Wednesday, November 09, 2011

அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?





அப்துல் கலாம் சொல்வது போல அணு உலைக்கலன் பாதுகாப்பானதா?


கூடன்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலை அழுத்த நீர் அணு உலை ஆகும் ( Pressurized water reactors (PWRs) , இதன் முக்கிய கலன், அணு உலை அழுத்த கலன் (  reactor pressure vessel )எனப்படும், இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலினால் ஆனது.இதற்குள் தான் யுரேனியக்கோர் எல்லாம் இருக்கும். இந்த கலனில் இரண்டு வெல்டிங் இணைப்புகள்  கோர் பெல்ட் பகுதியில் இருக்கும்.

//The original design of reactor pressure vessel (RPV) did not contemplate welds in the core region. However, the vessel now used has two welds in the core region. The effect of lifetime neutron fluence on these welds was evaluated and found to be acceptable.//

கூடன்குளம் அணு கலன் பற்றிய இந்திய அணுசக்தி துறையின் தளம்:

http://www.constructionupdate.com/News.aspx?nId=Kncid8W53rVC5RiVKpBKog==

வெல்டிங்க் செய்யாமல் கலனை இணைக்க முடியாது, அவ்வாறு இணைக்கும் பகுதியில் பற்ற வைப்பு உலோகம், மற்றும், கலனின் அடிப்படை உலோகம் என இரண்டு உலோகம் இருக்கும். எனவே இந்தப்பகுதி தான் வலிமை குறைந்த பகுதியாகும்.

அணு உலை செயல்ப்படும் போது வெளிப்படும் நியுட்ரான்கள் தொடர்ந்து இணைப்பில் தாக்குவதால் உலோகப்பகுதி வலுவிழக்கும் இதற்கு எம்பிரிட்டில்மெண்ட் என்பார்கள். அதாவது கடினத்தன்மையை இழப்பது, எனவே காலப்போக்கில் அழுத்தம் தாங்கும் திறன் குறையும்.

பற்றவைப்பு பகுதி படம்:



//Embrittlement

Reactor pressure vessels, which contain the nuclear fuel in nuclear power plants, are made of thick steel plates that are welded together. Neutrons from the fuel in the reactor irradiate the vessel as the reactor is operated. This can embrittle the steel, or make it less tough, and less capable of withstanding flaws which may be present. Embrittlement usually occurs at a vessel’s “beltline,” that section of the vessel wall closest to the reactor fuel.//

அழுத்த நீர் அணு உலைகளில் தான் இந்த நெகிழ்வு தன்மை அதிகம் ஏற்படும், கொதிநீர் அணு உலைகளில் குறைவான பாதிப்பே ஏற்படும்.

//Pressurized water reactors (PWRs) are more susceptible to embrittlement than are boiling water reactors (BWRs). BWR vessels generally experience less neutron irradiation and therefore less embrittlement. //

இந்த உலோக நெகிழ்வு தன்மையின் பாதிப்பு மிக அதிக அளவில் PWRs இல் அதிக எதிர் விளைவுகளை உண்டாக்கும் ஏன் எனில் வெப்ப அழுத்த அதிர்ச்சி, என்பது விபத்துக்காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டு, எவ்வாறு எனில், திடீர் என அணு உலையில் குளிரீட்டும் அமைப்பு செயல்படவில்லை எனில் விபத்தினை தடுக்க அதிக அளவில் கடல் நீர் உள்ளே பாய்ச்சப்படும். உதாரணம் புக்‌ஷிமா அணு உலை சம்பவம்.

இப்படி குளிர்ந்த நீர் திடீர் என உள்ப்பாயும் போது உலோகம் விரைவாக குளிரும், இதனால் விரைவாக சுருங்கும், அதே நேரம் தொடர் யுரேனியப்பிளவையால் வெப்பம் உண்டாகி அழுத்தம் அதிகரிக்கும், இப்படி ஆவதால் உலோகத்தின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். ஏற்கனவே நெகிழ்வான இணைப்புகள்,அதிக அழுத்தம், உலோகத்தின் மீது ஏற்படும் வெப்ப அழுத்தம் என மூன்றும் சேர்ந்து அணு உலைக்கலன் வெடிக்கவோ,வீறல் விடவோ செய்யும். இப்படித்தான் புக்‌ஷிமாவில் அணு உலை வெடித்தது.

