Saturday, May 19, 2012

"வசூல்ராஜா எம்பிபிஸ்"கள் இனியாவது கிராமத்திற்கு வருவார்களா?



இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மருத்துவக்கல்லூரிகள் இருந்தாலும் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் தேவையான மருத்துவர்களை உருவாக்கும் அளவுக்கு கல்லூரிகளின் எண்ணிக்கை இல்லை எனலாம் ,மேலும் உருவாகி வரும் மருத்துவர்களும் நகரத்திலேயே தங்கி விடுகிறார்கள் எனவே கிராமப்புரங்களில் மருத்துவ வசதி நிலைமை ரொம்பவே மோசம்.


தேவையான மருத்துவர்களை உருவாக்கவே அரசு மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி ,மருத்துவப்படிப்பை குறைவானக்கட்டணத்தில் வழங்கி வருகிறது. ஆனால் கிராமங்களுக்கு மருத்துவர்கள் பணிப்புரிய செல்வதேயில்லை, அனைவரும் வருமானம்,வசதி இன்னப்பிற காரணங்களை முன்னிட்டு நகரங்களில் தங்கி விடுகிறார்கள்.

தனியார் மருத்துவக்கல்லூரியில் படிக்க வேண்டும் எனில் குறைந்தது 25 லட்சம் ஆகும்,ஆனால் அரசு மருத்துவக்கல்லூரிகளில் சில ஆயிரங்களில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு கிராமங்களில் அரசு மருத்துவராக பணி நியமனம் செய்தால் செல்ல மறுக்கிறார்கள்,இப்பிரச்சினை நீண்டகாலமாகவே இருக்கிறது, எனவே மருத்துவ மாணவர்கள் கிராமப்பணி செய்வதை கட்டாயம் என சட்டம் கொண்டு வர இருப்பதாக மத்திய சுகாதார நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்,.

செய்தி:


டெல்லி: மருத்துவ மாணவர்கள், கிராமப்புறங்களில், ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்பதை கட்டாயமாக்கப் போவதாக மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

செய்தி சுட்டி;

இதுதொடர்பாக, மக்களவையில் குலாம்நபி ஆசாத் பேசியதாவது: கிராமப்புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றினால், அவர்கள் மருத்துவ முதுநிலைப் படிப்பில் சேர 50% இடஒதுக்கீடும், ஓராண்டு பணியாற்றினால் 10 மதிப்பெண்களும், பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றினால் 30 மதிப்பெண்களும் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

ஆனால், இவ்வளவு சலுகைகளை அறிவித்தாலும்கூட, கிராமப்புறங்களில் பணியாற்ற மருத்துவ மாணவர்கள் முன்வரவில்லை. எனவேதான், கிராமப்புறங்களில் பணியாற்றுவதை கட்டாயமாக்கும் நிலை வந்துள்ளது.

சமீபத்தில் சென்னை வந்த மகாராஷ்டிர மருத்துவக்கல்வி அமைச்சர் அவர்கள் மாநிலத்தில் உள்ள சட்டம் பற்றிக்கூறியது....

சென்னை:""எங்கள் மாநிலத்தில், அரசு மருத்துவக் கல்லூரியில் படித்தவர்கள், கிராமப்புறங்களுக்குச் சென்று பணியாற்றவில்லை எனில், அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும்,'' என, மகாராஷ்டிர மருத்துவக் கல்வி அமைச்சர், விஜய்குமார் காவித் கூறினார்.

News link-2

மத்திய அரசு சொல்லிக்கொண்டே இருக்கிறது பல காலமாய் ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் பின் வாங்கிவிடும், எனவே மத்திய அரசை நம்பாமல் தமிழக அரசு , மகாராஷ்டிர மாநிலத்தினை முன் மாதிரியாகக்கொண்டு மருத்துவர்கள் கட்டாய கிராம சேவை செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வரலாம், எது எதற்கோ அதிரடியாக செயல்படும் அம்மையார் இவ்விஷயத்தில் இரும்புக்கரமோ ,சாட்டையோ சொடுக்கினால் மக்களுக்கு பயன் அளிக்குமே.

இனியாவது வசூல் ராஜா எம்பிபிஎஸ்கள் பணியாற்ற கிராமத்திற்கு போக முன் வருவார்களா?

மருத்துவ மாணவர்களின் கிராம புறக்கணிப்பு பற்றி 2007 இல் நான் எழுதிய பதிவு,


--------------

பின்குறிப்பு:

தகவல்,படங்கள் உதவி,

கூகிள்,தினமலர்,சுலேகா.காம்,இணைய தளங்கள்,நன்றி!

