Thursday, February 07, 2008

ஜோதா அக்பர்

செல்லுலாய்ட் ஜோதா பாய்
ஜோதா அக்பர் என்ற ஒரு இந்தி திரைப்படம் இந்த மாதம் வெளிவர இருக்கிறது வரும் போதே சில சர்ச்சைகளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு!இதை இயக்கி இருப்பவர் லகான் புகழ் அஷுதோஷ் கோவ்ரிகர், கதை முன்னால் தொலைக்காட்சி நடிகர் ஹைதர் அலி. இசை , நம்மவூரு ஏ.ஆர்.ரெஹ்மான். இதில் ஜோதா பாய் என்ற ராஜபுதன இளவரசியாக, அக்பரின் மனைவியாக அய்ஷ்வர்யா ராய் பச்சன்* (ராய் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே) அக்பராக ரித்திக் ரோஷன் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்ப்பார்ப்புகளை தூண்டும் படமாக பேசப்படுகிறது.

இந்த சர்ச்சைகள் உண்மையில் கேள்விக்கேட்கும் நோக்கில் எழுப்பப்படுகிறதா இல்லை படத்தை விளம்பரப்படுத்த அடிக்கப்படும் கூத்தா என்றும் எனக்கு சந்தேகம்(வழக்கம் போல)

அப்படி என்ன சர்ச்சை என்றுப்பார்ப்போம்,

ஒரு சாரார் ஜோதா பாய் என்ற பெண்ணே சரித்திரத்தில் இல்லை , அபுல் பசல், பதாயுனி, நிசாமுதின் பக்ஷி ஆகியோரின் அக்பர் வரலாற்றில் இப்படிப்பட்ட பெயரே குறிப்பிட வில்லை என்கிறார்கள்.

இன்னொரு சாரார் ஜோதா பாய் இருந்தார் ஆனால் அவர் அக்பரின் மனைவி அல்ல , அக்பருக்கு மொத்தம் 34 மனைவிகள் என்று வரலாற்றில் தெளிவாக பெயர்களோடு இருக்கு, அதில் ஒருவர் பெயர் கூட ஜோதா பாய் இல்லை. ஆனால் ஜெஹான்கீரின் (சலிம்) மனைவி பெயர் ஜோதா பாய் , எனவே தவறாக அக்பரின் மனைவி என்று சொல்கிறார்கள் படத்தையே தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மூன்றாவதாக , தற்போதைய ராஜ்புதான ஜோத்பூர் அரச குடும்பம் , ஜோதா பாய் உண்மையான ஒருவரே, அவருக்கும் அக்பருக்கும் திருமணம் நடந்தது என்கிறார்கள்.

ஜோதா பாய் என்ற பெயர் வரக்காரணமே அவர் ஜோத்பூர் இளவரசி என்பதால் தான்.

எது எப்படியோ இலவசமாக படத்திற்கு விளம்பரம் கிடைத்து விட்டது.சரி நாமும் நம்ம பங்குக்கு வரலாற்றை தோண்டிப்பார்ப்போம் என்று பார்த்ததில்,

ஹிமாயுன் , ஷேர்ஷா சூரியிடம் போரில் தோல்வி அடைந்து தலைமறைவாக சுற்றியக்காலத்தில் ஹமீதா பானு என்ற பெண் மீது காதல் கொண்டு மணந்து கொண்டார், நாடோடி வாழ்க்கையின் போது இவர்களுக்கு பிறந்தவர் தான் அக்பர், இவர் இயற்பெயர் ஜலாலுதீன். அக்பர் என்றாலும் கிரேட் என்ற பொருள் தான், ஆனால் அவரை அக்பர் தி கிரேட் என்று சொல்வார்கள்(டபுள் கிரேட் போல).

அக்பரின் முதல் திருமணம் கொஞ்சம் விசித்திரமானது, அக்பர் ஆட்சியைப்பிட்க்க உதவியாக இருந்த பைராம் கான் என்ற அக்பரின் மாமா, இறந்ததும் அவரது மனைவியையே மணந்துக்கொண்டார், ஹிமாயுன் ஆட்சிப்பொறுப்பில் இல்லாதக்காலக்கட்டத்தில் பிறந்த அக்பரை வளர்த்ததே பைராம் கான் , அவர் மனைவி தான், எனவே அவர் வளர்ப்பு தாய் போன்றவராக கருதப்படவேண்டும், அக்பரை விட பல வயது மூத்தவர், அக்பருக்கு அப்போ 16 வயது தான் இருக்கும்.

அதன் பின்னர் பல திருமணங்கள் செய்துக்கொண்டார் அக்பர், , பலவும் போரில் வென்ற ராஜ்யங்களை தன் வசம் நிரந்தரமாக வைத்திருக்க செய்யப்பட்டதே.

ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசியை மணந்து அவருக்கு மரியம் ஸமானி என்று பெயர் வைத்துக்கொண்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் ஜெஹான்கீர் என்ற சலிம்.

அக்பர் 34 திருமணங்கள் செய்துக்கொண்டதால் , கொஞ்சம் தளர்ந்து போய்விட்டார் போலும் அதன் பின்னர் போரை தவிர்க்க திருமணம் செய்ய நேரிட்டப்போது 12 வயதான சலிமுக்கு செய்து வைத்துவிட்டார், அப்படியான ஒன்று ஜோத்பூர் ராஜபுதான அரசர் ஆன உதய் சிங்கின் மகள் ஜோதா பாய்யுடன் ஆன திருமணம். அது மட்டுமல்லாமல் ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள் மான் பாயுடனும் சலிமுக்கு திருமணம் நடந்தது.

இப்படித்தான் நான் படித்த புத்தகத்திலும் இருக்கு, ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? ஆனால் படக்குழுவினர் மொஹல்- இ- அசாமில் கூட அக்பரின் மனைவியாக ஜோதாபாய் கதாபாத்திரம் உள்ளது. இப்படமே மொகல் -இ- ஆசாம் அடிப்படையில் மாற்றி எடுக்கப்படுவது தான் என்று சொல்கிறது.

எது உண்மைனே தெரியவில்லை, ஒரே குப்பாச்சு குழப்பாச்சு செய்றாங்கப்பா!சரி படம் வந்தா அய்ஷ்வர்யா ராய் பச்சன் *எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))

பின்குறிப்பு: கல்வெட்டு சொல்லிய திருத்தத்திற்கு ஏற்ப * அய்ஷ்வர்யா "ராய் "பச்சன் என மாற்றப்பட்டுள்ளது!

36 comments:

கானா பிரபா said...

தல

படம் வருமுன்னே வரலாற்று முன்னூட்டம் போட்டுட்டீங்க. கலக்கல்.

Anonymous said...

//சரி படம் வந்தா அய்ஷ்வர்யா பச்சன் எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))//
இதுதான நமக்கு முக்கியம்.
:))))

வவ்வால் said...

வாங்க தல,
நன்றி!

