Wednesday, October 17, 2007

விசில் அடிக்கலாம் வாங்க!


கிரிக்கெட் மேட்ச் நடக்கும் மைதானம், சூப்பர் ஸ்டார் ரஜினி படம் ஓடும் திரையரங்கம் , மாநகரப்பேருந்து என்று எங்கும் கேட்கும் சத்தம் விசில் சத்தம்! நம்மில் பலரும் விசில் அடித்து இருப்பார்கள்(சிலருக்கு காத்து மட்டும் வரும்) சிலர் வாய்ல விரல் வைத்து அடிப்பார்கள், சிலர் கடையில் விற்கும் விசில் வாங்கி ஊதுவார்கள். வாயில் வைத்து உஷ் என்று ஊதினால் எப்படி உய்ங்க் என்று சத்தம் வருகிறது?

விசிலுக்குள்ள என்ன இருக்கு?

விசில் என்பது ,ஒரு சிறிய குழல் , அதனை கழுத்து என்பார்கள், பிறகு உருண்டையான பந்து போன்ற வெற்றுக்கூடு அதனுடன் இணைந்து இருக்கும். அதன் மேற்புறம் ஒரு திறப்பு இருக்கும். இது தான் ஒரு விசிலின் அமைப்பு.

குழல் பகுதியை வாயில் வைத்து காற்றினை உட்செலுத்தும் வண்ணம் ஊதினால் சத்தம் வரும்! அந்த சத்தம் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.

விசிலை அறிவியல்ப்பூர்வமாக அழைத்தால் ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசொனட்டோர் என்று அழைக்க வேண்டும்(Helmholtz resonator or Helmholtz oscillator ) உருண்டையான பந்து ஒரு காற்றுக்கலமாகசெயல்படுகிறது இதனை தான் ரெசனோட்டர் என்பது. இது தான் ஒலி வரக்க்காரணமாக இருக்கிறது.


ஹெர்ம் ஹோல்ட்ஸ் என்பவர் காற்றின் அதிர்வில் இருந்து ஒலி வருவதற்கான அறிவியல்ப்பூர்வமான விளக்கம் கொடுத்தார். அதை விளக்க அவர் விசிலை ஒத்த ஒரு மாதிரி வடிவத்தை உருவாக்கினார். அதனை ஹெர்ம்ஹோல்ட்ஸ் ரெசனோட்டர் என்பார்கள்.விசில் என்பது முன்னரே இருந்தாலும் அவர் பெயரால் விசிலையும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஹெர்ம் ஹோல்ட்ஸ் ரெசனோட்டர்


ஹெர்ம் ஹோல்ட்ஸ் தத்துவத்தின் படி விசிலில் இருந்து ஒலி எப்படி வருகிறது எனப்பார்ப்போம்.

குழலின் வாய்ப்பகுதியின் வழியாக காற்றினை செலுத்தும் போது காற்றின் ஒரு பகுதி உருண்டை வடிவ பந்தில் உள்ள மேற்புற திறப்பின் வழியே மேலே செல்கிறது மறு பகுதி உருண்டை வடிவத்தின் உட்பகுதியில் கீழ் நோக்கி செல்கிறது,அப்போது பந்தின் உட்பகுதியில் உள்ள காற்றினை அழுத்துகிறது. இப்பொழுது மேல் திறப்பின் வழி சென்ற காற்றால் வெற்றிடம் ஏற்பட்டு மேற்ப்பரப்பில் அழுத்தம் குறையும் இதனால் பந்தின் உட்பகுதியில் அழுத்தப்பட்ட காற்று மீண்டும் விரிவடையும், இந்த விளைவு தொடர்ச்சியாக நடக்கும் போது அதுவே ஒரு ஒத்திசைவான காற்றின் அதிர்வாக மாறும்(harmonic vibration of air) தொடர்ச்சியாக ஊத சீரான இனிமையான ஒலி வரும்.

