Monday, January 07, 2013

கற்றது தமிழ்-4.


(அய்யோடா ....என்னையும் தமிழ்படிக்க சொல்வானோ?)

தமிழில் பிற மொழிச்சொற்களை தவிர்ப்பது, மேலும் பிழையாக திரிந்து விட்ட சொற்களை திருத்துவது என பலர் இணையத்தில்  முயற்சிக்கிறார்கள்(hi...hi) ,மிகவும் நல்ல முயற்சி,ஆனால் சிலர் பிழையை திருத்துவதாக நினைத்துக்கொண்டு  புதிய பிழைகளை உருவாக்கவும் செய்கிறார்கள், அப்படிப்பட்ட சில  பிழையான பிழை திருத்தங்கள் (அப்படினு நினைக்கிறேன்)என் கண்ணில் சிக்கின ,அவற்றை என் பங்கிற்கு கொஞ்சம் அலசி முடிந்தளவு  சீராக்கும் முயற்சியே இப்பதிவு.

சில்லரை:

சிறிய அளவிலான ஒரு தொகையை,பணத்தினை சில்லரை என்பார்கள், ஆனால் சில்லரையில் "ரை" என சிறிய "ர"வராது, "றை" என பெரிய "ற" பயன்ப்படுத்த வேண்டும் என சிலர் சொல்கிறார்கள், ஆரம்பத்தில் நானும் "சில்லறை என்றே பயன்ப்படுத்தினேன். ஆனால் அதன் பொருள் வேறாக இருப்பதை பின்னர் கண்டறிந்தேன்.

சில்லறை தான் சரி என்பவர்களின் வாதம் என்னவெனில்,

சில்லரையை , சில +அரை ,என பிரித்து ,சிலப்பாதிகள் என பொருள் வருகிறது இது தவறு ,

ஆனால் அறை என்றால் பகுதி எனவே

சில +அறை =சில்லறை

என்பதே சரி என்கிறார்கள்.

ஆனால் அறை என்றால் ஆங்கிலத்தில் ரூம் (Room)என சொல்லப்படுவதை குறிக்கும்,  எனவே சில +அறை என்றால் "Few rooms" ஆகிவிடுமே :-))

மேலும் "சில்" என்றால் குளிர்ந்த எனப்பொருள் வரும், அப்படி எனில் சில்லறை என்பதற்கு குளிர்ந்த அறை ,"Airconditioned Room" அல்லது cold room, என சொல்வதாகிவிடுகிறதே?

சில்லரை என்ற சொல் தமிழில் மட்டும் இல்லை பல மொழிகளிலும் இருக்கிறது , வடமொழியில் சில்லர் வியாபார் (chillar vyapar,chillar=coin)என சில்லரை வியாபாரியை சொல்கிறார்கள்.

ஸ்பெயினில் sillar என்றால் ஒரு துண்டு கல் எனப்பொருள். chillara = making noise,நாணயங்கள் ஒலி எழுப்புவதால் சில்லரை நாணயம் என சொல்வதும் புழக்கத்தில் வந்திருக்கலாம். சல்லிக்காசு என அக்காலத்தில் நடுவில் ஓட்டை உள்ள நாணயத்தினை சொல்வதுண்டாம், சல்லிப்பைசா கிடையாது என பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. காசு என்பதில் இருந்து தான்  cash என்ற சொல் உருவானது என்றும் சொல்கிறார்கள்.

ஆங்கிலத்தில் "silly" என்றால் அற்பமான என்ற பொருள் உள்ளதையும் கவனத்தில் கொள்ளலாம்,எனவே உலக அளவில் மொழிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவே இருந்துள்ளது, பின்னர் தனித்தனியே வளர்ச்சியடைந்து தனி வடிவம் பெற்றிருக்கலாம் என பல மொழியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

எனவே சில்லர் என்ற சொல் பல மொழிகளிலும் சிறிய அளவை(பொருள்) குறிக்க பயன் படுகிறது எனலாம்.

தமிழிலும் "சில்லு" என்ற சொல் சிறிய, துண்டான ஒரு பொருளை குறிப்பதாக பயன் பாட்டில் உள்ளது.

உடைந்த பானை துண்டு, கூறை வேயும் மண் ஓட்டின் துண்டுப்பகுதியை எல்லாம் "ஓட்டாஞ்சில்லு" என்போம், அதனை வைத்து கட்டம் போட்டு ஆடும் விளையாட்டுக்கு "பாண்டியாட்டம்" என்று கூட பெயருண்டு.

தேங்காயை சிதற விட்டால் கிடைக்கும் சிறிய துண்டினை தேங்காசில்லு என்று சொல்வதுண்டு. அதை பொறுக்குபவர்களை தேங்கா சில்லு பொறுக்கி என அழைப்பதுண்டு ,அமைதிப்படை படத்தில் சத்யராஜ் தேங்காசில்லு பொறுக்கியாக வந்து அரசியலில் விசுவரூபம் எடுப்பார் :-))

எனவே சில்லு என்றால் சிறிய அளவினை குறிப்பது என்பது தெளிவாகிறது.