படம் வந்த பிறகு போட்டா அது விமர்சனம் ஆச்சே :-))

நீங்க உங்க பாணில பின்புல தகவல்களோட ஒரு விமர்சனம் போட்டுக்கலக்குங்க!

ஆஷுதோஷ் கோவ்ரிகர், சமரசம் செய்யாமல் சிறப்பாக படம் எடுக்கக்கூடியவர், இப்போ இதை வைத்து பல ஆங்கில தளங்களும் கதை அடிக்கிறாங்க, நம்ம பங்குக்கு தமிழில் !
----------------
அனானி,
நன்றி!

//இதுதான நமக்கு முக்கியம்.
:))))//

இல்லையா பின்ன :-))
கலைக்கண் கொண்டு பார்க்கணுமப்பு!

Anonymous said...

முஸ்லீம்களை இழிவு படுத்துவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. இதை சாமர்த்தியமாக வேறு செய்கிறீர்கள்.எதற்கு இந்த ஈனப்பிழைப்பு?

Mohandoss said...

வவ்வால்,

//சரி படம் வந்தா அய்ஷ்வர்யா பச்சன் எப்படி இருக்குனு பார்க்கிறதுக்காகவாது பார்க்கணும் :-))//

ச்சீச்சி அந்தப் பழம் புளிக்கும். :)

சைட் அடிக்கிறதிலும் ஒரு நேர்மை இருக்கணும் ;).

RATHNESH said...

// ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை //

ஐயையோ! எதுக்குங்க பழைய விஷயங்களைப் போட்டு ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டு? ரித்திக் - ஐஸ்வர்யா ஜோடி நல்லா இருக்குதுன்னு யாராவது சொல்லி அதனால் பிரச்னை வராம இருந்தா போதாதா?

எப்படியோ, புதிய விஷயங்களை அறியத் தந்திருக்கிறீர்கள். நன்றி.

RATHNESH said...

அனானி சார்,

// முஸ்லீம்களை இழிவு படுத்துவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. இதை சாமர்த்தியமாக வேறு செய்கிறீர்கள்.எதற்கு இந்த ஈனப்பிழைப்பு? //

ஒரு சரித்திரம் சார்ந்த படம் குறித்த பின் தகவல்கள் தருகின்ற ஒருவரைக் குறித்து தவறான புரிதலுடன் கருத்து எழுதுகிறீர்கள். விஷயம், ஒரு மன்னர், அவருடைய மகன், ஒரு பெண் சம்பந்தப்பட்டது. அவ்வளவு தான். மதப் பூச்சுடன் மட்டுமே எதையும் அணுகுவது என்கிற சிந்தனையை மாற்றிக் கொள்ள முயலுங்கள்.

அன்புடன், RATHNESH

உண்மைத்தமிழன் said...

எனக்கு ஒரு சந்தேகம் வவ்வால்ஜி..

பள்ளிப் பாடப்புத்தகங்களில் இப்படி 34 மனைவிகள், 30 கல்யாணம், 356 ஆசைநாயகிகள் என்றெல்லாம் பெருமை படைத்திருக்கும் நம் அரசர்களைப் பற்றிச் சொல்லித் தருகிறார்களே.. இதுவெல்லாம் தப்பில்லையா..?

அந்தக் கால அரசர்களின் போர், ஆட்சி பற்றி மட்டுமே பாடப்புத்தகத்தில் உள்ளதே.. இந்த அந்தப்புரத்துக் கதையையெல்லாம் யார் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவது..?

ஏன் சொல்லித் தரக்கூடாது..? நம்மாளுகளோட பெருமையை அவுங்க தெரிஞ்சுக்க வேண்டாமா..?

இவுங்களைப் போய் பேரரசர், வீராதிவீரர்ன்னு வேற படிச்சுத் தொலையறோமே.. இது தப்பில்லையா..?

Explain Please..

Unknown said...

//இவுங்களைப் போய் பேரரசர், வீராதிவீரர்ன்னு வேற படிச்சுத் தொலையறோமே.. இது தப்பில்லையா..?

Explain Please..//

இது உண்மையான உண்மைத் தமிழனா?

அதாவது முருக கடவுள், இந்து...... இத்யாதிகளை ஏற்றுக் கொண்ட அதே உண்மைத்தமிழனா?

ரெண்டு பொண்டாட்டி வைத்து இருக்கும் முருகன்
தலையில் வப்பாட்டியை வைத்து இருக்கும் அவர் அப்பா
பாக்கிற பொண்ணுகளை எல்லாம் புணரத்துடித்து, உடல் முழுதும் யோனி வரம் பெற்ற இந்திரன்
....
....
இன்னும் பல கருமங்கள்...
.....
இதை எல்லாம் கடவுள் /கடவுள் கதை/அவதாரரம்ன்னு கும்பிட்டுத் தொலைக்கிறீரே இது தப்பில்லையா..?
அது போலத்தான் இதுவும் :-)))


***
வவ்வால்,
//அய்ஷ்வர்யா பச்சன் (ராய் போடக்கூடாதுனு சொல்லிட்டாங்களே) //

Aishwarya Rai Bachchan என்றே சொல்ல வேண்டும் :-))
http://timesofindia.indiatimes.com/Entertainment/Ash_on_life_after_marrige/articleshow/2689767.cms

வவ்வால் வரலாற்றுத் தவறு செய்துவிட்டார் என்று யாரும் சொல்லக்கூடாதே :-))) திருத்திடுங்க தல.

வவ்வால் said...

அனானி,
நன்றிங்க,
வரலாற்றில் இருப்பதை மாற்றி சொல்லும் அதிகாரம் என்னிடம் இல்லையே! உள்ளதை சொன்னால் நீங்க ஏன் காண்டாவுறிங்க!
----------------------------
மோஹன்,
நன்றி!
//ச்சீச்சி அந்தப் பழம் புளிக்கும். :)

சைட் அடிக்கிறதிலும் ஒரு நேர்மை இருக்கணும் ;).//

ஏதோ நரிக்கதைலாம் எனக்கு நினைவுக்கு வருது :-))

நான் இப்போ என்ன சொல்லிட்டேன், அந்த ஜோதா பாய் கேரக்டர்ல எப்படி பொருந்துராங்கனு , ஒரு வரலாற்று ஆர்வலனாக ஆர்வத்துல சொன்னேன், நம்பனும் நீங்க! :-))

கண்ணில் வரும் காட்சி எல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை, சும்மா பார்ப்பதில் ஒன்றும் குறைந்து விடாது, அப்படினா அந்தம்மா நடிக்காம வூட்ல போய் குந்திக்கனும்!
----------------------------
ரத்னேஷ்,
நன்றி!
//ரித்திக் - ஐஸ்வர்யா ஜோடி நல்லா இருக்குதுன்னு யாராவது சொல்லி அதனால் பிரச்னை வராம இருந்தா போதாதா?//

ஆஹா அப்படி வேற வந்துடுமோ :-))

இந்த செய்தி சேனல்கள், நாளிதழ்களும் இதை ஆராய்ச்சி செய்துங்க, எல்லாம் செய்தி பஞ்சம் போல, நமக்கும் அதே தானே! எதையாவது ஆராய்ச்சி செய்வோம்!

