dotEPUB

Saturday, March 31, 2012

மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!



மிரட்டும் மின்சாரக் கொள்(ளை)கை!





எதிர்பாரத நேரத்தில் ஒரு நிகழ்வுக்கு நாம் ஆளானால் அது அதிர்ச்சி , அது வலிக்கொடுத்தால் துன்ப அதிர்ச்சி, மகிழ்வு கொடுத்தால் இன்ப அதிர்ச்சி என்போம். பேருந்தில் பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்தால் துன்ப அதிர்ச்சி ,அதுவே ஒரு கட்டிளம் வாளைக்குமரி அமர்ந்தால் இன்ப அதிர்ச்சி :-))

ஆனால் சபிக்கப்பட்ட நம்மளுக்கு இன்ப அதிர்ச்சி வாய்ப்பதேயில்லை, தொரத்தி தொரத்தி துன்ப அதிர்ச்சியை மட்டுமே எல்லோரும் கொடுக்கிறாங்க அதுவும் மக்கள் சேவை செய்யவே பிறவி எடுத்த அரசியல் மகான்கள் ஏ.சி ரூம் போட்டு யோசிச்சு டிசைன் டிசைனா துன்ப அதிர்ச்சிக்கொடுக்கிறாங்க ,பால் விலையை ஏத்தினாங்க, பஸ் டிக்கெட் ஏத்துனாங்க, இப்போ மின் கட்டணமும் ஏத்தியாச்சு இனிமே புல்டோசர் மேல ஏற்றாதது ஒன்று தான் பாக்கி, அதையும் சர்வாதிகார நாடாக இருந்தால் செய்திருப்பார்கள்.

சரி மின் கட்டணத்தை அவங்க தேவைக்கு ஏற்ப ஏற்றீயாச்சு அப்போ மக்கள் தேவைக்கு மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்குமா என்று கேட்டால் வாயே திறக்க மாட்டாங்க.

கிடைக்கிற கொஞ்ச மின்சாரத்துக்கும் அணு உலை இருந்தால் தான் சாத்தியம்னு ஒரு அபாயகரமான திட்டம் வேற சொல்வார்கள். அது தான் மலிவானது என்பார்கள். அப்படியெனில் அபாயம் குறைவான, அல்லது முழுவதும் தீங்கற்ற மலிவான மின் உற்பத்தி சாத்தியம் இல்லையா?

சாத்தியமுண்டு ,ஆனால் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு ஐடியா கொடுக்கும் மெத்தப்படித்த அதிகாரிகளும் திட்டமிட்டே பொய் பரப்புரைகள் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை.


கேடு விளைவிக்காத சூரிய சக்தி,காற்றாலை எல்லாம் ஏன் அதிக அளவில் பயன்ப்படுத்த கூடாதா எனக்கேட்டால் அவற்றின் விலை மிக அதிகம் என்பார்கள் அரசியல் விஞ்ஞானிகள் , அதில் எந்த அளவுக்கு  உண்மை இருக்கு என பார்ப்போம்.

மெகா வாட் கணக்கு:

1000 மெகா வாட் மின் நிலையம், என்று சொல்கிறார்கள் அப்படி எனில் 1000 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் 1000 மெகாவாட் என்பது ஒவ்வொரு வினாடியும் கிடைக்குமா? எந்த அடிப்படையில் 1000 மெகா  வாட் உற்பத்தியாகும் எவ்வளவு நேரத்துக்கு கிடைக்கும் என்று சொல்வதில்லை, உற்பத்தியாகும் மின்சாரத்தை எப்படி,எவ்வளவு பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்பதையும் யாரும் வெளிப்படையாக சொல்வதேயில்லை.

அப்படியெனில் மெகாவாட்டுக்குள் என்ன தான் ஒளிந்து இருக்கு?


ஒரு ஆண்டு மின்  உற்பத்தி என்று  சொல்லும்  போது மட்டும் ஒட்டு மொத்தமாக இத்தனை மில்லியன் யூனிட் /மெகாயுனீட்/கிகா யூனிட்,/டெரா யூனிட் என்று அப்போது மட்டும் யூனிட்டில் சொல்வார்கள். அப்படி எனில் மெகாவாட் திறனுக்கும், பயன்ப்பாட்டு அளவுக்கும் வேறு ஒரு தொடர்பு இருக்கிறது என்று தானே பொருள்.

நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் பயன்ப்படுத்தினோம் என்பதை மின் யூனிட்டில் சொல்வதைப்பார்த்திருக்கிறோம்.

ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரம் பயன்ப்படுத்துவது.

1000 வாட்ஸ்/மணி = ஒரு கிலோ வாட்ஸ்/மணி.

இப்போ ஒரு சந்தேகம் வரும் 1000 மெ.வா மின் நிலையம் எனில் 1000 மெ.வா எவ்வளவு கால அளவில் உற்பத்தி செய்கிறது என்று. அப்படி கணக்கிட்டால் எவ்வளவு மின் யூனிட் உற்பத்தியாகும் ?.1000மெ.வா என்பது ஒவ்வொரு வினாடிக்கும் உற்பத்தியாகுமா என்றால் ஆகாது. அப்படி கால அளவுக்கும் வாட்ஸுக்கும் தொடர்பு படுத்தி கிடைப்பதே உண்மையில் பயன்படுத்த கூடிய நுகர்வு மின்சக்தி என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒரு எளிய உதாரணத்தின் மூலம் பார்க்கலாம் ,

ஒரு லிட்டர் ரைஸ் குக்கரில் ஒரு லிட்டர் சாதம் சமைக்கலாம். இப்போது அதன் திறன் என்ன? ஒரு லிட்டர் என்று சொன்னால் அதன் கொள்ளவைப்பொறுத்து மட்டுமே.கிடைக்கும் அவுட் புட் அளவு என்னவாக இருக்கும்? எவ்வளவு நேரத்தில் எவ்வளவு சாதம் கிடைக்கும் என்பதை வைத்தே சொல்ல முடியும்.

