Tuesday, June 26, 2012

vishwaroopam in barco auro- 11.1 3d audio.



லோகநாயகர் கமலஹாசர் விசுவரூபம் என்ற திரைக்காவியத்தை செதுக்கி எடுத்து வருகிறார், தமிழ் சினிமாவை உலக சினிமாவாக ஆக்க அவர் ரொம்ப முயற்சிக்கிறார் என லோக நாயகரின் விசுவாசிகள் வழக்கம் போல முரசொலிக்கிறார்கள்.

ஏற்கனவே சிங்கப்பூரில் நடந்த "IIFA film festival" இல் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சினிமாவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அப்படத்தின் ஒலி அமையமைப்பினை 11.1 டிராக்கில் அமைக்க அமெரிக்கா செல்கிறார் என செய்திகள் வெளியாகின. அப்படியானால் சிங்கப்பூரில் ஒலியில்லாமல் படம் திரையிடப்பட்டதா? இல்லை மீண்டும் புதிதாக ஒலிச்சேர்க்கை செய்வாரா என ஒரு சந்தேகம்.

11.1 டிராக் ஒலியமைப்பு என்கிறார்களே அது என்ன என இணையத்தில் துழாவியதில் கிடைத்தவைகளை இங்கே பகிர்கிறேன்.


Barco audio என்ற அமெரிக்க ஒலிப்பொறியியல் வடிவமைப்பு நிறுவனம் தற்சமயம் barco Auro11.1 3d sound என்ற திரையரங்க ஒலி அமைப்புக்கு வடிவமைத்துள்ளது. இம்முறையில் ஒலியமைக்கப்பட்ட முதல் ஹாலிவுட் படம் ஜார்ஜ் லுகாஸ் தயாரிப்பில் வெளிவந்த "ரெட் டெயில்ஸ்" என்ற இரண்டாம் உலகப்போர் அடிப்படையிலான படமாகும் ,இப்படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது.



வழக்கமான திரையரங்க ஒலியமைப்பில் டிடிஎஸ் -5.1 , டால்பி டிஜிட்டல் புரோலாஜிக் -7.1 என இரண்டு அமைப்புகளே பெரிதும் பயன்ப்படுத்தப்படுகின்றன.


இரண்டும் தனித்தனி போட்டி நிறுவனம் ஆனால் ஒரே படத்தில் இரண்டு அமைப்பிலும் ஒலிச்சேர்க்கை செய்து இருப்பார்கள், இதன் மூலம், திரையரங்கில் இருக்கும் ஒலியமைப்புக்கேற்ப ஒலிக்கப்படும்.

(திரைப்பட சுருளில் உள்ள ஒலிக்குறிப்புகள், இதில் குறைவான அளவில் பயன்ப்படும் சோனி SDDS ஒலியும் உள்ளது)

மேலும் இவ்வொலியமைப்பின் ஒலிக்குறிப்புகள் மட்டும் இல்லாமல் வழக்கமான ஸ்டீரியோ மற்றும் மோனோ ஒலியும் திரைப்பட சுருளில் இருக்கும், ஏன் எனில் சமயங்களில் டால்பி,டிடிஎஸ் ஒலியமைப்புகள் செயல்படாமல் போனால் இவை அவசரத்துக்கு உதவும். பழைய திரையரங்குகளில் திரையிடவும் உதவும்.

5.1 அல்லது 7.1 என குறிப்பது 5 (அ) 7 சேனல்கள் ஒலிக்கும் ஒரு சேனல் சப்-ஊஃபருக்கும். எனவே 5.1 என்றால் 6 சேனலில் ஒலியும் 7.1 என்றால் 8 சேனலில் ஒலியும் வரும். இவற்றில் 5.1 இல் ஒலிப்பெருக்கிகள் முன்பக்கம் ,வலப்பக்கம், இடப்பக்கம், பின்பக்கம் என்ற அமைப்பில் அனைத்து ஒலிப்பெருக்கியும் கிடைமட்ட தளத்தில் இருக்கும்.

எனவே திரையில் தோன்றும் காட்சியில் ஒலியின் உயர வித்தியாசம் அறிய முடியாது என டால்பி 7.1 இல் இரண்டு ஒலிப்பெருக்கிகளை கூறை உயரத்தில் பொருத்தி செங்குத்து அச்சிலும் ஒலியை உருவாக்கி முப்பரிமான ஒலி என்றார்கள்.

இதன் அடுத்தக்கட்டமாக உயரத்தில் அமைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வேறுப்பட்ட உயரத்தில் ஒலிப்பெருக்கிகளை அமைத்து ,மேலும் ஒலி செல்லும் சேனல்களின் எண்ணிக்கையை 11.1 என 12 சேனல்களில் கொடுப்பது தான் barco Auro11.1 3d sound அமைப்பாகும்.


இவ்வமைப்பில் கூறையில் உள்ள ஒலிப்பெருக்கிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விமானம் பறப்பது போன்ற காட்சிகளில் ,"தத்ரூபமான ஒலி சூழல்" திரையரங்கில் உருவாகும், எனவே தான் "ரெட் டெயில்ஸ்" என்ற படத்தில் பயன்ப்படுத்தினார்கள், அப்படம் இரண்டாம் உலகப்போரில் ஈடுப்பட்ட விமானப்படைப்பிரிவின் சாகசத்தினை விவரிக்கும் படம். ரெட் டெயில் என்பது அமெரிக்க விமானப்படையில் ஒரு பிரிவின் சங்கேதப்பெயர் ஆகும்.

அப்படம் வெளியான காலத்தில் மொத்தமே நான்கு திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு அமெரிக்காவில் இருந்தது.எனவே அவ்வொலியமைப்பின் சிறப்பினை பலரும் உணர வாய்ப்பேயில்லை. தற்போது வரைக்கும் உலகம் முழுவதும் 125 திரையரங்கில் தான் 11.1 ஒலியமைப்பு வசதியுள்ளது.

ஆரோ11.1 ஒலியமைப்பின் விளக்கப்படம்

சுட்டி:



இந்தியாவில் இது வரையில் ஒரு திரையரங்கிலும் அவ்வசதியில்லை. பின் எதற்கு லோகநாயகர் 11.1 இல் ஒலியமைப்பு செய்யபோவதாக சொல்கிறார் எனப்பார்க்கிறீர்களா எல்லாம் ஒரு "மார்க்கெட்டிங்" உத்திதான்.மேலும் இதில் சின்னதாக ஒரு சூட்சமமும் இருக்கு,அது என்னவெனில் 11.1 இல் ஒலியமைப்பு செய்யாமல் ஏற்கனவே இருக்கும் ஒலியமைப்பினை 11.1 ஆக கன்வெர்ஷன் செய்யும் வசதியை பயன்ப்படுத்திக்கொள்வது தான்.

திரைப்பட ஒலியமைப்பில் சில முதல்கள்:

ஹாலிவுட்டில்,

முதல் டால்பி டிஜிட்டல் திரைப்படம்-பேட்மன் ரிடர்ன்ஸ்.

முதல் டிடிஎஸ் திரைப்படம்- ஜுராசிக் பார்க்-1

தமிழில்.

முதல் டால்பி- குருதிப்புனல்.

முதல் டிடிஎஸ்- கருப்பு ரோஜா.


ஆரோ 11.1 ஒலியமைப்பு கருவி என்பது ஒரு கணினி போன்றது தான், இதில் ஒலியை ஒலிக்க செய்ய ஒரு கோடெக், ஒரு பிராசசர், அப்மிக்ஸ் பிராசசர் என மூன்று பகுதிகள் இருக்கிறது.

இந்த டிடிஎஸ்5.1,டால்பி 7.1,ஆரோ11.1 என்பதெல்லாம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒலியை கம்பிரஷன் செய்யும் முறையே அதாவது எம்பி-3,வேவ்,மிடி போன்ற கம்பிரஷன் ஃபார்மெட்கள்.

