Tuesday, November 08, 2011

சூர்ய சக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.சூர்ய சக்தி மின் சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது.பெரும்பாலும் கீழ் காணும் மூன்று முறைகளில் சூரிய ஆற்றலை நாம் மின்சக்தியாகவோ எரிசக்தியாகவோ பயன்ப்படுத்துகிறோம்,

# போட்டோ ஓல்டிக் பேனல்

#சூரிய வெப்ப சக்தி

#சூரிய அடர் சக்தி


போட்டொ ஓல்டி பேனல்:

சூரிய சக்தி தயாரிப்பில் விலை அதிகம் ஆன தொழில் நுட்பம் இது, காரணம் இதற்கான பேனல்கள் பெரும்பாலும் இறக்குமதி ஆவதே. இதுவே அமெரிக்காவில் ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 10 சென்ட்கள் போதும். இந்தியாவில் 15 ரூபாய் ஆகிறது(இங்கே அதிக பட்ச மதிப்பீடையே அளிக்ககிறேன் குறைந்த பட்சமாக 3 ரூபாய்க்கும் தயாரிக்க முடியும்)

ஏன் எனில் 15 ரூபாய்க்கு தயாரிக்கும் பிளாண்ட் என்பது முழுக்க தானியங்கியாக, இரவு பகல் எப்போதும் மின் உற்பத்திக்கு பயன்படும், அதி நவீனமானது. தோராயமாக 1 மெகா வாட் திறனில் பிளாண்ட் அமைக்க 25 கோடி அதிகபட்சம் ஆகும்,சுமார் 10 ஏக்கர் இடம் தேவைப்படும். அப்படி எனில் அணு சக்தி மின்சாரமான 2.7 சதவீதம் ஆன சுமார் 7000 மெகா வாட் தயாரிக்க இந்தியாவுக்கு சுமார் 175000 கோடி ரூபாயும், சுமார் 70000 ஏக்கர் இடமும் தேவைப்படும். 176000 கோடி 2ஜி ஸ்ப்பெக்ட்ரம் ஊழல் பணமே போதும். அவ்வளவு ஊழல் செய்யும் ஒரு நாட்டில் பாதகமற்ற மின்சாரத்துக்கு செலவு பண்ண முடியாதா? தார்ப்பாலைவனத்தின் பரப்பளவு 200,000 km2 ஆகும்.

மேலும் இங்கு குறிப்பிடப்பட்ட விலை எல்லாமே மிக அதிகப்பட்ச விலை ஆகும், உண்மையில் இதில் பாதி போதுமானது. குறைவான தொகை கணக்கில் வைத்து சொன்னால் கூடுதலான விலையை மட்டுமே கணக்கில் வைத்து விதாண்டா வாதம் பேசினால் கூட செல்லுபடியாக கூடாது என்பதற்கே.

போட்டொ ஓல்டிக் பேனல் வீடியோ:இந்த 15 ரூபாய் என்பதே ஒரு தர்க்க ரீதியான விலை, பயன்ப்படும் காலத்தில் எரிபொருள் செலவு இல்லை, சுற்று சூழல் மாசு இல்லை என்பதற்கான விலையை கழித்தால் குறைவான தொகையே நாம் செலவிட்டதாக ஆகும்.

போட்டோ ஓல்டிக் பேனல்கள் என்பது சிலிகான் கொண்டு தயாரிக்கபடுவது, அவற்றின் மீது கண்ணாடிப்பூச்சு இருக்கும்.மேல் படும் சூரிய ஒளியை நேரடியாக மின்சாரம் ஆக மாற்றீ மின்சார சுற்றுக்கு அனுப்பும். போட்டொ ஓல்டிக் விளைவுக்காகவே ஆல்பிரட் ஐன்ஸ்டின் நோபெல் பரிசு பெற்றார்,இதனை 1905 இல் கண்டுப்பிடித்தார்.

சூரிய வெப்ப சக்தி:

இது கொஞ்சம் சாதாரணமான தொழில் நுட்பம்,இதுவும் சூரிய அடர்வு சக்தி முறை தான் எப்படி செயல்ப்படுத்துகிறோம் என்பதனை பொறுத்து மாறுபடும். நேரடியாக சூரிய வெப்பத்தைக்கொண்டு நீரை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்து டர்பைன்களை இயக்க செய்து , அனல் மின் நிலையம் போல மின் உற்பத்தி செய்வது.

