"தமிழறிஞர்" இலவசகொத்தனாரின் பதிவில் இருந்து ஒரு பகுதி:
இந்த மாத இதழில் கல்வியாளர் முனைவர் வா செ குழந்தைசாமி அவர்களுடனான நேர்காணல் இடம் பெற்று இருந்தது, மிகச் சுவையாக பல விஷயங்களைப் பற்றிப் பேசி இருந்தார். அதில் பதிவு போட விஷயம் கிடைத்ததுதான் விசேஷமே!!
அந்த நேர்காணலில் இருந்து இரு கேள்வி பதில்கள்!
கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்துவிடலாம் என்ற நிலை நிலவுகிறது. இது சரியானதுதானா?
பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்பதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.
பள்ளியில் தமிழைப் படிக்காமல் பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதவிகிதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059. எந்த ஆண்டும் சதவிகித அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்த சிலர் தமிழ்ப் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்து சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் தவிர எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறு பல வடிவங்களில் வந்து கொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதில்லை.
மூலம் இலவசக்கொத்தனார்: நன்றி!
இப்போது எனது கேள்விகள்,
//1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் 12,059.//
தமிழறிஞர் ஏன் 1995 இல் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் சொல்லி இருக்கிறார், 95 க்கு பிறகு யாரும் பத்தாம் வகுப்பு படிக்கவில்லையா? :-)) 1995 க்கு அப்புறம் 12 வருஷம் ஆச்சு இந்த டைம் கேப்புல 100 தடவை பெட்ரோல் விலை ஏறி இருக்கு, மக்கள் தொகை பெருகி இருக்கு, டாலர் விலை மாறி இருக்கு, இரண்டு ஆட்சியே மாறி இருக்கு இப்படி எத்தனையோ மாற்றம் நடந்து இருக்கே! இந்த கால நிலை மாற்றம் பற்றி கேள்விலாம் பெருமையாக பதிவுப்போட்டவருக்கு ஏன் எழவில்லை, அது எப்படி அவர் தான் தமிழர் ஆர்வலர் ஆச்சே :-)), இதுவே இப்படி பழைய புள்ளிவிவரத்தை வேற யாராவது சொல்லி இருந்தா புலிப்பாய்ச்சால் பாய்வாங்களே!
இதில் அவர் குறிப்பிட்டது அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமா இல்லை தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களும் அடக்கமா? அப்படி இரண்டும் சேர்த்த எண்ணிக்கையாக இருக்க வாய்ப்பே இல்லை.
தமிழக அரசின் உயர்நிலைப்பள்ளிக்குறித்தான புள்ளிவிவரங்கள்,2005-2006 ஆண்டுக்கானது.(அதுவரைக்கும் தான் விவரம் இருக்கு)
High Schools | Government | 2016 | 8.33 |
| Municipal/Corporation | 110 | 0.50 |
| Aided | 613 | 3.12 |
| Unaided | 179 | 0.43 |
| Anglo Indian(High School) | 12 | 0.10 |
| Matriculation(High School) | 2053 | 6.17 |
| Central Board(High School) | 63 | 0.51 |
| Total for all High Schools | 5046 | 19.16 |
http://www.tn.gov.in/schooleducation/statistics/tablep3.htm
இந்த அட்டவணையில் இருந்து ,
அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள்.
மேலும் நகராட்சி , மாநகாரட்சி , உதவி பெரும், உதவிப்பெறாப்பள்ளிகளில் படிப்போர் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் .
மொழி சிறுப்பாண்மை என சொல்லி வேற்றும்மொழி படிப்போர் என இருப்பவர்கள் படிப்பது இந்தப்பள்ளிக்களில் என எடுத்துக்கொள்ளலாம்.
முனைவர் சொன்னது போல இரண்டு சதம் மாற்றுமொழி படிப்போர் அவர்களாகவே இருக்கட்டும்.
ஆனால் தனியார் நடத்தும் மெட்ரிக்குலேஷன் மாணவர்கள் யார், அவர்கள் எல்லாம் மொழி சிறுப்பாண்மையினரா என்று ஒரு கேள்வி வருகிறதே, அவர்கள் எண்ணிக்கை ஒன்றும் சிறியது அல்லவே ,
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம்..