இதனை விளக்கும் யூடூயுப் வீடியோ:


விடியோ1:





விடியோ2;





//Another reason reactor vessel embrittlement is more of a concern for PWRs is because PWRs may experience pressurized thermal shock (PTS). PTS can occur under some accident scenarios that introduce cold water into the reactor vessel while the vessel is pressurized. Introduction of cold water in this manner can cause the vessel to cool rapidly, resulting in large thermal stresses in the steel. These thermal stresses, along with the high internal pressure and an embrittled vessel, could lead to cracking and even failure of the vessel.//

அணு உலைகளில் அடுத்து வரும் தொழிற்நுட்ப குறைபாடு:

கண்ட்ரோல் ராட் செலுத்தும் பகுதி,அதற்கான நாசில்கள் ஆகியவையும் அணு உலைக்கலனுடன் வெல்டிங் செய்தே இணைக்கப்பட்டிருக்கும். அங்கும் நியுட்ரான் தாக்குதலால் நெகிழ்வு,மற்றும் நீரால் ஏற்படும் உலோக அரிப்பு ஆகியவை ஏற்பட்டு அணுக்கசிவு ஏற்படும். வலிமை குறைந்த பகுதி அதிக அழுத்தகாலத்தில் வெடித்து சிதற வாய்ப்புள்ளது.

//Control rod drive mechanism nozzles and other vessel head penetration nozzles welded to the upper reactor vessel head are subject to another phenomenon – primary water stress corrosion cracking. The issue is a potential safety concern because a nozzle with sufficient cracking could break off during operation. This would compromise the integrity of the reactor coolant system pressure boundary – one of three primary barriers that protect the public from exposure to radiation. The break may also result in the ejection of a control rod, which could damage nearby components.//

அமெரிக்காவில் செயல்படும் அணு உலைகளின் பாதுகாப்பினை வரைப்படுத்தவும் கண்காணிக்கவும் அமெரிக்க அணு உலை ஒழுங்கு முறை ஆணையம் உள்ளது. அவர்கள் ஆய்வின் படி 2001 இல் 3 மைல் தீவு உலை,கிரிஸ்டல் ரிவர் உலை, வடக்குஅன்னா உலை ஓசொனி உலை ஆகியவற்றில் கண்ட்ரோல் ராட் செலுத்தும் இடத்தில் கதிரியக்க கசிவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

//Inspections by licensees during the fall of 2001 revealed vessel head penetration nozzle cracks at Three Mile Island Unit 1, Crystal River Unit 3, North Anna Unit 1, and Oconee Unit 3.//

//Inspections performed at several PWRs in 2002 including those performed at the Davis-Besse Nuclear Plant, found leakage and cracks in vessel head penetration nozzles or J-groove welds that have required repairs or prompted the replacement of the vessel head. As a result of continuing concerns regarding licensee inspection programs in this area, the NRC issued an Order on February 11, 2003, to all PWR licensees in the U.S. The Order requires specific inspections of the vessel head and associated penetration nozzles based on their susceptibility to primary water stress corrosion cracking.//

இதன் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆய்வில் 26 அணு உலைகளில் மேற்குறிப்பிட்ட அணு உலைப்பகுதியில் கசிவு கண்டறியப்பட்டுள்ளது.