பேராபோலிக் வடிவ நீள் தகடுகளை அமைத்து அதன் மயத்தில் வெப்பம் கடத்தும் திரவம், எளிதான முறை எனில் நீரையும், அல்லது மினரல் ஆ 91;ில் போன்றவற்றையும் பயன்ப்படுத்துவது. விலைக்கூடிய முறை எனில் உருகிய உப்பினை கொண்டு வெப்பத்தினை கடத்தி நீராவி உற்பத்தி செய்து மினுற்பத்தி செய்வார்கள். இந்த முறையில் சில இடங்களில் அடர்வு/ வெப்ப சக்தி என மாற்றிப்பயன்படுத்துவார்கள்.

இதிலும் தானியங்கி முறை உண்டு.இரவிலும் பயன்ப்படும், ஏன் எனில் வெப்பம் சேமிக்கும் சாதனமாக உருகிய சோடியத்தை பயன்ப்படுத்தலாம்.

கீழே யூட்யுப் விடியோ கானவும்.

அடர்வு சூரிய சக்தி:

இதில் ஒரு சூரிய சக்தியினை குவிக்கும் கோபுரம் அமைப்பார்களில் (ஹீலியோஸ்டாட்)அதில் பல குவி ஆடிகள் இருக்கும் இதன் மூலம் சூரிய ஒளியை குவித்து வெப்பத்தை உருவாக்கி உருகிய உப்பு/ வெப்பம் கடத்தும் மினரல் ஆயிலை சூடாக்கி , நீராவி உற்பத்தி செய்வார்கள். இதுவும் தானியங்கி அமைப்பு, 24 மணி நேரமும் பயன்ப்படக்கூடியது.

கீழே யூட்யூப் வீடியோ:வீடியோ1:வீடியோ 2:
இந்தியாவில் இப்போது வணிக ரீதியாக தனியார் முதலீடு கொண்டு சூரிய பண்ணைகள், நகரங்கள் அமைக்கப்படுகிறது, அதானி குருப், மோசர் பேயர் போன்றவை 50 மெகா வாட் அளவுக்கு ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சுட்டியில் இந்தியாவில் எப்படி வணிக சூரிய மின் உற்பத்தியாளர்கள் செயல்ப்படுகிறார்கள் என அறியலாம்;

commercial solar power production in india

கீழ்க்காணும் சுட்டியில் மேல் விவரங்கள் காணலாம்;

solar power stations

solar power

solar energy


__________________________

சூரிய ஆற்றலும் தீங்கானது என சிலர் சொல்கிறார்கள்,அவர்கள் கூறும் வாதம் இது தான்.

# சிலிக்கான் பேனல்களில் இருந்து சிலிக்கான் தூசு வரும் என்று, அது சிலிக்கோசிஸ் என்ற நுரையீரல் நோய் உண்டாக்கும் என்பதாகும்.

இது முற்றிலும் கற்பனா வாதம், ஏன் எனில் பேனல்கள் மீது கண்ணாடி பூச்சு உள்ளது.சிலிக்கான் தூசு எப்படி வெளியில் வரும். அப்படிப்பார்த்தால் சில்லிக்கான் கொண்டு தான் கணினி, கைப்பேசி, என பல மின் அணு சாதணங்கள் செய்யப்படுகிறது, எல்லாருக்கும் சிலிக்கோசிஸ் நோய் வந்து விட்டதா?

# அடுத்தது , சூரிய வெப்பம் கடத்தப்பயன்படும் வெப்பக்கடத்தி திரவம் , மினரல் ஆயில் மூலம் நோய் வரும் என்பது இதுவும் தவறான பிரச்சாரம் ஆகும்.

காரணம் , இந்த எண்ணை மூடப்பட்டக்குழாய்களில்  தனிச்சுற்றாக  சுற்றி வரும் வெளியில் வராது. ஹீட் எக்ஸ்சேஞ்சர்கள் மூலமே நீரை சூடாக்கி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் ஆரம்பத்தில் தெர்மினால் (பாலி குளோரோ பைபினைல் கலவை)என்ற எண்ணை பயன்ப்படுத்தப்பட்டது அது தான் ஆபத்தானது அதனை 1976 லேயே தடை செய்து தற்போது தீங்கற்ற எண்ணை, அல்லது விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என உருகிய உப்பினை பயண்ப்படுத்துகிறார்கள். உருகிய உப்பு என்பது நாம் பயன்ப்படுத்தும் சாதாரண உப்பே.

