தெரியும் ஆனா தெரியாது.
உலகத்தில நிறைய பிரபலமான , பெரியதும் சிறியதுமா ஏகப்பட்ட கம்பெனி இருக்கு, சிலப்பெயர் பார்த்ததும் புரிஞ்சுடும் உதாரணமாக மன்னார் அன்ட் கம்பெனி . பல நிறுவனங்கள் ,வணிகப்பெயர்கள் கேட்க நல்லா இருக்கும் ஏன் அப்படி வச்சாங்க , அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியாது. எல்ஜி டீவி எல்லாருக்கும் தெரியும் எல்ஜி என்றால் என்னனு அவ்வளவாக தெரியாது.
எனக்கும் தெரியலை சரினு கூகிளாண்டவரிடம் முறையிட்டு தேடி தெரிஞ்சுக்கிட்டேன்.அப்படியே கொஞ்சம் கொஞ்சமா நிறைய தேடி சேர்த்து வச்சுட்டேன்(ஏ யப்பா சொத்துலாம் இல்லை வெறும் பெயர்களை தான்பா) சரி நமக்கு தெரிஞ்சா போதுமா என்று உங்க கூடவும் பகிர்ந்து கொள்கிறேன். பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.(இந்தப்பதிவு எல்லாம் தெரிந்தவர்களுக்காக அல்ல)
நிறைய நிறுவனங்கள் இருக்கு ஆனால் இங்கே ஒரு A to Z பதிவாக இப்போ போட்டு இருக்கேன், மற்றதை பிறகு பார்ப்போம்.
A TO Z LIST:
#ADIDAS= Adolf (Adi) Dassler.ஜெர்மனிய சேர்ந்த இவர் பெயரையே சுருக்கி ஷீ கம்பெனிக்கு வச்சுக்கிட்டார்.
#BSA CYCLE= BIRMINGHAM SHORT ARMS. இங்கிலாந்துல துப்பாக்கி தயாரிச்சுக்கிட்டு இருந்த கம்பெனி, இரும்பு அதிகமா இருக்குனு சைக்கிள் தயாரிச்சாங்க, இந்திய விடுதலைக்கு அப்புறமா டிஐ (டியுப் இன்வெஸ்ட்மென்ட்) கிட்டே வித்துட்டு போய்டாங்க.இது அமால்கமேஷன் குருப்போட ஒரு நிறுவனம்.அம்பத்தூர்ல இருக்கு.
#CEAT TYRES = Cavi Electrici Affini Torino (Electrical Cables and Allied Products of Turin,ITALI) இத்தாலில வையர் தயாரிச்சுக்கிட்டு இருந்தவங்க டயருக்கு மாறிட்டாங்க!
#DABUR= DR.BURMAN. கொல்கத்தாவை சேர்ந்த டாக்டர் எஸ்.கே.பர்மன் , அவர் பேரை சுருக்கி டாபர் னு ஒரு ஆயுர்வேதிக் மருந்து கம்பெனி ஆரம்பித்தார்.
#EID PARRY= EAST INDIA DISTILARIES PARRY. அயர்லாந்தை சேர்ந்த தாமஸ் பாரி இந்தியாவில சர்க்கரை ஆலை ஆரம்பித்தார்(முதல் ஆலை) அப்போதைய ஆங்கிலேயர்களுக்கு சரக்கு தேவைப்பட சாராய ஊரல் ஆலையும் போட்டார் அது தான் இது. விடுதலைக்கு பின் பலர் கை மாறி இப்போது அமால்கமேஷன் குருப்பிடம் உள்ளது.
#FANTA= FANTASTIC. பேன்டாஸ்டிக்கா பேரு வைக்கணும்னு யோசித்து எதுவும் சரிப்படாம கடைசில அதையே சுருக்கி ஃபேண்டா னு பேரு வச்சுடுச்சு கோகா கோலா நிறுவனம்.(இந்தப்பதிவ படிச்சதும் நீங்களும் ஃபேண்டா னுசொல்லணும்... சொல்வீங்க)
#GMR CONSTRUCTIONS = G.MADHUSUDAN RAO, ஆந்திராவை சேர்ந்த இவர் பெயரையே சுருக்கி கம்பெனிக்கு வச்சுக்கிட்டார். டெல்லி டேர் டெவில்ஸ் அணி அதிபர்.