உருண்டையான பந்து போன்ற வடிவத்தின் கன அளவிற்கு ஏற்ப ஒலியின் வீச்சு இருக்கும். இந்த உருண்டைதான் ரெசனோட்டர் ஆக செயல்படுகிறது. பந்தில் உள்ள காற்று தம்பத்தின் நீளத்திற்கு ஏற்ப ஒலியின் வலிமை இருக்கும்,ஏன் எனில் காற்று தம்பத்தின் அதிர்வு தான் ஒலி உருவாகக்காரணம்.

விசில் என்றில்லை காற்றினை செலுத்தி ஒலி எழுப்பும் வாத்தியக்கருவிகள்/கருவிகள் அனைத்துமே இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

வீசில் ஒலியின் அதிர்வெண் கண்டுப்பிடிக்க ஹெர்ம் ஹோல்ட்ஸ் கண்டுப்பிடித்த சூத்திரம்,



f= frequency
c= speed of the sound
s= surface area of the top hole
v= volume of the air
L= length of the whistle neck

வீணை, கித்தார் போன்றவற்றிலும் ஒரு காற்றுக்கலம் உருண்டையாகவோ இல்லை பெட்டிப்போன்றோ இருக்கக்காரணம் இது தான்.


26 comments:

பூனைக்குட்டி said...

சட்டென்று நினைவுக்கு வந்தது இந்த விசிலடிச்சான் குஞ்சுகளூம் வெளக்கமாத்து கட்டையும் பதிவு

வவ்வால் said...

மோகன்,

இப்படி சுட்டிய போட்டதும் மண்டைல பெரிய மண் சட்டிய தூக்கி போட்டாப்போல ஆச்சு, ஏதடா, இது நீங்க ஏற்கனவே ஒரு பதிவு போட்டு அதையே நானும் தெரியாம ரிப்பீட் அடிச்சுட்டேன்னு சொல்ல வறிங்களோனூ, கடைசில அப்படி இல்லை(சற்றுமுன் தான் உங்க கட்டபொம்மன் பதிவ படிச்சுட்டு நான் அப்பவே இதைப்பற்றி போட்டேன்னு சுட்டித்தரலாம்னு இருந்தேன், இங்கே வந்தா எனக்கு சுட்டி)

ஆனால் உங்கள் பதிவில் இருந்த விக்கி சுட்டியில் கூட சரியாக விளக்கம் இல்லை சும்ம ஹெர்ம்ஹோல்ட்ச் ரெசொனோட்டர்னு சொல்லிட்டு போய்டுறாங்க!

ஜமாலன் said...

தலைப்பை பார்த்து ஏதொ கலாச்சாரம் பற்றிய பதிவு என்ற வந்தேன். உங்கள் விஞ்ஞான விளக்கம் அருமை. இதுபோன்ற அறிவியல் கட்டுரைகள் பதிவில் வருவதும் அவசியம்தான். பாராட்டுக்கள்.

பூனைக்குட்டி said...

வவ்வால், கட்டபொம்மு பற்றி எழுதியது 2005ல். இப்ப யாரோ கிளறிக்கொண்டு வந்திருக்காங்க...

ராஜ நடராஜன் said...

நீங்க பேசாம கோபால் பாக் பக்கத்துல நிலம் வாங்கிப் போடுங்க!தலைக்குள்ள உள்ளதையெல்லாம் எல்லோருக்கும் தாரை வார்த்துடலாம்.உண்மையில் உங்கள சேது திட்ட விளக்கம் பதிவில் கண்டு பிடிச்சது.பல எல்லைகளைத் தொடுகிறீர்கள்.ஆச்சரியமாக இருக்கிறது.

வவ்வால் said...

ஜமாலன்,
நன்றி!
//தலைப்பை பார்த்து ஏதொ கலாச்சாரம் பற்றிய பதிவு என்ற வந்தேன். //

ஏங்க நான் என்ன கலாச்சாரக்காவலனா அப்படிலாம் பதிவ போட)ஒரு வேளை நீங்க க.கா வா?)