இசையமைப்பாளர்கள் ஒலியமைப்பு,இசையமைப்பு செய்து பதிவு செய்யும் போது 16 டிராக், 32 டிராக் எல்லாம் பயன்ப்படுத்துவதுண்டு, எனவே ஒலிகோப்பின் அளவு பல ஜிகா பைட்டுகள் இருக்கும்,அதனை திரையரங்கில் அப்படியே ஒலிக்க செய்ய இயலாது என்பதால் ஒலிக்கோப்பின் அளவை அழுத்தி சுருக்கவே டிடிஎஸ்,டால்பி,ஆரோ என விதவிதமான கம்பிரஷன் முறைகளை பயன்ப்படுத்துகிறார்கள்.

எம்முறையில் அதிக சேதம் இன்றி துல்லியமாக செய்ய முடியுமோ அதனை தேர்வு செய்வார்கள், சேனல்களின் எண்ணிக்கை கூடும் போது இன்னும் கொஞ்சம் துல்லியமாக இருக்கும்.

டிடிஎஸ் மிக்சிங்க் என்பது 32/16 டிராக்கில் இருக்கும் ஒலிப்பதி செய்யப்பட்ட ஒலியை 6 டிராக்கில் தேவைக்கு ஏற்ப மாற்றி சுருக்குவது,அது போலவே டால்பி 7.1 மற்றும் ,ஆரோ 11.1 ஆகும்.

எந்த முறையில் ஒலிக்கலவை செய்த ஒலியையும் ஆரோ 11.1 அமைப்பில் தியேட்டரிலே11.1 ஆக ஒலிக்க செய்யும், ஆனால் 11.1 இல் ஒலிக்கலவை செய்த துல்லியம் இருக்காது.ஏற்கனவே சிங்கப்பூரில் திரையிடப்பட்ட நிலையில் டிடிஎஸ்,டால்பி என ஒலிக்கலவை செய்து இருப்பார் லோகநாயகர், இப்போது அதனை அப்படியே ஆரோ11.1 ஃபார்மெட் ஆக மாற்ற மட்டுமே செய்வார் என நினைக்கிறேன், இது செலவில்லாத எளிய வழி ,ஆனால் முழுக்க ஆரோ 11.1 இல் ஒலிக்கலவை செய்தது போன்ற தோற்றத்தினை உருவாக்கிவிடுவார், எல்லாம் ஒரு வியாபார தந்திரம் தான்.மேலும் 11.1 டிராக்கில் செய்த வித்தியாசத்தினையும் யாரும் உணர முடியாது, ஏன் எனில் அப்படியான ஒலியமைப்பு வசதிக்கொண்ட திரையரங்குகள் இந்தியாவில் , குறிப்பாக தமிழகத்தில் இல்லை.

மேலும் இந்த barco Auro11.1 3d sound ஒலியமைப்பே பழமையான ஒன்றாகிவிட்டது ,இனிமேல் உலக அளவில் , இம்முறையை பெருமளவு பயன்ப்படுத்த மாட்டார்கள் என நினைக்கிறேன் காரணம் ஒலியமைப்பு பொறியியலில் ஜாம்பவான் ஆன டால்பி நிறுவனம் ஒரே தாவலாக 128 சேனல் கொண்ட டால்பி அட்மோஸ் 3டி சர்ரவுண்ட் என்ற ஒலியமைப்பினை உருவாக்கி போட்டியாளர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டது. டால்பி அட்மோஸ் ஒலியமைப்பில் பிக்சார் தயாரிப்பில், டிஸ்னி விநியோகத்தில் பிரேவ் என்றப்படம் இம்மாதம் வெளியாகியுள்ளது.




டால்பி அட்மோஸ் ஒலியமைப்பு அமெரிக்காவில் 14 திரையரங்கிலும் , ஸ்பெயினில் பார்சிலோனவில் ஒன்றும், லண்டனில் ஒன்றும் என இது வரை மொத்தம் 16 அரங்குகளில் மட்டுமே அவ்வசதியுள்ளது.

டால்பி அட்மோஸ் ஒலியமைப்புள்ள அரங்கம்.

டால்பி நிறுவனம் உலகெங்கும் பரவலாக நிறுவ முனைப்பு காட்டிவருகிறது ஏற்கனவே பல திரையரங்குகளில் டால்பி 7.1 உள்ளதால் ,அவர்கள் அனைவரும் அதிக திறனுள்ள டால்பி அட்மோஸ் நிறுவவே முயல்வார்கள்.இவ்வமைப்பில் 128 சேனல்/டிராக்கில் ஒரு காட்சியில் உள்ள 128 வகையான ஒலிக்கூறுகளை தனித்தனி டிராக்கில் தேவைக்கு ஏற்ப ஒலிப்பெருக்கிகளுக்கு வழங்க முடியும்.இதனால் காட்சியின் வீச்சு இன்னும் அதிகம் ஆகும்.இதில் மொத்தம் 64 ஒலிப்பெருக்கிகள் கிடைமட்டத்திலும், கூறையிலும், பல உயர அளவில் அமைக்கப்பட்டு முழுமையான முப்பரிமாண ஒலியை தரும். எனவே இனி டிடிஎஸ், barco Auro11.1 3d sound போன்றவர்கள் அவர்கள் ஒலியமைப்பினை மேம்ப்படுத்தினால் மட்டுமே சந்தையில் நிற்க முடியும்.

கொசுறு:



விஷ்வரூபம் கதை சுருக்கம் என இணையத்தில் போட்டிருக்கிறார்கள், அதில் லோகநாயகர் ,அமெரிக்காவில் கதக் நடனப்பள்ளி நடத்திவருபவர்,அவரை அணு விஞ்ஞானத்தில் ஆய்வு செய்யும் "மாணவியான "ஆன்ட்ரியா காதலித்து மணமுடிக்கிறார். பின்னர் அவரது ஆய்வு படிப்பு முடிந்ததும் விவாகரத்து செய்ய விரும்பும் ஆன்ட்ரியா, ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் போலியான குற்றச்சாட்டு மற்றும் ஆதாரங்களை லோகநாயகரின் மீது சுமத்துகிறார், அதன் பின்னர் லோகநாயகர் உண்மையில் யார் என காட்ட விஷ்வரூபம் எடுக்கிறாராம்.


மேலும் பல புகைப்படங்களில் கையில் வித விதமான துப்பாக்கிகளுடன் "போஸ்" கொடுக்கிறார். எனக்கென்னமோ "mr&mrs smith"ஐ உல்டா அடிச்சிருப்பாங்களோனு தோன்றுது. படம் வந்தா "போஸ் மார்ட்டம்' செய்ய ஒரு கூட்டமே இருக்கு ,உண்மை தெரியாமலா போயிடப்போகுது :-))


இந்தப்படத்தில நடிக்கிற எந்த நடிகையரையும் பார்க்க சகிக்கலை, அடிமாட்டு சம்பளத்துக்கு புடிச்சு போட்டு இருப்பாங்க போல, தீபீகா இப்படத்தில் நடிக்க மறுத்ததாக உலாவும் செய்திக்கும் , இங்கே படம் போட்டதுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, சும்மா ஒரு அழகியல் நோக்கிலேயே தீபு படம் போட்டு இருக்கேன் :-))
---------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, டால்பி,டிடிஎஸ், பார்கோ,பிபிசி, விக்கி,கூகிள்,IMDB இணைய தளங்கள்,நன்றி!

*****

32 comments:

கோவை நேரம் said...

வணக்கம் தல..அசத்தலான பகிர்வு.

கோவை நேரம் said...

எது கிடைச்சாலும் அலசி அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு எறிஞ்சுடறீங்க.ஒண்ணுமே இல்லாம நாங்க போடறது பதிவுன்னா உங்களை எல்லாம் எவ்ளோ உசரத்தில் வைக்கனும்..வாழ்த்துக்கள்

Anonymous said...

