Thursday, September 06, 2012

என்ன கொடுமை சார் இது-8

(ஹி...ஹி வளைவுகள் ஜாக்கிரதை)


பதிவரசியல்.

தமிழ்ப்பதிவர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் வெற்றிகரமாக நடைப்பெற்றதை பெரும்பாலோர் அறிவார்கள்.

எந்த ஒரு நிகழ்வையும் வெற்றிகரமாக நடத்துவது என்பது சிரமமான ஒன்றே என்றளவில் நடத்திய மற்றும் பங்குப்பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்நிகழ்வை ஒட்டி சிலப்பதிவர்களுக்கு தெரியவில்லை, அல்லது அழைக்கவில்லை என ஒரு பேச்சு ஓடியது,

இதனை ஒட்டி ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை ,அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்பினை பதிவில் பார்த்துவிட்டு மட்டுமே வந்தார்கள் என விளக்கம் அளித்தார், யாரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க தேவையில்லை எனவே இவ்விளக்கம் ஏற்கக்கூடியதே, ஆனால் அவர் விளக்கம் சொல்லிய சில நாட்களுக்கு பிறகு வந்த பதிவுகளில் பார்த்தால் இன்னாரை நான் போன் செய்து அழைத்தேன் என ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பதிவு போடுகிறார், இன்னொரு "முக்கிய" பதிவரோ இன்னின்னார் என்னை தொலைப்பேசியில் அழைத்து கலந்து கொள்ள சொன்னார்கள் எனப்பதிவிடுகிறார்.

அழைக்கவில்லை என சொன்னவர்களையும் அனைவரும் அறிவர், அழைப்பு விடுவிக்கப்பட்ட சிலரையும் அறிவார்கள், ஆரம்பத்தில் யாரையும் அழைக்கவில்லை என சொல்லிவிட்டு உடனே அழைப்புவிடுவிக்கப்பட்டதாகவும் முன்னுக்கு பின்னாக பதிவுகள் வருவது சரியாகப்படவில்லை, பாகுபாடற்ற அணுகுமுறையில்லையோ என்றே நினைக்க வைக்கிறது.

மேலும் அனைத்துப்பதிவுகளிலும் சென்னையில் தமிழ்ப்பதிவர்களின் முதல் சந்திப்பு என மறக்காமல் அழுத்தம் கொடுப்பதும் ஏதோ ஒன்றினை குறியீடாக சொல்கிறதா?

என்ன நடந்தால் உனக்கென்ன ..நீ என்ன கலந்துக்கொண்டாயா எனக்கேட்பாங்க எனவே வாயை மூடி சும்மா இருடா வவ்வாலு :-))

என்ன கொடுமை சார் இது!

---------------
வாய மூடி சும்மா இருடா!

சமீபத்தில் தமிழின் முதல் சூப்பர் ஹீரோ படம் என பெருமையாக சொல்லிக்கொண்டு வந்த திரைப்படம் "முகமூடி'ஆனால் ஏனோ அனைவரும் கிழித்து தொங்கவிட்டு விட்டார்கள்(முகமூடி என்ற பெயர் பிடிக்கலையோ), படம் நல்லா இருக்கா இல்லையா என்பதை பதிவர்களின் விமர்சனம் வைத்து கணிக்கவே முடியாதப்படியான அளவு கோல்களின் அடிப்படையில் படத்தினை பதிவர்கள் விமர்சிக்கிறார்கள் .நாயகியாக எப்படி இவரைப்போடலாம் எந்த கோணத்தில் பார்த்தாலும் பெண்ணுக்குரிய "அம்சங்களே' இல்லை என சாமுத்திரிகா லட்சண குரு போல சொல்கிறார் ஒரு பதிவர் ,

இன்னொருவரோ ஏன் நாயகி வீட்டில் புத்தர் சிலையைக்காட்டுறாங்க என்கிறார், ஒரு வேளை பிள்ளையார் பொம்மையை காட்டினால் பாராட்டியிருப்பாரோ என்னமோ. படத்தில் மேலும் பலக்குறியீடுகளை இயக்க்குனர் திணித்து தனது உலக திரைப்பட அறிவைக்காட்டியிருப்பதாக ஒரு மாபெரும் வதந்தி பதிவர்களால் கிளப்பிவிடப்பட்டுள்ளதால், அக்குறியீடுகளை கட்டுடைத்து ஒரு விமர்சனமும் எழுதி மக்களை சோதிக்கலாம் என அடிமனதில் ஒரு அல்ப ஆசை ஓடிக்கொண்டிருக்கிறது.
திரையரங்கிற்கு படம் பார்க்க போய் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் இம்முறை திரையரங்க நுழைவு நிச்சயம் ,ஆனால் பன்னரங்கு காட்சியகம் செல்லாமல் ஏதேனும் ஒற்றைத்திரையரங்கு செல்வேன், பெரும் அரங்குகள் என்னைப்போல ஏழைகளுக்கு உகந்தது அல்ல!

இப்போதைக்கு முகமூடியின் இப்பாடல் எனக்கு தத்துவார்த்த ரீதியான ஒருப்பாடலாக படுகிறது ...


எனவே படம் எப்படியிருந்தாலும் பார்ப்பது என முடிவு செய்து விட்டேன் , என்னைப்படம் பார்க்க தூண்டிய ஒரே விடயம் படத்தின் பெயர் "முகமூடி" :-))

என்ன கொடுமை சார் இது!

----------
அரசியல் விளையாட்டு.

சென்னை நேரு கால் பந்தாட்ட மைதானத்தில் பயிற்சிக்கு வந்திருந்த இலங்கைக்கால்பந்து வீரர்கள் வெளியேற்றப்பட்டு ,நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்கள். மேலும் அனுமதி அளித்த அரசு உயர் அலுவலரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காரணம் இலங்கை தமிழர் பிரச்சினை நிலவும் நிலையில் இலங்கை வீரர்கள் எப்படி தமிழ் மண்ணில் பயிற்சி செய்யலாம் என்பதாகும்.