//Twenty-six units were identified by the Electric Power Research Institute's Materials Reliability Program as having a high susceptibility to nozzle cracking. Inspections by licensees performed after issuance of the latest bulletin and order, revealed nozzle or J-groove weld cracks and/or leaks//

மேலும் டேவிஸ் பேஸ் அணு உலையில் நாசில்ப்பகுதி அருகில் ஒரு கால்ப்பந்து அளவுக்கு ஓட்டையும், ஒரு வெடிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

//In early March of 2002, during an inspection prompted by Bulletin 2001-01, Davis-Besse Nuclear Power Station identified a football-sized cavity in the units reactor vessel head. The cavity was next to a leaking nozzle with a through-wall crack and was in an area of the vessel head that had been covered with boric acid deposits for several years. Inspections at Oconee Unit 1 and Millstone Unit 2 also identified nozzle cracking. The discovery of leaks and nozzle cracking at Davis-Besse and other PWR plants called for more effective inspections of reactor pressure vessel heads and associated penetration nozzles.//

அமெரிக்க அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்தின் சுட்டி:http://www.nrc.gov/reading-rm/doc-collections/fact-sheets/prv.html

இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அணு உலை, பாதுகாப்பு அம்சங்கள் அதிகம், சிறப்பாக பராமரிப்போம் என்றெல்லாம் கூடன்குளத்தில் அதிகாரிகள் சொல்கிறார்கள். அவை  நம்பும் வகையில் இல்லையே.

சிறப்பாக செயல்படும் அமெரிக்க அணு உலைக்கூடங்களிலேயே பராமரிப்பு நிலை இது தான், அப்படி எனில் இந்தியாவில் என்ன கதி என்று யோசித்தால் மயக்கம் வருகிறது.

என்ன தான் சிறப்பாக  வடிவமைத்து ,பாதுகாப்புடன் பராமரித்தாலும் அணு உலைக்கலன்களுக்கு என்று சில கட்டுமான பலவீனங்கள் உள்ளது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதையே இவைக்காட்டுகின்றன.இதை எல்லாம் அறிந்த அப்துல்கலாம் போன்றவர்கள்.தீங்கு இல்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

பின்குறிப்பு:

தமிழில் மட்டும் எழுதி சுட்டியைப்போட்டால் சில அறிவுஜீவிகள் சுட்டியைப்படிக்காமல் மீண்டும் வந்து கேள்விகேட்டு இம்சையைக்கூட்டுது, அதான் மேஜர் சுந்தரராஜன் போல தமிழ் & ஆங்கிலம்( தளத்தில் இருந்து காபி& பேஸ்ட்) என அடுத்து அடுத்து போட்டாச்சு, சுட்டியும் இருக்கு போய் தெளிவா படிங்க!

14 comments:

thiagu1973 said...

//http://www.constructionupdate.com/News.aspx?nId=Kncid8W53rVC5RiVKpBKog==//

இந்த சுட்டி இந்திய அணுசக்தி துறையின் தளமா தல

thiagu1973 said...

தல வணக்கம்

சும்மா வெல்டு இருக்குன்னாலே அதில பலம் இல்லைன்னு சொல்லகூடாது இன்னும் டீடெய்லா சொல்லுங்க கீழ்கண்டவற்றில் எத்தனை வகை வெல்டுகள் இருக்கு பாருங்க்

http://www.roymech.co.uk/Useful_Tables/Form/Weld_strength.html

இதில அங்க இருப்பது எந்த வகை வெல்டுன்னும் சொல்லிட்டீங்கன்னா விசயம் மிகவும் தரவாகிடும்

நான் உங்க பாயிண்ட மறுக்கவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்

வவ்வால் said...

தல வாங்க,

அந்த சுட்டி இந்திய அணுசக்தி கழக தளத்தில இருந்த லின்க் புடிச்சிப்போனது தான். எனவே அதுல இருக்க செய்தியை மட்டும் பாருங்க, அணு உலைக்கலனில் வெல்டிங்க் இருக்கா , அது போதுமே. வேணும்னா வெல்டிங்க் பண்ண படம் போடட்டுமா?

-----------------------

நிறைய வகைல வெல்டிங்க் பண்றாங்க எந்த நாடு, அதை தயாரிக்கிற நிறுவனம் பொறுத்து மாறும், உ.ம் வெஸ்டிங்க் ஹவுஸ் ஒரு மாதிரி வெல்ட் செய்யும் ,அரேவா பிரெஞ்ச் நிறுவனம் ஒரு மாதிரி செய்யும்.

