Tuesday, January 08, 2013

பில்லா-2 என்கிற பெயரைச்சொல்லவா!

வாலிப,வயோதிக,பதிவர்களே,கமெண்டர்களே,அனானிகளெ, பினாமிகளே உங்கள் அனைவருக்கும் அடியேனின் அனேக கோடி நமஸ்காரங்கள்! சில பல காலமாக அஞ்ஞாத வாசம்(பூ வாசம் தெரியும் இது என்ன புது வாசம்னு எல்லாம் கட்டையப்போடப்படாது) சென்றிருந்தமையால் எண்ணமிகு வண்ணப்பதிவு மலர்கள் பூத்து குலுங்கி கமழ்ந்திடும் வண்ணத்தமிழ் சோலையாம் தமிழ்மணத்திலே எண்ணால் சிறகடித்து பறக்கவியலாமல் போய்விட்டது.

போதும் நிறுத்து ஓடிப்போன கழுதை... கெட்டால் குட்டி சுவர்னுதிரும்ப வந்திருக்க நேரா அதை சொல்லி தொலைக்காமல் தகர டப்பாவில கூழாங்கல் போட்டா மாதிரி என்னாப்பேச்சு அப்படினு நீங்க திட்டுறது கேட்குது...எனவே ...மேட்டருக்கு போயிடுறேன்.

தமிழ் ஸினிமாவில பல பல பிரபலங்கள் அரசாட்சி செய்து போய் உள்ளார்கள், சிலரது ஸினிமா பெயர் தெரியும் சிலரை சுருக்கமாக அழைப்பார்கள், ஆனால் அவர்கள் முழுப்பெயர் அவ்வளவாக வெளியில் தெரியாது.

எம்ஜிஆர் அப்படினா பல்லு முளைக்காத பச்சப்புள்ளைல இருந்து பல்லுப்போன பாட்டி வரைக்கும் தெரியும், முழுப்பெயர் என்ன கேட்டா பலர் எம்.ஜி.ராமச்சத்திரன் சொல்வார்கள், எம்.ஜி அப்படினு கேட்டா மினிமம் கியாரண்டினு சில ஸினிமா வியாபாரிகள் அறிவுத்திறன் காட்டக்கூடும்(,ஹி..ஹி.) வெகுசிலர் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் என்று பொட்டில அடிப்பாங்க.

எம்ஜிஆர் படங்கள் எல்லாம் வசூலில் சக்கைப்போடு போடும் என்பதால் மினிமம் கியாரண்டி ராமச்சந்திரன் என்றே செல்லமாக சொல்வார்களாம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முழுப்பெயர் வி.சி.கணேசன் =விழுப்புரம் சின்னையா கணேசன் ஆகும்.

எனக்கு இப்படியான பிரபலங்களின் முழுப்பெயர் தெரிந்து கொள்ள எப்பவும் ஆவல் உண்டு, எனவே அவ்வப்போது இணையத்தில் தேடி தெரிந்து கொள்வதுண்டு, தெரிந்தவரகளிடம் கேட்பதும் உண்டு, அப்படி தெரிந்து கொண்டதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

1)AVM=ஆவிச்சி மெய்யப்பன்

2)L.V.PRASAD= அக்கினேனி லக்ஷ்மி வரப்பிரசாத் ராவ்.

3)S.S.VASAN=சுப்ரமணியம் ஶ்ரீனிவாசன்

4)M.N.NAMBIYAR=மஞ்சேரி நாராயண நம்பியார்

5)M.S.VISVANATHAN=மனயங்காத்த சுப்பிரமணியன்
விஸ்வநாதன்.

6.T.K.RAMAMOORTHI=திருச்சிராப்பள்ளி கிருஷ்ணசாமி ராமமூர்த்தி

7)K.V.MAHADEVAN= கிருஷ்ணன் கோவில் வெங்கடாச்சலம் மஹாதேவன்

8)T.R.MAHALINGAM= தென்கரை ராமகிருஷ்ணன் மஹாலிங்கம்

9)M.K.THYAGARAJA BAGAVADR=மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்

10)S.G.KITTAPPA=செங்கோட்டை கங்காதர அய்யர் கிட்டப்பா(மனைவி கே.பி.சுந்தராம்பாள்)

11)T.M.SOUNDARA RAJAN= தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் சவுந்தரராஜன்