அம்மையாரின் அதிரடி கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இதில் உள்ள நகைச்சுவை என்னவெனில் இது போல மட்டைப்பந்தாட்ட அணியினரை திருப்பி அனுப்பியிருக்க முடியுமா என்பதே , ஆண்டு தோறும் இலங்கை அணி இந்தியாவில் போட்டிகளில் கலந்து கொள்ள வருகிறது, சென்னையிலும் போட்டிகளில் ஆடியுள்ளார்கள், மேலும் இலங்கை வீரர்கள் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலும் இருக்கிறார்கள்.

மேலும் பல ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து வீச்சு பயிற்சி மையத்தில் டென்னிஸ் லில்லி தலைமையில் இலங்கை பந்து வீச்சாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர், சமிந்தா வாஸ், லசித் மலிங்கா உட்பட பலர் எம்.ஆர்.எஃப் பயிற்சி மையத்தின் தயாரிப்பே.

மட்டைப்பந்தாட்ட அணியை ஆடவிட்டு வேடிக்கைப்பார்க்கும் அரசியல்வாதிகள் கால்பந்தாட்ட அணியை மட்டும் விரட்டி வீரம் காட்டுவது நகை முரண் ஆகும் , ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி கதையாக இருக்கு.

என்ன கொடுமை சார் இது!
---------------------
பணங்காய்ச்சி மரம்.

சமீபத்தில் சென்னையில் பள்ளிப்பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையின் வழியே விழுந்து ஒரு சிறுமி பலியானாள், அச்சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் ஓயும் முன்னரே க.க நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் நீச்சல் பயிற்சியின் போது நீரில் மூழ்கி ரஞ்சித் என்ற மாணவன் இறந்துப்போனான்.

மாணவன் ரஞ்சித் , மாசிலாமணி, வேலூர் மாவட்டம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர் என்பவரின் ஒரே மகன் ஆவார்.

இச்சம்பவத்தில் கேள்விக்குறியை ஏற்படுத்துவன,

# 26 மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டும் ,ஒரே ஒரு பயிற்சியாளர் மட்டுமே இருந்துள்ளார், இன்னொரு பயிற்சியாளரோ, உதவியாளரோ இல்லை.

# காலையில் பள்ளிக்கு வந்ததும் ஏன் நீச்சல் பயிற்சிக்கு மாணவர்களை பள்ளி நிர்வாகம் அனுப்ப வேண்டும்? பெரும்பாலும் உடல் திறன் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் மாலையில் தானே வைப்பார்கள்?

எனது கணிப்பு என்னவெனில் பல மாணவர்களை நீச்சல் பயிற்சியில் சேர்த்து பணம் வசூலித்துவிடும் பள்ளி நிர்வாகம் ,அனைவருக்கும் ஒரே நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்க காலையில் இருந்து மணிக்கு ஒரு அணியாக பயிற்சிக்கு அனுப்பி சமாளித்து இருக்க வேண்டும். இதனால் பயிற்சியாளருக்கு மாணவர்கள் மீது பெரிதாக கவனம் இருக்க வாய்ப்பில்லை.

# மாணவன் இறந்தவுடன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு எதுவுமே நடவாதது போல தொடர்ந்து பள்ளியை நடத்தியுள்ளனர், பல மாணவர்களின் பெற்றோரும் கூடி போராடிய பின்னரே ,பள்ளிக்கு விடுமுறை விட்டுள்ளனர்.

# சென்னை சேலையூர் சியோன் பள்ளி நிர்வாகி இதே போன்ற வழக்கில் கைதாகி ,பிணையில் கூட வர இயலாமல் சிறையில் இருந்தார் ஆனால் அதே போன்ற சம்பவத்தில் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகி பெயருக்கு கைதாகி சில மணி நேரங்களில் பிணையில் வெளிவந்து விட்டார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என அரசியல் நிர்ணய சட்டம் சொல்கிறது.

என்ன கொடுமை சார் இது!
------------------------------------

பின்குறிப்பு:

படங்கள் மற்றும் தகவல் உதவி,

கூகிள்,யூட்யூப் தளங்கள்,நன்றி!
*******

25 comments:

ஜோதிஜி said...

பேசாம கொடுமைகள் மூன்று என்று பெயர் வைத்திருக்கலாமோ?

மாயன் said...

வவ்வால்,

நீங்க நல்லவரா?? கெட்டவரா??....

இந்த கவிதைகளாகட்டும், பின் நவீனத்துவ கதைகளாட்டும், உலக சினிமாவாகட்டும் எதை குறிப்பால் உணர்த்துகிறார்கள் என்பது அதை உருவாக்கியவருக்கு மட்டும் தான் தெரியும்....

நாம தான் அவங்க அதை தான் சொல்லியிருக்காங்க, இதை தான் சொல்லியிருக்காங்கன்னு எதை எதையோ கற்பனை பண்ணி நாமளும் குழம்பி படிக்கிற எல்லாரையும் குழப்பறோம்... அதை உருவாக்கினவங்களே நாம எழுதினதை படிச்சுட்டு தான் ஒ.. நாம இப்படி வேற சொல்லியிருக்கமான்னு நினைச்சுப்பாங்க....

என்னமோ போங்க...

ராஜ நடராஜன் said...

பத்த வச்சிட்டீங்களே!

ராஜ நடராஜன் said...

//நீங்க நல்லவரா?? கெட்டவரா??....//

@மாயன் உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு நல்லவர்.என்னைப் போன்ற கெட்டவனுக்கு மெய்யாலுமே கெட்டவர்.

ராஜ நடராஜன் said...

ஒரு முகமூடிக்கே பதிவுலகம் அல்லோகலப்படுது.முகமூடியும் முகமூடியும் சேர்ந்தா!

ராஜ நடராஜன் said...

அதான் ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டின்னு கடைசி இரண்டு கொடுமையும் சொல்லிடுச்சே.

