Thursday, February 21, 2008

sensex- ஒரு பார்வை!

பங்கு வணிகத்தில் ஈடுபடுவர்கள் அல்லது என்னைப்போல சும்மா வேடிக்கைப்பார்ப்பவர்கள் என அனைவரும் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு வார்த்தை sensex அப்படி என்றால் என்ன? , sensitive index என்பதன் சுருக்கமே sensex, இதனை வைத்து எப்படி பங்குவணிகத்தினை கணிக்கிறார்கள், இந்த முறை எப்போது இருந்து நடைமுறைக்கு வந்தது என்பதைப்பார்ப்போம்.

கி.பி 1875 ஆம் ஆண்டு மும்பையில் 318 வியாபாரிகள் ஆளுக்கு ஒரு ரூபாய் மட்டுமே முதலீட்டு பங்காக போட்டு ஒரு வியாபார அமைப்பாக நிறுவியது தான் இன்றைய மும்பை பங்குவர்த்தக மையம்.அபோதேல்லாம் எந்தவித குறியீடுகளும் இல்லாமல் அனுபவத்தின் அடிப்படையில் பங்கு வணிகம் நடந்தது. 1986 இல் தான் முதன் முதலில் sensex என்ற பங்குவணிக குறியீட்டினை செயல்படுத்தி , சந்தையின் ஏற்ற இறக்கங்களை தெளிவாக உணர செய்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் sensex புதிதாக வெளியிடப்படும்.

இந்த sensex எதன் அடிப்படையில் செயல்படுகிறது?

முதலில் முழு சந்தைமதிப்பு முதலீடு (
"Full Market Capitalization")என்ற அடிப்படையிலும் , பின்னர் 2003 இல் இருந்து கட்டற்ற மாறும் சந்தை மதிப்பு முதலீடு ("Free-float Market Capitalization" )என்ற அடிப்படையிலும் கணக்கிடப்படுகிறது.

முழு சந்தைமதிப்பு முதலீடு:

உதாரணமாக ஒரு நிறுவனம் 1000 சமவிகித பங்குகளை தலா 100 ரூபாய் மதிப்பில் வைத்து துவக்கப்படுகிறது என்றால் , அதன் மொத்த மதிப்பு 100x1000= 1,00,000 ஆகும், இந்த மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனத்தின் மதிப்பை கணக்கிட்டால் அது முழு சந்தை மதிப்பு முதலீடு ஆகும்.

இதில் உள்ள குறைப்பாடு என்னவெனில், அந்நிறுவனத்தின் உண்மை சந்தை மதிப்பு என்ன என்பதை சரியாக கணக்கிட முடியாது, ஏன் என்பதை அடுத்த உதாரணம் பார்க்கும் போது தெரியும்.

கட்டற்ற மாறும் சந்தை முதலீடு:

அதே நிறுவனத்தின் 1000 பங்குகளில் 250 பங்குகளை அதன் முதலாளி தனக்காக வைத்துக்கொண்டு 750 பங்குகளை மட்டுமே மக்கள் வாங்க சந்தையில் விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், மக்களுக்கு கிடைக்கும் பங்குகளின் மதிப்பு என்ன 750x100= 75,000 தான். இப்போது மக்கள் பங்கு பெறும் பங்கு சந்தையில் அந்நிறுவன பங்குகளின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடும் போது விற்பனைக்கு வராத 250 பங்குகளையும் சேர்த்து மதிப்பிட்டு சொல்வதால் என்ன ஆகும், தேவை இல்லாமல் மதிப்பைக்கூட்டிக்காட்டும், ஆனால் புழக்கத்தில் உள்ள பங்கு மதிப்பு குறைவு, அதன் விற்பனை செயல்ப்பாடுகளே நேரடியாக supply & demand அடிப்படையில் சந்தையின் மதிப்பை வெளிப்படுத்தும்.

எனவே தான் தற்போது எல்லாம் உலக அளவில் அனைத்து பங்கு சந்தைகளும் கட்டற்ற மாறும் சந்தை முதலீடு அடிப்படையில் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.

இப்போது நம் பங்கு சந்தை குறியீட்டு எண் எப்படி கணக்கிடப்படுகிறது என்று பார்ப்போம்.

இக்குறியீட்டினை ஏதோ ஒரு ஆண்டினை அடிப்படை ஆண்டாக (base year)வைத்து துவக்க வேண்டும், நமக்கு 1979 தான் பங்கு சந்தை குறியீட்டு அடிப்படை ஆண்டு.