ஒரு லிட்டர் அரிசி சோறாக வேக எவ்வளவு நேரம் ஆகும் 15 நிமிடம் எனில் 15 நிமிடத்துக்கு ஒரு லிட்டர் சாதம் ஒரு மணி நேரத்துக்கு 4 லிட்டர் அரிசு வேக  வைத்து 4 லிட்டர் சாதம் கிடைக்கும். 24 மணி நேரத்தில் 56 லிட்டர் சாதம் கிடைக்கும் இப்போது அதன் திறன் என்ன என்று எப்படி சொல்வது?

அதனை ஒரு லிட்டர் குக்கர் என்பதா அல்லது 56 லிட்டர் குக்கர் என்பதா? 

எளிதாக ஒரு மணிக்கு 4 லிட்டர் சாதம் உற்பத்தி செய்யும் குக்கர் என்று சொன்னால் அதன் உண்மையான செயல் திறன் விளங்கும்.இப்போது 10 நிமிடத்தில் அரிசி வெந்தால் அதே ஒரு லிட்டர் குக்கரில் இருந்து அதிக சாதம் கிடைக்குமல்லவா?

அப்படித்தான் 1000 மெ.வாட் மின் நிலையம் என்று சொல்வதும் எளிதாக ஏமாற்றும் ஒரு ஒரு திறனளவு. ஒரு மணி நேரத்துக்கு எத்தனை வாட்ஸ்/மெகா வாட்ஸ் என்று சொல்ல மாட்டார்கள் ஒவ்வொரு வகையான மின் உற்பத்திக்கும் ஒவ்வொரு திறன் இருக்கும்.

1000 மெ.வா அனல் மின் நிலையமும் 1000 மெ.வா அணு மின் நிலையமும் ஒரு மணி நேரத்தில் ஒரே அளவு மின் உற்பத்தி செய்யாது. என்பதை சுலபமாக மறைத்துவிட்டு இணையானது அல்லது திறன் மிகுந்த மின் நிலையம் என்பது போல 1000 மெ.வா என்பதையும் யூனிட் மின்சார செலவையும் ஒரு கணக்காக காட்டி நம்ப வைக்கிறார்கள். மேலும் எவ்வளவு ஆற்றலை (எரிசக்தியை )மின்சாரம் ஆக மாற்றுகிறது என்பதை வைத்து திறனை சொல்கிறார்கள் அது கணக்கீடுக்கு வேண்டுமானால் சிறப்பாக இருக்கலாம் . நடை முறைக்கு ஒரு மணியில் கிடைக்கும் மின் யூனிட்டே முக்கியம் ஆகும்.

உண்மையில் வெகு திறனான மின் உற்பத்தி முறை நீர் மின் உற்பத்தி, காற்றாலை, அனல் , சூரிய சக்தி ஆகும் அணு மின்சாரம் கடைசியே.

சூரிய சக்தி  மின்சாரம் விலை அதிகம் என்பதும் ஒரு மாயையே அது எப்படி என இறுதியில் பார்ப்போம். இப்போது ஒரு மணியில் உற்பத்தி செய்யும் மின்யூனிட்கள் அடிப்படையில் திறனை ஒப்பிடலாம்.

சூரிய சக்தி நீங்கலாக மற்ற எல்லா மின் உற்பத்தியிலும் இறுதியில் மின்சாரம் உற்பத்தியாவது டர்பைனுடன் இணைந்த  ஜெனெரேட்டர்கள் மூலமே.எனவே ஜெனெரேட்டர்களை இயக்குவதில் எம்முறை அதிக உற்பத்தி கொடுக்கிறதோ அம்முறையே சிறப்பான மின் உற்பத்தி முறை ஆகும்.

உதாரணமாக ஒரு மெகா வாட் டர்பைனுடன் கூடிய ஜெனெரேட்டரை பார்ப்போம்.

இயக்கியவுடன் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிவிடாது , ஒரு மெகாவாட் உற்பத்தியை  டர்பைன் ஜெனெரேட்டர் எட்ட ஆகும் காலம்  மாறுபடக்கூடியது.

பொதுவாக ஒரு ஜெனெரேட்டருக்கு ஒரு மெகாவட் மின் உற்பத்தியை எட்ட 10 நிமிடம் ஆகிறது எனில் ஒரு மணியில் 6 முறை 1 மெ.வா மின் உற்பத்தியை எட்டும். அப்படி எனில் அதன் மின் உற்பத்தி திறன் 6 மெகாவாட்ஸ்/மணி ஆகும்.6000 கிவாட்ஸ்/மணி அதாவது 6000 யூனிட் மின்சாரம்.

ஒரு மெகாவாட்ஸ் உற்பத்தி ஆக எடுக்கும் காலத்தினை ரேம்ப் அப் ரேட்(ramp up rate) என்பார்கள். ஒரு மணியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவை வைத்து அதனை ரன் அப் ரேட்(run up rate) என்பார்கள்.

