Saturday, May 25, 2013

இளையராஜா இசை ராஜாவா?


(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி)


இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோடி அனந்த நமஷ்காரங்கள், இப்பதிவை படிக்க புகுமுன் அடியேனின் சுய விளக்கத்தினையும் மனதில் இருத்திக்கொண்டு படிக்குமாறு தாழ்மையுடன் தெண்டனிட்டு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறேன், வவ்வாலாகிய நான் பலப்பல லோகாதாய விவகாரங்களையும்  எனக்கே உரித்தான தனித்துவமான முறையில் அலசி ஆய்ந்து மீஉயர் நடையில் கட்டுரைகளை வடித்து தமிழ்கூறும் நல்லுலகிற்கு சேவையாற்றி  வருவதை அனைவரும் அறிவீர்கள் என்பதை தன்னடக்கத்துடன் சொல்ல விழைகிறேன், ஆனால் இதுகாறும் இசைக்குறித்து பெரிதாக பிரஸ்தாபித்து எதுவும் எழுதியதில்லை காரணம் அடியேன் இசையில்  ஒரு ஞானசூனியம் என்பதை அறிந்திருப்பதாலேயாகும், ஆனாலும் கேள்வி ஞானம் சற்றுண்டு, நாக்க மூக்கா போன்ற ஸினிமா ஸங்கீத கீர்த்தனைகளை லயித்துக்கேட்கும் பழக்கமுண்டு,மேலும் சில பல ஸங்கீதக்காரர்களுடன் லேசான பரிச்சயமும் உண்டு என்பதால் அவ்வப்போது ஸங்கீத சம்பாஷணைகளில் கலந்துக்கொண்டு ஆமாமாம் நீங்க ஸொல்றது சரிதான், அது ஹரிப்பிரியா ராகமே தான் என சொல்லி ,அடேய் ஸங்கீத ஞானசூன்யமே அது கரகரப்பிரியா என பாராட்டுப்பத்திரங்கள் வாங்கிய அனுபவமுண்டு, அப்படியாப்பட்ட ஸங்கீத பின் புலமுள்ள நீ எப்படி ராசாவின் இசை ஆளுமை பற்றி எழுதக்கிளம்பினாய் என ஏகத்துக்கும் எகிறிக்குதிக்க வேண்டாம், இதற்கெல்லாம் காரணம் , ராசாவின் ரஸிக கண்மணிகளின் அளவுக்கதிமான விதந்தோம்பலேயாகும்.



இளையராஸா ஒரு அதிஅற்புதமான ஸினிமா ஸங்கீதக்காரர் என்பதில் எள்முனையளவேனும் அடியேனுக்கு சந்தேகமில்லை ,ஆனால் அவரன்றி இசையில்லை, இசையின் பிதாமகர் அவரே, இசை மேதை,ஞானி ,அவர் தும்மினாலே ஸப்தஸ்வரங்களும் ஒலிக்கும் என்பது போன்ற மிகையான விதந்தோம்பல்களை சில ரஸிக ஸிகாமணிகள் செய்வதோடு ,அதற்கு ஆதாரம் இதோ என ஆட்டுத்தாடி வைத்த சிலரின் கட்டுரைகளை வேறு சான்றாவணமாக காட்டிக்கொள்கிறார்கள்,அப்படியான ஒரு கட்டுரையை மிக ஸமீபத்தில் இணையத்தில் வாஸிக்க நேரிட்டது, மேற்கத்திய இசையென்றால் மேற்கு திசையை நோக்கி வாஸிப்பது என்ற அளவில் ஞானமுள்ள எனக்கே அக்கட்டுரை தம்புராவில் தவில் வாசித்தார் என்பது போல மிகசெயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்று என உடுப்பி ஓட்டல் உளுத்தம் வடை ஓட்டை போல தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

எனவே இசை ஞானமில்லை என இனியும் வாளாவிருந்தால் நாளைய தமிழ்கூறும் நல்லுலகம் இது போன்ற மொள்ளமாரித்தனங்கள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஸமூகபிரக்ஞையுள்ள வவ்வால் எப்படி சும்மா இருந்தார் என நாக்குமேல பல்லுப்போட்டு நாராசமாக கேட்கும் என்பதால் , கூச்சத்தினை கூறையில் ஏற்றிவிட்டு வெட்கமில்லாமல் கேள்வி ஞானத்தினை வைத்தே ஒரு இசைக்கட்டுடைத்தல் கட்டுரை படைத்துள்ளேன், இதில் உள்ளதெல்லாம் கூகிளாண்டவர் துப்பிய எச்சில்களே ஏதேனும் பிழையிருந்தால் அடியேன் பொறுப்பல்ல,இப்பாலகனை உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக பாவித்து அடியேனின் சண்டப்பிரசண்டங்களை மன்னித்து அருள்வீராக!

இனி மேற்கொண்டு இசைக்கட்டுடைத்தல் சாகித்தியத்தினுள் செல்லலாம்,

மூலப்பதிவு: இளையராஜா


//ஒரு முறை எனது இசை வகுப்பின் ஆசிரியர் மேற்கத்திய இசையின் கூட்டுச்சுரங்கள் [ chord ] பற்றிய பாடத்தில்  'C'  மேஜர் ஸ்கேல் பற்றிய பாடத்தை நடத்தினார்.
அப்போது 'C' மேஜர் ஸ்கேலின்... முதல் கார்டு 'C' மேஜர்.
இரண்டாவது கார்டு... 'D' மைனர் [ 'D' minor ].
ஒரு பாடலின்  'ஏற்பாட்டில்' [ arrangements ] இந்த இரண்டு 'கார்டு'களையும் அடுத்தடுத்து இசைப்பது தவறானது என்று சொன்னார்.//

chord or scale or key என எப்படி சொன்னாலும் பொருள் ஒன்றே, எனவே  'C' மேஜர் ஸ்கேலில் முதல் கார்டு "சி" மேஜர் எனவும் அடுத்து வருவது டி மைனர் ஸ்கேல் அதனை வாசிக்க மாட்டர்கள் என்பதே தவறு.

சி மேஜர் ஸ்கேலின் இசைக்குறிப்பு படம்.



இதில் C,D,E என வருவதெல்லாம் கார்டு அல்ல , பிட்ச்,அல்லது நோட் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு டோன் ஆகும். இது போல பல டோன்கள் உண்டு, ஒவ்வொன்றுக்கும் ஷார்ப்,ஃப்ளாட், மீடியம் என மாறுபட்ட டோன்கள் உண்டு.

கர்நாடக ஸாஸ்திரிய ஸங்கீதத்தில் வரும் ஸ,ரி,க,ம,ப,த,நி  ஸ்வரங்கள் போன்றவை மேற்கத்திய ஸாஸ்திரிய ஸங்கீத "A,B,C,D,E,F,G " எனப்படும் நோட்கள். இராகங்கள் போன்றவை கார்டு/ஸ்கேல்/கீ ஆகியவை.

கார்டு,ஸ்கேல் எல்லாம் ஒன்று என புரியாமல் ,அதில் வரும் நோட்களை கார்டுகளாக பாவித்து "C"மேஜர் கார்டுக்கு அடுத்து "D" மைனர் கார்டு ,"C" மேஜர் ஸ்கேலில் வராது என்கிறார்.

படத்தில் பார்த்தால் ,"C" மேஜர் ஸ்கேலின் நோட்டில் "C"க்கு அடுத்து "D" வருவதை காணலாம் ஆனால் இவை எல்லாம் "நோட்" அல்லது பிட்ச் ஆகும் , கார்டு அல்ல, இயல்பாகவே "C" மேஜர் ஸ்கேலில் "D" மைனர் கார்டு இல்லை ,அங்கு வருவது நோட் ஆகும், ஆனால் என்னமோ "C" மேஜர்  ஸ்கேலின் உள்ளே இருக்கும் பகுதி நோட்கள் "சி மேஜர்"&"டி" மைனர் என்பது போல விதிப்படி வராது என சொல்லி இருக்கிறார் :-))

ஆனால் கார்டு புராகிரஷன் என்பது வேறு ,அதனைக்கொண்டு வந்து ஒரு கார்டு/ஸ்கேலில் அடுத்து வாசிக்கும் நோட்களுடன் குழப்பி , அங்கே "D" மைனர் கார்டு "C" மேஜர் ஸ்கேலில் ,"C" மேஜருக்கு அடுத்து வராது என மெனக்கெட்டு சொல்லியுள்ளார்.

மேஜரோ மைனரோ ஒரு கார்டுக்குள் இருப்பதெல்லாம் நோட்கள், கார்டு அல்ல, கார்டும்,ஸ்கேலும் ஒன்றே.

இப்பொழுது "சி" மேஜர் கார்டு, டி மைனர் கார்டு பற்றியும் ,கார்டு புராகிரஷன் பற்றியும் என்ன சொல்கிறது இசை விதி எனப்பார்ப்போம்.

மேற்கத்திய இசையில் A,B,C,D,E,F,G எனத்தனியே நோட்/டோன்/பிட்ச் உண்டு , இவற்றின் கலவையில் இதே போல வரிசையாக A,B,C,D,E,F,G  என கார்டு/ஸ்கேல்/கீ  உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொன்றுக்கும் மேஜர் கார்டு,மைனர் கார்டு என இரு வகை உண்டு.இந்தக்கார்டுகளை அடுத்தடுத்து "ஹார்மோனியாக" வாசிப்பதே மெலடி எனப்படும் இசை ஆகும்.

மேற்கத்திய இசையில் ஆதாரமாக ,ஸ்திரமான பிட்ச்சில் இருப்பது "C" கார்டு என்பதால் எல்லா வாத்தியத்திலும் "C" கார்டு எளிதாக தெளிவாக வாசிக்க முடியும் எனவே "C" கார்டினை மையமாக வைத்தே இசை விதிகள் இருக்கும்.

இசை விதிகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் இசையமைப்பதை எளிதாக்கவே. விதியை பின்ப்பற்றுவது கடினமாக இருப்பதால் தானே இசைக்கற்றுக்கொள்ள கடினமாக இருக்கிறது பின்னர் எப்படி விதி எளிதாக்கும்னு நினைக்கலாம்.

உதாரணமாக கிரிக்கெட்டின் "ஃபீல்டிங் பொசிஷண்களை" பார்க்கலாம். பாயிண்ட், சில்லி பாயிண்ட், கல்லி, பைன் லெக்,டீப் பைன் லெக், லாங் ஆன்,லாங்க் ஆப்,மிட் ஆன்,மிட் ஆஃப் என பெயர் வைத்து அங்கெல்லாம் ஏன் ஆட்களை நிறுத்த வேண்டும் ,நிறைய இடம் இருக்கே இஷ்டத்துக்கு நிக்க வச்சா என்ன?  காரணம் என்னவெனில் ஒரு பேட்ஸ்மேன் பந்தினை அடித்தால் இயல்பாக இப்படி பெயர் சூட்டப்பட்ட புள்ளிகளின் வழியே அல்லது அருகே தான் செல்லும், பல ஆண்டுகளாக ஆடி, பந்து பயணிக்கும் பாதைகளை கவனித்து பின்னரே "ஃபீல்டிங் பொசிஷன்கள்" தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போ இன்னார் எப்படி அடிப்பாங்கனு தெரியாம எங்கே நிறுத்துவது என யோசிக்காமல் போனதும் "ஸ்டேண்டர்ட் பீல்டிங்" பொசிஷணில் ஆட்களை நிறுத்துவது நேரம் சேமிக்க உதவும், ஆட்டத்தினையும் எளிதாக்குகிறது அல்லவா?

அதே போல எந்த நோட், கார்டு எப்போ வாசிச்சா இனிமையாக இருக்கும்னு பல ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் இசை விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் மேஜர் கார்டு, மைனர் கார்டு இடையே உள்ள ஒத்திசைவை வைத்து தொடர்பினை உருவாக்கியுள்ளார்கள். இத்தொடர்பின் அடிப்படையில் கார்டு புராகிரஷனை உருவாக்குவார்கள்.

ஒன்றுக்கொன்று இடையேயுள்ள தொடர்பின் அடிப்படையில் ரிலேட்டிவ் CHORD என்பார்கள். இதனை கணித்து உருவாக்கப்பட்ட விதியை "circle of fifth" என்பார்கள்.

படம்.



வெளிவட்டத்தில் வருவது மேஜர் கார்டு, உள்வட்டத்தில் இருப்பது மைனர் கார்டு.

12 மணி நிலையில் துவக்கமாக அமைவது "c"மேஜர் கார்டு அதில் இருந்து கடிகாரச்சுற்றில் ஒவ்வொரு ரிலேட்டிவ் கீயும் செல்கிறது.  மிக அருகில் இருப்பதே முன்மையான ரிலேட்டிவ் கீ ஆகும்.

இந்த விதிப்படி "C" மேஜருக்கு முதன்மையான ரிலேட்டிவ் கீ 'A" மைனர் ஆகும்.

C மேஜரின் நேரடி மைனர் கீ ஆன "C" மைனர் பேரலல் மைனர் எனப்படும்.

இந்த இரண்டு கீ களும் "C" மேஜருடன் நல்ல ஒத்திசைவு கொடுக்கும் என்பதால் அடுத்தடுத்து வாசிக்கவும் எளிதாக இருக்கும்,இனிமையாகவும் இருக்கும் என்பதால் , C மேஜர்  ஐ, A மைனர் அல்லது "C" மைனர் காம்பினேஷனில் இசையமைப்பது இனிமையான மெலடிக்கு உத்திரவாதம் என எளிமைப்படுத்துவதே இசை விதி.

இது போல ஒவ்வொரு மேஜர் கீக்கும் ரிலேட்டிவ் கீ, பேரலல் கீ "circle of fifth "விதிப்படி கண்டுப்பிடிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த விதி எப்படி செயல்படுகிறது எனில் ,

ஒரு மேஜர் கார்டின் நோட்களை வரிசையாக எழுதினால் , ஒன்றாவது ரூட் நோட்டில் இருந்து ஆறாவதாக உள்ள நோட்டே ரிலேடிவ் மைனர் கீ ஆகும்.

அதே போல ஒரு மைனர் கீ ரீயின் ரிலேட்டிவ் மேஜர் என்னவெனில் மூன்றாவதாக வரும்  நோட் ஆகும்.

"சீ" மேஜரின் நோட்கள்,

C, D, E, F, G, A, B, C

http://en.wikipedia.org/wiki/C_major

இதில் ஆறாவதாக வருவது "A" நோட் ஆகும் இதுவே , C மேஜரின் ரிலேட்டிவ் மைனர் ஆகும்.

ஒரு மேஜர் கீயின் பகுதி நோட்கள் அப்படியே அதன் ரிலேட்டிவ் மைனர் கீ இல் இருக்கும், எனவே அடுத்தடுத்து வாசிக்க எளிதாக இருக்கும், இதனடிப்படையிலேயே "ரிலேட்டிவ்" கீ என்கிறார்கள்.

A மைனரின் பகுதி நோட்கள்.

A, B, C, D, E, F, G, A

சீ மேஜரின் பகுதி நோட்கள் அப்படியே கொஞ்சம் வரீசை மாறி வருவதை காணலாம். மேலும் மூன்றவதாக "C" நோட் உள்ளது.

இதெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னர் முன்னோடி இசை அறிஞர்கள் வாசித்து பார்த்து அதன் ஒத்திசைவு தொடர்புகளை அனுபவ ரீதியாக அலசி உருவாக்கப்பட்டது.

கடிகாரச்சுற்றில் நெருக்கமாக உள்ள மேஜர், மைனர்கள் ஹார்மனியை உருவாக்கும் என்பதால் அதையே பின்ப்பற்றுவது வழமை.

அதற்காக தொலைவாக உள்ள ஒரு மேஜர்,மைனர் கீ காம்பினேஷனில் இசை அமைக்க கூடாது என்றெல்லாம் கட்டாயம் எல்லாம் இல்லை. அமைக்கலாம். அதற்கும் ஒரு பேர் வைத்துள்ளார்கள் "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்"(RELATIVE KEY PARADOX).

கடிகாரச்சுற்றின் அடிப்படையில் , C மேஜருக்கு மிக தொலைவாக உள்ள மைனர் கீ "D" மைனர் ஆகும். எனவே காம்பினேஷனில் வாசிக்க விரும்புவதில்லை, ஆனால் வாசிக்கவே மாட்டார்கள்,கூடாது என இல்லை, அப்படி தொலைவான மைனர்களையும் சேர்த்து வாசிப்பதை சில தேவைகளுக்கு பயன்படுத்துவார்கள்.

மேலை சாஸ்திரிய சங்கீதத்தில் அதிகம் முரணாக வாசிக்க மாட்டார்கள் ஆனால் ஜாஸ், பாப் எனப்படும் இசைகளில் இப்படி உட்டாலக்கடியா சேர்த்து இசையமைப்பார்கள் ஏனெனில் அவை பாரம்பரிய இசையல்ல, வழமைக்கு மாறான முறையில் இசைக்கோர்வை செய்வது இயல்பு.

ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் தேவையான மூட் மற்றும் மெலடி உருவாக்கவே. பாப் ,ராக்,ஜாஸ்,ராக் அன்ட் ரோல் கண்ரி இசைகளில் பாரம்பரிய விதிகளை விட இனிமை,எளிமைக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள்.

திரையிசை எனப்படுவது ஸாஸ்திரிய ஸங்கீதமே அல்ல ,அது விதிகளற்ற கலவையான இசை வடிவம் ஆகும்," fusion of amalgamated contemporary music" எனலாம். அப்படி இருக்கும் போது அதில் விதிக்கு மாறாக இசைகோர்வை செய்வது தான் இயல்பே ஆனால் அப்படி செய்து விட்டதாய் சொல்லி இசை மேதை என ஒருவரை மெச்சுவது உலகமகா காமெடி.

இதில் இன்னொரு காமெடி அப்படி மாற்றி செய்வதையும் ஸாஸ்திரிய இசை ஒரு உபவிதியாக அனுமதிக்கிறது. எனவே புதுமை படைத்தார் ,இசை விதியை திருத்தினார் என்றேல்லாம் கூத்தாடுவதே அபத்தம்.

தொலைவான ரிலேட்டிவ் மைனர் கீகளை ஏன் பயன்ப்படுத்துகிறார்கள் எனப்பார்ப்போம்.

மேலை இசையில் ஒவ்வொரு மேஜர் கார்டு/ஸ்கேல்/கீயும் மகிழ்வான உணர்ச்சியை இசையில் அளிக்க வல்லவை. கடிகாரச்சுற்றில் செல்ல செல்ல மகிழ்ச்சி உணர்வு கூடும் எனலாம்.

அதே போல ஒவ்வொரு மைனர் கீகளும் சோக உணர்வை அளிக்க வல்லவை. கடிகார சுற்றில் செல்ல செல்ல சோகம் கூடும் எனலாம்.

இப்போ C மேஜர், D மைனர் நிலை என்னவென பார்ப்போம்.

C மேஜர் மகிழ்வான கீ, அதற்கு வெகு தொலைவில் அமைந்திருப்பதே "D" மைனர் எனவே மிக சோக உணர்வை தரும்.

C மேஜர் -D மைனர் என அடுத்தடுத்து வாசித்தால் அந்த இசை மகிழ்வா, சோகமா என இனம் காண முடியாது என்பதால் ஸாஸ்திரிய இசையில் பெரும்பாலும் பயன்ப்படுத்துவதில்லை.

ஆனால் பாப் இசை போன்றவற்றில் இப்படி அடிக்கடி தொலைவான ரிலேட்டிவ் மைனர்களை பயன்ப்படுத்தி இசை உணர்வில் ஒரு நிலையற்ற தன்மையை உருவாக்குவார்கள்.

இசை உளவியலில் கூட இதனை பயன்ப்படுத்தி ஆய்வுகள் செய்துள்ளார்கள். தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனான C மேஜர்- D மைனர் இல் அமைக்கப்பட்ட இசைக்குறிப்புகளை வாசிக்க சொல்லி கேட்க வைத்து பயனாளர்கள் என்ன உணர்ந்தார்கள் எனக்கேட்டப்பொழுது சிலர் மகிழ்ச்சியான இசை என்றும் சிலர் சோகமான இசை என்றும் சொல்லியுள்ளார்கள்.

மேலும் கேட்பவரின் மூடைப்பொறுத்து ஆரோகணமாகவும்( ஏறுவரிசை),அவரோகணமாகவும்(இறங்கு வரிசை) இசை ஒலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் இசைக்குறிப்பின் பிட்ச் மாறாமல் நிலையாகவே இருந்துள்ளது. எனவே தான் இவ்வாறு இசைகோர்வை உருவாக்குவதை "ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ்" என்கிறார்கள்.

ஒரே இசைக்கோர்வை ஏறுவரிசையாகவும் ,இறங்குவரிசையாக உணர செய்யும் இவ்விசையமைப்பை ஆய்வு செய்து வரிசைப்படுத்தியவர் " Roger Shepard," (1964)என்ற ஆய்வாளர் எனவே ஷெப்பர்ட் ஸ்கேல் என்றே அழைக்கப்படுகிறது.

எந்த ஒரு சிந்தசைசரும் இல்லாமல் டாப்ளர் விளைவை உருவாக்குகிறது இம்முறை எனவே ஹாலிவுட் திரைப்படங்களில்  பின்னணி இசையில் சிறப்பு ஒலியை உருவாக்க ஷெப்பர்ட் ஸ்கேல் அடிப்படையில் இசைகோர்வை அமைப்பதுண்டு. பேட்மன் படங்களில் பேட்மென் ஓட்டும் பைக் வேகம்மெடுத்து செல்வதை ஒலியியல் ரீதியாக காட்ட ஷெப்பர்ட் ஸ்கேல் முறையில் இசையமைக்கபடுகிறது.

