Friday, February 17, 2012

என்ன கொடுமை சார் இது!-2
என்ன கொடுமை சார் இது!-2

ஆரம்பக்காலத்தில் நான் பிளிறிய  சிலக்கொடுமைகளை இங்கே அழுத்திக்காணுங்கள்என்ன கொடுமை சார் இது!

மீண்டும் பிளிறல்  தொடர்கிறது....

ஒத்த சிந்தனை!

நம்ம தமிழ் சினிமா ஆளுங்க செம கில்லாடிங்க , உலக மகா சிந்தனையாளர்கள் ,புதுசு ..புதுசா  கற்பனை ஊற்றெடுக்கும் ஆனால் என்ன கொடுமைனா  இவங்க கஷ்டப்பட்டு கற்பனை செய்து உருவாக்கியதை உலகத்துல மத்தவங்க முன்னாடியே செய்து விடுகிறார்கள்!  தாமதமாக கற்பனை செய்தால் அதை எப்படி காப்பி அடிச்சாங்க என்று சொல்ல முடியும்... சொல்லக்கூடாது!ஒத்தசிந்தனை கொஞ்சம் லேட்டா  வந்திருக்குனு சொல்லுங்க! :-))

-----------------

பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்தல்:


ஒரு அஞ்சுப்பேருக்கு விருது கொடுத்தா அதுக்கு பேரு விருதா?
ஆமாம் விருது தான்!

அந்த அஞ்சுப்பேரு அஞ்சஞ்சு  பேருக்கு விருத கொடுத்தா அது?

அதுக்கூட விருதுனு சொல்லலாம்...

அந்த அஞ்சஞ்சு பேரு ஆளுக்கு அஞ்சு விருதுனு கொடுத்தா?

ம்ம்...ம்ம் விருது மாதிரி தெரியுது....

அஞ்சஞ்சு பேரா அஞ்சஞ்சு பேருக்கு என்று 5 லட்சத்து 55 ஆயிரத்து 5  நூற்று 55 பேருக்கு விருது கொடுத்தா?

ஹி..ஹி நான் இல்லை ரொம்ப பாவம் காலைல டிபன் கூட சாப்பிடல்லை ...எருமைக்கூட்டம் எங்கே இருக்கு சார்?  நானே போய் விழுந்துடுறேன்:-))

உங்கள் தளத்தை பைசா செலவில்லாமல் பிரபலம் ஆக்கணுமா , உடனே ஒரு விருது அறிவிச்சு பதிவர்களுக்கு பந்திப்போடுங்கள் போதும் :-))

விருதுக்கொடுத்தற்கு நன்றி என்று பதிவுப்போட்டே பிரபலம் ஆக்கிடுவாங்க உங்க தளத்தை!

-----------

மின்வெட்டைக்கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்!

திமுக முன்னால் அமைச்சர்.வீராபாண்டி ஆறுமுகம் தலைமையில் , மொபைல் போன் விற்பனையாளர்கள்??!! ஒன்றுக்கூடி சேலத்தில் மின்வெட்டைக்கண்டித்து போராட்டம் நடத்தி இருக்காங்க. என்னா கோராமையிது, கடந்த ஐந்து ஆண்டுகளாக வாமணன் போல அளக்காமலே நிலம் அபகரிப்பில் பிசியாக இருந்தவர்கள், ஒரே ஒரு மின் திட்டத்தை கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கே தி.மு.க தேர்தலில் தோற்றால் அதற்கு மின்வெட்டுக்காரணமாக இருக்கும்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது சாட்சாத் மின்வெட்டு துறை அமைச்சராக இருந்த ஆற்காட்டாரே. 

கதை அப்படி இருக்க ,இவங்க இப்படி போராட்டம் நடத்துவாங்களாம் :-))

அதுவும் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம், தொழிலார்கள், விசைத்தறியாளர்கள் என்று கூப்பிடாமல்(கூப்பிட்டாலும் வர மாட்டாங்க) மொபைல் போன் விற்பனையாளர்களை வைத்து நடத்துறாங்க, ஏன் மின்சாரம் இல்லாம மொபைல் போன் சார்ஜ் செய்து பேச முடியலையாமா? நாட்டுக்கு ரொம்ப முக்கியம் பாருங்க :-))

அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.அட...டா திராவிட கட்சிகளுக்கு ஒத்த கொள்கை இருக்குனு சொல்றது இந்த மின்வெட்டுக்கொள்கைய தானா? :-))

என்ன கொடுமை ...சார் இது!
--------------

நேற்று உடுமலைப்பேட்டையில் ஒரு தனியார்ப்பள்ளியின் மாணவர் விடுதியில் +1 படிக்கும் /படித்த மாணவர் ஒருவர் ஆசிரியரின் அடக்கு முறை,தண்டனையால் மனம் உடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.வருத்தத்திற்கும் ,கண்டனத்திற்கும் உரிய சம்பவம்.

