Thursday, July 05, 2012

ஒலிம்பிக் கனவுகள்!-1

(abebe bikila on bare foot at rome olympics)

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டம் என்றே வரலாற்றுப்பாடப்புத்தகங்களில் பல காலமாய் படித்து வந்திருக்கிறோம், இன்று வரையில் பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டுக்கலவரம்,ராணுவ ஆட்சி, வறுமை என்ற சூழலே நிலவுகிறது ,ஆனால் அவர்களின் ஒலிம்பிக் சாதனைகளைப்பார்த்தால் ,"ஒளிரும்" இந்தியா போன்ற நாடுகள் முக்காடுப்போட்டுக்கொள்ள வேண்டும் :-))

எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் இருக்கும் , வளம் இருந்தும் வறுமையில் வாடும் நாடு ,ஆனால் அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ ஆட்சிக்காலத்திலேயே பிறந்த ஒருவர் 24 வயது வரையில் தடகள பயிற்சி எடுத்திராமல் , திடீர் என தடகள வீரர் ஆக ஆசைப்பட்டு முயற்சி செய்து , தொடர்ந்து இரண்டு முறை ஒலிம்பிக் மராத்தான் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்து இருக்கிறார் என்றால் ,இந்தியா போன்ற நாட்டில் பிறந்தவர்கள் ஏன் இன்னும் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி எழாமல் இருக்க முடியாது. எல்லாவற்றிருக்கும் காரணம் , தன்னம்பிக்கை,கடின உழைப்பு தானே ஒழிய ,பணமோ,நவீன வசதிகளோ அல்ல என்பது புரியும்.

எவ்வித வசதியும், இல்லாத சூழலில் பிறந்து சாதித்த ஒரு ஆப்ரிக்க தடகள சிங்கத்தினை இப்பதிவில் காணலாம்.

அபிபி பிக்கிலா(abebe Bikila) 1932 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் ,தலை நகர் அடிஸ் அபாபா நகருக்கு அருகே ஜாதோ என்ற சிற்றூரில் Widnesh Menberu and Ato Bikila Demssie தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை ஆடு மேய்க்கும் தொழில் செய்ததால் , இளவயதிலேயே ஆடு மேய்த்துள்ளார், 12 வயது வரையில் எதியோப்பிய பாரம்பரிய கல்வியை மட்டும் படித்துள்ளார்.

இராணுவ ஆட்சி என்பதால் அவரது 12 ஆம் வயதிலேயே ராணுவத்தில் அரசருக்கு பாதுகாவலராக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.குடும்ப பாரத்தை குறைக்கவே 12 வயதில் வேலைக்கு மறுப்பேதும் சொல்லாமல் செல்ல நேரிட்டது.அங்கு தான் வழக்கமான உடற் பயிற்சிகள் ,விளையாட்டு பயிற்சி எல்லாம் கிடைத்துள்ளது, எத்தியோப்பிய பாரம்பரிய விளையாட்டான கெனாவிலும் தேர்ச்சிப்பெற்றுள்ளார். கெனா என்பது ஹாக்கி மட்டை போன்ற வளைந்த குச்சிகளை வைத்துக்கொண்டு ,மரப்பந்தை அடித்து விளையாடும் ஹாக்கிப்போன்ற விளையாட்டு ஆகும்.

1956 இல் ,அவரது 24 வது வயதில் சிலர் பல வண்ண விளையாட்டு ஆடைகளை அணிந்து வரிசையாக செல்வதைப்பார்த்து , யார் அவர்கள் ,எங்கே செல்கிறார்கள் என விசாரித்துள்ளார், அவர்கள் எல்லாம் ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ள செல்லும் தடகள வீரர்கள் என்பதையே அப்போது தான் அறிந்துள்ளார், ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் குறித்தே 24 ஆவது வயதில் தான் அறிந்துள்ளார், அவருக்கும் அதில் கலந்துக்கொள்ள ஆசை வந்ததுக்கு காரணம், அப்போது தான் வண்ணமயமான டிராக் சூட், மரியாதை எல்லாம் கிடைக்கும் என்பதாலே.