அந்த ஆண்டில் தோராயமாக 10 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் இருந்தது என்று வைத்துக்கொள்வோம், இதுவே அடிப்படை பங்குகள் எனப்படும், அதன் மொத்த மதிப்பு 1000 ரூபாய் , என்றால் அதனை வைத்து குறியீடு ஏற்படுத்தி முழு மதிப்பாக வைத்து குறியீட்டு எண் 100 என்று நிர்ணயித்துக்கொண்டார்கள்.

அதாவது 1979 இல் sensex மதிப்பு 100 என்று துவக்கமதிப்பாக நிர்ணயித்துக்கொண்டார்கள்.

இதை வைத்து ஒவ்வொரு ஆண்டும் , புதிதாக எத்தனை நிறுவனங்கள் பங்கு வெளியிட்டாலும் அதனை முதலில் அந்த அடிப்படை பங்குகளின் செயல் பாட்டுடன் ஒப்பிட்டே மொத்த சந்தையினை மதிப்பிடுவர்கள். பங்குகளின் மொத்த மதிப்பினை, துவக்க பங்கு மதிப்புக்கும் , துவக்க பங்கு குறியீட்டுக்கும் உள்ள விகிதத்தால் பெருக்கி கிடைக்கும் எண்ணுக்கு தான் sensex என்று பெயர்.

1979 இல் ஒரு உதாரணமாக 10 நிறுவனங்களை எடுத்துக்கொண்டார்கள் என்று சொன்னேன், ஆனால் உண்மையில் 30 நிறுவனப்பங்குகள் எடுத்துக்கொண்டார்கள், அதன் மொத்தமதிப்பாக 60,000 ரூபாய் என்றும், அதன் ஆரம்ப குறியீடாக 100 என்றும் வைத்துக்கொண்டார்கள்.

இப்பொழுது sensex கணக்கிட அந்த 30 பங்குகளின் சந்தை மதிப்பை, சந்தையில் கிடைக்கும் விற்பனைக்கு கிடைக்கும் பங்குகளின் எண்ணிக்கை வைத்து கணக்கிடுவார்கள், அப்படி கிடைக்கும் மதிப்பினை 100/60,000 என்ற எண்ணால் பெருக்குவார்கள் , (இந்த விகிதத்திற்கு index divisor என்று பெயர்) அப்படி பெருக்கி கிடைக்கும் எண்ணே அப்போதைய sensex.

30 அடிப்படை நிறுவனங்களை பெரிய , நடுத்தர , மிக நீண்டக்காலமாக இருக்கிற , நம்பிக்கையான , அதிகம் வியாபாரம் ஆகும் பங்குகள் என்று பல அளவுகோள்களின் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்வார்கள்.

தற்போதைய பங்கு சந்தை sensex அடிப்படை 30 பங்கு நிறுவனங்கள் இவை தான்,

ACC, Ambuja Cements, Bajaj Auto , BHEL, Bharti Airtel , Cipla, DLF, Grasim Industries , HDFC , HDFC Bank, Hindalco Industries , Hindustan Lever , ICICI Bank , Infosys , ITC, Larsen & Toubro, Mahindra & Mahindra, Maruti Udyog , NTPC, ONGC , Ranbaxy Laboratories , Reliance Communications , Reliance Energy , Reliance Industries , Satyam Computer Services , State Bank of India , Tata Consultancy Services , Tata Motors , Tata Steel , and Wipro .

இந்த 30 நிறுவனங்களின் செயல்ப்பாடு, வர்த்தகம் , அதன் மதிப்பே sensex ஐ நிர்ணயிப்பது.

பின்னர் எப்படி திடீர் , திடீர் என பங்கு சந்தையில் சரிவு ஏற்படுகிறது, இந்த 30 நிறுவனங்களும் எப்போதும் லாபத்தில் இருக்குமே எனலாம், அதுக்குலாம் மேலும் பல காரணங்கள் இருக்கு , பின்னர் பார்க்கலாம்,அல்லது பின்னூட்டங்களில் யாரேனும் சொல்லக்கூடும்!






30 comments:

மங்களூர் சிவா said...

Sensex = Sensitive Index

வவ்வால் said...

senitive என்பதே சரியானது, கவனிக்காமல் sensitivity என்று போட்டுவிட்டேன், திருத்தம் செய்து விடுகிறேன்.

குசும்பன் said...

//மும்பையில் 318 வியாபாரிகள் //

இப்ப என்ன ஆனாங்க? இன்னுமும் அவர்களுக்கு சம்மந்தம் இருக்கா?

நந்து f/o நிலா said...