அவ்வப்போது அறிவியல், அவியல் எல்லாம் போடுறதுண்டு!
------------------------

மோகன்,
அப்போ நீங்க தான் முன்னோடி,நான் கெட்டி பொம்மு பத்தி ஒரு 3 மாசம் முந்தி தான் போட்டு இருப்பேன், அதுவே எங்கே இருக்குனு தெரியலை தோண்டி எடுக்கிறேன்! உங்கள் பதிவிள் சொல்லப்பட்டிருப்பதை முன்னரே புத்தகத்திலும் படித்து இருக்கிறேன். அதான் இப்போ பார்தததும் , சிந்தனையை தூண்டிவிட்டது.
--------------------------

நட்டு,
நன்றி,
ஆனாலும் இதெல்லாம் ஓவரா இருக்கே! அடிக்கடி வாங்க. ஆனா ஒரே அடியா அப்படி முடிவுக்கு வந்துடாதிங்க மொக்கை பதிவுகளும் வரும் ஜாக்கிரதை!

ஜமாலன் said...

என்ன சார்...
நான் ஆள் கறுப்புதான் அதக்காக என்ன போயி கா.கா. என்கிறீர்களே. விசல் அடிச்சான் குஞ்சுகள பத்தி உங்கள் தலைகீழ் விகிதத்தை பர்க்கலாம் என்று வந்தேன். வாத்தயாரு கையில எதாவாது வச்சுக்காதிங்க ஆமா சொல்லிப்புட்டேன்?

வவ்வால் said...

ஜமாலன்,
நான் சொன்னது கலாச்சாரக்காவலனா என்று, ஒரு வார்த்தையை சுருக்கப்போய் ஒரு பின்னூட்டம் போட்டு விளக்க வேண்டி இருக்கே :-(

உங்களை கருப்புனு சொன்னா தமிழ் நாட்டுல நாளு பஸ், லாரி எல்லாம் கொளுத்துவாங்களே, கடையை உடைப்பாங்களே, அப்புறம் என்னோட உருவ பொம்மையை வேற எரிப்பாங்களே! :-))

வடுவூர் குமார் said...

f= frequency
c= speed of the sound
s= surface area of the top hole
v= volume of the air
L= length of the whistle neck

இதெல்லாம் சரி.. அந்த c க்கும் s க்கும் நடுவில் ஏதோ ஒன்று இருக்கே,அது என்ன? அது தான் விசிலில் இருந்து சவுண்டு எப்படி வருது என்று சிம்பாளீக்கா சொல்லியிருக்கா?
:-))

கதிர் said...

எங்களுக்கு கருவி தேவையில்லை
விரல்களே கருவிதான்.

நாங்க அடிச்சா காது கிழியும். :))
எனக்கு கத்து குடுத்தது என்னோட சொந்த தம்பி. அத கத்துக்கறதுக்கு எம்புட்டு திட்டு வாங்கினேன்னு எனக்குதான் தெரியும்.

உண்மைத்தமிழன் said...

வவ்வால்ஜி

நானும் சின்னப் புள்ளைல ரொம்ப டிரை செஞ்ச விஷயம் இது. ஆனா சுத்தமா எனக்கு வரவேயில்லை.. காத்துதான் வந்துச்சு.. ஆனாலும் சினிமா தியேட்டர்ல விசிலடிச்சான் குஞ்சுகளின் சவுண்ட்டை கேட்கும்போதெல்லாம் ஆச்சரியம்தான் வரும்.. எப்படிய்யா வருது என்று..?

அறிவியலை விளக்கிவிட்டீர்கள். தெரிந்து கொண்டேன்.. அப்படியே செய்முறைப் பயிற்சியையும் சொல்லி விட்டீர்களானால் முதல் விசில் உங்களுக்குத்தான்...