ஷெப்பர்ட் 1964 இல் வகைப்படுத்தினாலும், இவ்வாறு தொலைவான ரிலேட்டிவ் மைனர் காம்பினேஷனில் இசைக்கோர்வை செய்வதை ஆரம்பித்து வைத்தவர் ஜெர்மானிய இசை மேதை "பாக்"(Johann Sebastian Bach,1685-1750) ஆவார். சொல்லப்போனால் பியானோவுக்கு என இசைக்குறிப்பு எழுதிய முதல் இசையமைப்பாளரே அவர் தான், அவரது காலத்தில் தான் பியானோ கண்டுப்பிடிக்கப்பட்டது, ஜெர்மானிய மன்னர் முதல் பியானோவை வாங்கி அதற்கு இசைக்குறிப்பு எழுத சொன்னார், பின்னர் ஒரு சவாலும் விடவே ரிலேட்டிவ் கீ பேராடாக்ஸ் என்ற விதி உருவாகாத காலத்திலேயே தொலைவான மேஜர்-மைனர் கீ காம்பினேஷனில் இசையமைத்து கேட்பவர்களின் மனநிலைக்கு ஏற்ப ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை பிட்சில் ஒலிப்பது போல செய்துக்காட்டினார்.

பிரபல பாப்,ராக் இசைக்குழுவினர்கள் பாடல்களில் இம்முறை அதிகம் இருக்கும், பாப் மார்லே, பாப் டைலான், பீட்டில்ஸ் பாடல்களில் இத்தகைய ரிலேட்டிவ் கீ பேரடாக்ஸ் இசையமைப்பு அதிகம் காணக்கிடைக்கும். ரிலேட்டிவ் கீ பேரடாக்சில் இசையமைக்க எளிய கட்டை விரல் விதி , எதிர்க்கடிகார சுற்றில் மைனர் கீ காம்பினேஷன் தேர்வு செய்வதாகும், C மேஜருக்கு , D மைனர் எதிர்க்கடிகார சுற்றில் மிக அன்மை மைனர் ஆகும் எனவே மகிழ்வு ,சோகம் என ஒரே இசைக்கோர்வையில் கேட்பவரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு ஒலிச்சித்திரத்தினை உருவாக்கும்.

இப்போ நீங்களே சொல்லுங்கப்பா, C மேஜர்- D மைனர் காம்பினேஷனில் அழகிய கண்ணே பாடலை இசையமைத்தது மாபெரும் இசைப்புரட்சியா என?
உதிரிப்பூக்கள் படத்தில் ஒரு தாய் தன் குழந்தைகளுடன் மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டிய சூழலில் தேவையே இல்லாமல் மகிழ்வா சோகமா என இனம்பிரிக்க முடியாமல் இசையமைத்துள்ளார் எனலாம் ஆனால் பொதுவாக அப்பாடல் சோக உணர்வை தூண்டும் வகையில் ஒலிக்கும், ஒரு வேலை சோகத்தினை மனதில் வைத்திருக்கும் நாயகி குழந்தைகளுக்காக மகிழ்வாக இருப்பதாக காட்ட வேண்டும் என இயக்குனர் சூழலை விவரித்து  அவ்வாறு பாடல் அமைத்திருக்கலாம், எனவே சூழலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இனிமையான பாடல் எனலாம் ,ஆனால் இசைப்புரட்சி என்பதெல்லாம் மிகையான ஒன்று.

# மேலும் அந்த ஸங்கீத ஆய்வாளர் கர்நாடக ஸங்கீதத்தினையும் கொத்துக்கறி போட்டுள்ளார்,

//கர்நாடக சங்கீதத்திலும்  'ஸட்ஜமம்' என்கிற முதல் ஸ்வரத்திற்கு,
அதற்கு அடுத்து வருகிற இரண்டாவது ஸ்வரமான  'ரிஷபம்' பகை ஸ்வரம்.//

இது எப்படினு என் மரமண்டைக்கு புரியவில்லை, நம்ம கேள்வி ஞானத்தினை துருவியதில் எனக்கு கிடைத்த விளக்கத்தினைப்பார்ப்போம் ,,

கர்நாடக இசையில் ஏழு ஸ்வரங்கள் உள்ளன,

ஸ,ரி,க,ம,ப,த,நி

இவற்றினை ஸப்தஸ்வரங்கள் என்பார்கள் இவற்றின் கூட்டுக்கலவையில் தான் ராகங்கள் உருவாகின்றன.

இதில் "ஸ" (ஸட்ஷமம்) ,"ப"(பஞ்சமம்) ஆகியவை மாறாத (அச்சல) ஸ்ருதி கொண்டவை. மற்றவை மாறக்கூடிய ஸ்ருதி கொண்டவை அவற்றிற்கு கோமல்(ஃப்ளாட்) ,தீவிரம், மத்திமம் என மூன்று ஸ்ருதிகள் உண்டு , இவற்றை எல்லாம் கூட்டினால் 16 ஸ்ருதி நிலைகள் வரும் ,இதன் அடிப்படையில் தான் 16 கர்நாடக ராகங்கள் உருவாகின, இராகங்கள் பதினாறு உருவான வரலாறு இதுவே.

பின்னர் இந்த 16 ஸ்ருதி நிலைகள் அடிப்படையில் 72 இராகங்கள் உருவாகின அவற்றை 72 மேல கர்த்தா இராகம் என்பார்கள். இதான் கர்நாடக ஸங்கீதத்தின் அடிப்படை இராகங்கள். இம்முறையை உருவாக்கியவர் வேங்கடமஹி எனும் இசை அறிஞர் ஆவார். மேல கர்த்தா ராகங்களில் இருந்து உருவாகும் ராகங்கள் ஜன்ய ராகம் எனப்ப்படும். பல இராகங்கள் இவ்வாறு உருவாகியுள்ளன, ஆதியில் மில்லியன் கணக்கில் இராகங்கள் இருந்துள்ளன இப்பொழுது சுமார் 300 இராகங்களே நிலைத்துள்ளன.

மேலகர்த்தா இராகங்கள் 72 இலும் ஏழு ஸ்வரங்களும் வரும் என்பதால் "சம்பூர்ண இராகங்கள்" என்பார்கள். எல்லா மேலகர்த்தா இராகங்களும் சம்பூர்ண இராகங்கள் ஆனால் எல்லா சம்பூர்ண இராகங்களும் மேலகர்த்தா இராகம் அல்ல.அதாவது குமரிகள் எல்லாம் கிழவிகள் ஆகலாம்,ஆனால் கிழவிகள் எக்காலத்திலும் குமரிகள் ஆக மாட்டார்கள் :-))

இப்போ எதுக்கு இந்த அடிப்படை கர்நாடக ஸங்கீத போதனைகள் என கேட்கிறீர்களா , மேட்டர் இருக்குதுள்ள, கர்நாடக ஸங்கீதம் பயில ஆரம்பிக்கும் போது பால பாடமாக ஆரம்பிப்பது "மாய மாளவ கெளளை" என்ற இராகத்தில் இருந்து தான் , இது ஒரு மேலகர்த்தா இராகம் இதன் சிறப்பு என்னவெனில் இதன் பகுதி ஸ்வரங்கள் அப்படியே ஸ,ரி,க,ம,ப,த,நி" என வருவதே ஆகும்.

எனவே மாய மாலவ கெளளை பயின்றால் ஏழு ஸ்வரங்களும் பழக்கமாகிவிடும் , பின்னர் படிப்படியா மற்ற இராகங்கள் பயில்வது எளிது. இந்த இராகத்தில் "ஸட்ஜமம்" அடுத்து "ரிஷபம்" வருகிறதே பின்னர் எப்படி பகை ஸ்வரமாச்சு?

மாய மாளவ கெளளை மட்டுமில்லை பல மேலக்கர்த்தா இராங்களிலும், அவற்றின் இருந்து உருவான ஜன்ய இராகங்களிலும் "சட்ஜமம், அடுத்து 'ரிஷபம்" வருவகிறது, ஆனால் நம்ம ஆய்வாளார் பகை ஸ்வரம் அடுத்தடுத்து வராது, இராசா தான் பகை ஸ்வரம் எல்லாம் வச்சு இசைப்போடுவார்னு பெருமை பாடுகிறார்.

இதை வேற ஒரு பதிப்பகம் புத்தகமாக போட்டிருக்கு, அதை எடுத்து பதிவா போட்டு ராசானா ராசா தான்னு ஒருத்தர் எசப்பாட்டு பாடுறார், ஜால்ரா அடிக்கிறது தான் அடிக்குறிங்க ஏன் எதுக்குனு ஒரு வெளக்கம் கொடுத்துட்டு அடிங்கப்பா, நீங்கப்பாட்டுக்கு மனசுக்கு தோணினாப்போல ஜால்ரா வாசிச்சிடுறிங்க, இது எப்படினு புரியலையேனு என்ன போல ஞானசூனியங்களுக்கு விளங்காம போயிடுறதால கூகிளை தோண்டி உண்மையை கண்டுப்பிடிச்சு தொலைய வேண்டியிருக்கு அவ்வ்!

# அடுத்த உலகமாக இசை சாதனையாக கீழ்கண்டதை திருவாய் மலர்ந்தருளியுள்ளார்(எழுத்து வடிவில் தான்)

//இதைப்போல 'ஹார்மனி' [ harmony ] பற்றிய பாடத்தில் ஒரு இசையை இயற்றும்போது
ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்கு நகருகையில் ஒரு ஒழுங்கான இயக்கம்  [ Movement ] இருக்க வேண்டும்.
முதல் ஸ்வரத்திலிருந்து, ஏழாவது ஸ்வரத்திற்கு தாவுதல் போன்ற
 'கிரேட் ஜம்ப்' [ great jump ] செய்யக்கூடாது.
அது இனிமையாக இருக்காது என்பது இசைக்கோட்பாடு.
இசை விதியும் கூட.
 ‘செந்தூரப்பூவே...செந்தூரப்பூவே’ என்ற  ‘16 வயதினிலே’ படப்பாடலை கேட்கும் போதும், 
‘என்னுள்ளே எங்கோ...ஏங்கும் கீதம்’  என்ற  ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படப்பாடலின் 'ஹம்மிங்' கேட்கும் போதும், 
இந்த விதி இவரால் எவ்வளவு அழகாக மீறப்பட்டிருக்கிறது என்பது புரிந்தது.//

ஆனாப்பாருங்க இதப்போல லாங்க் ஜம்ப்,ஷார்ட் ஜம்ப்பெல்லாம் அடிக்கலாம்னு மேலை உலக ஸாஸ்திரிய ஸங்கீதமே அனுமதித்து அதுக்கு பெயரெல்லாம் வச்சு இருக்கு :-))

கார்டு புராகிரஷனில் ஹார்மொனியா ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என நோட்களை வாசிப்பதை "arpeggio" என்கிறார்கள், அதே சமயம் ஒரு பிட்சுக்கு இன்னொரு பிட்ச் சம்பந்தமில்லாமல் வாசிப்பதை " Non-harmonic arpeggio" என்கிறார்கள். இவ்வாறு இசையமைப்பதை "modal frame" இசைக்கோர்வை என்கிறார்கள்.

கார்டுகளின் அடிப்படையில் தொடர்பெல்லாம் பார்க்காமல் கேட்க இனிமையாக இருக்கிறதா அப்போ சரி தான் என நோட்களை பயன்ப்படுத்தி அமைக்கும் இசை வகை இது.

ஆப்ரிக்கன், கியுபன்,அமெரிக்கன் ஜாஸ்,ரிதம் அன்ட் ப்ளூஸ் ,பாப் இசை எல்லாம் இப்படியானவை, இன்னும் லத்தின்,சைனீசிஸ்,ஸ்பானிசில் எல்லாம் இவை உண்டு.

பீட்டில்ஸ் இசையமைத்த பலப்பாடல்கள் இப்படியான "modal frame" வகை இசைகளே, ஒரு கார்டில் இருந்து தொலைவான கார்டுக்கு ஜம்படிப்பார்கள், கேட்கும் போதே உணர முடியும்.

ஒரு டோனுடன்( இந்திய இணை ஸ்வரம்) ஒத்துப்போகாமல்  இருப்பதை "atonic" என்பார்கள் பொதுவாக இப்படியான இசைக்கோர்வைகளை "melodic triad" வகை இசை என்பார்கள்.

அதாவது வரிசையாக ஒருக்கார்டில் இருந்து இன்னொரு கார்டுக்கு செல்வதை "ஸ்டெப்" என்பார்கள் இதனை conjunct motion எனக்குறிப்பிடுகிறார்கள்.

அப்படி இல்லாமல் ஒரு கார்டில் இருந்து தொடர்சியில்லாத தொலைவான இன்னொரு உயர்ந்த /தாழ்ந்த ஸ்கேல் உள்ள கார்டுக்கு ஜம்படிப்பதை "ஸ்கிப்" என்பார்கள், இதனை " disjunct motion" எனக்குறிப்பிடுவார்கள்.

இசையமைப்பாளரின் கற்பனை வளத்துக்கேற்ப ஸ்டெப் அல்லது ஸ்கிப்பில் இசை அமைக்கலாம், இப்படி செய்வதில் "பீட்டில்ஸ்" குழுவினர் வல்லவர்கள்.

பீட்டில்ஸ் கார்டு புராகிரஷனில் அடிக்கும் ஜம்ப்களை படமாக பாருங்கள்,

படம்-1



படம்-2



படம்-3



ஸாஸ்திரிய ஸங்கீதமும் தேவைப்பட்டால் "ஜம்ப்" அடிக்கலாம் என்கிறது , நவீன இசையான ஜாஸ்,ப்ளூஸ், ராக் அன்ட் ரோல், பாப் என எல்லாவற்றிலும் ஸ்டெப்&ஸ்கிப் பயன்ப்படுத்தப்பட்டும் வருகிறது. இவ்வகை இசைகளில் விதிக்கு முக்கியத்துவமில்லை, கேட்க இனிமையாகவும், ஒரு பரவச மனநிலையையும் உருவாக்க வேண்டும்,அதனால் தான் பீட்டில்ஸ் பாடல்களை கேட்பவர்களை உடனே கவர்ந்து ஆட்டம் போட வைத்தது எனலாம்.

இசையமைப்பதில் கார்டு புரகிரஷனில் ஜம்ப்படித்து புதுமை செய்து உலக இசைக்கே பம்ப்படித்தவர் ராசா மட்டுமே என நம்ம ஊரு ஆய்வாளார் ஆகா ஓஹோ என சொல்வதை கேட்டால் பாப் டைலான், பாப் மார்லே, பீட்டில்ஸ் ரசிகர்கள் எல்லாம் காறித்துப்பிட மாட்டாங்கோ :-))

# // 'கார்டு புரோகிரஸ்ஸனில்' [ Chord progression ] 
 'டிஸ்கார்டு' [ dischord ] என்று ஒதுக்கப்படுபவைகளைக்கூட,
இவர் இனிமையாக கையாள்கிற விதம் ஆச்சரியமானது.
 ‘ என் வானிலே...ஒரே வெண்ணிலா’ என்ற ஜானி படப்பாடலின் ஸ்வரங்களின் முரனான தொடர்ச்சியும், 
அதன் போக்குகேற்ப புனையப்படும்  ‘கார்டு'களின் தொடர்ச்சியும் அலாதியானது.//

மேற்சொன்னது atonal ,disjunct ,dissonance வகை இசையமைப்பே, நியோ கிளாசிக் இசை என்ற வகையில் இவ்வாறு டிஸ்கார்டு நோட்களை பயன்ப்படுத்துவது வழக்கம், இதற்கான பிள்ளையார் சுழியை போட்டது ஜெர்மானிய இசையமைப்பாளர் Richard Wagner(1813-1883) அவரது opera Tristan und Isolde வில் இம்முறையை அறிமுகப்படுத்தியுள்ளார் ,எனவே டிஸ்கார்ட் வகை நோட்கள் கொண்ட கார்டினை Tristan chord எனவும் குறிப்பது உண்டு. ஜாஸ் வகை இசையில் அதிகம் டிஸ்கார்டு புழக்கம் உண்டு.

டிஸ்கார்டு இசையை கிருத்துவ தேவாலயங்கள் தடை செய்துள்ளன ,காரணம் டிஸ்கார்ட் இசை சாத்தானை தூண்டும் என்ற நம்பிக்கை எனவே  "devil in the music" என்பார்கள். ஆரம்ப காலத்தில் டிஸ்கார்டு இசை அமைக்க தடை இருந்தது, பின்னர் நவீன இசை உருவான காலத்தில் பலரும் டிஸ்கார்டு வகையில் இசை அமைத்துள்ளார்கள்.

இந்திய கர்நாடக இசையிலும் ஒரு ராகத்திற்கு பொருந்தாத (dissonant ) ஸ்வரத்தினை கூட சேர்த்து வாசிக்கலாம், இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு ஜன்ய ராகத்தினை ஏழு ஸ்வரங்கள் கொண்ட சம்பூர்ண ராகம் போல இசைக்க முடியும்,ஆனால் அவை சம்பூர்ண ராகமல்ல. இவ்வாறு பொருந்தாத ,இல்லாத ஸ்வரத்தினை சேர்த்து வாசிப்பதை "விவாதி ஸ்வரம்" என்கிறார்கள். கர்நாடக ஸங்கீத டிஸ்கார்டு எனலாம்.

//Vivadi swara is a dissonant note, perceived by many in the musical world, to be an enemy note. That is probably the reason why vivadi melas were called ragas with “dosha” (some harmful element like an enemy perhaps!). According to Prof. Sambamurthy, vivadi melas are those scales which take one of the following notes: shatshruti rishabha (R3). Suddha Gandhara (Ga1), shatshruti dhaivata (Dha 3) and suddha nishada (Ni1). There are 40 such ragas which are supposed to have vivadi dosha.//

http://www.carnaticdarbar.com/views_01.htm

# தளபதி திரைப்படத்தில் வரும் ராக்கம்மா கையத்தட்டு பாடலில்  "குனித்த புருவமும்" என நடுவே கர்நாடக ஸங்கீதத்தினை பயன்ப்படுத்தி புரட்சி செய்துள்ளார் எனவும் சிலாகிக்கிறார் நம்ம ஆய்வாளர், திரை இசை என்பதே கலவையான இசை எனும் நிலையில் கர்நாடிக் வந்தால் என்ன இந்துஸ்தானி வந்தால் என்ன அதெல்லாம் புரட்சியா?

இதில் என்ன காமெடினா இப்படிலாம் ஃபியுஷன் செய்வது ரொம்ப நாளா உள்ள ஒன்று ,மேற்கத்திய பாப் இசையில் இப்படி செய்வதை "கவுண்டர் கல்ச்சர்" இசை என்கிறார்கள் இதனை "psychadelic pop" இசை எனவும் சொல்கிறார்கள்.

பீட்டில்ஸ் இசையமைத்த  Rubber Soul.(1969) ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள "Norwegian Wood (This Bird Has Flown)"  என்ற பாடலில் நடுவே இந்திய சிதார் இசையை பயன்படுத்தியுள்ளார்கள்.

எனவே விதிகளே இல்லாத திரையிசையில் கர்நாடிக் இசையை நடுவே பயன்ப்படுத்தியது எல்லாம் இனிமையான விதி மீறல் என சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வதில் பொருளே இல்லை :-))

-----------------------------------


இங்கே சில இசைக்கோர்வைகளை  கொடுக்கிறேன் இதெல்லாம் எங்கேயோ கேட்டாப்போலவே இருக்கும் எங்கே கேட்டிங்கனு கொஞ்சம் கண்டுப்பிடிச்சு பாருங்க :-))

 # George Bizet's 1897,'Carillon' (Allegro moderato).


-------------

 # Kites by Simon Dupree(1967)



--------------
Lady in Black - Uriah Heep(1970)


------------------------

'Cancione et Danza: 2. Danza'- Antonio Ruiz-Pipo'


---------------

பூகி ஓகி ராக் அன் ரோல்.


---------

இசையை ரொம்ப தோண்டியாச்சு இந்த நடனங்களைப்பார்த்து கொஞ்சம் குதுகலம் அடையுங்கள்,இதெல்லாம் சின்ன சாம்பிள்கள் தான் ,நம்ம ஊரு நடனப்புயல்கள் எல்லாம் எங்கே இருந்து சுடுறாங்கன்னு புரிஞ்சுக்கலாம்.

செம டான்ஸ்.


---------------

டொனல்ட் கானார்ஸ் பலூன் டான்ஸ்.

-------------------

பின் குறிப்பு:-1

கி.பி 1976 இல் அன்னக்கிளி படத்தில் தொடங்கி, 90 களின் ஆரம்பம் வரையில் தமிழ் திரையுலகில் இசை ராஜ்யம் நடத்தியவர் தான் இளையராசா என்பதில் எந்த மாற்று கருத்தேயில்லை,ஆனால் அவர் இசையமைத்து தான் இசைக்கே ஒரு முகவரி கிடைத்தது என்பது போல சிலர் இணையங்களில் விதந்தோம்பி கடை பரப்பி வருவது உண்மையில் ஒரு நல்ல திரையிசை கலைஞருக்கு பெருமை சேர்க்க போவதில்லை, ஏன் எனில் திரையிசை என்பது கலவையான ,விதிகளற்ற இசை அமைப்பு,அங்கே விதிகளே இல்லாத போது இது போல சாஸ்திரிய இசையின் விதியை மீறி இருக்கிறார், புதுமை படைத்திருக்கிறார் என சொல்வது இசையே தெரியாமல் சொல்வதாகும்.

இப்படி நான் பதிவெழுதக்காரணம் எனக்கும் ராசாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு என நினைத்துக்கொள்ள வேண்டாம், அடியேன் ராசாவின் கோல்டன் ஹிட்ஸ் எனப்படும் 80 களின் திரையிசைப்பாடல்களின் தீவிர ரசிகன், எனது வாகனம், கைப்பேசி என அனைத்திலும் சுமார் 200 அருமையான ராசாவின் பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.