12)S.P.BALASUBRAMANIAM= ஶ்ரீபதி பண்டிதராயல பாலசுப்ரமணியம்

13)K.J.YESUDOSS= கட்டச்சேரி ஜோசப் ஏசுதாஸ்

14)L.R.ESHWARI= லூர்து மேரி ராஜேஷ்வரி

15)M.S.SUBBU LAKSHMI= மதுரை ஷண்முகவடிவு சுப்புலக்‌ஷ்மி

16)K.B.SUNDRAMBAL= கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள்

17)A.M.RAJAH= ஏமலா மன்மதராஜு ராஜா, ஜிக்கி= பி.ஜி.கிருஷ்ணவேணி சுருக்கமா ஜி.கே அதுவே ஜிக்கி ஆகிடுச்சு, இவர் ஏஎம்.ராஜாவின் மனைவியாவார்.

18)S.V.RANGA RAO= சாமர்லா வெங்கட ரெங்காராவ்

19)M.R.RADHA= மோஹன் ராஜாகோபால ராதாகிருஷ்ணன் அல்லது மோஹன் என்பதற்கு பதிலாக மதராஸ் ராஜகோபால ராதாகிருஷ்ணன் என்கிறார்கள்.

20)CHANDIRABABU= ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிகஸ் சந்திரபாபு.


மேலும் சில பல பெயர்கள் இருக்கு பின்னர் பார்க்கலாம் அவற்றை.


இதப்படிச்சுப்புட்டு உன்ன எப்படி பாரட்டுறதுனே தெரியலைனு நீங்க கண்கலங்கலாம்! உன்ன பாராட்டணும்னு எண்ணும் போது வார்த்தைகள் அப்படியே   அருவியா கொட்டுது, ஆனால் அத பின்னூட்டமா எழுத நினைக்கும் போது வார்த்தைகள் முட்டுதுனு சிண்டைப்பிச்சுக்கலாம், அதனால உங்க சிரமத்த குறைக்க சில டெம்பிளேட் பின்னூட்டங்கள் தயாரிச்சு வச்சு இருக்கேன், நீங்க காபி பேஸ்ட் பண்ணா  போதும்....காபி பேஸ்ட்  பண்ணினா மட்டும் போதும்(நீங்க வேணா கூட கண்மணி, பொன்மணி போல வவ்வால் வல்லவர், நல்லவர்னு எதாவது அங்காங்கே தூவிக்கலாம்)

கும்மி பதிவர்களுக்காக:



# வடை எனக்கு!

#ரைட்டு!

# வெல்கம் பேக் வவ்ஸ்!

#இருங்க படிச்சுட்டு வரேன்!

வவ்வால் ரசிகர் மன்றத்தினருக்கு:


(இன்னும் கொஞ்ச நாளில் கொடி பறக்க விட்ருவோம்ல)

# அபூர்வ தகவல்களை!?? அள்ளித்தருவதில் வல்லவன்யா நீ!

#நீ ஒரு நடமாடும் யமாகாபீடியா!

#தமிழ் மணம் கண்டெடுத்த தத்துவஞானி!

#வவ்வால் நீ கூகிளை விட வேகமானவன்,விவேகமானவன்!


மண்டகப்படி பதிவர்களுக்கு:

#இத்தனை நாள் நிம்மதியா இருந்தோம், உன்னைக்காணோம்னு யார்யா இங்க ஆட்கொணர்வு மனுப்போட்டது?

#இனிமே தமிழ்மணம் விளங்கிரும்!

#உன் பதிவை டிம்பக்டுவில் தடை செய்தாச்சு!
(தடை செய்ய சுட்டி ;தூக்கிட்டோம்@போட்டுதாக்கு.காம்)

#நீ யார்னே எனக்கு தெரியாது கமெண்ட் போட மாட்டேன்!(போன் நம்பர், ரேஷன் கார்டு காட்டினாத்தான்)(அதான் போட்டாச்சுல)


ஹி..ஹி..ஹி இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை...கூகிளை விட வேகமா மவனே ரெண்டு போட்டா அத விட வேகமா ஓடுவேனு நீங்க பொங்குறது தெரியுது ச்சும்மா தமாசு தான்!




33 comments:

sathees said...

# வடை எனக்கு!

sathees said...

WoW. Super. உங்க டெம்பிளேட் பின்னூட்டங்கள சொன்னேன்.

sathees said...

இருந்தாலும் அருமையான தகவல்களை தேடி பொறுக்கி எடுத்து தந்துள்ளீர்கள்.
நன்றி.

வவ்வால் said...