புது தகவல்கள் நன்றி..

// Barco audio என்ற அமெரிக்க ஒலிப்பொறியியல் வடிவமைப்பு நிறுவனம் //

இது ஒரு பெல்ஜிய நாட்டு நிறுவனம். எப்பொழுது அமெரிக்க நாட்டு நிறுவனமாச்சுன்னு தெரியல.. அவங்க வலைதளத்தில கூட அமெரிக்க விலாசம் தான் கொடுத்திருக்காங்க.. ஒரு வேளை எதாவது ஒலிப்பொறியியல் நிறுவனத்த வாங்கி இருக்கலாம்..

--SA

CS. Mohan Kumar said...

லோக நாயகர் பேரே அருமையா இருக்கு

கதை சுருக்கம் சொன்னதுக்கு நன்றி

எங்க உங்களுக்கு ஆண்ட்ரியாவை பார்த்தா பிடிக்கலையா? யாரும் அழகா இல்லைன்னு சொல்றீங்க ?

naren said...

Dear batman,

விஸ்வரூபம், படத்தை லோகநாயகருடன்( பட்ட பெயர் நல்லாதான் இருக்கு..ஹாலிவுட்லே என்னை கூப்டாஆஆக -பிறகு) பி.வி.பி என்ற "பெருநிறுவன”மும் இணைந்து தயாரிக்கின்றது. உண்மையில் லோகநாயகர் நயா பைசா செலவு செய்திருக்கமாட்டார். 45 கோடி சம்பளமும் வாங்கியிருப்பார்.
படம் வெளி வந்த பிறகு, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் முதல் கேள்வி பி.வி.பி நிறுவனம் திவாலாகாமல் இருக்குமா என்பதுதான். இந்த படத்தின் விளம்பரத்தை எதிர்ப்பார்த்து விளம்பரதார நிறுவனங்களும் ஊடகங்களும் எச்சில் ஊற “பிரபஞ்ச” அளவு வெற்றி என்று விளம்பரபடுத்தி பணம் பார்க்க ஆவலாக உள்ளன.

நம்ம பாலிஸி, சரியில்லாத படத்தை பொருளாதாரா நிலை வசதியிருந்தால் திரையரங்கில் பார்ப்பதும், நல்ல படத்தை திருட்டு டி.வி.டி யில் பார்பதுதான். டிக்கேட் விலையை பார்த்து இப்ப எப்பவுமே திருட்டு டி.வி.டி தான்.

ஒலியமைப்பு என்பது எல்லாம் எக்ஸ்டரா ஸ்பீக்கர் வைத்து அதிக சவுண்ட் விடுவதுதான் என்பதை விளக்கியதற்கு நன்றி.

ஆமா கண்ணு தெரியாத நீங்க படம் பார்க்க பிரத்யேகமாக குறைந்த அதிர்வெண் உயர் அதிர்வெண் (அதாங்க low and high frequency)என்று ஒலியமைப்பு உள்ளதா. நாய்களுக்குதான் sub woofer இருக்கே.

கமல் பாணியில் நல்ல பதிவு.

V said...

நல்ல அருமையான பதிவு

ராஜ நடராஜன் said...

திடீர்ன்னு திரையரங்கு கதவை திறந்தவுடன் என் படத்தை பறவைகளுக்குப் பின்னால் ஒட்ட வைச்சிரிக்கீங்களோன்னு பகீர்ன்னு ஆயிடுச்சு:)
இருக்கும் பொருளாதார வசதி,தொழில் நுட்பங்கள்,முக்கியமாக திருட்டு வீடியோவில் படம் பார்க்காமல் எத்தனை பேரால் கல்லா கட்ட இயலுமென பல வியாபார நுணுக்கங்களுக்கு மத்தியிலும் யாராவது துணிந்து முதலீடு செய்து புது முயற்சி செய்தால் இந்த முறை நீங்க நொள்ளை சொல்வதற்கு முதல் டிக்கெட் எடுத்துகிட்டு வந்திருக்கீங்க போல இருக்குதே!இன்னும் இடிச்சிகிட்டும்,தலைமேலே ஏறியும் டிக்கட் வாங்கறதுக்கு எத்தனை பேர் வருவாங்கன்னு பார்க்கலாம்.

5.1 அல்லது 7.1 ல் 1 எண் சஃப் வூபரை குறிப்பது ஏனையவை இடது வலது முன் பக்கம் பின் பக்கம் என்று நம்ம ஊர் கல்யாண ரேடியோ பெட்டிகளை சுத்தி வைத்து சவுண்டு விடறதுங்கிறது பழையதும் பெரும்பாலோர் அறிந்த ஒன்றே.மோனோ ஒன்று,ஸ்டிரியோ இரண்டு என்பதிலிருந்து 5,7 டோல்பி டிஜிட்டல்,புரோ லாஜிக் தவிர டிஹெச்எக்ஸ் (THX)ஒலி நுட்பமும் இருக்கிறது.7:1 அடுத்து 7.2 வந்து இப்ப 11.1 என புது பரிணாமம் ஆகியிருப்பது உங்க பதிவிலிருந்து தெரிகிறது.

பின்னூட்டத்துக்கு மட்டும் பந்திக்கு முந்தும் நரேன்:) சொல்வது போல் ஒலியமைப்பு என்பது எல்லாம் எக்ஸ்டரா ஸ்பீக்கர் வைத்து அதிக சவுண்ட் விடுவது மட்டுமல்ல.உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒவ்வொரு செயல்பாடுகள் இருப்பது போல் ச்ஃப் வூபர் செய்வதையும்,மெயின் ஸ்பீக்கர் செய்வதையும் ஏனைய பக்க வாத்தியங்கள் செய்யாது.பக்க வாத்தியங்கள் என்றதும் ஒலி அமைப்புக்கள் கூட கிட்டத்தட்ட கச்சேரி செய்வது மாதிரிதான்.ஒவ்வொன்றும் தனி ஒலிகள் எழுப்புவது போலவே 5.1, 7.1,2 ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஒலியை தனித்துக்காட்டும்.உதாரணமாக பேட்மேன் 4 படத்துல பேட்மேன் எல்.ஐ.சி கட்டிட உயரத்திலிருந்து பறந்து வந்து நம்ம வவ்வால் அண்ணாசாலையில் வாகனம் ஓட்டிகிட்டுப் போவதை பார்த்து நமக்கு போட்டியா யாரது என குளோசப்பில் பார்க்க ரெக்கை கட்டிப் பறந்தா ச்ஃப் வூபர் டமாரமடிக்காது.ஒலி அமைப்புக்கு தகுந்த மாதிரி இடது வலது அல்லது பின்புற ஸ்பீக்கர்கள் மட்டுமே பறக்கும் ஒலியை கொடுக்கும்..

திருட்டு விடியோக்கள் இல்லாத கனாக் காலங்களில் மெட்ராஸின் குளு குளு தியேட்டர்களின் அமைப்புக்களும்,ஒலி அமைப்புக்களும் சிறந்தவை.எந்த ஸ்பீக்கரில் எங்கேயிருந்து ஒலி வருகிறதென அறியாமல் கதையில் மட்டுமே மூழ்கி விடும் சிறந்த அனுபவங்களை தமிழக திரையரங்குகள் தந்தன.அப்பவே அப்படின்னா இப்ப 11.1 கொண்டு வருவது ஒன்றும் பிரச்சினையே இல்லை.குறைந்தபட்சம் சென்னையின் ஒரே தியேட்டர் முயற்சித்து விளம்பர படுத்தி கூட கல்லா கட்டலாம்.நான் அவதார் படத்தை ஐமேக்ஸ் தியேட்டரில் அப்படித்தான் வித்தியாசமான அனுபவம் என்ற விளம்பரத்தால் பார்த்தேன்.