ராசாவின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் தாங்களாகவே மிகைப்படுத்தி பேசிக்கொண்டு அவருக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து  சிறுமை சேர்க்கிறார்கள், அவர்களுக்கும் தங்களது அபிமான  நடிகரின் படம் வெளியானதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் பாமர ரசிகனுக்கும் பெரிதும் வேறுபாடில்லை, இத்தகைய விசிலடிச்சான் குஞ்சு ரசிக மனப்பான்மையை "sycophancy" எனப்படும் தீவிர ரசிக அடிமை மனப்பான்மை எனலாம், இவ்வாறான ரசிகர்கள்  தங்கள் ஆதர்ஷம் எது செய்தாலும் உன்னதம் என கொண்டாடி , அவர்களின் ஆதர்ஷத்தின் புகழை கூட்டுவதற்கு பதில் குறைக்கவே செய்கிறார்கள் , இணையத்தில் ராசாவிற்கு இம்மாதிரியான ரசிக சிகாமணிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது இருக்கும் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் வெற்று புகழ் மாலை பாடிக்கொண்டிருக்கிறார்கள், அவற்றை எல்லாம் சற்றே நிறுத்திக்கொண்டால் சேதாரம் தவிர்க்கப்படும் இல்லை எனில் என்னைப்போல் பலர் எதிர் வினையாற்றக்கிளம்பினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா தான்.
----------------

பின் குறிப்பு:-2

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://worldcinemafan.blogspot.in/2013/05/5.html

http://www.seechord.co.uk/song-writing/secrets-of-the-beatles/

http://en.wikipedia.org/wiki/Rubber_Soul

http://en.wikipedia.org/wiki/R%26B

http://en.wikipedia.org/wiki/Clave_(rhythm)

http://en.wikipedia.org/wiki/Guajeo

http://en.wikipedia.org/wiki/Non-harmonic_arpeggio#Melodic_triad

http://en.wikipedia.org/wiki/Melodic_motion

http://en.wikipedia.org/wiki/Disjunct_(music)

http://en.wikipedia.org/wiki/Coltrane_changes

http://en.wikipedia.org/wiki/Tritone_substitution

http://en.wikipedia.org/wiki/Tristan_chord

http://www.greenwych.ca/example.htm

http://www.newworldencyclopedia.org/entry/Atonality

கூகிள் படங்கள்,நன்றி!
--------------------------------------

89 comments:

? said...

முத போணி நான்தான் போல. அதனால இந்த பதிவை படிச்சிட்டு 'வடை எனக்கு'ன்னுதான் பின்னூட்டம் போட முடியும். இசைன்னா என்னன்னே தெரியாம என்னத்தை சொல்ல? நீர் விளக்கியதை வைத்து புரிந்து கொள்ளுவது 30 நாளில் கர்நாடக இசை புத்தகத்தை வைத்து மீஜிக் படிச்ச மாதிரிதான்!

ஆனா நீங்க சொல்ல வருவது புரிகிறது.நம்மாளுகளுக்கு பிடிச்ச வியாதியே இந்த ஹீரோ வழிபாடுதான். தாழ்வு மனப்பான்மையிலிருந்து மீண்டால் மட்டுமே இந்த சினிமாகாரர்க்களை சிலோகிப்பதை விடுவோம்.

சென்னையிலிருந்த போது என்னுடன் ஒரு இசை தங்கியிருந்தது. மிஜிக் ரைக்டாவேன் என சொல்லி திரிந்தது, இப்போது பாண்டியில் சரக்கடிப்பவர்க்கு உறுதுணையாக பரோட்டா மாஸ்டர் ஆகிவிட்டது. அது எப்போது பார்த்தாலும் இளையராஜா எப்படி பாக் இசையை சுட்டு பாட்டு போடுகிறார் என விளக்கியபடியே இருக்கும்.அதனிடமிருந்து பல இசையமைப்பாளர்களின் விவரங்கள் தெரியவந்தன. இ.ராசாவின் அடாவடித்தனமும் அவர் கருவி வாசிப்பவர்களை நடத்தும் விதம் குறித்தும் அறிந்த பின் இ.ராசாவின் மீது கடுப்புதான் வந்தது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சங்கீத ஞானம் இல்லைன்னு ஏராளமான விஷயங்கள் சொல்லி இருக்கீங்க . சூப்பர் சிங்கர்ல அந்த இடத்தில சுருதி போயிடிச்சு. இந்த இடத்தில ஸ்ருதி போயிடிச்சின்னு சொல்வாங்க. ஸ்ருதின்னா என்னன்னு இதுவரை சரியா தெரிஞ்சுக்க முடியல .கார்ட் மைனர் ஸ்கேல் இதேல்லாம் நமக்கு இதுவரை தெரியாது.
ஆனா ஒன்னு .
ராசா ஒரு Trend Setter ஆக திகழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை.
************************
அளவுக்கதிகமான புகழ்ச்சி நிச்சயமாக பெருமை சேர்க்காது என்பது உண்மை
.ரகுமானுக்கும் இதே அளவு வெறி பிடித்த ரசிகர் கூட்டமுண்டு, Rahmeniac, Rahmanism. என்று பெயர் வைத்துக்கொண்டு முகநூலில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். வலைப்பூக்கள் எழுதுபவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதுடையவர்கள்தான்.அதனால் ராசாவின் ரசிகர்களாக இருப்பதில் வியப்பில்லை.

கோவை நேரம் said...

வவ்வால்....செம....ஆனா ஒன்னும் புரியல சங்கீதம்...ஒன்னே ஒன்னு விளங்குச்சி.....அசின் கைல பிடிச்சிட்டு இருக்கிறது கிடார் தானே.....

ஜோதிஜி said...

அட இன்றைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்துட்டேன் போலிருக்கே.

இருங்க முழுசா படிச்சுட்டு வர்றேன்.

ஜோதிஜி said...

உலக சினிமா ரசிகன் பதிவைப் பார்த்து விட்டு தான் உள்ளே வந்தேன்.

வந்தா நீங்க ஒரு பக்கம் பீதிய கௌப்புறீங்க.

நீங்க சொல்ற அதே குற்றச்சாட்டு தான்.

கல்லூரியில் பி.ஹெச்டி படித்தவர்கள், படித்துக் கொண்டிருப்பவர்கள் மூன்றாம் ஆண்டில் வந்து பாடம் நடத்துவார்கள்.

மரக்கட்டை பொம்மை மாதிரி நின்று ஒப்பித்துக் கொண்டிருப்பதைப் போல இந்த பதிவும்.

மற்றவர்கள் தெரியாத விசயங்களைப் பற்றி படிக்க முயற்சிக்கும் போது அதில் ஒரு சுவாரசியம் வேண்டாமா?

நீங்க 200 பாடல்கள் இருப்பதாக சொல்லியிருக்கீங்க. பேசமா அந்த பட்டியல் கொடுத்திருந்தாக்கூட உள்ளே வந்ததற்கு சந்தோஷமாக இருந்திருக்கும்.

மற்றபடி உள்ள (எப்போதும் போல) நோண்டல் கட்டுரைக்கு நன்றி.

வீட்ல இந்த பிஜிஎம் கேளேன். எப்படி ஒரு கருவியும் விட்டுவிட்டு எந்தந்த இடத்ல மேலே போயி கீழே இறங்குது என்றாலே மேலேயும் கீழேயும் பார்க்குறாங்க.

உங்க அளவுக்கு இதையெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் என்க்கு பூவா கட்.

MANO நாஞ்சில் மனோ said...

இளைய ராஜாவின் அதிக மெலடி பாடல்கள் சி மைனர் மற்றும் சி மேஜரில்தான் வந்திருக்கிறது என்பது, கீபோர்ட் [[கேசியோ]] பிலேயரான எனக்கு சற்று தெரியும்...!

vimalanperali said...

அவரது பாடல்களைக்கேட்டவுடன் தலையாட்டி மனம் பரிகொடுத்தோமா இல்லையா சார்.

சார்லஸ் said...

நீங்கள் இளையராஜாவை புகழ்வதைப் போல இகழ்கிறீர்களா அல்லது இகழ்வதைப் போல புகழ்கிறீர்களா என தெரியவில்லை. ஒன்று தெரிகிறது . மரபு மீறிய இசை கொடுத்து கேட்பவரை புளகாங்கிதம் அடையச் செய்ததில் மற்றவரிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. கோடிகணக்கான ரசிகர்களை சம்பாதித்த அவரை காரிகன்,அமுதவன் மற்றும் உங்களை போன்றோர் வெகு சிலர் குறைத்தே மதிப்பிடுகிறீர்கள் . உண்மையைச் சொல்லுகிறேன் என்ற பாணியில் அமுதவன் , காரிகன் போன்றோர் எழுதும் பதிவுகள் அபத்தமான விசயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன . நீங்களும் அதே வழியில் பயணம் செய்கிறீர்களோ என ஆச்சரியப்பட வைக்கிறது .

ஆனால் நோட்ஸ் ,கார்ட்ஸ் என்று எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத இசை படித்தவர் மட்டுமே புரியக் கூடிய பல செய்திகளை போட்டு இசை ஞானியின் மேன்மையை இன்னும் அதிகரித்துத்தான் காட்டி இருக்கிறீர்கள் . அவர் இசை புதிய உலகம் . புரிந்து கொள்ள தெரியாதவர்கள் உலகதிற்குள் நுழையத் தெரியாதவர்கள் பழையவர்களின் கொஞ்ச பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டு திரிகிறார்கள் . அவர்கள் இளையராஜா ரசிகர்களை இசை கோமாளிகள் என்று விமர்சனம் செய்யும் அதிமேதாவிகள் . பாவம் அப்படியே கூவி கொண்டு திரியட்டும் . ஆனால் உங்களின் இந்த பதிவு அவர்களுக்கு பல விசயங்களை புரிய வைக்கட்டும் . நன்றி

சார்லஸ் said...

நீங்கள் இளையராஜாவை புகழ்வதைப் போல இகழ்கிறீர்களா அல்லது இகழ்வதைப் போல புகழ்கிறீர்களா என தெரியவில்லை. ஒன்று தெரிகிறது . மரபு மீறிய இசை கொடுத்து கேட்பவரை புளகாங்கிதம் அடையச் செய்ததில் மற்றவரிடமிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. கோடிகணக்கான ரசிகர்களை சம்பாதித்த அவரை காரிகன்,அமுதவன் மற்றும் உங்களை போன்றோர் வெகு சிலர் குறைத்தே மதிப்பிடுகிறீர்கள் . உண்மையைச் சொல்லுகிறேன் என்ற பாணியில் அமுதவன் , காரிகன் போன்றோர் எழுதும் பதிவுகள் அபத்தமான விசயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன . நீங்களும் அதே வழியில் பயணம் செய்கிறீர்களோ என ஆச்சரியப்பட வைக்கிறது .

ஆனால் நோட்ஸ் ,கார்ட்ஸ் என்று எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத இசை படித்தவர் மட்டுமே புரியக் கூடிய பல செய்திகளை போட்டு இசை ஞானியின் மேன்மையை இன்னும் அதிகரித்துத்தான் காட்டி இருக்கிறீர்கள் . அவர் இசை புதிய உலகம் . புரிந்து கொள்ள தெரியாதவர்கள் உலகதிற்குள் நுழையத் தெரியாதவர்கள் பழையவர்களின் கொஞ்ச பஞ்சாங்கத்தையே பாடிக் கொண்டு திரிகிறார்கள் . அவர்கள் இளையராஜா ரசிகர்களை இசை கோமாளிகள் என்று விமர்சனம் செய்யும் அதிமேதாவிகள் . பாவம் அப்படியே கூவி கொண்டு திரியட்டும் . ஆனால் உங்களின் இந்த பதிவு அவர்களுக்கு பல விசயங்களை புரிய வைக்கட்டும் . நன்றி

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

என்ன கொஞ்ச நாளா நடமாட்டமே லேது,எதாவதூ சீனத்து சிட்டுங்களோட பீட்டுப்போட போயீட்டீரா?

முதப்போணி பண்ணிட்டு ,வடையை கவ்வினா மட்டும் போதுமா,தொடர்ச்சியா வந்து ஒரு பத்து பின்னூட்டம் போட்டிருக்க வேண்டாம், அப்படி செய்யலைனா நந்தவ்வனம் போணி பண்ணினா கடை உருப்படாது, நான் போணிப்பண்னினா தான் பின்னூட்டம்ம் பிச்சுக்கும்னு ராச நட நொரநாட்டியம் பேசுவாரே :-))

# நெறைய 30 நாளில் கற்றுக்கொள்ளும் பொத்தகம் படிப்பார் போல இருக்கே அவ்வ் :-))

இங்கு நான் விமர்சித்து இருப்பதும் ராசாவை அல்ல,அவர் என்னமோ செய்துட்டு போகட்டும், இந்த விசிலடிச்சான் ரசிககுஞ்சாமணிகளின் அலப்பரையை தான் விமர்சித்து இருக்கேன், ராசா போட்டுக்கு ஸினிமாவுக்கு மெட்டுப்போட்டமா துட்டுப்பார்த்தமானு காலம் தள்ளிட்டு போயிட்டார், ஆனால் இந்த இந்த ரசிக கேடிகள் , ராசாவுக்கே தெரியாத சமாச்சாரம்ம் எல்லாம் பாட்டுல இருக்குனு கண்டுப்பிடிச்சு ஓவரா பீத்திட்டு அலையுதுங்க,அதை தான் எப்படினு அலசினேன்.

# உங்களுக்கும் ஒரு மீஜிக் மேதை வாச்சிருக்கார் போல,அது என்ன எல்லா வருங்கால மீஜிக் மேதையும் ஒயின் ஷாப்புல கிடக்குறாங்க,அங்க தான் சுதி பிடிக்குதா :-))

நமக்கும் தெரிஞ்ச ஒருத்தர் ,இப்படித்தான் ரொம்ப நாளா மீஜிக் டயரடக்கர் ஆவேன்னு சொல்லிக்கிட்டே இருப்பார்,அவர் மட்டும் ஆகிருந்தா இன்னேரம் ராசாலாம் காணாமப்போயிருப்பார்(ஹி...ஹி அப்படித்தான் அவரே சொல்லிப்பார்), ஒரு கட்டிங் மேல காசு செலவு செய்ய மாட்டார் நம்மள போல ஆளுங்கக்கிட்டே மீட்டர் போட்டிருவார் :-))

மப்பு ஏறினதும் பாட்டுப்பாடுவார் , டி.எம்.எஸ்,டிஆர் மகாலிங்கம் பாட்டா எடுத்துவிடுவார் , நல்லா பொழுது போகும்.சுத்தி 10 பேரு உட்கார்ந்துக்கிட்டு நேயர் விருப்பம் எல்லாம் கேட்பாங்க :-))

அனேகம்மா எல்லா ஒயின் ஷாப்பிலும் ஒரு மீஜீக் மேதை இப்படி இருக்குனு என்னோட அவதானிப்பு.

#// இ.ராசாவின் அடாவடித்தனமும் அவர் கருவி வாசிப்பவர்களை நடத்தும் விதம் குறித்தும் அறிந்த பின் இ.ராசாவின் மீது கடுப்புதான் வந்தது.//

அவரோட புத்திரர் மேல வேற ஒருவர் கம்ப்ளயிண்ட் இருக்கு,மஜாக் பண்ணிடுவாராம்,அப்புறம் இன்னொரு கேவலமான குற்றச்சாட்டும் இருக்கு, அதனால தான் விவாகரத்தே ஆச்சுனும், டைரக்டர் நட்பு உடைஞ்சதுன்னும் சொல்லுறாங்க.
---------------
முரளி,

வாங்க,நன்றி!

ஹி...ஹி சங்கீத ஞானமும் இல்ல சங்கீதா ஞானமும் இல்லை, இருந்திருந்தா இன்னேரம் சிம்பனி போட்டிருக்க மாட்டேன் :-))

//சூப்பர் சிங்கர்ல அந்த இடத்தில சுருதி போயிடிச்சு. இந்த இடத்தில ஸ்ருதி போயிடிச்சின்னு சொல்வாங்க. //

ஸ்ருதியோட தோப்பனார் லோகநாயகருக்கே ஸ்ருதி எங்கே போச்சு,வந்துச்சுனு தெரியல ,இந்த சூப்பர் சிங்கர் ஜட்ஜுங்களுக்கு தெரிஞ்சுருக்கே அவ்வ் ,

ஆமாம் நீங்க எந்த ஸ்ருதிய சொன்னீங்க?

//ராசா ஒரு Trend Setter ஆக திகழ்ந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. //

ராசா ஸினிமாவில் டிரெண்ட் செட்டர் தான் அதை உலக இசைக்கேனு பினாத்துவது சரியா? அதான் இந்த ரசிக சிகாமணிகள் செய்றாங்க, அதுக்கு தான் ஒரு கொட்டு வச்சிருக்கேன்.
---------------

ஜோதிஜி,

வாங்க,நன்றி!

முழுசா படிச்சதுக்கு ஒரு நன்றி!

//மரக்கட்டை பொம்மை மாதிரி நின்று ஒப்பித்துக் கொண்டிருப்பதைப் போல இந்த பதிவும்.//

ஒப்பித்து இருக்கேனா ரொம்ப நல்லதா போச்சு, ஒப்பித்தால் பிழையில்லாமல் வரும், எனவ்வே கட்டுரையில் பிழைகள் குறைவாக இருக்கும்னு நினைக்கிறேன்.

விக்கிப்பீடியா கட்டுரை போல ரெபரண்ஸ் காட்டும் வகையில் எழுதலாம்னு நினைச்சேன்,கெரகம் வழக்கம் போல என்னோட நையான்டி நடைதான் வந்து தொலைக்குது சரினு அப்படியே விட்டுட்டேன், அப்படி இருந்தும் ஒப்பிப்பது போல நேர்த்தியா வந்திருக்குனு என்னை பாராட்டுறிங்க, ரொம்ப நல்ல மனசு உங்களுக்கு :-))

//மற்றவர்கள் தெரியாத விசயங்களைப் பற்றி படிக்க முயற்சிக்கும் போது அதில் ஒரு சுவாரசியம் வேண்டாமா//

நீங்க எழுத்து சித்தர், எழுத்து உங்க சொல்படி வளைஞ்சு ,நெளிஞ்சு ஆடும், வரலாற்று,அரசியல் "புனைவுகள்" எல்லாம் தொடராக அருவியா கொட்டும்,நமக்கு அதெல்லாம் சாத்தியமா, அமெச்சூர் பதிவன், கூகிளாண்டவர் புண்ணியத்துல கொஞ்சம் அங்கே இங்கேனு பிறாய்ஞ்சு எழுதிக்கிட்டு இருக்கேன்,அதுல போய் சுவாரசியத்தை தேடுறிங்களே அவ்வ்.

சுவாரசியமா மஜ மல்லிகா,சரோசாதேவிப்போல எழுதலாம்னு பாக்கிறேன், முடியல்ல ,அவ்வ்!

//உள்ளே வந்ததற்கு சந்தோஷமாக இருந்திருக்கும்.//

உங்களைப்போன்றோரை குஷிப்படுத்தவென்றே அழகா ஒரு படம் போட்டிருக்கேன், நான்கைந்து இசைக்காணொளிகள் வேற போட்டிருக்கேன்,அப்படியும் குஷியாகலையா, இனிமே ரெண்டு படம் போட்டிறலாமா?

# வீட்டுல ஸங்கீத ஸம்பாஷணைகள் கலைக்கட்டும் போல இருக்கே, ஓஹோ இதைத்தான் ஸம்சார ஸங்கீதம்னு சொல்லுறாளா :-))

செவிக்கு உணவில்லாத போது தான் வயிற்றுக்கு ஈயனுமாம், அதனால பூவா கட்டானலும் பரவாயில்லை, செவிக்கு விடாம சம்சார சங்கீதம் பாய்ச்சுங்க :-))
-----------------

வவ்வால் said...

கோவை ஜீவா,

நன்றி!

செமனு சொன்னது பதிவையா படத்தையா :-))

ஆஹா படம் பார்த்ததுமே படார்னு கிடார் பேரெல்லாம் சொல்லுறாரே பெரிய இசைஞானியா இருப்பாரோ :-))
----------

மனோ,

நன்றி!

சீ மேஜர் தான் நல்லா டோனல் குவாலிட்டி உள்ள கார்டு,அதனால் தான் மையமாக இருக்குனு சொல்லுறாங்க, பல சிம்பனிகளும் சி ஸ்கேலில் தான்ன் இருக்கு.

இங்கே பேசுவது ரசிக சிகாமணிகளின் விதந்தோம்பலையே.

ஹி...ஹி நான்ன் கூட கேஷியோவில் நல்லா வாசிப்பேன் , எங்கிட்டே கேசியோ FX100 கால்சி, நீங்களும் கால்குலேட்டர தானே சொன்னிங்க:-))
----------

விமலன்,

நன்றி!

ராசா பாட்டுக்கு தலைய மட்டுமில்ல ,வால் இருந்தா அதையும் கூட ஆட்டியிருப்பேன், அவரோட திரையிசை பங்களிப்பை யாரும் குறைசொல்லவில்லை,ஆனால் இசையின் முகவரியே அவரு தான்னு பிதற்றுபவர்களையே சொல்லியிருக்கிறேன்.
------------------
சார்லஸ்,

நன்றி!

சுத்தம் ,நான் என்ன சொல்லியிருக்கேன்னே விளங்கலையோ?

ராசா ஒரு திரையிசைமைப்பாளார், திரைப்படத்திற்கு தேவையான இசையை வழங்கியுள்ளார்,அவ்வளவே. ரசிக சிகாமணிகள் இசைக்கும், திரையிசைக்கும் வித்தியாசம்ம் தெரியாமல் பினாத்துகிறார்கள் என்பதையே விமர்சித்து இருக்கேன்.

பாப் இசையில் பட்டைய கிளப்பிய மைக்கேல் ஜாக்சனை "கிங் ஆப் பாப்"னு தான் சொல்வாங்க, "கிங் ஆப் மியுசிக்"னு இல்லை, வித்தியாசம் புரியுதா?