அரசுப்பள்ளிகளில் மொழி சிறுப்பாண்மையினருக்கு அவர்கள் மொழி சொல்லித்தர மட்டுமே ஆசிரியர்கள் உண்டு அதுவும் சில பள்ளிகளில் மட்டுமே மற்றப்படி அங்கே பிரெஞ்ச், ஜெர்மன், ஹிந்தி, இன்ன பிற மொழி சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லை, ஆனால் மெட்ரிக் பள்ளிகளில் பல மொழி சொல்லித்தர ஆசிரீயர்கள் உண்டு, எனவே மாணவர்கள் தமிழ் படிக்காமலே வேற்று மொழியினைப்படித்து தேர்வு எழுதும் நிலை, அதுவும் 6.17 லட்சம் மாணவர்கள் என்றால் அது ஒன்றும் புறக்கணிக்கக்கூடிய எண்ணிக்கையா? அல்லவே.
மேலும் மொத்தமாக தொழிற்கல்வி , மருத்துவம் என உயர்ப்படிப்புக்கு தேர்வாகும் மாணவர்களில் பெரும்பான்மை இத்தகைய தனியார் பள்ளி மாணவர்களே , அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைவே. எனவே தமிழில் எழுத,படிக்க தெரியாத மருத்துவர்களும் , பொறியாளர்களும் அதிகம் உருவாகும் அபாயம் வேறு உள்ளது.
இப்போது தமிழக அரசு போட்ட அரசாணை யாருக்கு , மொழி சிறுப்பாண்மையினரை பாதிக்கவா இல்லையே, இப்படி மெட்ரிக் பள்ளிகளில் தமிழே படிக்காமல் டிமிக்கு கொடுப்போரை தடுக்க தானே, ஆனால் ஏனோ அதை மறைத்து விட்டு ஏதோ அரசு ம்ஒழி சிறுப்பாண்மையினரை தண்டிப்பது போலவும், அவர்கள் கண்டிப்பாக படிக்காவிட்டால் என்ன நஷ்டம் என்றும் அந்த பேட்டியில் தமிழறிஞர் என சொல்லிக்கொள்பவர் சொல்லி இருப்பது ஏன்?
மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கூட பிற மொழி படிக்க காரணம் , அவர்கள் படிக்க வேண்டிய பாட அளவு அதில் குறைவு என்பதால் தான். துவக்கப்பள்ளியில் தமிழ் எந்த அளவுக்க்கு படிப்போமோ அதே அளவுக்கு பிரென்ச்/ ஜெர்மனில் அ,ஆ , என்ற ரீதியில் 10 ஆம் வகுப்பில்(+2 விலும் கூட) படித்தாலே போதும், ஆனால் தமிழை படித்தால் அதில் மனப்பாட செய்யுள் ,கட்டுரை , இலக்கியம் என்று அதிகம் படிக்க வேண்டி இருக்கும்.
ஏன் எல்லா மாணவர்களும் அப்படி பிற மொழி படிக்கலாமே எனலாம் அரசுப்பள்ளிகளில் அத்தகைய வசதிகள் இல்லை, ஆனால் காசு வாங்கிக்கொண்டு படிப்பு சொல்லித்தரும் பள்ளிகளில் உண்டு, எனவே இலகுவாக மதிப்பெண், கூடுதலாக தமிழ் புறக்கணிப்பு என்று மெட்ரிக் பள்ளிகள் இயங்குவதால் தான் தான் அரசு அனைவரும் தமிழ் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்கிறது.
இதெல்லாம் தெரிந்தும் தெரியாது போல அரசு ஏதோ மொழி சிறுப்பாண்மையினருக்கு துரோகம் செய்வதாக சந்தில் சிந்து பாடும் தமிழறிஞர்கள் வலைப்பதிவில் பெருத்துப்போய்விட்டார்கள்!
பின்குறிப்பு:
இந்தப்பதிவை முனைவர் " தமிழறிஞர்" குழந்தைசாமி படிக்கமாட்டார் எனவே அவரை விளக்கம் கேட்கவும் முடியாது, வலைப்பதிவில் கூகிளாண்டவருக்கே கற்றுக்கொடுப்பவர்களையும் குறிவைத்து பதிவிடவில்லை எனவே அய்யோ என்னை மட்டும் குறிவைத்து பதிவிடுகிறேன் என்று என்னை கேட்கும் வாய்ப்பும் இப்பதிவு மூலம் வராது. எனவே உண்மையான தமிழார்வலர்கள் /வலைப்பதிவர்கள் என யார் வேண்டுமானாலும் பதிவு குறித்து கருத்துக்களை கூறலாம்!ஏன் இப்படி என்று விளக்கம் தரலாம்!
