Friday, November 06, 2009

நீள் உறக்கம்

ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்திலாழ்வதனை பொதுவாக ஹைபர்னேஷன்(hibernation) என்பார்கள்.வெப்ப ரத்த உயிரினங்கள் குளிர்காலத்தில் மேற்கொள்ளும் நீண்ட குளிர் உறக்கத்திற்கு தான் ஹைபர்னேஷன் என்று பெயர்.

அதுவே குளிர் ரத்த உயிரினங்கள் கோடையில் மேற்கொள்ளும் கோடை உறக்கத்திற்கு

எஸ்டிவேஷன்(estivation) என்று பெயர். அதுவே பூச்சிகள் மேற்கொள்ளும் நீண்ட உறக்கத்திற்கு டயாபாஸ்(diapause) என்று பெயர்.

இந்த மூன்றும் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளும் உறக்கம்,அதுவே மிகச்சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளும் உறக்கத்திற்கு பெயர் டோர்போர்(torpor).இது காலையில் தூங்கி இறவில் எழுவது அல்லது இரவில் தூங்கி காலையில் எழுவது போன்றது இதனை சாதரணமாக கால் செண்டர் பார்டிகளும், மனிதர்களும் செய்வது தான்.

ஆனால் ஹைபர்னேஷன்,எஸ்டிவேஷன், டயாபாஸ் எல்லாம் சில மாதங்கள் தொடர்ந்து உணவின்றி தூங்குவது, இது மனிதருக்கு சாத்தியமில்லாத ஒன்று!அந்த உயிரினங்களின் ஜீன்களின் இதற்கான தகவல்கள் பொதிந்துள்ளன. தாவரங்களிளும் உண்டு ஆனால் அது விதைகளுக்கு மட்டுமே, தேவையான ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து விதை முளைக்கும் தன்மை இழந்து விடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் கிடைக்கும் காலம் வரைக்கும் உயுருடன் விதை இருக்க கடினமான மேல் தோலுடன் விதை இருக்கும்,இந்நிலைக்கு டார்மன்சி என்பார்கள்,அத்தகைய விதைகளுக்கு டார்மண்ட்(dormant) விதை எனப்பெயர்.எனவே தான் விதைக்கும் முன்னர் தண்ணீரில் சில விதைகளை நனைத்து வைத்து விதைப்பார்கள்.

ஏன் இந்த நீண்ட உறக்கம்?

கோடை/குளிர் என்ற இரு கால நிலையிலும் நீர்/உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாடும், புற வெப்பம் உடல் வெப்ப நிலையை விட அதிகம்/குறைவு ஆவதால் ஏற்படும் சூட்டினை/குளிர்ச்சியை தாங்கும் திறன் இல்லாமை மேலும் மனிதனை போன்று ஏசி/ஹீட்டர் போட்டுக்கொண்டு வாழிடத்தின் தட்ப வெப்பத்தினை கட்டுப்படுத்தும் வசதி விலங்குகள்/பூச்சிகளுக்கு இல்லாமையால் இயற்கையாக அமைந்த தகவமைவே இந்த நீண்ட உறக்கம்.

எப்படி நீண்ட உறக்கதிற்கு தயாராவது?

குளிர்/கோடை காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும் ,இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும்,இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கும்.

அவ்வாறு தேவையான கொழுப்பு சேமிப்பை முடித்ததும் எதிரிகள் வராத பாதுகாப்பான ஒரு இடத்தினை தேர்வு செய்து உடலினை சுருட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்து விடும்.இவ்வாறு தூங்கும் போது கிட்டத்தட்ட இறந்தவை போன்றே காணப்படும், உடனே எழுந்திருக்க முடியாது, எழுந்தாலும் நடக்கவோ ஓடவோ முடியாது இந்த நிலையில் எதிரிகள் கண்ணில் பட்டால் எளிதாக கொத்துக்கறி ஆகிவிடும்.