//பாவம் அப்படியே கூவி கொண்டு திரியட்டும் //

ஹி..ஹி ராசாவின் ரசிக சிகாமணிகளுக்கே சமர்ப்பணம்!
---------------------

? said...

ஏன் ஒய், ஒரு மாசமாய் உம்ம ஆளைவே காணோம். உம்ம கடைய விட்டுப்புட்டு அடுத்த கடைல நீர் பிஸி. பாவம் ராச நட தனியா டீ ஆத்தி ஆத்தி ஓஞ்சிபோயிட்டாரு. நீர் எப்போ பதிவு போடுவீர்ன்னு ஒரு மாசமா f5-யை அழுத்தி அழுத்தி, நீர் பதிவு போட்ட ஒன் அவருல வந்து படிச்சு பின்னூட்டம் போட்டமில்ல. நீர் என்னை ஆளை காணோம்கிறீர்.

நீர் இளையராசவ சொல்லலைனு புரிஞ்சது ஒய். அதலதான் நம்ம ஆளுகளோட ஹீரோ ஒர்ஷிப்பை திட்டியிருக்கேன் பின்னூட்டத்தில்.நம்முர் சினிமாகாரனுவ தலைக்கனம் பிடிச்சு ஆடும் காரணமே பாட்டை ரசிச்சோமா போவோமான்னு என்று நாம் இல்லாததுதான். ஒரு கிரிஸ்டியன் பலே மெசினிஸ்ட் படத்தில் எலும்பும் தோலுமாய் இருப்பார், அதற்கு முன்னாடி நடித்த ஒரு பேட்மென் படத்தில் தடிமாடு மாதிரி இருப்பார். சில மாதம் காப்பி மாத்திரம் குடித்து உடம்பை குறைத்தாராம். அமெரிக்கா வந்த புதிதில் அது குறித்து சிலேகித்த போது அமெரிக்கன் சொன்னான் - அது அவன் தொழில், அதில் எல்லா அமெரிக்கனையும் போல் அவன் பெஸ்டாக இருக்கிறான் இதில் பாராட்டி பேச என்ன எழவு இருக்கிறது என்று. நம்மூர் ஹீரோக்கள் 5 கிலோ இளைத்தால் பெரிய பில்டப் கொடுப்பார்கள். மெசினிஸ்ட் படம் பார்த்திராவிடில் பாருங்கள், நல்ல படம், மனிதர் ஆப்பரிக்க குழந்தைகளைப் போல் எலும்பும் தோலுமாக இருப்பார்.

இந்த அமெரிக்கனைப்போல் நம்ம மனோநிலை மாறினால் நாமும் நாம் செய்வதை பெஸ்டாக செய்ய முயற்சிப்போம். சினிமாக்காரவளும் தரைக்கு வருவார்கள்.

? said...

இப்பகூட பாரும், தமிழ்மணத்துல ஒரே ஒப்பாரி, எழவு ஊடு மாதிரி ஆக்கீடானுவ.

எல்லோருக்கும் டிஎம்எஸ் பிடிக்கும்தான், என்னையும் சேர்த்து.ஆனா இப்படி எல்லோரும் புலம்புவது தேவையா? அவரு நம்ம பொழுதை போக்க உதவியவர் அம்புட்டுதான். இதுக்கு இந்த அக்கப்போரு. ஆனா உருப்படியாக சமுகத்துக்கு ஏதாவது செய்தவர் செத்தா ஒருத்தனும் கண்டுக்கமாட்டானுவ.

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

எல்லாப்பின்னூட்டமும் ஒட்டுக்கா அடிச்சதில விட்டுப்போச்சு, நான் ரசிக சிகாமணிகளை தான் சொன்னேன் என்பதை புரிந்துக்கொண்டீர்னு தான் சொல்லவந்தேன் ,புரிந்துக்கொண்டீர் என்னக்காரணத்தினாலோ வராம போயிடுச்சு ,மன்னிச்சு!

# ஹி...ஹி நாம ஊருக்கு உழைக்கும் உத்தமனாச்சா அதான் ,நம்ம கடைய விட்டு ஊரார் கடையில் பிசி, உண்மையில் நம்ம சன்னல் வச்ச கணிணி கவுந்துடுச்சு, தமிழில்லா உபந்து கணினியில் உலாத்தினதால் பதிவு இட முடியல, ஆனாலும் விடாம வேற ஒரு தளத்தில தட்டச்சி, பின்னூட்டமெல்லாம் போட்டோம்ல :-))

# மெஷினிஸ்ட் நல்ல படம்னு முன்னக்கூட யாரோ சொன்னாங்க, இப்போ நீரும் சொல்றீர் பார்த்துடுவோம்.

அமெரிக்க மக்கள் எல்லாம் தெளிவாத்தான் இருக்கான்ங்க,நம்ம ஊரு மக்கள போல இருந்தா இன்னேரம் அர்னால்டு அமெரிக்க சனாதிபதி ஆகியிருப்பாருல்ல :-))

வாங்கின காசுக்கு நடிக்கிறாங்க,கொடுத்தக்காசுக்கு நாம ரசிக்கிறோம்னு இல்லாம தெய்வமேனு போய் தூக்கி வச்சு ஆடுறதே நம்மாட்களுக்கு வேலையாப்போச்சு!

# //இப்பகூட பாரும், தமிழ்மணத்துல ஒரே ஒப்பாரி, எழவு ஊடு மாதிரி ஆக்கீடானுவ. //

வாயில போடுங்க, வாயில போடுங்க, என்னாதிது அபச்சாராமா பேசிண்டு, தமிழ்கலாச்சாரம் தெரியுமோ, 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கணும் ,முத நாளுக்கே இப்படி சொல்றேள்.

இத மட்டும் ரசிக சிகாமணிகள் பார்த்தாங்க உம்மை தமிழ் இனத்துல இருந்தே பகிஷ்கரிச்சுடுவா :-))

நமக்கும் தான் டிஎமெஸ் ஃபேவரைட் ,
மனம் என்னும் மேடை மீது மயில் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது அங்கே யார் வந்தது ...

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் என் மகராணி உனை காண ஓடோடி வந்தேன் ...

போன்ற இனிமையான பாடல்களை அனுபவித்துக்கேட்போம் , இப்போ எதாவது மாத்தி சொல்லவா போரோம்,ஆனாலும் ரசிக சிகாமணிகள் மட்டும் ஸ்பெஷலா பேசுவா ,நாம மண்டைய ஆட்டுறது தான் ஒரே வழி அவ்வ்!

கலாச்சாரப்படி , இரங்கல் தெரிவித்துக்கொள்வதே நன்று!

ஆன்மா சாந்தியடையட்டும்,ஆழ்ந்த இரங்கல்கள்!

//உருப்படியாக சமுகத்துக்கு ஏதாவது செய்தவர் செத்தா ஒருத்தனும் கண்டுக்கமாட்டானுவ.//

ஹி..ஹி அப்படிலாம் நாட்டுல யாரு இருக்கானு கேட்பா, ஸினிமாவில ஓரமாவாது வந்து நின்னுட்டு போனாத்தான் தமிழ் சமூகத்தில "பிராபல்யம்"னே ஒத்துப்பா,அதனால தான் மஞ்சத்துண்டு பேரன்கள் கூட வேஷம் கட்டி பிராபல்யத்தை ஊர்ஜிதம் செய்கிறார்கள் :-))

62 வயது இளம் தளபதியார் கூட அக்காலத்தில் "குறிஞ்சிமலர்"னு தூர்தர்ஷனில் நாடகம் "constipation" வந்தாப்போல நடிச்சு பிராபல்யம் ஆனவரு தான் :-))

ஜோதிஜி said...

ஒரு விசயத்தில் பிடிவாதமாகவே இருக்குறீங்கன்னு நான் நினைத்துக் கொள்வதுண்டு.

பல விசயங்களில் பிடிவாதமாக எழுதும் உங்கள் கருத்துக்கள் மற்றவர்களுக்கு பிடிக்குதோ இல்லையோ எனக்கு அந்த உங்களின் தில்லு ரொம்பவே பிடிக்கும்.

ஆனால் கொஞ்ச கொஞ்சமாக ஏதோவொரு வகையில் ஒவ்வொரு சமயத்திலும் நம்முடைய எழுத்து திறமையை கொஞ்சமாவது மெருகூட்ட வேண்டும் என்பது என் கருத்து.

புனைவோ சுருட்டோ பீடியோ உங்கள் பாணியில் எதுவும் நக்கலாக தெரிந்தாலும் கூட்டல் கழித்தல் பெருக்கல் என்று இந்த எழுத்தில் நடந்து கொண்டேயிருந்தால் தான் ஏதோவொரு சமயத்தில் உருவம் போல ஏதோவொன்று கிடைக்கக்கூடும்.

இதன் காரணமாகத் தான் ஒவ்வொருவரின் எழுத்தையும் சமயம் கிடைக்கும் போது ஆராய்ச்சி பாணியில் எடுத்துக் கொண்டு இந்த வருடம் சற்று மாறுதல் காட்ட முயற்சிக்க வேண்டும் என்று ஜுன் 3 என்று என் பதிவில் குறிப்பிட்டேன்.

மாற்றம் பெற வாழ்த்துகள்.
மாறி வர என் விருப்பங்கள்.

வவ்வால் said...

ஜோதிஜி

வாங்க ,நன்றி!

பிடிவாதத்திற்கும், கொள்கைக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளும் காலத்தில் உங்களுக்கு புரிய வரலாம்.

நம்ம தில்லு புடிச்சிருக்குனு சொன்னதற்கு நன்றி!

நாம நிஜத்தில் பண்ண தில்லு தில்லாலங்கடியெல்லாம் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை, தெரிஞ்சா அசிங்கம்னு நான் நினைக்கிறேன் ஹி...ஹி :-))

# திறமை மெருகூட்டுவது, வடிவம் கிடைப்பது என்றெல்லாம் நீங்கள்வது எழுதும் பாணியில் .நடையில்(writing style) வரும் மாற்றத்தினை என நினைக்கிறேன்.

அதைப்பற்றி கவலைபடுவதில்லை, ஏன் எனில் அது வெறும் கூடு பேக்கேஜிங் தான், உள்ளடக்கம் தான் முக்கியம்.

உள்ளடக்கம்,நம்பகதன்மையுடன் சரியான தகவல்களை கொண்டிருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு நாம எப்படி பிரசெண்ட் செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதெல்லாம் "எழுத்து விற்பனை" ஆவதை குறித்து கவலைப்படுபவர்களின் வேலை.

நான் விற்பனைக்காக புனையத்தொடங்கும் போது வடிவத்தினை மாற்றிக்கொள்வேன், மாற்றிக்கொள்ள முடியும் என நம்பிக்கை இருக்கு ஏன் எனில் லெட்டர் டு எடிட்டர் எழுதினால் கூட எந்த பத்திரிக்கையின் ரசனை எப்படினு கணித்து ஒரு காலத்தில் எழுதிக்கொண்டிருந்த ஆசாமி தான் அடியேன் :-))

//புனைவோ சுருட்டோ பீடியோ உங்கள் பாணியில் எதுவும் நக்கலாக தெரிந்தாலும் //

புனைவுனு சொன்னதோடு விட்டேனே என சந்தோஷப்படுங்கள் :-))

//மாறுதல் காட்ட முயற்சிக்க வேண்டும் என்று ஜுன் 3 என்று என் பதிவில் குறிப்பிட்டேன்.
//

நாள் கெடு எனக்கில்லையே அவ்வ்!

மாற்றம் பெற வாழ்த்துக்கள்!

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதில் அடியேனுக்கும் நம்பிக்கையுண்டு, ஆனால் ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு காரணம் தேவை.

டொமினோஸ் பிஸ்சா கடையில் எப்போதும் பிஸ்ஸாவே விக்குறிங்களே ஒரு மாற்றத்திற்கு இட்லி ,தோசை விக்கக்கூடாதானு நாம கேட்க முடியாது :-))

அனேகமா நந்தவனம் வந்து வகுப்பெடுக்க ஆரம்பிச்சிட்டியானு பொலம்புவார்னு நினைக்கிறேன் :-))

பேரு வேண்டாமே said...

ஒங்க பிளாக்கை ரொம்ப நாளா படிச்சிட்டு வரேன்.. நல்ல ஆய்வு.. இளையராசா தன இசை கலைங்கர்களுக்கு (பாடகர்களையும் சேர்த்து) 450 ரூ மேல் கொடுத்தது கிடையாது.. அதுவும் ஒரு கால்ஷீட்டுக்கு.. அதே காலகட்டத்தில், ரஹ்மான், தேவா போன்றோர்..2500 ரூ கொடுத்து வந்தனர்... வேலை மட்டும் சக்கையாக வாங்கி விட்டு, காசும் குறைத்து கொடுத்ததால்..அவருக்கு 1993 க்கு பிறக்கு இறங்குமுகமாய் அமைந்தது... ராசா ஒன்னும் சுத்த முனிவர் கிடையாது.. நிறைய சுட்டிருக்கிறார்... கேட்டால் "இன்ஸ்பிரேசன்" என்று சொல்வார்கள்... கேட்பவன் தலைஎழுத்து.. முகஸ்துதி பாடாமல் இருப்பது நல்லது ..

இத்தையும் பாருங்க...

http://www.youtube.com/embed/6o6kXi44Coo

- ராசாவிடம் வேலை செய்து பாதிக்கப்பட்ட கலைஞன்

Sowmya said...

தங்களது பதிவு யாருக்கு?

இளையராஜாவிற்க்கா? அல்லது
அவரது தீவிர ரசிகருக்கா?

இசை பொதுவானது. அதன் அடிப்படை 7 ஸ்வரங்களுக்குள் தான் பாடல் அமைகிறது. மேள கர்த்தா ராகங்களின் அடிபடையிலும் அதன் வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கையை(pcb)
கொண்டே டியூன் அமையப் பெறுகிறது.

ஒரு சில பாடல்களில் இசை அமைப்பாளர் தான் கேட்ட பாடல்களைக் கொண்டு அதன் இசையால் வசமாகி, ஒரு உத்வேகத்தால், அந்த இசையை தன்னுடைய பாடல்களில் புகுத்தியிருக்கலாம்.அதற்க்காக அவர் இசை ஞானம் அற்றவர் என்றோ, அவர் இசைக்காக கொண்டாடப் பட வேண்டியவர் அல்லர் என்றோ கூறுதல் ஆகாது.

படைப்பாற்றல் என்பது மற்றவருக்கு தெரியாத விஷயத்தை கூறுவதாக இப்போது வரைக்கும் இல்லை...இனிமேலும் இருக்கப் போவதும் இல்லை...மனிதன் தான் பார்த்து, கேட்டு, பழகி, மகிழ்ந்த விஷயங்களைத் தான் நன்கு உள்வாங்கி பின், தன் குறிப்பையும், தனக்கு அது எவ்விதமாக புரிந்ததத்தோ, அதில் தன்னுடைய பாணியை புகுத்தி தனது படைப்பாற்றலாக உலகிற்கு வெளிப்படுத்துகிறான்.

தங்ளையே எடுத்துக் கொள்ளுங்களேன்... யாருக்குமே தெரியாத விஷயத்தை தாங்கள் சொல்வதில்லை...ஆனால் பல விஷயங்களை அலசி ஆராய்ந்து உங்கள் பாணியில் உங்கள் பதிவு அமைகிறது. அது தங்களின் தனித் தன்மையோடு கூடிய படைப்பாற்றலை காண்பிக்கின்றதே அன்றி யாரும் சொல்லாத விஷயங்களை தாங்கள் சொன்னால் தான் ...சிறந்த பதிவர் என்று கூற இயலுமா...

( Neenga kooda than oru post baaki illama asin padatha pottu thaakareenga...athukkaga ulla irukkira matter aa naanga padikkamala vittom...?

oruthar isai nu solluvaru..oruthar thirai isai paadal nu solluvaru..Paamaranukku ethu bhagavath geethai ,ethu paandi bajar sarakku nu bedham theriya vendiya avasiyum illai..

Isai therinthu than antha isaiyil mayangiyaaga avasium illai..Appadi
mayangi paaraata thaguthiyanavana than irukka vendiya avasiamum illai..

Romba pidithu ponal, thaguthi, thiramai, athu vantha vidham, athukke uriya sariya sorkal ivaiellame ondrum illa nilaikku thallap pattuvidum...

Thaguthiyaanavar than paaratapada vendum endral, 100 ku 98 perai nam thamizh naatil manam thiranthu paarattave mudiathu..

Logic Vs reality...ungalin ippathivu..

Neengal evvalau than logic i- point by point aaga pottalum... neengalum asin padathai pathivu thavaramal pottu thane varukireergal..

Avar enna cleopatrava neengal ella pathivilum kondaada??

Intha kelviyai naan ketkavillai..ungal logic ketkirathu)

pinkurippu : Thamizh thattachu seiyya porumaiyum atharkku sariyana tool theriathathal, neenda naatkalukkuppin pinnoottam ezhthiye aaga vendiya unthuthalal, appadiye type seithu vitten...

Porumaiyai intha thanglish typing moolam sothithamaikku Mannippai korukindren ... !

வவ்வால் said...

பேர் வேண்டாம்(நல்ல பேரா இருக்கே),

நன்றி!

உங்க அனுபவத்தினை சொல்லி இருக்கீங்க ,உண்மை எப்பவும் கசப்பாக இருக்குனும் நிருபணம் ஆகுது.

ஆனால் மக்களுக்கு கட்டமைக்கப்பட்ட பிம்பங்களின் மீது எப்போதும் ஒரு மோகம் தான்!

உங்க காணொளி பார்த்தேன், இங்கேயும் ஒரு 5 காணொளி கொடுத்தேனே அதிலும் அதான் வருது.

யாருமே நாம போட்ட காணொளியை பார்க்கவே இல்லைப்போல அவ்வ்!
---------------------

வவ்வால் said...

பெபி மேடம்,

வாங்கோ,வாங்கோ,நன்றி!

நலமா?

என்ன ஆச்சர்யம் பெரியவா எல்லாம் வந்திருக்கேள் எல்லாம் ராசாவின் மகிமைதான் போங்கோ!

அக்னிநட்சத்திரம் அனலா அடிக்குற காலத்தில காலையில ஒரே பனிமூட்டமா இருந்துச்சு ஏன்னு இப்போ தான் பிரியுது :-))

//தங்களது பதிவு யாருக்கு?

இளையராஜாவிற்க்கா? அல்லது
அவரது தீவிர ரசிகருக்கா?//

போச்சுடா, தலைப்பை பார்த்தவுடன் தலைவிரிகோலமா கையில சூலாயுதம் தூக்கிட்டு சூரசம்ஹாரம் செய்ய வந்துட்டாங்க போல இருக்கே அவ்வ்!

பதிவில் முன்னுரை,பின்னுரை என வளைச்சு வளைச்சு இப்பதிவு "அதி தீவிர "sycophancy" இசை தலிபான்களை குறித்தே ராசாவைப்பற்றியல்லனு சொல்லி கீறேன் அப்படியும் இப்படி ஒரு சந்தேகம் ஏனோ?

கண்டிப்பாக ராசாவுக்கு அல்ல ,அவருக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு எனக்கு ஞானம் லேது, ரசிக தீவிரவாதிகளுக்கே இக்கட்டுரை சமர்ப்பணம்!

# //இசை பொதுவானது. அதன் அடிப்படை 7 ஸ்வரங்களுக்குள் தான் பாடல் அமைகிறது. மேள கர்த்தா ராகங்களின் அடிபடையிலும் அதன் வரிசைமாற்றம் மற்றும் சேர்க்கையை(pcb)
கொண்டே டியூன் அமையப் பெறுகிறது. //

அறியாத தகவல்,நன்றி!

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகமடினு பாட்டு காதுல ஒலிக்குது :-))

# //ஒரு சில பாடல்களில் இசை அமைப்பாளர் தான் கேட்ட பாடல்களைக் கொண்டு அதன் இசையால் வசமாகி, ஒரு உத்வேகத்தால், அந்த இசையை தன்னுடைய பாடல்களில் புகுத்தியிருக்கலாம்.அதற்க்காக அவர் இசை ஞானம் அற்றவர் என்றோ, அவர் இசைக்காக கொண்டாடப் பட வேண்டியவர் அல்லர் என்றோ கூறுதல் ஆகாது.//

"கூறுதல் ஆகாது" என்னமா தமிழ் துள்ளி விளையாடுது!

ஹி...ஹி நானும் அதைத்தான் சொல்லி இருக்கிறேன் கொண்டாடுங்க ஆனால் அவரு தான் இசை, இசை தான் அவரு, அவரில்லனா இசைக்கே முகவரி கிடையாது போன்ற அதீத மிகைத்துதிப்பாடலும், வழக்கமாக எல்லாரும் செய்ததை அவரு தான் முதமுதலா கண்டுப்பிடிச்சாப்ப்போல வெற்று முழக்கங்களும் வேண்டாம் என்று தான் சொல்லி இருக்கிறேன்.

# //படைப்பாற்றல் என்பது மற்றவருக்கு தெரியாத விஷயத்தை கூறுவதாக இப்போது வரைக்கும் இல்லை...இனிமேலும் இருக்கப் போவதும் இல்லை...மனிதன் தான் பார்த்து, கேட்டு, பழகி, மகிழ்ந்த விஷயங்களைத் தான் நன்கு உள்வாங்கி பின், தன் குறிப்பையும், தனக்கு அது எவ்விதமாக புரிந்ததத்தோ, அதில் தன்னுடைய பாணியை புகுத்தி தனது படைப்பாற்றலாக உலகிற்கு வெளிப்படுத்துகிறான்.//

நீங்க ஒரு இசைத்திமிங்கிலம் ,நான் ஒரு நெத்திலி அளவுக்கு கூட இல்லை, உங்க கூட ஸங்கீத எதிர்வாதம் செய்யும் அளவுக்கு எனக்கு திராணியில்ல, உங்களப்போல பாட்டெல்லாம் எனக்கு பாடத்தெரியாது

"ஹே ...பாட்டெல்லாம் நமக்கு பாடத்தெரியாது

பிலாக் எழுதுவேன் ,பின்னூட்டம் போடுவேன்

கேட்டேளா :-))

ஏஹ் பிலாக்கு ஒரு போரு அதைப்படிக்கிறது யாரு,

படிச்சாப்புரியாது நல்ல பின்னூட்டம் மட்டும் போடு!

oh blogger ,please forgive me!