அதன் பிறகே பயிற்சிகளை ஆரம்பித்து , ராணுவ வீரர்களுக்கான வருடாந்திர தடகளப்போட்டியில் முதன் முறையாக கலந்துக்கொள்ள முடிவு செய்து அதில் எடுத்ததும் மராத்தான் போட்டியில் கலந்துக்கொண்டார், அப்போட்டியில் அப்போதைய தேசிய நீண்ட தூர ஓட்ட சாம்பியன் வாமி பிராட்டு(Wami bratu)வும் கலந்துக்கொண்டதால் ,அனைவரும் வாமி பிராட்டு வெற்றிப்பெறுவார் என எதிர்ப்பார்த்திருக்க, இறுதியில் வாமி பிராட்டுவை பின் தள்ளி அவரது சாதனையையும் உடைத்து பிகிலா வெற்றிப்பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தவே, தேசிய தடகள அணியின் பயிற்சியாளர் ஒரு எதிர்கால சேம்பியன் கிடைத்துவிட்டார் என தேசிய அணியில் இடம் வாங்கி கொடுத்து பயிற்சியும் கொடுத்தார்.

1960 ரோம் ஒலிம்பிக்கிற்கு அணி அறிவிக்கப்பட்ட போது இவர் தேர்வாகவில்லை, சீனியர் என்பதால் வாமி பிராட்டுவே தேர்வாகி இருந்தார், ஆனால் கடைசியில் பிகிலாவிற்கே அதிஷ்டம் கைக்கொடுத்தது, ரோம் ஒலிம்பிக்ஸ் கிளம்புவதற்கு முன்னர் ஒரு கால்பந்து போட்டியில் ஆடுவோம் என பிராட்டு ஆடியதில் கால் முறிந்துப்போனது. அவருக்கு பதிலாக யாரை அனுப்புவது என பலத்த யோசனை , விமானம் கிளம்பும் நேரம் வரைக்கும் நடந்து கடைசியில் பிக்கிலா வை தேர்வு செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

ரோமுக்கு போனப்பிறகும் சோதனை தொடர்ந்துள்ளது, இவர்கள் அணிக்கு ஷீ ஸ்பான்சர் செய்ய ஒத்துக்கொண்ட அடிடாஸ் நிறுவனம் ,ஏழை நாடு தானே என்ற எண்ணத்திலோ என்னமோ பிகிலா கால்களுக்கு பொருந்தாத ஷீ வைக்கொடுத்து இது தான் இருக்கு , அட்ஜெஸ்ட் செய்து போட்டுக்கொண்டு ஓடுங்க என சொல்லியுள்ளது.பொறுந்தாத ஷீ வைப்போட்டுக்கொண்டு ஓடுவதற்கு நான் வெறும் காலுடன் ஓடுவேன் என ஷீ இல்லாமலே களத்தில் குதித்துவிட்டார், சகல வசதிகள் கொண்ட மற்ற நாட்டு வீரர்கள் அனைவரையும் பின் தள்ளிவிட்டு வெற்றுக்கால்களுடன் முழு மராத்தானும் ஓடி வெற்றிப்பெற்றார், அது அவருக்கான தனிப்பட்ட வெற்றி மற்றுமல்ல அதுவரையில் ஒலிம்பிக்கில் எத்தியோப்பியா வீரர் யாரும் தங்கம் வென்றதே இல்லை ஏன் எந்த ஆப்பிரிக்க கறுப்பின வீரரும் வென்றதே இல்லை. வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 2 மணி ,16நிமிடம்.20 விநாடிகளில் ஓடிமுடித்து புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.

ஏன் வெற்றுக்கால்களுடன் ஓடினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "உலகத்திற்கு எத்தியோப்பியர்களின் உறுதியையும், வீரத்தினையும் காட்ட" என தைரியமாக சொன்னார்.

அடுத்த ஒலிம்பிக்ஸ் 1964 இல் டோக்கியாவில் நடந்தது அதிலும் கலந்துக்கொள்ள தேர்வானார்,ஆனால் போட்டிக்கு 6 வாரங்களுக்கு முன்னால் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டி இருந்தது, எனவே அவரால் போட்டியில் கலந்துக்கொண்டு ஓட முடியாது என அனைவரும் முடிக்கட்டிய நிலையில், அவரோ ஆபரேஷன் செய்த நிலையிலும் , மருத்துவமனையில் அவரது அறையிலே ஜாக்கிங் செய்ய ஆரம்பித்து விட்டாரம்.மாற்று வீரர் அனுப்பலாம் என நினைத்த பயிற்சியாளரையும் வற்புறுத்தி அவரே டோக்கியோ சென்றார், விமானத்தில் இருந்து இறங்கவே சிரமப்படுவதை பார்த்து , அவரால் ஓட முடியாது என அனைவரும் நினைத்த நிலையில், தன்னம்பிக்கையுடன் ஓடி மராத்தானில் தங்கம் வென்றதோடு மீண்டும் ஒரு புதிய உலக சாதனையாக 2 மணி 12.11 இல் ஓடி முடித்தார். அதோடு மட்டும்மில்லாமல் முதன் முறையாக மரத்தானில் அடுத்தடுத்து தங்கம் வென்ற வீரர் என்ற சாதனையும் படைத்தார். இன்று வரை அச்சாதனை இருக்கிறது.