அனானிக்கு சரியான விளக்கம் கொடுத்தமைக்கு மீண்டும் நன்றி!

--------------------------------
உண்மைத்தமிழர்,
நன்றி!வாங்க ரொம்ப நாளாக்காணோமே உங்கள் அப்பன் முருகன் போல எதாவது "பழம்" தகராறு ஏற்பட்டு மலையேறிட்டிங்களோனு நினைத்தேன் :-))

//இவுங்களைப் போய் பேரரசர், வீராதிவீரர்ன்னு வேற படிச்சுத் தொலையறோமே.. இது தப்பில்லையா..?

Explain Please..//

இந்தக்காலத்தில சிலர் சொல்றாங்க என் லட்சியத்தை அடையாம கல்யாணம் செய்துக்கொள்ள மாட்டேன், கல்யாணம் செய்தா அது தடையா ஆகிடும்னு.

ஒரே ஒரு கல்யாணம் செய்தாலே சாதிக்க முடியாதுனு சொல்றப்போ, அத்தனைக்கல்யாணம் செய்த பிறகும் வீராதி வீரானாகவும் , பெரிய நாட்டையும் ஆண்டு இருக்காங்கனா, உண்மைல சமார்த்திய சாலி தானே அதான் பெருமையாக சொல்லிக்கிறாங்க போல :-))

அத்தனைப்பொண்ணுங்களையும் கட்டிக்காபந்து செய்றதே ஒரு வீரவிளையாட்டு தாம்யா :-))

-------------------------
கல்வெட்டு ,
நன்றி!
ஆஹா நீங்க தலைவருக்கெல்லாம் தலையாச்சே!

//இதை எல்லாம் கடவுள் /கடவுள் கதை/அவதாரரம்ன்னு கும்பிட்டுத் தொலைக்கிறீரே இது தப்பில்லையா..?
அது போலத்தான் இதுவும் :-)))//

கல்வெட்டாக பொறிக்கப்பட வேண்டியது நீங்க சொன்னது!

//வவ்வால் வரலாற்றுத் தவறு செய்துவிட்டார் என்று யாரும் சொல்லக்கூடாதே :-))) திருத்திடுங்க தல.//

நல்லவேளை நான் தவறு செய்வதிலிருந்து தடுத்தாட்க்கொண்டீர்கள், நான் பார்த்தப்போ என்னை ராய் சொல்லக்கூடாது இனிமேல் பச்சன் சொல்லனும் சொல்வதாக இருந்தது, முழுசாக ராய் பச்சன் சொல்லனும் போல. நன்றி! மாற்றிவிடுவோம்!

ILA (a) இளா said...

பாட்டெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனாலும் சொல்லிக்கிறாப்ல இல்லீங்களே.. ஒன்னு ரெண்டு தேறும். படம் வந்தாதான் தெரியும்..

Anonymous said...

// முஸ்லீம்களை இழிவு படுத்துவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. இதை சாமர்த்தியமாக வேறு செய்கிறீர்கள்.எதற்கு இந்த ஈனப்பிழைப்பு? //

இது அபாண்டமான குற்றச்சாட்டு! வவ்வாலும் மற்ற திராவிட கும்மிகளும் இந்து மதத்தை மட்டுமே இழிவுபடுத்தும் வீராதி வீரர்கள் அல்லவா? :-)

கப்பி | Kappi said...

டிரெயிலர் பாக்கும்போதே எனக்கு ரெண்டு மூனு தடவை கொட்டாவி வந்துருச்சு...படம் எப்படியிருக்குமோ..ஆனாலும் தலைவிக்காக பார்க்கனும்..//அந்த ஜோதா பாய் கேரக்டர்ல எப்படி பொருந்துராங்கனு , ஒரு வரலாற்று ஆர்வலனாக ஆர்வத்துல சொன்னேன், நம்பனும் நீங்க! :-))// இதுக்குக்காகத் தான் :)))

வவ்வால் said...

வாங்க இளா,
நன்றி,
ரெஹ்மான் பாட்டு தமிழிலேயே லேட்டாகத்தான் சூடு பிடிக்கும், இந்திலவும் அப்படி தானே இருக்கும். போகப்போக தெரியும்.
------------------------------
அனானி,
//இது அபாண்டமான குற்றச்சாட்டு! வவ்வாலும் மற்ற திராவிட கும்மிகளும் இந்து மதத்தை மட்டுமே இழிவுபடுத்தும் வீராதி வீரர்கள் அல்லவா? :-)//

எல்லாம் ஒரு குருப்பாத்தான் அலையறிங்களா, இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா நான் 2x2= 4 என்று வாய்ப்பாட்ட மட்டும் தான் எழுத முடியும் :-))
--------------------------
வாங்க கப்பி,
நன்றி!
//இதுக்குக்காகத் தான் :)))//

எனக்கு உங்க மேல அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கு :-))எல்லாம் ஒரே இரத்தம் தான் !

Anonymous said...

//முஸ்லீம்களை இழிவு படுத்துவதே உங்களுக்கு வழக்கமாகி விட்டது. இதை சாமர்த்தியமாக வேறு செய்கிறீர்கள்.எதற்கு இந்த ஈனப்பிழைப்பு?//

இந்த பின்னூட்டத்த பாத்தா தென்காசியில குண்டு வெச்ச கதைதான் ஞாபகத்துக்கு வருது.

தென்றல் said...

வவ்வால்,

முகலாய வரலாறு பல ஆச்சரியங்களையும் பல கேள்விகளும் கொண்டது (பொதுவா வரலாறே இப்படிதானோ?).

(ஐஷ்வர்யா பச்சன் புண்ணியத்தில்) வரலாற்றை 'கொஞ்சம்' நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

//ஆனால் சலிமின் மனைவியை எப்படி இப்போ அக்பருக்கு மனைவியாக மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. இல்லை ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்று எடுத்துக்கொள்வதா? //

ஒரே பெயரில் இரண்டு பெண்கள் இருந்தார்கள் என்றுதான் படித்ததாக நினைவு. இன்னும் அந்த சந்தேகமும், விவாதமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது..

1) அக்பரின் மனைவி ஜோதா பாய். இவர் ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசி. ராஜா பர்மல் (Raja Bharmal of Amber)ன் மகள்.

2)(சலிம்) ஜெஹான்கீர் மனைவி ஜோத் பாய் அல்லது ஜோத் பிபி (Jodhi Bibi ). இவர் (நீங்கள் குறிப்பிட்ட..) ஜோத்பூர் ராஜபுதான அரசர் உதய் சிங்கின் மகள் .