24 comments:
உங்ககிட்ட இருந்து ஒரு பதிவை எதிர்பார்த்ததுதான்.
நல்ல பதிவு! ஆனா கேவலமான பின் பதிவு! மொதல்ல கொத்தனார் என்ன சொல்ல வர்ரார்ன்னு புரிஞ்சுக்க!பின்ன பேசு!
இளா,
ச்சே எதிர்ப்பார்த்திருந்திங்களா, உங்களை ஏமாற்றவே முடியாது போல இருக்கே :-(
-------------------------
அனானி ராசா,
எனக்கு தான் புரியலை நீயாவது அவர் என்ன சொன்னார்னு விளக்கி ஒரு பதிவ போடுறது :-))அதுக்கு வழிய காணோம் சொல்ல வந்துட்டாங்க!
தமிழ் ஆர்வலர், புள்ளியியல் நிபுணர் வல்வால் வாழ்க.
தமிழை ஒரு பாடமாக படித்தவர்க்கு தமிழக தொழில் நுட்ப cut off இல் 5 போனஸ் மதிப்பெண் என்று அறிவித்தால் போதும். நிலைமையை மாற்றலாம்.
மிக நன்று (சபாஷ்) சரியான போட்டி !
:)
வவ்வால்,
"தமிழறிஞர்கள்" கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து ஏதோ 1985 வரை UPDATE ஆகியிருப்பதே பெரிய விஷயம்.
இது போன்ற சமூக அறிவியல் விஷயங்களை, மொழியியல் ஆர்வலரிடம் பேட்டி கேட்டவருக்கு ஏதேனும் தொலைக்காட்சி சேனலில் வேலைக்குப் போகும் ஆசையோ என்னவோ! (அங்கே நமீதாவிடமும் பாவனாவிடமும் குடியரசு தின பேட்டிகள் எடுப்பார்களே; அதற்கான பயிற்சியோ என்னவோ!)
எப்படியோ, இந்தப் புள்ளிவிவரம் தந்துள்ள உங்கள் பதிவு படிப்பவருக்குக் கிடைத்துள்ளது அல்லவா; அது தான் லாபம்.
(அறுபது வயதுக்கு மேல் அரசுசார் கௌரவப் பதவிக்குக் குறி வைக்கும் எவரிடமிருந்தும் நேர்மையான கருத்துக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை).
என் கருத்து
இங்கு இருக்கிறது
http://payanangal.blogspot.com/2008/03/2.html
நல்ல புள்ளி விபரங்கள்... அவசியமான பதிவும் கூட, வவ்ஸ், நன்றி!
அரைபிளேடு,
//தமிழை ஒரு பாடமாக படித்தவர்க்கு தமிழக தொழில் நுட்ப cut off இல் 5 போனஸ் மதிப்பெண் என்று அறிவித்தால் போதும். நிலைமையை மாற்றலாம்.//
நீர் என்ன மந்திரவாதியா/ அடுத்தவர் மனம் படிக்க தெரிந்தவரா? நானும் தமிழ் படித்தவர்களுக்கு மட்டும் தமிழ் நாட்டில் மருத்துவம்/ பொறியியலில் முன்னுரிமை தரனும் என்று பின்னூட்டங்களில் சொல்லலாம் என்று இருந்தேன், நீரே சொல்லியாச்சு அப்படி 5% மதிப்பெண் என்று சொல்வதும் சிறந்த ஆலோசனையே அதுக்கு பிறகும் எவனாச்சும் மெட்ரிக்ல போய் ஜெர்மன்/பிரெஞ்ச் படிப்பானா(படிச்சாலும் படிப்பானுக )
-------------------
கோவி ,
என்ன தூண்டி விட்டதோடு நிக்கறிங்க ஒரு பதிவப்போட்டு ஆதரவு தரவேணாமா? :-))
--------------------------------
ரத்னேஷ்,
//பேட்டி கேட்டவருக்கு ஏதேனும் தொலைக்காட்சி சேனலில் வேலைக்குப் போகும் ஆசையோ என்னவோ! //
பேட்டிக்கேட்டவரை விடுங்கள் அவருக்கு 1000 அபிலாசைகள் இருக்கலாம், ஆனால் அதை எடுத்து பதிவாக போட்டவருக்கு என்ன இருக்கு?
