஏதோ மந்திரம் போல் சொல்லிட்டுப்போவான்..Bdah-di-di-dit

பார்கிறவர்கள் இவன் ஏதோ பெண்களை கிண்டல் செய்கிறான் என நினைச்சுக்குவாங்க.. ஆனா உண்மையிலே அதை சொல்லிப்பார்த்துட்டு இருப்பான்.

அந்த Bdah-di-di-dit செய்யும் கருவி புகைப் படம் போட்டிருக்கலாமே?!

வவ்வால் said...

சிவபாலன்,

ஆமாம் அதை அடிக்கடி சொல்லிப்பார்த்து , மேசை மீது டொக், டக் என தட்டிப்பார்த்து எல்லாம் பழகனும் , இல்லைனா மறந்துவிடும்.உங்கள் நண்பர் விடா முயற்சியுடன் செய்து இருப்பார் போல தெரிகிறது!

படம் போட வேண்டும் என்று தான் இருந்தேன் , பதிவை போடும் போது இணையம் கொஞ்சம் மெதுவாக இருந்தது , சரி அப்புறம் பார்த்துக்கலாம் என விட்டு விட்டேன்!இரண்டு படம் இருக்கிறது எப்படியும் ஏற்றிவிடுகிறேன்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
எங்கள் ஊர் தபால்நிலையத்தில் அந்த நாளில் தந்தி கொடுக்கப் போனால், ஒருவர் இப்படித் தட்டிக் கொண்டிருப்பார்.பின் அதை மோர்ஸ்
என அறிந்தேன். பின்பு கம்பியில்லா தந்தி வந்தது. இந்த வானொலி பற்றி முதல் முறை கேள்விப்படுகிறேன்.

வவ்வால் said...

வாங்க யோகன்,
நன்றி,

இது ஒரு பொழுது போக்கு வானோலி, யாஹூ, கூகிள் சாட்லாம் இருக்கிற இந்த காலத்தில் இதற்கு அத்தனை முக்கியத்துவம் கிடைக்கவில்லை, தொழில்நுட்ப ரீதியாக ஆர்வம் உள்ளவர்களே இதனை தேர்ந்தெடுப்பார்கள்.

வரவனையான் said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஹாம் ரேடியோ எப்படி வாங்குறது கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்கள். எனது ஈமெயில் முகவரி ஹாம் ரேடியோ எப்படி வாங்குறது கொஞ்சம் தெரிந்தால் சொல்லுங்கள். எனது ஈமெயில் முகவரி siva.cbe007@gmail.com