அரை என்றால் பாதி என்பது அனைவருக்கும் தெரியும், எனவே ரொம்ப சிறிய அளவிலான ஒரு தொகை என்பதை குறிக்க சல்லி,சில்லு ஆகியவை வழுவி சில்லு +அரை = சில்லரை என புழக்கத்தில் வந்திருக்கலாம்.

ஒரு வேலை பாதியில் நின்றுவிட்டால் "அரை" வேலை நடந்திருக்கிறது என சொல்லாமல் அரையும் குறையுமா நடந்தது என்பது வழக்கம், முழுவதுமாக முடியவில்லை என்பதை அழுத்தமாக சொல்ல கூடுதலாக "குறை" என்ற சொல்லையும் சேர்த்துக்கொள்வது போல, எனவே பெரிய தொகை இல்லை ரொம்ப சிறிய தொகை அதுவும் சிறிய அளவிலான நாணயங்களாக என சொல்ல "சில்லரை காசு"என்ற பதம் பயன்படுத்தப்பட்டு ,புழக்கத்தில் வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

எனவே சிறிய அளவிலான தொகைக்கு பொருட்களை விற்பதை ,சிறு வணிகம் அல்லது சில்லரை வணிகம் என்பது சரியானதே.

அருகாமை:

பக்கத்தில் இருக்கும் ஒன்றை அருகாமையில் உள்ளது என சொல்வதுண்டு,ஆனால் அச்சொல் தவறானது , எதிர்மறையான பொருளினைக்கொண்டது என சிலர் சொல்கிறார்கள்.

அதற்கு அளிக்கும் விளக்கம் என்னவெனில்,

ஒன்றை தெரிந்து இருப்பது அறிவது, தெரியாமல் இருப்பது அறியாமை,

அருகு என்றால் பக்கத்தில் இருப்பது, அருகாமை என்றால் பக்கத்தில் இல்லை எனவே அருகாமை என்றால் தொலைவில் உள்ளது,அதனை பக்கத்தில் இருக்கு என சொல்லப்பயன்ப்படுத்தக்கூடாது என்கிறார்கள்.

ஆனால் "அருகாமை" என்ற சொல் சரியான தமிழ் சொல் என தமிழ் இணைய பல்கலையும், சென்னைப்பல்கலை அகரமுதலியும் சான்றுரைக்கின்றன.

அப்படி எனில் அருகாமை என்ற சொல் சரியா,தவறா?

அருகு என்ற சொல்லின் பல வடிவங்களை காண்போம்.

அருகல்,அருகன்,அருகர்,அருகிய,அருகுதல்,அருகாமை,அருகாண்மை.

http://www.tamilvu.org/slet/servlet/lexpg?pageno=130&x=0&y=0

அருகு என்றால் குறைந்து வருவது, சுருங்கி வருவது என்றப்பொருளில் பயன்ப்படுத்தப்படுகிறது.,

சிட்டுக்குருவிகள் நகரத்தில் அருகி வருகின்றன என சொல்வதுண்டு.

தூரம் குறைவாக இருப்பதை அருகில் என சொல்லலாம் என்பது சரியே ஆனால் அதனை வைத்து அருகாமை தவறு என சொல்ல முடியாதே.

அறிவின் எதிர்ச்சொல் அறியாமை  ,மை,ஆமை என முடிவது எதிர்ச்சொல்லை குறிக்கும்னு வேற ஒரு விளக்கம் கொடுக்கிறார்கள்.

அப்படி எனில் ,

இல் என்றால் இல்லை எனப்பொருள்,

தமிழில் "இல்பொருள் உவமையணி "என ஒன்று உண்டு.

அப்படி எனில் இல்லைக்கு எதிர்ச்சொல் இல்லாமை ஆகிவிடுமா?எதிராகப்பொருள் அளிக்க வேண்டும், அதாவது இருக்கு என :-))

ஆனால் இல்லாமை என்றால் இல்லை என்று தான் பொருள் ,அப்படி எனில் அருகாமை என்றால் மட்டும் அருகில் இல்லை என எதிர்மறையாக எப்படி பொருள் வரும்?

"மை" என்ற விகுதி எதிர்ப்பொருளை அளிப்பதல்ல, "மை" என்றால் உடையது, அங்கு உள்ளது என சுட்டப் பயன்படுவது.

உதாரணம்.

கறுப்பு , கரிய நிறமாக இருப்பது ,இதனை "கறுமை" என்பார்கள்.

ஆ+மை என விகுதியில்  சேர்த்தால் எதிர்மறைப்பொருள் தரும் என்றால்,"இல்= இல்லை"க்கு எதிர்மறையாக இல்லாமை வர வேண்டும் அப்படியும் வரவில்லை.