பல புள்ளி விவரங்களை திரித்து , 2 சதம் பேரு அதுவும் மொழி சிறுபாண்மை இனத்தவர் என்று ஒருவர் பேட்டிக்கொடுப்பாராம் , அது அகில உலக புகழ் பெற்ற தென்றல் பத்திரிக்கைகல வருமாம்(தென்றல் எல்லாம் நான் என் வாழ் நாளில் கேள்விப்பட்டதே இல்லை)பதிவா எடுத்துப்போட்டவருக்கு எந்த நோக்கமும் இல்லையாம் தாங்கலைடா சாமி :-))
//(அறுபது வயதுக்கு மேல் அரசுசார் கௌரவப் பதவிக்குக் குறி வைக்கும் எவரிடமிருந்தும் நேர்மையான கருத்துக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை).//
நேர்மையான கருத்து வரவில்லை என்றாலும் இப்படி சொல்லக்காரணம் என்ன? இதை எல்லாம் தமிழ் நாட்டில் யாரும் படிக்க மாட்டங்க இந்த தென்றலுக்கு புடிச்ச மாதிரி சொல்வோம்னு சொன்னதா ?
--------------------------------
புருனோ,
உங்கள் கருத்தைப்படித்தேன் , எனக்கு எப்படி அந்த 2 சதம்ல நம்பிக்கை இல்லையோ அப்படியே தான் இருக்கு(நீங்களும் நான் சொன்னதை தானே சொன்னிங்க)
அதனால் தான் நான் விரிவாக தமிழக அரசின் இணைய தளம் சொல்வதை எடுத்துப்போட்டு விட்டேன், நாளைக்கே மெட்ரிக் எல்லாம் சொன்னார்னா சொன்னேன் என்று என் மேல பாய்வாங்க :-))
(நீங்களும் அரசின் இணைய தளம் சொல்வதை ஒருவர் அப்படியே எடுத்துப்போட்டாலும் உள் விவரம் தெரியுமானு கேட்டவர் தானே, அரசு தருவதை சொல்வது தப்பா போய்ட்ய்து இந்த காலத்தில)
---------------------------------
தெகா,
நன்றி,
அவசியமானது , ஆனால் சிலருக்கோ அனாவசியமானதா இருக்கே என்னத்த சொல்ல!
பின்னூட்டம் போட வசதியா Template ஒரு போட்டுடலாமா
1)வவ்வாலின் பார்ப்பன துவேஷம் பல்லிளிக்கிறது.
2)தமிழ் பயிற்றுவிக்காத மிஷனரி கான்வேன்டுகளை கேள்வி கேட்டாயா?
3)மஞ்சத் துண்டு கொள்ளு பேரன் வரைக்கும் ஆங்கில வழி கல்வி பயில்கிறார்களே?
4)தமிழ் தேர்வுக்கு மதிப்பெண்கள் குறைவாக போடும் ஆசிரியர்களை கண்டித்தாயா?
5)தமிழை காட்டுமிராண்டிகளின் மொழின்னு கருப்பு சட்டை தீவிரவாதி சொன்னத மறந்துட்டியா?
நீங்க புர்ச்சி கலைஞர் தம்பிங்களா ?!
லெமுரியன்,
உங்கள் றெம்பிளேட் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது!
சொல்றத எல்லாம் சொல்லிட்டு நாங்களும் தமிழ் ஆர்வலர்கள் தான்னு சொல்லிப்பாங்க , ஏன்னு கேள்வி கேட்ட என்னைப்போல ஆளைத்தான் கேணையன் ஆக்குவாங்க அதுக்கும் நாளு பேரு வந்து ஆகா உங்களின் "நேருக்கு நேர் பார்வை" சூப்பர்னு ஜால்ரா அடிப்பாங்க, ஊதுர சங்க ஊதீ வைப்போம்னு செய்றது தான் நம்ம வேலை!
மக்களாப்பார்த்து வேட தாரிகளை புரிந்துக்கொண்டால் தான் உண்டு!