ஜோதா பாய் அக்பருக்கு மூன்றாவது மனைவி. முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி சல்மா சுல்தான் - விதவை - பைராம்கானின் (Bairam Khan*) மனைவி. மூன்றாவதுதான் நம்ம ஐஷ்வர்யா பச்சன்..சே..ஜோதா பாய். இதுவரை....அக்பரின் மனைவிகளுக்கு பிறந்தவுடன் குழந்தைகள் இறந்துவிட "தவமாய் தவமிருந்து" பிறந்தவர்தான் (சலிம்) ஜெஹான்கீர் .

அக்பருக்கும் ஜோதா பாய்க்கும் 22 வயது (தான்!) வித்தியாசம். திருமணத்துக்குப் பின்னும் இந்து முறைப்படி வாழ ஜோதா பாய்க்கு 'அனுமதி' கிடைத்ததாம்.

இப்பொழுது .....
(சலிம்) ஜெஹான்கீர்க்கு பல மனைவிகள் இருந்தாலும் ஒரு நாலு பேர் முக்கியமானவர்கள்.

1.ராஜா பஹவான் தாஸ் என்ற ராஜபுதான அரசரின் மகள், மான் பாய் [அக்பரின் மனைவி, ஜோதா பாயின் அண்ணன் மகள்]
2. நூர்ஜகான் - அறிவும், அழகும் நிறைந்தவள். ஜெஹான்கீரோட one of the favourites!
3. ஜோத்பூர் ராஜபுதான அரசர் உதய் சிங்கின் மகள், இளவரசி மன்மதி என்ற பேகம் ஜோத் பாய் அல்லது ஜோத் பிபி (Jodhi Bibi ). - இவர்களுக்கு பிறந்தவர்தான் ஷாஜகான்.
4. அனார்கலி ** (வரலாற்றில் புகழ்பெற்ற காதல் ஜோடி, சலிம்-அனார்கலி).

இந்த கதையைவைத்துதான் "மொஹல்- இ- அசாம்" என்ற திரைப்படம். அனார்கலி கதாபாத்திரமே முகலாய வரலாற்றில் இல்லை என்ற கருத்தும் உண்டு!!!

1960களில் மிகப் பெரிய பொருட்செலவிலும் 'Box office'ல் ..... ஏன்.. 1975ல் ஷோலே (Sholay) வரும்வரை......பல சாதனைகளை நிகழ்த்திய காட்டிய கறுப்பு-வெள்ளை படம், மொஹல்- இ- அசாம்.

கதை -(சலிம்) ஜெஹான்கீர் (திலீப் குமார்)க்கும் அனார்கலி(அந்த காலத்து மதுபாலா) க்கும் உள்ள காதல்தான்.

** அனார்கலி முகலாய அரசில் இருக்கும் பல அடிமை பெண்ணில் ஒருவள். நடனமாடுவது அவருடைய தொழில்.(சலிம்) ஜெஹான்கீர்க்கு பார்த்தவுடன் அவளை பிடித்து விடுகிறது(!!).

அப்பா அக்பருக்கு பிடிக்கவில்லை. அனார்கலியை சிறையில் வைத்துவிடுகிறார்.

சலிமோ அனார்கலியை நினைத்து நினைத்து ஏங்குகிறார். (பட்டத்துக்கு வந்தபிறகுதான் ஜெஹான்கீர் ஆகிறார். அதுவரை சலிம்தான்). அனார்கலியும் சலிமை மற(று)க்க முடியவில்லை.

அக்பர் பார்த்தார்.... உயிருடன் 'புதைக்க' சொல்லி ஆணையிடுகிறார்.. அதுவும் மக்கள் கூடும் சந்தை போன்ற பொதுஇடத்தில், நாலு சுவர் எழுப்பி அதில் அனார்கலியை விட்டு விடுகின்றனர். அதிலேயே அனார்கலி இறந்து விடுகிறார்.

லாகூரில் அந்த இடத்தை 'அனார்கலி பஜார்' என்று அழைக்கிறார்களாம்.

அனார்கலி என்ற கதாபாத்திரமே உண்மையல்ல என்று ஒருபக்கமும்...
மறுபக்கம்.... அனார்கலி இறக்கவில்லை அங்கிருந்து தப்பிவிடுகிறார் என்றும் சொல்கிறார்கள்.

எது உண்மையோ.... வரலாற்றில் சலிம்-அனார்கலி காத(ல்)லர்களை மறக்க முடியாது.

அந்த படத்தில் இடம் பெற்ற திலிப் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் தவிர இப்பொழுது யாரும் உயிடன் இல்லை.

இந்தப்படம் 2004ல் கலர்கூட வந்தது. படத்தில் சபையில் மதுபாலா ஆடும் பாடல், Pyar Kiya to Darna Kya (I have loved, so what is there to fear?) மிக பிரபலம். ஒலியும், ஒளியும் நம்ம பதிவில..... ;)

* பைராம் கான் - முகலாய வரலாற்றில் ஒரு முக்கியமான நபர்; குமாயுன் (Humayun)க்கும் அவருடைய மகன் அக்பரின் சபையில் இருந்தவர்.முதல் அமைச்சர். இரண்டாம் பானிபட் போரின் (1556) வெற்றிக்கு காரணமானவர் . (அந்த போர் நடந்தபொழுது அக்பருக்கு 13 வயது!). இவரைப்பற்றியே ஒரு தனி பதிவு போடலாமே!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த வரலாற்றைப் பற்றிக் கவலையில்லை.
நம்ம ஐசுக்காக பார்க்கும் உத்தேசம் உண்டு.
இணையத்தில் கிடைக்குமா??
சொல்லுங்க.

தென்றல் said...

யோகன் பாரிஸ்,

ஆஹா... படமே அடுத்த வாரம்தான் திரையரங்குக்கே வரப்போகுது... ;(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தென்றல்!
அப்பிடியா?? அப்போ அதுக்கடுத்தவாரம், இணையத்தில்
எதிர்பார்க்கலாம்.

வவ்வால் said...

லெமுரியன்,
நன்றி!
-------------------------
தென்றல்,
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி!

//1) அக்பரின் மனைவி ஜோதா பாய். இவர் ஆம்பரை சேர்ந்த ராஜபுத் இளவரசி. ராஜா பர்மல் (ஸிணீழீணீ ஙிலீணீக்ஷீனீணீறீ ஷீயீ கினீதீமீக்ஷீ)ன் மகள்.//

நீங்க ஆஷுதோஷ் கோவ்ரிகர் கதையை சொல்றிங்க, அதைத்தான் மக்கள் ஏற்கவில்லையே, மேலும் ராஜா பார்மல் , பிகாரிமால் என்றாலும் ஒன்று தான் அவரது மகள் பேர் எப்படி ஜோதா பாய் என்று வரும், அவர் ஆம்பர் அரசர் அல்லவா.

ராஜா பார்மல் மகள் பெயர் ஹிரா குன்வாரி, அவரை அக்பர் மணந்த பின் மரியம் ஸமானி என்று பெயர் மாற்றிவிட்டார், அவர்களுக்கு பிறந்தவர் தான் சலிம். இது தான் உண்மையான வரலாறு என்று இப்போது ராஜ்புத் சொல்வது, இப்படித்தான் பல புத்தகங்களிலும் இருக்கு முக்கியம ncert books ல மாணவர்கள் படிப்பது இதைத்தான்.