ப்ப...பப்பர பா, ப்ப...பப்பரப்பா ..டங்கிற டிங்கிற டோய்!"

# //தங்ளையே எடுத்துக் கொள்ளுங்களேன்... யாருக்குமே தெரியாத விஷயத்தை தாங்கள் சொல்வதில்லை...//

பதிவுக்கு பதிவு எல்லாம் கூகிளாண்டவர் போட்ட பிச்சைனு சாஷ்டாங்கமா விழுந்து நமஸ்கரித்து சொல்லிட்டு, சுட்டிலாம் போட்டு நானே சொல்லிடுறதான் :-))

# //பல விஷயங்களை அலசி ஆராய்ந்து உங்கள் பாணியில் உங்கள் பதிவு அமைகிறது. அது தங்களின் தனித் தன்மையோடு கூடிய படைப்பாற்றலை காண்பிக்கின்றதே அன்றி யாரும் சொல்லாத விஷயங்களை தாங்கள் சொன்னால் தான் ...சிறந்த பதிவர் என்று கூற இயலுமா...//

அலசி ஆராய்ந்து,தனித்தன்மையோடு ...என சிறப்பாக சொன்னதற்கு மிக்க நன்றி!

யாருமே சொல்லாத விஷயங்கள் எனக்கு தெரிஞ்சா நான் ஏன் பதிவு எழுதப்போறேன் புக்கா போட்டு புக்கர் பரிசு வாங்கிடமாட்டேன் :-))

சிறந்தப்பதிவர்னு என்னலாம் சொன்னா பிலாக்கர் செர்வரே கிராஷ் ஆகிடும் :-))

கூகிளில் பிச்சு பிறாண்டி ,காப்பி அடிச்சு ,மொழிப்பெயர்த்து பொழப்பு நடத்தும் கயவன் அடியேன் அவ்வ்!(இப்பவாச்சும் போனாப்போவுதுனு விடுவாங்களா?)

தொடரும்...

வவ்வால் said...

தொடர்ச்சி...

# //Neenga kooda than oru post baaki illama asin padatha pottu thaakareenga...athukkaga ulla irukkira matter aa naanga padikkamala vittom...?//

அழகியல் நோக்கில் ஒரு படம் போடுறது தப்பா ,அதையே எல்லாம் நோண்டுறாங்களே அவ்வ்!

ஆனந்த விகடன், குமுதம்னு எல்லா பத்திரிக்கையிலும் "அழகாப்படம்" போட்டு விக்குறாங்க,அவங்களையெல்லாம் விட்டுப்புட்டு ஓசி பிலாக்கர்ல ஒரு படம் போட்டு பதிவை வண்ணமயமாக ஆக்கலாம்னு பார்த்தா விட மாட்டாங்க போல இருக்கே :-((

# //oruthar isai nu solluvaru..oruthar thirai isai paadal nu solluvaru..Paamaranukku ethu bhagavath geethai ,ethu paandi bajar sarakku nu bedham theriya vendiya avasiyum illai..//

அஃதே,அஃதே!

இல்லன்னா நானெல்லாம் ராசா பாட்டை கேட்டு மண்டைய ஆட்ட முடியுமா, எனக்கு சாவேரிக்கும் சவரி முடிக்குமே வித்தியாசம் தெரியாது அவ்வ்!

கேட்டா நல்லா இருக்கா கேட்பேன் ,நாக்க மூக்காவில் இருந்து நானொரு சிந்து காவடி சிந்து வரைக்கும், காதுக்கு இனிமை கண்ணுக்கு குளிர்ச்சி அதுவே திரையிசைப்பாடல்கள் ,அதில போய் எதுக்கு ஆராய்ச்சி!

ஆனா சிலவீணாப்போனவய்ங்க என்ன அதிலவும் ஆராய்ச்சி பண்ண வச்சிட்டாங்க, இப்பதிவு தூண்டலின் எதிர் வினை!

# //Isai therinthu than antha isaiyil mayangiyaaga avasium illai..Appadi
mayangi paaraata thaguthiyanavana than irukka vendiya avasiamum illai..//

காதுக்கேட்கும் திறன் உள்ள எல்லா மானிடரும் கண்டிப்பா கேட்டு ரசிச்சு பாராட்டினாலே போதும்,அப்புறம் எதுக்கு இசை ஞானி, சாணினு பாராட்டனும்னு எதிர்ப்பார்க்கிறாங்க, உங்கக்கிட்டே இளையராசாப்பத்தி பேசவும் பயமா இருக்கு அப்புறம் துஷ்டப்பதரேனு சொல்லிட்டு காணாமல் போயிடுவீங்க :-))

# //Thaguthiyaanavar than paaratapada vendum endral, 100 ku 98 perai nam thamizh naatil manam thiranthu paarattave mudiathu..//

அப்படி பாராட்டிக்கிட்டே இருக்கணும்னு கட்டாயமா ஒன்னியுமே புரியலையே, யாராவத்உ யாரையாவது பாராட்டிக்கிட்டே இருக்கணும் ,அதை பார்த்துக்கிட்டே பொழுத ஓட்டுவான் தமிழன் :-))

எல்லாருமே இசை மேதைங்க, வித்தியாசாகர் ஒரு இசை ஞானி, ராக வேந்தன் ,ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு பீத்தோவான், மொசார்ட், இப்படிலாம் பாராட்டினா ஏன் சிலர் அதெல்லாம் இல்லை ராசா மட்டுமே "கம்போசர்" மத்தவங்க எல்லாம் காப்பிப்போசர்னு சொல்லுறாங்க(ஹி...ஹி மாட்டினிங்க, ஹாரிஸ்,வித்தியாசாகர் இசை எல்லாம் உங்களுக்கு புடிக்கும் தானே)

இந்த கொலவெறி ரசிகர்கள் ராசாவை பாராட்டிக்கிட்டா கூட பரவாயில்லை,மற்றவனெல்லாம் ஒன்னுமே தெரியாத களிமண்ணுனும் சொல்லிக்கிறாங்க அதெல்லாம் உங்க ஞானதிருஷ்டில படவேயில்லையோ :-))

# //pinkurippu : Thamizh thattachu seiyya porumaiyum atharkku sariyana tool theriathathal, neenda naatkalukkuppin pinnoottam ezhthiye aaga vendiya unthuthalal, appadiye type seithu vitten...//

கொலவெறீல கொதறிப்புட்டு பின்க்குறிப்பு வேறய்யா அவ்வ், உங்க அப்ரோச் நல்லா இருக்கு இதையே மெயிண்டெயின் பண்ணுங்க :-))

Anonymous said...

ஏதோ அலுவலகத்தில் உணவு விடுமுறையின் போது படிக்கலாம் என்று உம்முடைய கடைக்கு வந்தால், இப்படியா பக்கம் பக்கமா எழுதுறது?.....கடைசியில் முழுவதும் படிக்கமுடியாம, சரி, on travel படிக்கலாம் என்று print எடுத்தால், 15 pages. (without comments). நான் ஸ்கூல் படிக்கும் போது கூட, 15 பக்கத்தை தொடர்ந்து படித்ததில்லை.

உங்களால் எப்படி இப்படி முடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏதோ கொஞ்சம் இசை தெரியும் (for hobby). இன்று நிறைய தெரிந்து கொண்டேன் இந்த பதிவிலிருந்து. சூப்பர் வவ்வால். நன்றி.

நந்தவனத்தான் மற்றும் பேர் வேண்டாமே ஆகியோர்களுடைய கருத்துக்களும் அருமை.

Jayadev Das said...

எல்லாம் தலைக்கு மேலே பவுன்சரா போவோது, தலைகீழா நின்னு படிச்சாலும் விளங்காது..........

உங்காளு படம் சூப்பர், கடைசி ரெண்டு பத்திக்கு தேங்க்ஸ். கிரிக்கெட் பீல்டர் உதாரணம் .அது வவ்வாளால மட்டும் தான் முடியும். ஜூட்...........

காரிகன் said...

பதிவை படித்து முடித்ததும் முதலில் தோன்றியது "வாவ்". எப்படி இப்படியெல்லாம் எழுதிறீங்கன்னு கொஞ்சம் பொறாமையாக் கூட இருந்தது. ராசாவின் ரசிகர்களுக்கு சரியான சமயத்தில் வந்திருக்கும் மிகச் சரியான சம்மட்டி அடி.இணையத்தில் வர வர இந்த ராஜா கூஜாக்களின் அலப்பரை தாங்கமுடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே போகிறது. ராஜா என்ன செய்தாலும் உடனே அதை பத்து பாரா விவரித்து எழுதுவது அவர்கள் விருப்பம் அதற்காக இல்லாததையும் பொய்களையும் பதிவேற்றி வீண் பெருமை பேசுவதில் நடுநிலை கொண்டுள்ள பலருக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.
ராஜா வந்த பிறகுதான் தமிழ்த்திரையிசை புத்துயிர் பெற்றது, ராஜாதான் interlude இசை அமைத்தார்,படங்களுக்கு பின்னணி இசை கொடுத்தார், ராகங்களை மாற்றி அமைத்தார், புரட்சி செய்தார், ஆறாரோ பாடினார், போன்ற கடுப்பேத்தும் பதிவுகள் பல உலா வருகின்றன. தமிழ் இசை 76 றில்தான் ஆரம்பித்தது போன்ற மாயை இவர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த ஞான சூனியங்கள் பதிவு என்ற பெயரில் செய்யும் இம்சைக்கு ஒரு புதிய தண்டனையைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். உங்களின் இந்தப் பதிவே இந்த எதிர் வினைக்கு ஒரு சரியான உதாரணம்.


"ராசாவின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் தாங்களாகவே மிகைப்படுத்தி பேசிக்கொண்டு அவருக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து சிறுமை சேர்க்கிறார்கள், அவர்களுக்கும் தங்களது அபிமான நடிகரின் படம் வெளியானதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் பாமர ரசிகனுக்கும் பெரிதும் வேறுபாடில்லை, இத்தகைய விசிலடிச்சான் குஞ்சு ரசிக மனப்பான்மையை "sycophancy" எனப்படும் தீவிர ரசிக அடிமை மனப்பான்மை எனலாம், இவ்வாறான ரசிகர்கள் தங்கள் ஆதர்ஷம் எது செய்தாலும் உன்னதம் என கொண்டாடி , அவர்களின் ஆதர்ஷத்தின் புகழை கூட்டுவதற்கு பதில் குறைக்கவே செய்கிறார்கள் , இணையத்தில் ராசாவிற்கு இம்மாதிரியான ரசிக சிகாமணிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது இருக்கும் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் வெற்று புகழ் மாலை பாடிக்கொண்டிருக்கிறார்கள், அவற்றை எல்லாம் சற்றே நிறுத்திக்கொண்டால் சேதாரம் தவிர்க்கப்படும் இல்லை எனில் என்னைப்போல் பலர் எதிர் வினையாற்றக்கிளம்பினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா தான்."

திரு அமுதவனும், நானும் எழுதும் பதிவுகளில் பல முறைகள் இதைத்தான் சொல்லவேண்டி இருக்கிறது. ராஜாவுக்கு முன்பே பல சாதனைகள் செய்யப்பட்டுவிட்டன. அப்படிச் செய்த சாதனையாளர்களை கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளாமல் எதோ இளையராஜா வந்துதான் தமிழ் திரை இசையை உண்டாக்கினார் என்கிற பாணியில் இவர்கள் எழுதும் பிதற்றல்கள் படிக்க சகிக்காதவை. நீண்ட நாள் கழித்து இளையராஜாவைப் பற்றிய நேர்மையான கட்டுரையை வாசித்த திருப்தி உங்கள் புண்ணியத்தில். பாராட்டுக்கள். வவ்வாலும் காரிகனும் ஒரே அலைவரிசையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.
நான் எழுதி வரும் இசை விரும்பிகள் பதிவுகளில் ராஜாவின் இசையைப் பற்றியும் எழுத இருக்கிறேன். நேரமிருப்பின் படிக்கவும்.
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/vi-65.html

காரிகன் said...

பதிவை படித்து முடித்ததும் முதலில் தோன்றியது "வாவ்". எப்படி இப்படியெல்லாம் எழுதிறீங்கன்னு கொஞ்சம் பொறாமையாக் கூட இருந்தது. ராசாவின் ரசிகர்களுக்கு சரியான சமயத்தில் வந்திருக்கும் மிகச் சரியான சம்மட்டி அடி.இணையத்தில் வர வர இந்த ராஜா கூஜாக்களின் அலப்பரை தாங்கமுடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே போகிறது. ராஜா என்ன செய்தாலும் உடனே அதை பத்து பாரா விவரித்து எழுதுவது அவர்கள் விருப்பம் அதற்காக இல்லாததையும் பொய்களையும் பதிவேற்றி வீண் பெருமை பேசுவதில் நடுநிலை கொண்டுள்ள பலருக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.
ராஜா வந்த பிறகுதான் தமிழ்த்திரையிசை புத்துயிர் பெற்றது, ராஜாதான் interlude இசை அமைத்தார்,படங்களுக்கு பின்னணி இசை கொடுத்தார், ராகங்களை மாற்றி அமைத்தார், புரட்சி செய்தார், ஆறாரோ பாடினார், போன்ற கடுப்பேத்தும் பதிவுகள் பல உலா வருகின்றன. தமிழ் இசை 76 றில்தான் ஆரம்பித்தது போன்ற மாயை இவர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த ஞான சூனியங்கள் பதிவு என்ற பெயரில் செய்யும் இம்சைக்கு ஒரு புதிய தண்டனையைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும். உங்களின் இந்தப் பதிவே இந்த எதிர் வினைக்கு ஒரு சரியான உதாரணம்.


"ராசாவின் ரசிகர்கள் என சொல்லிக்கொண்டு சிலர் தாங்களாகவே மிகைப்படுத்தி பேசிக்கொண்டு அவருக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து சிறுமை சேர்க்கிறார்கள், அவர்களுக்கும் தங்களது அபிமான நடிகரின் படம் வெளியானதும் கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யும் பாமர ரசிகனுக்கும் பெரிதும் வேறுபாடில்லை, இத்தகைய விசிலடிச்சான் குஞ்சு ரசிக மனப்பான்மையை "sycophancy" எனப்படும் தீவிர ரசிக அடிமை மனப்பான்மை எனலாம், இவ்வாறான ரசிகர்கள் தங்கள் ஆதர்ஷம் எது செய்தாலும் உன்னதம் என கொண்டாடி , அவர்களின் ஆதர்ஷத்தின் புகழை கூட்டுவதற்கு பதில் குறைக்கவே செய்கிறார்கள் , இணையத்தில் ராசாவிற்கு இம்மாதிரியான ரசிக சிகாமணிகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது இருக்கும் ஒரு சிலர் மீண்டும் மீண்டும் வெற்று புகழ் மாலை பாடிக்கொண்டிருக்கிறார்கள், அவற்றை எல்லாம் சற்றே நிறுத்திக்கொண்டால் சேதாரம் தவிர்க்கப்படும் இல்லை எனில் என்னைப்போல் பலர் எதிர் வினையாற்றக்கிளம்பினால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா தான்."

திரு அமுதவனும், நானும் எழுதும் பதிவுகளில் பல முறைகள் இதைத்தான் சொல்லவேண்டி இருக்கிறது. ராஜாவுக்கு முன்பே பல சாதனைகள் செய்யப்பட்டுவிட்டன. அப்படிச் செய்த சாதனையாளர்களை கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளாமல் எதோ இளையராஜா வந்துதான் தமிழ் திரை இசையை உண்டாக்கினார் என்கிற பாணியில் இவர்கள் எழுதும் பிதற்றல்கள் படிக்க சகிக்காதவை. நீண்ட நாள் கழித்து இளையராஜாவைப் பற்றிய நேர்மையான கட்டுரையை வாசித்த திருப்தி உங்கள் புண்ணியத்தில். பாராட்டுக்கள். வவ்வாலும் காரிகனும் ஒரே அலைவரிசையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.
நான் எழுதி வரும் இசை விரும்பிகள் பதிவுகளில் ராஜாவின் இசையைப் பற்றியும் எழுத இருக்கிறேன். நேரமிருப்பின் படிக்கவும்.
http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/05/vi-65.html

வவ்வால் said...

வேற்றுகிரக வாசி,

வாரும்,நன்றி!

ஹி...ஹி நான் பதிவை சின்னதா சுருக்கிட்டதாக நினைத்தேன்,ஒரு ஃப்லோவில் அப்படியே ராசாவை விமர்சிக்கிறாப்போலவும் வந்தது ,அது வேண்டாம் என விட்டுவிட்டேன்,(இப்பவே சிலர் காண்டாகிட்டாங்க ,அதையும் எழுதி இருந்தேன் கடிச்சு கொதறியிருப்பாங்க)பார்ப்போம் மீண்டும் அல்லக்கைகள் அலப்ப்பரைக்கொடுத்தால் அதையும் பதிவாக்கி மொத்தமாக காத்து பிடுங்கிடலாம்.

// on travel படிக்கலாம் என்று print எடுத்தால், 15 pages. (without comments). நான் ஸ்கூல் படிக்கும் போது கூட, 15 பக்கத்தை தொடர்ந்து படித்ததில்லை.//

சொக்கா,சொக்கா என்ப்பதிவையும் ஒருத்தர் படிச்சு இருக்காரு அதுவும் பிரிண்ட் அவுட் எடுத்து ,ஆஹஹ்ஹா நானும் பதிவந்த்தேன் ...பதிவந்தேன்!, எழுதுங்கள் என் கல்லறையில் இங்கு ஒரு தமிழ்ப்பதிவன் இளைப்பாறுகிறான் என்று!!!
மெய்யாலுமே வேற்றுக்கிரகவாசி தான் நீர் , எந்த கிரகமோ தெரியல ஆனால் அது ரொம்ப நல்ல கிரகமாத்தான் இருக்கும், மதம் மும்மாரி பொழியும், பொல்லுஷன் இல்லாத காத்து, பவர் கட் இல்லாத ,சுனாமி வராத கிரகத்தில் இருப்பவர்களுக்கே எனது பதிவு நன்கு புரியும்னு தெரியுது , ஏ பூலோகவாசிகளே நல்லா கேட்டுக்கோங்க ,

"இது மனிதர் உணர்ந்துக்கொள்ள மனித பதிவல்ல அதையும் தாண்டி புனிதமானது"

இங்கே ஒருத்தர் மரப்பொம்மை ஒப்பித்தல்னு சொன்னார் ,எங்கே அவரு ,பிச்சு ,பிச்சு!

//உங்களால் எப்படி இப்படி முடிகிறது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏதோ கொஞ்சம் இசை தெரியும் (for hobby). இன்று நிறைய தெரிந்து கொண்டேன் இந்த பதிவிலிருந்து. சூப்பர் வவ்வால். நன்றி.//

நல்ல நல்ல ஹாபிலாம் வச்சிருக்காரே ,பெரிய ஆளாத்தான் இருப்பாரு போல, எனக்கு ஒன்னியுமே தெரியாது எல்லாம் கேள்வி ஞானம் தான்,மிச்சம் மீதி கூகிளாண்டவரின் கடாக்‌ஷம்!

நன்றி!
--------------------

பாகவதரே,

வாரும்,நன்றி!

இஸ்கான் பகவதருக்கே பவுன்சராவுதா அவ்வ்!

குருஜி ஆர்மோனியம் வாசிக்கும் போது ஆர்மோனியத்தில எந்த கட்டைய அமுக்குறார்னு பார்த்திருந்தால் இசை ஞானம் வந்திருக்கும்,நீர் அங்கு வேற "கட்டைய அமுக்க"பார்த்திருப்பீர் :-))

கிரிக்கெட்டும் ஸங்கீதம் போலத்தான் , வெஸ்ட் இன்டீஸ் பவுலர்களின் "டியுனுக்கு பேட்ஸ்மென்கள் ஆடுவாங்க"

கரிபியன் காலிப்சோ ரொம்ப ஃபேமஸ் ...

ஊலுலுலுல்லு உலேலுயு..ஊலுலுல்லு உலேயுயூ...டங்க் சிக் ..டங்க் சிக் டாங்க்!

படம் நல்லா இருக்கா ஹி...ஹி! நன்றி!
-------------------------

காரிகன்,

வாங்க,நன்றி!

//பதிவை படித்து முடித்ததும் முதலில் தோன்றியது "வாவ்". எப்படி இப்படியெல்லாம் எழுதிறீங்கன்னு கொஞ்சம் பொறாமையாக் கூட இருந்தது.//

இசையார்வமும்,நுணுக்கமும் தெரிந்தவர்களே இப்படில்லாம் சொன்னா அடியேனுக்கு கூச்சமாக இருக்காதா அவ்வ்!

எல்லாப்புகழும் கூகிளாண்டவருக்கே!

//ராஜா என்ன செய்தாலும் உடனே அதை பத்து பாரா விவரித்து எழுதுவது அவர்கள் விருப்பம் அதற்காக இல்லாததையும் பொய்களையும் பதிவேற்றி வீண் பெருமை பேசுவதில் நடுநிலை கொண்டுள்ள பலருக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.//

அஃதே,அஃதே!