உங்க சுட்டிய பார்க்க தேவையே இல்லை.
பொதுவா சொல்றேன் பியுஷன் வெல்டிங்க் டைப்ல , டிக், லேசர் பீம், எலெக்ட்ரான் பீம் ,அப்புறம் ரெசிச்ஸ்டன்ட் வெல்டிங்,ஸ்பாட் வெல்டிங் என பலவும் பயன்ப்படுத்துறாங்க, கூடங்குளத்துல எந்த்அ வகைனு தெரியலை. நான் பார்த்த படத்தில வெளிப்புறமா சீம் வெல்டிங்க் தெரியுது.(அது வெல்டிங்க் பண்ற பேட்டர்ன்)

ஆனால் எந்த வகை வெல்டிங் ஆக இருந்தாலும் அங்கே எம்பிரிட்டில்மென்ட் விளைவு உண்டு.

ராஜ நடராஜன் said...

Hi!எப்படியிருக்கீங்க?இது வரை கூடங்குளம் அணு உலைக்கலன் பற்றி எந்த விதமான கருத்தும் இல்லாமல் இருந்தேன்.காரணம் தெரியாததை தெரிந்த மாதிரி காட்டிக்கொள்ளக்கூடாது என்பதாலும் ஜார்ஜ் புஷ் இந்திய அணு ஒப்பந்த காலத்தில் ஆதரவு நிலை கொண்ட காரணத்தாலும் கூட.தற்போது கூடங்குளம் விவகாரம் மக்கள் போராட்டம்,ஜப்பான் அணு உலை விபத்து,உலக அரசியல் மற்றும் வர்த்தக போட்டி,இலங்கையென்ற புதிய முள்,இந்தியாவின் மின்சாரத் தேவை மற்றும் எதிர்காலம் என்று பலவற்றை உள்ளடக்கிய விடயமாகி விட்டது.நேற்று விகடனில் அப்துல் கலாமின் நீண்ட தமிழ் கருத்தாக்கத்தை முழுவதுமாக வாசிக்க நேர்ந்தது.India 2020 புத்தகம் வாசித்த நேரத்துக்கும் இப்போதைய இந்திய நடைமுறை யதார்த்தத்துக்கான இடைவெளிக்குமுள்ள வித்தியாசம் சரியாகவே புரிகிறது.அது போலவே அப்துல் கலாமின் கூடங்குளம் அணு உலை ஆதரவுக்கும் அவர் கூறும் 10 அம்சத்திட்டத்திற்கும் இடையேயான இடைவெளியும் மிக அப்பட்டமாகத் தெரிகிறது.தஞ்சை பெரிய கோயில்,கல்லணை ஒப்பீடாக தற்சமயம் கூடங்குளம் அணு உலைக்கலன் விவகாரத்தையும் சமன்படுத்துவதில் உள்ள சிக்கல் முந்தைய காலத்து அறிவியல் இயந்திர அறிவியலாகவும் தற்போது நியுக்ளியர் விஞ்ஞானமென வேறுபடுகிறது.

ராஜ நடராஜன் said...

கூகிளுக்கு பயந்துகிட்டு இரண்டாவது பின்னூட்ட தொடர்ச்சி:)....அப்துல்கலாம் குறிப்பிட்டதில் உறுத்திய முக்கியமான ஒன்று மக்கள் தேவை பூர்த்தி,நெடுஞ்சாலை வசதியெல்லாம் செய்து விட்டு கூடங்குளத்தை அமுல்படுத்தலாம் என்கிறார்.இங்கேதான் பிரச்சினை.திட்டமிடுதலில் இந்தியா vice versa.இடம் தேர்ந்தெடுத்த காலத்தே கூடங்குளம் அவசர கால மக்கள் அப்புறப்படுத்தலுக்கு வசதியாக முக்கியமாக சாலை நெரிசலற்ற நெடுஞ்சாலை என்பதை திட்டமிட்டிருக்க வேண்டும்.இந்திய சாலைகள் பற்றி No comments.அப்துல் கலாம் கூறும் 10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தி அணு உலை திறப்பதென்பது போகாத ஊருக்கு வழிகாட்டுற மாதிரி.அதே நேரத்தில் நமக்கு கூடங்குளம் போன்ற திட்டங்கள் தேவையில்லையென்றால் மின்சார சுயபூர்த்திகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது.நேற்று விகடனில் ஒருவர் பஹ்ரைன்ல உட்கார்ந்துகிட்டெல்லாம் கமெண்டுறாங்கன்னார்.துபாய்,பஹ்ரைன்லதான் கழுகுகள் அதிகமாக வானத்தின் உயரத்தில் பறக்கின்றன:)

வவ்வால் said...

