Saturday, October 06, 2007
சேது சமுத்திர திட்டம் எதிர்ப்புகளும் , காரணங்களும்!
சேது சமுத்திர திட்டம் பல கால கனவு திட்டம் தற்போது தான் செயல் வடிவம் பெற துவங்கியது , ஆரம்பித்த நாளது முதலாக அரசியல்வாதிகளில் இருந்து போலி சாமியார்கள் வரை அனைவரும் ஆளுக்கு ஒரு காரணத்தினை சொல்லி தடுக்கப்பார்க்கிறார்கள். ஆனால் அத்திட்டம் வருவதை ஆரம்பத்தில் இருந்தே விரும்பாத பல சக்திகள் உள்ளது.
இந்தியாவிற்கும் , இலங்கைக்கும் இடைப்பட்ட தூரம் குறைந்த பட்சம் 25 கீ.மீ இல் இருந்து 107 கி.மீ வரை இருக்கிறது, இந்த கடல் பகுதியில் தான் சேது சமுத்திர திட்டம் கொண்டு வரப்படுகிறது.
திட்டம் வர தடையாக சொல்லும் காரணங்கள் சிலவற்றையும் அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
* ராமார் கட்டிய பாலம்.இரண்டு மில்லியன் ஆண்டு பழமையானது எனவே அதனை சேதப்படுத்த கூடாது என்பது!
இது எத்தனை சத வீதம் உண்மை ,
மனித இனம் தோன்றிய வரலாற்றினை அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலக்கட்டத்தில் எல்லாம் குரங்குகளாக தான் இருந்தோம். பின்னர் மனிதனாக பரிமாண வளர்ச்சி அடைந்த பின்னர் நாகரீகத்தின் முதல் கட்டமாக கருவிகளை உருவாக்கியதன் அடிப்படையில் காலம் பிரிக்கையில் , கி.மு 3000க்கு முன்னர் கற்காலம் வருகிறது , பின்னர் தாமிரக்காலம் , இரும்பை பற்றி அறிந்து கொண்டதே கி.மு 1200 இல் தான். அப்படி இருக்கும் போது இரண்டு மில்லியன் ஆண்டுகள் காலத்திற்கு முன்னர் இராமாயண காலம் போல முழு நாகரீகம் பெற்ற இராம ராஜ்யம் இருந்து இருக்குமா? பாலம் கட்டி இருக்க தான் முடியுமா?
நாசா எடுத்தது என ஒரு படம் காட்டுகிறார்களே அது என்ன?
அது ஒரு இயற்கை அமைப்பு , இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கும் ஒரு குறுகிய நில இணைப்பிற்கு இஸ்துமஸ்(isthmus) என்று புவியியல் பெயர். இப்படிப்பட்ட இணைப்பு வட , தென் அமெரிக்காவிற்கு இடையே கூட உண்டு , அதனை வெட்டி தான் பனாமா கால்வாய் போடப்பட்டுள்ளது.
சில இடங்களில் கடல் மட்டத்திற்கு மேல் இருக்கும் இங்கே கடலில் மூழ்கி இருககிறது. மேலும் அந்த அமைப்பை ஒட்டி மணல் படிவதால் ஆழம் குறைவாக உள்ளது.
இயற்கை, சுற்று சூழல் பாதிப்புகள் வரும் என்பது,
ஏற்கனவே சொன்னது போல இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல் அகலம் 25 கி.மீமுதல் 107 கி.மீ வரையுள்ளது. இதில் சேதுக்கால்வாய் அமையப்போவது 300 மீட்டர் அகலத்தில் மட்டுமே , அவ்வளவு பெரிய பரப்பில் இது மிக சிறிய அகலமே. 12 .8 மீட்டர் ஆழம் வெட்டுவார்கள் இதில் சரசரியாக 8 முதல் 10 மீட்டர் ஆழம் கடலில் உள்ளது , எனவே மேற்கொண்டு வெட்டும் ஆழமும் அதற்கு ஏற்றார் போல குறையும்(4-5 மீட்டர்). சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள மணல் திட்டுகள் தான் பெரிதாக தெரிகிறது , கடல் அடியில் மிகப்பெரிய பாதிப்பு வராது.
மன்னார் வளைகுடாப்பகுதி தான் கடல் வாழ் உரினங்களின் முக்கியமான பகுதி , அப்பகுதியில் இயற்கையிலே ஆழம் இருப்பதால் அங்கு கால்வாய் வெட்டப்படவில்லை. பால்க் நீரிணைப்பு பகுதியிலும் , ஆடம் பாலம் பகுதியிலும் இரண்டு பகுதியாக கால்வாய் வெட்டப்படுகிறது. இது செயற்கை ,இயற்கை சேர்ந்த கடல் வழி கால்வாயாக தான் இருக்கும்.
மேலும் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதும் சரியல்ல, இப்பகுதியில் குறைவாக மீன் கிடைக்கிறது எனவே எல்லை தாண்டி மீன் பிடிக்க போய் தானே இலங்கை ராணுவத்திடம் குண்டடிப்படுகிறார்கள் அப்படி இருக்கும் போது இப்போது கால்வாய் வெட்டும் போது மட்டும் எப்படி மீன்கள் காணாமல் போகும். ஆழ்கடலில் தான் அதிக மீன்கள் பிடிக்கபடுகிறது.
சாதாரணமாக புதிதாக சாலை போட்டாலே அதற்காக மரங்கள் வெட்டுவது என எதாவது ஒரு சுற்று சூழல் பாதிப்பு இல்லாமல் இருக்காது , அப்படி இருக்கும் போது கடலில் கால்வாய் வெட்டும் போது சுத்தமாக பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி. ஏற்படும் பாதிப்பு குறைந்த பட்சமாக இருக்குமாறு பார்த்து செயல் பட வேண்டும்!
இப்படி தற்போது சில எதிர்ப்புகள் உள் நாட்டில் கிளம்பினாலும் , ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே! எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.
ஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.
மேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.
முடிந்த வரை தடுக்க பார்க்கும் இலங்கை அரசு , முடியவில்லை எனில் திட்டம் வந்தால் அதிலும் ஒரு நன்மையை எதிர்ப்பார்க்கிறது , அக்கால்வாய் பாதுக்காப்பு , ரோந்து ஆகியவற்றில் இலங்கை கடற்படையை ஈடுபடுத்த அனுமதி தரவேண்டும் என்று!மேலும் மன்னார் வளைகுடாப்பகுதியில் கப்பல் போக்குவரத்தினை அனுமதிக்கும் நிர்வாக உரிமையையும் கேட்கிறது.சுருக்கமாக சொல்ல போனால மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு வர கடலைப்பயன்படுத்த இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் யாரும் வரமுடியாத நிலை வரும்.
கால்வாய் முழுக்க முழுக்க அமையப்போவது இந்திய கடல் எல்லைக்குள் தான் , அப்படி இருக்கும் போது பாதுகாப்பினை காரணம் காட்டி சந்தடி சாக்கில் நம்ம கடலையும் சேர்த்து கண்காணிக்க ஆசைப்படுகிறது இலங்கை! நாம் செலவு செய்து கால்வாய் வெட்டுவோம் , நிர்வகிக்கும் அதிகாரம் அவங்களுக்கு வேண்டுமாம்!
இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.
தற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.
ஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே!
ஜெயலலிதா போன்றவர்கள் ஆரம்பத்தில் தேர்தல் அறிக்கையிலேயே இத்திட்டதை கொண்டுவருவதாக சொன்னவர்கள் தற்போது எதிர்க்க காரணம் மிகப்பெரிய இத்திட்டதை கொண்டு வருவதால் கிடைக்கும் கமிஷன் தொகை கை விட்டுப்போகிறதே என்ற வயத்தெரிச்சல் தான்! 2,427 கோடி ரூபாய் திட்டம் ஆச்சே சுளையாக ஒரு தொகை கமிஷனாக வருவது போனால் சும்ம இருக்க முடியுமா!
சேது கால்வாய் திட்டம் பற்றிக்கவலைப்படுவதானால் அதன் பொருளாத லாபம் ஈட்டும் தன்மை குறித்தும் , சுற்று சூழல் பாதிப்பு அதிகம் ஆகாமல் இருப்பது குறித்து மட்டும் தான் இருக்க வேண்டும்.
இக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
52 comments:
வர்த்தக ரீதியாக இது லாபம் தராது எனச் சொல்கிறார்களே. அது பற்றி உங்கள் கருத்தென்ன?
இ.கொ.,
நன்றி!
வர்த்த ரீதியாக லாபம் வருவது கடினம் என்பது போல இத்திட்டத்திற்கான முதன்மை நிதி திரட்டும் வங்கியான ஆக்சிஸ் வங்கியின் சேர்மன் சொன்னதையும ்பதிவின் கடைசியில் சொல்லி இருக்கிறேனே.
ஆனால் அது எல்லாமே யூகம் தான், கால்வாய் பயன்படுத்த கப்பலில் ஏற்றிவரும் ஒரு டன்னுக்கு இத்தனை ரூபாய் என நிர்ணயிப்பார்கள், அதைப்பொருத்தே கப்பல் போக்குவரத்து அங்கு அதிகரிக்குமா குறையுமா என்பதை சொல்ல முடியும், அரசு மலிவான கட்டணம் நிர்ணயித்து அதிக கப்பல்களை வர வைத்தால் லாபம் ஈட்டலாம் என நினைக்கிறேன்.
பெரிய கப்பல்கள் பயணிக்காது லாபம் வராது எனவும் சொல்கிறார்கள் ஆனால் இதில் பயணிக்க கூடிய கப்பல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வந்தாலே போதும் , இப்போது இருக்கும் கப்பல் நடமாட்டம் வைத்து சொல்வது தான் இந்த கணக்கெல்லாம், கால்வாய் வந்த பிறகு மேலும் புதிதாக கூட கப்பல் நடமாட்டம் அங்கு வரலாம்.
பனாமா கால்வாயில் கூட அதிக எடையுடன் பெரிய கப்பல்கள் போக முடியாது ஆனால் பெரிய கப்பல் போகலாம் எனவே அதிக எடையை சிறிய கப்பல்களில் ஏற்றி ,அனுப்பிவிட்டு , பெரிய கப்பல் எடையை குறைத்து கால்வாயை கடக்கிறார்கள், பின்னர் இடம் மாற்றிக்கொள்வார்கள். இப்படி கஷ்டமாக இருக்கிறதே என கப்பல்கள் அதில் போகாமலா இருக்கிறது.
வவ்வால்,
/* இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள் */
அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். தப்பாக எண்ணாதீர்கள்.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைச் சொல்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? இந்த சேதுத் திட்டத்தைப் பற்றி விடுதலைப் புலிகளோ அல்லது ஈழத் தமிழ் பிரதிநிதிகளோ ஒன்றும் சொன்னதாக நான் அறியவில்லை.
அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள், சிங்களப் பகுதி அரசியல் பற்றியே பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதுபோல தமிழகத்தின் உள்விவகாரங்களிலும் விடுதலைப் புலிகள் கருத்துச் சொல்வதில்லை. அப்படியிருக்க இக் கருத்து உங்களின் ஊகமா ?
இச் சேதுக் கால்வாய்த் திட்டம் பிற்போடப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். காரணம், யாழ்ப்பாணம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளே உயரத்தில் இருப்பதால், இத் திட்டத்தின் மூலம் ஈழத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகளுக்கு கேடு விளைவிக்கலாம். எனவே ஈழத்திற்கு ஏற்படக் கூடிய சாதக/பாதகங்களை ஆராயும் வரை இத் திட்டம் பிற்போடப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.
வெற்றி!
நன்றி!
//அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன். தப்பாக எண்ணாதீர்கள்.//
தவறாக எண்ண என்ன இருக்கு இதில், தாராளமாக கேட்கலாம்.
சில பத்திரிக்கைகளில் இப்படி வந்துள்ளது , அதன் முழு நம்பகத்தன்மை கேள்விக்குரியதே என்ற போதிலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. மேலும் முன்னரை விட தற்போது அதிக எதிர்ப்பு வருகிறதே எப்படி , அதுவும் திட்டம் அடிக்கல் நாட்டும் போதெல்லாம் இது தெரியாதா, 6 மாதம் ஆன பிறகு தானே சிலர் விழித்துக்கொண்டு சத்தம் போடுகிறார்கள்.
மேலும் முன்னர் இந்திய கடலோரக்காவல் படையினரே பேட்டி அளித்துள்ளார்கள் , புலிகள் ஆழம் குறைவான , மணல் திட்டுக்கள் உள்ள பகுதிகள் உள்ளே சென்று தப்பிவிடுவார்கள் அங்கு எல்லாம் கப்பல் படையின் படகால் செல்ல முடியாது என.இதற்காக ஹோவர் கிராப்ட் வாகனத்தை கூட தற்போது பயன்படுத்தி வருகிறார்கள்.
//யாழ்ப்பாணம் கடலின் மட்டத்தில் இருந்து சில அடிகளே உயரத்தில் இருப்பதால், இத் திட்டத்தின் மூலம் ஈழத்தில் உள்ள தமிழ்ப்பகுதிகளுக்கு கேடு விளைவிக்கலாம்.//
கால்வாயின் மொத்த அகலமே 300 மீட்டர் தான் , குறைந்த பட்சம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் கடல் பரப்பு 25 கிலோ மீட்டர், எனவே இந்த கால்வாய் அகலம் ரொம்ப சின்னது அதனால் பாதிப்பெல்லாம் வராது. கடலில் வெட்டப்போகும் கால்வாயின் ஆழம் வெறும் 12 மீட்டர் தான், சராசரியாக 8 மீட்டர் ஆழம் அங்குள்ளது அப்படி இருக்கும் போதும் இந்த அளவு ஆழம் வெட்டுவதால் எப்படி பாதிப்பு வரும்.
வவ்வால்,
/* கால்வாயின் மொத்த அகலமே 300 மீட்டர் தான் , குறைந்த பட்சம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் கடல் பரப்பு 25 கிலோ மீட்டர், எனவே இந்த கால்வாய் அகலம் ரொம்ப சின்னது அதனால் பாதிப்பெல்லாம் வராது. கடலில் வெட்டப்போகும் கால்வாயின் ஆழம் வெறும் 12 மீட்டர் தான், சராசரியாக 8 மீட்டர் ஆழம் அங்குள்ளது அப்படி இருக்கும் போதும் இந்த அளவு ஆழம் வெட்டுவதால் எப்படி பாதிப்பு வரும். */
தகவல்களுக்கும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி. நீங்கள் சொல்லியுள்ள தகவல்களை [அளவுகள்] இப்போதுதான் அறிந்தேன். மிக்க நன்றி.
--------------------------------
வவ்வால், பதிவுக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி. ஆட்சேபனை இல்லையெனின் நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.
சேதுத் திடல் தொடர் போல தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையில் கோடித் திடல் தொடரும் இருக்கிறதாமே? நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அண்மையில் கொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றில் மறவன்புலவு சச்சிதானந்தன் பின்வருமாறு எழுதியிருந்தார்:
"பாக்கு நீரிணையையும் மன்னார்க் குடாவையும் தெற்கே சேதுத் திடல் தொடர் பிரிப்பது போல, பாக்கு நீரிணையையும் வங்காள விரிகுடாவையும் வடக்கே கோடிக்கரையிலிருந்து தென்கிழக்காக மாதகல் வரை நீளும் கோடித் திடல் தொடர் பிரிக்கின்றது. "
இங்கே மாதகல் என அவர் குறிப்பிட்டிருக்கும் ஊர் எனது ஊர். அதனால் அறிய வேணும் எனும் ஆவல் அதிகமாகியது. சற்றலைற்றில் இருந்து எடுத்த படங்களைப் பார்த்த போது அப்படி ஒரு திடலும் என் கண்ணுக்குத் தென்படவில்லை. நீங்கள் அப்படி ஏதும் அறிந்திருக்கிறீர்களா?
வெற்றி!
நன்றி!
//பாக்கு நீரிணையையும் மன்னார்க் குடாவையும் தெற்கே சேதுத் திடல் தொடர் பிரிப்பது போல, பாக்கு நீரிணையையும் வங்காள விரிகுடாவையும் வடக்கே கோடிக்கரையிலிருந்து தென்கிழக்காக மாதகல் வரை நீளும் கோடித் திடல் தொடர் பிரிக்கின்றது. " //
நீங்கள் சொன்னது போல சாட்டிலைட் படத்தில் அப்படி எதுவும் இல்லை தான்.
, மாதக்கல் ,ஜாப்னா அருகே உள்ள இடமா, அங்கு இருந்து கடலில் 11 கிலோ மீட்டர் வரை ஆழம் இல்லாமல் ஆங்காங்கு மணல் திட்டுக்கள் உள்ளதாம், மேலும் கோடியக்கரை பகுதியில் ரிட்ஜஸ் என்ற அமைப்பு கடலில் உள்ளது. கிட்ட தட்ட அது வரப்பு போல ஆனால் சின்னதாக நீரில் மூழ்கி இருக்கும் , இதன் காரணமாக கோடியக்கரையில் இருந்து ஜாப்னா வரைக்கும் மணல் படிமம் உருவாகி வருகிறது, இன்னும் 2400 வருஷங்களில் இரண்டு பகுதிக்கும் நில இணைப்பாக உருவாகிவிடும் என்கிறார்கள்.
நீங்கள் சொன்னது போல ஏற்கனவே அப்படி ஒரு பாலம் இல்லை ஆனால் மெதுவாக தற்போது உருவாகி வருவதாக போட்டுள்ளார்கள்.
/சில பத்திரிக்கைகளில் இப்படி வந்துள்ளது , அதன் முழு நம்பகத்தன்மை கேள்விக்குரியதே என்ற போதிலும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் இருக்கிறது. /
அச்சில பத்திரிகைகள் எவை என்று சொன்னால், நாமும் ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகளின் கருத்துகளை அறிந்து கொள்ளலாமே?
அதியமான்,
நன்றி!
ஆனால் இப்படி ஏதோ ஒரு தளத்தில் இருந்து காபி & பேஸ்ட் ஆக போட்டு எல்லா கதையையும் சொல்லி சொல்ல வந்த கருத்தை மூழ்கடித்து விட்டீர்களே!பெரூம்பாலும் எல்லாருக்கும் சேது திட்டம் பற்றிய முன் விவரம் தெரியும், எனவே தான் நான் விடுபட்ட சொல்லப்படாத காரணங்களை மட்டும் பதிவிட்டுள்ளேன்.
1)பொருளாதார பாதகங்களைப்பர்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.
2) பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் பிற்காலத்தில் கூட கால்வாயை மேம்படுத்திக்கொள்ள முடியும். முதலில் ஒரு கால்வாய் வரட்டும்.
3) மணல் படிவதை தடுக்கும் வண்ணம் desilting mechanism உடன் கால்வாய் வெட்ட முடியும் என நேற்று கூட இந்துவில் தூத்துக்குடி நிலவியல் பேராசிரியர் கட்டுரை எழுதியுள்ளார். அப்படி தான் கால்வாய் வெட்டப்போவதாக சேது திட்டத்திலும் உள்ளது.
4) இது வரைக்கும் கால்வாயில் பயணிக்க கட்டணம் என்ன என நிர்ணயிக்கவில்லை. அப்படி இருக்க எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் சொல்லியுள்ளார்.
5)பெரிய கப்பல் நிறுவனங்கள் எதுவும் முதலீடு பண்ண வரவில்லை என்கிறீர்கள், இந்தியாவை சேர்ந்த கப்பல் நிறுவனங்களுக்கு அந்த அளவுக்கு முதலீடு இல்லை. வெளி நாட்டு நிறுவனங்கள் வரவில்லையே என்றால், பனாமா , சூயச் போல இந்த கால்வாயை இந்தியா சர்வதேச நீர்வழி போக்குவரது ஆணையத்திடம் ஒப்படைக்க முன்வரவில்லை. இது ஒரு இந்தியாவிற்கு மட்டும் சொந்தமான ஒரு வழியாக தான் தற்போது வரை அரசு அறிவித்துள்ளது.
பெயரிலி,
நன்றி!
தற்சமயம் சரியாக எப்பொழுது அப்படி வந்தது என சொல்ல இயலவில்லை. ஆனால் திட்டம் துவங்கிய பொழுதே அப்படி வந்தது ஜூனியர் விகடனில் கூட மீனவர்கள் எதிர்ப்பு என்று போட்ட கட்டுரையின் உள் இப்படி ஒரு கருத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இணையத்திலேயே கூட சில கட்டுரைகள் இது பற்றி இருக்கிறது , கிடைத்தால் சுட்டியும் தருகிறேன்.
வவ்வால்
நன்றி. ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகள், விடுதலைப்புலிகள் சொன்னவை குறித்த சுட்டி(கள்) கிடைத்தால் போடுங்கள். காத்திருக்கிறேன்.
//பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் பிற்காலத்தில் கூட கால்வாயை மேம்படுத்திக்கொள்ள முடியும்///
how ? techincallu never possible.
and so far there is no transparency and independent assesment of the project by a third party engg company, etc.
if no shipping company (who will be the users) is ready to invest, then they should be knowing better.
MNCs are investing in other infrastructure projects in India like ports, roads, power, etc.
then why not for this vital project.
let us see. future will answer all these. but these thousands of crores is our money and need to be accoutable.
and that article was based on EPW maganine report ; EPW is a much respected leftist weakly..
இத்திட்டத்தை எதிர்ப்பதற்கு பல்வேறு தரப்பினரால் பல்வேறு காரணங்கள் வழங்கப்படுவது தெரிந்ததே. எனக்குத் தெரியாத, புரியாத கேள்வி - இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள் (அவர்கள் எந்த அரசியல் / கட்சி சார்பும் அற்றவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில்) ஏன் ஆதரிக்கறார்கள் என்பதுவே.
எனக்குத் தெரிந்து 'கப்பலோட்டியத் தமிழர்' ஒருவர்தான் இருந்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து, இன்று வேறு பல தமிழர்களும் கப்பலோட்டிக் கொண்டிருக்கக் கூடும். இவர்களைத் தவிர்த்து இத்திட்டத்தை ஆதரிக்கக்கூடிய (சாமானிய / அரசியல் சார்புகளற்ற) தமிழர்கள் யார் யார், மற்றும் அவர்களின் காரணங்கள் என்னென்ன, என்பதுதான் எனக்குப் புரியாத கேள்வி. இது குறித்து யாராவது விரிவாகப் பதிந்தால் நன்றாயிருக்கும்.
பெயரிலி,
//ஈழத்தமிழ்ப்பிரதிநிதிகள், விடுதலைப்புலிகள் சொன்னவை குறித்த சுட்டி(கள்) கிடைத்தால் போடுங்கள். காத்திருக்கிறேன்.//
நான் எங்கேங்க ஈழத்தமிழர்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள்னு சொன்னேன். ஒரு கட்டுரையை எழுதுபவர்கள் பிரதிநிதிகளாக தான் இருக்க வேண்டுமா? மேலும் இதற்கு நேரடியாக எதிர்பு சொன்னால் அவர்கள் பெயர் தமிழகத்தில் கெடாதா?