ரேம்ப் அப் ரேட் (time to  reach peak power output)குறைவாக இருக்கும் மின் உற்பத்தி அமைப்பே சிறந்த ஒன்று , அதன் அடிப்படையிலேயே எவ்வளவு மின்சாரம் கிரிட்டுக்கு கிடைக்கும் என்பதை சொல்ல முடியும்,கிரிடுக்குள் பாயும் மின்சாரமே பயன்பாட்டின் லோடுக்கு போகும் , பயன் பாட்டின் அடிப்படையில் பேஸ் லோட்(base load) , பீக் லோட் (peak load), சராசரி (avg load) என்றெல்லாம் கணக்கிட்டு தேவைக்கு ஏற்ப கிரிட்டில் மின்சாரம் செலுத்தப்படும். வெறுமனே 1000 மெவா மின் நிலையம் என்பதை வைத்து பயன்ப்பாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை சொல்ல முடியாது. அது ஒரு லிட்டர் குக்கர் என்று  சொல்வது போலவே.

இப்போது வகை வாரியாக பார்க்கலாம், அனைத்தும் ஒரு மெகாவாட் என்ற உதாரணத்தின் அடிப்படையில்.



 நீர் மின்சாரத்தின் ரேம்ப் அப் ரேட் மிக அதிகம், ஒரு மணியில் ஒரு மெ.வா டர்பைன் 8  மெவா/மணி உற்பத்தி செய்யும்.


அடுத்து அனல் மின் டர்பைன் மூலம் 6 மெவா /மணி கிடைக்கும்.

ரொம்ப மெச்சப்படும் அணு மின் டர்பைன் மூலம் 2 மெவா/மணியே .

காற்றாலை என்பது காற்றின் வேகத்தை பொறுத்து அடிக்கடி மாறக்கூடியது ஆனாலும் நிலையாக காற்று வீசினால் அதன் ரேம்ப் அப் ரேட் அனல், புனலுக்கு அருகில் செல்ல கூடியது.

உதாரணமாக காற்று நிலையான வேகத்தில் 12 மைல்/மணி காற்று வீசினால் காற்றாலை முழு திறனில் செயல்ப்படும், 6 மைல் எனக்காற்று வேகம் இருந்தால் குறைந்து விடும்.  காற்றின் வேகத்தினை போல 8 மடங்கு வேகத்தில் சுழலக்கூடியதாக காற்றாலை டர்பைனில் கியர்  அமைப்பு உள்ளதே காரணம் ஆகும். இதனால் காற்றின் வேகத்தின் மும்மடிக்கு காற்றாலையின் சக்தி இருக்கும். காற்றாலையின் பிளேட் நீளம் கூட கூட அதிக  திருப்பு விசைக்கிடைக்கும் இப்போது பெரும்பாலும் 1.25 மெ.வா திறனுடன் ஒரு  தனிக்காற்றாலை அமைக்கப்படுகிறது. 5 மெ.வா வரைக்கும் வடிவமைக்க சாத்தியமுள்ளது.

ஒரு தனிக்காற்றாலை சராசரியாக நல்லக்காற்றுள்ள சூழலில் 1.25 மெவா காற்றாலையில் இருந்து 6 மெ.வா/மணி என மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

எனவே ஒரு மெ.வா என ஒப்பிடும் போதே அணு மின் உற்பத்தி திறனை விட மற்ற எல்லாம் சிறப்பாக இருக்கும் போது அணு மின்சாரம் எப்படி மலிவானது என சொல்கிறார்கள்.அதில் தான் மிகப்பெரிய பித்தாலட்டமே இருக்கிறது. அணு பிளவை எரிப்பொருளின் விலையை மட்டும் கணக்கில் வைத்து  ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையை கணக்கிடுகிறார்கள்.

மின் உற்பத்தி செய்ய ஆகும் செலவை பொதுவாக எப்படி கணக்கிட வேண்டும் எனில்,

நிறுவும் செலவு + எரிப்பொருள் செலவு +இயக்கும் செலவு +பராமரிப்பு செலவு ஆகியவற்றை மொத்தமாக கூட்டி , உற்பத்திக்கு ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு என கணக்கிட வேண்டும். மேலும் அணு மின்சாரத்தில் உற்பத்தி காலம் முடிந்த பின் பாதுகாப்பாக அணு உலையை செயல் இழக்க செய்ய ஆகும் செலவையும் சேர்க்க வேண்டும் அப்படி எல்லாம் கூட்டி கணக்கிட்டால் அணு மின்சாரம் மலிவானதே அல்ல.

மின் நிலையங்களுக்கான செலவின் அடிப்படையில் ஒரு ஒப்பீடு:

அணு மின்சாரம்:

நிறுவும் செலவு - உண்டு,அதிகம்.

எரி பொருள் செலவு- உண்டு

இயக்கும் செலவு - உண்டு

பராமரிப்பு - உண்டு

டி கமிஷன் செலவு =உண்டு(மிக அதிகமும்)

அபாயம்,= மிக அதிகம்.

சுற்று சூழல் கேடு: தவறு ஏற்பட்டால் உண்டு.

அனல் மின்சாரம்:

நிறுவும் செலவு = உண்டு, மிதமான முதலீடு.