மூன்றாவது முறையாக 1968 இல் மெக்சிகோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள பயிற்சியில் ஈடுப்பட்டிருக்கும் போது அவரது கால் விரல் எலும்பு முறிந்துவிட்டது.ஆனாலும் விடாமல் எலும்பு முறிவோடு போட்டியில் கலந்துகொண்டு 15 கி.மீ வரையில் முன்னணியில் இருந்து பின்னர் , வலி அதிகரிக்கவே , முழுவதும் முடிக்காமல் ஒதுங்கிவிட்டார், அப்போட்டியில் சக எத்தியோப்பிய வீரர் ஆன மாமோ வோல்டெ(Mamo wolde) தங்கம் வென்றார். அபிபி பிகிலா ஓடி இருந்தால் என்னால் தங்கம் வென்று இருக்க முடியாது என மாமோவே சொன்னது , அவரது திறமைக்கு சான்றாகும். ஏனெனில் இந்த ஒரு போட்டி தவிர பிகிலா அதுவரையில் கலந்துக்கொண்ட எந்த போட்டியிலும் தோற்றதே இல்லை.

பின்னர் நான்காவது ஒலிம்பிக்கிலும் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருந்துள்ளார், ஆனால் இம்முறை விதி விளையாடிவிட்டது, இவர் இராணுவத்தில் இருந்ததால் , சர்வாதிகார அரசருக்கு எதிராக போராடியவர்கள் இவர் சென்ற காரை தாக்கியதில் ,கட்டுப்பாடு இழந்து கார் விபத்துக்குள்ளானாதால் ,பிகிலாவின் இடுப்புக்கு கீழே செயலிழந்து விட்டது, வீல் சேரில் இருக்கும் போதும் , வீல் சேரோடு மராத்தானில் கலந்துக்கொண்டு ஓடுவேன் என நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார், ஆனால் கடைசி வரை குணமாகாமல் ,மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தனது 41 ஆம் வயதில் தூங்கும் போதே உயிர்ப்பிரிந்தார்.

அபிபி பிகிலாவின் எழுச்சிக்கு பிறகே எத்தியோப்பிய வீரர்களுக்கு மராத்தானிலும்,நீண்ட தூர ஓட்டப்பந்தயங்களிலும் உலக அளவில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வந்தது. எத்தியோப்பியாவை பின்ப்பற்றி மற்ற ஆப்பிரிக்க நாடுகளும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை தயார்ப்படுத்த ஆரம்பித்து சாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்றளவும் நீண்ட தூர ஓட்டப்போட்டிகளில் எத்தியோப்பியா ,கென்யா,மொராக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளே முன்னிலை வகிக்கின்றன, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளே அவர்கள் முன் காணாமல் போய்விடுகின்றார்கள்.

இத்தனைக்கும் அவர்கள் நாட்டிலோ அடிப்படை வசதி கூட எதுவுமில்லை. தேசிய அளவில் சாதித்தால் ராணுவத்தில் ஒரு வேலைக்கொடுப்பார்கள், அங்கிருந்து பயிற்சி செய்து தான் அனைவரும் சாதிக்கிறார்கள், பெரும்பாலோர் சாலையில் ஓடியே பயிற்சி எடுக்கிறார்கள்.நவீன ஜிம்கள் பார்க்க வேண்டும் என்றால் தலை நகர் அடிஸ் அபாபாக்கு தான் வர வேண்டும், அதே போன்று தான் விளையாட்டு அரங்குகளும். தலை நகருக்கு வெளியே எவ்வசதியும் இருக்காது.