ராஜ நடராஜன் said...

சரக்கு இருந்தா இன்னும் சில கொடுமைகளை அவுத்து வுடு!இல்லே சலாம் போட்டு ஓடி விடு:)

ராஜ நடராஜன் said...

பதிவுலகமே கொடுமைன்னு ஓடி வந்தா இங்கேயும் ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுது:)

வவ்வால் said...

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

நான்கு கொடுமைய சொல்லி இருக்கேன் ,உங்களுக்கு அதில் ஒன்று மட்டும் நல்லதா தெரியுதா?

ஹி...ஹி நான் படம் பார்க்க போறேன்னு சொன்னது தானே :-))

------------

மாயன் ,

வாங்க,நன்றி!

நாயகத்தனமா கேட்கிறிங்களே, பதிலை ராச நடையே சொல்லிட்டார் .

நீங்க சொல்வது சரிதான், ஆனால் விமர்சனம் என்றப்பெயரில் இதெல்லாம் ஆராய்ச்சி செய்றாங்களே மக்கள், எனவே என்பங்குக்கும் ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டாமா?

ஆத்தர் செத்துவிட்டார் என்பது பின்னவினத்துவ கோட்பாடாக்கும் :-))

---------

ராச நடராசர்,

வாங்க நன்றி!

#உண்மையை ஒழிக்காமல் சொன்னால் பற்ற வைப்பதா?

#எனக்கான வக்கீலுனு அமெரிக்க பங்காளி சொல்லப்போறார் :-))

#முகமூடின்னு பேரு சொன்னாலே என்னை எதுக்கு பார்க்குறிங்க, என் பேரு வவ்வாலுங்க :-))

#வல்லான் வகுத்ததே வழி ,அவ்வுலகில் இளைத்தவன் ஈனப்படுவான்.

#நீங்களும் நான்கைந்து கொடுமைகளை கூவுறது.கொடுமையிலும் சிறப்பான கொடுமைன்னு இருக்காமே :-))சமுத்ரா said...

வவ்வால், பதிவர் சந்திப்பை விட்டு வெளியே வாருங்கள்..உலகில் நிறைய
விஷயங்கள் நடைபெறுகின்றன :):)

கோவை நேரம் said...

நீங்களும் பதிவர் சந்திப்பை பற்றி எழுதி விட்டீரா..(பத்த வச்சிட்டியே பரட்டை ).
முகமூடி...உங்களுக்கு நாங்க வைத்து இருக்கும் பெயர்...
இந்த கொடுமைகளை ஏற்கனவே படித்து விட்டாச்சு...இனி அடுத்த கொடுமை..?

அஞ்சா சிங்கம் said...

மாயன் said... வவ்வால்,

நீங்க நல்லவரா?? கெட்டவரா??....
/////////////////////////////////////////////////////////

சீரும் சிங்கத்தை நம்பு................. பறக்கும் வவ்வாலை நம்பாதே ....அப்படீன்னு முன்னோர்கள் சொல்லி இருக்காங்க ...

அய்யய்யோ போச்சி போச்சி ..........இன்னும் கொஞ்ச நேரத்தில் சங்க இலக்கியத்தில் இருந்து ஆதாரம் காட்டு ..........சயின்ட்டிபிக்கா நிருபித்து காட்டுன்னு .............ஒரு கும்பலா வருவாங்க ......எல்லாரும் தாக்குதலுக்கு தயார் ஆகுங்க ..பாதுகாப்பான பகுதியை நோக்கி நகருங்க ........................

வவ்வால் said...

சமுத்திரா,

வாங்க,நன்றி!

நிறைய விடயம் இருக்கு தான், ஆனால் சில பதிவுகளை படிக்கும் போது எழுந்த கேள்விகளை மறைக்காமல் பதிந்து வைப்போமே என செய்தேன், அதனால் இதனை தனியாக பதிவிடவில்லை, மேலும் நான் என்னமோ வரிசையா பதிவர் சந்திப்பு பதிவு போட்டுக்கிட்டு இருக்காப்போல சொல்றிங்க, இப்போ எழுதியதே என்னுடைய முதல் குறிப்பு(ரொம்ப அவசரப்படுறாப்போல இருக்கு)

---------

கோவை ஜீவா,

வாங்க நண்பா, நன்றி!

பத்த வைக்கலை ,ஆள் ஆளுக்கு ஒரு மாதிரி எழுதி குழப்பிவிட்டுடாங்க. எனவே எனது கருத்தினை சொல்லி வச்சேன்.

ஆமாம் சில கொடுமைகள் எல்லாம் முன்னரே தெரிந்தது தான் ஆனால் அதில் அதிகம் வெளியில் தெரியாதவற்ரையும் சேர்த்துள்ளேனே.

--------


அஞ்சா ஸிங்கமே,

வாரும்,நன்றி!

வவ்வாலை நம்பினோர் கைவிடப்படார்!!!

உள்ளதை சொல்வேன் நல்லதை செய்வேன் வேறொன்றும் தெரியாது...

சங்க இலக்கிய ஆதாரம் கேட்கும் கோஷ்டி வந்தா சங்கை ஊதிட வேண்டியது தான்.

எதுக்கும் பதுங்கு குழியை எல்லாம் வெட்டி வைப்போம் :-))

”தளிர் சுரேஷ்” said...

விளையாட்டில் அரசியல் கலப்பது நல்லதில்லை தான்! ஆனால் இங்கு எதிலும் அரசியல்தான்! கமெண்ட் போட்டாலும் அரசியல் ஆக்கப்படுவது வேதனைதான்!

இன்று என் தளத்தில்
வாஸ்து பிரச்சனையில் வடிவேலு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6.html

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
பதிவர் சந்திப்பு பற்றி தெளிவான விள்க்க பதிவு போடூவீர்கள் என துண்டு போட்டு இடம் பிடித்து வைத்தால், யார் அழைத்தார்,அழைக்கவில்லை என குழப்புகிறீரே? நியாயமா?.