மேலும் பைராம்கானின் விதவை மனைவித்தான் அக்பருக்கு முதல் மனைவி என்று நினைக்கிறேன், ஏன் எனில் பைராம் கான் இறந்த பின்(கொல்வதற்கு ஏற்பாடு செய்ததே அக்பர் என்றும் சொல்வார்கள்) அப்போது தான் அக்பரே அரசப்பதவிக்கு வருவார், அதற்கு முன்னர் அவர் சும்மா கைப்பாவையாக இருந்தார். எனவே பதவி ஏற்றதும் நடந்த முதல் மணம் பைராம் கான் மனைவியுடன் என்று தான் நினைக்கிறேன்.அப்துல் ரஹீம் என்ற பைராம் கான் மகனை தளபதியாகவும் வைத்துக்கொண்டார்.

சலிம் கதையும் கொஞ்சம் குழப்பும் தான், அனார்கலி என்பவரே இல்லை என்று தான் சொல்வார்கள்.

அனார்கலிக்கதைக்கு ஈடான மர்மம் கொண்ட காதல் தான் நூர்ஜஹான் , சலிம் காதல்.எனக்கு என்னமோ நூர்ஜெஹான் பெயரை கொஞ்சம் மாற்றித்தான் அனாகலி கதை உருவாகி இருக்க வேண்டும்.

சுருக்கமாக சொல்கிறேன்,

நூர்ஜஹான் மெஹ்ருன்னிசா என்ற பெயரில் முதலில் அக்பரின் அரண்மனையில் பணிப்பெண்ணாக இருந்தார், அவள் மீது சலிம் காதல் கொண்டார், அது அக்பருக்கு பிடிக்காமல் நூர்ஜெஹானை ஷேர்கான் என்ற ஆப்கானை பொறுப்பில் இருந்த ஒரு தளபதிக்கு மணம் செய்து வைத்து அரண்மனையை விட்டு வெளியேற்றி,தந்திரமாக சலிமின் காதலை பிரித்துவிடுவார்.

பின்னர், சலிம் , "நூருதின் ஜெஹான்கீர்" என்றப்பெயரில் அரசன் ஆனதும் நூர்ஜஹானை அவரது கணவருடன் அரண்மனைக்கு வர வைத்து ஒரு பதவிக்கொடுத்து பக்கத்தில் வைத்துக்கொள்கிறார். பின்னர் ஒரு சதி செய்து ஷேர்கானை ஒரு சண்டையில் கொல்ல வைத்து , நூர்ஜெஹானை கல்யாணம் செய்துக்கொள்வதாக வரலாறு போகிறது.

கல்யாணம் செய்த பிறகே நூர்ஜஹான் - உலகின் ஒளி என்ற பொருள் படும் படி தன் பெயருக்கு ஏற்ப ஜெஹான்கீர் பெயர் மாற்றினார். அதன் பின்னர் ஜெஹான்கீர் நூர்ஜஹானின் கைப்பாவையாக இருந்து தான் ஆட்சி செய்தார்.
--------------------------------
யோகன் ,
நன்றி,
இன்னும் படம் வரவில்லை வந்ததும் பாருங்க, உங்கள் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுள்ளேன் பார்த்தீர்களா?

உண்மைத்தமிழன் said...

//இது உண்மையான உண்மைத் தமிழனா? அதாவது முருக கடவுள், இந்து...... இத்யாதிகளை ஏற்றுக் கொண்ட அதே உண்மைத்தமிழனா? ரெண்டு பொண்டாட்டி வைத்து இருக்கும் முருகன,் தலையில் வப்பாட்டியை வைத்து இருக்கும் அவர் அப்பா, பாக்கிற பொண்ணுகளை எல்லாம் புணரத ்துடித்து, உடல் முழுதும் யோனி வரம் பெற்ற இந்திரன். இன்னும் பல கருமங்கள்... இதை எல்லாம் கடவுள்/கடவுள் கதை/அவதாரம்ன்னு கும்பிட்டுத் தொலைக்கிறீரே.. இது தப்பில்லையா..? அது போலத்தான் இதுவும் :-)))//

(ஹா.. மாட்டினான்யா உண்மைத்தமிழன்.. இது தேவையாடா உனக்கு..? செவனேன்னு.. படிச்சோமோ.. போனோமான்னு இல்லாம..)

கல்வெட்டு மாமா.. நீங்க கேக்குறது நியாயமான கேள்விதான்..

ரெண்டு பொண்டாட்டிக்காரனை கும்பிட்டுட்டு, ரெண்டுக்கு மேல வைச்சிருக்கிறவனை கொஸ்டீன் கேக்குறது தப்புதான்..

அது என்னமோ நமக்கு எல்லாமே லேட்டாதான் உறைக்குது..

ஆனா மனசு விட மாட்டேங்குது.. முருகன் என் மனசுக்குள்ள பூந்து 37 வருஷமாச்சா.. உடனே கழட்டிவிட முடியாது.. கூடியபட்சம் என் கட்டை வேகும்போதுதான் அவனும் வெளில போவான்னு நினைக்கிறேன்..

நிஜமாகவே உங்களது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

என் அப்பனையும் கைவிட முடியாது.. அதே போல் அதற்காக அவன் செய்த இரண்டையும், அவன் அப்பன் செய்த செயல்களையும், இந்திரன் செய்ததையும் ஏற்க முடியாது..

அதே நேரத்தில் நிகழ் காலத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன் மனைவி இருக்க வேறொரு திருமணம செய்வதையும் ஏற்க முடியவில்லை..

என்னதான் செய்வது..? மனம் படும்பாடு இருக்கே.. பாடாவதியா இருக்கு..

ஆமா.. அதென்ன வவ்வாலு உங்களுக்கு மட்டும் ரொம்பத் தன்மையா பதில் சொல்லியிருக்காரு..

நீங்களும் ஏதோ 30 வருஷ பொலிட்பீரோ பிரெண்டு மாதிரி பேசியிருக்கீங்க..

ஏதாவது உள்ளடி கனெக்ஷன் இருக்கோ..? எதுவா இருந்தா என்ன..?

நல்லாயிருங்க..

வாழ்க வளமுடன்..

பிறைநதிபுரத்தான் said...

பல ராஜபுத்திர பெண்களை மணந்துக்கொண்ட அக்பர் -ஐ ‘மகா அகபர்' என்று அழைப்பதற்கு பல காரணங்கள்' இருக்கிறது. அதில் ஒன்று - அகபர் நடைமுறையில் இஸ்லாமியனாக வாழ்ந்ததில்லை, மண்ணாசையும் - பெண்ணாசையும் கொண்ட மற்ற மன்னர்களை போன்றவந்தான் அவனும். மற்ற முகலாய மன்னர்களை போலல்லாமல், ராஜபுத்திரர்களையும் - உயர் சாதி இந்துக்களையும் கொண்ட ‘நவரத்தினங்கள்' குழுதான் அவன் அவையை அலங்கரித்தது.