3 வேளை சாப்பிட உணவுக்கிடைப்பதே கடினம், அங்குள்ள முக்கியமான வேலை வாய்ப்பே ராணுவப்பணி தான், அடுத்து வேலை என்றால் ஓட்டப்பந்தய வீரர் ஆவது மட்டுமே, மற்றபடி நல்ல வருமானம் கிடைக்க வழியே இல்லாத நாடு. எத்தியோப்பிய வீரர்களிடம் ஏன் தடகள போட்டியில் ஓடுகிறீர்கள் எனக்கேட்டால் சொல்வது என்னவெனில் " முதலில் நாட்டுக்காக ஓடுகிறேன், பின்னர் எனது வாழ்க்கைக்காக" என்பார்கள்.

எத்தியோப்பிய நிலையை ஒப்பிட்டால் இந்தியா சொர்க்க புரி என்பது புரியும், இந்த வசதிகளை கொண்டு நாம் எத்தனை தங்கம் வாங்கியிருக்க வேண்டும், ஆனால் நாம் ஒரே ஒரு தனி நபர் தங்கம் வாங்கவே 2008 வரையில் அபினவ் பிந்த்ரா வரவுக்காக காத்திருந்தோம். ஆனால் எத்தியோப்பியா 1960 முதல் ஒலிம்பிக்கில் தனி நபர் தங்கம் வென்று வருகிறது.இதில் வேடிக்கை என்னவெனில் இன்றும் நாம் பாடப்புத்தகத்தில் ஆப்பிரிக்க ஒரு இருண்ட கண்டம் என படித்துக்கொண்டிருக்கிறோம் :-))

ங்கொய்யாலே இப்படி குருட்டு தனமாக பாடப்புத்தகம் எழுதறவங்களை பிடிச்சு சிங்கத்துக்கு இரையாக்கணும் :-))

அடுத்த பதிவில் முதல் ஒலிம்பிக் தங்கம் வென்ற ஆப்பிரிக்க பெண் சிங்கத்தை பார்க்கலாம்.

தொடரும்...
-------------

பின்குறிப்பு;

நம்ம நாட்டினை குற்றம் சொல்ல அல்ல இப்பதிவு, எப்போது பார்த்தாலும் அமெரிக்காவை பார், ஆஸ்திரேலியாவை பார், என முன்னேறிய நாட்டை சொல்லி அப்படி நாம் எப்போ வல்லரசு ஆவது, ஒலிம்பிக்கில் சாதிப்பது என்றே மீடியாவும், மக்களும் பேசுகின்றார்கள், ஆனால் வறுமையிலும், உள்நாட்டுக்கலவரத்திலும் சிக்கித்தவிக்கும் நாட்டு மக்கள் தங்கள் விடா முயாற்சியாலே சாதிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டவே இப்பதிவு.

வசதி ,வாய்ப்புள்ளவன் சாதிப்பதை பார்த்து பெருமூச்சு விடுவதை விட ஆப்பிரிக்க நாடுகள் சாதிப்பதை பார்த்து நாம் கற்றுக்கொள்ள ஒரு பாடம் இருக்கிறது.
----

தகவல், மற்றும் படங்கள் உதவி,

விக்கி,எத்தியோப்பியன்ஸ்.காம் ,இணைய தளங்கள்,நன்றி!

*****

13 comments:

கோவை நேரம் said...

வணக்கம் தல..சரியான பதிவு..நூறு கோடிக்கும் மேல் ஜனத்தொகை இருக்கிற நாட்டில் ஒரு தங்க மெடல் வாங்க ஒருத்தர் கூட இல்லை என்பது வருந்த தக்க விஷயம்.நம் நாட்டு விளையாட்டிலும் அரசியல் கலந்து விட்டு இருக்கிறது.நம்ம நாட்டில் இருக்கிற நரிக்குறவர்களை தேர்ந்தெடுத்து வில், துப்பாக்கி பயிற்சி கொடுத்து அனுப்பினா நல்லா தான் இருக்கும்.ஆனா யாரு செய்யிறது..?

Anonymous said...

என்னது இந்தியால தங்கம் வாங்கிட்டாங்களா?!