ப.ரா ஏற்கனவே அசினை விட்டால் வேற ஆளே இல்லையான்னு சிணுங்கிகிட்டார்.ஏனில்லை இரண்டு சீட்டுக்காரன் மாதிரி தீபிகாவை காட்டுறீங்க!ஏனிந்த வேலை?

வவ்வால் said...

கோவை நேரம்"ஜீவா"

வாங்க நண்பா,வணக்கம்,நன்றி!

உண்மையில வஞ்சணையில்லா மனசு நண்பா, திறந்த மனசோட பாராட்டுறிங்க, ஆனாலும் நமக்கு அந்தளவுக்கு தகுதி வரலை, என்ன மட்டும் உயரத்துக்கு அனுப்பினா தனியா போக பயமா இருக்கும் ,கூட துணைக்கு(ஒரு பேச்சு துணைக்கு) வருவதா இருந்தா ஓ.கே :-))

நன்றி!நன்றி!நன்றி!

--------
எஸ்.ஏ,

வாங்க,நன்றி!

பெல்ஜியம் என்ற நதி மூலத்தகவலுக்கு நன்றி.

அமெரிக்காவில் இயங்கும் நிறுவனம்னு போட்டு இருப்பதால் ,அப்படியே போட்டேன்,இதுக்காக எங்கே இருந்து வந்தாங்க என்பதெல்லாம் ஆராயவா முடியும்.

அமெரிக்காவில் திரைத்துறை பெரிதாக உள்ளதால் அங்கு வந்து ஆரம்பித்து இருக்கலாம்.

-------------

மோகன்,

வாங்க,நன்றி!

ஆண்டி ஸ்டேஜ் தாண்டியாச்சு ஆண்ட்ரியா, அதை இன்னுமா ரசிக்குறிங்க ...என்ன கொடுமை சார் இது :-))

இன்னொரு நாயகி? பூஜா குமார் ஏகப்பட்ட அடி வாங்கின சொம்பாட்டம் இருக்கு :-)) படத்தில் யாருமே ஹீரோயின் மெட்டிரியல் இல்லை.

---------
நரேன் ,

வாரும் ,நன்றி!

லோகநாயகர் வச்சு படம் எடுத்த எல்லாரும் ,கடைசியில முக்காடு போட்டுக்கிட்டு தான் போறாங்க, பிவிபி ,பாலிவுட் /டோலிவுட் நிறுவனம் போல... இருக்கிற காசுல கொஞ்சம் இறங்கும்,இல்லை ஒரே அடியா ஊரவிட்டு ஓடுமான்னு தெரியலை.

பிரமிட் சாய் மீராவுக்கு பூட்டுப்போட உதவியவர் நம்ம லோகநாயகர், பிவிபி ஆயுள் ரேகை எப்படியோ?

லோகநாயகர் ஓசி விளம்பரம் தேடத்தான் ஆலிவுட் அழைப்பு, 11.1 சவுண்ட் என பிட்டு போட்டுக்கிட்டு இருக்கார்.

ஓய் யார் சொன்னா வவ்வாலுக்கு கண்ணு தெரியாதுன்னு, அகக்கண்,புறக்கண் ரெண்டும் வேலை செய்யும், காதும் கேட்கும், அதுவும் செம ஷார்ப்பா.டிஸ்கவரிலாம் பார்க்கணும், சும்மா மானாட மயிலாட மட்டும் பார்த்தா எப்படி.

---------

வேல்முருகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

கிரிக்கெட் எல்லாம் நல்லாப்போகுதா?
----------

பன்னிக்குட்டி ராம்சாமி said...

லோகநாயகர் டால்பி ஸ்டீரியோதான் பேமசாகும்னு குருதிப்புனலை அதுல ரிக்கார்டிங் பண்ணார், பட் தமிழ்நாட்டுல டிடிஎஸ் பேமசாகிடுச்சு. இப்போ 11.1ன்னு ஆரம்பிச்சிக்கார், பார்ப்போம் அந்த 128 ஹிட்டாகுதான்னு.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்லதா படம் போட சொன்னா......... இப்படியா போடுறது? ஒண்ணுமே இல்லியே? சினிமா சம்பந்தமான கட்டுரைக்காவது கொஞ்சம் ஏதாச்சும் இருக்கற படமா பாத்து போடப்படாதா?

வவ்வால் said...

ராஜ்,

வாங்க, நன்றி!

//திடீர்ன்னு திரையரங்கு கதவை திறந்தவுடன் என் படத்தை பறவைகளுக்குப் பின்னால் ஒட்ட வைச்சிரிக்கீங்களோன்னு பகீர்ன்னு ஆயிடுச்சு:)//

மகா சனங்களே உங்களுக்கு யாருக்காவாது லோகநாயகரை நேரா பார்க்கணும்னு ஆசை இருந்து, நிறைவேறாம இருந்துச்சுன்னு , கவலைப்படாதீங்க, நம்ம ராச நடராசரை ஒருக்கா பாருங்க போதும் அப்படியே லோகநாயகரை உரிக்காமலே இருப்பாரு :-))

ஒரு தியேட்டரிலும் 11.1 இல்லை ,போதாதுக்கு ஏற்கனவே படம் முடிச்சாச்சு அப்போ எப்படி 11.1 வரும், எல்லாம் வியாபார தந்திரம் அதை சொன்னால் ஏனிந்த ஆத்திரம்?

//டிஹெச்எக்ஸ் (THX)ஒலி நுட்பமும் இருக்கிறது//

ஜார்ஜ் லூகாஸ், மற்றும் டால்பி இணைந்து செயல்ப்பட்ட போது அவர்கள் பயன்படுத்திய ஒலியமைப்புக்கு டிஹெச்எக்ஸ் (THX) என்று ஒரு வணிகப்பெயர் வைத்துக்கொண்டார்கள். அதில் பயன்ப்படுத்தியது dolby true HD extended
THX= true HD xtended.இருவருக்கும் இடையேயான ஒப்பந்தம் முடிவுற்றதால் ,டால்பி அதனுடைய ஒலியமைப்பை தனியே dolby true HD extended என விற்றுவருகிறது. இனிமேல் ஜார்ஜ் லுகாஸ் THX என்பதை பயன்ப்படுத்த முடியாது என்பதால் தான், ரெட் டெயில்ஸ் படத்திற்கு பார்கோ ஆரோ ஒலியமைப்பினைப்பயன்ப்படுத்தினார்.தொழில்நுட்பம் டால்பிக்கு சொந்த்ம் என தனியே விற்க ஆரம்பிச்சாச்சு,THX என்றப்பெயர் இப்போ யாருக்கு சொந்தம்னு சிக்கலில் இருக்கு என நினைக்கிறேன்.

இனிமேல் THX என்ற ஒலியமைப்பு கிடையாது. காலாவதியாகிவிட்டது. THX தெரியாமலா அதை குறிப்பிடாமல் இருக்க போகிறோம். இதுல 5.1 ,7.1 எல்லாம் தெரிஞ்சது தானேனு சொல்லிக்க வேண்டியது :-))

ஹாலிவுட்டில் சில தியேட்டர்களை இதற்காக முன்கூட்டியே தயார் செய்துவிட்டு தான் ,இப்படி செய்கிறார்கள், இங்கே எதுவுமே இல்லாமல் ,கடைசி நேரத்தில் பேருக்கு செய்தால் எப்பூடி?

மூனு சீட்டு போல இன்னோரு சிட்டையும் இறக்கணுமா? அடுத்து காத்ரினாவ களம் இறக்கிடலாமா :-))

வவ்வால் said...

ப.ரா,

வாரும், நன்றி!