நீள் உறக்கத்தின் போது இதய துடிப்பு,ரத்த ஓட்டம்,சுவாசம் ஆகியவை மிகக்குறைந்த அளவே நடக்கும் உடல் வளர்சிதை மாற்றங்களும் இருக்காது.கிட்டத்தட்ட சேப் ம்னோடில் உயிரினை உடலில் தக்க வைத்துக்கொள்ளும் அளவுக்கே உள் உறுப்புகள் செயல்படும். குளிர் காலத்தில் புற வெப்பம் 30-40 டிகிரி இருந்தால் அதே வெப்ப நிலைக்கு உடலினை கொண்டு வரவே இந்த செயல்பாடுள்.சாதாரணமாக வெப்ப ரத்த உயிரினங்களின் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும்.

குளிர் ரத்த உயிரினங்கள் நிலையான உடல் வெப்பத்தினைக்கொண்டிருக்காது புற வெப்பம் 100 என்றால் அவையும் 100க்கு போகும் ,60 என்றால் அவையும் 60க்கு போகும், ஆனால் மிக மோசமான பருவக்காலத்தில் இப்படி உடல் வெப்பத்தினை அடிக்கடி மாற்றிக்கொண்டும், உணவு வேட்டைக்கு போவதும் சாத்தியப்படாது என்பதால் குளிர் ரத்த உயிரினங்களும் கோடையில் இந்த உறக்கத்தினை மேற்கொள்கின்றன.

நீள் உறக்கம் கொள்ளும் சில உயிரினங்களின் பட்டியல்:

குளிர் ரத்த உயிரினங்கள்:

தேரை

ஆமை

பல்லி

பாம்பு(பெரும்பாலும் பாலைவன பாம்புகள்-ராட்டில் ஸ்னேக்)

பூச்சிகள்:

தேனீ

வெப்ப ரத்த உயிரினங்கள்:

சிப்மங்க்

லெமுர்

கரடி

ஹேம்ஸ்டர்

அணில்

கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்!

மனிதரில் இத்தகைய நீள் உறக்கம் சாத்தியமில்லாது போனாலும் இதிகாசத்தில் இது போன்ற நீள் உறக்கம் கொண்ட ஒருவர் உண்டு பெயர் கும்ப கர்ணன்(என்னைப்பொருத்தவரை கும்பகர்ணன் மனிதனே). ஆறு மாதம் உறக்கம் ஆறு மாதம் விழிப்பு என வாழும் வசதிக்கொண்டவர்! இதிகாசங்கள் அறிவியல்ப்பார்வை கொண்டது என ஜல்லி அடிப்போருக்கு உதவலாம் இது!

21 comments:

புருனோ Bruno said...

வவ்வால் அவர்களே வருக

அது சரி

இவ்வளவு நாளா எங்கே சென்றிருந்தீர்கள்

நீங்கள் இல்லை என்றாலும், உங்களைப்போலவே உங்கள் அளவு “புத்திகூர்மையுடனும்” “நேர்மையுடனும்” ஒருவர் டிவிட்டரின் விவாதம் புரிந்து கொண்டிருக்கிறார் :) :)

வேந்தன் said...

நல்ல அறிவியல் பதிவு.
//கூடவே வவ்வாலும் நீள் உறக்கம் கொள்ளும்!//
ம்ம்ம்...ஒன்டரை வருடம்!!!
தொடர்ந்து எழுதுங்கோ.... :)

gulf-tamilan said...

welcome back !!!!

கல்வெட்டு said...

வவ்வால் தூங்குவதும் எழுந்திருப்பதும் சூழ்நிலையின் தூண்டல். புரிஞ்சு போச்சு சாமியோவ். :-)) ஆமா வவ்வால் இப்ப எந்திரிச்சாச்சா? குளிர்காலமாச்சே?

கையேடு said...

அட.. வந்துட்டீங்களா துயிலெழுந்து.. :)

வவ்வால் said...

வாங்க புருனோ,வணக்கம்,

நாம எல்லாம் இணைய வெளியில் திரியும் நாடோடிகள் ஆச்சே அதான் , அப்போ அப்போ அந்தகார இருளில் காணமல் போய்விடுகிறோம்.

//உங்கள் அளவு “புத்திகூர்மையுடனும்” “நேர்மையுடனும்” //
என்னை வச்சு காமெடி கீமெடி செய்யலையே!

