(அடுத்த கைப்புள்ளை நான் தானா?)
.
முதல் குடிமகன்!
முதல் குடிமகன் தேர்தலுக்கு போட்டியிடும் திருவாளர்.பிரணாப் குமார் முகர்ஜீ ,தனது பிரச்சாரத்தினை சென்னையில் கனிமொழி இல்லத்தில் இருந்து துவங்கினார்னு செய்தி வருது. இதை விட இந்திய அரசியலமைப்பை கிண்டல் செய்ய வேறு நிகழ்வு தேவையில்லை. ஏன் எனில் குடியரசு தலைவரே இந்திய அரசியலைப்பின் படி நாட்டின் தலைவர், சட்டத்தின் தலைவர்,ஆனால் சட்டத்தின் முன் குற்றவாளி /குற்றம் சாட்டப்பட்ட கூண்டில் நிற்கும் ஒருவரின் இல்லத்தில் இருந்து தான் தனது பிரச்சாரத்தையே துவங்குகிறார் எனும் போது வருங்காலத்தில் அவர் அரசியலமைப்பு சட்டத்துக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பார் என தெரிகிறது.
இது நாள் வரையில் இந்தியாவில் நடந்த ஊழல்களிலேயே முதலிடத்தில் இருப்பது 2ஜீ ஊழல் என்பதால் ,முதல் குடிமகன் தேர்தல் பிரச்சாரம் துவங்க ஒரு "முதலிடம் " பிடித்து சாதனைப்புரிந்தவர் இல்லமே சரியான இடம் என முதலிடம் தேடி சென்னைக்கு பிரணாப் முகர்ஜி வந்திருப்பாரோ?
என்ன கொடுமை சார் இது!
------------
சாகச ஓட்டுனர்கள்!
ஸ்பீட் ,டாக்சி, ஃபாஸ்ட்& ஃப்யுரியஸ் போன்ற ஹாலிவுட் ஆக்ஷன் படங்களில் ,கார் , டிரக், பஸ் எல்லாம் மேம்பாலங்களில் காற்றில் பாயும், குட்டிக்கரணம் அடிக்கும், அதை எல்லாம் தேர்ந்த சண்டைப்பயிற்சியாளர்கள் செய்வார்கள்.ஆனால் அதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என மாநகரப்பேருந்து ஓட்டுநர் அனாயசமாக சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாயும் சாகசம் செய்ய நினைத்து ,மயிரிழையில் தவறிப்போய் சுவற்றில் மோதி ,பல்டி அடித்துவிட்டார். அவர் மட்டும் செல் போனில் பேசாமல் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்து இருந்தால் பாலத்தில் இருந்து வெற்றிகரமாக ஜம்ப் அடித்து சாதித்து இருப்பார், மக்களும் ,மீடியாவும் ஹீரோவாக கொண்டாடி" பாரத் ரத்னாவோ அல்லது ஸ்டியரிங்க் வீல் சக்ராவோ" கொடுக்க சொல்லி போராடி இருக்கும்.
பாவம் ஹீரோ ஆக வேண்டியவர் வில்லனாகிவிட்டார் :-))
அதனைப்புரிந்து கொள்ளாமல் மாநகரப்பேருந்து ஓட்டுனர்கள் செல் போனில் பேசிக்கொண்டே சாகசம் செய்ய முற்பட்டால் புகார் தெரிவிக்க என ஒரு எண்ணை வெளியிட்டுள்ளது.
அவ்வெண்:"93833-37639'
மூன்று தடவைக்கு மேல் புகாருக்கு ஆளானால் ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்படுவாராம்.எச்சரிக்கை விட்ட அடுத்த நாளே , சாகசம் செய்வது எங்கள் பிறப்புரிமை அதனை செய்தே தீருவோம் என செயல்படும் ஒரு சாகச ஓட்டுனரை பாருங்கள் :-))
(பட உதவி:தினமலர்,நன்றி)
என்ன கொடுமை சார் இது!
-----------
சவாரிக்கு அழைக்கிறார்கள்!