டால்பில அதிகம் கம்பிரஸ் ஆகிடுதாம் இதனால அதிக ஒலியில் சரியாக இருக்காது, குறைவான ஒலியிலும் சரியாக இருக்காது. டிடிஎஸ் என்பது குறைவான கம்பிரஸ் ஆகும் ஒலியமைப்பாம். எனவே கீழ்-மேல் எல்லைகளில் நன்றாக இருக்கும் என போட்டு இருக்காங்க, அதனால் தான் டிடிஎஸ் பாப்புலர் ஆச்சு.

அதை சமாளிக்க தான் டால்பி 7.1 என போட்டது இப்போ 128 டிராக் என போய்விட்டது.

11.1 க்கு ஹாலிவுட்டில் எதிர்காலம் இல்லைனு கணிக்கப்பட்டு இருக்கு, புதுசா ஒலியமைப்பினை மாற்றியமைக்க போகிறோம் , நல்லதா 128 டிராக் போடுவோம்னு தான் எல்லாம் போவாங்க.அதுவும் இல்லாம புதிய படங்கள் எல்லாம் 128 டிராக்கில் வர ஆரம்பித்துவிட்டால் 11.1 க்கு என்ன வேலை இருக்கப்போகுது?
----

கண்ணைப்பாருங்கய்யா என்ன ஒரு லுக்கு, கிக்கு! காந்த கண்ணழகி!கண்ணைப்பார்க்காம வேற எதையோ பார்த்துட்டு ஒன்னுமே இல்லைனா எப்பூடி :-))

ராஜ நடராஜன் said...

சரியா பறந்தா வவ்வால் எப்படி பறக்குது பார் ஆகான்னு வாயை பிளக்கப்போறேன்.குறுக்க மறுக்க பறந்தா பறக்குற வவ்வாலின் காலை இழுக்கறதுக்கு முயற்சிக்கப் போறேன்.இதுல என்ன தப்பு? நீங்க ஜார்ஜ் லூகாஸ்ன்னு சொன்னது வரைக்கும் சரி.சொன்னதோடு கொஞ்சம் குறிப்புக்களை தேடறது?எவ்வளவு தேடுறீங்க!

THX முதல் இரண்டு எழுத்துக்கள் ஜார்ஜ் லூகாஸ் நிறுவனத்தின் தொழில் நுட்பம் உருவாக்கிய Tomlinson Holman பெயரையும் X ஜார்ஜ் லூகாஸின் முதல் படமான THX 1138 X ஐ குறிப்பது.மேலும் நீங்கள் சொன்ன ஒலி அமைப்புக்களை உள்வாங்கிக் கொள்வதோடல்லாமல் நம்ம ஊர் ஐஎஸஐ,அக்மார்க் மாதிரி THX முத்திரை ஒலிக்கு உத்தரவாதம் தருவது.ஒரு விதத்தில் நீங்க லோகநாயகரின் வியாபார தந்திரமென்று வாதிடுவது போல் ஜார்ஜ் லூகாஸ் நிறுவனமே சொல்லிடுச்சு.அப்ப தியேட்டரிக்கல் சவுண்டு எனும் திரையரங்கு ஒலி சிறப்பாக இருக்கும் என்று படம் பார்க்க போவது மாதிரி:)அதென்ன 11.1 நுட்பம் படுத்து தூங்கிடும்ன்னு வேற ஒரு கிளி ஜோசியம்?இன்றைய நிலையில் திரையரங்கு என்ற குறுகிய வியாபார நோக்கோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி திரையரங்கு அமைத்துக்கொள்ளும் வசதி இருப்பதால் இபோதைக்கான 7.2 என்பது நாளை 11.1 ஆக உருவாகும் வாய்ப்பும் கூட இருக்கிறது.அப்படி உருவாகினால் 2020ல் வீட்டு திரையரங்கில் விசுவரூபத்தை டிவிடியில் போட்டு பார்க்கும் போது கமலுக்குத்தான் என்ன ஒரு தூரப்பார்வைன்னு அவரோடு ரசிகர்கள் உருகினால்...மருகினால்?விசுவரூபமும் கூட உலக தமிழர்களை குறி வைத்தும் கூட ஓரளவுக்கு கல்லா கட்டிவிடலாமென்ற நோக்கில் எடுக்கப்பட்டிருக்கலாம்.தசாவதரத்தை திரையரங்கில் பார்த்து போல் உங்க விமர்சனத்துக்காக வேண்டியே விசுவரூபத்தையும் திரையரங்கிலேயே பார்ப்பேன்:)

நீங்கள் சொன்ன தொழில் ஒப்பந்தங்கள் முடிந்ததா இல்லையா என தெரியவில்லை.ஆனால் THX இன்னும் ஜார்ஜ் லூகாஸ் நிறுவனத்திடமே இருக்கிறது என நினைக்கிறேன்.

மேலும் ஒலி சார்ந்த ஒவ்வொரு தொழில்நுட்பம் உருவாகும் போது நம்மை மாதிரி திருட்டு வீடியோன்னு இல்லாமல் தியேட்டரிலும் பார்க்கலாம்,அதே நேரத்தில் ஒருஜினல் டிவிடியிலும் பார்க்கலாம் என்கின்ற நோக்கோடு மட்டுமே படங்கள் வருகின்றன.

அவ்ளோ பெரிய மால்களை கட்டி திரையரங்கு குளுகுளு செய்து விட்டு அங்குசம் வாங்குற மாதிரி 11.1 நாயை கத்த வைக்க முடியாதுங்கிறது வேடிக்கைதான் போங்க!

ஒத்தை சீட்டுன்னு ப.ரா சிணுங்க ரெட்டை சீட்டுக்காரன்னு நான் போட்டுக் கொடுக்க இப்ப மூணு சீட்டுக்காரனா!

ப.ரா தேடுற சீட்டை விட மாட்டீங்க போலிருக்குதே:)

வவ்வால் said...

ராஜ்,

முதலில் இந்த பதிவுக்கு 11.1 முறையை விளக்கினாலே போதும், முன்னர் என்ன இருந்தது என சொல்லவே 5.1,7.1 , ஒரு உதாரணம்.THX ஒப்பந்தம் காலாவதியாச்சுன்னு சொன்னப்பிறகு சந்தேகம்னா தேடிப்பார்த்துக்கணும், அப்புறம் தெரியலையேனு மீண்டும் தலையை சொறிஞ்சா?

THX என்பதை டால்பி ட்ரு எச்.டி எக்ஸ்பாண்டட் என சொல்லி தனியே விற்பதாக சொல்லப்பட்டு இருக்கு, பேரு வைக்கும் போது என்ன நினைச்சு வச்சாங்களோ? ஏன் நீங்க டால்பி தளம் போய் பார்த்து இருக்க கூடாது?

படுத்து தூங்கிடும்னா ,தியேட்டர் வியாபாரத்தில்னு அர்த்தம், இப்போவும் ஸ்ட்டீரியோ ஆடியோ இருக்கு ,ஆனா தியேட்டரில் அதற்கான முக்கியத்துவம் இல்லையே, அவங்க வியாபார நோக்கம் 11.1 ஐ தியேட்டருக்கு விற்பது, அதில் பின்னடைவு தானே. எந்த காண்டெக்ஸ்டில் பேசுகிறோம்னு கவனிக்கணும்.

இப்போ உங்க வீட்டுல 5.1,7.2 போல இருக்கா அது என்ன டால்பி , அல்லது டிடிஎஸ் காரங்களிடமா வாங்கினிங்க.சோனி,பிலிப்ஸ்,சாம்சங்க் போல பல தயாரிப்பில் வந்துவிடும், அப்படி வருவதால் அதனை கண்டுப்பிடிச்சவங்களுக்கு ஒன்னும் பயனில்லை. கோடெக் மட்டும் பயன்ப்படுத்திக்கொள்வார்கள்,அதுவும் பலர் உருவாக்கிடுவாங்க.