நல்ல பதிவு வவ்வால்.கடைசி பத்தி பார்த்துவிட்டு ஏமாந்து போனேன். பாதியில் விட்டுவிட்டீங்க. அந்த சரிவு ஏற்றம் பத்தியும் முழுசா எழுதுங்க.

நந்து f/o நிலா said...

குசும்பா எங்கயோ நீ சென்செக்ஸ் பத்தி ஏடாகூடமா டவுட் கேட்ட ஞாபகம். :P இப்ப புரிஞ்சிடுச்சா?

Unknown said...

Hi, thx for given this info in tamil...

I have read similar article in Rediff.

by
Kanth

வவ்வால் said...

குசும்பா,
//இப்ப என்ன ஆனாங்க? இன்னுமும் அவர்களுக்கு சம்மந்தம் இருக்கா?//

ரொம்ப முக்கியமான சந்தேகம் தான் :-))

யாருக்கு தெரியும், அவர்கள் வாரிசுகள் பங்கு சந்தை தரகர்களாகவோ , இல்லை தொழிலதிபர்களாகவோ இருக்கலாம், இல்லை பழம் பெருமை மட்டும் பேசிக்கொண்டு வேடிக்கைப்பார்க்கும் கூட்டத்திலும் இருக்கலாம்.
----------------
நந்து,
அதை எல்லாம் போட்டா பதிவு பெருசாகிடும், உண்மைத்தமிழனுக்கு போட்டியாளராக ஆகிடுவேன் :-))

விளக்கமாக சொல்ல யாராவது பங்கு சந்தை புலி வருவாங்க இருங்க!
-----------------------
நெல்லைக்காந்த்,

இந்த விவரங்கள் எல்லாம் bse இணையத்தளத்தில் உள்ளது,நான் தமிழ் படுத்தியுள்ளேன். ரெடிப் அங்கு இருந்து எடுத்துப்போட்டு இருக்கலாம்.

Anonymous said...

////மும்பையில் 318 வியாபாரிகள் //

இப்ப என்ன ஆனாங்க? இன்னுமும் அவர்களுக்கு சம்மந்தம் இருக்கா?//

ரூ 65 லட்சம் கட்டணம் (மாறுதலுக்குட்பட்டது) செலுத்தினால் நீங்களும் உறுப்பினராகலாம். தற்போதைய உறுப்பினர்கள் அவர்கள் உரிமையை மற்றவர்க்கு விற்கலாம்.

see

http://www.thehindubusinessline.com/2003/10/10/stories/2003101002440100.htm

RATHNESH said...

வவ்வால்,

// பங்கு வணிகத்தில் என்னைப் போல சும்மா வேடிக்கைப் பார்ப்பவர்கள் //

இதை நம்பச் சொல்கிறீர்களா? எனக்கென்னவோ நீங்கள் அந்த 318-ன் வாரிசாகத் தான் இருப்பீர்கள் என்று தோன்றுகிறது.

(சும்மா சொல்லக் கூடாது. சூப்பர் டீடெய்ல்ஸ். அப்படியே காப்பி எடுத்து வைத்துக் கொண்டுள்ளேன். நன்றி.)

குமரன் (Kumaran) said...

வவ்வால்.Sensexனா என்னன்னு சொன்னீங்க பாருங்க. அது மட்டும் இப்ப மனசுல நின்னுக்கிச்சு. மத்ததெல்லாம் முழுசா புரியலை. எப்பவாவது இந்தத் துறையில ஈடுபட்டாலோ இல்லாட்டி உங்களை மாதிரி வேடிக்கை பாக்க நினைச்சாலோ நெருங்கி வந்து புரிஞ்சுக்கிறேன். இப்போதைக்கு இங்கே சொன்னதை ஓரளவுக்குப் புரிஞ்சிக்கிட்டேன். அது போதும். :-)

வவ்வால் said...

அனானி,

அப்போ 65 லட்சம் கட்டினவங்க எல்லாம் அந்த 318 பேரின் வாரிசுகளா? அவர் கேட்டது அந்த வாரிசுகளை.

ஆனாலும் உங்கள் தகவலும் உபயோகமானதே நன்றி!
--------------------------------------
ரத்னேஷ்,
நன்றி, ஆனாலும் இதெல்லாம் ஓவரோ ஓவர் ... ஷேர் ஆட்டோல போகத்தான் நம்மாள முடியும் ஷேர் மார்க்கெட்லாம் வேடிக்கை ஒன்லி!
------------------------

குமரன்,
நன்றி!