**********

முகமூடி என்று பெயர் இருப்பதால் நாம் ஆதரவு கொடுத்து விடுவோம்.படம் பார்த்து விடுவோம். முடிந்தால் முழுப்படமும் பார்த்து விமர்சனம் செய்யுங்கள். ஹி ஹி

********************

ஏன் கால்பந்து அணி விரட்டப் பட்டது? மட்டைப் பந்து அணி ஆதரிக்கப்பட்டது?

" தேசம் ஞானம் கல்வி,
ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி
குதம்பாய்"
*****************
//எனது கணிப்பு என்னவெனில் பல மாணவர்களை நீச்சல் பயிற்சியில் சேர்த்து பணம் வசூலித்துவிடும் பள்ளி நிர்வாகம் ,அனைவருக்கும் ஒரே நீச்சல் குளத்தில் பயிற்சி அளிக்க காலையில் இருந்து மணிக்கு ஒரு அணியாக பயிற்சிக்கு அனுப்பி சமாளித்து இருக்க வேண்டும். இதனால் பயிற்சியாளருக்கு மாணவர்கள் மீது பெரிதாக கவனம் இருக்க வாய்ப்பில்லை.//

இதுதான் நடந்தது.

இபோது பெரும்பாலான் தனியார் நிறுவனங்களில் வேலை என்பது மிக அதிகம். சில சமயம் கொஞ்சம் கவனம் தவறும் போது பிற இடங்களில் சரி செய்யலாம்.

ஆனால் இங்கே மாணவர்கள் உயிர் என்பதால் கூடுதல் கவனம்,இன்னும் சில உதவியாளர்கள் இருந்திருக்க வேண்டும்.

எல்லாம் நிர்வாகத்திற்கு ஒரே நோக்கம் இலாபம் இலாபம்....

மாணவர்களுக்கு இழப்பு இழப்பு....

நன்றி

ILA (a) இளா said...

முகமூடி --> இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே. முகமூடி என்னும் பிரபல/மூத்தப் பதிவரைத் தெரியும்தானே?

நாய் நக்ஸ் said...

சில நாட்களுக்கு பிறகு வந்த பதிவுகளில் பார்த்தால் இன்னாரை நான் போன் செய்து அழைத்தேன் என ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பதிவு போடுகிறார், இன்னொரு "முக்கிய" பதிவரோ இன்னின்னார் என்னை தொலைப்பேசியில் அழைத்து கலந்து கொள்ள சொன்னார்கள் எனப்பதிவிடுகிறா///////////////

அது மிக நெருங்கிய ஒத்த அலைவரிசையில் உள்ள நண்பர்கள் அவர்களுக்குள் அழைத்துக்கொண்டது..,...

ஊர் திருவிழாவில் அவர் அவர்கள் அவர்கள் உறவினரை அழைப்பது போலதான்..,...

இதில் ஒரு பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை எனக்கு...
போது அழைப்பு வைத்தாகிவிட்டது....அவ்வளவுதான்...

aidjfi[odjefpn8evp[poae[ikr[pmvwep[rfpwoemvjtoeuh9h ucpxdgvdewriogopkar[p,kietimieomirmiwmb ,comvbw9im9u59uvquqmvbq0im0iqlg,a;le9mu9tunvqa40-9vmqomw3i54ui
miejru930egoarmfd v'ap[ld;'dmbmaihreth iahjiejptnueruypwqr
kndmfvgetoq[p ijmvopmvv[p,q[ ][a[ewlhenionuioreuntvqjw3mceiork
kjndfvuhy7tr78etuahpwosfp[osdikvn dvhuyegtr687ewypqokw
'
opivghrenogye7wqtb984ur[09tpfm[powegvkojriehyhtn[wvqvnnnnnnn8bwyp
klncdiuvytpqaoin tvinp9tir0e[pmtvqw][p-otmvvhiwo
lm cugf ubyo7vtrqweoqgtm jqvietgvஏன் செயண்டிஸ்ட்க்கு வேலை கொடுத்துகிட்டு.....அதான் நானே கமெண்ட் போட்டுட்டேன்....

:))))))))))

என்ன ஒண்ணு நாம ஷேக்ஸ்பியர் பக்கத்து வீடு.....
வேணும்னா அவர் வந்து என்கிட்டே கேக்கட்டும்.....விளக்கம் நான் தரேன்....
அதுக்கு முன்னாடி அவருக்கு கக்கா கழுவதெரிந்தாதான் நான் பேசுவேன்...ம்ம்க்கும்...ஆமா...@ வவ்வால்...இப்ப மாத்தின டேம்ப்ளடே-ம் மொபைல்ல ஸ்க்ரோல் பண்ண முடியலை...
தப்பிச்ச...இல்லாட்டி நான் ஒரே இங்கிலீஷ் கமெண்ட்-ஆ போட்டிருப்பேன்...

சயின்டிஸ்ட் இல்லாத குறையை நான் தீர்த்திருப்பேன்...

வவ்வால் said...

சுரேஷ்,

வாங்க,நன்றி!

அதுக்குள்ள அரசியல் சிராய்ப்புகள் உண்டாக்கிடுச்சா பதிவுலகம் ,பாம்பு திங்கிற ஊரில் நடு துண்டு நமக்குன்னு புகுந்து புறப்படணும் :-))

------------
சகோ.சார்வாகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

பதிவர் சந்திப்பை வச்சு முழுநீள சித்திரம் தீட்ட நான் என்ன பிராபல்ய பதிவர்ரா :-))

# கண்டிப்பாக ஆதரவுடன் விமர்சனமும் போடும் எண்ணம் உண்டு , முகமூடி ஒரு பின்னவினத்துவ கட்டுடைப்பு பார்வைனு தலைப்பெல்லாம் ரெடி :-))

# பரிணாம சித்தரய்யா நீர் :-))

#அன்னசத்திரம் ஆயிரங்கட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மிகவும் உயர்வுன்னு சொன்ன தமிழ் நாட்டில் தான் கல்வி வியாபாரம் களைக்கட்டுது ,மெயின் வியாபாரத்தின் உப கிளையாக நீச்சல்,யானை,குதிரையேற்றம் என சொல்லி காசுப்புடுங்க திட்டமிட்டு மாணவர்களை அலட்சியமாக கையாண்டு உயிரை காவு வாங்குகிறார்கள்.