#HORLICKS = James and William Horlick, அப்படிங்கிற அண்ணன் தம்பிங்க ரெண்டு பேரு(1+1=2 மட்டுமே) அமெரிக்காவில உருவாக்கின மால்டெட் பானத்திற்கு அவங்க குடும்ப பேரையே வச்சுக்கிட்டாங்க. அப்போது எல்லாம் நைட்லதூக்கம் வராதாவங்க தூக்கம் வர ஹார்லிக்ஸ் குடிப்பாங்களாம்.(இப்போ என்னடான குடிச்சா சுறு சுறுப்பாக இருக்கலாம் சொல்றாங்க)
#INTEL= INTERGRATED ELECTRONICS, அமெரிக்கால மிகேல் மூர், நாய்ஸ் அப்படினு ரெண்டு பேரு சேர்ந்து ஆரம்பிச்ச கம்பெனிக்கு மூர் அன்ட் நாய்ஸ்னு பேரு வச்சுப்பார்த்தாங்க படிக்கும் போது மோர் நாய்ஸ் போல இருக்குனு, அப்புறமா, ஐசி அ குறிக்கிறாப்போல இன்டெல் னு வச்சுக்கிடாங்க.
#JCB EARTHMOVER= JOSEPH CYRIL BAMFORD,இங்கிலாந்த சேர்ந்தவர் இவர் பேரையே சுருக்கி கம்பெனிக்கு வச்சுட்டார்.
#KONICA= Konishiroku Kogaku, ஜப்பானை சேர்ந்த "Konishiya Rokubeiten," என்பவர் அவர் பேர கோனிஷிரோகு என்று சுருக்கி கோனிஷிரோ கோககு னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சார். அப்படினா கோனிஷிரோ ஆப்டிகல்ஸ்னு அர்த்தம். அதையே சுருக்கி கோனிகா னு வியாபாரம் பண்ண ஆரம்பிச்சார்.
#LG ELECTRONICS= LUCKY GOLD STAR ELECTRONICS,கொரியாவை சேர்ந்த லக்கி எலக்ட்ரானிக்ஸ்(முன்னனிப்பதிவர் லக்கி தான் பினாமியா?) மற்றும் கோல்ட் ஸ்டார் ஹோம் அப்ளையன்ஸ் என்ற இரண்டு கம்பெனி சேர்ந்து எல்ஜி எலெட்ரொனிக்ஸ் கார்ப்ரேஷன் ஆகிட்டாங்க.
#MITSHUBISHI= MITSHU= THREE,BISHI=WATER CHESNUT=ARROW ROOT,DIAMOND SHAPED FLOWER, ஜப்பானிய மொழில மிட்ஷு ன முன்று என்று அர்த்தம் அங்கேலாம் மூனாம் நம்பர் லக்கி நம்பராம். ரிஷி என்பது சொல் புனைவின் போது பிஷி ஆகிடும் அப்படி ஆவதற்கு ரெண்டக்குனு சொல்றாங்க, பிஷி =நம்ம ஊரு அரரொட்டி மாவு கிழங்கு , அல்லது வைர வடிவமாம். எல்லாம் சேர்த்து கம்பெனிக்கு பேரு வச்சுட்டாங்க.(ரூம் போட்டு யோசிப்பாங்களோ)
#NIKON= NIPPON KOKAGU= இதுவும் கோனிகா கதைப்போல தான் ஜப்பானிய மொழில JAPPAN OPTICALS அதை சுருக்கி நிக்கோன் என வச்சுக்கிட்டாங்க, இதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு அப்போ ரொம்ப முன்னணில ஜெர்மனிய சேர்ந்த நிக்கோர் என்ற கேமரா இருந்ததது அது போல பேரு வைக்க இப்படி ஒரு ஐடியாவாம்.ஜெர்மன் காரன் கேசுலாம் போட்டானாம் அப்போ.
#ONIDA = MUCH EXPECTED IN LATIN, நம்ம ஊரு கொம்பு மொளைச்ச டீவி, லத்தின்ல அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட பொருள்னு அர்த்தம்.
#PANASONIC= ALL SOUND ,ஆடியோ கருவிகளை மட்டுமே ஆரம்பத்தில தயாரிச்சாங்க எனவே நாங்க சவுண்ட் பார்ட்டினு காட்டுறாப்போல பேரு வைக்க பாண் = அனைத்தும் சோனிக் = சவுண்ட், சேர்த்து பேரு வச்சுட்டாங்க.
#QANTAS AIRLINES= "Queensland and Northern Territory Aerial Services".அவுஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ விமான கம்பெனி, மொத்தமா சுருக்கி காண்டாஸ் னு பேரு வச்சுட்டாங்க(சென்னைல காண்டா இருக்கான்னு சொல்வாங்களே அது இதான் போல). செல்லமா பறக்கும் கங்காருனு சொல்வாங்களாம்.