ராஜ்,

கலாம் ஆதரவாக பேசி இருந்தால் தான் ஆச்சர்யப்படனும், அவர் என்னமோ இது வரைக்கும் அணுக்கொள்கைல எதிராப்பேசிக்கிட்டு இருந்தா போலவும், இப்போ இப்படி பேசிட்டாரேனு இங்கே மக்கள்,பதிவர்கள் உட்பட அனைவரும் கொந்தளிப்பது தான் வேடிக்கை..

போக்ரானில் அணு வெடிப்பின் மூலமே புகழ்ப்பெற்றவர், அதற்கே பாரத ரத்னா விருது. DRDO வில் பணிப்புரிந்த போது அவர் செய்த ,scramjet, hovercraft,titanium calipers ஆகிவற்றைப்பற்றை நம்மில் எத்தனைப்பேருக்கு தெரிந்து இருக்கும். அக்னிசிறகுகள் வந்த பிறகு தான் எனக்கும் தெரியும், பலரும் படித்திருந்தாலும் மறந்து இருப்பார்கள். அணு வெடிப்பின் மூலம் அடைந்த புகழைக்கொன்டே அந்த நூலும் விற்று தீர்த்தது, அப்போது ஏன் அணு ஆயுத ஆதரவாளரனா அவருக்கு அத்தனை பாராட்டு இந்த மக்கள் கேட்கலையே, எல்லாம் மூடத்தனமாக பீறிட்ட தேசப்பக்தி தான், இனிமே பாக்கிஸ்தான் நம்மளை பார்த்து பயப்படுவான்ல என்று பேசியவர்கள் ஏராளம்.

கலாம் எப்போதும் போல் அவர் அணு சக்தியின் ஆதரவாளராக இருக்கிறார். அவ்வளவே.

அவரை நம்பியது முட்டாள் தனம், அவரை விட்டா அம்மிக்கல்லுக்கும் அணு உலைக்கும் கூட ஒப்பீடு செய்து காண்பிப்பார் :-))

//10 அம்ச திட்டங்கள் செயல்படுத்தி அணு உலை திறப்பதென்பது போகாத ஊருக்கு வழிகாட்டுற மாதிரி//

நீங்க வேற அதெல்லாம் எளிதாக் செய்து விடலாம், உண்மையில் இப்படி ஒரு திட்டம் கொண்டு வரும் போது பல மக்கள் பயன்பாடு திட்டங்களூம் கொண்டு வரணும், நம்ம நாட்டில தான் கண்டுக்காம இருப்பாங்க. இப்போ என்னமோ கலாம் மெனக்கெட்டு திட்டம் போட்டு வாங்கி தர சொல்றாப்போல ஸீன் காட்டுறார் அவ்வளவே.

தொடரும்...

வவ்வால் said...

ராஜ்,

தொடர்ச்சி...

//அதே நேரத்தில் நமக்கு கூடங்குளம் போன்ற திட்டங்கள் தேவையில்லையென்றால் மின்சார சுயபூர்த்திகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது.//

மின்சார சுய தேவைகள் என்றால் யாரோட மின்சார சுய தேவைகள்? தொழில் நிறுவனங்களுடையதா, நகர மக்களுடையதா,கிராம மக்களுடையதா?

அல்லது 65 ஆண்டுகள் ஆனப்பிறகும் மின்சாரம் சென்று சேராத மலைக்கிராமங்களுக்கா?

அணு உலை வந்தா மட்டும் மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் மலையேறி போகுமா?