(சீரியசாக- இந்தியா தங்கம் வாஙுகனும் என்றால் இராணுவ வீரர்களை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளச் சொல்லி அரசு ஊக்கப் படுத்த வேண்டும். முதலில் வெள்ளி வென்ற ராஜ்யவர்தன் ராத்தோர் ராணுவத்தைச் சேர்ந்தவரே. மேலும் பஞ்சாபில் ஒரு கிராமமே குத்துச் சண்டையில் மும்முரமாக இருப்பதுபோல கிராமங்கள் ஒட்டு மொத்தமாக ஒரு விளையாட்டை எடுத்துக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டும்.)

சரவணன்

சார்வாகன் said...

வணக்கம் சகோ நல்ல பதிவு,

நம் நாட்டில் விளையாட்டு விரனாக கூட அரசியல் பின்புலம் தேவை. மற்றபடி பள்ளிகளில் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக மாணவர்கள் மாற்ற‌ப் பட்டு விட்டார்கள்.

என்னுடன் படித்த எத்தனையோ நண்பர்கள் நல்ல விளையாட்டுத் திறமை இருந்தும் படிப்பில் கோட்டை விட்டதால் ஏதோ ஒரு தொழில் செய்து பிழைக்கும் சூழலுக்கு ஆளாகி விளையாட்டை கைவிட்டனர்.

விளையாட்டுக்கு முக்கிய‌ம் கொடுக்கும் பள்ளிக் கூட‌ங்க‌ள் ,மிக‌ குறைந்த‌ எளிய‌ பாட‌த்திட்ட‌த்துட‌ன் உருவாக‌ வேண்டும்.

ஆப்பிரிக்க‌ சிங்க‌ம் போல் இங்கு உருவாவ‌து முடியாது.போட்டிக‌ளில் படிக்காத‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்து கொள்வ‌து குதிரைக் கொம்பு

பாருங்க‌ள் ந‌ம்ம‌ விஸ்வ‌த‌நாத‌ன் ஆன‌ந்த் ஸ்பெயினுக்கு போன‌பின்தான் அதிக‌ம் ஜொலிக்க‌ ஆர‌ம்பித்தார்.

டென்னிஸ் இர‌ட்டைய‌ர் ந‌ல்லா ஆடுகிறார்கள் பரவாயில்லையே ஏதேனும் பதக்கம் கிடைக்கட்டும் என்றால் அவ‌ன்கூட‌ மாட்டேன் இவ‌ன் கூட‌ மாட்டேன் ,அவன் கூட டூ என்ன‌ கொடுமைடா சார் இது!

ஊக்க‌ம் இல்லையெனில் எதுவும் நடக்‌காது

பார்க்கலாம் ஏதாவது கிடைக்குதா என்று!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

புலம்ப வைக்கிறான்க!!!!!!!!!

நன்றி

Anonymous said...

நல்ல பதிவு வௌவால்.. நன்றி

சார்வாகன் - நெய்வேலியில் அப்படி ஒரு பள்ளி இருந்தது (இப்போ தெரியல).. 2 மணி நேரம் (??) மட்டுமே படிப்பு.. அப்புறம் அவங்க விருப்ப விளையாட்டில் பயிற்சி.. ஆனாலும் ஒன்னும் நடக்கல.. காரணம் நம்ம நாட்ல படிச்சி வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்.. வேலைக்கு போகலைன்ன மரியதை இருக்காது.. வேலைக்கு போன பிறகு விளையாட்டில் ஆர்வம் போயிடும்.. கைடு பண்ணவும் ஆள் இருக்காது .. :(

அதுவும் தவிர நம்ம ஊர்ல விளையாட்டுன்னு சொன்ன அது கிரிகெட்டு ஒன்னு தான்.. பசங்களுக்கும் மத்த விளையாட்டில் ஆர்வம் வர மாதிரி ஒரு அமைப்பே இல்ல..


-SA

naren said...

வவ்வால் சார்,

இந்த விஷயமும் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. எப்படி வடமேற்கு ஆப்பிரக்க மக்களால், தூர ஓட்டப்பந்தயங்களில் தொடர்ந்து முன்னனியில் இருக்க முடியும் என்று.

உலக, யூரோ கால்பந்து போட்டிகளை பார்க்கும்போது ஒரு ஏக்கம் வரத்தான் செய்யும். எப்படி 148 இருந்து 1 போக முடியும் என்று.

அவர்களுக்கு ஓட்டப்பந்தயம் என்றால் நமக்கு மட்டையடி இருக்கிறதே. எப்படியாவது அதை ஒலிம்பிக்ஸில் சேர்த்துவிட்டால், நாலு வருடதிற்கு ஒரு முறை நம்மக்களுக்கு இன்னொரு கொண்டாட்டம்.