# மேலும் பூச்சிகள் சூரிய சக்தியினை குவிக்கும் ஆடிகளால் பாதிக்கப்படும் என்கிறார்கள், இதுவும் தவறானது, சூரிய ஒளியை குவிக்கும் போது அதன் வழியாக சென்றால் எல்லாம் பூச்சிகள் சாகாது நீண்ட நேரம் அதில் இருக்கும் போது தான் வெப்பம் தாக்கும், எந்த பூச்சியும் அங்கேயே கூடுகட்டி குடி இருக்காது. வேண்டுமானால் ஒரு குவி ஆடி வைத்து சூரிய ஒளியை குவித்து அதில் உங்கள் கையை வைத்து சூடு செய்துப்பாருங்கள், சற்று நேரம் ஆனால் தான் வெப்பம் நாமே உணர்வோம். ஆடியில் பட்டதுமே பற்றிக்கொள்ளும் வெப்பத்தினை சூரிய ஒளி உருவாக்காது.

சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.

 # அதிக இடம் தேவைப்படும் என்கிறார்கள், ஆனால் நம் நாட்டில் உள்ள தார்ப்பாலைவனம் ஒன்றே போதும் தேவையான மீன்சாரம் உற்பத்தி செய்ய. ஆனால் தற்ப்போது நம்மிடம் நிதி ஆதாரம் இல்லை ,முழுக்க பயன்ப்படுத்த , எனவே அணு மின்சாரம் 2.7% உற்பத்தி செய்கிறோம் அதற்கு மட்டும் தற்போது மாற்றூ செய்துக்கொள்ளலாம், போக போக போட்டோ ஓல்டிக் பேனல்கள் விலை குறையும் அப்போது அதிகமாக உற்பத்தி செய்துக்கொள்ளலாம். ஏன் எனில் கணினி அறிமுகம் ஆனப்போது என்ன விலை, இப்போது மலிவாக கிடைக்கவில்லையா,அப்படித்தான் போட்டொ ஓல்டிக் பேனல்களூம் வருங்காலத்தில் விலைக்குறையும்.

செலவு அதிகம் ஆகும் என்பவர்கள் இந்த சுட்டியைப்பார்க்கவும்:

cost of solar power

பெரிய அளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியாது என்கிறார்கள், ஆனால் அமெரிக்க கலிபோர்னிய மாகாணத்தில்  மஜோவா பாலையில  ஒரே இடத்தில் 500 மெகாவாட் சூரிய மினுற்பத்தி மையம் அமைத்துள்ளார்கள். இப்படி பத்து மையம் அமைத்தால் 5000 மெகாவாட் உற்பத்தி செய்யலாம்.

சுட்டி:

solar power-land requirement

26 comments:

கோவி.கண்ணன் said...

நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி

வவ்வால் said...

கோவி,

வாங்க,வணக்கம், உங்களூக்கு தெரிஞ்சா அது மக்களுக்கு தெரிஞ்சாப்போல , நன்றி!

சுந்தரராஜன் said...

காலத்திற்கு தேவையான நல்ல பதிவு.
எனது பேஸ்புக் சுவரில் இணைத்துள்ளேன்.

Indian said...

நல்ல இடுகை.

*மொஜாவோ* = மொஹாவே

அருள் said...

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

வவ்வால் said...

வழக்கறிஞர்,

வணக்கம், வாங்க, நன்றி,

வருகைக்கும், முகச்சுவர் இணைப்புக்கும் நன்றி. கூடங்குளம் பற்றியும் ஒரு பதிவு முன்னரே போட்டு இருக்கேன். அதையும் பாருங்க.

வவ்வால் said...

வழக்கறிஞர்,

வணக்கம், வாங்க, நன்றி,

வருகைக்கும், முகச்சுவர் இணைப்புக்கும் நன்றி. கூடங்குளம் பற்றியும் ஒரு பதிவு முன்னரே போட்டு இருக்கேன். அதையும் பாருங்க.

வவ்வால் said...

இந்தியன்,

வாங்க, வணக்கம்.நன்றி.