எரி பொருள் செலவு= உண்டு

இயக்கும் செலவு =உண்டு

பராமரிப்பு செலவு=உண்டு

அபாயம்= மிதமானது.

,சுற்று சூழல் கேடு: உண்டு.

புனல் மின்சாரம்:

நிறுவும் செலவு =உண்டு,மிதமானது

எரி பொருள் செலவு =இல்லை

இயக்கும் செலவு= குறைவானது

பராமரிப்பு செலவு= உண்டு, குறைவானது.

சுற்று சூழல் கேடு = இல்லை/குறைவானது

அபாயம் :மிதமானது.

காற்றாலை மின்சாரம்:

நிறுவும் செலவு= உண்டு

எரி பொருள் செலவு= இல்லை

இயக்கும் செலவு = மிக மிக குறைவு

பராமரிப்பு செலவு = மிக மிக குறைவு.

அபாயம் &சுற்று சூழல் கேடு= இல்லை

இப்போது சூரிய சக்தி மின் உற்பத்தியை கவனிக்கலாம்.

நிறுவும் செலவு =  உண்டு

எரி பொருள் செலவு=இல்லை

இயக்கும் செலவு= வெகு சொற்பம்

பராமரிப்பு செலவு= வெகு சொற்பம்

சுற்று சூழல் கேடு & அபாயம்: இல்லை

இயக்கும் செலவு* என்பது மின் நிலையத்தினை இயக்க தேவைப்படும் ஊழியர்கள் சம்பளம் உட்பட இன்ன பிற செலவுகள் ஆகும். அனு மின்  நிலையம், அனல் மின் நிலையம் ஆகியவை இயக்க அதிக ஊழியர்கள் தேவை அவர்களுக்கு ஆண்டு தோறும் செலவிடப்படும் தொகையை வெளிப்படையாக அரசு சொல்வதில்லை. ஆனால் மலிவான மின்சாரம் என அரசு சொல்லும்.

அதே சமயம் சூர்ய சக்தி,காற்றாலை, புனல் மின் சாரம் ஆகியவற்றிற்கு ஊழியர்கள் தேவை குறைவு,எனவே இயக்கும் செலவும் குறைவே.

அனைத்தையும் ஒப்பிடுகையில் சூர்ய சக்தி மின்சாரம் மலிவாக இருக்க வேண்டுமே பின் ஏன் அதிக செலவு என அனைவரும் சொல்கிறார்கள் என்றால் அதிலும் ஒரு கோல் மால் வணிக கணக்கு இருக்கிறது என்னவென பார்ப்போம்.

மற்ற அனைத்திலும் 24X7 என ஆண்டு முழுவதும் இயக்கி மின்சாரம் எடுக்கலாம் என தோராயமாக சொல்லலாம். நீர் இருக்கும் போது மட்டும் நீர் மின்சாரம் ,காற்றடித்தால் தானே காற்றாலை மின்சாரம் என்பதை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு வருவோம் இப்போதைக்கு.

சூர்ய சக்தி மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்ய ஒரு அடிப்படையாக அனல் மின் உற்பத்தியை வைத்துக்கொள்கிறார்கள்.

24X7 என 365 நாட்களும் அனல் மின் நிலையத்தை இயக்க முடியும்.  எனவே தொடர் மின் உற்பத்தி செய்து தொடர்ந்து மின்சாரம் விற்று காசு சம்பாதிக்கலாம்.

ஆனால் சூர்ய சக்தி பகலில் மட்டுமே எனவே இரவில் மின்சாரம் உற்பத்தி ஆகாது விற்க முடியாது. எனவே இரவில் உற்பத்தி செய்யாமல் இருப்பதற்கும் சேர்த்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.மின் உற்பத்தியை அல்லது வெப்பத்தை சேமித்து இரவில் பயன்ப்படுத்தலாம். ஆனாலும் அது பகலில் கிடைத்த 10 மணி நேர உற்பத்தியே.

 சூர்ய மின் உற்பத்தி குறித்தான  எனது முந்தைய பதிவு.

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_08.html">சூர்ய சக்தி மின்சாரம்

ஒரு நாளில் 10 மணி நேரம்  மின் உற்பத்தி ஆகிறது 14 மணி நேரம் ஆகவில்லை. 10 மணி நேரத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்திற்கு மட்டும் காசு கொடுத்தால் அது அனல் மின் நிலைய விலையிலே இருக்கும். ஆனால் மொத்தமாக 24 மணி நேரம் ஒரு மெகாவாட் அனல் மின் நிலையம் இயக்கினால் எவ்வளவு மின் சாரம் உற்பத்தியாகுமோ அதே அளவு கணக்கிட்டு அதனை 10 மணி நேரம் உற்பத்தி செய்யும் சூரிய மின்சக்திக்கு விலையாக நிர்ணயிக்கிறார்கள். எனவே ஒரு யூனிட் சூர்ய சக்தி மின்சாரத்தின் விலை கூடிப்போகிறது.

ஷேர் ஆட்டோவில் ஆளுக்கு 5 ரூபாய்  கட்டணம் , ஒரு 10 பேர் ஏறினால் தான் வண்டி எடுப்பான் , நான் ஒருவர் மட்டும் ஏறிக்கொண்டு உடனே வண்டி எடுக்க சொன்னால் எடுக்க மாட்டன், அதே சமயம் 10 பேர் ஏறினால் கிடைக்கும் தொகையை நானே கொடுக்கிறேன் என்றால் ஆட்டோவை எடுப்பான் அல்லவா அப்படித்தான் சூர்ய சக்தி மின்சாரத்துக்கும் விலை  நிர்ணயிக்கப்படுகிறது. இது தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்த செய்யப்பட்டது. அதனை வைத்துக்கொண்டு சூர்ய  சக்தி மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் ஆகும் என பரப்புவது சரியல்ல.