கடந்த வாரம் கண்டித்த ஆசிரியையை மாணவர் ஒருவர் குத்திக்கொன்றார். இப்போது மாணவர் ஒருவர் தற்கொலை. இரண்டுமே இந்தியக்கல்விக்கொள்கை, மற்றும் சூழலின் சீரழிவையேக்காட்டுகிறது.

கல்வி என்பது அறிவுக்கு என்பதை தாண்டி பிழைப்புக்கு என்று மாறி மதிப்பென் வேட்டையில் மாணவர்கள் இறங்க வேண்டியதாகிவிட்டது. சிலர் வேட்டையில் வெற்றியும் பலர் வேட்டையின் தீவிரத்துக்கும் பலியாகிறார்களோ என தோன்றுகிறது.

கல்வி வியாபாரமாக ஆனதோடு மாணவர்களை கிளாடியேட்டர்களாக  மாற்றி போராட வைக்கிறது. எனவே மாணவர்களும் மூர்க்கத்தனமாக கல்வியுடன் போரிடுகிறார்கள். அப்படியே வென்றாலும் வெற்றியின் இனிமையை சுவைக்கும் மனநிலை போய்விடுகிறது. தோல்வியை விட தோற்றுவிடுவோமோ என்ற பயம் உயிரெடுக்கிறது.


கல்வியாளர்களோ, அரசோ விழித்துக்கொள்கிறதோ இல்லையோ பெற்றோர்கள் விழிப்படைந்து இது போன்ற அழுத்தங்களை பிள்ளைகளுக்கு தராமல் இருக்கலாம். ஆனால் அவர்களோ வாழ்வில் உயர வசதியாக வாழ கல்வி ,வேலை என்ற இரண்டே அக்‌ஷய பாத்திரம் என்ற முடிவில்  தனக்கு கிடைக்காத ஒன்று பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று அவர்களையும் வருத்திக்கொண்டு பிள்ளைகளையும் வருத்திக்கொண்டு ,அவ்வப்போது இது போன்ற துர்பாக்கியமான செய்தியாகிவிடுகிறார்கள்.

----------------

14 comments:

சார்வாகன் said...

கலக்கல் பதிவு நண்பா
பிளிறு பிளிறுன்னு பிச்சுட்டிங்க!!!!!!!!!!!

வவால் பிளிறுமா!!!!!!!!!!!
***************
ஒத்த சிந்தனை என்றதும் நான் கண்டு பிடிக்கும் முன்னாலேயெ இந்த நியூட்டன்,ஐன்ஸ்டின்,ரமானுஜம் எல்லாரும் கண்டுபிடித்தாலும் நானும் தனன்ந்தனியாக்வே கண்டுபிடித்தேன் என்று ஒத்த சிந்தனை என்றால் நம்புவீர்களா இல்லை நல்ல மருத்துவமனை சிபாரிசு செய்வீர்களா!!!!!!!

என்னை பற்றி முடிவெடுக்கு முன் அனைத்துவித அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அரதப் பழசு புத்தகங்களில் ஒத்த சிந்தனையாக் கண்டுபிடிக்கும் மாமே(பே)தைகளையும் க்ண்க்கில் எடுக்க வேண்டுகிறேன் கனம் நீதிபதி அவர்களே!!!!!!!!
********************
அஞ்சஞ்சு பேரா அஞ்சு பில்லியன் வரைக்கும் விருது கொடுத்தால் என்ன தண்டனை யுவர் ஹானர்? சொல்லுங்க போட்டுத் தாக்கிரலாம்!!!!!!!!!!!
***************
மின் வெட்டு ஆட்சிக்கு வைக்கும் வேட்டு!!!!!!!.
வவ்வாலின் புதுமொழி நன்றி!!!!!!!!!!!!!!!
*******************
கள்ள‌ச்சாராயம்,கட்டைபஞ்சாயத்து உள்ளிட்ட பல் சமூக சேவைகளும் செய்துவந்தவர்களே இன்று பல க்ல்வி நிலையங்களை நடத்துவதால்
கல்வி இப்படி போவதில் வியப்பில்லை!!!!!!!!!.