சங்கப்பாடல்களில் சென்செக்ஸ் பற்றி சொல்லி இருந்தா புரிஞ்சு இருக்கும் :-))

Unknown said...

சென்செக்ஸ் ன்னா, தப்பாவே புரிஞ்சுகிட்ட குசும்பன் மாதிரி ஆட்களுக்கு (?!) ஆப்பு வைக்கிற மாதிரி அருமையான பதிவு!

ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா.... :)

உண்மைத்தமிழன் said...

//நந்து,
அதை எல்லாம் போட்டா பதிவு பெருசாகிடும், உண்மைத்தமிழனுக்கு போட்டியாளராக ஆகிடுவேன் :-))//

வவ்ஸ்.. மேட்டரை முழுசா எழுதாம.. அப்புறம் பார்க்கலாம்.. அடுத்தப் பதிவுல பார்க்கலாம்னு.. அடுத்த உதாரணத்துல காட்டுறேன்னு எஸ்கேப்பாகக் கூடாது..

வெறும் 20 பக்கத்துக்கு எழுதினா அது பெரிசா..? டூ மச்சு..

என்னைவிட பெயரிலி, தமிழரங்கம், ஸ்பார்ட்டகஸ், அசுரன் போன்றோரெல்லாம் அப்பப்ப எழுதியிருக்காங்க.. ஏன் என்னை மட்டும் குறி வைக்குறீங்க சாமி..?

Sanjai Gandhi said...

நல்ல பதிவு வவ்வால்.. சரிவு பத்தியும் சீக்கிரம் தனி பதிவு நீங்களே போடுங்க.

Sowmya said...

hi,

how are u doing?

வவ்வால் said...

தஞ்சாவூரார்,
நன்றி,
//குசும்பன் மாதிரி ஆட்களுக்கு (?!) ஆப்பு வைக்கிற மாதிரி அருமையான பதிவு!//
குசும்பனுக்கு ஆப்பு வைச்சா அதுல அவ்வளவு சந்தோஷமா :-))

ஆனா இதுல எங்கே ஆப்பு வச்சேன்?

//ஸ்ஸ்ஸ்ஸ்...யப்பா.... :)//

இந்த சவுண்ட் எபெக்ட் எதுக்கு, நீங்க தெரியாம எதாவது ஆப்பு மேல போய் குந்திட்டிங்களா :-))
---------------------------------

உண்மைத்தமிழர்,
//வெறும் 20 பக்கத்துக்கு எழுதினா அது பெரிசா..? டூ மச்சு..
//

தெய்வமே எங்கேயோ போய்ட்டிங்க :-))

நீங்க சொன்னவங்க பதிவை எல்லாம்... எப்போவாது தான் படிப்பேன் அதனால அதன் "பின் விளைவுகள்" தெரிவதில்லை, உங்க பதிவ எல்லாம் அடிக்கடி படிப்பதால்... கொஞ்சம் கண்ணை கட்டும் அதான் சொன்னேன், தப்பா எடுத்துக்க வேண்டாம்.நீங்கலாம் 20 பக்கத்துக்கு பதிவு போட்டா தான் நான் போடுற பதிவுலாம்(பின்னூட்டம்) சின்னதா தெரியும்!
--------------------------

சவும்யா,
//hi,

how are u doing?//

எங்கேயோ பார்த்தாப்போல இருக்கே, வேற யாருக்கோ கேட்கப்பட்ட கேள்வியா இது? any how i'm still alive :-))

நந்து f/o நிலா said...

வவ்வால் அன்னிய முதலீடு எந்தெந்த வருடத்தில் எவ்வளவு உள்ளே வந்தது. இப்போது மொத்தத்தையும் அவர்கள் வெளியில் எடுத்தால்அதன் மதிப்பு எத்தனை மடங்காக இருக்கும். அதெல்லாம் யார் பணம் என்பதை அடுத்த போஸ்ட்டில் டச் பண்ணுங்க.

நான் இதை ரொம்ப நாளா எழுதனும்ன்னு ஆசை.. ஆனா புள்ளி விவரம்லாம் சேகரிக்க மொழிபெயர்ப்பாளார் கிடைக்கல.

மத்தபடி வவ்வாலுக்கே ஐடியாவன்னு நெனச்சுக்காதீங்க

வவ்வால் said...