ஒரு சொல்லின் விகுதியில் "ஆ" சேர்ப்பதால் எதிர்மறை சொல்லாக்கலாம் என தமிழில் ஒரு விதியுண்டு ஆனால் அதுவே பொதுவிதியன்று.

கனி= பழம்

கனி +ஆ= கனியா என்றால் பழமில்லை எனலாம், ஆனால் அது மட்டுமே எதிர்ச்சொல் என ஆகி விடாது.ஏன் எனில் காய் என தனித்த எதிர்ச்சொல் ஒன்றும் உள்ளது.

ஹி..ஹி ...அப்போ காய்+ஆ = காயா என்றால் பழம் ஆகிடுமா?

காயா(த) கானகம் என்றால் வெயில் படாத காடு என்று பொருள் வரும்!

ஒரு சொல்லுடன் ஆ,ஏ,ஓ என விகுதியில் சேர்ப்பதால் வினா,வியப்பு போன்ற சொற்களை உருவாக்கலாம்னு வேற தமிழ் இலக்கணம் சொல்லுதே !!!

இலக்கிய ரீதியாக  கனியா என சொல்வதை பொதுமைப்படுத்தி ஒரு சொல்லின் விகுதியில் " ஆ +மை" சேரும் போது எதிர்மறைச்சொல் ஆகிவிடும் என அருகாமைக்கும் சொல்வது சரியல்ல,எப்படி எனப்பார்ப்போம்.

அருகு என்றால் பக்கமாக இருப்பது, அருகாமை என்றாலும் பக்கத்தில் இருப்பதே,

அருகு என்பது வினைச்சொல் , அதற்கு வினைப்பெயர்ச் சொல் "அருகம்" ஆகும்.



அருகம்புல் என சொல்வது கூட இதனால் தான் ,அருகம்புல் ஒன்றோடு ஒன்றாக தொடர்ச்சியாக ,நெருக்கமாக,கிளைத்து வளரும் புல். அருகம்புல் ஒரு இடத்தில் வளர்ந்து விட்டால் அழிக்கவே  முடியாது , ஒரு புல்லின் கணுவில் இருந்து இன்னொரு புல் முளைத்து "வலை"ப்போல பரவி விடும். அதாவது அருகருகே புல் முளைத்துக்கொண்டே போகும், அழிக்க இயலாத புல் அருகம் புல்.

இப்படி வலைப்போல அருகருகே உருவாகும் புல் என்பதால் மண் அரிப்பு உள்ள இடங்களில் இப்புல்லினை வளர்ப்பார்கள்.

ஏரி ,குளக்கரை, பாலங்கள் கட்டிய இடங்களின் சரிவில் ,மழையால் மண் அரிக்காமல் இருக்க ,அருகம்புல்லினை நடவு செய்வது வழக்கம்.

தொடர்பு அற்றுவிடாமல் இருக்க வேண்டும், உறவு நிலைத்து நிற்க வேண்டும் என்பதனை சூசகமாக சொல்லவே கல்யாணம், இன்ன பிற சடங்குகளின் போது அருகம்புல்லினை பயன்படுத்துகிறார்கள், அதே போல வாழை மரம் கட்டுவதும், வாழையடி வாழையாக வம்சம் தொடர வேண்டுமாம்!

ஒரு புல்லுக்கு கூட எப்படிலாம் யோசித்து பெயர் வைக்கிறாங்க பாருங்கய்யா :-))

எனவே ,

அருகாமை=அருகம்+ அமை

புணர்ச்சி விதிகளின் படி, ஒற்றெழுத்து செல்ல ,வரு மொழியில் உள்ள "அ" நிலை மொழியில் உள்ள "க"உடன் சேர்ந்து நெடில் "கா"ஆகி ,அருகாமை ஆகிவிடுகிறது.

அருகில் அமைந்துள்ள இடம் என்பதை அருகாமை இடம் எனலாம்.

இது எப்படினு இன்னும் புரியவில்லை எனில் ,

வெங்கடாஜலம் என்பதையோ ,விருத்தாஜலம் என்பதையோ பிரித்து எழுதிப்பாருங்கள் :-))

********

முயற்சிக்கிறேன்:

முயற்சி =effort.

இது ஒரு வினைப்பெயர்ச்சொல் , ஒரு செயலை செய்ய முற்படுவதை  முயற்சிக்கிறேன் என சொல்வார்கள்.

இதுவும் தவறு என்கிறார்கள், சரி எப்படினு பார்ப்போம்.

முயல் என்பது தான் வேர்ச்சொல் எனவே முயல்கிறேன் என சொல்ல வேண்டும் முயற்சிக்கிறேன் என்றால் முயல் சிக்கப்போகுது என சொல்வதாகும் என்கிறார்கள்.

