Tuesday, April 24, 2012

புவி தினம் ஏப்ரல்-22 எனும் ஏகாதிபத்தியங்களின் ஏய்ப்பு!





அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம், சுற்று சூழல் தினம், புவி  தினம் என டிசைன் டிசைனா நாட்களை அறிவித்து மெத்த படித்தவர்களின் மூலமாக அதனை நினைவு கூற ,மற்றும் கொண்டாட வைத்து அதெல்லாம் தெரியாமல் இருந்தால் அவனை  முட்டாள் என சித்தரிப்பதே  இன்றைய நவீனம், என்னைப்பொறுத்தவரையில் அதெல்லாம் கொண்டாடி மகிழ்பவர்களே கடைந்தெடுத்த முட்டாள்கள் என்பேன் .

ஏன் எதற்கு என்ற சிறிதும் கேள்வி இல்லாமல் எவனாவது எதையாவது சொன்னால் அதை செய்வதும், அதை  வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என பதிவு போட்டு பொழுது போக்கும் கணினி அறிவுள்ள முட்டாள்களின் உலகமாகவே தமிழ் பதிவுலகம் இருக்கிறது.

நாட்களை அறிவித்து கொள்கைகளை கடைப்பரப்புவதன் பின்னணியில் ஏகாதிபத்தியம் என்கிற முன்னேறிய நாடுகளின் வணிக சுயநலமே ஒழிந்து இருக்கின்றது என்பது பாமரனுக்கு தெரியாமல் அல்லது புரியாமல் இருக்கலாம் , கணினி ,இணையம் என தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்க வாய்ப்புள்ள பதிவுலகில் இருப்பவர்களோ ஈ அடிச்சான் காப்பியாக பொது புத்தியில் உலாவ விடும் செய்திகளையே பதிவாக ஆக்கி பொழுது போக்குவதற்கு இவர்கள் ஏன்?

அதான் திணிக்கப்பட்ட கருத்துக்களை பரப்புரை செய்ய ஏகப்பட்ட தொலைக்காட்சிகள்,அச்சு ஊடகங்கள் இருக்கே. அதையே பிரதி எடுத்து திரும்ப வாந்தி எடுக்கும் பதிவர்கள் எப்படி மாற்று ஊடகம் ஆவார்கள்? சொந்த கருத்து, சுய தேடல் இருக்காதா?

வலைப்பதிவுகள் என்பது புதிய , புரட்சிகர ,மாற்று சிந்தனைகளை கொண்டு வர ஒரு வாய்ப்பு ஆனால் வணிக ஊடகத்தில் சொல்லப்படுவதையே மறுபிரதி எடுக்க இந்த கொம்பன்கள் தேவையே இல்லை.

எவனாவது சிட்டுக்குருவி அழிகிறது சொன்னால் அப்படியே ஆமாம் சிட்டுக்குருவியே காணோம்னு கண்ணை மூடிக்கொண்டு பதிவ போடுவார்கள், புவி தினம் என்று சொன்னால் போதும் டெம்பிளேட்டாக புவி வெப்பமாதல் இன்ன பிற சேர்த்து உலகை காப்போம்னு அறிவுறைக்கூறி ஒரு  பதிவு, ஏன் ,எதற்கு எப்படி என்ற கேள்விகள் கிடையாது.

புவி தினம் என ஜல்லி அடிப்பதெல்லாம் வளர்ச்சி அடைந்த  நாடுகளின் சுய நல பிரச்சாரங்கள், மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் ஒரு சில அறிவு ஜீவிகளுக்கு டைம் பாஸ் சமாச்சாரங்கள், என பல உள்ளடி சமாச்சாரங்கள் இருப்பதை தெரிந்துக்கொள்ளாமலே இன்று ஒரு பதிவு போட "சப்ஜெக்ட்" கிடைத்து விட்டது என எதையும் யோசிக்காமல் பதிவ போட்டு ஹிட்ஸ் வாங்க அலையும் கூட்டம் தான் வலைப்பதிவுலகில் அதிகம் பெருகிப்ப்போய் கிடக்கு, ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இதை எல்லாம் ஊருக்கு சொல்லும் உத்தமோத்தம நாடுகளின் லட்சணத்தை இணையத்தில் தேடி அறிய எவரும் முன் வருவதில்லை.

புவி தினம் ,உலகை அழிவில் இருந்து காப்போம் என உலகுக்கே அறிவுறை சொல்லுபவர்களின் உண்மை நிலவரத்தை அடுத்தப்பதிவில் காண்போம்.

தொடரும்.

5 comments:

சார்வாகன் said...

அருமை சகோ

புவி தினம் ,சிட்டுக்குருவி தினம்,அட்சய திருதயை என்று பல தினங்கள் விள்ம்பரதாரர் வழங்கும் நிகழ்வுகள் என்பதில் நம்க்கும் மாற்றுக் கருத்து இல்லை.

(ஆட்சி மாற்ற‌)புரட்சி கூட மேலை நாடுகள் சொல்லும் வண்ணம் கீழை நாடுகளில் நிகழ்ந்தால் மட்டுமே அனுமதிப்பார்கள்.அப்புறம் அந்த தினம் இந்த தினம் எல்லாம் அவர்கள் சொல்வதுதான்.