அவனிடம் நிலமான்யமும் -பதவி பெற்று அனுபவித்தவர்களால் சூட்டப்பட்ட புகழ்மொழிதான் தான் ‘மஹா'.

அனைத்து மதங்களிலும் உள்ள சிற்ந்த கொள்கைகளை இணைத்து ‘தீன் இலாஹி' என்ற புதிய மதத்தை உருவாக்கினானே அதுவும் அவனை ‘the great' என்று அழைக்க காரணமாக இருந்திருக்கலாம்.

ரத்னேஷ் சொன்னது போல் அது ஒரு வரலாற்று நிகழ்வு அவ்வளவுதான். இது முஸ்லிம்களை இழிவு படுத்துவதாக ‘அனானிகள்' உண்மையிலேயே கூறினாலோ (அ) கருதினாலோ அது வடிகட்டிய முட்டாள்தனம். அதுபோலவே - முகலாய மன்னர்களை - 'முஸ்லிம்'களாக லேபிள் ஒட்டி கேலிப்பண்ணி தனது ‘இஸ்லாமிய எதிர்ப்பை' காட்டுகிறவர்களுக்கும் பொருந்தும்.

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,
//அதே நேரத்தில் நிகழ் காலத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன் மனைவி இருக்க வேறொரு திருமணம செய்வதையும் ஏற்க முடியவில்லை..

என்னதான் செய்வது..? மனம் படும்பாடு இருக்கே.. பாடாவதியா இருக்கு..//

சுக்கு கஷாயம் வச்சு குடிச்சா உங்க அஜீரணக்கோளாறுலாம் சரியாகிடும் :-))

//ஆமா.. அதென்ன வவ்வாலு உங்களுக்கு மட்டும் ரொம்பத் தன்மையா பதில் சொல்லியிருக்காரு..

நீங்களும் ஏதோ 30 வருஷ பொலிட்பீரோ பிரெண்டு மாதிரி பேசியிருக்கீங்க..//

தேவரீர் ஸ்ரீமான் உண்மைத்தமிழன் சமூகத்திற்க்கு அடியேன் வவ்வால் உரைக்கும் பதில்,

நான் இது காறும் என்றாவது உங்களுக்கு தன்மைக்கெட்டு பதில் பகன்று இருக்கிறேனா?, அங்கணம் அறியாமல் என்றாவது கூறியிருந்தால், சுட்டிக்காட்டினால் எப்படி அத்தகைய ஒழுங்கீனமான பதிலை சொல்லப்போனேன் என்பதையும் நான் அறியப்பெறுவேன்.

மற்றவர்கள் எப்படி உரையாடுகிறார்களோ, அல்லது அவர்கள் நோக்கத்தின் வழி சென்றே பதிலுரைப்பது எனது வழக்கம் எனவே நான் ஒவ்வாத சொற்களை கூறி இருப்பின் அது எனது சுய விருப்பத்தின் பேரில் சொல்லப்பட்டது அல்ல மற்றவர்களின் செயல்பாட்டின் விளைவே என்பதையும் உங்கள் சமூகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றப்படி பொலீட் பீரோ, காட்ரேஜ் இரும்பு பீரோ போன்றவை எதுவும் என் கை வசம் இல்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

இப்படிக்கு
அடியார்க்கு அடியேன்
வவ்வால்.

வவ்வால் said...

பிறைநதிப்புரத்தான்,
நன்றி!
//‘அனானிகள்' உண்மையிலேயே கூறினாலோ (அ) கருதினாலோ அது வடிகட்டிய முட்டாள்தனம். அதுபோலவே - முகலாய மன்னர்களை - 'முஸ்லிம்'களாக லேபிள் ஒட்டி கேலிப்பண்ணி தனது ‘இஸ்லாமிய எதிர்ப்பை' காட்டுகிறவர்களுக்கும் பொருந்தும்.//

தங்கள் புரிதலுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

எந்த மதம், சமயத்திற்கும் ஆதரவாளன் அல்ல , பொதுவாக அனைத்தையும் சம தூரத்தில் வைத்து , தர்க்க ரீதியாக வரலாற்று ரீதியாக மட்டுமே பார்ப்பது எனது வழக்கம்.

எதிலும் உள்நோக்கம் கற்பிப்பதோ, அல்லது ஒன்றை உயர்த்தி மற்றதை தாழ்த்தி பேசுவதோ எனது இயல்பல்ல.

கல்வெட்டு said...
This comment has been removed by the author.
கல்வெட்டு said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

//அதே நேரத்தில் நிகழ் காலத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன் மனைவி இருக்க வேறொரு திருமணம செய்வதையும் ஏற்க முடியவில்லை..//

என்ன கொடுமை உண்மைத்தமிழரே?

பக்கத்தில் வீட்டில் இருப்பவன் மனைவி இருந்தால் உங்களுக்கு என்ன ? அது ஏன் உங்களை வேறொரு திருமணம் செய்வதை தடுக்கிறது.

முருகனிடம் இருந்து விலகி இருக்கவும்.



விவகாரமான விசயங்களில் கமா,புல்ஸ்டாப் போன்ற இத்யாதிகளை கவனமாக கையாளவும் :-)))


***

//ஆமா.. அதென்ன வவ்வாலு உங்களுக்கு மட்டும் ரொம்பத் தன்மையா பதில் சொல்லியிருக்காரு..
நீங்களும் ஏதோ 30 வருஷ பொலிட்பீரோ பிரெண்டு மாதிரி பேசியிருக்கீங்க..
ஏதாவது உள்ளடி கனெக்ஷன் இருக்கோ..? எதுவா இருந்தா என்ன..?//

:-)))

Anonymous said...

வௌவால்,

ஜோதா அக்பர் ஒரு காதல் கதை என்பதிலேயே எனக்குச் சந்தேகம்.


காதல் என்றால் ரோமியோ ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி, ஹீரா-ராஞா, லைலா-மஜ்னு தான் ஞாபகம் வரும். இல்லை
சம கால கதாப்பாத்திரம் என்றால் நம்ம விஜய் நடித்த காதலுக்கு மரியாதை ஜீவா-மினி என்று வைத்துக் கொள்ளலாம். ஜீவாவுடன் ஒரு ஐம்பது மினிக்கள் ஓடிவிட்டால், ஜீவாவைத்தேடி வரும் சிவக்குமார் அங்கே எந்த மினி தன் ஜீவாவின் காதலி என்று ஏற்றுக் கொள்வார். அத்தகய காதல் காதலுக்கு மரியாதையாகவா இருக்கும் ?


ஜோதா-அக்பர் இதில் எப்படி பொருந்தும் ?


அக்பருக்குத்தான் 30-40 ஜோதா பாய்கள் இருப்பார்கள். காலை ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்று வெவ்வேறு ஜோதா பாய்களுடன் உல்லாசமாக இருக்கும் அக்பர் சுல்தான் எப்படி காதல் என்ற "குறுகிய" வட்டத்துக்குள் முடக்குகிறார் அஷுதோஷ் கவுரிக்கர் ?