*****

7 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
நல்ல் பதிவு.கிராமப் புறங்களில் பணியாற்றினால் பணம் அதிகம் கிடைக்காது என்பதல் மறுக்கிறார்கள் என்பதும் கட்டாயப் படுத்தினால் செய்வார்கள் என்பது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என தெரியவில்லை.

இந்த சுட்டியில் 1000 மக்கள்க்கு எத்தை மருத்துவர்கள் உலக நாடுகளில் உள்ளனர் என்ற விவரம் உள்ளது.

உலக சராசரி 1.7 மருத்துவர்/1000 மக்கள்

இந்தியா 124 வது இடம் 0.6/1000 மக்க்ள்.

சைனா 77 வது இடம் 1.51/1000 மக்கள்

USA 52 வது இடம் 2.3/1000 மக்கள்

http://www.nationmaster.com/graph/hea_phy_per_1000_peo-physicians-per-1-000-people

ஆகவே மும்மடங்கு மருத்துவர்கள் எண்ணிக்கை பெருக்க வேண்டும்.ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் ஒரு மருத்துவ கல்லூரி திறக்க வேண்டும். தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7 கோடி எனில் தேவைப்படும் மருத்துவர் அளவு சுமார் 12 இலட்சம்.இதில் 5%[60,000] வருடம் வெளிவந்தால் மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியும்.மருத்துவர்கள் அதிகரித்தால் கிராம்ப் புறம் என்ன எங்கும் வருவார்கள்.

அமெரிக்காவில் கிராமப்புறங்களில் பெரும்பாலும் பணியாற்றுவது நம் ஆட்கள்தான் என்பதையும் குறிப்பிடலாம்.

ஆகவே இலவ மருத்துவ கல்விக் கூடங்கள் ஒவ்வொரு மாவட்ட தலைநக்ரிலும் திறந்தால் அதிக செலவின்றி படிப்பவர்களில் பாதிபேராவது கிராமப்புறம் போட்டியினால் செல்வார்கள் நடக்குமா!
நன்றி

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

ஒரு ஆண்டு வேலை செய்தால் மருத்துவ முதுகலை நுழைவு தேர்வில் கூடுதலாக 10 மதிப்பெண், 33 ஆண்டு எனில் 30 , 5 ஆண்டு எனில் 50 மதிப்பெண், என சலுகை இருக்கு ஆனால் யாரும் கிராமம் செல்ல மறுக்கிறார்கள் ,எனவே கட்டாயம் என ஆக்கப்போவதாக அமைச்சர் சொல்லியுள்ளர்.

தானாக எக்காலத்துக்கும் போக மாட்டார்கள்.

உங்கள் புள்ளி விவரங்களுக்கு நன்றி,நானே சேர்க்கணும் என நினைத்து விட்டு விட்டேன். இந்தியா முழுக்கவே 8.5 லட்சம் டாக்டர் தான் இருக்காங்கலாம், நீங்க தமிழ்நாட்டுக்கே 12 லட்சம் கேட்குறிங்க :-))

ஆம் நிறைய மருத்துவக்கல்லூரிகள் வேண்டும்,ஆனால் செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் அரசு செய்ய மாட்டேன்கிறது, இலவச டி.வி,மிக்சி,பேன் எனக்கொடுப்பதற்கு பதில் கல்லூரிகள் துவங்கலாம்.

சார்வாகன் said...

சகோ வவ்வால்
அது 12 இலட்சம் அல்ல 1.2 இலட்சம்( ஒரு இலட்சத்து இருபது ஆயிரம்).ஆகவே வருடம் 6000 மருத்துவர் உருவாக்க வேண்டும்.
இபோது மொத்த மருத்துவ படிப்பில் வருடம் 1500 மட்டுமே உருவாகிறார்கள்.
இபோது கண்க்கு சரியாக வரும்.
தவறுக்கு வருந்துகிறேன்
நன்றி

வவ்வால் said...

பிழை திருத்தம்:

முந்தைய பின்னூட்டத்தில் "3 ஆண்டுகள் வேலை செய்தால் 30 கூடுதல் மதிப்பெண்கள்" என திருத்திப்படிக்கவும், 33 என தவறுதலாக தட்டச்சி விட்டேன்!

-------

சகோ.சார்வாகன்,

அதனால் என்ன ,12 லட்சம் மருத்துவர்கள் இருந்தாலும் நல்லது தானே.

தமிழ் நாட்டுக்கு நிறைய மருத்துவர்கள் வேண்டும் ஆனால் ,நிறைய பொறியியல் கல்லூரிகள் தான் இருக்கு.

அரசு தீவிரமாக கவனிக்க வேண்டிய விடயம்,ஆனால் உள்குத்து அரசியல் செய்யவே நேரம் இல்லை அவர்களுக்கு!