(தமிழ் வளர்த்த மலபார் மங்கை)
"ஃபெட்னா உங்களை அமலா பாலுடன் வரவேற்கிறது:
அமலாவுடன் உணவருந்தலாம்.
அமலா பால் உடன் படகு சவாரி செல்லலாம்..
நடிகை அமலா உடன் புகைப்படம் எடுக்கலாம்…"
மேற்படி விளம்பரம் ஒரு இணைய தளத்தில் காணக்கிடைத்தது. அதைப்பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது, அந்தக்காலத்தில அவ்வையார்(நடிச்சவங்க பாடினது தான்) "பாலும், தேனும் ,பருப்பும்"கலந்துனக்கு தருவேன் "சங்கத்தமிழ்" மூன்றும் எனக்கு தான்னு பாடி "முருகனுடன்"டீல் போட்டு தமிழ் வளர்த்தாங்க, படம் "பக்தி" படம் என்றாலும் பட் அந்த டீல் எனக்கு பிடிச்சு இருந்தது.
இப்போ எட்ணாவோ ,பெட்னாவோ என்னமா ஒரு டீல் போட்டு தமிழ வளர்க்கிறாங்கய்யா... சாப்பிடலாம்னு சொல்லுறாங்க(சாப்பாட்டை தான்யா), சவாரிக்கு வான்னு சொல்லுறாங்க, படகுலதான்யா!,இன்னும் வேறு ஏதேனும் சிறப்பு சவாரிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளார்களா என தெரியவில்லை...நோ ..நோ அப்படிலாம் பார்க்கப்படாது சிறப்பு சவாரின்னா "குதிரை சவாரி" போன்றவற்றை சொன்னேன், அட்லீஸ்ட் பச்சைக்குதிரையாவாது தாண்டலாமா? உள்விவரம் அறிந்தவர்கள் கேட்டு சொன்னால் தமிழ்கூறும் நல்லுலகம் தழைக்கும் :-))
மேநாட்டு தமிழர்கள் இதெல்லாம் செஞ்சுட்டு தமிழ் நாட்டு மக்கள் சினிமா மோகத்திலும், இலவச மோகத்திலும் மூழ்கி இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறாதுனு பதிவிட்டு பொங்குவார்கள் :-))
என்ன கொடுமை சார் இது!
------------
last but not the least!
(ரியல் தல!)
தமிழ் பதிவுகளில் அதிரடி மற்றும் அட்டகாசத்துக்கு பேர் போன (வாங்கிய)ஒரு பதிவர், தொடர்ந்து பெட்ரோலிய பொருட்கள் குறித்து ,"பெட்ரோல் விலை ரகசியம், ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பெட்ரோல் விலை ஏறாது, விலைக்குறைப்பு நாடகம், மாற்று எரி பொருள், பயோ டீசல், எத்தனால்" என பெட்ரோலியத்துறை அமைச்சகத்தினை போட்டு தாக்கிப்பதிவிட்டுக் கொண்டே இருந்தார்.
இதனை மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.அப்பதிவுகளுக்கு அமோகமான ஆதரவினையும் நல்கினார்கள்.
இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியடைந்த பெட்ரோலிய அமைச்சகமும், அதிகாரிகளும் கூடிப்பேசி ,இப்படியே விட்டால் மக்கள் விழிப்புணர்வு அடைந்து பெட்ரோலே வேண்டாம் ,நாங்களே மாற்று எரிபொருள் வீட்டில் தயாரித்துக்கொள்வோம் என களத்தில் இறங்கிவிட்டால் வியாபாரம் படுத்துவிடும் என பயந்து மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலையை ரூபாய் 2.60 குறைத்துள்ளார்கள்.