டால்பி, டிடிஎஸ் என்ற பெயர் போட்டுக்கொண்டால் மட்டுமே காசுக்கொடுக்கணும்.தியேட்டருக்காக நிறைய பணம் , ஆய்வு செய்து , வியாபாரம் ஆகாதுன்னா நட்டம் இல்லையா.ஹோம் தியேட்டரால் பார்கோ ஆரோவுக்கு பயனில்லை,இப்போவும் அவங்க ஹோம் தியேட்டருக்கும் விக்குறாங்க, ஆனால் விலை அதிகமா இருக்கும், யார் வாங்குவா?

ஒரு ஆரோ-11.1 செட் அப் 25,000 டாலர்கள் போலனு போட்டு இருக்காங்க, வாங்கி வீட்டுல மாட்டுங்க :-))

------
படத்தை முழுக்க முடிச்சிட்டு , ஏற்கனவே இருக்க ஒலிக்கோப்பை ஃபார்மேட் கன்வெர்ஷன் செய்வது தூரப்பார்வையா? மேலும் 11.1 டிவிடில இப்போதைக்கு பார்க்க முடியாது, அதுக்கு புளு ரே டிஸ்க் விட அதிகம் இடம் வேண்டுமாம்.

//அவ்ளோ பெரிய மால்களை கட்டி திரையரங்கு குளுகுளு செய்து விட்டு அங்குசம் வாங்குற மாதிரி 11.1 நாயை கத்த வைக்க முடியாதுங்கிறது வேடிக்கைதான் போங்க!//

ஆடியோ டெக்னாலஜி அடிக்கடி மாறிக்கிட்டே இருக்கு ,11.1 க்கு லைப் 6 மாசம் கூட இல்லையே, அதை எல்லாம் தியேட்டர்ல உடனே செஞ்சா காசு தான் வேஸ்ட் ஆகும், இப்போ 128 வந்திருக்கு , அது இன்னும் கொஞ்ச காலத்தில இன்டஸ்ட்ரி ஸ்டேண்டர்ட் ஆச்சுன்னா தான் தியேட்டரில் வைப்பாங்க. இல்லைனா அடுத்து என்ன டெக்னாலஜி வரப்போகுதுன்னு காத்திருப்பாங்க.

வவ்வால் said...

ராஜ்,

விட்டுப்போச்சு,

தொலை நோக்குப்பார்வைனா , டால்பி அட்மோஸ் 128 சேனல் ஆடியோவை முயற்சித்திருக்கணும், பிரேவ் படம் ஜூன்22 இல் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி இருக்கு, அதை விட்டு ஆறு மாசம் முன்னர் வந்த ஒன்றை ஏன் தேடிப்போகணும்.

எப்படி இருந்தாலும் ரெண்டு ஆடியோ அமைப்பும் இந்தியாவில் இல்லை, பேராவது கிடைச்சு இருக்கும் ,ஹாலிவுட்டில் பயன்ப்படுத்திய தொழில்நுட்பத்தினை உடனே பயன்ப்படுத்தியவர்னு :-))

ராஜ நடராஜன் said...

ஊரெல்லாம் சுத்திட்டு சண்டைப் போட தோதா சரியா ஒருத்தரும் மாட்டலையேன்னு மறுபடியும் இங்கேயே வந்து உட்கார்ந்துகிட்டேன்:) THX ஒப்பந்தம் காலாவதியாச்சுன்னு சொல்லுங்க.ஆனா THX நுட்பமே காலாவதியாச்சுன்னு ஏன் சொல்றீங்க? THX க்கு நான் முந்தைய பின்னூட்டத்தில் விளக்கம் சொல்லியும் கூட டால்பி ட்ரு எச்.டியையும் டிஹெச் எக்ஸை யும் போட்டு கூட்டு வைக்கிறீங்களே!டால்பி ட்ரு எச்.டி ஒரு தனி ஆடியோ கோடக்ன்னா டிஹெச் எக்ஸ் நீங்க பதிவில் சொல்லும் அத்தனை கோடக்கையும் உள்வாங்கி கொள்வது. எப்படிங்க அடிப்படை ஒலி வித்தியாசங்கள் இல்லாமல் கூட 11.1 ன்னு சொல்லி திரையரங்கு உரிமையாளர்களையும்,விநியோகஸ்தர்களையும் மூணு நாமம் போட வைக்க முடியும்?என்ன எல்லோரும் மாங்காவா? இதுல வேற ப்ரிவுயூ கூட காட்டீட்டாங்கன்னு வேறு லோகநாயகருக்கு விளம்பரம் வேற போடறீங்க? எந்த காண்டெக்ஸில் பேசுகிறோம்:) படம் வெளியானதும் இன்னும் பலர் உங்களை மாதிரி நொள்ளை கண்டு பிடிக்க அஞ்சு பேர் ஓடி வந்தாலும் கூட சிறப்பு என்னன்னு பார்வையிடவும் ரெண்டு பேர் வராமலா போய் விடுவாங்க?

கேட்டீங்களே ஒரு கேள்வி வீட்டுல 5.1,7.2 போல இருக்கான்னு? ஹோம் தியேட்டருக்குன்னே அலைஞ்சு திரிஞ்சு அம்மணிகிட்ட வாங்கி கட்டிகிட்டதையெல்லாம் சொல்லனும்ன்னா தனியா பதிவுகள்தான் போடனும். எனவே சுருக்கமா டெனான் தேடிப்போய் யப்பே சொல்லி விட்டு யமாஹாவுக்கு ஓடி பிடிக்காமல் இரண்டுக்கும் பொதுவா ஓங்கியோ ஜப்பான் ஆடியோ வீடியோ கொண்டு வந்து அமெரிக்க நெட்பிளிக்சை சிஸ்கோ மூலமா கொண்டு வந்து சில சமயம் AV கணினி சிலசமயம் சோனி PS3 வழியே ஓங்கியோ மூலமாக சோனி ஸ்கிரீனுக்கு கொண்டு போயிடறேன் படத்தின் .ஒலி எந்த ரகத்தை சார்ந்தது என்பதற்கு இடத்துக்கு தகுந்தமாதிரி ஸ்டிரியோவா டோல்பியா,டிடிஎஸ்ஸா என்பதை நளபாகமா பிரிச்சு எடுத்துடும்.டிஹெச் எக்ஸ் ட்ரேட் மார்க் வேற. இப்போதைய காலகட்டத்தில் உபயோகிப்பாளர்களுக்கு எது தேவை,தொழில் நுட்பர்களுக்கு எது தேவைங்கிற மாதிரி தொடும் பொருள், தொடா பொருள் என நிறைய வந்து விட்டன.வீட்டு திரையரங்குகளுக்கு பித்து பிடித்து திரிபவர்கள் இந்தியாவில் முக்கியமாக டெல்லி,மும்பாய்,பெங்களூர் போன்ற இடங்களில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இணைய குழுமங்களின் மூலமே அறிய முடிந்தது. அப்படி தேடிப்போய் இறுதியாக Polk ஸ்பீக்கர்ஸை வாங்கி சும்மா அதிருதுல்லன்னு சொல்லி வீட்டுல வாங்கி கட்டிகிட்டேன்.

உங்களுக்கு முன்னாடி ஹாலிவுட் பாலா பிக்ஸார் முதற்கொண்டு ரொம்ப ரொம்ப சமர்த்து.மனுசன் எங்கே போயிட்டாருன்னு தெரியலை.பாண்டி பஜார் பக்கமோ அல்லது ருசியா உணவு எங்கே கிடைக்கும்ன்னே தேடிகிட்டு சுத்தும் கேபிள் சங்கரை பார்த்தீங்கன்னா கேட்டுப்பாருங்க.ஏதாவது தகவல்கள் மாட்டும்.நான் சொன்னதுல முக்காவாசி ஹாலிவுட் பாலா சொன்ன அரத புரதான சரக்குகள்தான். புதுசா இருக்கும் போது மினுமினுப்பாத்தான் இருக்கும்! 25000 என்ன 50000 கூட தேறும். ஷகிலா சைஸிலிருந்த சிஆர்டி தொலைக்காட்சி பொட்டி சிம்ரான் இடை எல்சிடி அல்லது இப்ப ஹன்சிகா இடை எல்இடி சைசுக்கு வந்த போது விலை என்ன?இப்ப விலை என்ன?