--------------------------
//நீங்க புர்ச்சி கலைஞர் தம்பிங்களா ?!//
யாத்ரிகன் ,
இதுக்கு பேசாம என்னை ஜோட்டால அடிச்சு இருக்கலாம், ஒரு உண்மையை உலகத்திற்கு சொல்லனும்னு முயற்சி செய்தா இப்படிலாமா என்னை கேவலப்படுத்துவது அவ்வ்வ்... :-(
வவ்வால் அண்ணை,
பதிவுக்கு மிக்க நன்றி.
இந்தப் பதிவின்ரை பொருள் குறிச்சு நான் ஒண்டும் பறைய விரும்பேல்லை.
ஆனால், தமிழகத்தின் நிலமைகளை ஆவலோடை அவதானித்து வருபவன் எண்ட முறையிலை உங்கடை பதிவையும், இலவசக்கொத்தனாரின் பதிவு, அந்தப் பதிவுகள் குறிச்சு வாற பின்னூடங்களையும் விடாமல் வாசிச்சுக் கொண்டு வாறேன்.
ரண்டு பேற்றை பதிவிலை இருந்தும், அது குறிச்சு வாற பின்னூடங்கள்ளை இருந்தும் கன சங்கதிகளைத் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்குது.
பி.கு:- நீங்கள் பல பதிவுகள்ளையும் எழுதற பின்னூட்டங்களைப் படிச்சு வாய்விட்டுச் சிரிக்கிறனான். அந்த அளவுக்கு பகிடியா, நல்ல வடிவா சுவையாகப் பின்னூடங்கள் எழுதுறீங்கள். பாராட்டுக்கள்.
யாரு என்ன சொன்னாலும், தமிழ்நாட்டில் இருந்தால் தமிழ் கட்டாயம் படித்தாக வேண்டும். வா.செ.கு சொல்றாருன்னு (அதுவும் நான் கேள்வியே பட்டிராத ஒரு பத்திரிகையில்!), அதெயெல்லாம் பெருசு படுத்த வேண்டியதில்லை. ஏற்கனவே தமிழனுக்கு, தமிழத் தவிர மத்த மொழியெல்லாம் உயர்வா போச்சு. அந்த தாழ்வு மனப்பான்மையை தகர்க்கவாவது, தமிழ் வழி கல்வி கட்டாயமாக்கப்படணும்.
அரை பிளேடு சொல்ற மாதிரி செஞ்சா நல்ல பலன் கிடைக்கலாம். சிலவற்றை, கட்டாயப்படுத்தி/சட்டப்படுத்திதான் சாதிக்க வேண்டியிருக்கிறது. என்ன செய்றது?
ஆஹா .. அப்படியெல்லாம் நான் கேவலப்படுத்த வரலைங்க .. இவ்வளவு தகவலை சேகரிச்சு .. பதிலை தயாரிச்சு பதிவு போட்டிருகீங்கலே .. Blogger-ல வேலை பாக்குறீங்களானு கேட்க வந்தேன் .. :-D
பதிவை படிச்சு முடிக்குறதே பெரும் காரியமா இருந்தது அதான் கேட்டேன் .. (இன்னும் முழுவதும படிக்கல :-( )
//(நீங்களும் அரசின் இணைய தளம் சொல்வதை ஒருவர் அப்படியே எடுத்துப்போட்டாலும் உள் விவரம் தெரியுமானு கேட்டவர் தானே, அரசு தருவதை சொல்வது தப்பா போய்ட்ய்து இந்த காலத்தில)//
அரசின் இணைய தளம் சொல்வதை ஒருவர் அப்படியே எடுத்துப்போட்டால் தவறில்லை. ஆனால் அதை வைத்து அதில் இல்லாததை கற்பனை செய்வது தான் தவறு.
உதாரனமாக
அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள்.
ஆனால் இதை வைத்துக்கொண்டு 10ஆவது வகுப்பு எழுதுபவர்கள் 8.13 லட்சம் என்று கூறினால் அது தவறு :) :) :) :)
புரிந்ததா.
மேலும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் எண்ணிக்கை 2053, மாணவர்கள் எண்ணிக்கை 6.17 லட்சம்..(இதுவும் இணையதளத்தில் உள்ளது தான்)
ஆனால் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்கள் 6.17 லட்சம் இல்லை :) :) :) :) புரிந்ததா
அரசின் இனையதளத்திலோ, வேறு எங்கோ ஒரு தகவல் இருந்தால் அதை வைத்துக்கொண்டு யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்ன்னு சொல்ல முடியாது.