சதீஸ்,

வாங்க, நன்றி ,வணக்கம்.ஹாட்ட்ரிக் பின்னூட்டம் போட்டு இருக்கிங்க, தாராள மனசு நண்பா , நீங்க என்ன வெண்பா வேந்தரா, உங்க கவிதைகள் படிச்சேன், நன்றாக உள்ளது தொடருங்கள்!

பத்மா said...

welcome back i t k

வவ்வால் said...

உஷ்...!

ஆஹா...எதிர்பாராத அதிர்ச்சி... நியாபகம் வைத்து வந்ததற்கு மிக்க மிக்க நன்றி, நலமா? இவ்விடம் உடல்,பொருள்,(கொஞ்சம் சேதராமுண்டு), ஆவி அனைத்தும் நலமே!

குமரன் (Kumaran) said...

வழக்கம் போல குறை கண்டுபிடித்துப் பெயர் வாங்கும் புலவனாக வந்திருக்கிறேன்.

டி.எம்.எஸ் = தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன். தொகுளுவாவை துகுளுவான்னு சொன்னா பரவாயில்லை. ஆனா நீங்க துலுகுவான்னு கொஞ்சம் அதிகமாவே கொதறிட்டீங்க. :-)

குமரன் (Kumaran) said...

பத்மா, எனக்கு மட்டுமாவது இந்த வவ்வால் யாருன்னு சொல்லுங்களேன்?!

வவ்வால் said...

குமரன்,

நன்றி, வணக்கம், நான் சரியா எழுதி இருந்தா வந்திருப்பிங்களா? இப்போ வந்துட்டிங்க ..ஹி ஹி அதன் "லு"வ இடம் மாத்தி போட்டுடேன். கவனக்குறைவால் அப்படி குதறிட்டேன்.திருத்தியமைக்கு நன்றி. மாத்திடலாம்.

டிஎம்மெஸ் பேரைப்போடும் போது உங்களைக்கேட்டால் பொருள் சொல்வாரேனு நினைத்துகொண்டே தான் போட்டேன்,

//பத்மா, எனக்கு மட்டுமாவது இந்த வவ்வால் யாருன்னு சொல்லுங்களேன்?!//
ஹி..ஹி அவங்களுக்கும் நான் அநாமதேயம் தான்.

bandhu said...

இத்தன நாள் பதிவுன்னு அப்பப்ப போட்டுட்டிருந்தேன்.. அது போய் சொந்தமா கமென்ட்டாவது போட்டிட்டிருந்தேன். போனா போவுதுன்னு என்னையும் பதிவர்னு ஏத்துக்கிட்டிருந்தாங்க.. (யாருன்னு கேக்கக்கூடாது..) இப்ப அதையும் எழுத விடாம டெம்ப்ளேட் கமெண்ட் போடறீங்களே.. நியாயமா?

கோவி.கண்ணன் said...

தொகுப்பு நன்றாக இருக்கிறது.

வவ்வால் said...

பந்து!

வாங்க,வணக்கம்,நன்றி!

நீங்க ரொம்ப லந்து!

உங்களை எல்லாம் எவன் பதிவர் இல்லை சொன்னான்! பிச்சுப்புடுவேன் பிச்சு(என் பேரை சொன்னீங்களா< சொன்னப்புறம் சொன்னாங்களா, ..ஹெல்லோ சிக்னல் கிடைக்கலை)

இவ்விடம் ஒரு கில்மா சமாச்சாரமும் கிடைக்காது தெரியாம வந்துட்டு விதியை நோவதேன்,ஆனாலும் ரொம்ப நல்லவர் நீங்க!

------------------------------------------

கோவி,

வாங்க, வணக்கம்,நன்றி, என்ன திடீர்னு இந்த பக்கம்! நீங்க காலம், காலங்களை கடந்தவன் நான்! :-))

SURYAJEEVA said...

நல்ல பின்னூட்டம் தோழர் தியாகு வலை பூவில், அந்த தவறு எனக்கு தெரிந்தது.. ஆனால் ஆமா தப்பு தான், நீ சரியா சொல்லேன்... அப்பின்னு கேப்பார், அதனால சரியான புள்ளி விவரங்களை கொடுத்து இருந்தேன்... அவர் வெளியிட வில்லை

சார்வாகன் said...

அருமை நண்பா
தொடர்கிறேன்!!!!!!!!!!!!!

தருமி said...

முழுப்பெயர் சொல்க:
வவ்வால் = ?

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

N.H. Narasimma Prasad said...

அருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

வவ்வால் said...