இங்குள்ளவர்களை மறைமுகமாக தூண்டுபவர்களாக தான் சொல்லி இருக்கிறேன்.
அதியமான்,
ஏன் சாத்தியபடாது? இப்போ 12 மீட்டருக்கு வெட்டும் அதே இடத்தில் ஆழப்படுத்த முடியாதா என்ன? இப்பொழுதே கூட ஆழமாக வெட்டலாம் திட்ட செலவுகள் அதிகம் ஆகும், எந்த அளவுக்கு வெற்றிகரமாக பணம் ஈட்டும் என்ற சந்தேகம் எல்லாம் இருப்பதால் , குறைந்த செலவில் திட்டம் கொண்டு வருகிறார்கள்.
அதியமான் எந்த திட்டத்தில் இது வரைக்கும் வெளிப்படையான செயல் முறையை பார்த்து இருக்கிறீர்கள் இதில் மட்டும் காணோமேனு கேட்கறிங்க!
குஜராத்ல சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் பெரிய திட்டம் தான் அதுல டிரான்ஸ்பரன்சியா என்ன நடக்குதுனு சொல்லுங்க பார்ப்போம்!
மதிப்பீடுகள் எல்லாம் செய்து , வாங்கி இருக்கிறார்கள் என்ன அது எல்லாம் பொது மக்கள் பார்வைக்கு வரவில்லை!
நான் எனது பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் , இதன் பொருளாதார ரீதியான செயல்பாடு பிரகாசமாக இல்லை என,மேலும் அயல்நாட்டு நிறுவனங்கள் முதலீடு எல்லாம் அவர்களின் நிபந்தனைக்குட்பட்டது , அதனை பூர்த்தி செய்ய வேண்டும்.
உதாரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின் உற்பதிக்கு முதலீடு செய்கிறேன் என்கிறாகள் ஆனால் மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். அது நம் நாட்டு அரசியலுக்கு ஒத்து வருமா? இல்லை நீங்கள் தான் ஒரு யூனிட்கு 10 என்றால் மறுப்பு சொல்லாமல் இருந்து விடுவீர்களா?
அதனால இந்த திட்டத்தையும் , சாலை போட ,அணைக்கட்ட mnc வரலையா என்ற ரீதியிலே பார்க்காதிங்க.
வாய்ஸ் ஆன் விங்ஸ்,
நன்றி!
நம் கடல் பகுதியில் நமக்கென்று ஒரு வழி , என்ற ஒன்றே ஆதரிக்க போதுமே, நம் வீட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் செல்ல அடுத்த வீட்டின் உள்ளே சென்று செல்ல வேண்டும் என்று இருந்தால் என்ன செய்வீர்கள்!
இப்பொழுதே இத்திட்டத்தை மேம்படுத்தி அதிக நிதியில் ஆழமாக வெட்டினால் எப்பொழுதும் பயன் அளிக்கும் திட்டமாக இருக்கும். நம் நிதி நிலமை, மேலும் இதன் மூலம் வரும் வருமானம் எல்லாம் கணக்கிட்டால் அதிகப்பணம் முதலீடு செய்வது கடினம்.
மேலும் இப்போவே அமெரிக்கா இந்த கால்வாயை சர்வதேச கடல்வழி ஆணையத்திடம் ஒப்படைத்து அனைவருக்கும் பொதுவான வழி என அறிவிக்க வேண்டும் என அழுத்தம் தருகிறது.சூயஸ் கால்வாய் மீது எப்படி உலக வல்லரசுகள் ஆதிக்கம் ஏற்படுத்திக்கொண்டதோ அது போல , இந்த கடல் வழி அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பதால் இப்பொழுது லேசாக அழுத்தம் தருவதோடு இருக்கிறார்கள்.
அப்படி பொது வழியாக செய்து விட்டால் அமெரிக்க போர்க்கப்பல்கள் கூட இது வழியே பயணிக்க முடியும் , இந்தியாவிற்கு சொந்தமானது என இருந்தால் அனுமதி அளிப்பது நம் விருப்பம் தான்!
சர்வதேச நிதி பெருவதில் இப்படி வெளியில் தெரியாத சிக்கல்கள் ஏகப்பட்டது இருக்கு, நாம் மட்டும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு ஒப்பு கொண்டால் இப்போவே இதற்கு அமெரிக்கா நேரடியாக நிதி அளிக்கும்!
வவ்வால், விரிவான பதிலுக்கு நன்றி.
ஆனாலும், நீங்கள் கூறியதிலிருந்து அதன் பயனை உணர முடியவில்லை. அமெரிக்காவுக்கு இதில் உள்ள ஆர்வம் போன்றவற்றைத் தவிர்த்து, ஒரு தமிழக சாமானியனுக்கு இத்திட்டம் எவ்வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டால் நன்றாயிருக்கும்.
கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதை எதிர்ப்பது என் நோக்கமல்ல. சாலைகள், ஆலைகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், மின்சார உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றின் பலன்கள் மக்களை நேரடியாகச் சென்றடைவதைப் போல், இத்திட்டத்தின் பலன்கள் மறைமுகமாகவாவது எவ்வாறு அவர்களைச் சென்றடையும் வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி விளக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். ்
ஏதோ தோரியம் இருக்கிறது...அதெல்லாம் கிடைக்காது போயிடும்ங்கறாங்களே...நீங்க அதை பற்றி ஒன்றும் சொன்னதாக தெரியவில்லையே?
மேலும், இப்போது தோண்டுவதுடன் இது நிற்காது, ரெகுலராக தோண்ட வேண்டும், இல்லையெனில் மணல் மேவிவிடுமென்கிறார்களே...அதன் செலவு எவ்வளவு பிடிக்கும்...அதற்கு ஏற்ற வருமானம் இருக்குமா?..
வாய்ஸ்,
//ஒரு தமிழக சாமானியனுக்கு இத்திட்டம் எவ்வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டால் நன்றாயிருக்கும். //
ரொம்ப வறட்சியா இருக்கு இப்படி கேட்பது, தங்க நாற்கர நான்கு வழி சாலைப்போட்டாங்க அதனால் சாமன்யனுக்கு பலன் என்ன, சென்னையில் இருந்து திருச்சி போறவங்க வேகமா போகலாம், ஆனால் இடைப்பட்ட கிராமத்திற்கு என்ன பயன், எதாவது பேருந்து நிற்குமா அவங்க ஊர்ல! நமக்கு என சொந்தமாக ஒரு கடல் வழிப்பாதை கிடப்பதே ஒரு பயன் தானே! ஏன் கொச்சியில் இருந்து தூத்துக்குடி வரும் கப்பல் இலங்கயை சுத்தனும்!
எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் என்ன கிடைக்கும்னு பார்த்து ஒரு திட்டம் போடனும்னா எந்த திட்டமும் போடவே முடியாது!
பலன் இருக்கும் ஆனால் அது எந்த அளவுக்கு இருக்கும் என்பது நடைமுறைக்கு வரும் போது தான் தெரியும்.
உங்களுக்கு சொன்னது மட்டும் பார்த்து இன்னும் முழுசாக சொல்லவில்லையே என சொல்லாமல் மற்றவர்களுக்கு சொன்ன பதிலையும் பாருங்கள் நிறைய சொல்லப்பட்டுள்ளது.
அனானி,
இதுக்கு முன்னர் எந்த அனானிக்கு பதில் சொன்னோம்னே தெரியாம நிறைய அனானி வந்தா எப்படி கண்டுக்கொள்வது?
சேது திட்டம் பற்றி ஆர்வமா இருக்கிங்க இதுக்கு முன்னர் இருக்கும் கால்வாய் திட்டம் பற்றி இணையத்தில் தேடிப்பார்த்து இருக்கிங்களா/
அப்படி செய்து இருந்தாலே இப்போது எழுப்பபடும் கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்குமே!
வெற்றிகரமாக செயல் பட்டு வரும் பனாமா கால்வாயிலேயே மணல் படிவுகளை அகற்றும் டிரெட்ஜிங் பணி குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யப்பட்டு வருகிறது.
கடல், கால்வாய் என்று இருந்தால் மணல் படிவு இருக்கத்தான் செய்யும் , மேலும் தற்போது மணல் அதிகம் சேராத அளவுக்கு புதிய வடிவில் கால்வாய் தோண்டும் முறை எல்லாம் வந்துள்ளது.
இலங்கைக்கும் ,இந்தியாவிற்கும் இடைப்பட்ட கடல் பரப்பின் அளவுக்கு ஒப்பிடுகையில் கால்வாய் அளவு சிறியது எனவே அதனால் எல்லாம் தோரியம் அங்கு சேரும் அளவு பெரிதாக பாதிக்கப்படாது.
தமிழகப்பகுதியில் இருப்பதை விட அதிக தோரியம் இருப்பது கேரள கடற்கரையில் தான் அங்கு தான் தோரியம் அதிகம் எடுக்கப்படுகிறது, நம்ம பகுதியில் ஏதோ பெயருக்கு எடுக்கிறாங்க, என்னமோ லட்சகணக்கான டன் அங்கே எடுப்பது போல அநியாயத்துக்கு வருத்தப்படுறிங்க. இது வரைக்குமே முழுசா பயன்படுத்திக்கொள்ளவில்லை!
இப்போது வரைக்கும் அங்கு கார்னெட் மணல் தான் அதிகம் எடுக்கப்படுகிறது!
//இக்கால்வாய் மூலம் வருமானம் வரும் வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை எனதிட்டத்திற்கு நிதி திரட்டும் ஆக்சிஸ்(uti bank) வங்கியின் சேர்மன் பேட்டி அளித்துள்ளார். இது மிகவும் முக்கியமானது. லாபம் ஈட்டும் வாய்ப்பினை பெருக்க திட்டம் தீட்ட வேண்டும்.//
வவ்வால்!
இது லாபம் தருமா?என்பது வேலை முடிவில் தான் தெரியுமானால், இவ்வளவு பணத்தைக் கடலில் கொட்டிவிட்டு..ஏற்படும் நிதிச்சுமையை யார் தாங்குவது.
மனச்சாட்சியுடன் யாரவது தகுந்த வண்ணம் ஆராய்ந்து,சரியான முடிவு சொல்ல முடியாதா??
யோகன் நன்றி!
தற்போது முதலீட்டின் அளவில(2427 கோடி) 7 சதம் என்ற அளவில் ஆண்டிற்கு வருமானம் வரும் எனக்கணக்கிட்டுள்ளார்கள், வட்டி, கால்வாய் பராமரிப்பு செலவு ,நிர்வாக செலவு எல்லாம் பார்க்கும் போது அது வெகு குறைவு என்று பொருளாதார பார்வையில் சொல்கிறார்கள்.
எனவே மேலும் பல வழிகளைக்கண்டு லாபம் தரும் விகிதத்தை அதிகரிக்க செய்ய வேண்டும் எனவே அது படிப்படியாக திட்டம் நிறைவேறிய பிறகு செய்ய வாய்ப்புள்ளது என்று சொல்லியுள்ளேன்.எல்லாம் அரசின் கையில் தான் உள்ளது, மெத்தனமாக இருந்தால் கடலில் கரைத்த காயம் போல பணம் கானாமல் தான் போகும்.
உதாரணமாக தூத்துக்குடி துறைமுகத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி அங்கு இருந்து சரக்கு பெட்டகம் ஏற்றி இறக்கும் பணியை விரைவாக செய்தால் கூட பல கப்பல் சரக்கு போக்குவரத்து செய்பவர்களும் அங்கு விரும்பி வருவார்கள், அதுவே சேது கால்வாயின் போக்குவரத்தை அதிகரிக்கும்.