பார்மேட் கன்வெர்சன் ப்ளூரே டிஸ்க்கை விட இடம் பிடிக்கும்ன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம்தான். ஹெச்டிக்கும்,ப்ளூரேவுக்குவ் வந்த சண்டையில் இப்ப வரைக்கும் ஹெச்டி மட்டுமே முந்திகிட்டுடிருக்குது என்பதால் நான் சொன்ன 11.1 தூரப்பார்வை அம்பேல் ஆகவும் சாத்தியமிருக்க்கிறது.ஆனாலும் மார்க்கெட்டிங்க் எப்படி எளிமை படுத்துவது என்ற மூளை கசக்குவதைப் பொறுத்து விசுவரூபம் எடுத்தாலும் எடுக்கலாம்.

திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் ஹாலிவுட் நுட்பங்கள் இந்தியாவில் போணியாகும் சாத்தியங்களாக திரைப்பட ஆர்வம்,புதுசா கட்டிகிட்ட இந்திய அமெரிக்க நட்பு போன்றவை துணைபுரியுமென்றே நம்புகிறேன்.

வாங்குவதற்கும் விற்பதற்குமான சூழல்கள் முதலில் உருவாக வேண்டும்.இங்கே விற்பதற்கு முன்னாடியே பதிவு விமர்சனங்ற பேரில் 111 போட வைச்சா எப்படி வெளங்கும்?அதனால்தான் திருட்டு வீடியோக்கள் ஆட்சி செய்கின்றன.

நோண்டுவீங்கன்னு தெரியும்.காத்திருக்கிங்:)

ராஜ நடராஜன் said...

எனக்கும் விட்டுப்போச்சு.

விசுவரூபம் 11.1ல எடுத்தா டால்பி அட்மோஸ் 128 சேனல் ஆடியோவை முயற்சித்திருக்கணும் சொல்றது எப்படியிருக்குதுன்னா லோகநாயகர் தசாவதரத்தில் நடிச்சதுக்கு பதிலா ரோபோவில் நடிச்சிருக்கனும்ங்கிற மாதிரி இருக்குது.

ஹே...ஹே....ஹே ஹேய்!

முரட்டுக்காளை said...

என்னய்யா அய்திங்கு

நீரும் இப்போ சினிமா பக்கம் போக ஆரம்பிச்சிடீரா உருப்பட்டா போல தான்! என்னமோ ஆடியோ வீடியோ ன்னு புரியாதது எல்லாம் சொல்றீர் சரி. நான் ஒரு மேட்டர் சொல்றேனே!

வீட்டில தொலைக்காட்சி பெட்டி இல்லாம டிவி நிகழ்ச்சிய பார்க்க முடியுமா (லொள்ளு) பதிலையும் நானே சொல்றேன்... முடியும்... எப்படி ன்னு நீர் ஒரு பதிவு போடும் பார்ப்போம் ஹி ஹி ஹி.

வவ்வால் said...

ராஜ்,

எதாவது பேசணும்னு பேசிக்கிட்டே இருந்தா போதுமா, THX என்ற பெயரில் இருந்த தொழில்நுட்பத்துக்கு சொந்தக்காரங்களே டால்பினு சொன்னப்பிறகும், அது அப்படியாக்கும்,இப்படியாடிக்கும்னு பேசிக்கிட்டு, கீழ காபி& பேஸ்ட் சுட்டி போட்டு இருக்கேன் , படிச்சு புரிஞ்சுக்குங்க, நீங்களாச்சு, டால்பியாச்சு :-))

//(Dolby Digital 5.1EX) This was Lucasfilm's way to make more money and plug "Episode One" back in 1999. Turning 5 speakers into 7 speakers with the addition of 2 NON-DISCRETE "center rear" speakers (in MONO), working closely with THX, Dolby Labs had to call this new audio format "THX Surround Ex" for at least 3 years until the contract was up and it was renamed "Dolby Digital Ex"://

http://www.avtruths.com/dolbydts.html

---------

//எப்படிங்க அடிப்படை ஒலி வித்தியாசங்கள் இல்லாமல் கூட 11.1 ன்னு சொல்லி திரையரங்கு உரிமையாளர்களையும்,விநியோகஸ்தர்களையும் மூணு நாமம் போட வைக்க முடியும்?//

நானும் தான் கேட்கிறேன் ,ஆரோ.11.1 சிஸ்டம் இல்லாமல் லோகநாயகர் எப்படி படத்தை ஓட்டுவாராம்?

பதிவை முழுசா படிக்காதிங்க ,சொன்னதையே திரும்ப சொல்லிக்கிட்டு.ஏற்கனவே பதிவில் சொல்லி இருக்கேன் ஒரு திரைப்பட பிரதியில் நான்கு வகையான ஒலிக்குறிப்புகளும் இருக்கும்னு, அரங்கில் என்ன ஒலியமைப்பு இருக்கோ அது மட்டும் பிளே ஆகும், அது போல இப்போ 11.1 ல இல் கன்வெர்ஷன் செய்த ஒலிக்குறிப்பையும் சேர்த்து விடுவார். தியேட்டரில் வசதி இருந்தால் பிளே ஆகும் ,இல்லைனா ஆகாது.

இது ஒரு ஏமாற்று வேலை தான், தமிழில் 11.1 நான் தான் பயன்ப்படுத்தினேன் என சொல்லிக்கொள்ளவே செய்கிறார்.படத்துக்கு ஒரு விளம்பரம்.

----

பெருசா பின்னூட்டம் போட்டாலும் ரிலேட்டட் ஆ போடணும், நான் என்ன கேட்டேன், நீங்க டால்பி, டிடிஎஸ்னு அந்த நிறுவனத்திடமா வாங்கினிங்கனு. ஏன் எனில் ஹோம் தியேட்டர் விற்பனையால் ,அதனை கண்டுப்பிடித்த டால்பி, டிடிஎஸ், பார்கோ ஆரோ வுக்கு பலனில்லைனு சொன்னா , சுயபுராணம் பாடிக்கிட்டு. எனவே தியேட்டரில் அமைத்தால் தான் நிறுவனத்துக்கு காசு கிடைக்கும் என்பதை புரிந்து கொண்டு , எதிர்காலம் இல்லை என்பதை படிக்கவும்.

பதிவில் இருக்கும் ஒரு வரி கூட புரியாமல் படித்தேன்னு சொல்லிக்கொல்(ள்)றாங்க்கப்பா :-))

----

இரண்டுமே ஒலிக்கலவை முறை எனும் பொழுது புதிய தொழில்நுட்பத்திற்கு தானே முன்னுரிமைக்கொடுக்கணும், நான் என்ன சம்பந்தமில்லாத ஒன்றையா இணைக்கிறேன்.

அப்புறம் ரோபோவில் முதலில் லோகநாயகரே நடிக்க ஆரம்பிச்சு டிராப் ஆனதை எல்லாம் கூட நான் நினைவுப்படுத்த வேண்டி இருக்கே, என்ன செய்ய இவரை :-))

ஒட்டகத்தை ஹேய் ..ஹேய் ..ஹேய் னு ஓட்டினா போறாது தார்க்குச்சி எடுத்துக்குத்தணும் போல :-))
------
புல்ஸ் ,

வாரும், ஷேமமாக்கீறீரா?