#RAYBAN= UV "RAY BAN"NED, பாஷ் அன்ட் லாம்ப் நிறுவனம் அல்ட்ரா வயலட் கதிரை தடுக்கும் குளிர் கண்ணாடி தயாரிச்சப்போ அதையே குறிக்கும் வண்ணம் ரேபான் என்று பேரு வச்சாங்க.
#SAMSUNG = சாம்= 3, சங்= நட்சத்திரம் அதாவது "THREE STARS IN KORIYAN" கொரியாவிலயும் மூன்றாம் நம்பர்னா லக்கியாம்.
#TVS COMPANY= TRICHUR VENGAGARU SUNDARAM AYYANGAR COMPANY, நம்ம ஊரு வண்டி டீவிஎஸ் , அவர் பேரையே சுருக்கி வச்சது.
#UNINOR = UNITECH WIRELES AND TELNOR, இந்தியாவை சேர்ந்த யுனிடெக் கும் நார்வேயை சேர்ந்த டெலிநார் மொபைல் கம்பெனியும் கூட்டணி அதனால யுனிநார் னு பேரு.(இந்த போன்ல பேசினா நார் நாரா கிழிக்கலாம் போல)
#VIDEOCON = VENUGOPAL DHOOT, கம்பெனி ஓனர் அவர் பேர நினைவு படுத்துராப்போல இருக்கணும்னு அவர் பேருல வர எழுத்துக்களையே கலக்கி போட்டு ஒரு பேர உருவாக்கினார் அதான் வீடியோகான், இப்படி வார்த்தைகளை உருவாக்கிறதுக்கு பேரு அனாகிராம்.உலகிலேயே அதிகம் பிக்சர் டுயுப் தயாரிக்கும் நிறுவனம், சோனிக்கே லெட்,ல்எல்சிடி பேனல் இங்கே இருந்து தான் சப்ளை ஆகுது.
#WIPRO= WESRTEN INDIA PRODUCTS ,என்ற பெயரில் குடும்ப தொழிலாக சமையல் எண்ணை ஆலை வைத்திருந்தாங்க,எண்ணை, வனஸ்பதிலாம் விற்பனையாச்சு.பின்னர் அசிம் பிரேம்ஜி அதையே கணினி நிறுவனம் ஆக்கிட்டார்.
#XEROX = DRY IN LATIN, உலர்ந்த என்ற வார்த்தை வருமாறு வைக்க இப்படி வச்சுட்டாங்க, ஏன் எனில் அப்போலாம் ஜெராக்ஸ் இது போல ட்ரையாக எடுக்க முடியாதாம் உலகின் முதல் வகை இதுவே .வேறு எந்த கம்பெனியும் ஜெராக்ஸ் என்ற பெயரையே பயன்படுத்த முடியாது. அவங்க எல்லாம் போட்டொ காபியர்னு தான் சொல்லிக்கணும்.
#YAHOO= YET ANOTHER HIERARCHIAL OFFICIOUS ORACLE,இதை ஜெர்ரி யங் இப்படி சுருக்கி வச்சார்னு சொல்றாங்க, ஆனால் உற்சாகமாக யாஹூ னு கத்துவதுனும் சொல்றாங்க.ஜொனாதன் ஸ்விப்ட் நாவலான கலிவர்ஸ் டிராவல்ஸ் ல வர குள்ள மனிதர்கள் யாஹூ னு கத்துவாங்களாம். நம்ம ஊரு இந்தி படத்துல ஷம்மி கபூர் யாஹூனு கத்துற பார்த்து இருக்கேன்.
#ZANDU BALM= குஜராத்ல ஸண்டு னு ஆயுர்வேத மருத்துவர் இருந்தார் அவரோட பேரன் ஜகத் ராம் தாத்தாவின் மருத்துவ குறிப்புகளை வச்சு 1910 ல தாத்தாவின் பேருல zandu pharmaceuticals என்று ஆயுர்வேத மருந்து கம்பெனி ஆரம்பிச்சார் .அவங்க தயாரிச்ச வலி நிவாரணிக்கு ZANDU BALM னு பேரு வைக்காம வேறென்ன வைப்பாங்க.
ஹி..ஹி இந்தப்பதிவ படிச்சதும் ZANDU BALM தேவைப்படுதுனுலாம் சொல்லப்படாது
2 comments:
சுயவிளக்கம்:
ஹி..ஹி இது ஆறிப்போன வடை தான், திரட்டில இப்போ தான் சேர்க்கிறேன் :-))
very nice...
by- Maakkaan
Post a Comment