ஏன் எனில் சென்னை துறை முகத்தில் பல சமயங்களில் பெட்டகங்களை இறக்கவோ ஏற்றவோ வாரக்கணக்கில் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது.பெட்டகங்கள் துறை முகத்தில் காத்திருக்கும் காலத்திற்கு வாடகை தர வேண்டும் கப்பல் நிறுவனங்கள், அது எல்லாம் தண்ட செலவு தானே! கால்வாய் வெட்டுவதோடு இல்லாமல் பல வேலைகளும் செய்தால் தான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
உதாரணமாக பனாமா கால்வாய் வெட்டிய பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகே பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் மேம்படுத்தி லாபத்தை அதிகரித்தார்கள். அதற்கு முன்னர் மிதமான அளவு கப்பல்கள் தான் அதிலும் செல்லும்.ஏற்கனவே பதிவு பெரிதாக இருந்ததால் பனாமா கால்வாய் பற்றி சொல்லவியலவில்லை. பின்னர் விரிவாக சொல்கிறேன்.
/இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், / என்றும் சொல்கிறீர்கள்
/நான் எங்கேங்க ஈழத்தமிழர்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள்னு சொன்னேன். ஒரு கட்டுரையை எழுதுபவர்கள் பிரதிநிதிகளாக தான் இருக்க வேண்டுமா? மேலும் இதற்கு நேரடியாக எதிர்பு சொன்னால் அவர்கள் பெயர் தமிழகத்தில் கெடாதா?
இங்குள்ளவர்களை மறைமுகமாக தூண்டுபவர்களாக தான் சொல்லி இருக்கிறேன்./ என்றும் சொல்கிறீர்கள்.
யாரை யார் தூண்டியதாக வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்றும் எனக்குப் புரியவில்லை. யார் நேரடியாக எதிர்ப்பினைச் சொன்னால், அவர்களுடைய பெயர் எதற்குத் தமிழகத்திலே கெடும் என்றும் புரியவில்லை. அங்குள்ளவர்களை மறைமுகமாகத் தூண்டுகின்றவர்கள் யாரென்றும் எனக்குப் புரியவில்லை. அந்தக்குழப்பத்திலே சுட்டிகளைக் கேட்டுவிட்டேன். மன்னிக்கவேண்டும். நீங்கள் சொன்னால், மெய்யாகத்தான் இருக்கமுடியும்.
ஆனால்,
/இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.
தற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.
ஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே!/ என்பது தமிழ்நாட்டு/இந்திய அப்பாவிப்பொதுஜனத்தினைக் உங்கள் scare-tactic அல்ல என்பதை நீங்கள் எல்லோருக்கும் தெளிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஆதாரங்களைக் கேட்டேன். ஒரு சமயம், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளிலே வந்திருப்பின், அஃது உண்மையாகத்தான் இருக்கவேண்டும் என்பதை யாராவது அடிக்குறிப்பாகச் சுட்டிக்காட்டாவிட்டால், அடிக்கடி மறந்து போகின்றேன். மன்னித்துக்கொள்ளுங்கள்.
உதாரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் மின் உற்பதிக்கு முதலீடு செய்கிறேன் என்கிறாகள் ஆனால் மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்கிறார்கள். அது நம் நாட்டு அரசியலுக்கு ஒத்து வருமா? இல்லை நீங்கள் தான் ஒரு யூனிட்கு 10 என்றால் மறுப்பு சொல்லாமல் இருந்து விடுவீர்களா? //
unless power theft and transmission losses are reduced to a normal level, the scenerio is bleak. there is acute power shortage in Maharastra. pricing of power should be rational, that's is all. or we can do withour power. the choice is ours.
or the govt should subsidise the free power, domestic, etc ;not the
SEBs.
there are many horror stories within EBs. i am EEE and many of my batchmates are with TNEB.
and time will prove about Sethu project's objecives and practical results
வவ்வால், பொறுமையாக விடையளித்ததற்கு நன்றி :)
உங்கள் பதிவு, பின்னூட்டங்கள் ஆகியவற்றைப் படித்த பின்பே எனது கேள்விகளை எழுப்புகிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரும்பாலும் அவை கப்பல் முதலாளிகளுக்கு எவ்விதமான பலன்கள் என்பது பற்றியே பட்டியலிட்டதாகப் படுகிறது.
உங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - அதில் திருச்சி இடம்பெற்றுள்ளதா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. எப்படியும் நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)
ஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா? மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது?
இது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
most importantly dubai is a free port. while India cannot do it with any of its ports. and turn around time in Indian ports is abominably high (15 days occasionally) for loading and unloading a liner, due to our govt work culture, union bottle-necks,
corruption ,etc.
hence no comparision with dubai port...
பெயரிலி,
நன்றி!
நான் சொன்ன கருத்தை புலிகளின் பிரதிநிதிகளா சொன்னார்கள் சுட்டி தாருங்கள் எனக்கேட்டதால் இந்த செய்தியை அவர்களே சொன்னதாக சொல்லவில்லை எனத்தான் நான் சொல்லி இருக்கிறேன்.
இது ஊடகத்தில் சொன்ன செய்தியை "சொல்கிறார்கள்" என சொன்னது, ஆனால் அக்கருத்தை எங்கிருந்து அவர் பெற்றார் என்பது எப்படி எனக்கு தெரியும்.
சரி அத்தகவல் சரியா தவறா என்பதை விட, அதில் உள்ள லாஜிக் சரியாக தெரிவதால் நானும் பயன் படுத்திக்கொண்டேன்.
சரி நீங்களே சொல்லுங்கள் வட இலங்கைக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து கடத்துவதில்லையா?
அக்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தும், கண்காணிப்பும் அதிகரித்தால் , கடத்தல் பாதிக்கப்படாதா?
இவை இரண்டும் இல்லை என ஒருவராலும் மறுக்க முடியாது என்பதே உண்மை!
அதியமான்,
நன்றி!
அப்பாடா மின்சாரம் தயாரிக்க mnc வந்தா காசு கூட கேப்பாங்கனு உதாரணம் சொன்ன பிறகு தான் இந்த கால்வாய் சமாச்சாரத்த புரிஞ்சுகிறிங்க :-))
//and time will prove about Sethu project's objecives and practical results//
இதை தான் நான் ஆரம்ப்பத்திலேயே சொன்னது, இப்போ தான் உங்களுக்கு உதயம் ஆகி இருக்கு!
/சரி நீங்களே சொல்லுங்கள் வட இலங்கைக்கு தேவையான பொருட்களை இந்தியாவில் இருந்து கடத்துவதில்லையா?
அக்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்தும், கண்காணிப்பும் அதிகரித்தால் , கடத்தல் பாதிக்கப்படாதா? /
புலிகள் இலங்கைக்குத் தேவையான பொருட்களை இந்தியாவிலிருந்து இன்னமும் கடத்துகின்றார்கள் என்றே நம்புகிறேன் (முல்லைத்தீவுக்கருகிலேயும் வங்காளவிரிகுடாவிலும் புலிகளுக்குப் பொருட்கள் கொண்டு வந்த அவர்களின் சொந்தக்கப்பல்களை இந்திய-இலங்கை இராணுவக்கூட்டு பயங்கரவாதம் ஒழிக்கும் படைகள் அடிக்கடி அழித்து மூழ்கடித்துவிடும் இந்தீய-இலங்கை ஊடகங்களின் செய்திகளை இங்கே மறந்துவிடுவோம்)
வவ்வால், இதற்கு மாறாக, புலிகளுக்கு இது வாய்ப்பாகிவிடுமென்று சொல்ல, சில ஏரணங்களை நானும் சொல்லலாம்.
1. ஏற்கனவே பாக்குநீரணையிலே நிறைந்திருக்கும் இலங்கைக்கடற்படைக்கும் இந்தியக்கடற்படைக்கும் ஏகப்பட்ட போக்குவரத்துக்கிடையே புலிகளைக் கண்டு கொள்வது சிக்கலாகுமென்பதாலே, புலிகளுக்குக் கடத்தல் இன்னமும் இலகுவாகிவிடும்
2. புலிகளின் கப்பல்கள்கூட, வர்த்தகக்கப்பல்கள் என்ற போர்வையிலே இந்தியா இலங்கைக்கு அண்மையிலே வந்து போக இன்னமும் வசதிப்பட்டு இந்தியப்பாதுகாப்புக்குக் குந்தமாகி விடும். [இக்காரணம் என்ன மாதிரியாக,நீங்கள் குறிவைத்துச் சொன்ன கூட்டத்தைக் கிலி கொள்ள வைக்குமென்று கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்]
3. ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஓடிவரும் அகதிகளின் வருகையைக் குறைக்க இது பயன்படும் என்றுகூட ஒரு பொருளாதாரகாரணத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்
4. இத்திட்டத்தினைச் செயற்படுத்துவதன்பின்னால், புலிகளிருப்பதாக ஆபிரிக்காவிலிருந்து ஒரு புலனாய்வுப்பத்திரிகை தெரிவித்திரூக்க்கின்றது. [அப்படி வந்தால், அதன் தமிழாக்கத்தினை எடுத்து யாரேனும் தராமலா போகப்போகிறார்கள்? ;-)]
[இப்பிரச்சனையின் இந்திய உள்ளூர் அரசியலிலே கருணாநிதிக்கு ஆதரவும் - அவரின் அண்மைக்கால ஈழம் தொடர்பான அரசியல் நாட்டியங்கள் எவையாகவிருந்தபோதுங்கூட - சுற்றுப்புறச்சூழலை முன்வைத்து, சேதுசமுத்திரத்திட்டத்துக்கு எதிர்ப்பும் என்னிடத்திலே உண்டு. ஆனால், அவை என் தனிப்பட்ட கருத்துகள். வழக்கம்போல, தமிழகத்தினதோ, இந்தீயாவினதோ உள்நாட்டு அரசியலிலே என் மூணுசதக்கருத்துகளை நான் சொல்லவில்லை]
வாய்ஸ்,
நன்றி!
உண்மைலே உங்களுக்கு எதுவும் புரியலையா, இல்லை நாட்டு நடப்பு எதுவும் தெரியலையா?
தங்க நாற்கர திட்டப்பாதைல திருச்சி இருக்கானே சந்தேகம் சொல்றிங்க!அதுவே சரியா தெரியாம சேது பத்தி சொன்னா எப்படி புரியும்?
அய்யா அறிவு ஜீவி சென்னை , தூத்துக்குடி இணைக்கப்படுகிறதுனா நான் சொன்னதை புரிந்துகொண்டிங்க, விளங்கிடும்!
இப்போ விமான நிலையங்கள் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் னு இருக்கு ஆனால் பல சமயத்திலும் தேவைக்கு ஏற்ப விமானங்கள் அங்கே இல்லைனு சென்னைக்கு தான் வருவோம், ஏன்?
அப்படி வராமா இருக்கனும்னா மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களையும் சர்வதேச விமான நிலையம் ஆக்கி எல்லா விமானமும் அங்கே வர வைக்கனும் தானே, அப்படி செய்தால் அது சென்னை விமான நிலையத்துடன் அவற்றை இணைப்பதாகுமா?
இப்போ தூத்துக்குடி துறைமுகமும் அப்படி தான் இருக்கு அதனை சென்னை அளவுக்கு சர்வதேச தரத்தில் எல்லா நாட்டுக்கும் கப்பல் வந்து ,போகுமாறு செய்தால் அது ஒரு வகையில் சேது கால்வாயில் போக்குவரத்தினை அதிகரிக்கும் என சொல்லி இருக்கேன்!(யெப்பா சொன்னதையே எத்தனை தடவ சொல்லவேண்டியது இருக்கு)
//அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா//
நீங்கள் மற்ற பின்னூட்டம் எல்லாம் படித்ததாக சொன்னீர்கள் , எங்கே யோகன் அவர்களுக்கு நான் என்ன சொல்லி இருக்கேன் சொல்லுங்க?