தற்போது எல்லாம் பதிவுலகில் எழுதினால் அனைவரும் கவனிக்கிறார்கள் ,குறிப்பாக அதிகார மட்டத்தில் என்பதற்கு இதுவே சான்று, எனவே பொறுப்புடன் எழுதினால் மாற்றத்தினைக்கொண்டு வரலாம் என்பதை மற்றப்பதிவர்களும் உணர வேண்டும். ஆனாலும் அந்த அதிரடி,அட்டகாசப்பதிவரோ ரூ 10 ஆவது குறைத்திருக்க வேண்டும், இது செல்லாது ,செல்லாது என முனகிக்கொண்டு அடுத்தப்பதிவில் , வீட்டிலேயே "மாட்டு சாணியில்"இருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து வாகன எரிப்பொருளாக பயன்ப்படுத்துவது எப்படி? என பதிவிடலாமா என தலைக்கீழாக தவம் இருக்கிறாராம் :-))
ஹி...ஹி அவர் யார்னு கண்டுப்பிடிக்க "துப்பு" எதுவும் வேண்டுமா?
ஆஹ்ஹா ...ஒன்னு கூடிட்டாங்கய்யா ...எல்லாம் ஒன்னுக்கூடிட்டாங்க ...
இப்ப நீங்களே சொல்லுவீங்க...
"என்ன கொடுமை வவ்வாலு இது!"
*****
8 comments:
கலக்கலான பதிவு! நையாண்டியுடன் நாட்டுப்பற்றும் கலந்து சிம்ப்ளி சூப்பர்ப்!
நிச்சயம் வவ்வால் வேண்டுமானால் நிற்கலாம் ..வவ்வாலின் பதிவுகள் நேர்மையாக நேராக பேசுகிறது
செமையானா பதிவு வவ்வால் கலவையாக கலந்து கலக்கல். எப்படியோ பெட்ரோல் விலை குறைந்தால் சர்தான்.
//மாட்டு சாணியில்"இருந்து மீத்தேன் தயாரித்து அதில் இருந்து//
பெட்ரோல் கடைகளை பூட்டனும் முடிவு பண்ணிடீங்க போல
பேஸ்புக்கில் இரண்டு படங்கள் பார்த்தேன் .. ஒன்று !!! பிரணாப்பின் மொத்தக் குடும்பமும் இலவச வேர்ல்ட் டூருக்கு ரெடியாகி வருவது போல்..
மற்றொன்று சில பெண்கள் ரோட்டைக் கடக்கும் போது பேருந்து ஓட்டுநர் அவர்களையே பார்த்தப்படி பேருந்தை எங்கேயோ செலுத்துகின்றார்..
அதே போல உங்கள் பதிவிலும் இரண்டும் இடம் பெற்று இருக்கு ..
பெட்னா செய்யும் அலம்பலை என்ன சொல்ல ... !!! சினிமா மோகம் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டில் உள்ள தமிழர்களிடமும் மிகவும் அதிகம் என்பது மிக மிக உண்மை ...
மற்றப்படு பெற்ரோல் விலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது ? அந்தப் பிரபல பதிவர் ???
ஹிஹி !!!
வவ்வால், இந்த பதிவை கண்டிப்பாக பிரணாபும், கருணாவும் படிப்பார்கள்.
ஏனய்யா உனக்கு வவுதெறிச்சல். ஆட்டையை போட்ட 1,78,000 இலட்ச கோடி பணம், சி.ஐ.டி காலாணி வீட்டில்தான் இருக்கும் என்று தெரிந்த வைத்த ”நிதி” நிபுணர் பிரணாப், தனது பங்கிற்க்கு ஒரு பங்கை வாங்க போயிருப்பார். “இதோ பார், பெரியவரே, இனிமே நாந்தான் பிரிசிடண்ட், உங்க பொண்ணையும், ராஜா மாதிரி இருக்கும் மருமகனையும் வெளியே கொண்டுவர நான் ஏற்பாடு செய்கிறேன், எனக்கு இவ்வளவு தந்தரனும்” என டீலிங்கு பேச போயிருப்பார். பத்த வைச்சிட்டியே பரட்டையே!!! வை திஸ் 2ஜி வெறி??
ஃபெட்னா என்பது ஏதோ மிருக வதை தடுப்பு அமைப்பு என்று நினைத்திருந்தேன். அது சினிமாவை வைத்து தமிழனை வதை செய்யும் அமைப்பாக உள்ளதே.