தொடரும் என்று போட்டாலே, தொங்கல் தானோ??

நன்றி.

வவ்வால் said...

கோவை நேரம்"ஜீவா"

வணக்கம் நண்பா, நன்றி!

100 கோடி மக்கள் , ஆப்பிரிக்க நாடுகளை ஒப்பிடுகையில் நல்ல வசதி,ஆனாலும் நாம் ஏன் இப்படி எனில் முதல் காரணம் நாம் சோம்பேறிகள் என்பதே(ஹி...ஹி அதுக்கு நானே நல்ல உதாரணம்) அப்புற்ம் நம் மக்கள் நிறைய எதிர்ப்பார்க்கிறாங்க. ஒரு மாவட்ட அளவில் போட்டியில் வென்றதுமே அரசாங்கம் எதுவுமே செய்யலைனு புலம்புறாங்க. இப்போ எல்லாம் கிராம புறம்மக்களும் அப்படித்தான் இருக்காங்க ,எல்லாம் இலவசமா கிடைக்கனும்னு எதிர்ப்பார்க்க ஆரம்ம்பிச்சுட்டாங்க.

மலைவாழ் மக்கள், நரிக்குறவர், மீனவ மக்கள் என அவர்களுக்கு இயல்பாக வரும் போட்டியில் பயிற்சிக்கொடுத்தால் பலன் கிடைக்கும்,அரசை விட மக்களே அதுக்கு தயாரில்லை எனலாம்.

ஒலிம்பிக்கில் கோல்டு வாங்கிய பின்னரே எத்தியோப்பியாவில் ஒரு வீரர் வீட்டுக்கு அரசாங்கம் டீ.வி வாங்கிக்கொடுத்துள்ளது.போட்டியை வீரர் வீட்டில் யாரும் டீவியில் பார்க்கவில்லை,ரேடியோவில் தான் செய்திக்கேட்டுள்ளார்கள்.அந்தளவுக்கு தான் அங்கு அரசு செலவு செய்யும், ஆனாலும் வீரர்,வீராங்கனைகள் சொந்த உழைப்பில் விடாமல்ல் போராடிக்கொண்டு இருக்கிறார்கள், காரணம் அவங்க நல்லா வசதியா வாழனும் என்றால் சர்வதேச அளவில் சாதித்தால் மட்டுமே, அது தான் வருமானமே. "running is the way of life" என சொல்கிறார்கள்.

இன்னும் நிறைய இருக்கு வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

----------
சரவணன்,

வணக்கம்,நன்றி!

என்னது காந்தி செத்துட்டாரா போல கேட்கிறிங்களே :-))

ஆர்ம்ட் ஃபோர்ஸஸ் விளையாட்டு போட்டிகள், இன்னும் நிறைய இருக்கு, நம்ம நாட்டில வீரர்கள், ரொம்ப தீவிரமாக முயற்சிக்காமல் , ஆண்டு தோறும் நடக்கும் சடங்காகவே செய்கிறார்கள்.

ராஜ்யவர்தன் ரத்தோர் துப்பாக்கி சுடுதலில் அப்போட்டிகளிலே மிக அதிக புள்ளிகள் எடுத்து கவனத்தினை கவர்ந்து பின்னரே ,தேசிய, சர்வதேச அளவில் போனார்,அனைத்து செலவும் ராணுவமே செய்தது. நம்ம திறமையை அவுட் ஸ்டேண்டிங் ஆக காட்டினால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும்.ஏனோ தானோ என அந்த லெவலுக்கு இது போதும் என விளையாடினால் வாய்ப்பு வருமா?
-----
சகோ.சார்வாகன்,

வணக்கம்,நன்றி!

நீங்க சொல்வது ,வழக்கமாக நாம் சொல்லிக்கொள்ளும் சமாளிப்பு. வேற என்ன செய்ய, 3 வேளை சாப்பாடுக்கே வழியில்லாமல் போராடும் நாடுகளை நான் சொல்கிறேன், அவங்க எல்லாம் எப்படி சாதித்தார்கள், உறுதியான எண்ணம், உழைப்பே காரணம்.எத்தியோப்பியாவில் தேசிய அளவில் நிறுபித்த பிறகே அரசு கண்டுக்கொள்ளும், அதுவும் அல்ப சொல்ப உதவி தொகையே. ஜிம் என்பதே அப்புறமாக தான் கண்ணில் காட்டுவாங்க.