கப்பல்காரனே அவன் கப்பலில் சரக்கு ஏற்றிக்கொள்வானா , யாரோ ஒரு உற்பத்தியாளர் அனுப்புவதை தானே எடுத்து செல்வார்கள்.
கப்பலில் சரக்கு ஏற்ற தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் துறைமுக வாடகை கட்டணம் என ஒன்றை பொருள் அனுப்புபவர்கள் தர வேண்டும். சென்னையில் சரக்கு அதிகம் இருப்பதால் குறைந்த பட்சம் ஒரு வாரம் முதல் சமயத்தில் ஒரு மாதம் கூட ஆகிறது. இந்த வாடகை எல்லாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர் தலையில் விழும், அவனுக்கு லாபம் குறையும், அதன் விலைவு அவன் தொழிலாளர்களுக்கு போனஸ் தருவது குறையும் , இப்போவாது புரியுதா?
இதெல்லாம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது , கால்வாயை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பது அதனை சார்ந்த துறைமுகத்தின் செயல்பாடையும் சார்ந்து இருக்கிறது.துறைமுகத்தில் சரக்கு ஏற்றுவதில் தாமதம் ஏற்படுவதை இப்போது குறைத்தால் கூட பல நன்மை இருக்கிறது, ஆனால் யாரும் செய்ய மாட்டேன்கிறார்கள், சேதுக்கால்வாயின் முன்னேற்றத்திற்க்காகவாது அதனை செய்வார்களா எனப்பார்க்க வேண்டும்.
சொந்தம் ,
நன்றி!
அருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல?
அதியமான் இப்போ மட்டும் துபை துறைமுகம் ஓபன் போர்ட் அதை ஒப்பிட கூடாதுனு சொல்லுங்க, அதே போல மற்றக்கால்வாய்கள் "சர்வதேச திறந்த வழி" அதோடு சேதுக்கால்வாயை ஒப்பிட கூடாதுனு மட்டும் தெரியலையே?
பெயரிலி,
நன்றி!
//வவ்வால், இதற்கு மாறாக, புலிகளுக்கு இது வாய்ப்பாகிவிடுமென்று சொல்ல, சில ஏரணங்களை நானும் சொல்லலாம்.//
அதுக்குள்ள நான் சொன்னதை மறந்துட்டிங்களே , நானே புலிகளுக்கு வாய்ப்பாக மாறிவிடும் என சொல்லி தான் இலங்கை அரசும் எதிர்க்கிறது எனச்சொல்லி இருக்கிறேனே!அதுவும் நான் சொன்னது போன்ற காரணங்களையே சொல்லி இருக்கிறீர்கள் :-))
இந்த கால்வாயினுள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியாது, நுழைவுப்பாதையில் சோதித்து தான் அனுப்புவார்கள், கட்டணம் வேறு அங்கு வசூலிக்கப்படும், போலியான ஆவணங்கள் காட்டி வரலாம்.ஆனாலும் எளிதான காரியமாக அது இருக்காது என நினைக்கிறேன்.
தற்போது போல நினைத்த மாத்திரம் அங்கிருந்து இங்கு படகில் வந்து செல்வது கண்டிப்பாக பாதிப்புள்ளாக்கும்.
Good post!
சேது தமுத்திரக் கால்வாய்த் திட்டம் தொடர்பாக தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரை ஒன்று உருவாகி வருகிறது.
இத்திட்டம் தொடர்பாக உங்களுக்கு இருக்கும் அறிவினை அங்கே பதிவு செய்து கட்டுரையை வளர்த்தெடுப்பதன்மூலம் ஆக்கபூர்வமான பணி ஒன்றில் பங்கெடுக்க அனைவரையும் அழைக்கிறேன்.
விக்கிபீடியா கட்டுரை
/அதுவும் நான் சொன்னது போன்ற காரணங்களையே சொல்லி இருக்கிறீர்கள்/
காரணங்களைச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அது உங்களின் நோக்கத்துக்கு ஆதரவாகவில்லையே ;-) நான் சொல்வது என்னவென்றால், விடுதலைப்புலிகள் கருத்துச் சொன்னதாக எங்குமே வெளிவராத நேரத்திலே, இரு பக்கத்தினரும் "விடுதலைப்புலிகளுக்கு சேதுசமுத்திரம் கட்டினால், வாய்ப்பு; கட்டாமலிருந்தால், வாய்ப்பு" என்று தமிழகமக்களை(யும் இந்தியமக்களையும்) பூச்சாண்டி "விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள்". "விடுதலைப்புலிகளும் வரச்செய்யவே பார்க்கிறார்கள்" என்று சொல்வது நியாயமா? குறைந்தபட்சம், எத்தனை விடுதலைப்புலிகள் ஸ்பெஷலிஸ்டுகள் தமிழ்நாட்டிலே / இந்தியாவிலே/உலகத்திலேயிருக்கின்றார்கள் - ஹரிஹரன், பிராமன், சூர்யநாராயணா, மாட்சிமைமிகு நரசிம்மன் ராம் ஐயங்கார், டிபிஎஸ் ஜெயராஜ், ரோஹான் குணரட்ணா, ஸ்ரீனிவாஸ ராகவன், பிகே பாலச்சந்திரன் ("அட! ஔஐபிகேப்கூட எல்டிடிஈ வைத்த வெறும் கேப்தானாமே"), முரளீதர ரொட்டி இவர்களிடம் ஆதாரம் கேட்டுப் போட்டிருக்கலாமே? :-( மிஞ்சி மிஞ்சிப்போனால், விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கமில்லையென்றால், அவர்கள் இதிலே தங்கள் கருத்தைச் சொல்லித்தான் ஆகவேண்டுமென்று அன்புக்கட்டளைகூட ஏதாவது டில்லியிலிருந்து அமையும் மனிதநேய அமைப்பூடாகக் கேட்டுப்பார்த்துக் கருத்தை வெளியிட்டிருக்கலாம். :-( பிகே பாலச்சந்திரன்தான், யாழ் பல்கலைக்கழகப்பேராசிரியர் பத்மநாதன் சேதுசமுத்திரம் பற்றிச் சொன்னதை எடுத்துப்போட்டிருந்தாரே. அதையேனும் ஆதாரமாகச் சேர்த்திருக்கலாம். இதிலே எவ்வளவு பகுதி பத்மநாதனுடையது, எவ்வளவு அண்ணன் பாலச்சந்தீரனுடையது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
/இந்த கால்வாயினுள் யார் வேண்டுமானாலும் நுழைய முடியாது, நுழைவுப்பாதையில் சோதித்து தான் அனுப்புவார்கள், கட்டணம் வேறு அங்கு வசூலிக்கப்படும், போலியான ஆவணங்கள் காட்டி வரலாம்.ஆனாலும் எளிதான காரியமாக அது இருக்காது என நினைக்கிறேன்./
வவ்வால்,
சுயஸ் கால்வாய், பனாமா கால்வாய் குறித்து நானும் கொஞ்சம் வாசித்திருக்கிறேன். அதனால், இந்தப் போக்குவரத்துக்குக் கட்டணம் கட்டி, எப்படியாக, கப்பலை ஏற்றி இறக்கி அனுப்புவார்கள் என்று எனக்கும் புரிகின்றது. விடுதலைப்புலிகள் போலியான ஆவணம் கொடுத்து வந்து போகின்றார்கள் என்று சொல்கின்றீர்கள். விடுதலைப்புலிகள் முட்டாள்களாக இருந்தாலுங்கூட (அவர்களென்ன, IIT, Columbia, Harvard, University of Florida என்றா பயங்கரவாதிகளை ஆய்வதும் எதிர்கொள்வதும் பற்றிப் பெரிய படித்தவர்கள்? :-( முட்டாள்களாகத்தானே இருக்கமுடியும்), அத்துணை அடிமட்ட முட்டாள்களாக இருக்கமுடியாதென்றே நினைக்கிறேன். விடுதலைப்புலிகளின் கப்பல்கள் ஒழுங்கான பெயர்களிலே லைபீரியா, பனாமா, மலேசியா, சிங்கப்பூரிலேதான் கப்பல்களைப் பதிவு செய்திருக்கின்றார்களென்றும் அப்படியான கப்பல்கள் எப்படியாக உலகத்தின் பல துறைமுகங்களிலே சரக்குக்கப்பல்களாகப் போய் வருகின்றனவென்றும் சில புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுகின்ற நிறுவனங்கள், புலியெதிர்ப்பாளர்கள் எழுதிய (ஆய்வுக்)கட்டுரைகள் இணையத்திலே உலாவுகின்றன. குறிப்பாக, குமரன் பத்மநாபன் கைது(செய்யப்பட்டாரா? இல்லையா?) விவகாரத்தோடு இக்கப்பல்கள் செயற்படும் விதம் குறித்து அண்மையிலேயே சில கட்டுரைகள் (காண்க: டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை - அவர் புலியெதிர்ப்பாக எழுதியிருப்பதால், ஆங்கிலத்திலே பெயர்க்கும் சிரமமில்லாமலே, டைம்ஸ் ஆப் இண்டியாவுக்கு அனுப்பி வைக்கலாம் ;-)) வெளிவந்திருக்கின்றன. இந்நிலையிலே, நீங்கள் வெளியிட்டிருக்கும் கூற்று மிகவும் எளிமையானதோவெனத் தோன்றுகிறது.
மேலும், இன்று விடுதலைப்புலிகளின் கடைசிக்கப்பலையும் தாங்கள் அழித்துவிட்டதாக இலங்கையரசு சொல்லியிருப்பதால்,அப்பயம்கூட சேதுசமுத்திரத்திட்டத்துக்கெதிராக வேண்டியதில்லையே ;-)
/அதுக்குள்ள நான் சொன்னதை மறந்துட்டிங்களே , நானே புலிகளுக்கு வாய்ப்பாக மாறிவிடும் என சொல்லி தான் இலங்கை அரசும் எதிர்க்கிறது எனச்சொல்லி இருக்கிறேனே!/
அட, நீங்கள் இலங்கையரசு அப்படியாகச் சொல்கின்றனவென்றா சொல்லியிருக்கின்றீர்கள். வவ்வால், கொஞ்சம் உங்கள் கட்டுரையையே மேலே போய்ப் பாருங்கள். கீழேயிருப்பது நீங்கள் சொல்லியிருப்பது; இதிலே, எங்கே புலிகளுக்கு வாய்ப்பாகிவிடுமென்றூ இலங்கையரசு எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள்? நேரடியாக நீங்களே புலிகளுக்கு வாய்ப்பாகப் போய்விடுமென்று பயம் காட்ட முயல்கின்றீர்கள். ஜூனியர் விகடனிலே இலங்கையரசு சொல்லியிருந்ததோ?
இந்த கால்வாயை இலங்கை அரசு விடுதலை புலிகள் பேரை சொல்லி எதிர்ப்பது போல , விடுதலைப்புலிகளும் வர விடாமல் தடுக்கவே பார்க்கிறார்கள், காரணம் , கால்வாய் வந்து விட்டால் அப்பகுதியில் கப்பல் போக்குவரத்தும் , கண்காணிப்பும் அதிகம் இருக்கும். தற்போது மணல் திட்டுகள் அதிகம் இருப்பதால் இந்திய கடற்படையின் கப்பல் போன்றவை அங்கு போகாது , ஏன் பெரிய படகுகளே போவதில்லை. இதனைப்பயன்படுத்திக்கொண்டு , புலிகள் பைபர் படகுகளில் தமிழ் நாட்டுக்கு வந்து தேவையான பொருட்களை கடத்தி செல்கிறார்கள்.