நந்து,

//வவ்வால் அன்னிய முதலீடு எந்தெந்த வருடத்தில் எவ்வளவு உள்ளே வந்தது. இப்போது மொத்தத்தையும் அவர்கள் வெளியில் எடுத்தால்அதன் மதிப்பு எத்தனை மடங்காக இருக்கும். அதெல்லாம் யார் பணம் என்பதை அடுத்த போஸ்ட்டில் டச் பண்ணுங்க.//

மொழிப்பெயர்க்க ஆள் கிடைக்கலையா எண்களா இருக்கும் தொகைய மொழி பெயர்ப்பது எப்படியோ?

அப்புறம் நீங்க சொன்ன இந்த ஐடியா எனக்கும் முன்னரே தோனிச்சு, விவரம் சரியா கிடைக்கலை, அல்லது கிடைத்தது பத்தலைனு தான் அதை இன்னும் தொடாம வச்சு இருக்கேன்.

இதில் பெரிய ரகசியமே இருக்கு என்று நினைக்கிறேன், இவ்வளவு அன்னிய முதலீடு உள்ள வந்துச்சு என்று காட்டுறாங்க ஆனா எந்த நாட்டில் இருந்து, யார் போட்டாங்க என்பதை எங்கும் காட்ட மாட்டேன்கிறாங்க. அதான் பரமரகசியம் சிலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கூட கேட்டதற்கு அதை கொடுக்க வழி இல்லைனு சொல்லிட்டாங்களாம்.செபியே அப்படிப்பட்ட முதலீடுகளுக்கு பாதுகாப்பு தருது. இப்போ சில நிபந்தனைகள் உண்டு , முன்னர் கட்டற்ற சுதந்திரம் தான்.அதுவும் கூட தீவிரவாதிகள் பணம் முதலீடு செய்றாங்கனு சொன்ன பிறகு.இது பங்கு சந்தைக்கு தான், மற்றப்படி ஒரு நிறுவனத்தில் முதலீடு போடுறது எல்லாம் வெளிப்படையா இருக்கு.

ஆனாலும் சிலப்பத்திரிக்கைகளில் யூகத்தின் அடிப்படையில் சிலவற்றை சொல்லி இருக்காங்க, அதைப்படித்து எதாவது தேறினா ஒரு பதிவா போடுறேன்.

அதே போல அவர்கள் எந்த அடிப்படைல எடுக்கிறாங்க, எவ்வளவு லாபம் பார்த்தாங்க என்பதுக்குலாம் விவரம் இல்லை. ஒரு வேளை இருந்து என்னால கண்டுப்பிடிக்க முடியலையா தெரியலை.

ஆனால் இதனை ஓரளவு தோராயமாக கண்டுப்பிடிக்கலாம், பங்கு சந்தை சரிவின் போது லட்சம் கோடி நஷ்டம் என்றெல்லாம் சொல்றாங்களே அது பெரும்பாலும் அந்த அன்னிய முதலீட்டாளர்களுக்கு தான் போகும்.கொஞ்சம் இந்தியாவில் இருக்கும் பங்கு சூதாடிகளுக்கும் போகும்.

இதை எல்லாம் சொன்னால் யாராவது வந்து உனக்கு தெரியுமா பங்கு சந்தை நஷ்டம் அடையும் தொகை வெளிநாட்டுக்கு தான் போகுதுனு , ஏன் உபயோகமற்ற தகவல் சொல்லி திசை திருப்புகிறாய்னு சொல்லிடுவாங்க என்று தான் விட்டுட்டேன்.

பெரும்பாலும் இங்கே ஒரு தொகை போகுதுனா எங்கே போகும் யார் பங்குகளை விற்று வெளியேறுறாங்களோ அவங்களுக்கு தானே போகும்.

நந்து f/o நிலா said...

வவ்வால்,

உதாரணத்திற்கு 1995ல் இருந்து 2003 வரைக்கும்50ஆயிரம் கோடி பணம் வந்திருக்குன்னு வெச்சுக்குவோம். அப்பொதைய சென்செக்ஸ் அளவையும் இப்போதைய சென்செக்ஸ் அளவைவையும் வைத்து தோராயமாக இப்போ எவ்வளவாக அந்த பணம் இருக்கும்ன்ன்னு முடிவு பண்ணலாம்.இப்போ 1.5 லட்சம் கோடீயாக இருக்கலாம்.( எப்படியும் அதை விட அதிகமாகத்தான் இருக்கும்).


நான் கேட்டது இப்போ அந்த உதாரண 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கும் போது சந்தை சரியும். அதனால் 1 லட்சம் கோடிக்குத்தான் தேத்தினாலும் இந்தியாவை விட்டு வெளியே போகும் பணம் 1லட்சம் கோடி.