சூர்ய சக்தி மின்சாரத்துக்கு ஆகும் செலவு அனைத்தும் நிறுவும் செலவே , மற்ற செலவுகள் எல்லாம் இல்லை. ஒரு முறை நிறுவினால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேற்படி செலவுகள் இல்லாமல் மின்சாரம் கிடைக்கும். அப்படிப்பார்த்தால் ஆண்டு தோறும் குறையும் விலை விகிதத்தில் கட்டணம் நிர்ணயம் செய்யலாம்.ஆனால் அரசின்  கொள்கை முடிவு எடுப்பவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளாமல் விலை நிர்ணய  கொள்கையை வடிவமைக்கிறார்கள் அல்லது திட்டமிட்டே அப்படி செய்தார்களா எனத்தெரியவில்லை.

இக்கதை காற்றாலைக்கும் பொருந்தும், செலவே இல்லாமல் தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதால் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கும் போது நல்ல லாபம் கிடைக்கும்.சீராக காற்று வீசும் பட்சத்தில் சில ஆண்டுகளில் போட்ட முதலீட்டினை எடுத்து விடலாம் பின்னர் வருவதெல்லாம் லாபமே.

காற்றாலை, சூர்ய சக்தி மின்சாரத்தில் இப்படி லாபம் ஈட்ட வாய்ப்பு இருப்பதாலேயே தனியார்கள் இப்போது போட்டிப்போட்டுக்கொண்டு களம் இறங்குகிறார்கள்.

தனியார்களை ஊக்குவிக்க இயங்காத காலத்துக்கும் சேர்த்து கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்கிறார்கள்,அரசே செய்தால் அப்படி உயர்த்தப்பட்ட விலை கொடுக்க வேண்டி இருக்காதே. ஆனால் அரசு செய்யாது ஏன் எனில் மாற்று எரிசக்தி திட்டத்தில் கமிஷன் அடிக்க வாய்ப்பு குறைவு. திட்ட மதிப்பீட்டில் 90% செலவு செய்தால் தான் ஒரு திட்டத்தையே நிறுவ முடியும்.காரணம் நிறுவ ஆகும் செலவை குறைக்க முடியாது.

ஆனால் அனல் , அணு போன்றவற்றில் திட்ட மதிப்பீட்டில் 60% தொகையை செலவு செய்தாலே மின் நிலையங்களை கட்டி விட முடியும் மீதி எல்லாம் பல்வேறு மட்டங்களில் கமிஷனாக போய்விடுகிறது.கமிஷன் தொகை எல்லாம் சேர்த்து போடும் மதிப்பீடே மொத்த திட்ட செலவு ஆகும்.

இந்தியாவிலேயே சூரிய சக்தி பேனல்கள் தயாரிக்கப்பட்டால் ,ஒரு மெகா வாட் சூர்ய சக்தி மின்நிலையம் அமைக்க 5 கோடியே போதுமானது அப்படியானால் ஒரு 1500 மெ.வா நிலையம் அமைக்க 7500 கோடி ஆகும். நம் நாட்டில் இப்போது 12 கோடி ஆகிறது காரணம் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படுவதால்.

சுட்டி:

http://news.cnet.com/Shrinking-the-cost-for-solar-power/2100-11392_3-6182947.html">மலிவாகும் சூரிய சக்தி

மலிவான விலையில் சூர்ய சக்தி மின் உற்பத்தி திட்டம் ஒடிஷாவில் வர இருக்கிறது.
சுட்டி:

http://www.bloomberg.com/news/2012-02-27/alex-green-energy-wins-india-solar-project-with-record-low-bid.html">யூனிட் 7 ரூ சூர்ய மின்சாரம்

ஆனால் திருவள்ளூரில் 1500 மெ.வா அனல் மின் நிலையம் அமைக்க 8000 கோடி செலவு செய்துள்ளார்கள். மேலும் ஆண்டு தோறும் எரிப்பொருளாக நிலக்கரி வேறு வாங்க வேண்டும் அப்படி எனில் சூர்ய சக்தியை விட அனல் மின் நிலையம் அமைக்க ,செயல்படுத்த தானே செலவு அதிகம் ஆகிறது. பின் ஏன் தொடர்ந்து அனைவரும் சூர்ய சக்தியைப்பற்றி முரணாக சொல்கிறார்கள் எல்லாம் கமிஷன் படுத்தும் பாடு அன்றி வேறென்ன!

பின்குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி கூகிள்.நன்றி!

12 comments:

சார்வாகன் said...

அருமையான் பதிவு நண்பரே,

வாழ்த்துக்கள்.அபாயம் அதிகம் உள்ள அணு உலையை ஏன் உயர்த்தி பிடிக்கிறார்கள்?.

ஒரே பதில் மேலை நாடுகளின் நலனுக்கு.

எப்படி செய்கிறார்கள்?.