எனக்கும் மொகாவோ எனத்தான் சரியாகப்பட்டது இங்க தான் குரோஞ்சி என்று குரோன்யே வை சொல்வோமே ,சரி என அப்படியே போட்டாச்சு.

சுட்டிக்காட்டியதற்கு நன்றி! (பிழைகளை சுட்டிக்காட்டுவதை எப்போதும் வரவேற்பேன்)

வவ்வால் said...

அருள்,

வாங்க, வணக்கம், நன்றி , உங்கள் சுட்டியைப்பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//சூரிய ஒளி என்பது 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தி ஆகும்.//ஒருத்தர் கூட எதிர்ப்பாட்டு பாட மாட்டேங்கிறாங்களே:)சூரிய ஒளி 100 சதவீதம் தீங்கற்ற மாற்று எரிசக்தியாக இருக்கலாம்.ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாலேயே பிரச்சினை.சூரிய ஒளியின் மூலம் மாற்று எரிசக்தியென்பது 100 சதவீதமென்றால் ஜார்ஜ் புஷ் ஈராக் எண்ணை வளத்துக்கு ஆசைப்படாமல் சகார பாலைவனத்தில் டேரா போட்டு உட்கார்ந்திருப்பார்:)மோடி ஒலகத்திலிருக்கறவனெல்லாம் இங்கே வந்து வியாபாரம் செய்யலாம்ன்னு அறிக்கை விடாம குஜராத் பாலைவனத்திலேயே அசெம்பிளி கட்டியிருப்பார்.ஏதோ... வந்ததுக்கு:)

வவ்வால் said...

ராஜ்,

வாங்க ,வணக்கம், நீங்களே இவ்வளவு லேட்டாக வரலாமா?

//ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாலேயே பிரச்சினை.//

ஆமாம் அது இன்றைய காலக்கட்டத்தில் இருக்கு , இல்லை எனவில்லை, ஆனால் இப்போ இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால் பின்னாளில் முழுவதுமாக சாத்தியமாகும். இப்போ மிகப்பெரிய சவால் விலை தான், எனவே தான் கணினி உதாரணம் சொன்னேன்.

உலக பரப்பளவில் ஒரு சதவீத இடம் போதும் ஒட்டு மொத்தமாக அனைத்து மின்சாரத்துக்கும் மாற்றாக பயன்ப்படுத்தலாம்னு போட்டு இருக்கு.

இன்னும் சொல்லப்போனால் இந்தியா தான் மிகவும் பின் தங்கி இருக்கு, அமெரிக்காவில் 30% 2020-30 குள் அனைத்து மாகாணங்களும் கண்டிப்பாக சூரிய சக்தி மின்சாரம் பயன்ப்படுத்தனும் சொல்லி இருக்கு.

மேலும் பல நாடுகளிலும் சூரிய சக்தி கார்கள் மீது பலத்த ஆய்வு நடைப்பெறுகிறது.செயற்கைக்கோள்கள் எல்லாம் சூரிய சக்தி மூலம் தான் 20-30 ஆண்டுகள் செயல்படுது.

//சூரிய ஒளியின் மூலம் மாற்று எரிசக்தியென்பது 100 சதவீதமென்றால் ஜார்ஜ் புஷ் ஈராக் எண்ணை வளத்துக்கு ஆசைப்படாமல் சகார பாலைவனத்தில் டேரா போட்டு உட்கார்ந்திருப்பார்:)//

ராஜ் நீங்களுமா, காருக்கும், மின்சாரத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுவது. அமெரிக்க கார்கள் எல்லாம் அதிகம் பெட்ரோல் குடிப்பவை. அவர்களுக்கு மலிவாக பெட்ரோல் கிடைக்கலைனா , கொடுக்காத அரசாங்கம் மீது கடுப்பாவார்கள்.

ஒபாமாவே அமெரிக்க கார்களை லாரிக்கு ஒப்பீடு செய்து சமீபத்தில் விமர்சனம் செய்தார்.அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவங்களின் செயல்பாட்டில் பெரிய அரசியலே இருக்கு. அதை அப்புறம் சொல்கிறேன்.அமெரிக்காவில் பெட்ரோல் அவர்கள் வாங்கும் திறனுக்கூ ரொம்ப மலிவு.ஒரு கேலன் சுமார் 3.5 டாலர் என நினைக்கிறேன்(மேக்ஸ் 4 டாலர்,அப்படியானால் ஒரு லிட் 1 டாலர்)இந்த அளவுக்கு வாங்கும் திறனில் விற்காவிட்டால் அங்கே அரசியல் செய்ய முடியாது.