பெட்ரோல் சம்பந்த பட்ட பதிவுகளில், வந்திருக்கும் படங்களின் துணி குறைப்பு ஏற்ப பெட்ரோல் விலையை குறைத்துள்ளார்கள். அந்த பிரபல பதிவர், இன்னும் குறைந்த ஆடை அணிந்த படைத்தை போட்டிருந்தால், இன்னும் குறைத்திருப்பார்கள். ஆடையை இல்லாமல் போட்டிருந்தால் பெட்ரோலை ஓசியில் தந்தாலும் தந்திருப்பார்கள்...LOL.
சுரேஷ்,
வாங்க,வணக்கம், நன்றி!
வெளிப்படையான பாராட்டுக்கு மிக்க நன்றி!
------
கவிதை நாடன்,
வாங்க,வணக்கம்,நன்றி!
நேர்மைக்கு என்றும் பஞ்சமில்லை நமக்கு,நன்றி!
------
மனசாட்சி,
வாங்க,வணக்கம், நன்றி!
உண்மையான மனசாட்சி தான் நீங்க :-))
பெட்ரோல் கடையில விலை ஏற்றிக்கிட்டே போனால் எனக்கு வேண்டாம்னு சொல்லி புறக்கணிக்க மக்கள் முன் வாவேண்டும். அப்போ தான் அடங்குவாங்க.
---------
இக்பால்,
வாங்க,வணக்கம்,நன்றி,
ஆஹா ரெண்டும் சூடான ஐடெம் ஆகிடுச்சு போல,அதுவும் சில டிரைவர்கள் செய்ற ஹீரோயிசம் சொல்லி மாளாது, பஸ்சில பெண்கள் கூட்டம் இருந்துச்சுனா அவளோ மன்மத ராசா ஆகிடுவாங்க சில டிரைவர்கள் :-))
படிக்காதவங்க ரசிகர் மன்றம்னு வைக்கிறத கிண்டல்ல் செய்ற மெத்த படிச்சவங்களும் அதே தான் செய்றாங்க,பரதேசம் போனாலும் பழக்கம் விடுமா :-))
ஹி..ஹி பிரபலம் இல்லை அதிரடிப்பதிவர் :-))
---------
நரேன் ,
வாரும், வணக்கம்,நன்றி!
எனக்கு ஒரு பொட்டி கொடுத்தா நானும் ஜோதில அய்க்கியமாகி வாழும் வள்ளுவரே ,என்னை வாழ வைத்த வள்ளலே னு சேர்ந்திசைப்பாடுவேன்ல :-))
குடியரசு தலைவர் தேர்தலுக்கு "நிதி" வாங்க வந்திருப்பார் போல.
நான் கூட ரொம்ப நாளா பெட்னா என்பது பரோட்டா போல சாப்புடுற ஐடெம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், கடசியில சாப்பிட வாங்க அமலாபாலுடனு கூப்பிடுறான்ங்க :-))
ஹி..ஹி அப்போ துணியில தான் பெட்ரோல் விலை ரகசியம் இருக்கா,இது தெரியாம போச்சே, தெரிஞ்சிருந்தா சன்னி லியோன் படம் போட்டு இருப்பேன் :-))
மக்களுக்கு சேவை செய்ய தான் படம் போட்டேன்னு உமக்கு தெரியுது ஆனால் அது ராசநடராசருக்கு தெரியலையே என்ன செய்ய ...ர்ராசா ஆ.ஆ :-))
---
வவ்வால் சார்,
அவ்வையார் அந்தப் பாடலைப் பாடியது (அல்லது நீங்கள் சொல்வது போல் டீல் போட்டது!) விநாயகரை நோக்கி (கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே ) , முருகனை நோக்கியல்ல!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in
சினிமா விரும்பி,
வணக்கம்,நன்றி!
சின்ன வயசில பார்த்த படம் , அவ்வையார் டீல் போட்டாங்கன்னு அளவுல தான் ஏதோ நியாபகம் இருக்கு, மேலும் எனக்கும் பக்திக்கும் பல காத தூரம், சரி விடுங்க முருகன்,பிள்ளையார் எல்லாம் ஒரே குடும்பம் தானே, ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க :-))
நவீன அவ்வையார் அமலா பால் தமிழ் வளர்க்கிறத பார்த்து ரசிப்போம் :-))
Post a Comment