அப்போ அவர்கள் லாபமான அந்த 50ஆயிரம்கோடி யார் பணம்? நம்ம பணம்தானே?

சரி அவர்கள் 1996லிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவந்த பணத்தால் இந்தியாவிற்கு என்ன நன்மை?
IPO வில் முதலீடு செய்வது வெண்டுமென்றால் ஏதோ பொருளாதார முன்னேறத்துக்கு கொஞ்சம் உதவின்னு சொல்லலாம்.

ஆனால் மற்றவை?

அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் சூதாட்டம்தானே?

இதெல்லாம்தான் கேக்க நினைத்தது. ஆனால் புள்ளிவிபரங்களை நீங்கள் இன்னும் நன்றாக கையாளுவீர்கள்..

அப்புறம் சில விஷயங்கள் நாந்தான் தப்பா புரிந்து கொண்டிருக்கிரேனோ என்ற சந்தேகம். அதனால் என்னால் பதிவாக போட முடியவில்லை.

இதுவே நீங்களென்றால் கண்டிப்பக பட்டையை கிளப்பி விடுவீர்கள்

நந்து f/o நிலா said...

இன்னொரு மேட்டர். அன்னிய முதலீடுன்னு வந்ததுல பாதி நம்ம அரசியல்வாதிங்க பணம்தானாம்.

எல்லாம் நம்ம "சிவாஜி" ரஜினி டெக்னிக்காம்

வவ்வால் said...

நந்து,

//நான் கேட்டது இப்போ அந்த உதாரண 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்கும் போது சந்தை சரியும். அதனால் 1 லட்சம் கோடிக்குத்தான் தேத்தினாலும் இந்தியாவை விட்டு வெளியே போகும் பணம் 1லட்சம் கோடி.

அப்போ அவர்கள் லாபமான அந்த 50ஆயிரம்கோடி யார் பணம்? நம்ம பணம்தானே?//

இதையே தான் நானும் சொன்னேன் இங்கே இருந்து பணம் போகுதுனா யார் பணம் என்று? யாருக்கு போகும் என்று?

ஒரே வழில போறோம், இப்படித்தான் நானும் யோசித்தேன் , அதைத்தான் போன பின்னூட்டத்திலும் சொன்னேன், இந்த அன்னிய முதலீடு குறித்து தகவல் வரணும்னா sebi மனசு வைக்கணும், அல்லது அது cbi வழக்காக மாறனும் , சாதாரணமாக செபி விதிப்படி அதை யாருக்கும் சொல்லணும்னு அவசியமே இல்லையாம்.

அதை வைத்து தான் எல்லாம் விளையாடுறாங்க, ப.சி எல்லாம் நினைத்தால் ஒரு சட்டம் போட்டு திருத்தலாம் ஆனா செய்ய மாட்டார், அவருக்கு இந்த இடைப்பட்ட காலத்தில பங்கு சந்தை மேல போய்க்கிட்டே இருக்கணும் , எப்படியும் சரிவு வருஷத்துக்கு ஒன்னு வரும் அப்போ அதை கரெக்ஷன் சொல்லி சமாளிச்சுடலாம்னு எண்ணம், இல்லை அவருக்கே எதுனா கட்டிங்க் போகலாம்;-)

உதாரணமாக முன்னர் யெஷ்வந்த் சின்கா இருந்த போது அவரது மகளுக்கு சகாய விலையில் ஷேர்கள் சில கம்பெனிகள் கொடுத்தது, மேலும் ஒரு அன்னிய நிறுவனத்திற்கு(மொரிசியஸ்) அவர் நிதி ஆலோசகர் ஆகவும் இருந்தார் காரணம் இவர் காட்டிய சலுகை.

இந்த மொரிசியஸ் வழியில் தான் அதிக பணம் இந்தியாவிற்கு வரும். காரணம் அங்கே இருந்து வரும் பணத்திற்கு ,பின்னர் அவர்கள் ஈட்டும் வருவாய்க்கு என்று மொத்தமாக வரியே கிடையாது என்று ஒரு பைலேட்டரல் ஒப்பந்தம் இருக்கு.

மேலும் நீங்கள் சொன்னாப்போல நீண்ட காலம் எல்லாம் இருக்க மாட்டாங்க , வருசத்துகு ஒரு தடவை அறுவடை மீண்டும் விதைப்பு இந்த பங்கு சந்தையில், அதுவும் அன்னிய மூல தன மார்க்கத்தில்.