மக்கள் அப்படியே செய்தியை படித்துவிட்டு இதெல்லாம் சகஜம்ம் என நினைக்கும் நிலைக்கும் போய்விட்டார்கள், இதனூடாக இருக்கும் வியாபார வெறியினை உணர்வதாயில்லை. இப்பதிவில் சுட்டியப்போதும் ஏற்கனவே தெரிந்தது தானெ என வழக்கமாக நினைப்பார்கள் ,ஆனால் சுட்டிய விடயத்தினை சரியாக தொட்டு சென்றது நீங்கள் மட்டுமே.
---------

இளா,

வாங்க,நன்றி!

இல்லாத உள்குத்தை தேடியலையும் மாந்தருக்கு நான் என் சொல்வேன் :-))

முகமூடி என்றப்பழைய பதிவரை தெரியும் அப்போது படித்ததுண்டு, இப்போது காணாமல் போயிட்டார் போல,.ஆனால் இப்போது என்னை சில பிராபல்யங்கள் முகமூடி என அன்பாய் வசை பாடும் போது அடியேன் என் செய்வேன் :-))

பெரியவங்க சொன்ன பெருமாள் சொன்னாப்போலன்னு விட்டாச்சு, முகமூடி படம் நல்லா இல்லைனு சொல்லக்கூட அடியேன் மீதான காண்டு என சில பட்சிகள் கூவுகின்றன :-))
---------------
நக்ஸ் அண்ணே,

வாங்க,நன்றி!

//அது மிக நெருங்கிய ஒத்த அலைவரிசையில் உள்ள நண்பர்கள் அவர்களுக்குள் அழைத்துக்கொண்டது..,...//

நீங்க சொல்வது சரி தான் ஆனால் , இரு தரப்புக்கும் தெரிந்தவராச்சே ஏன் எனக்கு சொல்லவில்லைனு இப்போ நினைக்க இடம் கொடுத்தாச்சு இல்லையா?

எனக்கு அவரை மட்டும் தான் தெரியும் அழைத்தேன் என்பது வேறு , ஆனால் ரெண்டு பேரையும் தெரிஞ்சுக்கிட்டு ஒருவரை அழைக்கவில்லை என்பது வேறு.

மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு செய்யும் போது அதன் கனப்பரிமாணம் வேறுபடுகிறது. அதை தானே அவர்களும் சொல்லி பொலம்புறாங்க,எனவே இப்படியான நிகழ்வுக்கு இடம் இல்லாமல் செய்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எல்லாம்ம் உங்களைப்போன்ற பரந்த மனம் கொண்டவர்களாக இருக்க முடியுமா? மனிதர்கள் பல விதம் என்பதால் பொதுவான அணுகுமுறையே இருக்க வேண்டும்.

ஏதோ தேவ பாஷையில சொல்லி இருக்கிங்க :-))

சயிண்டிஸ்ட் எல்லாம் இந்த பக்கம் வர்ர மாட்டார் அந்தளவுக்கு தில் கிடையாது.

இது பிளாக்கரிலேயே இருக்க பிரச்சினை போல ஒவ்வொரு டெம்பிளேட் ஒருத்தருக்கு பிரச்சினைனு சொல்லுறாங்க, பொறுமையா தான் என்ன எனப்பார்க்கணும்.

நோக்கியா என்.78 என்ற பழைய போன் தான் வச்சிருக்கேன் நல்லா வருது எனக்கு. நோக்கியா தவிர பிற மாடல்களில் ஒரு முறை முயற்சி செய்து என்ன எனப்பார்க்கிறேன். சாம் சங்கில் கூட நல்லாத்தான் தெரிந்தது இப்போ அதனை நெட்டுக்கு பயன்ப்படுத்துவதில்லை.

naren said...

வவ்வால்,

பதிவர் சந்திப்பு நேரத்தில் i was out of orbit. இப்பதான் தெரியுது டாஸ்மாக் தண்ணிபத்தியும், இலைமடிப்பு பத்தியும் ஒரு பெரும் அக்கப்போரே நடந்திருக்கிறது. அது தெரியாமல் இது அவரா என்று கேனத்தனமான ஒரு கேள்வியும் கேட்டு விட்டேன்.

ஒரு நிகழ்ச்சியை குறையில்லாமல் நடத்துவது அரிது. பதிவர் சந்திப்பை நடத்தியவர்கள் உண்மையில் கடினப்பட்டுள்ளார்கள். விடுங்க.

தமிழ் சினிமாவை பார்க்கப்போரோம்னு முகமுடியை பார்த்தால் பார்க்கலாம். எனுக்கு என்னமோ நல்லாதான் இருந்திச்சு. பிராப்ல பதிவர்கள் விமரசனங்கள் போல இல்லை.

நம்ம இக்பால் செல்வன், ஆணியை தலையில் அடிச்சிட்டாரு பாருங்க..

////சிங்கள அரசோடு வியாபாரம் பேணி வரும் மாறன் குடும்பத்தாரையும், கண்டியில் தேயிலைத் தோட்டங்கள் வாங்கி வைத்திருக்கும் கனிமொழி, கார்த்தி சிதம்பரத்தையும் முதலில் அடித்திருக்க வேண்டும் !!! அல்லவா !////

பாப்பாத்தியம்மா பள்ளியில் நீங்க சொன்னதைப்போல நடந்துதானிருக்கிறது. எதோ அந்த பள்ளி தப்பே நடக்காத புண்ணிய பள்ளியின்னு நினைச்சி நம்மாளுங்க குழந்தைகளை சேர்க்க அடிச்சிப்பாங்க பாருங்க. தப்பு நடந்தா, பொதுநலவாதிங்க செய்யற அலப்பறையை தாங்க முடியல. ஒரு ஹியரிங்கு மூணு இலட்சம் வாங்கும் வக்கீலை எல்லாம் வைத்து வாதாடுவது. இந்த அக்கறையை நம்ம கவருமெண்டு ஸ்கூலுக்கு காட்டினால், அதன் தரமாவது கொஞ்சம் முன்னேறும்.