சாராயத் தொழில் அரசு நடத்தும்,
கல்வி தனியார்கள் நடத்துவர்.அவர்களின் தொழில் மாற்றம் மக்களுக்கு ஏமாற்றம்!!!!!!!!!!!!!!!
**************
அடுத்து கர்ஜனை செய்ய வேண்டுகோள்
நன்றி

குமரன் (Kumaran) said...

யாருக்கு விருது குடுத்தாலும் உங்களுக்கு குடுக்க மாட்டார்கள். :-)

சமுத்ரா said...

ha ha arumai..எனக்கும் நிறைய பேர் விருது கொடுத்தார்கள்.வேண்டாம் என்று
சொல்ல மனம் வரவில்லை.விருது என்பது சுத்த அபத்தம் தான்

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

ஹி.ஹி ... பரிணாமத்தின் இடை நிலையில் யானைவவ்வால் இருக்கக்கூடாதா ?(எலி-புலினு இருக்காமே,ஒரு விஞ்ஞானி சொல்லிக்கீறார்) அதே போல பிளிறும் வவ்வால்னு எடுத்துக்கோங்க :-))

-----

ஹி..ஹி நானும் உங்களைப்போலத்தான் பலதும் தனியா இராப்பகலா கண்முழிச்சு கண்டுப்பிடித்தேன் ஆனாப்பாருங்க, எல்லாம் ஏற்கனவே இருக்குனு சொல்லிப்பிட்டாங்க, அப்படி என்னக்கண்டுப்பிடிச்சேன் கேட்கிறிங்களா, வானத்தில் பறக்கும் ஊர்தி, கடலில் மிதக்கும் தேர், தென்றல்வீசும் எந்திரம்னு நிறைய ஆனால் , விமானம், கப்பல், மின்விசிறினு மத்தவங்க பேரு வச்சுக்கிட்டாங்க, அதுக்கு நான் என்ன செய்வேன். :-))

உங்களைப்பற்றி முடிவெடுக்க பழைய பொஸ்தவம் எல்லாம் படிக்கிறாங்களா? நாலுப்பேர படிக்க வச்ச புண்ணியவான்ன் நீங்க :-))

எதுக்கும் புது பொஸ்தவமா பார்த்து நீங்களே வாங்கிக்கொடுங்க, நல்லாப்படிக்கட்டும்... எழுத்தறிவித்தவன்ன் இறைவன் ஆவான்!
--------

ஹி..ஹி அவங்களுக்கும் ஒரு விருத கழுத்தில மாட்டி, வாழ்நாள் எல்லாம் மாட்டிக்கிட்டே திரியனும் சொல்லிடலாம் மை லார்ட்!
------
மின்வெட்டு தான் இனி மிகப்பெரிய வேட்டு... இயற்கையின் விளையாட்டு!

-------

கல்வி மட்டுமா ,அரசாங்கமே தனியார் மயம் ஆகிடும் போல, ரோடு போடாம, ரோட் டாக்ஸ், ஆனால் தனியார் ரோடு போட்டு காசு வாங்க டோல்கேட் :-))

மது விற்பது அரசாங்கம், தயாரிப்பது தனியாரும், அரசியல் பினாமிகளும், விற்றால் தப்பில்லை எனும் போது ஏன் அரசாங்கமே தயாரிக்க கூடாது?அரசுக்கு நல்ல வருவாய் அல்லவா?

----------

பிளிறலுக்கே பேதி ஆவாங்கோ , கர்ஜித்த கண்டம் தான்! :-))
----------

குமரன்,

வணக்கம், நன்றி!

அந்த கடலை மிட்டாய் விருது நமக்கு வேண்டாம்(ஓவராயிருக்குனு சொல்லப்படாது)

எத்தனைக்காலம் ஆனாலும் மறக்காமல் படித்து பின்னூட்டமும் போடுறிங்களே இதை விட பெரிதான விருது வேறு உண்டோ? உங்கள் வருகையே விரு(ந்)து தான் எனக்கு!

ஆனாலும் சிறந்த பிலாக்கர்னு ஒரு ஆஸ்கர் விருது கொடுத்தா வாங்கிப்போம்ல :-))

---------

சமுத்திரா,

வணக்கம்,நன்றி!