நான் உருப்படமாட்டனா , அல்லது சினிமா உருப்படாதா தெளிவா சொல்லும் ஓய் :-))

நீர் சொல்வதெல்லாம் பழைய சமாச்சாரம் ,ஐபி டீவி பத்தி எல்லாம் நான் எழுதினா , ராசநடராசர் இதெல்லாம் எங்களுக்கு தெரியாதான்னு கேட்டுக்கிட்டு மண்ணை அள்ளிப்போடுவார் :-))

ராஜ நடராஜன் said...

நீங்க வவ்வா இல்ல அவ்வா:)ஏதாவது பேசனுமின்னா பின்னூட்டம் போடுவாங்க!எதையாவது தொட்டா அக்குவேரா மேயறீங்களேன்னு கரிசனையில் அல்லவா பின்னூட்டம் போடுவது?நீங்க கான்டெக்ட்ஸில் பேசனுமின்னு சொல்றபோதே தலிவரு நான் அந்த கான்டெக்ட்ஸில் சொல்லவில்லைன்னு நழுவுவாரே அதுதான் நினைவுக்கு வந்தது.

நீங்க 5.1,7.2 இருக்கான்னு கேட்டதால்தான் சுயபுராணம் பாடினேன்.

என்னமோ போங்க வவ்வாலாச்சு!லோகநாயகராச்சு.
படம் வரட்டும்!பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

நீங்க வவ்வா இல்ல அவ்வா:)ஏதாவது பேசனுமின்னா பின்னூட்டம் போடுவாங்க!எதையாவது தொட்டா அக்குவேரா மேயறீங்களேன்னு கரிசனையில் அல்லவா பின்னூட்டம் போடுவது?நீங்க கான்டெக்ட்ஸில் பேசனுமின்னு சொல்றபோதே தலிவரு நான் அந்த கான்டெக்ட்ஸில் சொல்லவில்லைன்னு நழுவுவாரே அதுதான் நினைவுக்கு வந்தது.

நீங்க 5.1,7.2 இருக்கான்னு கேட்டதால்தான் சுயபுராணம் பாடினேன்.

என்னமோ போங்க வவ்வாலாச்சு!லோகநாயகராச்சு.
படம் வரட்டும்!பார்க்கலாம்.

வவ்வால் said...

ராஜ்,

உங்களை எல்லாம் என்ன செய்வது ? கருட புராணத்தில எதாவது சொல்லி இருக்கான்னு தேடணும் :-))

//இப்போ உங்க வீட்டுல 5.1,7.2 போல இருக்கா அது என்ன டால்பி , அல்லது டிடிஎஸ் காரங்களிடமா வாங்கினிங்க.சோனி,பிலிப்ஸ்,சாம்சங்க் போல பல தயாரிப்பில் வந்துவிடும், அப்படி வருவதால் அதனை கண்டுப்பிடிச்சவங்களுக்கு ஒன்னும் பயனில்லை. கோடெக் மட்டும் பயன்ப்படுத்திக்கொள்வார்கள்,அதுவும் பலர் உருவாக்கிடுவாங்க.
//

5.1,7.1 இருக்கான்னு முதல் வரியை மட்டும் "கட் செய்து" பதில் சொல்லுங்க,அது கேள்வியே அல்ல!
டால்பி, டிடிஎஸ் என கண்டுப்பிடித்தவர்களுக்கு ஹோம் தியேட்டர் விற்பதால் வருமானம் இல்லைனு சொன்னதை அப்படியே அந்தரத்தில் விட்டு விடுங்கள்,இப்படிலாம் ஒரு பத்தியில் தனித்தனியா வரியிப்படிச்சு அர்த்தப்படுத்திக்கொண்டு தலிவர் சொல்ற எஸ்கேப்புனு சொல்லுங்க :-))

"சுக்குமி லகுதி ப்பிலி "னு படிக்கிறவர்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டேன் :-))

THX என்பது தொழில்நுட்பம் இல்லைனு சுட்டி போட்டு சொன்னதும் "கண்ணில் படாதது போல " நழுவுவது நீங்க தானே :-))

தருமி said...

//ஒரு அழகியல் நோக்கிலேயே//

அப்டியா??!! என்ன ஒரு நோக்கோ?

வவ்வால் said...

தருமிய்யா,

வாங்க,வணக்கம்,நன்றி!

//அப்டியா??!! என்ன ஒரு நோக்கோ?//

பார்த்தீங்களோ பதிவை விட நோக்கு வர்மத்தில விழுந்துட்டிங்க, இதான்யா நோக்கு வர்மம்னு சொல்லுறது :-))

மதுரை சம்பவத்தை வைத்து ஒரு வரலாற்று பதிவு போட்டு இருக்கேன் அதையும் பாருங்க.

சுரேகா said...

எம்பூட்டு தகவல்கள்? மிகவும் பயனுள்ளதா இருக்கு தலைவரே! நன்றி!

வவ்வால் said...

சுரேகாஜி,

வாங்க,வணக்கம்,நன்றி!

உங்களை போன்ற ஊடகவியல் வல்லுனர்களே பயனுள்ளது என சொல்லும் போது தான் ,பதிவின் நோக்கம் முழுமையடைகிறது.நன்றி, தலைவரே!

Anonymous said...

Thanks brother
i learn lot from you.

sundar said...

Barco 11.1 audio is going to be installed in 5 theatres in Chennai, wait for the magic

வவ்வால் said...

அனானி,
நன்றி!
-----

சுந்தர்,

அப்படியா, தகவலுக்கு நன்றி!

புதிய தொழில்நுட்பங்கள் உடனே நிறுவப்பட்டால் தான் தியேட்ட்ரௌக்கு மக்களை இழுக்க முடியும். 5.1 டிடிஎஸ்/டால்பி மாற்றத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியாகிடுச்சு.

Sundar said...

Firts of all my apologies as i dont know to write in Tamil, but can read.

Beauty of Barco Auro is it will upscale any format to 11.1. Even mixed in 5.1 & 7.1 can be played in 11.1 Automatically. All theatre owner needs to do is just to upgrade to Auro 11.1 This is not possible in Dolby ATMOS as it will play 5.1 in 5.1 only. rest all the channels will hang remain useless. I had the demo in CineAsia, personally installed the product, and had demo sounds awesome.

Another advantage is in the Mixing Studio. They dont need to upgrade their existing 5.1 setup. In the same setup Auro 11.1 can be mixed. Imagine you want to mix Dolby ATMOS - fisrt of all the studio needs to be upgraded to have that capability and it is too cumbersome!!

Time for a change, let see how the market reacts.

வவ்வால் said...

சுந்தர்,

வாங்க,நன்றி!

தமிழில் எழுதினால் நலம், ஆனால் தெரியாத நிலையில் பிழையில்லை, அதற்காக உணர்வுப்பூர்வமாக வருந்துகிறீர்களே, அதுவே பெரிய விடயம்.

பார்கோ பழைய ஃபார்மேட்கலை அப்ஸ்கேல் செய்ய வல்லது எனப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன், ஆனால் அட்மோஸ் தளத்தில் தகவல் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை, நீங்கள் சொன்ன பிறகே அவ்வாறு அப்ஸ்கேல் செய்யாது என அறிகிறேன், தகவலுக்கு நன்றி!

டால்பி அட்மோஸ் ஐ அனைவரும் வாங்க வைக்கவே அப்படி செய்யவில்லை என நினைக்கிறேன், மேலும் 62.2 சேனல்களை 128 ஆக லைவ் அப்ஸ்கேல் செய்வதும் கடினமாக இருக்கலாம்.

பார்கோ 11.1, அட்மோஸ் ஆகியன உடனே நம்ம ஊருக்கும் வருவது நல்ல முன்னேற்றம் எனலாம்.

நன்றி!

ஜோதிஜி said...

கோவைநேரம் சொன்ன கில்லாடி ஆள் நீங்க தானே? வெளியே முகத்தை காட்டினால் தான் அவர் சொன்னதை நானும் ஏற்றுக் கொள்வேன்.

தனியா வேற பாராட்டுனுமாக்கும்.