குஜராத்தில் தான் இந்தியாவிலேயே பெரிய சூரிய சக்தி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

Unknown said...

எதிர்காலத்தில் மின்சார உற்பத்தி,சூரிய சக்தி கொண்டுதான் சாத்தியம்! வேறு வழி காணும் வரை! அனல் மின்சார உற்பத்தி, இனி 30 வருடங்கள் வரைதான்! புதிதாக கார்பன் படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டால்,சற்றுக்காலம் அதிகரிக்கலாம்!
தற்போது ஆண்டுக்கு சுமார் 700மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவிற்கே பேனல்கள், உலகமெங்கும் தயாராகிறது!

சூரிய உதவி மின் உற்பத்தி, மற்ற முறைகளை பதிலெடுக்க 2050 வரை ஆகலாம்! அதுவரை ஆண்டுக்கு ஆண்டு 10 சத அளவிற்கு அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க,உலகெஙும் அரசாங்கங்கள் அலறிக் கொண்டு, அறிந்த வழி முறைகளில் மின் உற்பத்தியை அதிகரிக்க முயலுகின்றன! அணு மிசாரமும் அதில் ஒன்று!

அணு மின்சாரம் மட்டுமே வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை! மின் தேவை/பற்றாக்குறையை சந்திக்க அந்த வழியிலும் சென்றெயாக வேண்டிய கட்டாயம்!

Unknown said...

அணு அரசன் போல: அனல் தெய்வம் போல! கொல்வதில்!

வவ்வால் said...

ரமேஷ் வெங்கடபதி,

வாங்க,வணக்கம்,நன்றி!

//அணு அரசன் போல: அனல் தெய்வம் போல! கொல்வதில்!//

அக்யூட் பாய்சன், குரோனிக் பாய்சன் என்பது போல என்று முன்னர் ஒரு பின்னூட்டத்திலும் நான் சொல்லியிருக்கேன், அதை நினைவூட்டும் வகையாக இருக்கு.

அனல் மூலம் வரும் கேடுகள் பரம்பரையாக பாதிக்காது, ஆனால் அணு விளைவு மரபணு திடீர் மாற்றம்(மியுட்டேஷன்) ஏற்படுத்தும்.

10 சதவீத மின்தேவைக்காக அணூ திட்டம் போடப்படுகிறது என்றால் கூடன் குளம் திட்டம் செயல்ப்படுத்த ஏன் 20 ஆண்டுகளுக்கு மேலாக போகிறது.

14000 கோடி திட்டம் என்றால் அதில் 10% கமிஷன் அடிப்பார்கள் ,அதுவே பல கோடி வரும், சூரிய சக்தி திட்டங்களில் கமிஷன் அடிக்க வழி குறைவு, கிடைத்தாலும் சின்ன தொகை தான் கிடைக்கும். எனவே இது போன்ற உள்நோக்கங்களும் கூட பெரிய திட்டங்கள் போடக்காரணமாக இருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

மறுமொழி பார்க்க திரும்ப வருவோமில்ல:)விகடன்ல சுப்ரமணியன் என்பவரின் கருத்தைக் காண நேர்ந்தது.//அணு மின் நிலையத்தைவிட நில கரி மூலம் தயாரிக்கப்படும் மின் நிலையங்களால் அதிக கதிர் வீச்சு பாதிப்பு வருகிறது அதனால் அதிக மக்கள் மரணம் அடைகின்றனர் இது மட்டும் அணு மின் நிலைய எதிர்பாளர்களுக்கு தேவலையா ? கதிர் வீச்சால் அதிக பாதிப்பு மருத்துவ துறையில் (14 சதவிதம்) உள்ளது அதனால் யாரும் மருத்துவம் பார்த்துகொள்ளாமல் இருக்கிறர்களா ?//அவரது கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லையென்ற போதிலும் ஒவ்வொருவரும் தமது வாதத்தை நிரூபிக்க வேண்டியே கருத்தை முன்வைக்கிறார்கள் என்பதற்காக குறிப்பிட்டேன்.பெரும் விபத்துக்கள் என்பதற்கும் அப்பால் யதார்த்தமாக அணுமின்சாரமே உலகநாடுகளை முன்னிலைப்படுத்தியுள்ளது.