தகவல்களை பகுத்து ஆராய்ந்தால் உண்மை தெரியும்
//அரசு தருவதை சொல்வது தப்பா போய்ட்ய்து இந்த காலத்தில)//
மேலே உள்ள உதாரணங்களை பாருங்கள். அரசு தருவதை சொல்வது கூட (நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றாலோ அல்லது சொல்லவில்லை என்றாலோ) தவறாகும் வாய்ப்பு அதிகம் :) :) :)
வெற்றி,
நன்றி!
எனது பதிவிலும் இருந்து கனத்தகவல்கள் கிடைக்கிறதா ஆச்சர்யம் தான்!
தமிழ் நாட்டில் இல்லை எனினும் அறிந்துக்கொள்ள தாங்கள் காட்டும் ஆர்வம் சிறப்ப்பான ஒன்றாக உள்ளது.
எனது பின்னூட்டங்கள் சிரிக்க வைக்கிறதா , நிறைய பேரை கோவப்பட வைக்குதே அது எப்படி :-))
--------------------------
தஞ்சாவூரார்,
தங்கள் கருத்தே என் கருத்தும், சரியாக சொன்னீர்கள்!
வேற வழி இல்லைனா தமிழ் படிச்சா உதவி கிடைக்கும்னு சொல்லவும் வேண்டிடிய நிலை ஏற்படலாம், தற்போது கூட தமிழ் வழி படிக்கும் மாணவர்களில் 10 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் 1000 மாணவர்களுக்கு(top 1000 students) லேப் டாப் பரிசு என அரசு அறிவித்துள்ளது.
--------------------------------
யாத்ரிகன்,
சும்மா தமாசு தான் , இந்த பதிவில் அவ்வளவா புள்ளி வைக்கலை அதுக்கே இப்படி சொல்றிங்களே :-))
------------------------------
புருனோ,
இப்படி யாராவது கேட்க வருவார்கள் என எதிர்ப்பாத்திருந்தேன், நீங்களே வந்துட்டிங்க :-))
//உதாரனமாக
அரசு உயர்நிலைப்பள்ளிகள் மட்டும் 2016 உள்ளன அதில் படிப்போர் 8.3 லட்சம் மாணவர்கள்.
ஆனால் இதை வைத்துக்கொண்டு 10ஆவது வகுப்பு எழுதுபவர்கள் 8.13 லட்சம் என்று கூறினால் அது தவறு :) :) :) :)
புரிந்ததா.//
என் பதிவில் பார்த்தால் கூட 8.13 லட்சம் மாணவர்கள் என்று சொன்னதோடு நிறுத்தி இருப்பேன், அவர்கள் எந்த வகுப்பு என்று சொல்லாமல் ,ஏன் எனில் அரசு இணையத்தளத்தில் மொட்டையாக மாணவர்கள் என்று மட்டுமே சொல்லி இருக்கிறார்கள், நானும் அப்படியே.
நீங்கள் சொன்ன கற்பனையை நான் சொல்லவில்லை.ஆனால் நீங்களாகவே கற்பனை செய்துக்கொண்டு அப்படிலாம் சொல்ல முடியாதே என்கிறீர்கள் பதிவை மீண்டும் படிக்கவும். :-))
ஒரெ ஒரு இடத்தில் தான் 10 வகுப்பு என்பதை சொல்வேன் அதுவும் பிரென்ச் படித்தால் அவர்களுக்கு எளிய பாடம் தான் இருக்கும் என்று சொல்ல , புள்ளிவிவரத்துக்கும் அதற்கும் தொடர்பு இருக்காது.
உங்கள் கற்பனை ஒரே திசையில் நின்று விட்டது இப்படியும் கற்பனை செய்திருக்கலாமே, மெட்ரிக் பள்ளியில் படிப்பவன் 10 வகுப்புக்கு இணையாக வரும் போது மட்டுமா மாற்று மொழிக்கு போவான், 5 ஆம் வகுப்பில் இருந்தே கூட மாற்று மொழி படிக்க ஆரம்பித்து இருப்பான்.