உண்மைத்தமிழன் said...

//சுக்கு கஷாயம் வச்சு குடிச்சா உங்க அஜீரணக் கோளாறுலாம் சரியாகிடும் :-))//

வவ்வால்ஜி.. இது வயித்துக் கோளாறு.. மனக்கோளாறு.. அடுத்தவன் கஷ்டம் மட்டுமே என் மனதில் பூதாகரமாக நிற்கும்.. என் கஷ்டம் கடைசி நிமிடத்தில்தான் தெரிய அல்லது தெளிய வரும்.. இதுக்கு எந்த ஊர் சுக்கை வாங்கி பொடி செய்து கஷாயம் குடிப்பது..?

//தேவரீர் ஸ்ரீமான் உண்மைத்தமிழன் சமூகத்திற்க்கு அடியேன் வவ்வால் உரைக்கும் பதில்,//

இதெல்லாம் ஓவரா இல்லியா வவ்வால்ஜி.. நான் இங்கன இருக்கிறதே உங்களுக்குப் பிடிக்கல போலிருக்கு..

//நான் இது காறும் என்றாவது உங்களுக்கு தன்மைக்கெட்டு பதில் பகன்று இருக்கிறேனா?, அங்கணம் அறியாமல் என்றாவது கூறியிருந்தால், சுட்டிக்காட்டினால் எப்படி அத்தகைய ஒழுங்கீனமான பதிலை சொல்லப்போனேன் என்பதையும் நான் அறியப்பெறுவேன். மற்றவர்கள் எப்படி உரையாடுகிறார்களோ, அல்லது அவர்கள் நோக்கத்தின் வழி சென்றே பதிலுரைப்பது எனது வழக்கம் எனவே நான் ஒவ்வாத சொற்களை கூறி இருப்பின் அது எனது சுய விருப்பத்தின் பேரில் சொல்லப்பட்டது அல்ல மற்றவர்களின் செயல்பாட்டின் விளைவே என்பதையும் உங்கள் சமூகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன்.//

வவ்வால்ஜி.. எதுக்கு இவ்ளோ எமோஷனல்.. டிவி சீரியல்லாம் நிறைய பார்க்குறீங்க போல.. நான் அப்படியெல்லாம் சொல்லலை சாமி.. சாமி சத்தியமா வவ்வால்ஜி மேல ஒரு பாசம்.. விவாதம் பண்றதுக்குன்னே இருக்குற மனுஷன் சாப்பிட்டு முடிச்சு கை கழுவுன மாதிரி கல்வெட்டுக்குப் பதில் சொல்லிடடாரேன்னு ஒரு ஆதங்கம்.. அவ்ளோதான்..

//மற்றப்படி பொலீட் பீரோ, காட்ரேஜ் இரும்பு பீரோ போன்றவை எதுவும் என் கை வசம் இல்லை என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இப்படிக்கு
அடியார்க்கு அடியேன்
வவ்வால்//

வவ்வால்ஜி.. நாற்பதாண்டு கால நண்பர், ஐம்பதாண்டு கால தோழர் என்றெல்லாம் சொல்லும்போது ஒப்புமைக்கு பொலிட்பீரோ கிடைத்தது.. சொல்லிவிட்டேன். இரும்பு பீரோ உங்களிடம் இல்லை எனில் எனக்கும் சந்தோஷம்தான். ஏன்னா என் வீட்ல பீரோ வைக்கவே இடமில்லை.

இப்படிக்கு
அடியார்க்கு நல் அடியான்
உண்மைத்தமிழன்

உண்மைத்தமிழன் said...

///அதே நேரத்தில் நிகழ் காலத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன் மனைவி இருக்க வேறொரு திருமணம செய்வதையும் ஏற்க முடியவில்லை..//
என்ன கொடுமை உண்மைத்தமிழரே? பக்கத்தில் வீட்டில் இருப்பவன் மனைவி இருந்தால் உங்களுக்கு என்ன ? அது ஏன் உங்களை வேறொரு திருமணம் செய்வதை தடுக்கிறது. ///

கல்வெட்டு மாமா.. முதலுக்கே மோசம் வைச்சுப்புட்டீகளே.. ஒண்ணுக்கே வழியில்லாம இருக்கேன்.. இதுல இன்னொன்னுக்கு வழி சொல்றீங்க..

//முருகனிடம் இருந்து விலகி இருக்கவும்.//

அதெப்படி விலகுறது..? அவனா விலகிப் போனாத்தான்.. டெய்லி நான் அவனை நினைக்க மறந்தாலும் அவன் என்னை மறக்க மாட்டான். எப்படியாச்சும், ஏதாவது ஒரு ரூபத்துல வந்து முன்னாடி நின்றுவான்..

//விவகாரமான விசயங்களில் கமா,புல்ஸ்டாப் போன்ற இத்யாதிகளை கவனமாக கையாளவும் :-)))//

ஒரு கமா போட மறந்திட்டேன்.. அவ்வளவுதான்.. அதுக்கு ஒரு குத்தலா..? சரி இனிமே கவனமா கையாண்டு கொள்கிறேன்..

///ஆமா.. அதென்ன வவ்வாலு உங்களுக்கு மட்டும் ரொம்பத் தன்மையா பதில் சொல்லியிருக்காரு..
நீங்களும் ஏதோ 30 வருஷ பொலிட்பீரோ பிரெண்டு மாதிரி பேசியிருக்கீங்க..
ஏதாவது உள்ளடி கனெக்ஷன் இருக்கோ..? எதுவா இருந்தா என்ன..?//
:-)))///

இதுக்கு ஒண்ணும் சொல்லத் தோணலீல்லே.. சரி.. மூணு நாள் கழிச்சு அடுத்தடுத்து கமெண்ட்ஸ் போட்டு கண்ணு முன்னாடி வரும்போதே நினைச்சேன்.. உங்களுக்கிடைல எந்த கனெக்ஷனும் இல்ல சாமி.. ஒத்துக்குறேன்..

Anonymous said...

யோவ் உண்மைத்தமிழன்!

எதுக்குய்யா இந்த இடத்துக்கெல்லாம் வந்து வாயை கொடுத்து எதையோ புண்ணாக்கிக்கிட்டு போறே. வவ்வாலு, கல்வெட்டு வகையறாவெல்லாம் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவங்க. இங்கவெல்லாம் நம்ம பப்பு வேகாது. பேசாமா டோண்டு பதிவிலே போயி விளையாட்டை வெச்சுக்குவோம். வா!

வவ்வால் said...

சிவாஜி!