சரியான கணிப்பு, அப்படி செய்த சில ரசிக மங்கூஸ் மண்டையன்களால் தான் கடுப்பாகி இப்படி ஒரு பதிவு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டேன்:-))

// ராஜாதான் interlude இசை அமைத்தார்,படங்களுக்கு பின்னணி இசை கொடுத்தார், ராகங்களை மாற்றி அமைத்தார், புரட்சி செய்தார், ஆறாரோ பாடினார், போன்ற கடுப்பேத்தும் பதிவுகள் பல உலா வருகின்றன. //

அய்யய்யோ அந்த கொலக்கொடுமைய என்னானு நான் சொல்வேன் ,சிலர் ரொம்ப ஓவரா போயி ,காலை உணவாக ரெண்டு வாழைப்பழமும்,பசும்பாலும் தான் குடிப்பார் அதான் இசை பிராவகமா பொங்குதுனு எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்க, அவரு கண்ணப்பார்த்ததும் கரண்ட் ஷாக் அடிக்குதுனு சொல்லுறாங்க :-))

இசையே ராசாவுக்கு சேவகம் செய்யுது,அவரு சுண்டினா சுருதி, கிண்டுனா கீர்த்தனைனு பாடுற தனி மனித துதி இருக்கே ,காது ஜவ்வு கிழிஞ்சிப்போவுது :-))

// நீண்ட நாள் கழித்து இளையராஜாவைப் பற்றிய நேர்மையான கட்டுரையை வாசித்த திருப்தி உங்கள் புண்ணியத்தில். பாராட்டுக்கள். வவ்வாலும் காரிகனும் ஒரே அலைவரிசையில் இருப்பது குறித்து மகிழ்ச்சியே.//

நன்றி!

அமுதவனும் சாரும் விரிவாக பழைய சங்கதிகளை எடுத்துப்போட்டு கலக்குகிறார்,படித்துள்ளேன்.

நம்ம அலைவரிசையில அதிகம் பேர் இருப்பதில்லை(ஹி...ஹி அவ்ளோ வில்லங்கம்!) ஒத்த அலைவரிசைனு அறிவதில் அடியேனுக்கும் மகிழ்ச்சி!

உங்கப்பதிவுகள் திரட்டிகளில் காணமுடிவதில்லை என்பதால் வாசிக்கவில்லை, இனி கண்டிப்பாக வாசித்து வருகிறேன்.
----------------------

Amudhavan said...

அடேயப்பா, வழக்கம்போல் ஏகப்பட்ட சான்றுகளுடனும் ஏகப்பட்ட தொகுப்புக்களுடனும் மிக விரிவாக இளையராஜா 'மகுடிகளுக்கு' ஒரு பெரிய வில்லங்கத்துடன்கூடிய பதிவு.
திரு காரிகன் அவர்கள் சொல்லித்தான் இப்போது உடனடியாக வந்தேன். இல்லாவிட்டால் எப்படியும் சிறிது தாமதம் ஆகியிருக்கும்.
கூகிளாண்டவர் புண்ணியத்தில் இதனைப்போட்டேன் அதனைப்போட்டென் என்றெல்லாம் நீங்கள் அடிக்கடிச் சொன்னாலும் ஒன்றும் தெரியாமல் அப்படியெல்லாம் கூகிளாண்டவர் புண்ணியத்தாலெல்லாம் 'ஒன்றும்'போட்டுவிடமுடியாது. சில சான்றுகளுக்கு கூகிளைத் தேடிவிவரம் பெற்றுக்கொள்ளலாம் அவ்வளவுதான்.
இங்கே நீங்கள் ஆரம்பிக்கும்போதேயே இசை பற்றித் தெரிந்துதான் எழுதுகிறீர்கள் என்பது புரிந்துவிடுகிறது. கீ போர்டோ அல்லது வேறு ஏதாவது வாத்தியக்கருவியோ வாசிக்கத் தெரிந்தவர் என்ற அடையாளமும் கிடைத்துவிடுகிறது.
இதன்பிறகு உங்களுடைய பாணியில் உங்கள் 'கச்சேரியை' பலமாகவே நடத்தி முடித்திருக்கிறீர்கள்.
நீங்கள் இணைத்திருக்கும் காணொளிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். 'அவங்கெல்லாம் சும்மா ஜூஜூபி இளையராஜாவுக்கு முன்னாடி அவங்கெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு' யாராவது சொல்வாங்கன்னு நெனைச்சேன். நல்லவேளை இன்னமும் யாரும் சொல்லலை.
எனக்குத் தெரிந்து இங்கே இரண்டு காணொளிகளில் ராஜா டியூன்களின் தீசல் வாசம் அடிக்குது. இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜ்கபூர் படங்களின் மொத்த பாடல் தொகுப்பைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.இடையில் ஒரு பாடல்..... முகேஷோ மன்னாடேயோ பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் பாணியிலேயே வேறு எங்கோ கேட்டிருக்கிறோமே என்று தோன்றியது. உடனே நினைவு வந்துவிட்டது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் 'வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ' பாடலை மனுஷன் இங்கிருந்துதான் சுருட்டி, அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் தட்டி நெளிவு சுளிவெடுத்து பாடலாகப் போட்டுக்கொடுத்திருக்கிறார்.'ஆ,எங்கஇளையராஜா பீத்தோவனுக்குப் பாடம் எடுத்தவர். மொசார்டுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்தவர்' என்று இங்கே குதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
//இசையே ராசாவுக்கு சேவகம் செய்யுது,அவரு சுண்டினா சுருதி, கிண்டுனா கீர்த்தனைனு பாடுற தனி மனித துதி இருக்கே//
இதை நீங்கள் யாரையும் 'மனதில்வைத்துக்கொண்டு' சொல்லவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் ராஜாவை விட்டு இப்போது பிரிந்திருக்கும் ஒரு பாடலாசிரியர் ராஜாவுடன் நட்பில் இருந்தபோது இம்மாதிரிதான் எடுத்ததற்கெல்லாம் நாள்தவறாமல் சொல்லி ராஜாவே கடுப்படித்துப்போய் 'இனி இப்படியெல்லாம் என்னிடம் பேசாதே' என எச்சரிக்கை செய்வார் என்றெல்லாம் செய்திகள் இருக்கின்றன.
எதற்கெல்லாம் இளையராஜாவை இழுக்கிறார்கள் என்பதை நினைத்தால் எரிச்சலாக இருக்கிறது. டிஎம்எஸ் இறந்துவிட்டார். உனக்குப் பிடித்தால் பதிவு எழுது.இல்லாவிட்டால் சும்மா இரு. இளையராஜா இசையில் டிஎம்எஸ் பாடிய ஆறேழு பாடல்களில் இது இப்படி அது அப்படி என்று 'இளையராஜா வழியாகத்தான்' இவர்கள் டிஎம்எஸ்ஸையே 'அளக்கிறார்கள்'. இந்தக் கொடுமையை எல்லாம் எங்கே போய்ச் சொல்லுவது என்று தெரியவில்லை.
இணையத்தில் உள்ள ராசா ரசிகர்கள் உங்களையும் பிளாக் லிஸ்டில் வைக்கப்போகிறார்கள்- தளர்ந்துவிடாதீர்கள்!
என்னுடைய அடுத்த பதிவு ஒன்று இருக்கிறது. இளையராஜாவும் ரகுமானும் இளம் இசையமைப்பாளர்களும் என்பது பற்றி. எழுதி போஸ்ட் செய்யவிருந்த நேரத்தில் டிஎம்எஸ் மறைவுச்செய்தி வந்ததால் அவர் இறந்த அன்றைக்கு இப்படியொரு பதிவு வேண்டாமே என்று தள்ளிவைத்துவிட்டு டிஎம்எஸ்ஸைப் பற்றிய பதிவு எழுதி வெளியிட்டேன். இன்னும் இரண்டொரு தினங்களில் ராசா ரசிகர்களை அபிஷேகம் செய்ய அந்தப் பதிவு வரும்.
காரிகன் சொல்லியிருப்பதுபோல் இளையராஜாவைப் பற்றிய மிக முக்கியப் பதிவுகளில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

இங்கே ஒருத்தர் மரப்பொம்மை ஒப்பித்தல்னு சொன்னார் ,எங்கே அவரு ,பிச்சு ,பிச்சு!

அச்சு அச்சு.

நான் அப்படியே ஓரஞ்சாரமா நின்று வேடிக்கை பார்த்துக் கொள்ளலாமா?

Anonymous said...

இவ்வளவு விலாவாரியாக எழுதியும் காரிகனுக்கும் , அமுதவனுக்கும் ஏதாவது புரியும் என்றா எண்ணுகிறீர்கள்.
மேலைத்தேய இசையை உங்களைப் போன்றவர்களே எழுத தூண்டிய இசைஞானியை ,அவரது ரசிகர்களையும் எவ்வளவு தூரம் பாராட்டினாலும் தகும்.

snekan

குமாரு said...

நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அதன் தரம் என்ன, உண்மை என்ன, தத்துபித்து தரவுகள் என்ன, என உணராமல் உங்களுக்கு ஜால்ரா அடிக்கவே சிலர் இருக்கும்போது, அவருக்கு இருக்கமட்டங்களா?!.

குமாரு said...

இவ்வளவு டேக்கிநக்கி சொன்னிங்களே, இதெல்லாம் வச்சி அமுதவன் காலத்து, பாக்கட்டில் ரெட்டை பேனா, பஸ் பாஸ் வைக்கும் பழைய காலத்து இந்திய இமைப்பளர்கள் ஒண்ணுமே செய்யலியா? எல்லாமே வெள்ளைக்காரன் பேரா சொல்றிங்களே ஏன்?. பெருசு பழைய இசைஅமைப்பாளர் பேரு எல்லாம் சொல்லாட்டி கோவிக்கும்ல?

வவ்வால் said...

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

காரிகன் செய்த காரியத்தால் தான் உடனே வந்தீர்களா,, நன்றி!

நீண்ட நெடிய பத்திரிக்கை அனுபவம், பல்துறை மக்களிடம் பழகிய அனுபவம் கொண்ட தாங்கள் இப்படி வெளிப்படையாக பாராட்டியது மகிழ்வாக இருந்தாலும்,அந்த அளவுக்கு நான் "வொர்த்" இல்லை என்பதே உண்மை.

பார்த்தது,படிச்சது,கேட்டது வச்சு கொஞ்சம் கூகிள் செய்து ஒப்பேத்தியுள்ளேன். ஒரு காலத்தில் கீ போர்டு கத்துக்க வகுப்பில் சேர்ந்துவிட்டு ஒரே மாசத்தில் இது சரிப்படாதுனு ஓடி வந்துள்ளேன் அவ்வளவே :-))

# காணொளிகள் ஐந்தும் ராசாவின் பாடல்களாக உருமாறி தமிழ்நாட்டில் ஒலிக்கிறது :-))

1) George Bizet's 1897,'Carillon' (Allegro moderato).- ஏ பி சி நீ வாசி எல்லாமே கைராசி வா ரோசி- கைதியின் டைரி

2)Kites by Simon Dupree(1967)- அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆடக்கண்டேனே - ப்ரியா

3)Lady in Black - Uriah Heep(1970)- ஆஹாங் வந்திடுச்சு ஆசையில் ஓடி வந்தேன் - கல்யாண ராமன்.

4)Cancione et Danza: 2. Danza'- Antonio Ruiz-Pipo'- எந்த பூவிலும் வாசமுண்டு - முரட்டுக்காளை.

5) பூகி ஊகி ராக்& ரோல்- ரம்பம்பம் ஆரம்பம் பேரின்பம்- மைக்கேல் மதன காமராஜன்

-----------------

#//இந்தப் பாடல் பாணியிலேயே வேறு எங்கோ கேட்டிருக்கிறோமே என்று தோன்றியது. உடனே நினைவு வந்துவிட்டது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் 'வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ' பாடலை மனுஷன் இங்கிருந்துதான் சுருட்டி, அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் தட்டி நெளிவு சுளிவெடுத்து பாடலாகப் போட்டுக்கொடுத்திருக்கிறார்.'ஆ,எங்க இளையராஜா பீத்தோவனுக்குப் பாடம் எடுத்தவர். மொசார்டுக்கு சங்கீதம் சொல்லிக்கொடுத்தவர்' என்று இங்கே குதித்துக்கொண்டிருக்கிறார்கள்.//

விடாமல் ஆராய்ச்சி செய்றிங்க போல,அதான் இந்த போடு போடுறிங்களா.

நாமும் பாடல்கள் நிறைய கேட்பது வழக்கம், அதில கொஞ்சம் மனசுல ஒட்டிக்கிட்டது வச்சு தான் பேசுறது.

# //இளையராஜா இசையில் டிஎம்எஸ் பாடிய ஆறேழு பாடல்களில் இது இப்படி அது அப்படி என்று 'இளையராஜா வழியாகத்தான்' இவர்கள் டிஎம்எஸ்ஸையே 'அளக்கிறார்கள்'. இந்தக் கொடுமையை எல்லாம் எங்கே போய்ச் சொல்லுவது என்று தெரியவில்லை.//

இசையே இளையராஜாவின் வரவுக்கு பிறகு தான் தோன்றியது என்னும் மனப்பிராந்தியில் சிலர் இருக்காங்க அதன் விளைவே. ஆனால் ராசா கர்நாடிக் அடிப்படையில் இசை அமைக்கணும்னா வி.எஸ்.நரசிம்மனுக்கு பின்னாடி ஒளிஞ்சிப்பார்னு ஊரெல்லாம் பேச்சு :-))

# //இணையத்தில் உள்ள ராசா ரசிகர்கள் உங்களையும் பிளாக் லிஸ்டில் வைக்கப்போகிறார்கள்- தளர்ந்துவிடாதீர்கள்! //

நான்கைந்து வருடங்களுக்கு முன்னரே இளையராசா சிம்பனியே அமைக்கலைனு பேசி அந்த பட்டியலில் போயாச்சு, ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு சிம்பனினா என்னனே தெரியலை.

உண்மையில் சிம்பனி என யாரும் சான்று தருவதேயில்லை, ஒரு இசையமைப்பாளர் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவிற்கு ஏற்ற வடிவில் இசையமைச்சு விட்டு ,அரங்கேற்றினால் போதும்,சிம்பனி என்பது ஆர்கெஸ்ட்ரா செட் அப் அவ்வளவு தான், மொத்தம் 50 வாத்தியக்கார்கள் முதல் 100 வரையில் எண்ணிக்கை இருக்கணும்,100 இருந்தால் பில்ஹார்மோனிக் சிம்பனி, 50 இருந்தா சேம்பார் சிம்பனி ஆர்கெஸ்ட்ரா அல்லது சிம்பனி ஆகெஸ்ட்ரா.நான்கு பிரிவில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மற்ற வாத்தியங்களின் கலவை இருக்கணும்,அவை எல்லாவற்றிலும் வாசிக்க தக்க,ஒரு இசைக்குறிப்பு சிம்பனி. ,பின்னர் அந்த இசையமைப்பாளரே இது சிம்பனினு அறிவிச்சாலே போதும்,என்ன ஒன்னு அதுக்கப்பறம் அது ஒரிஜினல் இசையானு இசை விமர்சகள் ஆய்வு செய்வாங்க ,காப்பினு தெரிஞ்சா காரித்துப்பி அப்புறம் இசை உலகம் பக்கமே வர முடியாம செய்துடுவாங்க.

ராசாவுக்கு நாம அமைச்சது ஒரிஜினல் ஸ்கோரானு சந்தேகம் எனவே சிம்பனினு அறிவிக்காமல் பின்வாங்கிட்டார்,ஆனால் அது தெரியாமல் இங்கே பேசிட்டு ஒரு கும்பல் அலையுது.

சிம்பனி அரங்கேற்ற லண்டன் கூட போகத்தேவையில்லை, இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு சிம்பனி ஆஸ்கெஸ்ட்ரா "பம்பே பில்ஹார்மோனிக் ஆஸ்கெஸ்ட்ரா" என ஒன்று இருக்கு,எனவே மும்பையிலேயே அரங்கேற்றி சிம்பனினு சொல்லிடலாம்.

போகிற போக்கை பார்த்தால் நானே மீஜிக் கத்துக்கிட்டு சிம்பனி போட்டாலும் போடுவேன் போல இருக்கு அவ்வ்:-))

# //என்னுடைய அடுத்த பதிவு ஒன்று இருக்கிறது. இளையராஜாவும் ரகுமானும் இளம் இசையமைப்பாளர்களும் என்பது பற்றி. //

போடுங்க ,படிக்க காத்திருக்கிறோம், வழக்கம் போல சுவையான புதிய தகவல்கள் நிறைய இருக்கும்னு தெரியுது!
தங்களது சிறப்பான கருத்துகளுக்கு மிக்க நன்றி!
---------------

ஜோதிஜி,

வாங்க,

என்னாது ஓரமாவா , உள்ளாரப்பூந்து கம்பு சுத்துவீங்கனு நினைச்சேன், ரெண்டு மான்கொம்பு எடுத்துட்டு வாங்க சுத்து சுத்துனு சுத்தலாம் :-))
--------------

வவ்வால் said...

சினேகன்,

வாங்க,நன்றி!

இங்கே ராசாவை விமர்சிக்கவில்லை(விமர்சிக்க காரணம் இருந்தும் செய்யவில்லை) அவரது பெயரை சொல்லிக்கொண்டு சில அல்லக்கைகள் செய்யும் திருகுதாளங்களை தான் விமர்சித்துள்ளேன்.

காரிகன்,அமுதவன் போன்றோர்கள் எல்லாம் இசைக்கற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, விமர்சிக்க போதுமான இசைஞானம் இருக்கிறது, விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவர்கள் யாருமில்லை,எனவே பேசவே கூடாது என தடா போடுவதெல்லாம் பழங்காலம் ,இன்னும் ஏன் அப்படி இருக்க ஆசைப்படுகிறீர்கள்.
------------

குமாரு,

வாங்க,நன்றி!

தீயா வேலை செய்யுறிங்க குமாரு :-))

//நீங்கள் என்ன சொல்கிறீர்கள், அதன் தரம் என்ன, உண்மை என்ன, தத்துபித்து தரவுகள் என்ன, என உணராமல் உங்களுக்கு ஜால்ரா அடிக்கவே சிலர் இருக்கும்போது, அவருக்கு இருக்கமட்டங்களா?!.//

நான் எழுதியிருப்பதில் பிழையிருந்தால் சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்வேன், நிறைய தரவுகளை சுட்டியாகவும் கொடுத்துள்ளேன், மூடு மந்திரமெல்லாம் நம்மிடம் இல்லை.

இசை கற்றவர்கள் கூட இதெல்லாம் சரி தான் , எல்லா இசையமைப்பாளர்களும் இந்த வேலை தான் செய்றாங்கனு தான் சொல்றாங்களே ஒழிய நான் சொன்னவை தவறென சொல்லவில்லை.

சரி உங்களுக்கு ஒரு கேள்வி ராசா அவரது இசைக்கோர்வைகளை வெளியிட்டு இருக்கிறாரா? எங்காவது கிடைக்குமா?

பாப் இசைக்கே மியுசிக் நோட்ஸ் அச்சடித்து வெளியிட்டு விடுவார்கள். இணையத்திலவே எக்கச்சக்கமா கிடைக்குது,நானும் தமிழ் பாடல்களுக்கான நோட்ஸ் தேடிப்பார்க்கிறேன் கிடைக்கவே மாட்டேங்குது, ஏன் இசையமைப்பாளரே வெளியிடக்கூடாது ,அதுவும் ஒரு வருமானம் தானே,ஆனால் வெளியிட மாட்டார்கள் அப்படி வெளியிட்டால் கையும் களவுமாக மாட்டிப்பாங்கோ :-))

ஸ்டேஜ் ஷோ செய்றவங்கலாம் அவங்களா "டி கோட் " செய்தோ இல்லை முன்னர் யாரோ மூன்றாம் நபர் எழுதி வச்சதை காபி செய்தோ தான் இசையமைக்கிறாங்க, ஒரிஜினல் இசைகுறிப்புகள் இல்லை.

#// பாக்கட்டில் ரெட்டை பேனா, பஸ் பாஸ் வைக்கும் பழைய காலத்து இந்திய இமைப்பளர்கள் ஒண்ணுமே செய்யலியா? எல்லாமே வெள்ளைக்காரன் பேரா சொல்றிங்களே ஏன்?. //

இங்கே ஒருத்தர் மட்டம் இன்னொருத்தர் உசத்தினு ஓப்பிடே செய்யவில்லை, மேலும் எந்த இசையமைப்பாளரையும் விமர்சிக்கவில்லை, சில ரசிக சிகாமணிகள் இல்லாதவற்றை எல்லாம் இருப்பதாக சொல்லி மிகப்படுத்தி பீற்றிக்கொண்டிருப்பதை தான் "கட்டுடைத்திருக்கிறேன்"

கட்டுரையின் மைய கருத்தே புரியாமல் கர்த்து சொல்ல வராய்ங்களே அவ்வ்!

இவர எல்லாம் புடிச்சு பசித்த முதலைக்கு காலை உணவாக போட்டால் என்ன :-))
-----------------

Anonymous said...

//காலத்தில் கீ போர்டு கத்துக்க வகுப்பில் சேர்ந்துவிட்டு ஒரே மாசத்தில் இது சரிப்படாதுனு ஓடி வந்துள்ளேன்//

நீங்கதான்யா ஒரிஜினல் நம்ம ஆளு. நானும் அப்படித்தான்.

இந்த கூத்தையும் கொஞ்சம் பாருங்க. கிழ போல்ட்கள் தான் ராசா பின்னாடி தொங்கிட்டு அலையுறாங்கன்னு பாத்தன்னா, சில இள போல்டுங்களும் அப்படிதான் அலையுதுங்க.
http://tamil.oneindia.in/movies/news/2013/05/students-adamant-receive-appointment-ilayarajaa-175959.html

nirvana said...

http://www.youtube.com/watch?v=9ZEURntrQOg

Ithayaum konjam kelunga.