அரசு பள்ளிகளில் தமிழ் வழி கற்பித்தல் இருந்தாலும், முதலில் தமிழை அழகாக பேச எழுத கற்று கொடுத்து பிறகு, அழகாக ஆங்கிலம் பேச, கற்க கற்றுகொடுத்தால், தனியார் பள்ளிகள் அடிவாங்கும். பிரிட்டிஷ் அரசாங்கத்தை அனுகினால், விலையில்லாமலும் மலிவாகவும் திட்டத்தை நிறைவேற்ற உதவி புரிந்தாலு புரிவார்கள். யார் கண்டா. அரசியல்வாதிகளின் பிள்ளைகள் ஆங்கிலபீசு பேசுனும் சாமானியன் பேசக்கூடாதா????

IlayaDhasan said...

//ஆனால் பன்னரங்கு காட்சியகம் செல்லாமல் ஏதேனும் ஒற்றைத்திரையரங்கு செல்வேன், பெரும் அரங்குகள் என்னைப்போல ஏழைகளுக்கு உகந்தது அல்ல!
//
நீங்க ஏன் ஏழை ன்னு சொன்னீங்க அதுவும் ஒரு குறியீடா?

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

பதிவர் சந்திப்பினை பற்றிய உமது கருத்து தான் எனதும், ஆனால் திமுகவை ஆரம்பித்தது கலிஞர் தான் என்பது போல பதிவர் சந்திப்பிலும் ஒரு டிவிஸ்ட்டிங்க் அரசியல் ஓடுதோனு எனக்கு சம்சயம் :-))

அவ்வளவு தான்!

----
முகமூடியை வழக்கமான தமிழ் படம் எனப்பார்த்தால் ஒன்றும் தலைவலிக்காது ஆனால் அதில் உலப்படத்தினை தேடினால் தலை வலிக்கவே செய்யும் :-))

----------

இலங்கையில் இந்திய அரசியல்வாதிகளின் வாரிசு மட்டுமல்ல ,நிறைய இந்திய தொழிலதிபர்களும் முதலீடு செய்துள்ளனர்.

இந்திய தேயிலையின் விலையை குறைவாக வைத்திருக்க இலங்கை தேயிலையை பஃபர் ஆக பயன்ப்படுத்தும் தேயிலை நிறுவனங்கள்,அதற்கு சாதகமான அரசியல் கட்சிகள் என எல்லாமே அரசியல் தான்.

கேட்ஸ்வே லாஜிஸ்டிக் என்ற ஒரு நிறுவனம் தான் கொழும்பு டிராண்ஸிட் துறைமுகம் தூத்துக்குடி இடையே சரக்கு கையாளுதலில் முன்னணியில் இருக்கிறது. இந்நிறுவனம் மூலம் சரக்கு அனுப்பினால் துறைமுகத்தில் உடனே கிளியரிங் கிடைக்கும், ஒரே ஆண்டில் 1500 கோடி ரூ லாபம் ஈட்ட முடிகிறது, ஆனால் ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆன நிறுவனம் இது, எல்லாம் தனி மொழியில் பேசுவதால் ஆகிற காரியம் இது :-))

கிருத்துவ ஆலயங்களுக்கு வந்தவர்களை தாக்கியுள்ளார்கள், ஆனால் பல ஆண்டுகளாக சென்னை எக்மோரில் காவல்துறை ஆணையர் அலுவலகம் எதிரில் உள்ள உள்ள புத்த மடலாயத்திற்கு சிங்களவர்களே வந்து போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இப்போ சீமான் ,வைகோ போன்றவர்களுக்கு பொலிட்டிகளாக செய்ய வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதால் இப்படி ஒரு சம்பவத்தினை அரங்கேற்றியுள்ளார்கள் எனலாம். அதுவும் சீமானுக்கு ,பெரியார் புறக்கணிப்பு என சொல்லதால் நிறைய பின்னடைவு எனவே மக்களின் கவனம் ஈர்க்க இப்படி செய்துள்ளார் எனலாம்.

----------
ஆமாம் பிராம்மண பள்ளி என்றால் தனி கவனம் தான் :-))

அதுவும் அப்பள்ளிக்கு எதிரான எதிர்ப்பையும் பார்ப்பண எதிர்ப்பு என டிவிஸ்ட் செய்தார் ஒரு பிராபல்யப்பதிவர் :-))

மக்களும் என்ன நடந்தாலும் அங்கே இடம் கிடைக்காதா என சிபாரிசுக்கு ஆள்ப்பிடிக்க அலைவார்கள் :-))

அரசுப்பள்ளியினை மேம்படுத்த வேண்டும் என்பது மீக நீண்ட ,செலவுப்பிடிக்கும் திட்டம் ஆகும். ஆனால் அரசு நினைத்தால் செய்யக்கூடியதே ஆனால் செய்வதில்லை. அனைத்து பொருள்களின் விலையின் மீதும் கல்விக்கென செஸ் வரி விதித்து அரசு வசூலிக்கிறது அந்த பணம் தனியே கல்விக்கு என செலவிட்டாலே மாற்றங்கள் கொண்டு வரலாம், ஆனால் அரசு அவ்வரியை ஏற்கனவே வழக்கமாக ஒதுக்கிய நிதிக்கு பதிலாக பயன்ப்படுத்திக்கொள்கிறது.