ராஜ நடராஜன் said...

செயற்கை கோள்கள் சூரிய மின்சாரத்தில் இயங்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விசயம்தான்.ஆனால் அதுக ஆட்டோ மோடுல வேலை செய்யும் கும்பகர்ண பரம்பரையாச்சே.நம்ம ஊர் இயந்திரங்களுக்கு டர் புர்ன்னு குறட்டை விடலைன்னா தூக்கமே வராது.

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

இரண்டு முறை ஒரே பின்னூட்டமென்பதால் இரண்டாவது நீக்கி விட்டேன்.முகப்பை மாற்றுங்களேன்.பின்னூட்ட நேரம் வேறு இழுக்குது.முன்னாடி பின்னூட்டத்துல சொன்ன அதே சுப்ரமணி கொடுத்த தொடுப்பு என்னன்னா....//கட்டுப்படுத்தப்படாத அணுகதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு என்பது உண்மைதான் அது பல்வேறு நோய்களை தோற்றுவிக்கும் என்ற கருத்து உண்மைதான், ஆனால் அதுவே தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்ற கருத்தில் உண்மையில்லை, அது அறிவியல் பூர்வமாக நீரூபிக்கப்படவும் இல்லை.

http: www.rerf.or.jp index_e.html
http: en.wikipedia.org wiki Atomic_Bomb_Casualty_Commission
www.physics.ohio-state.edu ~wilkins energy Companion E20.12.pdf.xpdf
http: www.world-nuclear.org info inf05.html//

வவ்வால் said...

ராஜ்,

வாங்க, வணக்கம், நன்றி,

பின்னூட்டம் பார்க்க வர வேண்டாமா, வரணும்! :-))

//அணு மின் நிலையத்தைவிட நில கரி மூலம் தயாரிக்கப்படும் மின் நிலையங்களால் அதிக கதிர் வீச்சு பாதிப்பு வருகிறது அதனால் அதிக மக்கள் மரணம் அடைகின்றனர் இது மட்டும் அணு மின் நிலைய எதிர்பாளர்களுக்கு தேவலையா ? //

நிலக்கரில ஏது கதிர்வீச்சு? அதுல இருந்து கரியமில வாயு, பறக்கும் சாம்பல்(பிளை ஆஷ்) அப்புறம் நிலக்கரில இருக்க மெர்குரி, சல்பர் போன்றவை சிறிய விகிதத்தில் காற்றில் கலக்கும்னு படிச்சு இருக்கேன். மேலும் சுரங்கம் வெட்டுவதால் வனம், நிலம் பாதிக்கப்படும், இதை தடுக்க வெட்டி முடித்த பின் மரம் நடுவார்கள், நெய்வேலில முழுக்க யூகலிப்ப்டஸ் நட்டுப்புட்டாங்க, இது வேற மரம் வளர விடாது நிலத்தடி நீர் அதிகம் உரிஞ்சும்.

அனல் மின் நிலையம் என்ன பாதிப்பு உண்டாக்குதோ அதே பாதிப்பை சிமெண்ட் ஆலைகள் உருவாக்கும், இதில் மெர்குரி பாதிப்பு அதிகம், அப்படினா நாட்டில சிமெண்ட் ஆலை இல்லையா, அல்லது யாரும் வீடு கட்டலையா?

வெளிநாட்டுல சிமெண்ட் ஆலை அமைக்க பயங்கர கட்டுப்பாடு, அதனால தான் பிரஞ்ச் ,ஜெர்மன், இத்தாலி காரன்கள் இந்தியாவில சிமெண்ட் ஆலைகளை வாங்கி தயாரிப்ப அதிகம் ஆக்குறாங்க,

//கதிர் வீச்சால் அதிக பாதிப்பு மருத்துவ துறையில் (14 சதவிதம்) உள்ளது அதனால் யாரும் மருத்துவம் பார்த்துகொள்ளாமல் இருக்கிறர்களா ?///

இது செம காமெடி, அந்த மருத்துவ கதிர் வீச்சுக்கு நம்மள யார் கட்டாயப்படுத்துறா? நாமா தானே காசுக்கொடுத்து போறோம், எத்தனைப்பேர் போராங்க? தேவைப்பட்டவங்க தானே?