புவி வெப்பமயமாதல் என்பது உண்மை இத்னை தவிர்க்க சில முயற்சிகள் அவசியம் என்றே கருதுகிறேன்.

இது பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்.

நன்றி

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம், நன்றி!

தொடரும் பகுதியில் எரிப்பொருள், ஆற்றல் பயன்ப்பாட்டின் எதிர்காலம், புவி வெப்பமடைதல், மாற்று எரிசக்தி என கலந்துக்கட்டி சொல்ல இருக்கிறேன்.

மேலை நாடுகல் இப்படி எல்லாம் சொல்வதே அவர்கள் தொடர்ந்து ஆற்றலை வசதிக்கு பயன்ப்படுத்தவே, புவி தினம் ஆரம்பிக்கப்பட்டு 42 ஆண்டுகள் ஆயிற்று அன்றிலிருந்து இன்று வரைக்கும் அமெரிக்காவின் எரிபொருள் பயன்ப்பாடு அதிகரித்து தான் வந்துள்ளது, ஏன் அவர்கள் குறைத்துக்கொள்ளவில்லை என்பதில் இருக்கு சூட்சமம்.

நாம் நமக்கான சுற்றுச்சூழல் கொள்கைகளை சுயமாக வகுத்துக்கொண்டு இயற்கையை பேண வேண்டும் என்பதே எனது எண்ணம்.

ராஜ நடராஜன் said...

தினங்களை பெரிதாக கொண்டாடா விட்டாலும் கூட புனித தினக் கொண்டாட்டங்கள் தவறு இல்லையென்றே நினைக்கின்றேன்.அமெரிக்கா இன்னும் கொஞ்சம் எரிபொருள் உபயோகிக்க ஏனையவர்கள் பழக்கப்பட்டுப்போன எரிபொருளை தியாகம் செய்வதில் தவறில்லை.உங்கள் நோக்கில் மேற்கத்திய உள் சுயநலங்கள் இருந்தாலும் கூட எரிபொருளே கடவுள்ங்கிற நிலை வராமல் இருக்க புவிதின விழுப்புணர்வு அவசியமான ஒன்றே.

சகோ.சார்வாகன்!என்ன சொல்கிறார்?புவிதினம் சரி!அட்சய திருதயை...அதுவும் சரி,ஆனால் அது என்ன சிட்டுக்குருவி தினம்:)
சிட்டுக்குருவி காணாமல் போயிடுச்சாக்கும்?இத்துணூண்டு இருக்குற குருவியையெல்லாம் புடிச்சு சாப்பிட்டுப் போட்டு இப்ப சிட்டுக்குருவி தினமாக்கும்:)

இந்த ஊர்ல அத்தனை சூடு அடிக்குது.ஆனாலும் சிட்டுக்குருவிகள் கொஞ்சம் ஏர்கண்டிசன்,கொஞ்சம் இரை பொருக்க சூடு காத்துன்னு நிறையவே சுத்துதுகள்.ஆனால் மனுசனுக்குத்தான் நின்று கவனிக்க நேரமில்லாமல் 150 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேலா பறக்கிறான்.

ராஜ நடராஜன் said...

நான் சொல்ல வந்த விசயமே வேற!அதுக்குள்ள சகோ.சார்வாகனின் பின்னூட்டத்துக்குள்ள மூழ்கிட்டேன்.

தொடரும் போட்டீங்க!அப்புறமா பார்த்தா அடுத்து பிலிம் காட்டிகிட்டிருக்கீங்களே:)

வவ்வால் said...

ராஜ்,

அவங்க சொல்வாங்க ஆனால் கடைப்பிடிக்க மாட்டாங்க, அதெல்லம் வளரும் நாடுகளை கட்டுப்படுத்த, தொடர்ச்சி வருகிறது.

சிட்டுக்குருவி தினம் பற்றியும் பதிவு இதற்கு முனர் தான் போட்டேன் பார்க்காமல் என்னதுனு கேளுங்க...


மேலும் சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளப்பறவையினமும் அல்ல, உலகில் மிக அதிகம் உள்ளப்பறவை கோழிகளே ,அதற்கு அடுத்த இடத்தில் சுமார் 2/3 உலக பரப்பில் எங்கும் காணப்படுவது சிட்டுக்குருவிகளே. மேலும் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகள், நியுசியிலும் கூட அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பயிர்களை அழிப்பதாலும் பெஸ்ட் என வரையறுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு மையம் கவலைப்பட தேவையில்லாத உயிரினம் என்றே வகைப்படுத்தியுள்ளது. நகர விரிவாக்கத்தின் காரணமாக கொஞ்சம் குறைந்திருக்கலாம் அவ்வளவே.இதெல்லாம் மயன் காலண்டர் படி உலகம் அழியும் என்று சொல்லி கிளப்பும் புரளியைப்போன்றது அல்லது சிலர் சுய விளம்பரத்திற்காக பரப்புவது.

மேலும் விரிவாக ஒருப்பதிவும் போட்டுள்ளேன்,
சிட்டுக்குருவி கட்டுக்கதைகள்