அடடா இப்படிலாம் கூட பிரிச்சு பொருள் உண்டாக்கலாமா :-))

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்.

என திருக்குறளிலும் முயற்சி என்ற சொல் உள்ளது.

முயற்சி என்ற வினைப்பெயர்ச்சொல்லின் வழக்கு  வடிவம் தான் முயல் என சென்னைப்பல்கலை அகரமுதலி சொல்கிறது.

http://www.tamilvu.org/slet/servlet/srchlxpg?editor=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&key_sel=Tamil&GO.x=38&GO.y=15

 முயற்சி என்பது தனிச்சொல் , அதனை முயற்சிக்கிறேன் என எழுதினால், முயல் +சிக்குறேன் என பிரிக்க கூடாது,

தட்டு, தட்டுகிறேன்,

ஒட்டு , ஒட்டுகிறேன்,

பாடு ,பாடுகிறேன்

என்பது போல முயற்சிக்கிறேன் எனவும் சொல்லலாம்.

முயல் என்பது ஒரு தனிப்பெயர்ச்சொல், முயல்கிறேன் என சொன்னால் முயலாக போகிறேன் என சொல்வதாகுமே :-))

மேலும் , முயற்சி செய்யாமல் இருப்பதை முயல்+ஆமை=  முயலாமை என உதாரணம் காட்டுகிறார்கள்.

அயல் என்றால் வேறு, அடுத்த எனப்பொருள்.

வேற்று நாட்டினை அயல்நாடு என்பார்கள்.

அப்போ வேற்று நாட்டுக்கு போகாமல் இருப்பதை "அயலாமை" எனலாமா?

அயர்ச்சி = சோர்வு.

அயர் +ஆ =அயரா, அயராது,அயராமை என எதிர்மறையிலும் சொல்லலாம்.

அயர்ச்சி  என்பதன் எதிர்ச்சொல் எழுச்சி ,எனவே எழுச்சியுடன் என சொல்லிவிட்டாலும் அயராமை என்ற பொருள் கிடைக்கிறது, எனவே ஒரு சொல்லுடன் ஆ+மை என சேர்த்து உருவாக்குவது எல்லாம் எதிர்ச்சொல் என்ற அடிப்படையில் எல்லா சொல்லுக்கும் பொறுத்த தேவையில்லை.

முயற்சிக்கு முயல் தான் வேர்ச்சொல் என கண்டுப்பிடித்தது போல அயர்ச்சிக்கு அயல் தான் வேர்ச்சொல், என கண்டுபிடித்து அயலாமை என்றால் சோர்வின்மை என சொன்னால் என்னாவது :-))

கடல் , அது இல்லை என  எதிர்க்கூற்றாக சொல்ல கடல்+ஆ+மை =கடலாமை என சொன்னால் கடலில் இருக்கும் "tortoise" வந்து கடிச்சிடாதா :-))

(கனி= Fruit (n), கடல்=sea(n) , எனவே கனிக்கு எதிர்ச்சொல் கனியாமைனு சொல்வதன் அடிப்படையில் இவ்வுதாரணம், மக்கள் பெயர்ச்சொல்லுக்கு ஆ+மை சேர்த்தால் எதிர்மறை ஆகாது என இலக்கணம் சொல்லக்கூடும்  என்பதால் இந்த பின் ஜாமீன்)

------------------------

கோர்த்து:

கோர்த்தல்,கோர்வை என்றால் ஒன்றோடு ஒன்று சேர்ப்பது.தொடர்ச்சியாக இருப்பது.

ஆனால் அப்படி எழுதுவது தவறு ,கோவை என்ற சொல்லின் அடிப்படையில் ,"கோத்து"என்பதே சரியான சொல்  என "ர்" அ விட்டுவிட சொல்கிறார்கள், ஆப்பீசர்ஸ் இங்கே யாரு "ர்" அ விட்டாங்கன்னு கவுண்டர் போல தான் கேட்கணும் :-))

கோர்வை என்பதன் வழக்கு சொல் தான் கோவை ,அதனடிப்படையில் சொல்லப்படும் கோத்து என்பதும் வழக்கு சொல்லே.

கர்நாடக இசையில் ஒரு இசைக்குறிப்பை மூன்று முறை சொல்வதை கோர்வை என்கிறார்கள்.

“Korvai” is a Tamil word used in South Indian
Carnatic music to designate a pattern or composition that is usually
played three times."

அதனால் தான் இசையமைத்து வாசிப்பதை இசைக்கோர்வை என்கிறார்கள். பல இசைக்குறிப்புகள் தொடுக்கப்படுகின்றன என்பதை கோர்வை என்ற சொல் குறிக்கின்றது.

ஒன்றாக தொடுப்பதை கோர்வை எனலாம் ,இதனை வழக்கில் கோவை எனவும் சொல்லலாம், ஆனால் இலக்கணப்படி கோர்வை என்ற சொல்லே சரியானது.