மற்ற மின் தயாரிப்பு முறைகளை எளிதில் மக்களுக்கு கிடைகாவண்ணம்,அதன் விலைகள் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்வதுதான்.
******
நான் சொல்லும் தீர்வு என்ன்வெனில் மையப்படுத்தப்பட்ட உற்பத்தி ,விநியோகம் என்பதுதான் பல் சிக்கல்களுக்கு காரணம்.அது போல் இந்த மின்சாரமும் பரவாக்கப்பட்ட முறையில் உற்பத்தி செய்வது நல்லது.எந்த இடத்தில் எந்த மாதிரி இயற்கை சூழல் உள்ளதோ அது பொறுத்தே மின்சாரம் தயாரிக்கப்படவேண்டும்.

சூரிய சக்தி+ஃப்யூல் செல் மூலம் 24 மணி நேரமும் மின்சாரம் தயாரிக்க பயன் படுத்த முடியும்.இது எந்த அள்வுக்கு பயன் படுத்த முடியும? என்பது குறித்த சில பரிசோத்னைகள் ஒரு சிற்றூரின் அள்வில் பரிசோதித்து பார்க்க்லாம்.அதாவது அந்த ஊரின் ஒவ்வொரு வீட்டு கூரையிலும் சூரிய ஒளி மின் த்கடு இருக்கும்.அந்த‌ மின்சாரம் பயன்படுத்தப் படலாம் அல்லது மின் பகுப்பு மூலம் ஹைட்ரஜன் ஆக மாற்ற‌ப்படலாம்.

ஹைட்ரஜன் மின்சாரமாக் ஃப்யூல் செல் மூலம் மாற்ற‌ப்படலாம்.

இது வெற்றி பெற்றால் பல்ருக்கு சுய தொழில் வாய்ப்பு அளிக்கும்,தன்னிறைவு பெறுதலை நோக்கி பீடு நடை போட வைக்கும்.

இதெல்லாம் யாருக்கு நண்பா வேனும் '3' படம் பற்றி சூடா பதிவு போட்டாத்தானே நம் ம்க்களுக்கு பிடிக்கும்.

ஏதோ புலம்பி நம் எரிச்சலை தவிர்க்க்லாம்.

அப்புறம் தலை! நீங்கள் மின்னியல பொறியாளரா,பவர் சிஸ்டெம் பின்னி எடுக்கிறீங்க!

நன்றி

Thomas Ruban said...

எளிமையான விளக்கங்களுடன், மலிவான மின்சாரம் எது என்று புரிய வைத்த அருமையான பதிவு நன்றி நண்பரே...

சிவானந்தம் said...

வவ்வால்,

உங்கள் பதிவுகளில் எனக்கு கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால் தொடர் பின்னூட்டத்தில் மாட்டிகொள்ள விருப்பமில்லை.(உங்க வேகம் நமக்கு வராது)

கமிஷன் எல்லாவற்றிலும் உண்டு.ஆனால் அணு மின்சாரத்தில் இதுதான் காரணம் என்பதை ஏற்கமுடியாது. அதே போல் சூரிய மற்றும் காற்றாலை உற்பத்தியில் சாத்தியக் கூறுகள் இன்னும் தூரத்தில்தான் இருகின்றன. காரணம் லாஜிக்தான்.

உலகில் பல நாடுகள், அதிலும் பல சுதந்திர மாநிலங்கள் இருகின்றன. இதில் யாராவது ஒரு நல்லவன் அதிகாரத்தில் இருந்து, ஆபத்தில்லாத மின்சாரத்தை தயாரிக்கிறேன் என்று சவால் விட்டு அதை சாதித்திருப்பான். தற்போதைக்கு வசதியானவன் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் மினரல் வாட்டர் குடிப்பதை போல், சில நாடுகள் மானிய சுமையை தாங்கிக் கொண்டு அதை ஓரளவு கவனிக்கின்றன.

இந்தியாவில் அது சாத்தியமென்றால், 100 சதவிகித அந்நிய முதலீட்டையும், `எதுவும் வரி கொடுக்க வேண்டாம், ரிஸ்க் இல்லாம இருந்தா போதும்`என்று சொல்லி இதை திறந்து விட்டிருப்பார்கள். அவர்களும் ஓடி வந்திருப்பார்கள். இந்த அணு உலை விபத்தால் ஆராய்சிகள் வேகமெடுத்து விரைவில் அது சாதியமாகும் என்று வேண்டுமானால் நம்பலாம்.

ராஜ நடராஜன் said...

பின்னூட்டத்தில் இருக்கும் வேகம் பதிவில காட்ட மாட்டீங்களேன்னு நினைத்து மொத்தமா ரவுண்டு கட்டிடலாமென்று பார்த்தால் நிறையவே பதிவுகளை தவற விட்டுட்டேன் போல இருக்குது.

மேலும் நண்பன் ஒருவர் மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் காலை இழக்கும் நிலையில் அண்ணன் அமெரிக்கா,அக்கா சென்னையிலிருந்து வந்து விட்டதால் அலைச்சலில் பின்னூட்டங்களுக்கு கூட பதில் சொல்லாத நிலை.

சரி!இப்ப பதிவை நோக்கிய ஒரு மேய்ச்சல்...

ராஜ நடராஜன் said...

பதிவின் முதல் வரியைக் கூட படிக்காமல் முந்தைய பின்னூட்டம் போட்டால் அதுக்குள் எதிர்பாரத நேரத்தில் ஒரு நிகழ்வுக்கு நாம் ஆளானால் அது அதிர்ச்சி , அது வலிக்கொடுத்தால் துன்ப அதிர்ச்சி ன்னு கிளி ஜோஸ்யம் சொல்றீங்களே!