Tamil Version

http://www.youtube.com/watch?v=Bz7nv2rR_50

Anonymous said...

The soothing
"kanavu kaanum vazhkhai yaavum" is utter copy from a hindi film song by Manna dey. Kasme Vaade Pyar wafa kahttp://www.youtube.com/watch?v=L2D-uXu-sFo

-surya

ஜெய பாலு (நாகூர் கனி ) said...

வவ்வால்,
உங்களுடைய பதிவு தொடர்பாக நான் கருத்து சொல்ல வரவில்லை.
ஆனால் நீங்கள் போட்ட கமெண்ட் சில அநாகரீகமாக இருப்பதாக கருதுகின்றேன்.

" ராசா கர்நாடிக் அடிப்படையில் இசை அமைக்கணும்னா வி.எஸ்.நரசிம்மனுக்கு பின்னாடி ஒளிஞ்சிப்பார்னு ஊரெல்லாம் பேச்சு :-))"
இந்த கருத்தை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகின்றீர்கள். நான் இளையராஜாவின் மியூசிக் குரூப்பில் வயலின் வாசித்தவன் தான். ஒன்று மட்டும் உறுதி ராஜாவின் இசையில் எந்த வாத்திய கலைஞரும் உரிமை கோர முடியாது. அவர் NOTES எழுதுவார். நாங்க பார்த்து எழுதுவோம். அவ்வளவுதான். அதன் பின் ஒத்திகை பார்த்து வாசிப்போம். நரசிம்மன் நிரந்தர வயலின் வாசிப்பாளர் அல்ல. எப்போதாவது வருவார். பிரபாகர் நீண்டகாலமாக இருக்கின்றார்.
(ஒரு கருத்தை போட முன் அதை ஆராய்ந்து போடுங்கள். எதேகேல்லாம் ஆராய்வு செய்து பதிவு போட்ட நீங்கள் ஒரு கேவலமான கிசு கிசு வையும் போட்டிருக்கின்றீர்கள் )

இரண்டாவது ஒரு வாசகர் கூறியிருந்தார்.
". இளையராசா தன இசை கலைங்கர்களுக்கு (பாடகர்களையும் சேர்த்து) 450 ரூ மேல் கொடுத்தது கிடையாது.. அதுவும் ஒரு கால்ஷீட்டுக்கு.. "

இவர் ராஜாவிடம் வேலை பார்க்கவில்லை என்பது உறுதி. ஏனென்றால் ராஜா எனகளுக்கு சம்பளம் தரமாட்டார். சம்பளம் தருவது தாயாரிப்பாளரின் மேனேஜர் தான்.
சம்பளம் பெரிதாக இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக வேலை இருக்கும். வேலையில்லாத நாளே இருக்காது. ராஜாவே நாயகன் வரை 25000 ரூபாதான் வாங்கி வந்தார். நாயகன் படத்துக்குதான் ஒரு லட்சம் வாங்கினர்( இது பஞ்சு அருணாச்சலம் சொல்லித்தான் தெரியும் )

ஆனால் ரெகார்டிங் இல் கண்டிப்பாக இருப்பார். தப்பாக வாசித்தால் பிரச்சினை இல்லை. ஒத்திகை பல முறை பார்த்து மீண்டும் ரெகார்டிங் செய்வோம் ஆனால் தண்ணி அடித்து விட்டு போனால், லேட் ஆக போனால் சிக்கல் தான். பாடகர்கள் நல்ல சம்பளம் வாங்கி கொண்டுதான் வந்தார்கள். பாலு, மனோ, ஜானகி அம்மா நல்ல சம்பளம் வாங்கி வந்தார்கள்.

". வேலை மட்டும் சக்கையாக வாங்கி விட்டு, காசும் குறைத்து டுத்ததால்..அவருக்கு 1993 க்கு பிறக்கு இறங்குமுகமாய் அமைந்தது... "
சம்பளத்துக்கு இறங்கு முகத்துக்கும் என்ன தொடர்பு. ராஜாவின் இறங்கு முகத்துக்கு ஒரே காரணம் ரஹ்மான் அவ்வளவுதான்.


ஜெய பாலு (நாகூர் கனி )


Anonymous said...

//The soothing
"kanavu kaanum vazhkhai yaavum" is utter copy from a hindi film song by Manna dey.

Kasme Vaade Pyar wafa kahttp://www.youtube.com/watch?v=L2D-uXu-sFo//

Raja and Kalyanji-Anandji had exchanged tunes.

Raja's "Ilaya nila" became "Nile nile ambar" with Kalyanji-Anandji.

Anonymous said...

வவ்வால் ஜி, இளையராஜா என்ற தனிமனிதன் மேல் எனக்கும் சில பிடிக்காத குணங்கள் இருந்தாலும், தமிழிசைக்கும், தமிழர்களுக்கு

எளிமையான இசையைக் கொண்டு சேர்த்த பங்களிப்பையும் மறுக்கவியலாது. இளையராஜா ஆணவம் பிடித்தவர் என்ற பரவலான கருத்து

உள்ளபோதிலும், அவர் தன்னுடைய முன்னோடி இசை அமைப்பாளர்களுக்கு சபை மரியாதை அளிக்க தவறியதில்லை. தனிமனித துதிபாடல்

என்பது இந்தியாவின் சாபக்கேடு. அதை ஒழித்து இந்தக் கலைஞனுக்கு உரிய மரியாதையை கொடுப்பது நமது கடமை. மலையாளத்தில்

எந்தவொரு கலைஞனையும் அவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை என்பதை நினைவில் கொள்வோம்.நாலு படம் நடித்து விட்டு ஆட்டம் போடும்

நடிகர்கூட்டதுக்கு மத்தியில் இவர் சாதனை பெரியதே. இவர் காலத்தில் இணைய வளர்ச்சி இன்றளவு இல்லை என்பதால் காப்பி என்று நீங்கள்

கொடுத்திருக்கும் சுட்டிகளை தற்செயல் நிகழ்வு என்று கருதுவோம். AR Rahman, GV Prakashkumar, Harris Jeyaraj, Yuvan Shankar Raja போன்றறோர் காப்பி (நாகரிகமாக இன்புளுயென்சு) இல்லாமல் பதிந்த பாடல்கள் மிகச்சிலவே என்பது மறுப்பதற்கு இல்லாத உண்மை. இளையராஜாவின் சிம்பொனி conductor John Scott யின் கூற்று கீழே



Q & A Dear John
John Scott's Column

As time permits, John Scott will answer your questions and have the answer posted here.

This question comes from Anbu Ramasamy:

Mr. Scott,

I think you are one of the best composers around & my mission now is to go out and get

all your CDs. Please keep composing & keep releasing your music.

The question I have is somewhat involving you and another person. I was thrilled when I

heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he

was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I

couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!)

was going to conduct it. There was a huge celebration for him in India with all the top

personality & you honoring Mr. Ilayaraja. This was shown in the tele & I was ecstatic to

see you on stage. As you were being garlanded on stage, I also happened have your CD

'John Scott's Favorites' gracing my glass cupboard with you in front. I so excitingly

pointed out to my family members 'there that's him' & they really couldn't believe as

well.

But till now, this symphony has not been released & there hasn't any news about it. I

hope you can enlighten about its release & the work of Mr. Ilayaraja.

Anbu(Singapore)

Dear Anbu (Singapore),

Thank you for your very kind comments. I am a very lucky person because I spend my life

doing what I like, which is composing music.

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV.

I was flown from London to Madras specially for it. It was an incredible experience and

I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to

encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review,

and this is the reason it has not been released. I had the privilege of conducting the

recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe

it deserves to be released. The trouble is that critics are capable of destroying

sensitive artists and have done it throughout the history of music. The more one knows a

piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging

anything they have never heard before. They have seldom been right. There is a

wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a

history of musical criticism since Beethoven's time. It shows how the critics have

crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him

about your kind remarks and that he owes it to us all to make his symphony available.

I send you my best wishes,
John Scott
http://webhome.idirect.com/~rlevy/current_question.html



Thanks,
KeeYes

Anonymous said...

The soothing
"kanavu kaanum vazhkhai yaavum" is utter copy from a hindi film song by Manna dey. Kasme Vaade Pyar wafa kahttp://www.youtube.com/watch?v=L2D-uXu-sFo

இதை இசை அமைத்த கல்யாண்ஜி ஆனந்த்ஜி, இளையநிலா பாடலை பயன்படுத்தினார்களே தெரியுமா?

இளையராஜாவும் சரி அவர்களும் சரி இதே போல் பாடல்கள் செய்ய கூடியவர்கள், இருந்தாலும் ஏன் மற்றவர் படலை கையலனும்?
யோசிங்க ...

Anonymous said...

http://www.youtube.com/watch?v=9ZEURntrQOg

Ithayaum konjam kelunga.

Tamil Version

http://www.youtube.com/watch?v=Bz7nv2rR_50

அது சங்கர் கணேஷ்..

Kuki said...
This comment has been removed by the author.
குறும்பன் said...

இசையா அப்படின்னா என்னன்னு கேட்கற ஆளு நான். கார்டு, கீ, நோட்சுன்னு வித்தை காட்டிட்டிங்க.

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

அட நீரும் நம்ம கட்சியா அப்போ ,ஆஹா நாம மட்டும் தான் ஆர்வக்கோளாறா திரிஞ்சம்னு பார்த்தா கம்பெனிக்கு ஆட்கள் நிறைய கிடைப்பாங்க போல இருக்கே, எல்லாரையும் கூட்டி ஒரு சங்கம் ஆரம்பிச்சுட வேண்டியது தான் :-))

அந்த செய்தி முன்னரே பார்த்தாச்சி,அப்போலோ எஞ்சினியரிங்க் காலேஜ் காரங்க அப்போப்போ இப்படி செய்றது தான், நெப்போலியன்,லோகநாயகர் எல்லாம் கூட்டி வந்து ஏதாவது விழா நடத்துவாங்க, பசங்களா இப்படி கேட்டு இருக்க மாட்டாங்க ஒரு விளம்பரத்துக்காக காலேஜ் செய்து இருக்கும்.

அனேகமா அந்தக்காலேஜ் நெப்போலியனுக்கே சொந்தமாக கூட இருக்கலாம், இல்லைனா திமுக பின்புலம் இருக்கணும்,கரைவேட்டிகள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
------------------

நிர்வாணா,

வாங்க,நன்றி!

என்ன ரொம்ப நாளா ஆளாக்காணோம்?

நீங்க போட்ட காணொளி பார்த்தேன் இது போல நிறைய பேரு செய்து இருக்காங்க.

டர்ட்டில்ஸ் ஆல்பம் தான் "வ" குவார்ட்டர் கட்டிங்கிலும் "அம்புலி போலவே நம்பிக்கை தேய்கிறதே பாட்டிலும் யுவன் எடுத்தாண்டு இருக்கார் போல :-))

------------

அனானி,

நன்றி!

கனவு காணும் வாழ்க்கை ,கல்யாண்ஜி- ஆனந்த்ஜி உடன் பண்டமாற்று செய்யப்பட்ட டியூன் எனப்படித்தேன்,பின்னாடி இன்னொரு அனானியும் அதை சொல்லி இருக்கார் பார்க்கவும்.

# அனானி அன்பர்களே , அப்படியே ஒரு பேரையும் சேர்த்துப்போடுங்களேன் குறிப்பிட வசதியாக இருக்கும், சும்மா அம்மாவாசை, டபாராவாயன் என்று கூட விருப்பம் போல பேரு போட்டுக்கலாம் :-))
-------------

நாகூர் கனி,

வாங்க,நன்றி!
விஷய ஞானமுள்ள அனுபவஸ்தர்கள் எல்லாம் கருத்திடுவது மகிழ்ச்சியாக உள்ளது.

எனது பின்னூட்டம் அநாகரிமானது அல்ல ஆனாலும் அப்படி நினைக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்.

சாலிக்கிராமம் ,அருணாச்சால சாலையில் டீக்கடை வாசலில் டாப்படிக்கும் கூட்டத்தினர் முதல் , பல பத்திரிக்கைகளிலும் "நரசிம்மன்" பற்றிய கிசு கிசு பேசப்பட்டாச்சு, இங்கே நான் சொன்னது முதன் முறையல்ல.

எல்லாப்படங்களிலும் நரசிம்மன் பெயரை போடாத ராசா அவர்கள், சிந்துபைரவியில் இசை உதவி - வி.எஸ்.நரசிம்மன் என போட்டதாக நினைவு(சரிப்பார்க்கணும்)

# //ராஜாவே நாயகன் வரை 25000 ரூபாதான் வாங்கி வந்தார். நாயகன் படத்துக்குதான் ஒரு லட்சம் வாங்கினர்( இது பஞ்சு அருணாச்சலம் சொல்லித்தான் தெரியும் )//

புதிய தகவல், நான் முன்னரே லட்சங்களுக்கு போயிருப்பார் என நினைத்தேன்.

வேலை செய்பவர்களுக்கு குறைவாக சம்பளம் கொடுப்பது சரிவுக்கு காரணமில்லை என நீங்கள் சொன்னது சரி தான், ஆனால் அவரது பார்வை அப்படியிருக்கிறது எனலாம்.

//சம்பளத்துக்கு இறங்கு முகத்துக்கும் என்ன தொடர்பு. ராஜாவின் இறங்கு முகத்துக்கு ஒரே காரணம் ரஹ்மான் அவ்வளவுதான். //

ரஹ்மான் ஒரு காரணம் என்றால் இன்னொரு காரணம் தேவா என்பேன், மலிவாக ராசாவின் இசையை "போல" கொடுத்ததோடு விரைவாகவும் வேலை நடப்பதால் பல சிறிய தயாரிப்பாளர்கள் தேவா பக்கம் போய்விட்டார்கள்.

சூப்பர் ஸ்டார் போன்றோர் ராஜாவின் பக்கம் வந்த போதும் கவிதாலயாவுடன் பிணக்கு என்பதால் மறுத்து பின்னர் தேவா பக்கம் தான் சூப்பர் ஸ்டார் போனார் பின்னர் அப்படியே ரஹ்மான் பக்கம் போயாச்சு. இப்படி பல பக்கமும் வம்பிழுத்துக்கொண்டதும் ராஜாவின் சரிவுக்கு ஒரு காரணம்.
---------------------------

வவ்வால் said...

அனானி,

நன்றி!

கனவு காணும் வாழ்க்கைப்பாடல் பற்றி நீங்கள் சொன்னது போலத்தான் படித்துள்ளேன்.

-----------
கே.எஸ்,

வாங்க,நன்றி!

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப்பக்கம் காத்தடிக்குது :-))

ராசா கிராமிய இசைக்கு முக்கியத்துவம் அளித்தார், நல்லப்பாடல்கள் கொடுத்தார் என்பதில் மாற்றுக்கருத்தேயில்லை,தமிழ் திரையிசை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு இடம் என்றும்ன் அவருக்கு உண்டு.

இங்கு பேசுவதெல்லாம் இல்லாத,செய்யாதவற்றுக்கு எல்லாம் மிகைப்படுத்தி பேசும் தீவிர ரசிகர்களின் நடவடிக்கைகள் பற்றியே.

மலையாள உலகிலும் போற்றுவார்கள்,ஆனால் மிகைத்துதிப்பாடல் இருக்காது, மேலும் கலைஞர்களும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் நடந்துக்கொள்வதில்லை.

# சிம்பனி பற்றி நான் சொன்னதை ஒத்தே நீங்கள் சொல்லியிருப்பதும் இருக்கிறது, இசை விமர்சர்களின் ஆய்வுக்குட்ப்பட்டதே, சிம்பனி என அறிவித்தால் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்வார்கள், அதனடிப்படையிலேயே சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராக்கள் அங்கீகரித்து வாசிக்க தேர்வு செய்வார்கள், ராசாவுக்கே அவரது இசைக்கோர்வை மீது நம்பிக்கையில்லாததையே சிம்பனி என அறிவிக்காமை காட்டுகிறது.
----------------
அனானி,

நன்றி!

யோசிக்கனுமா, சரி யோசிப்போம்,ரூம் போட்டு வேற அயோசிக்க சொல்வாரோ அவ்வ் :-))
-------

அனானி,

ஏற்கனவே சொல்லிட்டாக இதை.நன்றி!
--------------

குறும்பன்,

வாரும்,நன்றி!

என்னமோ குறளி வித்தை காட்டிட்டாப்போல சொல்லுறீர்.இசைனா என்னானு நமக்கும் தெரியாது எல்லாம் கேள்வி ஞானம் தான் அதை வச்சுக்கிட்டெ எப்பூடி டக்கரா ஃபில்ம் காமிச்சேன் பார்த்தீரா :-))
---------------------

Anonymous said...

ராசா சம்பளம் வாங்குனது 25,000 ஆக இருந்தாலும், ரைட்ஸ் எல்லாம் அவர் தான வச்சு கிட்டாரு.. சொந்த கம்பெனில தான கேசட்டு போட்டு வித்தாரு...

அதுல சம்பாரிச்சது எல்லாம் பட தயாரிப்பாளருக்கா கொடுத்தாரு?

அய்யா நாகூர் கனி .. இது உங்களுக்கு தெரியாதா??

ராஜ நடராஜன் said...

பதிவும்,பின்னூட்டங்களும் களை கட்டுது போல இருக்குதே!படிச்சுட்டு அப்புறம் சொல்றேன்.

சால்ட் கொட்டாய் சரசு said...

//ராசா சம்பளம் வாங்குனது 25,000 ஆக இருந்தாலும், ரைட்ஸ் எல்லாம் அவர் தான வச்சு கிட்டாரு.. சொந்த கம்பெனில தான கேசட்டு போட்டு வித்தாரு...
//

எக்கோ கம்பெனி அவரோடாதான்னு டவுட்டா கீது. அதுக்கு யாரோ ரங்கசாமி பார்த்தசாரதின்னு ஓனர் இருந்தாரு.

குணா காலத்துல பனையோலை லோகோவோட 'ராஜா காஸட்ஸ்' தொடங்கினாரு.

தம்பிக்கோட்டை நம்பிராஜன் said...

வவ்வாலு,

itwofs.com போனதில்லையா?

அனைவரின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏற்றப்பட்டிருக்கும்.

வவ்வால் said...

ராச நட

வாரும்,நன்றி!

ஹி...ஹி அடிச்சு ஆடுவோம், அட டா அட டா அம்பது அடிடா :-))

உம்ம கடை ஈ ஓட்டிக்கிட்டு இருக்குனு நான் தான் யாவாரம் செய்துட்டு இருக்கேன்,நமக்கு ஒரு அடிகை அங்கே சிக்கிருச்சு :-))

வவ்வால் said...

அனானி அண்ணாத்தைகளா,

என்னாதிது,ஏகப்பட்ட அவதாரங்களில் வாரிங்கோ?

எக்கோ ராசாவின் பினாமி கம்பெனினு கேள்வி,அதில் பாவலரின் மகன் பங்குதாரராக இருந்தார், எப்படியோ பைசா குடும்பத்துக்குள்ள தான் நடமாடி இருக்கும்,ஆனால் சமீபத்தில் எக்கோ ஆடியோ மீது ராசா வக்கீல் நோட்டீஸ் விட்டார்.

எனவே என்ன நடக்குதுனு ஒன்னியும் piரியலை.

# itwofs.com போனதில்லையா?//

போயிருக்கேன்பா, இங்கே காப்பி அடிச்சது பத்தி முக்கியமா பேசலைனு அதை எல்லாம் விட்டாச்சு, மிகையான விதந்தோம்பும் ரசிக சிகாமணிகளை கவனிக்கவே இப்பதிவு.

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் said...

மந்திரியாரே,

எமக்கு ஒரு பெருத்த சந்தேகம்.

பியானோ போன்ற discrete வாத்தியங்களில் இந்த டோன்களைத் தெளிவாக உணரலாம். ஏனென்றால் கீயை அழுத்தினால் டங் அல்லது டிங் என சத்தம் வரும். என் பாமரக் காதுக்குள் tonal changes எளிதில் ஏறும். புல்லாங்குழல், வயலின் போன்ற continuous வாத்தியங்களில் இந்த tonal variation-ஐ எவ்வாறு வாசித்துக் காட்டுவார்கள்?

கூடவே, ட்ரம்ஸ் போன்ற வாத்தியங்களுக்கும் இவ்வாறான இசைக்கோர்வைகள் உண்டா என தெரியப்படுத்தவும்.

எம்முடைய சந்தேகத்தை நீவிர் தீர்த்து வைத்தால் அனைத்து மொழி விக்கிப்பீடியாவையும் உமக்கே சாசனம் எழுதி வைக்கிறேன்.

கூடவே அசினையும் கட்டி வைக்கிறேன்.

ஜெய பாலு (நாகூர் கனி ) said...

"சாலிக்கிராமம் ,அருணாச்சால சாலையில் டீக்கடை வாசலில் டாப்படிக்கும் கூட்டத்தினர் முதல் , பல பத்திரிக்கைகளிலும் "நரசிம்மன்" பற்றிய கிசு கிசு பேசப்பட்டாச்சு, இங்கே நான் சொன்னது முதன் முறையல்ல.
எல்லாப்படங்களிலும் நரசிம்மன் பெயரை போடாத ராசா அவர்கள், சிந்துபைரவியில் இசை உதவி - வி.எஸ்.நரசிம்மன் என போட்டதாக நினைவு(சரிப்பார்க்கணும்)"

நிச்சயமாக இல்லை. ராஜா தனது இசையில் யாரையும் தலையிட விட மாட்டார்.