சுயதேவை பூர்த்தி செய்ய என்பது சப்பைக்கட்டு,சரியா திட்டமிட்டா அணு மின்சாரமே தேவை இருக்காது, அமெரிக்க அணு உலைகளிலேயே26 இல் கசிவு இருக்குனு போட்டதை பார்க்கலையா, கதிரியக்க கசிவு இல்லாத அணு உலை வடிவமைக்க முடியாது என்பதே உண்மை.

//அதே நேரத்தில் நமக்கு கூடங்குளம் போன்ற திட்டங்கள் தேவையில்லையென்றால் மின்சார சுயபூர்த்திகளை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்ற கேள்வியும் எழுகிறது.//

//நேற்று விகடனில் ஒருவர் பஹ்ரைன்ல உட்கார்ந்துகிட்டெல்லாம் கமெண்டுறாங்கன்னார்.துபாய்,பஹ்ரைன்லதான் கழுகுகள் அதிகமாக வானத்தின் உயரத்தில் பறக்கின்றன:)//

கழுகுகள் பிரிடேட்டர் வகைப்பறவைகள், சமயத்தில் பறவையினத்தையும் வேட்டையாடிப்பசியாறும் :-))

வவ்வால் said...

ராஜ்,

ஹி..ஹி உங்களுக்கு கழுகுப்பார்வை அதனால எல்லாத்தையும் தவறாம கவனமா பார்த்து கருத்து சொல்வீங்கனு விகடனுக்கு தெரியாம போச்சே :-))

ராஜ நடராஜன் said...

செவன் அப் குடிக்கும் போது முன்னாடி நீங்க போட்ட கண்ணாடி தயாரிப்பு பதிவு நினைவுக்கு வந்தது.அதுக்கும் செவன் அப்புக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்புன்னா செவன் அப் கார்பனேட்டடு மாதிரியே திராட்சை ரசம் கார்பனேட்டடு(கிட்டத்தட்ட champagne like sparkling)ரெடிமேடா கடைல கிடைப்பதை வைன் செய்து பார்த்தா எப்படியிருக்கும்ன்னு ஈஸ்ட்டையும்,சர்க்கரையையும் கலந்து வைக்க பாட்டில் புட்டுகிட்டுப் போயிடுச்சு.பாட்டிலில் வெல்டிங்கே கிடையாது.செவன் அப் மெல்லிய அலுமினியத்தில் எங்கே வெல்டு வச்சிருக்கான்னு தெரியாத படி உள்ளே கார்பனேட்டடு நீரை வைத்திருந்தாலும் மூடி திறக்காத வரை உஸ் என்ற சத்தத்தை எழுப்புவதில்லை.சென்னையில் மணலிப்பக்கம் போனீங்கன்னா கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒரு பக்கம்,அதனூடவே வாழும் மக்கள் ஒரு பக்கம் எனவும்,கெமிக்கல் பக்கவிளைவுகளாய் நீர் கலப்பு போன்றவைகளுக்குமிடையில் மக்களின் அன்றாட வாழ்வு நகர்கிறது.இந்திய iron ore வளத்தை நம்மால் உபயோகிக்க முடியாமல் இப்பொழுது கர்நாடகவிலிருந்து சைனாக்காரனுக்கு தாரை வார்த்து விட்டு ரெட்டிகள் அடித்த கொள்ளையால் ஏற்றுமதி தடை.முன்பு கோவாவிலிருந்து ஜ்ப்பானுக்கு அனுப்பி விட்டு ஜப்பானை அண்ணாந்து பார்த்தோம்.நம்மால் இயலாத முக்கிய காரணங்களில் ஒன்று மின்சார பூர்த்தியின்மை.இருக்கும் பிரச்சினை போதாதென்று அமைச்சர் நரி நாராயணசாமி வேறு இடையில் பூந்து அனல் வார்க்கிறார்.

வவ்வால் said...

ராஜ்,

வாங்க, வணக்கம்,நன்றி!