நிகழ்காலத்தில்... said...

\\ஆனால் அனல் , அணு போன்றவற்றில் திட்ட மதிப்பீட்டில் 60% தொகையை செலவு செய்தாலே மின் நிலையங்களை கட்டி விட முடியும் மீதி எல்லாம் பல்வேறு மட்டங்களில் கமிஷனாக போய்விடுகிறது.கமிஷன் தொகை எல்லாம் சேர்த்து போடும் மதிப்பீடே மொத்த திட்ட செலவு ஆகும்.\\

கமிசன் தான் இங்கு அனைத்தையுமே நிர்ணயிக்கிறது :(

அதிகாரிகள் மட்டத்தில் இந்த விவரமெல்லாம் தெரியாமல் இல்லை. அவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அரசியல்வாதி என்ன சொல்கிறாரே அதன்படி இயங்க வேண்டியதாய் இருக்கிறதே...

கோவி.கண்ணன் said...

ரொம்ப தெளிவான ஆராய்ச்சி. நன்றாக எழுதி இருக்கிங்க வவ்ஸ்

naren said...

Solar Trust for America received $2.1 billion in conditional loan guarantees from the DOE – “the largest amount ever offered to a solar project,” according to non-car owner Steven Chu – for a project near Blythe, CA, but declared bankruptcy within a year. Maybe we should stop calling it “bankruptcy” and start calling it “solar-ruptcy.” Or better yet, “Obama-ruptcy.

இதின் முழு கதை இதில்..

http://campaign2012.washingtonexaminer.com/blogs/beltway-confidential/solar-company-bankrupt-despite-win-win-doe-loan/459621

இந்த கம்பெனிகளுக்கு நீங்க என்ன lobbyistஆ?? -;)

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி,

சரியா சொன்னிங்க, நல்லவை எல்லாம் அவங்களுக்கு, குப்பை எல்லாம் நம்ம தலையில கட்டி விற்பாங்க.

----
பரவாலாக்கப்பட்ட உற்பத்தி, விநியோகம் மூலம் மின்ன் விரய்யம் தவிர்க்கப்படும். ஆனால் நம் நாட்டில் இன்னமும் அனல்,புனல் ,தான் மேஜர் மின் உற்பத்தி திட்டங்கள்ள் என்பதால் பரவலாக்க சில கட்டுப்பாடுகள் இருக்கு. மாற்று மின் திட்டத்தினை பரவலாக்க எடுத்து செல்லலாம். வழக்கமாக சொல்வது போல கமிஷண்கள் தான் தடுக்க்கிறது. அரசியல்வாதி,அதிகார மட்டத்தில் பியூன் முதல் அனைவருக்கும் ஒரு கட்டிங்க் என எல்லாருக்கும் வரும்படி வரும் மாதிரி திட்டம் இருந்தா தான் நம்ம நாட்டில அதை திட்டம்ன்னு எடுத்து செய்வாங்க :-))
-----

ஹி..ஹி நாம எந்திரன், மின்னியல் கேள்வி ஞானம் மட்டுமே. படிக்கிற காலத்தில கடசி பெஞ்ச்ச தேய்ச்ச குருப்பு :-))

******
//இதெல்லாம் யாருக்கு நண்பா வேனும் '3' படம் பற்றி சூடா பதிவு போட்டாத்தானே நம் ம்க்களுக்கு பிடிக்கும்.//

ஹி...ஹி இதெல்லாம் யாருக்கு வேணும் 3 படம் போல கொலவெறி பாட்டா பாட முடியும் நாம. மக்கள் பிரச்சினைய எல்லாம் தீர்க்க வானத்தில இருந்து ஹீரோ குதிப்பான் அவன் பார்த்துப்பான்னு , கொலவெறில மூழ்கிடுவாங்க :-))

சூடா பதிவு போட எல்லாம் தனித்திறமை வேற வேண்டும் அதுலாம் உங்களுக்கு தெரியாதுனு வேற சொல்றாங்க, என்ன கொடுமை சகோ :-))
-----------
*****
ரூபன்,
வணக்கம், நன்றி!

ஆள்வோரும் ,மீடியாவும் எது மலிவு ,நல்லதுனு சொல்ல்லுதோ அதான் நல்லது என்று கருத்து திணிப்புகளுக்கு பழகிப்போன மக்கள் கூட்டம் வேற என்ன செய்யும்.

எதோ நாம ஊதுற சங்க ஊதி வைக்கிறோம்,நமக்கும் பொழுது போகனும்ல!
*****
சிவானந்தம்,

வணக்கம்,நன்றி!

//ஆனால் தொடர் பின்னூட்டத்தில் மாட்டிகொள்ள விருப்பமில்லை.(உங்க வேகம் நமக்கு வராது) //

இது இசையா?வசையா? ஆனால் ஒன்று மட்டும் தெரியுது என்னப்ப்பார்த்து (பின்னூட்டங்களை) மிரண்டுப்போயிட்டிங்கன்னு :-))

ராஜ நடராஜன் வருவார் சொல்றேன்,அவரும் நம்ம கட்சி தான்!

