(ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லா தான் இருக்கு ..ஃபினிஷிங் தான் சரியில்லை... அவ்வ்வ்)
மாபெரும் சிறை நிரப்பு போராட்டம் ஒன்று நடந்து முடிஞ்சு இருக்கு, ஏதொ அந்த காலத்தில வெள்ளையனே வெளியேறு போல் ஏதேனும் கொள்கை இருக்குமானு பார்த்தால் , அவங்க சொல்கிற கொள்கையோ மகா கேவலமா இருக்கு , நில அபகரிப்பு,ஆட்க்கடத்தல், கொலை ,கொலைமுயற்சி, கற்பழிப்பு இன்ன பிற குற்றங்களுக்காக எங்களை கைது செய்ய கூடாதுனு வலியுறுத்தி சொல்லவே சிறை நிரப்பு போராட்டமாம், என்ன கொடுமை சார் இது!
இப்படி போராடுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தினையும், நாட்டில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு அமைப்பையும் அவமதிக்கும் செயல் இல்லையா? குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்க கூடாது என சொல்வது இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தையே கேள்விக்குள்ளாக்குவது ஆகும், மேலும் அனைவரும் சட்டத்தின் முன் சமம் என சொல்வதை எதிர்ப்பதாகும். இல்லை இவர்கள் எல்லாம் சட்டத்திற்கும் மேலான புனித பிம்பங்களா?
நாட்டுல பெட்ரோல் விலை ஏறிச்சு, பேருந்து, மின்சாரம், பால், என அனைத்து பொருட்களும் விலை ஏறிச்சு, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், ஈழத்தில் இனப்படுகொலை நடந்தது அப்போதெல்லாம் இத்தனை தீவிரம் காட்டாத ஒரு அரசியல் இயக்கம், குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டவர்களை காக்க அறப்போரட்டம் நடத்துகிறோம் என சொல்லும் காமெடியை நாமும் மவுனமாக பார்த்துக்கொண்டிருக்கிறோம் எனில் என்ன காரணம் இந்தியாவில் ஜனநாயகம் என்பது இதற்கு மேலும் அழுகி நாற்றமடிக்காது எனும் அளவுக்கு உச்ச பட்சமாக அழுகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது.
முன்னர் எப்போவோ படித்தது, சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்தி முழு சுதந்திரம் வேண்டும் என கோரிக்கை வைக்காமல் " டொமினியன்" அந்தஸ்தில் வெள்ளைக்காரர்கள் ஆளுகைக்கு கீழ் ஒரு தன்னாட்சி அதிகாரம் போதும் என கேட்பதில் விருப்பம் காட்டினார், லாலா லஜபதி ராய், திலகர், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் "பூரண சுதந்திரம் " என வலியுறுத்திக்கொண்டிருந்தார்கள். இதனை சுட்டிக்காட்டி காந்தியிடம் , நீங்கள் ஏன் முழு சுதந்திரம் வேண்டாம் என சொல்கிறீர்கள் எனக்கேட்டதற்கு, பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய பதில் ஒன்றை சொன்னார்,
"இன்னும் நம் மக்கள் முழு சுதந்திரத்தை எப்படி பயன்ப்படுத்துவது என்ற பக்குவத்தினை பெறவில்லை, இப்போது முழு சுதந்திரம் கொடுத்தால் தவறாகவே பயன்படும்" என்றார். அவர் சொன்னது இப்போது நடந்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன்.
மன்னராட்சி ஒழிந்தாலும் தற்போது ஜனநாயகத்தில் "அரசியல் மன்னராட்சி" தான் நாடு முழுவதும், ஒரே அரசியல் மன்னருக்கு பல வாரிசுகள் இருந்தால் அக்கால மன்னராட்சியில் ஏற்பட்டது போன்ற வாரிசு சண்டை எல்லாம் உண்டு, என்ன ஒன்று யானைப்படை, குதிரைப்படை எல்லாம் காணாமல் போய் கூலிப்படை என முன்னேற்றம் கண்டிருக்கிறது நாடு :-))
சமயத்தில் சின்ன வூட்டு வாரிசு ,சின்னம் சிறிய வூட்டு வாரிசுகளும் உரிமைப்போரில் குதித்து குட்டையை குழப்பும் அளவுக்கு அரசியல் மன்னராட்சி மாண்பு உள்ளது.
மேலும் ரொம்ப சீரியஸாக பேசி ... உங்கள் வார இறுதி மனமகிழ்வுக்கு குந்தகம் விளைவிக்க விரும்பவில்லை, எனவே சில நகைச்சுவை ஒளிப்பட உரையாடல்களை இடுகிறேன் கண்டு மகிழுங்கள்!
******
# அண்ணே அடுத்து ,2ஜி ஊழல் வழக்குல கைது செய்யக்கூடாதுனு டில்லில திகார் சிறை நிரப்பும் போராட்டம் இருக்கு மறக்காம வந்திடுங்க...