//சரி அவர்கள் 1996லிருந்து இந்தியாவிற்குள் கொண்டுவந்த பணத்தால் இந்தியாவிற்கு என்ன நன்மை?//

மார்க்கெட்டை ஒரு ப்ளோவில் வைத்திருக்கும் இந்த நிதிகள், இல்லை எனில் நம் சென்செக்ஸ் குறியீடு குறைவாகவே இருக்கும்.

வருசத்திற்கு ஒரு முறை அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் அவர்கள், பின்னர் மீண்டும் வருவார்கள். இதெல்லாம் நடந்தாலும் புதிய புதிய பங்கு சந்தை முதலீட்டாளர்கள் வந்துக்கொண்டே இருப்பதால் சந்தை உயிர்ப்புடன் இருக்கும். இதெல்லாம் ஒரு தந்திரம் என்றும் சொல்லலாம்.

//அங்கீகரிக்கப்பட்ட அக்மார்க் சூதாட்டம்தானே?//

கண்டிப்பாக இதில் 50 சதம் திட்டமிட்ட சூதாட்டம் இருக்கு,மீதி 50 சதம் காரணம் சூதாட்டத்திற்கு பணம் போட்டவர்கள் கொஞ்சம் யோசிப்பதால, அதாவது அவன் போட்ட தொகை பெரிது என்பதால், நஷ்டம் வராமல் செய்வான் , அதனால் நமக்கு எல்லாம் டைம் கிடைக்குது, பணம் போட்டவன் மார்கெட்டை கவுக்கனும்னு எல்லாம் கவுக்க மாட்டான் அவனுக்கு சரியான லாபம் வரும் போதே கவுப்பான். ஆனால் ரொம்ப நாள் பங்கு சந்தையில் ஊறியவர்கள் கூட அதை புரிந்துக்கொள்ளாமல் , கால்குலேட் செய்து இறங்கினால் இது சூதாட்டம் அல்ல என்பார்கள்.


அந்த கால்குலேஷன் கூட தோராயம் தான் என்பதே உண்மை. எனவே சூதாட்டம் என்று சொன்னால் சரி தான்.

//இன்னொரு மேட்டர். அன்னிய முதலீடுன்னு வந்ததுல பாதி நம்ம அரசியல்வாதிங்க பணம்தானாம்.//

நம்ம அரசியல்வாதிங்க அந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க மாட்டாங்கனு நினைக்கிறேன், அல்லது அப்படியும் இருக்கலாம். நம்ம ஊர் அரசியல்வாதிகள் எல்லாம் நேரடியா புளு சிப் ஷேர்களை வாங்கிடுவாங்க , இது போல ஸ்பெகுலேடிவ் வேலைல இறங்க மாட்டாங்க, முன்னர் பிரமோத் மகாஜன் அவர் பையனுக்கு ரிலையன்ஸ் ஷேர்களை வாங்கி கொடுத்தார் பிரதியுபகாரமாக bsnl நெட்வொர்க்கை ரிலையன்ஸுக்கு தாரை வார்த்தார்.

இல்லைனா ரிலையண்ஸ் வளர்ந்தே இருக்காது.இன்று வரை பேக் போன் நெட்வொர்க் bsnl தான் ரிலையண்ஸ் குந்துனாப்போல லாபம் சம்பாதிக்குது.ரிலையண்ஸை காரணம் காட்டி டாடாவும் பயன்படுத்திக்கொள்கிறது, இது cmda மொபைலில் சொல்கிறேன்.

Unknown said...

//குசும்பனுக்கு ஆப்பு வைச்சா அதுல அவ்வளவு சந்தோஷமா :-))

ஆனா இதுல எங்கே ஆப்பு வச்சேன்? //

அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. சும்மா ஒரு jaali சிண்டு முடியல்தான் :)


//இந்த சவுண்ட் எபெக்ட் எதுக்கு, நீங்க தெரியாம எதாவது ஆப்பு மேல போய் குந்திட்டிங்களா :-))//

அந்த சவுண்டு எபெக்ட், ஆப்பு மேலே குந்துனதாலே இல்ல.
'ஸ்ஸ்ஸ்... யப்பா...இப்பிடி ஒரு சின்ன சிண்டு(?) முடியிறதுக்கே இப்பிடி வேர்த்துக் கொட்டுதே. அவனவன் எப்பிடி அசால்ட்டா இந்த விஷயத்தச் செய்றானுங்க?'ன்னு படிக்கவும் :) ஆப்புமேலே போய் குந்துனா, சத்தமே வராதாம் - அனுபவஸ்தர்கள் சொல்றாங்க :)

மத்தபடி, நம்ம மாதிரி சென்செக்ஸ் பத்தி ஒண்ணும் தெரியாதவங்களுக்கு உபயோகமா இருக்கு. தொடருங்க!