தற்போது ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் மட்டும் கண்காணிப்பு இருப்பதால் அவர்களுக்கு கடத்துவது எளிதாக இருக்கிறது , ஆழமான கால்வாய் வந்து இந்திய கடற்படையின் நவீன கப்பல், படகு எல்லாம் சுற்றி சுற்றி ரோந்து வந்தால் என்ன ஆகும் அவர்கள் கடத்தல்.
ஆரம்பகாலத்தை விட தற்போது இத்திட்டத்திற்கு அதிகம் எதிர்ப்பினை சிலர் தமிழ் ஆர்வலர்கள் ,சுற்றுசூழலார் ஆகியோர் பெயரில் காட்டக்காரணம் இது போன்ற அமைப்புகளின் தனிப்பட்ட நலன் பாதுகாக்கவே!
எனக்குச் சேதுசமுத்திரம் குறித்து தொழில்முறையிலான மண்ணரிப்பு_மண்ணடைவு_மண்படிவு & சுற்றாடல் ஈடுபாட்டுக்கப்பால், எதுவுமில்லை. ஆனால், எடுத்ததுக்கெல்லாம், ஓராயுதமாக, புலி புலி என்று தமிழக மக்களைப் பயம் காட்டுவதை, ஆதாரம் சரியாக இல்லாதபோது, தயவு செய்து நிறுத்துவிடுங்கள். அது காந்தீயதேசக்காரர்களுக்கு நேர்மையானதாகாது :-( எதற்கு உங்கள் மக்களையே நீங்கள் வெறுமனே பயமுறுத்துகின்றீர்கள்? :-(
சரி விடுங்கள்; உங்கள் நோக்கம் எனக்குப் புரிகிறது; என் நோக்கம் உங்களுக்கும் புரிந்திருக்கக்கூடும். மேலும், இவ்விடுகையின் நோக்கத்திலிருந்து திசை திருப்ப விரும்பவில்லை.
என் பின்னூட்டங்களை அனுமதித்து, அவற்றுக்குப் பொறுமையுடன் பதிலளித்ததற்கு நன்றி.
வவ்வால், நீங்கள் சொல்லும், அல்லது வெற்றியின் பதிவில் கேட்ட ஆனையிறவு/ யானை இறவு துறைமுகங்கள் அமைக்க உகந்த இடமும் அல்ல, ஆளமான கடல் உள்ள பகுதியும் அல்ல. ஆனையிறவு பகுதி வன்னி பெரு நிலத்தையும், யாழ்ப்பாண குடா நாட்டையும் இணைக்கும் பகுதி. அந்த ப்குதியினூடாக பழைய யாழ்ப்பாண இராச்சியத்துக்கு/ யாழ்ப்பாண பகுதிக்கு யாழ்பாண பகுதிக்கு யானைகள் கொண்டு வரப்பட்டதால் அப்பெயர் வந்ததாக தான் எனக்கு தெரியும். தமிழகத்துக்கு அங்கிருந்து நேரடியாக கொண்டுவரும் சாத்தியம் அறவே இல்லை.
http://www.ifsp-srilanka.org/html/administrative_map_jaffna.html
இந்த யாழ்ப்பாண (Jaffna) நிர்வாக வரைபடத்தில் Elephant pass என குறிக்கப்படும் இடம் தான் ஆனையிறவு/ யானை இறவு
மயூரன்,
நன்றி,
எனக்கு இக்கால்வாய் குறித்து நிபுணத்துவ அறிவெல்லாம் இல்லை , வாசிப்புகளின் வழி வந்த அறிவு தான், உங்கள் அழைப்புக்கு நன்றி! உண்மையில் பங்களிப்பு செய்ய முடியும் எனில் செய்கிறேன் வவ்வால் என்ற பெயரில் விக்கிபீடியா தமிழுக்கு ஏற்கனவே பதிவு செய்தும் உள்ளேன், அதை பயன்படுத்தவே இல்லை இது வரை!
பெயரிலி,
நன்றி!
நான் சொன்னது எல்லாம் பார்த்தீர்கள் இந்த பகுதி மட்டும் ஏன் பார்க்கவில்லை,நீங்கள் கட் செய்ததற்கு மேலே தான் இருக்கிறது, உங்களுக்காக இது,
//ஆரம்பம் காலம் தொட்டே இதனை இலங்கை அரசு எதிர்க்கிறது காரணம் , அவர்களுக்கு வர்த்தக இழப்பு ஏற்படும் , கொழும்பு துறை முகம் பாதிக்கப்படும் என்ற பயமே! எனவே இத்திட்டம் வரமால் இருக்க அனைத்து திரை மறைவு வேலைகளையும் செய்வதாகவும் பத்திரிக்கைகளில் வந்துள்ளது.வர்த்தக இழப்பு என்ற பயம் மட்டும் காரணம் அல்ல , ஆழமான கால்வாய் அமைய போவது வடக்கு இலங்கைக்கு அருகே அது முழுவதும் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேசம்.
ஏற்கனவே வலுவான கடற்படை வைத்துள்ளார்கள் இதனால் அவர்களது கடற்படை கப்பல்கள் எளிதாக சர்வதேச கடல் எல்லைக்கு போய் வர முடியும். மேலும் வழக்கமாக சர்வதேச கடல் எல்லையில் நிற்கும் கப்பல்களில் இருந்து அவர்களுக்கு தேவையான சரக்குகளை சிறிய படகில் போய் ஏற்றி வருவார்கள் தற்போது கால் வாய் வந்துவிட்டால் பெரிய கப்பல்களைப்பயன் படுத்த முடியும்.
மேலும் அவர்கள் இதனைப்பயன் படுத்தி கப்பல் படையை மேலும் வலுப்படுத்த கூடும், தலை மன்னார், ஆனைஇரவு, காங்கேசன் துறைமுகம்,யாழ்பாணம் ஆகியவற்றிர்க்கிடையே கடல் பயணம் எளிதாகவும் , பெரிய படகுகளுக்கும் வசதியாக அமையும் ஏன் எனில் சேதுக்கால்வாய் அப்பகுதிகளுக்கு அருகே செல்கிறது . எனவே இலங்கை அரசு இக்கால்வாயினால் ஆபத்து எனப் பயப்படுவதால் இத்திட்டம் வர விடாமல் தடுக்க முயல்கிறது.//
ஆதாரம் என்பது எங்கே எனக்கேட்டால் இதுக்கெல்லாம் கொண்டு வருவது கடினம் தான் (ஒரு சில அச்சு ஊடக தகவல்கள் இருக்கிறது அவையும் இன்னார் சொன்னது என சொல்லவில்லை)ஆனால் இப்படி எல்லாம் கூற்றுக்கள் இருக்கின்றது எனக்காட்டவே சொல்லி இருக்கிறேன்.
நீங்கள் சொன்னது போலவே பல வெளிநாடுகளில் பதிவு செய்த கப்பல்களை புலிகள் இயக்கலாம் , ஆனால் அந்த நாட்டு உளவுத்துறைகளோ , காவல் துறையோ அதில் நாட்டம் செலுத்தாமல் இருப்பதால் அது நடக்கிறது, இந்தியாவைப்பொறுத்த வரை அப்படி செயல் பட முடியாது, பெரும்பாலும் உளவுத்துறை விழிப்புடன் உள்ளது ஆனால் உள்ளூர் காவல் துறை கோட்டை விடும்!
இந்தியாவில் பதிவு செய்து கப்பல்கள் இயக்கவில்லை, எனக்கு தெரிந்து!
அது போல வெளிநாட்டில் பதிவு செய்த கப்பல்களை இயக்கினாலும் அதனை வருங்காலத்தில் தான் எப்படி இந்திய அரசு கையாளும் எனச்சொல்ல முடியும், அதற்குள் எல்லாமே புலிகளால் முடியும் என்பது போல பெருமை பேசிக்கொள்வது ஏனோ?
நீங்கள் சொன்னது போல எனக்கென்று தனி நோக்கம் எல்லாம் எதுவும் இல்லை, இது வரைக்கும் பல கட்டுரைகள் சேது சமுத்திரம் குறித்து வந்து விட்டது , அதில் இருந்து விடுபட்ட தகவல்களை மட்டும் தொகுத்து நான் ஒன்றை போட்டுள்ளேன், இது ஒரு மாற்று பார்வை. அதனால் தான் பல வழக்கமான தகவல்களை சொல்லவில்லை. ஏன் எனில் அவை எல்லாம் இங்கே பலரின் கட்டுரைகளில் சொல்லப்பட்டு இருக்கிறது.
குழைக்காட்டான்,
நன்றி!
துறைமுகங்கள் அமைக்க ஏதுவாக இருக்குமா என சொல்லவில்லை, ஆனாலும் கடல் வழி போக்குவரத்து அங்கு சாத்தியமே, இப்போது கோடியக்கரையில் துறைமுகம் எதுவும் இல்லை அங்கு இருந்து தான் அதிகப்பட்ச கடத்தல் நடைபெறும். அது போல தான் சொன்னேன்.
மேலும் பண்டையக்காலத்தில் காட்டு யானைகள் இரவில் அங்கு இருந்து தமிழகம் வரும் என கேள்விப்பட்டுள்ளேன். பொன்னியின் செல்வன் கதையில் கூட இது பற்றி இருக்கும். வெற்றி அவர்கள் மாதக்கல் பகுதியில் இருந்து கோடியக்கரை பகுதிக்கு நடந்தே வருவார்கள் என சொன்னதும் , அந்த பழைய கால கூற்று சரியாக இருக்குமோ என ஒரு அய்யம்.
மேலும் இன்று வரையிலும் வேதாராண்யத்தில் உள்ள திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற , அவர் பதிகம் பாடி கதவு திறந்ததாம் அக்கோயிலில், ஒரு சிவன் கோவிலுக்கு யாழ்பாணம் இலங்கை தமிழர்கள் தான் ஆதினக்கர்த்தா! அது சம்பந்தமாக வழக்கு எல்லாம் நடந்து உரிமை வாங்கி இருக்கிறார்கள், தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள் மேல் விவரம் தெரியலாம்.
எனவே தான் கோடியக்கரைக்கும் யாழ்பாணம் பகுதிக்கும் நீண்ட நாள் தொடர்பு இருக்கிறது என அப்படி சொல்லி இருந்தேன். ஒரு வேளை அவை எல்லாம் கதையாக இருக்கலாம், கேள்விப்பட்டதை தான் சொன்னேன், உண்மை என்று சொல்லவில்லையே.
/அதியமான் இப்போ மட்டும் துபை துறைமுகம் ஓபன் போர்ட் அதை ஒப்பிட கூடாதுனு சொல்லுங்க, அதே போல மற்றக்கால்வாய்கள் "சர்வதேச திறந்த வழி" அதோடு சேதுக்கால்வாயை ஒப்பிட கூடாதுனு மட்டும் தெரியலையே//
as you seem to be neither an economist nor a businessman, you will never understand that profit motive only drives all private ventures. and most important the efficency or Dubair or Singapore ports is very very high when compared to our govt ports with its CORRUPTION and sloth. try talking with a shipper.
and India has poured lacs of crores into many white elephents like Bhilai Steel, Kuderemuk iron ore and resulted only in higher inflation (due to borrowed and printed funds), shoddy goods and corruption.
a few billion more is not going to make much of a difference. who care for all that ?
and Salem or Trichy airports will attract international airlines only
if there is sufficent traffic. IA
or AI will run services but at enormous cost. taxes and tariff should be reduced to a reasonable level first. Petro products are taxed at 100 % or more..
and Suez Canal was funded by private investors and it remained so until Nassar nationalised it in 50s which led to a brief war with Anglo-French and Isrealis.
internation or nation waterway is secondary. if the private shippers or investors are interested in investing in the project in spite of open appeal by PM and govt, then it means things are not as transparent or rosey as portrayed by govt estimates of traffic and volumes and returns.
without sufficent volume of traffic, this project will be drain on scarece govt resources (which could be better utilised in improving rails, roads, ports, power, etc in S. Tamil Nadu) and will not serve its purpose. one day the govt may be forced to abandon the canal (which will be filled by sea-action and sand fill)
if it is deemed unviable and costly to keep it open.
our past govt record makes for many such cases. and the public will forget all this soon, while the govt debt and fincances deteriorate more. only when the price of all govt follies result in annaul price rise across the board, will the public outcry come up and still most will be ignorant of the true reasons for price rise..
that is our past history.