திகாருக்கும்மா ....அக்கா ...எனக்கு இந்தி தெரியாது...வேணாங்க்கா ..விட்ருங்க..வலிக்குது ..அப்புறம் அழுதுடுவேன் ...மி பாவம். ..அவ்வ்வ்!
-------------------------------
#
கருப்பு கண்ணாடி போட்டவங்க எல்லாம் தலைவருனு கிளம்பிடுறாங்கய்யா ...
உன் மைண்ட் வாய்ஸ் அஹ் நான் கேட்ச் செய்துட்டேன், என்ன மைண்டுடா அது மானம் கெட்ட மைண்ட்... எனக்கே கேட்குது ...நாளைக்கு வாக்கிங் போவ இல்ல அப்போ இருக்கு உனக்கு கச்சேரி!
-----------------
#நல்லா பார்த்துக்கோங்க ..நானும் ஜெயிலுக்கு போறேன் ...ஜெயிலுக்கு போறேன் ..நானும் அரசியல்வாதி தான்!
----------------------------------
#
அண்ணே சாப்பாடு போட்டுட்டு கைது செய்வாங்களா இல்லை கைது செய்த பிறகு சாப்பாடு போடுவாங்களா?
--------------------------
# ஹலோ சார் நீங்க ரெண்டு விரலை காட்டுறிங்க , நீங்க அந்த கட்சி போலீஸ் ,உங்க கிட்டே நான் கைது ஆக மாட்டேன்.
பயப்புள்ள கைதாகாம இருக்க என்னலாம் பேசுது :-))
-----------------------------
#
ஹய்ய்யோ...ஹய்யோ உன்னோட ஒரே நகைச்சுவையப்பா... செம காமெடி ... ஏ... உடன் பிறப்பே என்னிக்காவது இப்படி நீ காமெடி செய்து இருக்கியா...இதை எல்லாம் பார்த்தாவது நகைச்சுவைய கத்துக்கோங்க கண்மணிகளே!
#புளியம்பழத்தில் இருந்து கொட்டை எடுக்கும் எந்திரம்.
பின் குறிப்பு:
ஈழப்புளிய மரத்தின் புளியம்பழங்களில் கொட்டை எடுக்க சிறப்பு தள்ளுபடி உண்டு, உடன் பிறப்புகள் ஓடி வரவும் :-))
-----
முக்காத அறிவிப்பு:
இப்பதிவில் இடம் பெற்று இருக்கும் வசனங்கள் முழுக்க கற்பனையே, யார் பேசியதையும் மறைந்திருந்து பதிவு செய்யவில்லை, நகைச்சுவை நோக்கிலேயே பதிவிடப்படுகிறது,யார் மனதேனும் புண்படுமாயின் அதற்கு பதிவர் பொறுப்பல்ல,நன்றி!
*****
11 comments:
ரசித் "தேன்"
Nalla irundhadhu. Yes, there is no metrics or scale to measure the non-sense done by politicians. Since, we become so tolerant and patient, they are doing all the non sense. If we (ppl) stop expecting freebies and want to work hard, and focus in education things might change. As mahatma Gandhi said, we are good rulers/followers till we are supervised by someone. Thanks for writing.
வவ்வால், நல்ல டைமிங் காமெடி. காலையிலேயே நன்றாக சிரிக்க வைத்துவிட்டீர்கள்.
ஹா...ஹா...ஹா...ஹா...
ஈ விஷயத்தில் இணையத்து கலைஞரிடம் தீவிர”வாதம்” செய்யும்போதே நினைத்தேன், இந்த மாதிரி பதிவு வரும் என்று.
கலைஞரின் கட்சியினர் செய்த தவறுகளுக்கு தண்டனை அளித்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர் மக்கள். ஏதோ இணையத்து கண்மணிகளுக்கு மட்டும்தான் அறிவு இருக்கு என்று நினைத்து, மக்களை முட்டாள் என்கிறார்கள். ஜெ. வை விமர்சனம் செயவது இவர்கள் கடமை, அதற்காக மற்றவர்களும் விமர்சனம் செய்வது என்று நினைப்பது “நட்டு கழண்ட செண்டர்” அபத்தம்.
கலைஞரின் சிரிக்கும் படத்தை பார்த்துவிட்டு, சிறைநிறுப்பும் போராட்டத்திற்கு பிறகு கலைஞர் 40 வயது குறைந்துவிட்டது, அத்தாட்சி இதோ, இதோ என்று சொல்லாத வரை சந்தோஷம்.
புளியங்கொட்டை மிஷினுக்கு கலைஞர் காப்புரிமை வாங்கி ரொம்ப வருஷமாகுது. அவர் விரும்பும் போதுதான் அதை இயக்குவார். விரல் சூப்பி கொண்டு பார்ப்பது தமிழர்களின் கடமை.
அரசியல் சிரிப்பு மழை பொழிந்ததுக்கு நன்றி.
ஜோதிஜி,
வாங்க,வணக்கம்,நன்றி!