கொடுத்தா வேண்டாம்னு சொல்லாமல் வாங்கிக்கொள்ளனும், இல்லைனா தமிழனாக இருக்க முடியாது :-))

விருதில் அபத்தம் எல்லாம் ஒன்றும் இல்லை , ஆனால் அஞ்சு ..அஞ்சு பேருக்கா நீயும் கொடுன்னு சொல்லும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தான் அபத்தம் :-))

-------------

rajamelaiyur said...

/அனேகமாக அடுத்த சட்ட சபைத்தேர்தலிலும் தற்போதைய மின்வெட்டே வெற்றியாளரை தீர்மானிக்கும் என நம்பலாம்.
//

100% true

rajamelaiyur said...

இன்று ...

உங்கள் பதிவை யாரும் திருடாமல் இருக்க .

முகுந்த்; Amma said...

Wow, great post. I think this trend of copying American posters and concepts do exist in Bollywood too. But there it's minimal I believe. But,l we can now see a bunch of good directors in Tamil cinema which is a good sign.

வவ்வால் said...

இராஜபாட்டையாரே,

வாங்க,வணக்கம்,நன்றி!

ஹி..ஹி என்ப்பதிவை திருடுவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொள்வது போல ,அதனால் கவலை ஒன்றும் இல்லை! போனால் போகட்டும் போடா தான்(உங்க பதிவை நம்பி படிச்சேன் :-)) )

---------

முகுந்தம்மா,

வாங்க,வணக்கம், நன்றி!

ஹாலிவுட் கதைய மட்டும் இல்லாமல் போஸ்டரையும் காப்பி அடிக்க அச்சாரம்ம் போட்டவங்களே பாலிவுட் காரங்க தான். மகேஷ் பட் பேசிக் இன்ஸ்டிக்ட் போஸ்டரரை காப்பி அடிச்சு கேசில் எல்லாம் மாட்டினார்.

தமிழில் மணிரத்னம்,கமல் எல்லாம் ரொம்ப காலமா இந்த வேலையை செய்து வருகிறார்கள். இப்போ புது ஆட்களும் "தொழிலை" திறம்பட செய்கிறார்கள் :-))

அவ்வப்போது புது திறமையாளர்கள் வருகிறார்கள் ,ஆனால் பெரும்பாலும் ஒன் ஃபில்ம் ஒண்டராக போய்விடுகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

வவ்வால!பதிவர் சார்வாகன் போட்ட பரிணாமப் படங்களின் தாக்கமே இன்னும் தீரல.அதுக்குள்ள வவ்வால் பிளிறல்ன்னு இன்னொரு பிலிமா?

தாங்குமா!அடுக்குமா!

இவ்ளோ சொல்லியும் ஒருத்தரு உங்களுக்கு பரிசு தட்டை நீட்டியிருகாரே!
இப்ப என்ன செய்வீங்க:)

சிரிச்சிகிட்டிருந்தவனை வீரபாண்டிய கூப்பிட்டு மூடக் கெடுத்திட்டீங்களே!

போன ஆட்சியின் அடாவடிகளை இப்ப நினைச்சாலும் மனசு கொதிக்குது.இந்த லட்சணத்துல இன்னொன்ன கொண்டு வந்து உட்கார வைச்சா ஏதோ மாற்றம் வரும்ன்னு பார்த்தா 100 நாளுக்கு என்கிட்ட 85 மார்க் வாங்கிட்டு பாசாகிட்டேன் மப்புல சுத்துது.

பார்க்கலாம் தமிழகத்தின் தலையெழுத்தை!

தி.தமிழ் இளங்கோ said...

Reply to // ராஜ நடராஜன் said...// இவ்ளோ சொல்லியும் ஒருத்தரு உங்களுக்கு பரிசு தட்டை நீட்டியிருகாரே!
இப்ப என்ன செய்வீங்க:)//
வணக்கம்! நினைத்தால் வருவேன் என வரும் மின்வெட்டின் காரணமாக, பலரது பதிவுகளை படிக்க முடியாமல் போய் விடுகிறது. வவ்வால் சாரின், என்ன கொடுமை சார்.2 - என்ற கட்டுரையை இப்போதுதான் படித்தேன். விருதுகளைப் பற்றிய அவரது கருத்தினை தெரிந்து கொண்டேன். அவருக்கு விருது கொடுத்து கிண்டல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வவ்வால் சாரின் பதிவை உடன் படிக்காததுதான் காரணம்.