///if the private shippers or investors are interested in investing in the project in spite of open appeal by PM and govt, then it means things are not as transparent or rosey as portrayed by govt ///
i mean if the private shippedr or investors are NOT intersted...
அதியமான்,
நன்றி!
//as you seem to be neither an economist nor a businessman, you will never understand that profit motive only drives all private ventures. and most important the efficency or Dubair or Singapore ports is very very high when compared to our govt ports with its CORRUPTION and sloth. try talking with a shipper.//
நீங்கள் சொல்லும் தகுதிகள் எதுவும் எனக்கு இல்லாது இருக்கலாம், ஆனால் பொது அறிவு என்பது கொஞ்சம் போல இருக்கு(உங்களுக்கு அது சந்தேகம் தான்) தொழில்நுட்ப ரீதியாக பின்புலம் உண்டு அவ்வளவு தான் , ஆனால் உங்கள் பதில்களைப்பார்த்தாலே தெரிகிறது தொழில்நுட்பம் என்றால் வீசம் என்ன விலை கேட்ப்பிங்கணு,
முன்னர் கால்வாயை பிற்காலத்தில் கூட ஆழப்படுத்தலாம் என சொன்னேன் சாத்தியமே இல்லை என்றீர்கள், பனாமா கால்வாய் வெட்டிய பிறகே அதனை மேலும் பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் மேம்படுத்தினார்கள் என சொன்னதும் சத்தமே இல்லை.பனாமா கால்வாயினைப்பற்றிய தொழில்நுட்ப விவரம் முழுவதும் அறிந்தால் சேதுக்கால்வாய் ஒன்றும் மோசம் அல்ல என அறியவருவீர்கள்.
உங்களுக்கு இரண்டு வேண்டுகோள் ,
1)முதலில் இங்கு போட்டுள்ள மற்ற பின்னூட்டங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் படியுங்கள், உங்கள் கேள்விக்கு எல்லாம் விடை பெரும்பாலும் அதிலே இருக்கிறது.
இந்த பொருளாதாரம் , துறைமுக செயல் திறன் இதனை எல்லாம் எப்படி மேம்படுத்துவது என சொல்லியாச்சு நல்லா பாருங்க.
2)எதாவது இணையதளத்தில் இருந்து அப்படியே கத்தரித்து ஒட்டுவதை நிறுத்துங்கள். படிக்கவே முடியவில்லை.(ஏற்கனவே மா.சி யின் ஒரு பொருளாதாரப்பதிவில் இப்படித்தான் போஸ்டர் ஒட்டி எதுவும் புரியவிடாமல் செய்தீர்கள்)சொல்ல வருவதை சுருக்கமாக தமிழிலேயே சிறு பத்திகளாகப்போடுங்கள்!
வவ்வால்,
//உண்மைலே உங்களுக்கு எதுவும் புரியலையா, இல்லை நாட்டு நடப்பு எதுவும் தெரியலையா?//
ரெண்டும்ன்னே வச்சிக்கோங்க, எனக்கு பிரச்சனை கிடையாது :)
//தங்க நாற்கர திட்டப்பாதைல திருச்சி இருக்கானே சந்தேகம் சொல்றிங்க!அதுவே சரியா தெரியாம சேது பத்தி சொன்னா எப்படி புரியும்?//
தங்க நாற்கரம் பத்தி நீங்க சொன்ன பிறகு, மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக பார்த்த சுட்டி இதோ. இதில் காட்டப்பட்டுள்ள மார்க்கங்களில் திருச்சி வருவதற்கான வாய்ப்பு கிடையாதுன்னு நினைக்கிறேன். இல்ல உங்களுக்கு தெரிஞ்சி இவற்றில் திருச்சியும் வர வாய்ப்பிருக்குன்னா எப்பிடின்னு தெரிவியுங்க.
//இப்போ தூத்துக்குடி துறைமுகமும் அப்படி தான் இருக்கு அதனை சென்னை அளவுக்கு சர்வதேச தரத்தில் எல்லா நாட்டுக்கும் கப்பல் வந்து ,போகுமாறு செய்தால் அது ஒரு வகையில் சேது கால்வாயில் போக்குவரத்தினை அதிகரிக்கும் என சொல்லி இருக்கேன்!(யெப்பா சொன்னதையே எத்தனை தடவ சொல்லவேண்டியது இருக்கு)//
இங்கே அனுமான அடிப்படையில் சில வாதங்களை வச்சிருக்கீங்க. எனக்குத் தெரிஞ்சி தூத்துகுடி ஒரு சர்வதேச தரத்திலுள்ள ஒரு வணிக மையம் கிடையாது. அவ்வாறு இருந்ததுன்னா சேது கால்வாய் இல்லாமலே அங்க அதிகப்படியான கப்பல்கள் வந்துகிட்டு இருந்திருக்கும் (இலங்கையை சுற்றிக் கொண்டாவது). ஒரு கால்வாய் இருக்குங்கிறதினால ஒரு துறைமுகம் வளர்ந்துடாது. அந்தப் பகுதியில் இருக்கும் வணிக வாய்ப்புகளைப் பொறுத்துத்தான் அங்கிருக்கிற துறைமுகத்தோட வளர்ச்சியும் இருக்கும். இதுல உங்களோட முரண்பட விரும்பல்ல. என்னோட கேள்வியும் இது கிடையாது (i.e. தூத்துகுடி துறைமுகத்தை எப்படி வளர்க்கறது, etc).
என் கேள்வி எல்லாம் - சாமானியர்களையும் பங்குதாரர்களாக்கி (நூறாண்டுக் கனவுக்கதைகள் பேசி, பந்த் போன்றன செய்து உண்ர்வு பூர்வமாக அவர்களைத் திரட்டி) முன்னெடுத்துச் செல்லப்படும் இந்தத் திட்டத்தில் அவர்களுக்கு ஏதாவது ஆதாயம் உண்டா அல்லது கிடையாதா என்பதுதான். கிடையாதுன்னா, மாநாடுகளுக்கு லாரியில் கொண்டு போய் பயன்படுத்தப்படும் மக்கள் கூட்டம் போலத்தான் தமிழக அரசு இத்திட்டத்திற்காக அதன் குடிமக்களைப் பயன்படுத்துகிறதா என்பதுதான் என் கேள்வி. இதற்கு நீங்கள் விடையளிக்க விரும்பவில்லை என்றுத்் தெரிகிறது. :)
வாய்ஸ்,
உங்க காலைக்காட்டுங்க, எத்தனை முறை சொன்னாலும் முழுசாக படிக்கமாட்டேன்னு சொன்னா எப்படிங்கண்ணா?
உங்களுக்கு தேவையான இடத்தை மட்டும் கட் செய்து படிக்கறிங்களே , அதே பின்னூட்டத்தில் கீழ சொல்லி இருக்கிறத படிங்கண்ணா...
மீண்டும்..
//கப்பலில் சரக்கு ஏற்ற தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் துறைமுக வாடகை கட்டணம் என ஒன்றை பொருள் அனுப்புபவர்கள் தர வேண்டும். சென்னையில் சரக்கு அதிகம் இருப்பதால் குறைந்த பட்சம் ஒரு வாரம் முதல் சமயத்தில் ஒரு மாதம் கூட ஆகிறது. இந்த வாடகை எல்லாம் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்பவர் தலையில் விழும், அவனுக்கு லாபம் குறையும், அதன் விலைவு அவன் தொழிலாளர்களுக்கு போனஸ் தருவது குறையும் , இப்போவாது புரியுதா?//
இப்போ அந்த தொழிலாளி யாரு சாமன்யன் இல்லையா?
திருப்பூர்ல இருந்து பின்னலாடை ஏற்றுமதி செய்ய இப்போ சென்னை வரவங்க , தூத்துக்குடில சர்வதேசக்கப்பல் வந்தால் அங்கே இருந்தே அனுப்பலாம் மேலும் சென்னை துறைமுகத்தில் காத்திருக்கும் நாட்கள் தவிர்க்கலாம்.
அதிலேயே சொல்லப்பட்டது,
//துறைமுகத்தில் சரக்கு ஏற்றுவதில் தாமதம் ஏற்படுவதை இப்போது குறைத்தால் கூட பல நன்மை இருக்கிறது, ஆனால் யாரும் செய்ய மாட்டேன்கிறார்கள், சேதுக்கால்வாயின் முன்னேற்றத்திற்க்காகவாது அதனை செய்வார்களா எனப்பார்க்க வேண்டும்.//
சேதுக்கால்வாய் திட்டம் என்பது தூத்துக்குடி துறைமுகத்தினை மேம்படுத்துவதும் சேர்த்து தான் , அதற்கும் இதே திட்ட நிதியில் பணம் ஒதுக்கியுள்ளார்கள்.புதிய "container terminal" எல்லாம் வருகிறது.
உதாரணமாக மும்பை துறைமுகத்தில் அதிகம் நெரிசல் ஆகி தாமதம் ஆவதால் அங்கிருந்து ஒரு 75 கிலோ மீட்டர் தள்ளி மாலேக்கான் பகுதியில் சரக்கு பெட்டகம் ஏற்றி இருக்கும் டெர்மினல் கட்டுகிறார்கள். நாமும் சென்னைக்கு அருகே கட்டலாம் அப்படி ஒரு இடம் இல்லையே சென்னைக்கு அடுத்த வசதியான கடல் பகுதி தூத்துக்குடி தான். எனவே கால்வாயுடன் சேர்த்து அதனையும் மேம்படுத்துகிறார்கள்.
இன்னும் விளக்கமா சொல்றேன்,
இப்போ டாலர் மதிப்பு வீழ்ந்த போது
ஏன் திருப்பூர் பாதிப்புக்குள்ளாச்சு.அவர்கள் சரக்கு குறிப்பிட்ட நாட்டுக்கு போய் சேர்ந்த பிறகு தான் பணம் தருவார்கள், அன்றைய டாலர் மதிப்புக்கு. ஒரு 10 நாள் துறைமுகத்தில் சரக்கு காத்திருக்கு அதுக்குள்ள டாலர் வீழ்ந்தால் என்னாகும் நஷ்டம் தானே.
நீங்கள் அந்த ஊரு பெரிய தொழில் நகரமா என்று நேராவே எல்லாத்தையும் பார்க்காதிங்க இனிமே வளர்ந்துட்டு போகுது.
//என் கேள்வி எல்லாம் - சாமானியர்களையும் பங்குதாரர்களாக்கி //
அது என்ன சாமன்யனை பங்கு தாரர்கள் ஆக்கினு புரியவில்லை. திட்டத்தின் பலன் சாமன்யனுக்கு வராமல் போகுதா? வருதே. பங்கு தாரர்கள் ஆக்கினா எப்படி, எத்தனை விமான நிலையங்கள் , பேருந்து நிலையங்கள்னு கட்டுராங்க அதில எல்லாம் பங்கு தாரர் ஆகி இருக்கிங்களா நீங்க?