----------
இளைய தாசன்,

பன்னரங்கு திரையரங்கு செல்ல கட்டணம், வாகன நிறுத்தம், ஒரு தேநீர் ஆகியவற்றிற்கு மட்டும் 300 ரூ தேவைப்படும், எனக்கு அது மிக அதிகமானது, அப்படியே ஒரு சாண்ட்விட்ச் சாப்பிட்டால் 150 ரூ என சேர்ந்து 450 - 500 ரூ ஆகிவிடும்.

நான் ஒற்ரையரங்கு போனால் படம்+தேநீர்+பார்க்கிங் என 100 ரூவில் முடிந்துவிடும்.

வணிக வளாகம், பன்னரங்கு செல்ல காசில்லாதவங்க எல்லாம் ஏழைங்க தானே ?

Anonymous said...

Mugamoodi ki baap!

உபகாரி said...

@வவ்வால்,

குவாட்டருக்கும் சைடு டிஷ்ஷிற்கும் 100 ரூபாய் வரை தினப்படி செலவு செய்யும் ஏழைகள் எப்பொழுதாவது செல்லும் திரை அரங்குக்கு கொஞ்சம் கூடுதலாய் செலவு செய்தால் என்ன "குடி"யா முழுகி போய்விடும்.நானும் எப்பொழுதாவது திரை அரங்குக்கு செல்பவன்தான் சிக்கனமாக செலவு செய்பவர் எனில் நல்ல தரமான சத்யம் போன்ற திரை அரங்குகளில் 120 ரூபாயில் படம் பார்த்து விடலாம் உணவு & தேநீர் திரை அரங்கிலோ அல்லது திரை அரங்கு அமைந்துள்ள மாலிலோ சாப்பிடவேண்டும் என்று கட்டாயம் இல்லை.அருகில் உள்ள நமது வசதிக்கேற்ற உணவகங்களை பயன் படுத்திக் கொள்ளலாம்.

வவ்வால் said...

உபகாரி,

அப்போ தமிழ்நாட்டில் எல்லாம் தினமும் குடிக்கும் அளவுக்கு வசதியா இருக்காங்களா?

அப்போ நான் பரம ஏழை போல இருக்கு , எப்போ சரக்கடிக்க போகலாம்னு கணக்கு போட்டுகிட்டு இருக்கேன் :-((

// நல்ல தரமான சத்யம் போன்ற திரை அரங்குகளில் 120 ரூபாயில் படம் பார்த்து விடலாம் //

ஹி...ஹி சத்யம் தியேட்டர் தரமானதா எதை வைத்து சொல்லுறிங்க, நான் சொன்னால் எல்லாம் நம்ப மாட்டிங்க, திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் என்ன சொல்லி இருக்கார்னு இணையத்தில் தேடிப்படிங்க.

எல்லாம் டப்பா தியேட்டர் தான் பார்க்க கொஞ்சம் லுக்கா இருக்கும்.

2கே புரொஜெக்‌ஷன் இப்போ தான் செய்றாங்க முன்னர் வரைக்கும் 1கே புரொஜெக்‌ஷன் தான் எல்லா தியேட்டர்லயும் அதான்.

4 கே புரொஜெக்‌ஷன் தான் உலக அளவில் நிர்ணயம்.

11 டிராக் பார்கோ ஆடியோ அல்லது 7 டிராக் கூட வரலை அங்கே.90 களில் போட்ட 5.1 டிடிஎஸ் /டால்பி தான் இன்னும் ஒடுது.

அதே போல வேறு எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் செய்யாம ஏசியை போட்டு ஏமாத்தினா தரமான திரையரங்கா?

இன்னும் சொல்லப்போன சென்னையில நல்ல திரையரங்கம் என்பதே இல்லை, எல்லாம் பளபள பெயிண்டும் ஏசியும் மட்டும் கொண்ட கொடோன்கள் :-))


15 ரூ குளிர்ப்பானம் 50 ரூ ,அப்போ எமார்பி ஆக்ட் எதுக்கு?

தியேட்டருள் போயிட்ட பச்ச தண்ணிக்கூட குடிக்காம படம் பார்த்துட்டு வரணுமா? அப்படியான தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டிய அளவுக்கு எந்த படமும் ஒர்த் இல்லை :-))

உபகாரி said...

திட்ட கமிசன் சமீபத்திய அறிவிப்பின்படி 30 ரூபாய்க்கு மேல் தின சரி செலவு செய்யும் தகுதி உள்ளவர்கள் ஏழை இல்லை என்றாகிறது.பில் கேட்ஸ்,டாட்டா போன்றவர்களுடன் ஒப்பிட்டால் ரஜினி காந்த் போன்றவர்களே ஏழை தான்.ஆகவே ஏழை என்பது ஒவ்வொருவர் பார்வையில் ஒவ்வொரு மாதிரி.

மாதம் இன்டர்நெட்டிர்க்கு 800 ரூபாய் வரை செலவு செய்து கொண்டு கணினி,கேலக்சி மொபைல் வைத்து கொண்டு கமாடிட்டி வர்த்தகம் செய்யும் அளவுக்கு பொருளாதார பலத்துடன் இருந்து கொண்டு தினப்படி குவாட்டருக்கு பிளான் போடுகிறவர்கள் ஏழை வகையறாவ என்று எனக்கு தெரியவில்லை.