எனவே கோர்ப்பது என்பதுவும் சரியான சொல்லே.

நான்மணிக்கோவை,ஆசாரக்கோவைனு நூல்கள் உள்ளதால் கோவை சரியான சொல் என்கிறார்கள்.

சில்லரை கோர்வை என்ற நூலை டி.எஸ்.ராமானுஜம் அய்யங்கர் எழுதி இருக்கிறாரர்னு கூகிள் வேற காட்டுது,அப்போ கோர்வை என்ற சொல் இலக்கிய ரீதியாகவும் இருக்கு என தெரிகிறது.

சரம் என்ற சொல் சர்த்தல் என்ற சொல்லில் இருந்து உருவானது.

சேர் - சேர்த்தல்,சேர்வை.

போர்- போர்த்தல் ,போர்வை.

பார்- பார்த்தல்,பார்வை.

வியர்- வியர்த்தல்,வியர்வை.

எல்லாவற்றிலும் "ர்" விட்டு சொன்னால் கொச்சையான வழக்கு மொழி தான் கிடைக்கும்.
--------------

உண்மை:

உள் +மை =உண்மை.

உள் என்றால் உள்ளே ,உள்ளம் ,ஆன்மா, இதயம் என்பதை எல்லாம் குறிக்கும்.

மை என்றால் இருப்பது.

அதாவது ஒன்றின் உள் பொதிந்து இருப்பது உண்மை. உள்ளதை உள்ளபடியே சொல்வதே உண்மை எனலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D

உண்மை என்பதற்கு ஆங்கிலத்தில்  "Fact" என பலரும் நினைத்துக்கொள்வதுண்டு. ஆனால் இலத்தினீல் ஃபேக்ட் என்றால் செய்,செய்வது,செயல்படுவது,

 Fact= action,from Latin word factum "event, occurrence," lit. "thing done,".செயற்கையாக செய்யப்படுவதை "Factitius" என்பார்கள். எனவே தான் தொழிற்சாலைக்கு Factory  என்று பெயர், மனிதன் உற்பதி செய்வதை Manufacture என்கிறோம்.

அப்புறம் எப்படி உண்மைக்கு ஃபேக்ட்  எனப்பெயர் வந்தது ?

Fact =செய்யப்பட்டது ,  அதாவது செய்யப்பட்ட செயலில் என்ன செய்தார்கள் ,எப்படி செய்தார்கள் என்பதை கவனிக்க ,பார்க்க முடியும், மீண்டும் செய்து பார்த்து இப்படித்தான் நடந்தது என நிறுவ முடியும். எனவே நடைப்பெற்ற ஒரு செயலில் என்ன நடந்தது என  கண்டுப்பிடிப்பதை "Fact finding" என சொல்வதால் , காலப்போக்கில் ஃபேக்ட் என்பது உண்மை என்ற வழக்கில் ஆங்கிலத்தில் புழங்கலாயிற்று.
------------------------------------
பின் குறிப்பு:

இணையத்தில் வாசித்ததன்  அடிப்படையில் எனக்கு எழுந்த அய்யங்களை மய்யமாக வைத்து எனக்கு புரிந்த அளவில் இப்பதிவு, சரியான விளக்கம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை, யாரேனும் விளக்கினாலும் தன்யனாவேன்,நன்றி!
--------------------------

14 comments:

சார்வாகன் said...

வணக்கம் நண்பா,
1. அதென்ன 53ன் தத்துவ தாத்பரியம் ஸ்வாமி?.நம்க்கு இப்போது வலம் இருந்து இடம் படிக்கும் பழக்கம் வந்த படியால் 35 என்றால் சரியே!! ஹி ஹி

2.அருகாமையின் பொருள் நோக்கி அருகி சென்ற விதம் அருமை.
நெருக்கம் என்று பொருள் வருமா?

3./கடல் , அது இல்லை என எதிர்க்கூற்றாக சொல்ல கடல்+ஆ+மை =கடலாமை என சொன்னால் கடலில் இருக்கும் "tortoise" வந்து கடிச்சிடாதா :‍))/
ஆமை சேர்ப்பது பற்றி விளக்கம் சரி.ஆமையை உணவில் சேர்ப்பது பற்றி ஹி ஹி

4.கோர்த்து விடுவது நமக்கும் பிடிக்கும் ஹி ஹி

5.ஃபேக்ட் என்றால் தமிழில் சான்று எனலாமே!!. உண்மையில் பலவகை அறிவொளி அய்யா சொன்னாங்க! ம்ம்ம்ம்ம்ம்ம்

கலக்குங்க!!

நன்றி!!

Anonymous said...

பசும்பால் என்பது தவறு, பசுப்பால் என்பதே சரி என்கிறார்களே? இது உண்மையா? அட்வான்ஸ் நன்றி!

சரவணன்

வவ்வால் said...

சகோ.சார்வாகன்,

வாங்க,நன்றி!