ஆத்தாடி என்னமா அதிருது ;-))
//அக்பருக்குத்தான் 30-40 ஜோதா பாய்கள் இருப்பார்கள். காலை ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்று வெவ்வேறு ஜோதா பாய்களுடன் உல்லாசமாக இருக்கும் அக்பர் சுல்தான் எப்படி காதல் என்ற "குறுகிய" வட்டத்துக்குள் முடக்குகிறார் அஷுதோஷ் கவுரிக்கர் ?//

சரியாத்தான் சொல்லி இருக்கிங்க , சினிமாவுக்கு வில்லங்கமா கதை வேண்டுமே அதான் , அக்பரின் சிருங்கார லீலையை படமாக்கிட்டாங்க :-))

ஆயிரம் பொண்டாட்டி இருந்தாலும் ஜோதா பாய் தான் சூப்பர் பொண்டாட்டினு அக்பர் கொண்டாடி இருக்கலாம், ஆனால் ஜோதா பாய்க்கு பதிலா வேறு பேரு வைத்திருந்தா இந்த பிரச்சினையே இல்லை.ஏன் இல்லாத பேரை வைத்து விளம்பரம் தேடனும்.

அதை ஒரு வரலாற்றுப்பதிவாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

குமரன் (Kumaran) said...

இடுகையைப் படிச்சாச்சு. பின்னூட்டங்களையும் படிச்சுட்டு வர்றேன். இடுகையைப் படிச்சதுலயே படத்தைப் பாக்கலாம்ன்னு தோணுது. பின்னூட்டங்களைப் படிச்சா அந்த எண்ணம் மாறுதான்னு பாக்கலாம். :-)

வவ்வால் said...

உண்மை தமிழர் அவர்களே!(இது தன்மையா இருக்கா)
//அதே நேரத்தில் நிகழ் காலத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவன் மனைவி இருக்க வேறொரு திருமணம செய்வதையும் ஏற்க முடியவில்லை..//

இதான் அடுத்தவன் பிரச்சினைக்கு மனம் கலங்குவதா ஆஹ்ஹா :-))

திறமை இருக்கவன் கட்டிமேய்க்க போறான், நீர் ஏன் சுவாமி மனக்கிலேசம் அடைகிறீர்:-))

//இதெல்லாம் ஓவரா இல்லியா வவ்வால்ஜி.. நான் இங்கன இருக்கிறதே உங்களுக்குப் பிடிக்கல போலிருக்கு..
//

நீங்க இங்க என்றும் , எப்போதும் இருக்கணும், அனைவருக்கும் உங்கள் அப்பன் முருகன் அருளை வாங்கித்தரணும்! எனக்கு பஞ்சாமிர்தம் மட்டும் போதும், அருள் எல்லாம் வேண்டாம் அதை சாப்பிட முடியாது :-))

//அப்படியெல்லாம் சொல்லலை சாமி.. சாமி சத்தியமா வவ்வால்ஜி மேல ஒரு பாசம்.. விவாதம் பண்றதுக்குன்னே இருக்குற மனுஷன் //

இதெல்லாம் ரொம்ப ஓவரா இருக்கே, இதுக்கு பேரு தான் பாசமாங்க?
விவாதம் நான் செய்கிறேனா... மற்றவங்க செய்றாங்க , என்னை செய்ய வைக்கிறாங்க ... நான் என்ன செய்ய ... நதி போகும் போக்கில் மிதந்து செல்லும் இலையாக விவாத சுழலில் இழுத்து செல்லப்படுகிறேன்.

//இரும்பு பீரோ உங்களிடம் இல்லை எனில் எனக்கும் சந்தோஷம்தான். ஏன்னா என் வீட்ல பீரோ வைக்கவே இடமில்லை. //

நான் இங்கே ஒருத்தன் வீடே இல்லாமல் இருக்கேன், நீங்க என்னவோ பீரோ வைக்க இடம் போதலைனு விசனப்படுறிங்களே :-))

//சரி.. மூணு நாள் கழிச்சு அடுத்தடுத்து கமெண்ட்ஸ் போட்டு கண்ணு முன்னாடி வரும்போதே நினைச்சேன்.. உங்களுக்கிடைல எந்த கனெக்ஷனும் இல்ல சாமி.. ஒத்துக்குறேன்..//

யார் சொன்னா இப்போ கனெக்ஷன் இல்லைனு , நல்ல கனெக்ஷன் இருக்கு, இண்டெர் நெட் கனெக்ஷன் , அதை வைத்து வலைப்பதிவு கனெக்ஷன் இருக்கு எங்களுக்குள்ள :-))

அப்போவே போட்டாச்சு நீங்க 3 நாள் லேட் வந்து பார்க்குறிங்க.

இப்படிக்கு

நல் அடியார்க்கும் அடியான்
வவ்வால்.

பின்குறிப்பு:
உங்கள் ஒன்று விட்ட , மூனு விட்ட சகோதரர் உங்கள் தமிழன்னு ஒருத்தர் வந்து இருக்கார், அவருக்கு உங்கள் மேல கொள்ளைப்பிரியம் போல இருக்கே!

உண்மைத்தமிழன் said...

//பின்குறிப்பு:
உங்கள் ஒன்று விட்ட , மூனு விட்ட சகோதரர் உங்கள் தமிழன்னு ஒருத்தர் வந்து இருக்கார், அவருக்கு உங்கள் மேல கொள்ளைப்பிரியம் போல இருக்கே!//

கொள்ளைப் பிரியம் மட்டுமல்ல.. சமீபகாலமாக என் அப்பன் முருகன் பெயரிலேயே முத்தமிழில் முத்தமிழ் கூடும் இடத்தில் முத்தமிழை சிந்திக் கொண்டும் இருப்பவர்.

இனி பாருங்கள்.. நான் எங்கு சென்றாலும் பின்னாலேயே வருவார்..

Anonymous said...

//இனி பாருங்கள்.. நான் எங்கு சென்றாலும் பின்னாலேயே வருவார்..//

நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ. போ. போ.

வவ்வால் said...

குமரன்,
//இடுகையைப் படிச்சாச்சு. பின்னூட்டங்களையும் படிச்சுட்டு வர்றேன். இடுகையைப் படிச்சதுலயே படத்தைப் பாக்கலாம்ன்னு தோணுது. பின்னூட்டங்களைப் படிச்சா அந்த எண்ணம் மாறுதான்னு பாக்கலாம். :-)//

படம் பார்க்கலைனா அதுக்கு காரணம் பின்னூட்டம் தான் சொல்லிடக்கூடாது, வழக்கம் போல பின்னூட்டங்களில் எல்லாம் கலந்துக்கட்டி அடித்திருப்பேன் :-))எனவே ரொம்ப குழப்பிக்க வேண்டாம்!
---------------------------
உண்மை தமிழர் அவர்களே!

//இனி பாருங்கள்.. நான் எங்கு சென்றாலும் பின்னாலேயே வருவார்..//

உங்க பின்னாடியே ஒரு ஆள் வருதுனா நீங்க எம்மாம் பெரிய விஐபி! அது தெரியாம நான் கலாய்ச்சுட்டனே! அடியேனை மன்னித்து விடுங்கள்:-))

அவர்களைப்போன்றவர்களை எல்லாம் கண்டு மிரள கூடாதுங்க , ஜாலியா எடுத்துக்கணும்!