ராஜ நடராஜன் said...

வவ்!எதனையும் கட்டாயம் என்ற நோக்கில் சேர்ப்பது எவ்வளவு சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்?

மருத்துவர்கள் நகர்ப்புறங்களை விரும்புவதற்கும்,கிராமப்புறங்களை மறுப்பதற்குமான அடிப்படை காரணங்கள் என்ன?அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அல்லவா?மருத்துவம் உயிர் சார்ந்த தொழில்.ஏதோ கிராமத்துக்குப் போனோம் மருத்துவ பணி செய்தோமென்று இருக்க முடியாது.இந்த பதிவு போடும் நேரத்திலும் கூட எமர்ஜென்சி நிலையில் ஒரு கிராம மருத்துவ மனை எப்படி இயங்குமென்பதே என் கண் முன்னே படமாக விரிகிறது.அப்படியிருந்த போதும் அடிப்படை மருத்துவ உதவிகளுக்காவது டாக்டர்கள் கட்டாயம் கிராமத்து மக்களுக்கு தேவை.ஆனால் கட்டாய படுத்தவேண்டிய காரணமென்று யோசிக்கும் போது சேவை மனப்பான்மையை விட மருத்துவம் காசு பார்க்கும் தொழில் முறை மாதிரி ஆகிப்போனது காரணம்.மிஷினரிகளைப் பாருங்கள்.கிராமங்கள் கூட தேர்ந்தெடுத்து செல்வதன் காரணம் மதம் மீது கொண்ட ஆர்வமல்லவா?தொடர்ந்து வளரும் அறிவியலை தெரிந்து கொள்ளாத படியான சூழலில் மட்டுமே கிராமங்கள் இருப்பதை தொழில் ஈடுபாடு கொண்ட மருத்துவர் கூட விரும்ப மாட்டார் அல்லவா?

பொருளாதாரவாதியை பிரதமராக்கும் இந்தியா ஒரு மருத்துவனை எப்பொழுது பிரதமராக்கும்?

பின்னூட்டம் போடுறேன் பேர்வழியென்று இல்லாமல் யதார்த்தங்களை யோசித்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

வவ்வால் said...

ராஜ்,

//பின்னூட்டம் போடுறேன் பேர்வழியென்று இல்லாமல் யதார்த்தங்களை யோசித்தால் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.//

யதார்த்தத்தை யோசித்து ,ஏன் அப்படி நடக்கவில்லைனு மாற்று வழியாக சட்டப்பூர்வமாக செய்ய நினைத்தால் ஜனநாயகம்னு சொல்லி ,உடனே கொடி தூக்குறிங்க,அப்புறம் என்ன வருத்தம் உங்களுக்கு :-))

//வவ்!எதனையும் கட்டாயம் என்ற நோக்கில் சேர்ப்பது எவ்வளவு சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்?//

வாகனம் ஓட்ட லைசென்ஸ் வேண்டும் என்பது கட்டாயம்,

#உங்க காசு ,உங்க வண்டி அதுக்கு என்னாதுக்கு கட்டாய லைசென்ஸ்.

# சிக்னலில் ரெட் விழுந்தா நிக்கணும் என்பது கட்டாயம் ,

# சாலையின் இடது புறம் வாகனம் ஓட்ட கட்டாயம்,

#வீடுக்கட்ட நகரமைப்பில் அனுமதி வாங்க கட்டாயம்,

#காசுக்கொடுத்த் சிகரெட் வாங்கி,உங்க வாயில வச்சு பத்த வச்சாலும், பொது இடத்தில் செய்யக்கூடாது கட்டாயம்,

#நாம கஷ்டப்பட்டு சம்பாதிச்சா அதுக்கு கூட வருமான வரிக்கட்ட சொல்லி கட்டாயப்படுத்துராங்க !

இது போல பல கட்டாயங்கள் இருக்கு,அதெல்லாம் ஜனநாயக அமைப்பில் கட்டாயம செய்யணுமா என கேட்க மாட்டீங்களா அய்யா?

ராஜ நடராஜன் said...

பதிவுகளை முன்னோக்கி மேயறதுக்குப் பதிலே பின்னோக்கி பின்னூட்டங்களைப் பார்க்கிறேன்.

அதே!அதே!நீங்க சொல்லும் கட்டாயங்கள் ஒன்றும் கூட இந்தியாவில் ஒழுங்கா கடைப்பிடிக்கப்படுவதில்லை.நீங்க சொன்ன அத்தனையும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் மருத்துவர்கள் கூட கிராமசேவைக்கு தயாராக இருப்பார்கள்.