நீங்க சொல்வது போல சில இடர்கள் இருக்கு, இங்கு நான் சொல்ல்வதும் நாடு முழுவதற்கும் தேவையா 100% மின்சாரத்தையும் செய்ய சொல்லவில்லை.ஒரு கணிசமான அளவுக்கு மாற்று முறைக்கு மாற வேண்டும் என்பதே.

நாம் தொழில் வளர்ச்சிப்பாதைக்கு மிக தாமதமாகவே வந்துள்ளோம், அதற்கு முன்னரே மேலை நாடுகள் உட்சத்துக்கு போய் இப்போது சரிவை நோக்கி. எனவே அவர்களை விட நாம் தான் கவனம் செலுத்த வேண்டும்.
வெளிநாட்டில் ஏன் யாரும் செய்யவில்லையா எனலாம், டென்மார்க், ஸ்வீடன் போன்றவை உலகில் மிக அதிக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.

குளிர் நாடானா ஜெர்மனி மிக அதிக சூர்ய சக்தி நாடு(அவர்களுக்கு இது லாஜிக்கல் மிஸ்டேக்,ஏன் எனில் அவர்களுக்கு சம்மரில் கூட அதிக வெயில் இருக்காது) இந்தியாவில் டிசம்பரில் கூட பகலில் 30 டிகிரிக்கு குறையாமல் வெயில் அடிக்கும்.300 நாட்களுக்கும் மேல் முழு சூரிய நாள் உள்ள நாடு இந்தியா.

# இன்னொரு முக்கியமான விஷயம் இன்னும் 70-80 ஆண்டுகளுக்கு(அதிக பட்சம் 100 ஆண்டுகள்) பிறகு பூமியில் ஃபாசில் ஃப்யூல் எனப்படும் நிலக்கரி, பெட்ரோல் எதுவும் இருக்காது.எனவே தான் மேலை நாடுகளில் சோலார் கார், ஹைப்பிரிட் கார் என ஆராய்ச்சி செய்கிறார்கள்.

வவ்வால் said...

ராஜ்,

வணக்கம்,நன்றி!

இதுக்கு ஒத்த வரில சொம்பேறி பயலாச்சேன்னு நினைச்சேன்னு சொல்லி இருக்கலாம் :-))

வாழ்க்கையின் சுமை(சுகம்?) சுற்றி சுழன்று தனது நீள் ஆக்டொபஸ் கரங்களால் பற்றி இழுக்கும் நிலையிலும் பதிவில் பாசம் கொண்டு பார்வையிடும் உங்களுக்கு துன்பம் என்பது பஞ்சு மெத்தை வாசமாகவே இருக்கும். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் மீட்டுங்கள் :-))

சுற்றமும்,நட்பும் முக்கியம் அவர்களை கவனியுங்கள், நாம பொறுமையா கதைக்கலாம்.
---

ஹி ..ஹி நம்ம தத்துவ விசாரத்தை பார்த்து அய்யோ அய்யோ என மண்டையில அடிச்சிக்கிட்டிங்க போல :-)) வவ்வால் ஜோசியம் அது!
****
சிவா,

வணக்கம்,நன்றி!

எல்லாம் பண மயம் தான். அதிகாரிகளுக்கு தெரியும் ,தடுக்க முடியாமல் இல்லை, எதுக்கு தடுத்துக்கிட்டு ,வீனா டிரான்ஸ்பர் ஆகிக்கிட்டு பேசாம ஆமாம்னு சொல்லிட்டு நம்ம பங்கு எவ்வளவுனு கேட்டுக்கலாம்னு போயிடுவான்ங்க. அதான் அரசு நிர்வாகம்.

***
கோவி,

வணக்கம்,நன்றி.

தெளிவா இருக்கா,நன்றி எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் குழப்பிட்டோமோனு இருந்துக்கிட்டே இருக்கும் :-))
****
நரேன்,

வணக்கம்,நன்றி!

ஆகா நல்ல ஒரு தகவல் கொடுத்திங்க. இது போல எல்லா துறையிலும் சில மலை முழுங்கிகள் வருவார்கள். என்ரான் எனர்ஜி கேள்விப்பட்டு இருப்பிங்களே 90 களிலேயெ இந்தியாவில் மகாராஷ்ட்ராவில் எரிவாயு மின்நிலையம் அமைச்சு சொதப்பினாங்க.நமக்குஎவ்ளோ நஷ்டம்னு வெளியில் தெளிவா தெரியவில்லை.கடைசில மஞ்ச கடுதாசிக்கொடுத்துட்டு போய்ட்டாங்க.

தகவல் தொழில்நுட்பத்தில சத்யம் செய்தார்கள், எனவே இனிமேல் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் வேண்டாம் சொல்லிடலாம்.

நீங்க நல்லா இருப்பிங்க ,இது போல லாபியிஸ்ட் வேலை எதாவது இருந்தா சொல்லுங்க நல்லா செய்றேன்,நானும் செட்டில் ஆக வேண்டாம் ,ஆடிக்கார் ,பக்கத்தில அசின்,அனுஷ்கா போல ஒரு பிகர்னு கெனா வேற அடிக்கடி வருது ,அதுலாம் நடக்க இது போல எதாவது செஞ்சா தான் சாத்தியம், நானும் எத்தன நாளுக்கு தான் நல்லவனாவே நடிக்கிறது :-))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Excellent write up...!

வவ்வால் said...

ப.ரா,

வாங்க,வணக்கம்,நன்றி! வள்ளூவர விட கெட்டிக்காரரா இருப்பார் போல :-))