ராஜ நடராஜன் said...

தமிழ் இளஙிகோ அவர்களுக்கு!

யாருடைய பின்னூட்டமென்றே நினைவில்லாமல் நகைச்சுவைக்காக சொன்னது.நானெல்லாம் திருவிளையாடல் தருமி மாதிரி கொஞ்சம் குறைச்சுகிட்டாலும் பரவாயில்லைங்கிற மாதிரி கேசு.எனவே எனது பின்னூட்டத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

விருதுகள் என்றவுடன் சென்ற தி.மு.க ஆட்சியின் நினைவே வருகிறது.கருணாநிதி வேலை வெட்டியில்லாமல் உட்கார்ந்துகிட்டிருக்கார்.விருது கொடுப்பதற்கு ஒரு நாதியைக் காணோம்.

பதிவுகளோ,பதிவரோ காலம் கடந்தும் உச்சரிக்கப்படுவதே சிறந்த விருதாக இருக்க முடியும்.

தி.தமிழ் இளங்கோ said...

Reply to // ராஜ நடராஜன் said...// நானும் உங்கள் கருத்துரையைப் பெரிதாக (SERIOUS) எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நகைச்சுவை நடையாகவே (SATIRE) எடுத்துக் கொண்டேன். உங்கள் அறிமுகம் கிடைத்து இருக்கிறதே. எனவே, எல்லாம் நன்மைக்கே! நன்றி! தனது பதிவில் உங்களிடம் நான் சொல்ல அனுமதித்த வவ்வால் சாருக்கும் நன்றி!

வவ்வால் said...

ராஜ்,

வாங்க,வணக்கம்,நன்றி!

வவ்வால் பிளிறுவதும் பரிணாமத்தின் நீட்சியே!

ஆறுகொலை ஆறுமுகம் அசறாம இன்னும் வெளியில் நடமாடுவது ஜ்னநாகத்தின் வலிமையைக்காட்டுது :-))

சாமனியனுக்கு வயிறு,மனசு எல்லாம் இப்படி அடிக்கடி குமுறினா உடம்புக்கு தான் கேடு :-))

தமிழகதுக்கு ஜென்ம சனி திராவிட கட்சிகளே அவங்க தலை எழுத்த எப்பவும் கோணலா எழுதியே பழக்கப்படுத்திடாங்க, மக்களும் கோணாலா இருந்தாலும் என்னோடதாக்கும்னு 5 ஆண்டுக்கு ஒரு முறை சொந்த செலவில் சூன்யம் வச்சுக்கிறாங்க:-))

இளங்கோ பாசக்கார மனிதரா இருக்கார் என்ன செய்ய. கொள்ளென கொடுத்தலும்,கொள்ளேன்பதும் அவ்வை வழியே. நண்பருக்கும் புரியும் என்பதால் சங்கடம் பைப்பாசில் போய்விடும்!

இளங்கோ சார், நம்ம ராஜ நட சாருக்கும் ஒரு அவார்ட தட்டி விடுறது! :-))

---------

இளங்கோ சார்,

அதில ஒன்றும் தப்பில்லை. நான் கலாய்ச்சிட்டதா ஒரு நகைச்சுவைக்காகவே சொன்னேன்.நீங்க கொடுத்தது உங்க நல்ல மனசக்காட்டுது.நன்றி.(ஏன்டா இவனுக்கு கொடுக்கப்போனோம் இது தேவையானு நொந்துக்கிறிங்களோ)

ராஜ் சும்மா தமாசுக்கு தான் என்னைப்போட்டு வாங்கினார். ஆட்டத்தில இதெல்லாம் சகஜம் :-))

நம்ம பதிவில அனுமதியெல்லாம் எதிர்ப்பார்க்காதிங்க,கிடைக்காது ஏன் எனில் அனுமதிக்கட்டுப்பாடு எல்லாம் இங்கில்லை. இது ஒரு திறந்த மடம், யார் வேண்டுமானாலும் வரலாம் பந்திப்போடலாம். யாருக்கு சமத்து இருக்கோ அவங்களுக்கு அன்றைய தினம் இது அவங்களுக்கான ஆடுகளம் :-))

பத்மா said...

vavol konjam advertise pannikka vidunga sir