வவ்வால் said...

குமார்,
நன்றி!

அந்த ஏதோ ஒன்று தான் ஒலியின் சூத்திரம் ஆக இருக்கும் :-))
------------------------

தம்பி
நன்றி!

தம்பிக்கே ஒரு தம்பி தான் சொல்லி தந்ததா? அப்போ தம்பியுடையான் விசில் அடிக்க அஞ்சான்! என்று சொல்லலாமே!
-----------------------
உண்மைத் தமிழர்,

ஹி ...ஹி... எனக்கும் விரல் வைத்து விசில் அடிக்கவராது, சன்னமா பூனைக்கத்துறாப்போல ஒரு சத்தம் வரும்! நீங்க சின்ன புள்ளைல தான் ட்ரைப்பண்ணிங்க நான் இப்போ கூட ட்ரைப்பண்றேன். சமயத்தில சத்தம் வருது, வராம போகுது.

எனவே எனக்கு சரியா விசில் அடிக்க வந்ததும் , செயல் முறை பயிற்சியை சொல்லிடுறேன்!

seethag said...

நான் எப்பவும் யோசிப்பேன் ,ஏனடா இந்த வீணைக்கு ஒரு குடம் இருக்கே என்று.ரொம்ப நன்றி விளக்கத்திர்க்கு .
என் அப்பா இரண்டு விரல் வைத்து இன்னும் விசில் அடிப்பார்.(72 வயசு தான் ஆகிரது!)
நானும் முயற்ச்சி பண்ணிப்பார்த்து விட்டுவிட்டேன்...தற்காலிகமாக.

Anonymous said...

//விசில் என்றில்லை காற்றினை செலுத்தி ஒலி எழுப்பும் வாத்தியக்கருவிகள்/கருவிகள் அனைத்துமே இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் செயல்படுகிறது//

அப்ப புல்லாங்குழலில் இருந்து எப்படி ஒலி வருகிறது?

கோவி.கண்ணன் said...

சிறிய துளையில் இருந்து அழுத்தமான காற்று வெளியேறும் போது சத்தமான ஒலி (சத்தம் என்றாலும் ஒலி என்றாலும் ஒன்றே) வருகிறது என்று ஏழாம் வகுப்பு ஆசிரியர் சொல்லிக் கொடுத்தப் போது வகுப்பில் அடக்க முடியாத சிரிப்பு. அவர் நடத்திய பாடம் வட்டுச்சங்கு அதாவது 12 மணிக்கு தொழிற்சாலைகளில் உணவு நேரத்தை அறிவிக்கும் ஒலிக்கருவி.

வவ்வால் said...

சீதா,
நன்றி!
//என் அப்பா இரண்டு விரல் வைத்து இன்னும் விசில் அடிப்பார்.(72 வயசு தான் ஆகிரது!)
நானும் முயற்ச்சி பண்ணிப்பார்த்து விட்டுவிட்டேன்...தற்காலிகமாக.//

ஆஹா உங்க அப்பா தான் சூப்பர் அப்பா, ரொம்ப சின்ன வயதிலேயே(72)நல்லா விசில் அடிக்கிறாங்க!

நீங்களும் முயற்சியை கை விடாதிங்க, முயற்சி தன் மெய் வருந்த விசில் அடிக்க கற்று தருமாம்! :-))

வவ்வால் said...

மணிபிரகாஷ்,

புல்லாங்குழலும் காற்றி அதிர்வை இசையாக தரும் கருவி தான். ஒரு ஓட்டைக்கு பதிலாக 7 இருக்கும்.

அதிர்வடையும் காற்று தம்பத்தின் நீளத்தை கூட்ட குறைக்க தான் அந்த ஓட்டைகள்( அதுவே ஒலியின் அலை நீளம்) அதன் மூலம் வேறு வேறு ராகம் பெறலாம்.