பரிணாம குருவின் பார்வை தீட்சண்யமாக இருக்கே, 53 ஐ கவனிச்சுட்டாரே...ஹி...ஹி... 53 கிலோ அல்வான்னு சொல்லாம சொல்லுறாங்களாம் :-))

அரபியக்காற்று வீச்சின் தாக்கம் அதிகமாயிடுச்சு போல வலமிருந்து இடமா எல்லாம் படிக்க ஆரம்பிச்சீட்டிங்களே...அவ்வ்வ்!

# ஆமையை உணவில் சேர்ப்பதைப்பற்றி ஆமையிடம் தான் கேட்கணும், ஹலால் உணவான்னு சு.பி சுவாமிகளிடம் கேட்கணும் :-))

ஆமைக்கு ஏன் ஆமைனு பெயர் வந்ததுன்னு அடியேன் ஒரு ஆய்வு செய்திருக்கேன் (ஹி....ஹி இது போல நிறைய செய்வேனாக்கும்)

ஆ+மை= ஆமை.

ஆ என்றால் பசு,ஆன்மா,உயிர்.

மை என்ற விகுதிக்கு இருப்பது ,உடையது எனப்பொருள்.

அதாவது உயிருள்ள ஒன்று ஆமை :-))

ஆமை அசையாமல் அடங்கி கிடப்பதை பார்த்து கல்லுன்னு நினைச்சப்போ ,அதுக்கு உயிர் இருக்குன்னு யாரோ கண்டுப்பிடிச்சு ஆமைனு(உயிருள்ளது) சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன் :-))

ஹி...ஹி எப்பூடி :-))

#அறிவொளி அவர்களின் பட்டி மன்றம் எல்லாம் தொ.காவில் பார்ப்பதுண்டு பல உண்மையான உண்மைகளை சொல்வார்!!!
----------------
சரவணன்,

வாங்க,நன்றி!

பசும்பால்= பசுமை +பால்

பால் பச்சை நிறமாக இருக்குன்னு சொல்வதாகிவிடும். ஆனால் பச்சத்தண்ணி என சொல்வது போல கொண்டால் ,காய்ச்சாத பால் என சொல்லலாம். ஆனால் பசு,எறுமை,ஆடு என எதன் பாலாகவும் இருக்கலாம்னு ஆயிடும்.

பசும்பொன் என்பது போல கொண்டால் தூயப்பால் என சொல்வதாக கொள்ளலாம்.இங்கும் எதன் பால் என குறிக்கவில்லை என ஆகிவிடும்.

பசுப்பால்= பசுவில் உள்ளப் பால்

பசுக்கொடுக்கும் பால் என பொருள் வரும்.

பசு பால் = பசுவின் பால் - பசுவை நோக்கி எனும் பொருளாகிவிடும்.

முதல் சொல்லின்(நிலை மொழி) இறுதியில் "உ" ஒலியுடன் வருவதை குற்றியலுகரம் என்பார்கள், "உ" ஒலிக்கு எவ்வளவு அழுத்தம் என்ன நிறைய வேறுபாடுகள் வேற இருக்கு, "உ" ஒலி முழுதாக சொன்னால் முற்றியலுகரம் ,எனவே உச்சரித்து பார்த்து "ஒற்று எழுத்துப்போட்டுக்க வேண்டியது தான்.

இதனை தோராயமா தான் சொல்லி இருக்கேன், அப்புறமா சரிப்பார்த்து சொல்கிறேன்.

ஹி...ஹி எனக்கு இந்த ஒற்றெழுத்து தான் ரொம்ப படுத்தும் :-))
-------------------------

Unknown said...

கறுப்பு , கரிய நிறமாக இருப்பது ,இதனை "கறுமை" என்பார்கள்.////////////////////////////
தலைவரே!

கருப்பா? இல்ல கறுப்பா?

Unknown said...

பசும்பால் என்றால் பசுமை + பால் பச்சை நிறமான பால் என்று அர்த்தம் வருமா..?

பசும்பொன் என்றால் பச்சை நிறமான தங்கம் என்றா வரும்?பசுமையான(தூய்மையான)சொர்ணம் என்றுதானே அர்த்தம். அப்ப பசும்பால் தூய்மையான பால் என்றுதானே கொள்ளலாம்...!

பசுப்பால் என்பதற்கு மாட்டுப்பால்,ஆவின்பால் என்ச் சொல்லலாம்.
பல பசுக்களின் பாலை பசுப்பால் எனலாம் ஆனால் ஒரு மாட்டின் பாலை அப்படிக் கூற இயலாது!பசும்பால் என்றுதான் கூறமுடியும்..!
நான் பெரிய தமிழ் புலவன் அல்ல தலைவரே சில சந்தேகம் அவ்வளவே!

வவ்வால் said...

வீடுஜி,

வாங்க,நன்றி!