// ஈஸ்ட்டையும்,சர்க்கரையையும் கலந்து வைக்க பாட்டில் புட்டுகிட்டுப் போயிடுச்சு.பாட்டிலில் வெல்டிங்கே கிடையாது.செவன் அப் மெல்லிய அலுமினியத்தில் எங்கே வெல்டு வச்சிருக்கான்னு தெரியாத படி உள்ளே கார்பனேட்டடு நீரை வைத்திருந்தாலும் மூடி திறக்காத வரை உஸ் என்ற சத்தத்தை எழுப்புவதில்லை.//

குழப்பிட்டிங்களே, இப்போ வெடிக்கும் சொல்றிங்களா, இல்லை வெடிக்காது சொல்றிங்களா?

வெல்டிங்க் இல்லாத பாட்டில் வெடிச்சது, ஆனா கேன் வெடிக்கலை சொல்றிங்களா?

செவன் அப் அல்ல எல்லா கண்ணாடிப்புட்டிலும் ஜாயிண்ட் இருக்கும், அப்போ தான் மோல்ட் செய்ய முடியும்,

பீர் பாட்டிலில் அடிப்பாகம், கழுத்து என இரண்டு இடத்தில் ஜாயிண்ட் இருக்கும். பாட்டிலை எடுத்து தள்ளிவச்சு பார்த்தாலும் தடவிப்பார்த்தாலும் தெரியும், அதே தான் 7 அப் பாட்டிலுக்கும்.

அலுமினிய கேன் வெடிக்காதது அதன் கேஸ் அழுத்தம் பொறுத்து. அணு உலை வெடிக்க , வெப்பம், அழுத்தம், கதிர்வீச்சு எல்லாம் காரணம்.

ரெட்டி பிரதர்ஸ் மட்டுமா அம்பானி பிரதர்ஸ் கூட தான் சுரண்டுறாங்க. கோதாவரி பேசின்ல கேஸ் இருப்பது ஏன் ஒஎன் ஜி சி ஆல கண்டுப்பிடிக்க முடியாம போச்சாம். அவங்க செய்த பைலட் ரிசெர்ச் ரிப்போர்ட் அஹ் காசு கொடுத்து வாங்கி தான் ரிலையண்ஸ் கன்டுப்பிடுச்சாங்க.

Radhakrishnan said...

அணு உலைக்கலன் பற்றி பல விசயங்களை புரிந்து கொள்ள உதவியது. ராஜ நடராஜன் மற்றும் தங்களுடைய எழுத்து உரையாடல்கள் மிகவும் சிறப்பு. நன்றி.

Anonymous said...

yov itk ayyaa zen in anantha kodi namaskaaram eppadiyya irukke..blog kku thirumba vandhadhula sandhosham.varushathukku 80,000 peru saalai vibathula saavuraaga india la...adha pathi kavala padaama ennamo koodankulathai koodaankullamaa aakka oru koottame killampuna kanakka theriyudhu saami.edho purinja kanakka vaasichu paarthen onnume villangalai.EEEEE.delete pannaadheerum manasaatchinnu onnu irundhaa..thangallai meendum paarthadhil rompa sandhoshamaiyyaa.

வவ்வால் said...

வாங்க ரா.கி,

வணக்கம், நன்றி, ராஜ் பயங்கரமான ஆசாமி, எல்லாத்தையும் தெரிஞ்சுவைத்திருப்பார், எங்கே வாது கேப் விட்டா கோல் அடித்திடுவார், (ஹி...ஹி ராஜ் பாராட்டு தான் இது) அதனால சாக்கிரதையா தான் பேசுவேன்.:-))

வவ்வால் said...

யோவ், ஸென் வாய்யா, உமக்கும் என்னோடா ஆனந்த கோடி ..கோடி நமஸ்காரங்கள். நீ என்னமோ ஆவினு நினைச்சேன் பதிவுல எல்லாம் கமெண்ட் போடுற. :-))

சாலை விபத்துல மட்டுமா சாவுறாங்க, பிறக்கும் குழந்தைகள், பிரசவத்தின் போது தாய்/சேய் எல்லாம் சாவுறாங்க. ஊட்ட சத்துக்குறைப்பாட்டால் பலர் சாவுறாங்க, இதுக்கெல்லாம் அணு உலை திறந்தா விடிவு காலம் கிடைக்குமா? கிடைக்கும்னா நாடெங்கும் பல் அணு உலைகள் திறக்கலாம்.