நல்லதையே நினைக்கிறேன்!
----------
வேந்தன்,
நன்றி, வணக்கம், தொடர்ந்து உலாவ முயல்கிறேன்!
-----------------------
கல்ப் தமிழன்,

நன்றி! நானும் கூட ஒரு கல்ப் தமிழன், கல்ப் அடிப்பேனாக்கும்!
--------------------------

கல்வெட்டு!

நன்றி!.வணக்கம்,
எல்லாம் இயற்கையின் திருவிளையாடல் தானே!

குளிர் காலம் தான் ஆனால் விட்டுப்போச்சு குளிர், ஒல்ட் மங் என்ற திரவம் இருக்க குளிர் என்ன செய்யும்! :-))
-------------------------------
கையேடு,
நன்றி,வணக்கம், துயிலெழ்ந்த வேகத்தில் துயில் கொண்டாலும் கொள்வேன்!

TBCD said...

வாங்க ! வாங்க ! நீற் உறக்கம் முடிந்து வலையில் மீண்டும் ஒரு வட்டம் அடிக்க விண்ணப்பம் வைக்கின்றேன்.

முடிஞ்சா டுவிட்டர் ஒளியில் இணைக !

Unknown said...

கும்பகர்ணன் ஜல்லிக்கு நன்றி!

Sowmya said...

Very nice to see u back in action :)

..

வால்பையன் said...

பிறந்த புதிதில் மனித!? குழந்தைகள் பதினெட்டிலிருந்து இருபது மணி நேரம் வரை தூங்கும்!

குமரன் (Kumaran) said...

வவ்வால்,

எங்க ஊருல எல்லா மரமும் (கிருஸ்துமஸ் மரங்களைத் தவிர மற்றவை) இலைகளை உதிர்த்துவிட்டு இப்போது மொட்டையாக நிற்கின்றன. எதற்காக குளிர்காலத்தில் இம்மரங்கள் இலைகளை உதிர்த்து நிற்கின்றன?

அவையும் நீள் உறக்கம் கொள்கின்றனவா? அதற்கு ஆங்கிலத்தில் என்ன பெயர்? என்ன விதமான உயிர் நிகழ்வுகள் அந்த நேரத்திலும் நிகழும்?

தென்றல் said...

என்னடா ரொம்ப நாளா ஆளை காணோமே...புருனோகிட்டதான் கேக்கணும் நினைச்சேன் ;)

வாங்க...வாங்க..! உங்களை இங்கே மீண்டும் 'சந்தித்ததில்' மகிழ்ச்சி!!

மாயன் said...

வவ்வால்... வாருங்கள்... உங்களை ஏதோ பருந்து தூக்கி சென்று விட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்...

ராஜ நடராஜன் said...

உங்களை குசலம் விசாரிக்க இத்தனை பேர் இருக்கிறார்களா!!!தலைக்குள் இருப்பதை உடனடியாக பதிவுக்குள் கொண்டு வரும் அவகாச நேரம் இல்லாமல் டிராப்ட்டில் உற்ங்குகிறது.காந்தி பட இயக்குனர் ரிச்சர்ட் ஆட்டன்பரோவின் தம்பி டேவிட் ஆட்டன்பரோ The living mammals என்ற ஒவ்வொன்றும் 50 நிமிடம் என 10 சீரியல் சொல்லியுள்ளார்.அதில் ஒன்று உங்க கரடி.ஆனால் டேவிட் இவ்வளவு விபரமா கரடி சொல்லாமல் விசுவலா எப்படி அண்டார்டிகா கரடி குளிர் குறைந்த நாட்களில் இலை,தழை,அசைவம்,மீன் என்று கிடைப்பதையெல்லாம் உண்டு குண்டாகி விட்டு 6 மாத கும்பகர்ணம் செய்கிறது என்று சொல்லியிருந்தார்.இந்தப் பதிவுக்கு தேவையான விசுவல் The Living Mammals.

The Living Mammals clips could be viewed in You Tube too!

படைப்பின் மர்மங்களா?டார்வினை நோக்கிய பாதையா என்ற விவாதங்களுக்கும் அப்பால் நேரில் பார்த்திராத IR camera மூலமாக மட்டும் என்ற விஞ்ஞானத்தினூடாக உயிரினங்களின் உணவுத் தேவையென்ற வாழ்தல் என்ற அரிய தொகுப்பு.