கருப்பு, கறுப்பு என இரண்டு வகையிலும் சொல்லலாம்.

கருப்பு என சொல்வதில் உள்ள சிக்கல் என்னவெனில், கரும்பு என்பதை இலக்கிய மொழியில் அசை, எதுகை,போன்றவற்றினை கருதி "கருப்பு" எனவும் சொல்வதுண்டு எனவே கரும்பை சொல்கிறோமா, நிறத்தை சொல்கிறோமா என குழப்பம் வராமல் இருக்க கறுப்பு என சொல்வது நல்லது.

# கொஞ்சம் பொறுமையா தான் படிக்கிறது,

//பசும்பொன் என்பது போல கொண்டால் தூயப்பால் என சொல்வதாக கொள்ளலாம்.இங்கும் எதன் பால் என குறிக்கவில்லை என ஆகிவிடும்.//

பசும்பொன் என்பதை தூய்மைக்கு தானே உதாரணம் காட்டியிருக்கேன்.

தூய பால் என்று மட்டுமே சொல்வதாகும் ஆனால் அது ஆட்டுப்பாலா, மாட்டுப்பால ,ஒட்டகப்பாலா என அடையாளப்படுத்தாது என சொல்லி இருக்கிறேன்.

பச்சத்தண்ணி என்றால் தண்ணீரின் நிறம் பச்சைனு பொருளில்லை, கொதிக்க வைக்காத( வேக வைக்காமல் பச்சையாக) உள்ளது என பொருளில் பயன்ப்படுத்துகிறோம்.

பசும்பால் =பசுமை+ பால்=பச்சப்பால் = கொதிக்க வைக்காத பால்!

பசுஞ்சோலை என்ற சொல் கேள்விப்பட்டதில்லையா?

//பல பசுக்களின் பாலை பசுப்பால் எனலாம் ஆனால் ஒரு மாட்டின் பாலை அப்படிக் கூற இயலாது!பசும்பால் என்றுதான் கூறமுடியும்..!//

பசுப்பால் என்றால் பல மாட்டின் பாலா :-))

அது எப்படி பன்மை தொகையாகும்?


மேலும் ,ஆடு,மாடு, பறவை ,காடு,மரம் ஆகியவற்றை ஒருமை ,பன்மை என இரண்டு இடத்திலும் அப்படியே பயன்ப்படுத்தலாம்.

மாடு வந்தது - ஒருமை

மாடு வந்தன - பன்மை.

மாடுகள் என எழுத தேவையில்லை,ஆனால் வழக்கில் "கள்" சேர்த்து பன்மைக்கு இன்னும் அழுத்தம் தருகிறோம் :-))

ஆனால் நீங்க புது விதமா "பசுப்பால்" என்றால் பல மாட்டின் பால் என சொல்லுறிங்க,நீங்களே விளக்கினா சரிதேன்!
--------------------

தமிழ்நாட்டில் பொறந்து, தமிழ்ப்பதிவு வச்சிருந்தாலே போதும் தமிழ் புலவன்னு சொல்லிகிடலாம், நீவீர் தமிழ் புலவனே(ரே) தான்,ஹி...ஹி... ஏன்னா நானும் தமிழ் புலவனல்லோ :-))

? said...

பதிவு பூராவும் "சிலர் சொல்கிறார்கள்" அப்படின்னு எழுதியிருக்கறீங்களோ... யாருங்க அந்த சிலர்? நமக்கு தமிழ்ல தெரிஞ்ச எல்லாத்தையும் தப்புன்னு சொல்லீடுவாங்க போலயிருக்குதே. நாம பேசுற தமிழுக்கு பேசாம வேற பெயர் வைச்சிடலாம்!!

பதிவுக்கு சம்பந்தமில்லா விடயம்ஸ்...

1.நீங்க சொன்னா மாதிரியோ லோகம் டிடிஎச் ஒளிபரப்பிலிருந்து ஜகா வாங்கீடுச்சு போலிருக்குதே. உம்ம வாய்க்கு சக்கரைதான் போடனும். மிஸ்டர் ராசநடையின் கருத்து அறிய ஆவல்.

2.சகோதரன்னு சொல்லறீங்களே, சொத்து பிரிச்சு கொடுப்பீங்காளான்னு கேளுவி வந்ததும் எல்லார்த்தையும் நண்பர்களாக பதவி இறக்கம் செய்துவிட்டார் போலிருக்கே, சார்வாகன். விவரமானவருதான் :)

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

அந்த சிலரை தெரியாதா ,அவாள் தான் தமிழை வாழ வச்சுண்டு இருக்கா :-))

இணைய தொல்காப்பியர்கள், அவாள் தமிழ் மாசுப்படாமல் காக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் :-))