அடடா ஒரு சொல் இரு மொழி என இரட்டுற மொழிதலுக்கே இலக்கணம் வகுப்பீங்க போல இருக்கே ,
பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வர துடித்தேன் உனைத்தேன் மலைத் தேன் என மலைத்தேன் ...கண்ணதாசன் லெவலுக்கு போயிட்டிங்க ஜி :-))
------
விஜய்,
வாங்க,வணக்கம், நன்றி!
நீங்க ரொம்ப நடுநிலையானவர் :-))
சகிப்பு தன்மை என்பது கோழைத்தனம் அல்ல,ஆனால் நம்ம நாட்டில அப்படியாகிடுச்சு, சீரழழிவை மாற்ற முயற்சிக்காமல் அதில் இருந்து தப்பினால் போதும் என மக்கள் ஓடுவதாகவே படுகிறது.ஒருவன்ன் கேள்வி எழுப்புவது அவனுக்காக மட்டுமல்ல ,நமக்காகவும் என மக்கள் புரிந்துக்கொள்ளாதவையில், இந்நிலை மாறாது.
-----
சிவானந்தம்,
வணக்கம்,நன்றி,
காலையிலே சிரிச்சிங்களா, அப்போ நல்ல சகுனம் தான், வசூல் ராஜா பிரகாஷ் ராஜ் போல சிரிச்சு டென்ஷனை குறைச்சிக்கணுமாம் :-))
----------
நரேன்,
வாரும், இணைய அல்லக்கைக்காக அல்ல இது, போராட்டம் நடந்த அன்றே புகைப்படங்களை எல்லாம் சேகரிச்சு , ஒரு டிராப்ட் போட்டு வச்சேன், நடுவில ஊருக்கு போக வேண்டியதாகிடுச்சு, இன்றிரவு தான் புதுவை வழியாக புயல் சென்னையை சென்றடையும் :-))
//கலைஞரின் சிரிக்கும் படத்தை பார்த்துவிட்டு, சிறைநிறுப்பும் போராட்டத்திற்கு பிறகு கலைஞர் 40 வயது குறைந்துவிட்டது, அத்தாட்சி இதோ, இதோ என்று சொல்லாத வரை சந்தோஷம்.//
நீரே எடுத்துக்கொடுப்பீர் போல உள்ளது. சிறைக்கு போகலைனா பதவி இல்லைனு சொன்னதால தான் எலும்பு துண்டை கவ்வும் ஜீவன்கள் ஓடிபோய் கலந்துகிச்சு, கழக கண்மணிகள் விமர்சித்தால் அது அறிவுப்பூர்வமானதாம்,அடுத்தவங்க சொன்னால் முட்டாள் தனம்னு சொல்லிப்பாங்க, வடிவேல் காமெடி ஒன்னு " யாரு கண்ணுக்குலாம் கடவுள் தெரியலையோ அவங்க பொண்டாட்டி பத்தினி இல்லைனு "சொல்லி டபாய்ப்பார், அது போல தான் இணைய கழக கண்மணிகள் சொல்வதும் :-))
புளியங்கொட்டைக்கு தான் அவரு சொந்தக்காரர் மெஷின் என்னோடதாக்கும் :-))
அரசியலே சிரிப்பா சிரிக்குதுன்னு சொல்லுறிங்க, நீங்க என்ன பொய்யா சொல்லப்போறிங்க ,ரைட்டு !
பதிவு போடறத்துக்கு, உங்களுக்கு வந்து சிக்குதே சம்பவங்கள், படங்கள் - கலகல போங்க
நல்லா அப்படி ஒரைக்கர மாதிரி கேட்டாலும் நம்ம அரசியல்வாதிங்க காதுல செவிடன் காதுல ஊதுன சங்குதான்! நல்லா இருக்கு பதிவு!
அண்ணே . .
என்ன இப்டி சொல்லிடிங்க . .
கனிமொழியும் . .
ராசாவும் . .
அன்னா ஹசாரே குழுவுல சேர போறாங்களாம் தெரியமா
மனசாட்சி,
வாங்க,வணக்கம், நன்றி!
இப்போ வரும் படங்களில் காமெடியே நன்றாக இல்லை என்ற குறையைப்போக்குவதே அய்யாவின் கழகம் தானே, நாம சும்மா இருந்தாலும் கிளப்பிவிடுறாங்க :-))
-----
சுரேஷ்,
வாங்க,வணக்கம்,நன்றி!
என்னது உரைக்குமா அவங்களுக்கு எல்லாம், மறத்து போனால் தான் அரசியல் அதிகாரம்னு வாழலாம்னு "வாழும் கலை"கற்றவர் தலைவரு :-))
------
கு.பெ,
வாரும்,,நன்றி!
அன்னா ஹாசாரே பாவம்யா அவரை இவங்க கூட ஒரே ரூம்ல அஞ்சு நிமிஷம் போட்டு வச்சாலே ,இவங்க மூச்சுக்காத்து பட்டே செத்துருவார் :-))
என்னது!சிறை நிரப்பும் போராட்டம் நடந்து முடிந்திடுச்சா!
ராஜ்,
காக்கா வடையை திருடிகிட்டு போயிடுச்சாம் :-)))
Post a Comment