பல ஒலிம்பிக் தங்கம் வென்றவர்கள் ஊரில் மின்சாரம், தொலைப்பேசி, குடிநீர் என எதுவுமே இல்லை, இப்போ தான் ரோடே போடுறாங்களாம்.நம்ம நாடு அதுக்கு எவ்வளோ மேல் தானே.

டென்னிஸ் நடக்கிற கூத்து ரொம்ப அசிங்கமான ஒரு காரணத்திற்காக, முன்னரே பூபதி,பேஸ் சண்டை வந்து பிரிந்த போதே பத்திரிக்கைகளில் வந்துடுச்சு.நாமளும் வேற வழியில்லாம அவனுங்களை நம்பிக்கிட்டு இருக்கோம்.

//புலம்ப வைக்கிறான்க!!!!!!!!!//

அஃதே ...அஃதே!
-------
எஸ்.ஏ,

இப்பவும் அப்படியான விளையாட்டுப்பள்ளிகள் இருக்கு ,மாவட்டத்துக்கு ஒன்று என செயல்ப்படுது.முற்றிலும் இலவசம், ஆனால் மாணவர்களும் ,சரி நிர்வாகமும் சரி நாங்களும் இருக்கோம்னு செயல்ப்படுறாங்க.அவ்வளவே.

ஆப்பிரிக்க நாடுகளிலும் கால்பந்து தான் முக்கியம், நாலுப்பேரு கூடினா ஒரு பழைய பந்தை அல்லது துணி மூட்டையை பந்தாக்கி கால்பந்து ஆட ஆரம்ம்பிச்சுடுவாங்க, வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறனும் என அவர்களாகவே முடிவு செய்து சாதிக்க வருகிறார்கள்.

-----------
நரேன்,

வணக்கம்,நன்றி!

ஆமாம் ,அதுவும் வறுமையில் சாதிப்பது ஆச்சரியமான ஒன்று.

கால்பந்திலும் அப்ப்படியே. அவர்கள் எல்லாம் உடம்பு வலிக்க ,இனிமே நிற்க கூட முடியாது என்னும் நிலை வரைக்கும் பயிற்சி செய்வாங்களாம், நம்ம ஆளுங்க அப்படியா, உடம்பு வலிக்காம எல்லாம் செய்ய ஆசைப்படுவாங்க,அதனால தான் கிரிக்கெட் ஃபேமஸ் ஆச்சு :-))

என்னமோ மட்டையடில மட்டும் புலிங்க போல சொல்லுறிங்க, நம்ம நாட்டில போட்டி நடந்தா தான் புலிங்க,வெளிநாடு போயிட்டால் எலிங்க :-))

ஹி..ஹி தொங்கலில் விடனும்னா விடுறாங்க, சோம்பேறித்தனம் தான் :-))

இந்த பதிவை போடவே தடவிக்கிட்டு இருந்தேன், இனிமேலும் லேட் செய்தால் ஒலிம்பிக்கே முடிஞ்சிறும்னு தான் போட்டுட்டேன்.

நம்ம ஊரு பத்திரிக்கைகள் எல்லாம் சுத்த மோசம் ,இன்னும் தூங்கிட்டு இருக்காங்க, கார்டியன், மெயில், பிபிசி தளங்களில் பிரிச்சு மேயுறாங்க.(அவங்க ஊர்ல நடக்குதுள்ள) ஹி ..ஹி கொஞ்ச நாளா வெள்ளைக்காரனை விட அவங்க செய்தி தாள்களை அதிகம் நான் தான் படிக்கிறேன் :-))
(படிச்சா வயத்தெரிச்சல் தான் அதிகம் ஆகுது சாமி)

எல்லாம் இணையம் செய்த மாயம்!

கோவி said...

//ஏன் வெற்றுக்கால்களுடன் ஓடினீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உலகத்திற்கு எத்தியோப்பியர்களின் உறுதியையும், வீரத்தினையும் காட்ட என தைரியமாக சொன்னார்.//

என்னே வார்த்தைகள்.. அசந்துட்டேன்.. இருக்கட்டும் சார்.. நம்ப இந்தியா கண்டிப்பா என் கொள்ளு பேரன் காலத்துலயாச்சும் சாதிச்சிடும்.. நான் நம்பறேன்..