நாம பேசுறதுலாம் தமிழே லேது, நாம பேசுறதுலாம் நீச பாஷை ,தேவ பாஷை பேசுறவாள் பேசுவதே தமிழ், கிழக்கப்பார்த்து சாஷ்டாங்கமா நமஸ்கரித்தால் ,தமிழை பிழையின்றி பேச சரஸ்வதி வரம் அருள்வாள் :-))

நான் கூட குழந்தையா இருக்கிறப்போ தமிழில் பேச முடியாம தான் இருந்தேன் ,அப்போ சரஸ்வதி சபதம் படம் டீவில ஓடிச்சா அத பார்த்தவுடனே தமிழில் பேச ஆரம்பிச்சுட்டேனாம் ;-))
---------

லோகம் போகாத ஊருக்கு வழி சொன்னார் ,இப்போ வழி தெரியாமல் சிக்கிண்டு முழிக்கிறார், இதான் நடக்கும்னு அன்றே சொன்னது அடியேன் மட்டுமே,ஆனால் இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் இன்னும் அடங்கினாப்போல தெரியலை.

#ராச நட பெரிய முக்காடா போத்திட்டு அரேபியாவில் தலைமறைவாயிட்டார் போல :-))

# சார்வாகன் சகோவ விட்டுப்புட்டார்,ஆனால் நாம் தான் விடாமல் நிக்குறோம், நீங்க சொன்னாப்போல லவுகீக மேட்டர் எதோ நடந்திருக்கும் போல.

ராஜ நடராஜன் said...

//#ராச நட பெரிய முக்காடா போத்திட்டு அரேபியாவில் தலைமறைவாயிட்டார் போல :-))//

தேடுறீங்களாக்கும் என்னை:)
ரெண்டு நாளா கடைப்பக்கம் வரலீன்னா முக்காடு போட்டுட்டேன்னு அர்த்தமா? நல்லவேளை ஒட்டகத்துக்குப் பின்னால ஒளிஞ்சிக்கிட்டிருக்கேன்னு சொல்லாம விட்டீங்களே:)

விஸ்வரூபம் தொடர் பிரச்சினைகளால் கமலுக்கு அடுத்தபடியா எனக்குத்தான் ரொம்ப வருத்தம்:(

ராஜ நடராஜன் said...

@நந்தவனத்தான்!என்னை கும்முறதுக்கு உங்களை வரச்சொல்லி வவ்வால் கூப்பிட்டப்பவே வராமல் இப்ப வந்து ஜீப்புல ஏறிகிட்டா என்ன நியாயம்:)

ராஜ நடராஜன் said...

நான் வந்த வேலைய முடிச்சிக்கிறேன்.

மொத்த பதிவுகளையும் கூட்டாஞ்சோறு ஆக்காமல் பதிவு சார்ந்த இதுபோன்ற சொற்பதங்களை பகுதி 1,2,3 என சேர்த்துகிட்டே வந்தால் ஒரு அகராதி மாதிரி தேத்திடலாம்.

ராஜ நடராஜன் said...

@சார்வாகன்!பதிவுக்கு வரும்போதே 53 கண்ணை உறுத்திச்சு:)

வவ்வால் said...

ராச நட,

வாரும்,நன்றி!

முக்காடுப்போட்டுக்கிட்டு தலைமறைவானாலும் கித்தாப்புக்கு கொறைச்சல் இல்ல :-))

//விஸ்வரூபம் தொடர் பிரச்சினைகளால் கமலுக்கு அடுத்தபடியா எனக்குத்தான் ரொம்ப வருத்தம்:(//

இல்லியாப்பின்ன, காவேரியில் தண்ணி ஓடி வரும் ,கரன்ட் கட் ஆகாது, விலைவாசி கொறையும், நாட்டில பாலியல் பலாத்காரம் நடக்காது ,நாடே சுபிக்‌ஷமாகிடும், இதெல்லாம் இப்போ நடக்காம போயிடுமேன்னு நீங்க வருத்தப்படுவீங்க தானுங்க்ண்ணா :-))

# நந்தவனம் கொட்டாமல் போயிட்டாரேன்னு சந்தோஷப்படாமல் , திரும்பவும் கையப்புடிச்சு இழுக்கிறீரே, ம்ம் எதுக்கு இந்த வீர விளையாட்டு?

# அதுக்கு தானே நம்பர் போட்டு பாகம் பாகமா எழுதுறாங்க, தொடராக தொடர்ந்து எழுத முடியலைனு தான் அப்போ அப்போ கூட்டாஞ்ச்சோறு.

# 53 ஆம் நம்பர் அதிஷ்ட நம்பராகிப்போச்சு போல எல்லார் கண்ணையும் உறுத்துதே :-))

புதுசா ஒரு லோகநாயகர் அந்தாதி பாடியிருக்கேன் அங்கே வந்து அர்ச்சனையை ஆரம்பியும் :-))

ஜோதிஜி said...

இணைய தொல்காப்பியர்கள், அவாள் தமிழ் மாசுப்படாமல் காக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் :-))