நான் இது வரைக்கும் ஒரு எக்ஸ் ரே, ஸ்கேன், ஈசிஜி எடுத்தது இல்லை. எனவே தேவை இல்லாத தான் மருத்துவ கதிர் வீச்சுக்கூ ஆளாக மாட்டேன், அணு உலை அப்படியா? திணிக்கப்படுவது.

கதிர்வீச்சு கசிவு இல்லாத அணு உலை இன்னும் வடிவமைக்கப்படவில்லை.

தலை முறையாக பாதிக்கபடாது என்று சொல்வதும் உண்மை இல்லை. அப்படி எனில் ஏன் அமெரிக்கர்கள் உள்பட பல மேலை நாட்டினரும் உணவுப்பொருளில் ஜெனிடிக்கல்லி மாடிபைட் என்றால் போட வேண்டும் என சொல்கிறார்கள். வெஜ், நான் வெஜ் என்பதற்கு குறியீடு போடுவது போல.

வவ்வால் said...

ராஜ்,

//.முகப்பை மாற்றுங்களேன்.பின்னூட்ட நேரம் வேறு இழுக்குது.//

நேரம் இழுக்குதா, விளம்பரம், விட்கெட்,கேட்ஜட்னு எதுவும் இல்லாம சும்மா தானே இருக்கு.
வேற நல்ல டெம்பிளேட் ஆஹ் பார்த்து மாத்தணும், சீக்கிரம் மாத்திடுறேன்.

ராஜ நடராஜன் said...

//நேரம் இழுக்குதா, விளம்பரம், விட்கெட்,கேட்ஜட்னு எதுவும் இல்லாம சும்மா தானே இருக்கு.
வேற நல்ல டெம்பிளேட் ஆஹ் பார்த்து மாத்தணும், சீக்கிரம் மாத்திடுறேன்.//உங்க கடை எளிமையா,இனிமையா இருக்குது.உள்ளே தேவையில்லாத பழைய ஸ்கிர்ப்ட் ஏதாவது உட்கார்ந்துகிட்டிருக்குதோ என்னவோ அல்லது எனது கணினிக்கு கூட காய்ச்சல் வந்து இருக்கலாம்.Testing once again.

ராஜ நடராஜன் said...

இப்ப கண்ணிமைக்கும் நேரத்தில் பின்னூட்டம் வந்து விழுகிறது.இப்படியே தொடருங்கள்.நன்றி.

வவ்வால் said...

நன்றி ராஜ்,

என்னோட பதிவில எதாவது ஸ்கிரிப்ட் உட்கார்ந்து இருந்தா அதை வச்சு படம் எடுக்கலாம் :-))

அது என்ன ஸ்கிரிப்ட்னு பார்த்து சொல்லுங்க!

உலகீன் அதிமெதுவான இணைய இனைப்பு என்னோடது தான் என்னோட இணைப்பில் ஒரு தளம் திறந்து விட்டால் எல்லாருக்கும் திறந்த்உ விடும் என மூட நம்பிக்கை எனக்குண்டு :-))

ரசிகன் said...

சூரிய மின்சார தயாரிப்பு குறித்து எனக்கு தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். அருமையாக பதிவிட்டிருக்கிறீர்கள்.

கருத்துரைக்கு உங்கள் பதிலுரையே ஒரு பதிவிடும் அளவிற்கு இருக்கிறது, அளவிலும், விவரத்திலும். பகிர்ந்ததற்கு நன்றி.

வவ்வால் said...

ரசிகன்,

வாங்க,வணக்கம்,நன்றி,

//கருத்துரைக்கு உங்கள் பதிலுரையே ஒரு பதிவிடும் அளவிற்கு இருக்கிறது, அளவிலும், விவரத்திலும். பகிர்ந்ததற்கு நன்றி.//

ஹி..ஹி திங்க் பிக் ...அதான் பெருசா இருக்கு பதிலுரை :-))
நமக்கு என்ன தெரியுதோ அதை பகிர்ந்து கொள்வதில் என்ன தயக்கம்னு பகிர்ந்த்துக்கொள்வேன், தங்கள் கத்துக்கு மிக்க நன்றி!

ஜோதிஜி said...

இந்த தலைப்பு இபபத்தான் கண்ல பட்டுச்சு. முழுசா படித்திட்டு கருத்து சொல்றேன்.