எனவே மெட்ரிக் பள்ளிகளின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கையும் மாற்று மொழிப்பக்கம் போய் இருக்கலாம், அதில் 10 க்கு இணையானவர்களும் அடக்கமே எனவே இந்த எண்ணிக்கையை மாற்று மொழி படிக்கும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை என எடுத்துக்கொண்டால் தவறே இல்லை(10 வகுப்பாக இல்லாத போதும்).
எனவே தான் அரசின் இந்த எண்ணிக்கையை பயன்ப்படுத்திக்கொண்டதில் தவறில்லை என்கிறேன்.
மேலும் 1995 இல் படித்த நிலவரத்தை சொல்வதை விட இது எவ்வளவோ மேல் இல்லையா?
கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி
வவ்வால் ஸார், நீங்களும் நானும் இப்ப ஒரே கருத்தைத்தான் கூறிக்கொண்டிருக்கிறோம்.
1. பள்ளிகளில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டும்
2. தமிழ் படிக்காதவர்கள் 2 சதவீததிற்கு அதிகம்.
:) :) :)
இரவி சங்கர்,
உங்கள் பதிவை முன்னரே படித்து விட்டேன் , வோர்ட் பிரஸ் பதிவெண்பதால் பின்னூட்டம் எதுவும் இடவில்லை, உங்கள் கருத்துடன் எனக்கு முழுவதும் உடன்பாடே.
----------------------------
புருனோ,
ஒரே கருத்து தான் நான் கொஞ்சம் முன்னர் எதிர் வினையாற்றிவிட்டேன் அவ்வளவுதான்.
மேலும் உங்களுக்கு எப்படி இந்த புள்ளிவிவரம் சரி என்றும் சந்தேகம் போலும், ஆனாலும் 10 ஆம் வகுப்போ என்னவோ மெட்ரிக் படிப்பவர்கள் எல்லாம் ஆரம்பத்தில்லே இருந்தே தமிழ் படிக்காமல் போய்விடுகிறார்கள் என்பதால் எண்ணிக்கை சரி என்று எனக்கு தோன்றியதால் அப்படியே எடுத்துக்கொண்டேன்.
தமிழகத்தில் தமிழை கட்டாயம் ஆக்கினால் தான் படிப்பார்கள் என்ற நிலை வந்ததே கேவலம் , அதிலும் ஏன் தமிழை கட்டாயப்படுத்தி படிக்க வைக்கணும் என்று கேட்பது இன்னும் கேவலம்!
வவ்வால், wordpress பதிவில் மறுமொழி அளிக்க ஏன் தயங்கினீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? wordpress.com பதிவுகளிலும் மறுமொழி அளிப்பது இல்லையா? நன்றி
ரவிசங்கர்,
வேறொன்றும் இல்லை , வர்ட்பிர்ஸ் பதிவுகளில் பின்னூட்டமிட பெயர், தள முகவரி,மின்னஞ்சல் என்று கேட்கும் அதை எல்லாம் கொடுத்து பிற என்னத்துக்கு பின்னூட்டம் போடனும்னு ரொம்ப நாளாக போடுவதில்லை, எப்போதாவது தவிர்க்க முடியலைனா மட்டுமே பின்னூட்டமிடுவேன்.
இப்படி ஒரு வவ்வால் தனமான கொள்கை :-))
ஓ..
wordpress.com பதிவுகளில் ஏகப்பட்ட தமிழ்ப்பதிவுகள் இருப்பதால் அங்கு ஒரு பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டால் அடுத்தடுத்த முறை நீங்கள் போகும் போது அதுவே நினைவில் வைத்துக் கொள்ளும்.
தனித்தள வேர்ட்பிரெஸ் தளங்களில் ஒரு முறை மறுமொழி இட்டால் அடுத்த முறை நீங்கள் போகும் போது உங்கள் விவரங்களை நினைவில் வைத்திருக்கும். திரும்ப நிரப்பத் தேவை இல்லை.
இவண்
வேர்ட்பிரெஸ் முன்னேற்றக் கழகம்
"யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது" என்பது தவறான வழக்கு.
"குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு அர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது" என்பதே சரியான வழக்கு.
விளக்கம்: தெலுங்கில் 'குர்ரம்' என்றால் தமிழில் குதிரை; ஆனால் தெலுங்கில் 'ஏனுக்' என்றால்தான் ஆனை.
Post a Comment