புல்லாங்குழலில் உள்ள ஓட்டைகள் ஒவ்வொன்றும் அலை நீளத்தின் ஒரு விகிதமாக இருக்கும்.

நாதச்வரம், சாக்ஸபோன் போன்றவை கொஞ்சம் வேறு தத்துவம் , அதில் எல்லாம் சீவாளி எனப்படும் ஒரு நாணலினால் ஆன அமைப்பு இருக்கும். அதை சொறுகி ஊத வேண்டும்.ஓரிபைஸ் போல அது செயல்படும், குறுகிய துளையின் வழி வரும் காற்று வேகமாக வரும் என்பதை வைத்து செயல்படுவது.

வவ்வால் said...

கோவி,

இறுவட்டு சங்கு விசில் தத்துவம் அல்ல, ஆனாலும் காற்றின் அதிர்வு தான் காரணம்.ரெசனோட்டர் சேம்பர் இல்லாமல் செயல் படுவது. அதனால் தான் இனிமையாக ஒலிக்காமல் கொய்ங்க் என்று சத்தம் வரும் அதில்!

உங்கள் ஆசிரியர் பலத்த சத்தம் வரும் என்பதை இரண்டு தடவை சொல்லி புரிய வைத்து இருப்பார் போல :-))

Anonymous said...

vilakkaththirku nanri vavvaal avarkaLee.

innum aazamai padikka vendiya vidayangal evvalvo ullathu..

vsil adichomo ponoma appadinu illama athu eppadinu oru ariviyal pathivu..
nice one

Are u Physics student?

வவ்வால் said...

மணிபிரகாஷ்,
நன்றி!,
இயற்பியலும் ஒரு பாடமாக படித்தேன் அவ்வளவு தான்! பொதுவாக அறிவியலில் ஆர்வம் என்று வைத்துக்கொள்ளலாம்!

கற்றது கையளவு தானே, நாம் எல்லாருமே அதிகம் படிக்கணும் அதான் எனது ஆசையும்!

அறிந்துக்கொள்வோம்.... மேலும் அறிந்துகொள்வோம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வவ்வால்!
வீணையின் குடத்தில் இருக்கும் அந்தச் சிறிய துவாரத்தால் சென்று திரும்பியா இந்த நாதம் வருகிறது.
ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.

வவ்வால் said...

யோகன் ,

ஆமாம் அந்த குடத்தில் உள்ள காற்று அதிர்வதால் தான் அந்த நாதம் வருகிறது, வெறும் கம்பிகளை அதிர வைத்தால் நாதம் வருமா, கம்பியின் மீது காது வைத்து தான் கேட்கணும்! :-))

வெட்டிப்பயல் said...

தல,
கலக்கறீங்க... பதிவு அருமை. இந்த மாதிரி நிறைய எழுதுங்க. படிச்சதெல்லாம் ஞாபகம் வருதானு பாக்கறோம்...

வவ்வால் said...

நன்றி வெட்டிப்பயல்,
ஆமாம் இதுக்கு முன்ன வந்த பதிவெதுவும் படிக்கவே இல்லையா? இந்த மாதிரி தான் அடிக்கடி போடுரோம்ல , படிங்க, நானும் போடுறேன்.

நல்லா இருக்கே உங்களுக்கு நியாபகம் வர வைக்க அளவுக்குலாம் பதிவு போட முடியாது , என் நியாபக சக்தியை பொறுத்து தான்!

நானானி said...

வீணையின் இன்ப நாதம் வரும் விதம் சொன்ன விதம் அருமை வவ்வால்!

SurveySan said...

interesting.

ரொம்ப நாள் சந்தேகம் - football, சைக்கிள் இதிலெல்லாம் காத்து அடிச்சா உள்ள போகுது, ஆனா அடிச்ச காத்து வெளீல வரமாட்ரதே, அத பத்தி கொஞ்சம் விலாவாரியா சொன்னீங்கன்னா, புரிஞ்சுப்போம். ஏதோ வால்வாமே?