தரமான திரை அரங்கு என்றால் Dolby Atmos இருந்தால் தான் என்று யார் வரையறுத்தது.முன்புற இருக்கையில் இருப்பவர் புகைத்துக்கொண்டும் திரை சரியாக தெரியாமல் மறைத்துக்கொண்டும்,இடது பக்கம் இருப்பவர் பான்பராக் மென்று அவ்வபொழுது துப்பிகொண்டும்,வலது பக்கம் இருப்பவர் போதையில் அவ்வபொழுது குரல் எழுப்பிக்கொண்டும் சுருதி குறையும் பொழுது டாப் அப் செய்து கொண்டு அவரிடமிருது எழும் நறுமணத்தில் திளைத்துகொண்டு,நம்முடைய இருக்கையில் பல ஜீவன்களுக்கும் ரத்த தானம் செய்து கொண்டும் கிழிந்த இருக்கையில் ஒருவாறு யோகா நிலையில் அமர்ந்துகொண்டு திரை அரங்க உரிமையாளரின் வறுமை நிலையை எண்ணி பரிதாப படலாம்.இடைவேளையின் பொழுது டாஸ்மாக் நண்பர் வாந்தி எடுத்து வைத்திருப்பதை மிதித்து விடாமல் தாண்டி குதித்து நீங்கள் சொன்னது மாதிரி தேநீர் அருந்த சென்றால் பழைய படங்களில் தேவ லோக செட்டில் புகை மண்டலமாய் இருப்பதை போல உள்ள நிலைமையை சமாளித்து கொண்டு தேநீர் வாங்கினால் கான்டீன் நடத்துபவர் மக்களின் பொருளாதார நிலை கருதி குறைந்த விலையில் தரமான பொருள் கொடுக்கும் பொருட்டு தேநீரில் டீ தூளிற்கு பதில் புளியன் கொட்டை தூளும் பால் அதிகம் சாப்பிட்டால் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பால் குறைவாகவும் சர்க்கரை வியாதி இருப்பவர்கள் பதிகபடாமல் இருக்க சர்க்கரை குறைவாகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு வந்து விட கூடாது என்ற உயரிய நோக்கத்தில் குறைவான சூட்டில் தயாரிக்க பட்ட தேநீரின் தரத்தை மெச்சியபடி அருந்திவிட்டு கழிவறைக்கு சென்றால் அங்கு தவழும் பல்வேறு விதமான நறுமணத்தில் மிதந்தவாறு சென்று வந்தால் நமக்கு எதையும் தாங்கும் இதயம் இருப்பதாக பெருமை கொள்ளலாம்.

எனக்கு ஒரு படத்தில் விவேக் செய்த நகைச்சுவை தான் ஞபகத்திற்கு வருகிறது ஒரு கடையில் நுழைந்து கடையீன் பல்வேறு தகவல்களை (சமீபத்திய வருமான வரி தாக்கல் உட்பட) விசாரித்து விட்டு கடையில் வாஸ்து சரியில்லை என்று கிளம்பி விடுவார் அதுபோல எனக்கு எல்லா வசதியும் வேண்டும் ஆனால் அனைத்தும் தமிழக அரசின் புரட்சி திட்டமான விலை இல்ல பண்டமாகவே வேண்டும் என்றால் ஆகிற காரியமா.ஒரு பொருள் பரவலாக பயன் படுத்தப்படும் பொழுது தான் அது அனைவருக்கும் சகாயமான விலையில் கிடைக்கும்.உதாரனமாக மொபைல் போன் வந்த புதிதில் இப்பொழுது தொடக்க விலை மொபைல் போனை விட வசதி குறைவாகவும் ஆப்பிள் iphoneஐ விட விலை அதிகமாகவும் இருந்தது.மேலும் அழைப்பு கட்டணங்கலும் பல மடங்கு அதிகமாக இருந்தது தற்பொழுது மொபைல் பயன் பாடு பரவல் ஆனதால் உலகத்திலேயே குறைவான அழைப்பு கட்டணத்தில் பேசிக் கொண்டுள்ளோம்.நீங்களே சொல்லி உள்ளபடி நீங்கள் செல்லும் திரை அரங்கு உட்பட பெரும்பாலான தமிழக திரை அரங்குகளில் 1k புரொஜெக்‌ஷன் தான் உள்ளது என்று எடுத்து கொண்டாலும் சத்யம் திரை அரங்கில் குறைந்தது 2k புரொஜெக்‌ஷன் இருக்கும் என்று நினைகிறேன்.மேலும் புதிதாக கட்டப்பட்ட அரங்குகளில் 3d உடன் கூடிய 4k இருக்கும் என்று நினைகிறேன் அவர்களுடைய இணைய பக்கத்தில் இதை குறிப்பிட்டு உள்ளார்கள் (http://sathyam.spicinemas.in/about ).மேலும் உலக தரம் என்று நீங்கள் குறிப்பிட்ட 4k என்பது முன்னேறிய அமெரிக்க,ஐரோப்பா ஆகிய நாடுகளில் புதிதாக அறிமுகபடுத்த பட்ட தரமா அல்லது பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஸ்ரீலங்கா,ஆப்ரிக்காவில் உள்ள நாடுகளையும் உள்ளடக்கியதா என்று தெரிய வில்லை.

நீங்கள் எதோ இன்று காலையில் தான் இந்தியா வந்து இறங்கியவர் போல் பேசுகிறீர்களே நமது நாட்டில் சட்ட அமலாக்கம் சரியில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான் பெரும்பாலான அரசு அலுவலங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தினாலும் அன்பளிப்பு இல்லாமல் வேலை சரியாக நடபதில்லை நீங்கள் அடிக்கடி செல்லும் டாஸ்மாக் போன்ற அரசால் நடத்தப்படும் சேவை மையங்களிலேயே mrp போன்ற விசயங்களை எதிர்பார்க்க முடியாத பொழுது தனியாரால் லாப நோக்கத்தில் நடத்தப்படும் இடங்களில் சட்ட திட்டங்கள் 100 சதவிகிதம் பின்பற்ற வேண்டும் என்கிறீர்களே.நான் பெரும்பாலும் வெளியே செல்லும்பொழுது தண்ணீர் கொண்டு செல்வதால் எனக்கு தண்ணீர் பிரச்சினை எழுவதில்லை அப்படியே தண்ணீர் வேண்டுமென்றாலும் 20 ரூபாய்க்கு சத்தியம் விலை பட்டியலில் போட்டிருந்ததாய் ஞாபகம்.ஆக 120 + 20 = 140 ரூபாய் செலவு.