பாடகர்கள் கொஞ்சம் மாற்றம் செய்து பாடினால் அனுமதிக்க மாட்டார் மறுபடியும் அவர் சொன்னது போல் பாட வேண்டும் என்று நிர்பந்திப்பார். (சகல பெரிய பாடகர்களுக்கும் இதுதான் விதி )

ராஜா இந்த நிலைப்பாட்டால் தான் ராஜாவை விட்டு வைத்திருக்கின்றார்கள் இல்லையென்றால் ராஜாவின் பல செயல்பாடுகளுக்கு ராஜாவை கிழித்து தள்ளியிருப்பார்கள்

நாகூர் கனி said...

audio கசெட் உரிமையை நீண்ட காலத்தின் பின்பே தயாரிப்பாளர்களிடம் இருந்து பகுதியாக ராஜா எடுத்து கொண்டார்.
ஆரம்ப காலங்களில் ஆடியோ கசட் உரிமை தயாரிப்பாளர்கள் வசம் இருந்தது.
தற்போதைய நடைமுறைப்படி இசை அமைப்பாளரும் தயாரிப்பாளரும் ராயல்டியை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் என்ன விகிதம் என்பது தெரியாது.
எந்த படத்தில் இருந்து அந்த உரிமையை பெற்று கொண்டார் என்பது எனக்கு சரியாக தெரியாது.
எக்கோ நிறுவனத்துக்கு தான் உரிமையை ராஜா விற்றார் ஆனால் இதுவரை ராயல்டி கொடுக்கவில்லை என்று வழக்கு போட்டிருக்கின்றார். பத்திரிகையில் பார்த்தது. 25 வருடங்களுக்கு மேல் கொடுக்க வில்லை என்று கேஸ் போட்டிருக்கின்றார். எக்கோ நிறுவனத்துக்கும் ராஜாவுக்கும் குடும்ப உறவு இருப்பதாக தெரியவில்லை. (உறுதியாக எனக்கு தெரியாது )

காரிகன் said...

வவ்வாலுக்கு,
மீண்டும் நான். பதிவின் முதல் பாராவை படித்துவிட்டு கண்ணா பின்னா வென உணர்ச்சிப் பிழம்புகளாக சாமியாட்டம் ஆட்டும் ராஜா கூஜாக்களுக்கு நீங்கள் என்ன உண்மையை சொன்னாலும் விளங்காது. ராஜாவை விமர்சித்தால் அது ஒரு பாவம் என்கிற மனநோயின் பிடியில் இருக்கும் இவர்களிடம் நியாயம் பேசுவதில் பயன் கிடையாது.நீங்கள் இதே தலைப்பில் இன்னும் இரண்டு மூன்று பதிவுகள் எழுதினால் எண்ண ஆகும் என்று கற்பனை செய்கிறேன். அது ஒன்றுதான் இவர்களின் வாயை அடைக்க ஒரே வழி.ஏனென்றால் ராஜாவைப் பற்றி புகழ்ந்தே எழுத வேண்டும் என்று ஒரு தண்டல்காரன் ரேஞ்சுக்கு இவர்களின் போக்கு மாறிப்போயிருக்கிறது.

சிலுக்குவார்பேட்டை சிங்காரி said...

//
.ஏனென்றால் ராஜாவைப் பற்றி புகழ்ந்தே எழுத வேண்டும் என்று ஒரு தண்டல்காரன் ரேஞ்சுக்கு இவர்களின் போக்கு மாறிப்போயிருக்கிறது.
//

உங்களுக்கும், அமுதவனுக்கும் ராசாவுடன் வாய்க்கா வரப்புத் தகறாரு ஏதும் இருக்கா?

ஏன்னா அவரோட இசைய ரசிக்காம எல்லா இடங்களிலும் ராசாவப் பத்தி பத்த வச்சிட்டே இருக்கீங்களே!

அடுப்பு, கேஸ் அடுப்பு said...

**

நிச்சயமாக இல்லை. ராஜா தனது இசையில் யாரையும் தலையிட விட மாட்டார்.
**

யாரோ சொன்னது: VS நரசிம்மனின் உதவி orchestration settings-ல் வெளிப்படும் என்று. நரசிம்மனின் திறமை ட்யூன் போடுவதில் இல்லையோ?. அவரும் தனியாக இசையமைத்ததில் 'கண் சிமிட்டும் நேரம்' படத்தின் 'விழிகளில் கோடி அபிநயம்' மட்டுமே பிரபலமான பாடல்.

ராசாவின் இசை 90-களில் பாரம்பரிய வாத்தியங்களில் இருந்து கீபோர்டுகளுக்கு மாறியபோது அவரின் traditional orchestration திறமை குறைந்துவிட்டதோ என எண்ணுகிறேன். காதலுக்கு மரியாதையில் எல்லாம் சிந்தஸைடு புல்லாங்குழல் ஒலி நாராசமா இருந்தது. மேலும் அவரின் instrument composition அவருக்கு முந்தைய காலத்துக் composition போல நீர்த்து ஒலித்தது.

என் வரையில ராசாவோட கடைசி சூப்பர் ஹிட் 'விருமாண்டி! அதில் ட்யூன், மெலடி, ஆர்கஸ்டேரஷன் எல்லாம் இருந்தது.

ஒன்னு செய்யலாம். ராசா traditional real instrument based ரெக்கார்டிங்க கைவிட நினைச்சா சொந்த ட்யூன் போட சரக்கில்லாத ஆனால் திறமையான programming மெக்கானிக்குகளான ஹாரிஸ் ஜெயராஜ், ஜோஷ்வா ஷூரீதர் போன்றோரை உதவியாளராகக் கொண்டு இசையமைக்கலாம்.

இன்னும் அவரோட ட்யூன் போடும் creativity மழுங்கவில்லை என்றே நினைக்கிறேன்.

கடேசில ராசாவின் *பாடல்களின் ரசிகனான* என்னையும் அருவா தூக்க வச்சிட்டீங்களேடா! (just in humor)!

வெற்றிவேல் said...

அசத்தலான அலசல்... அப்புடியே ஈ அடிச்சான் காப்பி தான் எல்லாருமே!!!

வலைச்சரத்தில் தங்கள் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...
கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்...
வாழ்த்துகள் நண்பா...
http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_6.html

மாதேவி said...

வலைச்சர அறிமுகம் வாழ்த்துகள்.

Anonymous said...

ப்ப்ப்ப்ப்ப்ப்பா யாருப்பா இது? பிரியல..ஒண்ணும் பிரியல...

//டப்பு சிக்கு டப்பு சிக்கு ..டப்பு சிக்கு//

போன பதிவு பின்னூட்டத்திலேயே மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சி சர்தான் .....:-)

---கொங்குநாட்டான்.

காரிகன் said...

"சிலுக்குவார்பேட்டை சிங்காரி said...உங்களுக்கும், அமுதவனுக்கும் ராசாவுடன் வாய்க்கா வரப்புத் தகறாரு ஏதும் இருக்கா?

ஏன்னா அவரோட இசைய ரசிக்காம எல்லா இடங்களிலும் ராசாவப் பத்தி பத்த வச்சிட்டே இருக்கீங்களே!"

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க. உங்களை மாதிரி ஆளுங்க ராஜாவோட இசைய மட்டும் ரசிச்சுட்டு போனா பிரச்சினை கிடையாது. அதை விட்டுடுட்டு எதோ இவர்தான் இசைய கண்டுபிடிச்சவர் மாதிரி ஓவரா பீலா பில்டப் குடுத்தா அது தப்பு இவருக்கு முன்னாடியே நிறைய பேர் இசையில நிறைய சாதனைகள் பண்ணி இருக்காங்க அப்படின்னு சொல்ல வேண்டியது இருக்கு. இதை சொன்னா நான் ஒரு வில்லனா உங்களுக்கு தெரியிறேன். என்ன பண்றது? மத்தபடி எனக்கு ராஜாவோட ஆரம்பகால பாடல்கள் மீது குறை ஒன்றும் கிடையாது. ராஜா ஒரு நல்ல இசை அமைப்பாளர். அதில் நான் மறுப்பு கருத்து கொண்டவன் கிடையாது. ஆனால் அவர் செதுக்கியதெல்லாம் சிற்பம் இல்லை என்பதையும் நான் அறிவேன்.அதுதான் வித்தியாசம்.

சிலுக்குவார்பேட்டை சிங்காரி said...

//உங்களை மாதிரி ஆளுங்க ராஜாவோட இசைய மட்டும் ரசிச்சுட்டு போனா பிரச்சினை கிடையாது. அதை விட்டுடுட்டு எதோ இவர்தான் இசைய கண்டுபிடிச்சவர் மாதிரி ஓவரா பீலா பில்டப் குடுத்தா அது தப்பு //

நான் எங்க சொன்னேன். ஏன் எல்லா ராஜா ரசிகர்களையும் painting with same brush.

//இவருக்கு முன்னாடியே நிறைய பேர் இசையில நிறைய சாதனைகள் பண்ணி இருக்காங்க அப்படின்னு சொல்ல வேண்டியது இருக்கு.//

சொல்லிக்குங்க. யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்ல.

//இதை சொன்னா நான் ஒரு வில்லனா உங்களுக்கு தெரியிறேன். //

இல்லை.

R.Gopi said...

Somma Solla Koodaathu....

Theeyaa velai senju keera Vovvaalu...

ராஜ நடராஜன் said...

பின்னூட்ட கண்ணுகளா!ஹாட் டாபிக் போட்டும் பின்னூட்டம் இன்னும் தள்ளாடுதே!அடிச்சு ஆடுங்கய்யா!

நான் அப்புறமா வாரேன்.

Anonymous said...

தல பதிவு போட்டு பல மாசம் ஆச்சு பொதுக்குழுவ கூட்டினா தான் அடுத்த பதிவு வருமா

பட்டிகாட்டான் Jey said...

mr.vovvol, hope you are sound and good. FYI there is an initiation for this year 'tamil pathvars' meet. As you were intereated... can you please send me/us your suggestions for this year meet to my mail id. Also i requesting you humbly to help us getting some comfortabe place for meeting cheaply with your influence. since i do not know of your mail id, am passing this via comment box. if you have comment modaration no need to publish this. my mail id is : pattikattaan@gmail.com.

p.s. : typing from mobile , no tamil font. sorry for my bad english.

cheers. :-)))

நாய் நக்ஸ் said...

@வவ்வால்....

இருந்த கடுமையான...வேலை,,மனசுமைகளில்....இந்த பதிவை தவற விட்டுவிட்டேன்....பட்டிக்ஸ்...பதிவில் பின்னூட்டம் டிக் பண்ணுவதால் தெரிந்தது...

பதிவை படிக்க முடியலை...பின்னூட்டமும்.....

நான் எல்லாம்...."C" CLASS... ஆட்கள்....

வேண்டுமானால் கவிதை பாடுவோமா?????

எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தாளம் போடணும்....ஆடனும்....

ட்டண்டனக்கு ட்டனக்கு னா......!!!!!!!!



சரி இருகீரா????????

ரிட்டையர் ஆகிட்டீரா??????????????




இப்படி நான் பதிவெழுதக்காரணம் எனக்கும் ராசாவுக்கும் வாய்க்கா வரப்பு தகராறு என நினைத்துக்கொள்ள வேண்டாம், அடியேன் ராசாவின் கோல்டன் ஹிட்ஸ் எனப்படும் 80 களின் திரையிசைப்பாடல்களின் தீவிர ரசிகன், எனது வாகனம், கைப்பேசி என அனைத்திலும் சுமார் 200 அருமையான ராசாவின் பாடல்கள் எப்பொழுதும் ஒலிக்கும்.////////////////

இம்புட்டு வசயஸா ஆகிடுச்சி...?????

(இசை பதிவு என்பதால் "ச" எல்லாம் "ஸ" என்று வருது,,,,உமக்கும் எமக்கும்....)








Anonymous said...

நலமாக இருக்கீரா?????.....

-மாக்கான்

Anonymous said...

What happened to you Mr. Vovs...I saw your comment in Prabh's blog....????!!!

-Maakkaan.

நாய் நக்ஸ் said...


நான் எல்லாம்...."C" CLASS... ஆட்கள்....//////////////


9:07 PM, July 10, 2013
Anonymous Anonymous said...
நலமாக இருக்கீரா?????.....

-மாக்கான்

1:39 AM, July 17, 2013
Anonymous Anonymous said...
What happened to you Mr. Vovs...I saw your comment in Prabh's blog....????!!!

-Maakkaan.///////////////////////////////

வவ்வால் நம்மை எல்லாம் கண்டுக்குப்பாரா...????????

அவர் ரேஞ்சு வேற...வேற...வேற...
நாம அவர் நினைக்குற ரேஞ்சுக்கு வந்தாதான்....அவருக்கு...கண்ணு தெரியும்....!!!!

என்ன நம்மள மாதிரி உலக மஹா பதிவு எல்லாம் புடிக்காது...ஹும்...

அவர் புலியூர் காட்டுசாகையில் முந்திரி (காய்ச்சி)டுச்சான்னு பாக்க போய் இருக்கார்...!!!! வருவார்....

Siva said...

இந்த பூவிலும் வாசம் வரும் tune guitaril கண்ணாடி போட்ட பையன் வாசிக்கிரானே அது இளையரஜா படத்த பாத்துட்டு வாசிக்கிறான? இல்ல ராசா காபி ஆத்திடாரா? இரண்டுக்கும் உள்ள வருட வேறுபாட்டை கூறவும்... sivasdpi@gmail.com

Siva said...

My relative too much praises Raja as a big music creator. If you say about "Inda poovilum vaasam varum" song's year and tat guitarist playing date of year i can argue to my relative about raja's performance.... waiting for tat.i cant find ur mail id in ur profile. so kindly mail the details to my mail id....
sivasdpi@gmail.com

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )





Amudhavan said...

நீங்கள் விருப்பப்பட்டால் தங்களின் ஈமெயில் விலாசம் தரவும்.அது பிரசுரிக்கப்படமாட்டாது.

Anonymous said...

எங்கிருந்தாலும் வவ்வால் அவர்கள் கடைக்கு வரவும்....

-மாக்கான்.

Anonymous said...

///நீர் சொன்னாப்போல கூறுகெட்ட குக்கர்களாகவே இருந்துட்டுப்போறோம்,....எனவே ,அடியேனுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி...///


நலமாக இருக்கீரா?????.....

-மாக்கான்


Anonymous said...

நலமா சகோ ?

உங்கள் மீது இறைவன் அருள் புரியட்டும்.


-உகாண்டா தோழன்

naren said...

வவ்வால்,
இளையராஜாவின் இசையில் சொக்கி மெய் மறந்து பதிவே எழுதறதில்லேன்னு நினைக்கிறேன். இளையராஜாவை விமர்சனம் செய்தால் இதுதான் கதி.

நீங்க ஒரு தளத்தில், வேதத்தை பிராமணர்களுக்காக காப்பாற்றுவதற்காக கடவுள் இருக்கிறார், என்ற ரீதியில் ஒரு கமெண்ட் போட்டீங்க. அது எந்த தளம் லிங்க் ப்ளீஸ். குயிக்.

வவ்வால் said...

நரேன்,

இன்னிக்கு தான் கடைய தூசு தட்டி "தலைவா" விமர்சனம் போட்டு மஜாவா கடைய தொறக்கலாம்னு வந்தால் எனக்கு முன்னாடியே வந்துட்டீர் எதுனா ஈ.ஏஸ்பி தெரியுமா?

எல்லாருக்கும் பொறுமையா பதில் தருகிறேன், இப்போ நரேனுக்கு சொல்லலைனா "குயீக் கன்"நரேன் ஆகி சுட்வார் போலக்கீது அவ்வ்!

# பாகவதரின் ஏதோ ஒருப்பதிவில் சொன்னேன் ,எதுனு தெரியலை, ஆனால் நான் சொன்னதன் மூலம் "WHO WERE THE SHUDRAS?" என்ற அம்பேத்கர் நூலில் ரிக் வேதம் பற்றியப்பகுதியில் உள்ளது.

மனுஷன்,சாமிலாம் பொறக்கும் முன்னே "ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் இருந்து வேதம் வந்துச்சாம்,அதுல இருந்து ஒரு பெண் சாமி(அதிதி) வந்துச்சாம், அப்புறம் அதுக்கு ஒரு துணை வந்து எல்லாம் கூடி தெய்வங்களின் மக்கள் தொகையை பெருக்கி விட்டு இருக்காங்க, அப்பாலிக்கா மனுஷங்களை உருவாக்கினாங்க.

ஒரு தபா வேதம் "ஓம்ல இருந்து வந்துச்சா அதோடா ஓம்கு சோலி ஓவர், அப்புறம் எல்லாம் பிரளயம் வரும் போதும் வேதத்தை சிவன்/விஷ்ணு,/பிரம்மா எனஆவரவர் நம்பிக்கைப்படி ஜெராக்ஸ் எடுத்து கடத்தி வச்சிருந்து, மீண்டும் மனுஷனை உருவாக்கி வேதம் சொல்லி கொடுப்பார்களாம்.

பிராம்மணர் = பிரம்மனை தேடுபவர்.

பிரம்ம +அணர்= பிராம்மணர்.

அணர் -> அணர்தல்=தேடுதல்.

பார்ப்பணர் = எதிர்காலத்தை தேடுபவர்(என்ன நடக்கும்னு பார்த்து சொல்பவர்)

சீயர் என சமஸ்கிருதத்தின் தமிழ் வடிவமாம்.

வெத்தலைல மை போட்டு சொல்லி இருப்பாக போல.

அந்தணர்= அந்தம் + அணர்

பிறப்பின் முடிவு என்னனு தேடும்,அதாவது மோட்சம் தேடுபவர்கள்.

அந்தணன் என்போன் அறவோன், இப்படினு தமிழிலும் சிறப்பாக சொல்ப்படுகிறது, அந்தணர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டியதில்லை!

வவ்வால் said...

கொஞ்ச நாளா காணாம போனாலும்,நம்ம மக்கள் அன்போடு வந்து போயி கடைய பதனமா பாத்துக்கிட்டு இருந்து இருக்காங்கனு நெனைக்கையில ,சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போன வவ்வாலு, சோளம் வெளஞ்சு காத்துக்கிடக்குது வாய்யா வவ்வாலுனு பாடி அழைப்பது போல ஒரு ராசகான அசரீரி கேட்குது,கண்கள் பனித்தது, நெஞ்சம் இனித்தது.

அன்பர்களே,நண்பர்களே , நலம் விரும்பிகளே அனைவருக்கும் சாஷ்டாங்க நமஷ்காரத்துடன் கோடான கோடி நன்றிகள்! பதில்களை நாளை தருகிறேன்!

வவ்வால் ரிடர்டன்ஸ்! ஸ்டார்ட் மிக்யூஜிக்... ஆஹ் டிங்க் சிக்கா டிங் ..டிங்க் சிக்கா டிங்!

Anonymous said...

வணக்கம் வவ்வால்,
welcome back after some nice break. Vavval Returnes!!!! (Reloaded).

//பிராம்மணர் = பிரம்மனை தேடுபவர்.
பிரம்ம + அணர்= பிராம்மணர்.
அணர் -> அணர்தல்=தேடுதல்.//

ஓ....இன்னும் அவுஹ தேடிகிட்டு தான் இருக்காஹலா? இன்னும் கடவுள கண்டுபிடிக்கல. நிலம நம்மல விட ரொம்ப மோசமால்ல இருக்கு. ஒருவேள, தேடி கண்டுபிச்ச பிறகு ஜாதி automatic-கா மாறிடுமோ?

உங்களுக்கு மட்டும் google-காரன் தனியா special service provide பண்றாங்களா? இல்லாட்டி உங்கள மாதிரி எனக்கு தேட தெரியலயா? அப்ப நானும் கூகிளணர் தான் (Google + அணர்). நாங்களும் புதுசு புதுசா சாதிய கண்டுபிடிப்போம்ல...அவ்......

Anonymous said...

Welcome back vovs!!!!!!!!!!....

-Maakkaan

Anonymous said...

என்னாச்சு தல யார்னா கடத்திடானுங்களோனு மெர்சலாய்டோம் anyway welcome back
-
வவ்ஸ் இணைய நற்பனி மன்றம்

srinivasan said...

இசை ஏழு சுரங்களுக்குள் அடக்கம் என்பதை தவிர மற்றபடி இசையை பற்றி ஏதும் தெரியாது .இவ்வளவு விளக்கமாக எழுதி இருக்கிறீர் .பாடல்களை கேட்டால் அவர் அமைத்த இசை போல தான் இருக்கிறது.

இருக்கிற பின்னுட்டங்களை பார்த்தால் ஓவ்வொருவரும் ஒரு பதிவு போட்ட மாதிரிதான் இருக்கு.இவ்வளவு திறமை வைத்து கொண்டு அரசியலில் இறங்கி ஏதொவது மக்களுக்கு செய்யலாமே !!!

Anonymous said...

வவ்வால் ரிடர்டன்ஸ்!..........


ஹையா!!!!ஹையா!!!........ஜாலி!! ஜாலி!! ஜாலி!!


------கொங்கு நாட்டான்

காரிகன் said...

வவ்வால்,
சீக்கிரம் வாங்கப்பு, உங்ககிட்ட நிறைய பேசணும்.

நாய் நக்ஸ் said...

போதும் வவ்வால்...தூங்கினது....


அல்டிமேட் ரைட்டர்கூட இமயமலை பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா???!!!

அடுத்த இலக்கியம் படைக்க வாரும்...

சியர்ஸ்....

Anonymous said...

போதும் வவ்வால்..போதும்..... இனி பொறுக்க முடியாது....பொங்கிருவோம்...!!!!!!!!!!!!

------கொங்கு நாட்டான்

Anonymous said...

வவ்வால்,
இப்போ நீங்க prepare பண்ணிக்கிட்டு இருக்கிற பதிவு ரொம்ப பெருசா இருக்கும் போல....நீங்க ஒரு மாசம் prepare பண்ணி போடுற பதிவே பக்கம் பக்கமா இருக்கு. இதில வேற நீங்க நாலு மாசமா pannikittu இருக்கீங்க. ஐயா சாமி, அவ்வளவு பெருசெல்லாம் என்னால படிக்க முடியாது. சீக்கிரம் சின்னதா ஒன்ன எழுதுங்க.