நானே பதிவு போடும் போது வெறும் ஒருமுகத்தன்மையோடு கால்வாய் பற்றி மட்டும் தேடாமல் பலதும் இணையத்தில் பார்க்கிறேன், அப்படி கொஞ்சம் நீங்களும் பாருங்கள் பலவும் நான் சொல்லாமலே விளங்கும்.
//நீங்கள் விடையளிக்க விரும்பவில்லை என்றுத்் தெரிகிறது. :)//
மேலும் முழுசாக பின்னூட்டத்தை கூட படிக்காமல் ஒரு புள்ளியை மட்டும் சுற்றி வருவேன் என இருக்காதீர்கள்!
முழுசாப்படிச்சா விடை கிடைத்துவிடும் . விடையை எதிர்ப்பார்த்து நீங்கள் கேள்விக்கேட்கவில்லை என்பதும் தெரிகிறது, அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இல்லை என நினைக்கிறேன்.
வாய்ஸ்,
நீங்க எந்த காலத்தில் நிற்பவர் என்பது தெரிந்து விட்டது, தங்க நாற்கரத்திட்டம் பற்றி ஒரு சுட்டி போட்டிங்களே அது அரத பழசு ஆன ஒரு சுட்டி,(திட்டம் பற்றி பேசியக்காலம் போல) இதோ லேட்டஸ்ட் ஆ தருகிறேன் ஒருக்கா எட்டி பாருங்கண்ணா?(இந்த ரேஞ்சில இருந்தா எப்படி நான் சொல்றதெல்லாம் புரியும் :-)) }
தமிழ்நாட்டிலேயே இல்லையா , இல்லை இங்கே இருந்துகிட்டே வீட்டை விட்டி வெளியில் சென்றதே இல்லையா? பல இடங்களிலும் சாலைப்போட்டு அதில போக்குவரத்தும் நடக்குதே!
http://www.nhai.org/otherimplementation.asp
///இப்போ 12 மீட்டருக்கு வெட்டும் அதே இடத்தில் ஆழப்படுத்த முடியாதா என்ன? இப்பொழுதே கூட ஆழமாக வெட்டலாம் திட்ட செலவுகள் அதிகம் ஆகும், எந்த அளவுக்கு வெற்றிகரமாக பணம் ஈட்டும் என்ற சந்தேகம் எல்லாம் இருப்பதால் , குறைந்த செலவில் திட்டம் கொண்டு வருகிறார்கள்.///
as the main obejction to the project is that ships weigheing more than 20,000 tons cannot use the canal, then why not deepen it now itself which will be cheaper and sensible than postponing it for the future ?
Panama Canal was built nearly one hundred years ago and it was deepened later when tonnage of ships increased later. it doesn't make sense that Sethu canal is dug now for less than 20,000 ton ships while the majority of traffic volumes will be above 20,000 tons.
what prevents the depth being planned for the bigger liners ?
economcis or technical constraints ?
And can anyone explain why Adani Port in Gujart (a totally private port) is deemed more efficent than Chennai or Cochin ports ?...
//2)எதாவது இணையதளத்தில் இருந்து அப்படியே கத்தரித்து ஒட்டுவதை நிறுத்துங்கள். படிக்கவே முடியவில்லை.(ஏற்கனவே மா.சி யின் ஒரு பொருளாதாரப்பதிவில் இப்படித்தான் போஸ்டர் ஒட்டி எதுவும் புரியவிடாமல் ///
why not ? if those pastes can be refuted using factual arguments then it would be good. as they are long, translation into tamil is too tedious. i think all the bloggers can understand that english.
and i would be happy if anyone refutes my post in my blog about inflation, money supply, etc with
factual arguments.
அதியமான்,
முதலில் நீங்கள் சொன்னதை மறந்து விட்டீர்கள்,
நான் பின்னர் கூட மேம்படுத்தலாம் என சொன்னதற்கு அப்போது சொன்னது,
////பெரிய கப்பல்கள் செல்லும் வண்ணம் பிற்காலத்தில் கூட கால்வாயை மேம்படுத்திக்கொள்ள முடியும்///
how ? techincallu never possible.//
இப்படி சொன்னீர்கள்.
மேலும் ஏன் இப்போது ஆழமாக செய்யவில்லை என்பதற்கு நமது பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை என்பதையும் அப்போதே சொல்லி இருக்கிறேன் அதையும் மறந்து விட்டீர்கள்!
உங்கள் மேலான கவனத்திற்கு , இன்று வரை பனாமா கால்வாயின் ஆழம் 12.5 மீட்டர் , அகலம் 1000 அடிமுதல் 500 அடி வரை.
அதே சமயத்தில் சேதுக்கால்வாயின் ஆழம் சரியாக சொன்னால் 12.8 மீட்டர் அகலம் 300 மீட்டர்(1000அடி)
பனாமா கால்வாயில் கொஞ்சம் பெரிய கப்பல்கள் மட்டுமே செல்லும் அதற்கும் காரணம் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள "water locks" அமைப்புகளே.மிகப்பெரிய கப்பல்கள் இன்று வரை அதில் பயணிக்க முடியாது. எப்படி எடைக்குறைது மற்ற கப்பல்களை அதில் பயணிக்க வைக்கிறார்கள் என்பதையும் ஏற்கனவே சொல்லியுள்ளேன் பாருங்கள்.
3 பெரிய , முதல் 12 சிறிய water locks ஏற்படுத்தப்பட்டுள்ளது அதுவும் கால்வாய் வெட்டப்பட்டக்காலத்தில் அல்ல, பின்னர் தேவை கருதியே.
அது 100 ஆண்டுகள் முன்னர் எனவே அப்படி இப்போது உடனே செய்யலாமே எனலாம் என்பதற்கு நமது பொருளாதார சூழல் இடம் தறாது எனபதையும் ஏற்கனவே சொல்லி உள்ளேன். கால்வாய் வரட்டும் பின்னர் மேம்படுத்திக்கொள்ளலாம் என்பதே எனது கூற்று, பல முறை அதை சொல்லி விட்டேன்!
//why not ? if those pastes can be refuted using factual arguments then it would be good.//
டாலர் பற்றி பேசினால் பொதுவான பணவீக்கம் பற்றி மொட்டையாக தற்போது கூட தென்றல் அவர்கள் பதிவில் பேஸ்ட் செய்துள்ளீர்கள் , அதையே முன்னர் மாசி அவர்கள் பதிவிலும் போட்டீர்கள்,
அதாவது குறிப்பிட்டு ஒன்றை பேசும் போதும் கூட பொதுவாக பொருளாதாரம் என்று வரும் வகையில் பேஸ்ட் செய்கிறீர்கள்.
எல்லாவற்றுக்கும் ஒரு பின்னூட்டம் எங்கு பார்த்தாலும் அதையே பேஸ்ட் செய்து அதில் என்ன தவறு என்றால் எப்படி, அது பொதுவாக உண்மையாக இருக்கலாம் பேசுவதை விட்டு விலகி இருக்கிறது என்பது தெரியாதா?
எதாவது தனியார் அரசு நிறுவனம் செயல் பாடு குறித்து பேசினால் அக்காலத்தில் tvs bus எப்படி நேரத்தில் ஓடியது என ஆரம்பித்து ஒரு பின்னூட்டம் எப்போதும் பேஸ்ட் செய்கிறீர்கள்.
மாசி அவர்கள் பதிவில் அவர் சொன்னதை இங்கே போடுகிறேன் பாருங்கள்!
//விபினின் பின்னூட்டத்துக்கு முந்தைய 9 பின்னூட்டங்கள், ஆங்கிலத்தில் நீளமாக இருப்பவை, அதியமான் பல இடங்களில் அவர் படித்ததை எழுதியதை ஒற்றி ஒட்டியது என்று நினைக்கிறேன். நானும் அப்புறம் படித்துக் கொள்ளலாம் என்று வைத்திருக்கிறேன்.
அதியமான், எங்களைப் போன்றவர்களுக்காகவாவது நீங்கள் உணர்ந்தவற்றை தமிழில் சுருக்கி சின்னச் சின்னப்
பத்திகளாகத் தாருங்களேன். இவ்வளவு நீள ஆங்கில கட்டுரைகப் படிக்கப் பொறுமை இருப்பதில்லை.//
நீங்கள் எல்லாவற்றுக்கும் ஒரு "standard comments" கைவசம் வைத்துள்ளீர்கள் அதை எல்லா இடத்திலும் போடுவீர்கள் , மெனக்கெட்டு பதில் சொன்னால் அதையும் படிக்க மாட்டீர்கள்!
சொந்தமாக எதாவது செய்யுங்க! எனது பதிவுக்கு வருபவர்களை நான் பங்கம் செய்யக்கூடாது என நினைப்பவன் எனவே உங்களது பின்னூட்ட பாணி தெரிந்தும் பதில் சொல்லி வருகிறேன்.
உலகத்தில் என்ன நடக்கிறது என யாருக்கும் தெரியாது என மட்டும் நினைத்து செயல்படாதீர்கள் , அனைவருக்கும் தெரியும் என்ன வெளிப்படையாக சொல்லாமல் சத்தம் போடாமல் என்ன செய்யனுமோ செய்வார்கள்.
all my comments in MaSi's post about poverty ration and Indian billionares are relevent to that subject : about growth rates, LPG and poverty reduction since 1991.
and reg : private bus companies :
well if you are all satisfied with the present set up of MTC buses, shortages, traffic conjestion, black market in crores for 'bus routes', corruption and status quo, then it is fine with me.
if Sethu Canal is drain on future govts, then that too is fine. yesterday S.Swamy has said it may cost Rs.1000 crore per year to maintain it. he may be biased, exaggerating, etc. but is his argument valid or not ?
ஆஹா அதியமான்,
உங்களுக்கு மான் கராத்தே தெரியுமா? நான் அதான் செய்யணும்,
ஏற்கனவே உங்கள் பின்னூட்டம் பொதுவாக ஒத்துப்போறாப்போல இருந்தாலும் குறிப்பாக ஒன்றை பேசும் போது அதை விட்டு விலகி இருக்குனு சொல்லி இருக்கேன் அப்புறமும் அதான் ரிலவண்டா இருக்கேனா, எதுவுமே புரியாதோ?
சரி அத்தனை பெரிசா போட்டிங்களே கடைசில மாசி சொன்னதையும் பார்க்க வேண்டியது தானே "படிக்கலை இனிமேதான் படிக்கணும்னு!"
சரி உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் ஏற்கனவே இதேப்பதிவில் உள்ளது பொறுமையாகப்படித்துப்பார்க்கவும்!
மேலும் சேது சமுத்திரம் பதிவின் தொடர்ச்சியாக அடுத்தப்பகுதியும் வருகிறது படித்துப்பாருங்கள்!
anupuLLa vavvaal,
panmaiyaaka varukiRa itangkaLil ellaam uLLana irukkinRana enRu ezutha vEntum. NIngkaL uLLathu irukkiRathu enRu niRaiya itangkaLil orumaiyaaka ezuthukiRIrkaL. vERu yaaraaka irunthAlum solliyirukka maattEn. ungkaL pataippukaL nErththiyaaka iruppathaal intha kuRaiyai suttikkaatta vEntum enRu thOnRiyathu.
உமையணன்,
நன்றி,
கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன். நான் அவ்வளவாக எழுதி பின் திருத்துவதில்லை, அப்படியே நேரடியாக தட்டச்சி , வெளியிட்டுவிடுகிறேன். பின்னர் ஆங்காங்கே சில தவறுகள் தெரியும் சின்ன தப்பு தானே பரவாயில்லை யாரும் கண்டுக்கமாட்டங்கனு விட்டு விடுவேன் :-))
Post a Comment