அரை பிளேடு said...

குசும்பரால் கண்டிக்கப்பட்ட பதிவு இதுதானா.

இவ்வளவு நல்ல பதிவை அவர் ஏன் கண்டிக்கிறார்.

வவ்வால் said...

தஞ்சாவூரார்,

உங்க மண்டைல முடி அதிகமோ சிண்டு முடிய ஆசைப்படுறிக :-))

//ஆப்புமேலே போய் குந்துனா, சத்தமே வராதாம் - அனுபவஸ்தர்கள் சொல்றாங்க :)//

நான் சத்தம் வரும்னு சொன்னேன் அப்போ எனக்கு அனுபவம் இல்லைனு ஆகுது, சத்தம் வராது சொன்ன உங்களுக்கே ஆப்பில் அனுபவம் அதிகம் இருக்கணும் :-))
----------------------------------
அரைபிளேடு,

//இவ்வளவு நல்ல பதிவை அவர் ஏன் கண்டிக்கிறார்.//

ஒண்ணும் தெரியாத பச்ச புள்ளையாட்டம் கேட்கப்படாது, அவர் போதைக்கு என் பதிவை ஊறுகாய தொட்டுக்கிட்டார்பா :-))

ஆனா அந்த யோனி அம்மணி கில்லாடினு குசும்பனுக்கு தெரியாது போலும் :-)) அதான் இப்போ குமட்டில குத்து வாங்கினு இருக்கார் குசும்பர் :-))

Unknown said...

வவ்வால்,

//உங்க மண்டைல முடி அதிகமோ சிண்டு முடிய ஆசைப்படுறிக :-))//

அட, அப்பிடியெல்லாம் இல்லைங்க :)

//நான் சத்தம் வரும்னு சொன்னேன் அப்போ எனக்கு அனுபவம் இல்லைனு ஆகுது, சத்தம் வராது சொன்ன உங்களுக்கே ஆப்பில் அனுபவம் அதிகம் இருக்கணும் :-))//

சாமீ, நமக்கு அந்த அளவுக்கு வாதாடும் திறமை இல்லை :) ஆப்பு வைக்குற/வாங்குற அளவுக்கு எனக்கு இன்னும் பதிவுலகத்தில் அனுபவம் வளரல :-))

குசும்பா, நமக்கு ஒண்ணும் இதுல (சீரியஸா) சம்பந்தம் இல்லப்பா!

//குசும்பா எங்கயோ நீ சென்செக்ஸ் பத்தி ஏடாகூடமா டவுட் கேட்ட ஞாபகம். :P இப்ப புரிஞ்சிடுச்சா?//

நந்து சொன்னத வச்சு, நான் சும்மா கால வாரினேன். No offenses.

பத்மா said...

itk,
செம தூள் போங்க.
பயங்கர serious.
நல்லாதேன் இருக்கு.
keep writing.
பத்மா......

வவ்வால் said...

தஞ்சாவூரார்,
//அட, அப்பிடியெல்லாம் இல்லைங்க :)//

சும்மா தமாசு தான் :-))
------------------
பத்மா(உஷ்)

வாங்க ,நன்றி!
நலமா, ரொம்ப நாளா சத்தமே காணோமே?

இதெல்லாம் சீரியஸா சும்மா மொக்கை, ஜல்லி பதிவு!இதை இப்படி சொல்லிட்டிங்களே?

//நல்லாதேன் இருக்கு.
keep writing.
பத்மா......//

எல்லாம் உங்க கடாட்சம் தான்! :-))

பத்மா said...

appidiye enga pakamum konjam thalakattalame?

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வவ்வால், அருமையா சொல்லி இருக்கீங்க! பாராட்டுக்கள்!சரிவு பத்தியும் கொஞ்சம் போடுங்க. என்ன மாதிரி கத்துக்குட்டிகளுக்கு உதவியா இருக்கும்!

வவ்வால் said...

உஷ் ,
உங்க பக்கமும் பார்த்துகிட்டு தான் இருக்கேன், நீங்க தான் இந்த பக்கம் வருவதில்லை!
----------------
வந்தியத்தேவன் நன்றி!

சென்செக்ஸ் சரிவு , அதன் காரணங்கள் பற்றியும் ஒரு பதிவு போட்டாச்சு! "sensex- பங்கு சந்தை பரம பத விளையாட்டு" என்ற தலைப்பில் இருக்கும் படிச்சுப்பாருங்க!