”தளிர் சுரேஷ்” said...

எத்தியோப்பிய வீரரின் தன்னம்பிக்கை நம்மவர்களிடம் இல்லாதது நமக்கு பேரிழப்பு! நினைவில் நீங்கா தன்னம்பிக்கை மனிதன்! சிறந்த பதிவு!

Anonymous said...

நம்மாட்களுக்கு நிறைஞ்ச வயிறு...> நிறைஞ்ச பாக்கெட்...> நிறைஞ்ச மனசு...அதோட முற்றும்...

அது தான் எல்லா இந்திய ATHLETE இன் கதை...

முக்காவாசி பேர்..ரயில்வேல வேலை...வீடுன்னு செட்டில் ஆகிறவரை தான் இதெல்லாம்..

அப்புறம் தொப்பையும்...புள்ள குட்டிகளுமா...கேபிள் டிவி பார்க்க ஆரம்பிச்சிருவாங்க...

என் மனைவி குடும்பத்திலேயே ரெண்டு பெரிய உதாரணம் இருக்கு நண்பரே...

யாருன்னு மட்டும் கேட்காதீங்க...:-))

ம.தி.சுதா said...

தடகளப் போட்டிகளின் வளர்ச்சி இந்தியாவில் பேர் சொல்லும் அளவுக்கு இல்லை என்பது எனது வருத்தமும் தான்...

தகவல்கள் பல தந்தமைக்கு நன்றி..

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு ! வாழ்த்துக்கள் !
வலைச்சரம் மூலம் (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_07.html) உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !

வவ்வால் said...

கோவி,

வணக்கம் நண்பா, நன்றி!

நம்ம நாட்டுல இருந்தும் யாராவது தங்கம் வென்றுவிட்டு இப்படி சொல்லுவாங்களானு ஒரு நப்பாசை தான்!

பேரன்கள் காலத்திலவா ,அவங்க எல்லாம் இருந்த இடம் விட்டு நகருவாங்களான்னு சந்தேகம் :-))

எல்லாம் கம்பியூட்டர் கேம்ஸ்ல மூழ்கிட்டாங்க.

------
சுரேஷ்,

வணக்கம்,நன்றி,

நம்மிடையே அப்படியான தன்னம்பிக்கை குறைந்து போய்விட்டதோனு தோன்றுது.வழக்கம் போல நம்மை உய்விக்க யார்ராவது வருவாங்க :-))

-----------
ரெவரி,

வணக்கம், நன்றி!

நீங்க சுருக்கமா இந்தியாவில் இருக்கும் யதார்த்தை சொல்லிட்டிங்க, சொல்லப்போனா இதை கடசியில சொல்ல வைத்திருந்தேன். நீங்களோ, நானோ இல்லை, முன்னரே இதை சில பத்திரிக்கைகளில் எழுதி இருக்காங்க, நாம எல்லாம் வேலைக்கு மட்டும் தான் விளையாட்டை தேர்வு செய்கிறோம்னு.

எதியோபியா போல ... பெருசா பணம் கொடுக்காம , இன்டெர்நேஷனல் அளவில் வெற்றி பெற்றால் தான் பணம்,புகழ்னு அலைய விடணும் போல.

அவங்க புரோசிஜர் எல்லாம் நம்ம நாட்டை விட கடினமா இருக்கு, பயிற்சியில உலக சாதனை நேரத்தை விட கம்மியா ஓடிக்காட்டனும், நம்ம நாட்டுல இருக்க கூட்டத்தில வேகமா ஒடினால் போதும் ஒலிம்பிக்கு போலாம். இதான் வித்தியாசம்.
------------
மதி.சுதா,

வாங்க,வணக்கம்,நன்றி!

எனது கவலையும் அதுவே, எத்தனைக்காலத்துக்கு தான் அரசாங்கம் உதவி செய்யலைனு சொல்லிக்கிட்டு, இப்படியே போனால் குழந்தை பிறக்கவும் அரசு உதவி கேட்பாங்க :-))

-----------
தனபாலன்,

வாங்க, வணக்கம், நன்றி!

உங்கள் தகவலுக்கு நன்றி, நான் வலைச்சரம் பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

நெஞ்சைக் கிள்ளாதீங்க!