சூர்யா,

வாங்க,நன்றி,வணக்கம்,

பரவயில்லை, சும்மா தமாசா தான் உங்களை கேட்டேன்,என் பின்னூட்டங்களும் தாமதமாகவே வந்தது.

புரிந்தாலும் மீண்டும் எதாவது கேள்வி தான் கேட்பார், சுத்தி சுத்தி தான் ஓடும் என்பது தெரியும், நானும் எத்தன சுத்து போகுதுனு பார்க்கலாம்னு இருக்கேன் :-))

வவ்வால் said...

சார்வாகன்,

வாங்க,வணக்கம்,நன்றி!

வகைக்கெழு சமன்ப்பாடுனு உங்க பதிவில பார்த்ததும் டென் ஸ்டெப்ஸ் பேக்னு ஓடி வந்துட்டேன் போன வாரம் :-))

பின்ன படிக்கிற காலத்திலேயே என்ன வகுந்தெடுத்த சமன் இல்லா பாடு ஆச்சு அது. மீண்டும் சிக்குவனா?

வவ்வால் said...

வாங்க தருமி அய்யா,

வணக்கம், நன்றி!

//முழுப்பெயர் சொல்க:
வவ்வால் = ?//

உங்களைப்போன்ற இளைஞர்களுக்கு எப்பவுமே கேள்விக்கேட்பதில் அலாதி ஆர்வம்:-))

முழுப்பெயர் வவ்வால்= Pipistrellus Pipistrellus

வவ்வால் said...

உலக சினிமா ரசிகரே, வணக்கம், நன்றி!

நூலகம் மூடுவது தேவை இல்லாதது, உங்கள் பதிவுக்கு வந்து கண்டிப்பா ஆதரவு தருகிறேன்.
-----------------------------------------------
வாங்க பிரசாத்,

வணக்கம், நன்றி!அடிக்கடி வாங்க!

சதுக்க பூதம் said...

Welcome back

வவ்வால் said...

சதுக்கபூதம்,

வாங்க ,வணக்கம்,நன்றி! உங்களை எல்லாம் மீண்டும் பார்ப்பதிம் பெரு மகிழ்ச்சி, மறக்காமல் இருப்பதற்கு நன்றி!

ராஜ நடராஜன் said...

ஆப்துல் கலாமிலிருந்து தலைகீழா பின்னூட்டம் போட்டுட்டு வாரேன்...இல்ல படிச்சிட்டு வ்ந்தேன்.இருபது மார்க் வாங்குற மாதிரி எம்.ஜி.ஆர்.சிவாஜி மட்டும்தான் தெரிஞ்சது.அடுத்த பரிட்சைல இன்னும் ரெண்டு பேரை தேத்தி பாஸாகிட வேண்டியதுதான்.

வவ்வால் said...

வாங்க ராஜ்,

வணக்கம், நன்றி,

20 மார்க் ஆஹ், அவங்க ரெண்டு பேரும் மதிப்பில்லாதவங்க அதாவது மதிப்பிட முடியாதவங்க :-))

//அடுத்த பரிட்சைல இன்னும் ரெண்டு பேரை தேத்தி பாஸாகிட வேண்டியதுதான்.//

அடுத்த ஒன்று போட்ரலாமா?, எங்கே வணிக நிறுவனங்கள் பெயர் விளக்கம் போட்டேன் அப்படியே பத்திரமா இருக்கு :-)) சினிமா பத்தி போட்டதால் தான் இதுக்கு கூட எட்டிப்பார்க்கிறாங்க!

ராஜ நடராஜன் said...

இது ஊசிப்போன மீள் பதிவு மாதிரி தெரியுதே:)

தருமி said...

இது ஊசிப்போன மீள் பதிவு மாதிரி தெரியுதே:) //

2011.நவம்பர் 3 தேதி என் பின்னூட்டம் இருக்கு. ஆனா இந்தப் பதிவு Tuesday, January 08, 2013 என்று போட்டிருக்கு. சரியான வவ்வால் தனமால்ல இருக்கு!

வவ்வால் said...

ராச நட மற்றும் தருமிய்யா ,மன்னிச்சு , பழையப்பதிவை எடிட் செய்த பின் அப்டேட் எனக்கொடுத்தால் மீண்டும் பிரசுரமாகிவிட்டது.

அட என்ன கொடுமைங்கய்யா..புதுசா பதிவு போடுறப்போ எல்லாம் இம்மாம் வெரசா வந்து பாக்காதவக எல்லாம் ,விபத்தா மீள்ப்பதிவானதற்கு மின்னல் வேகத்தில வாரிக :-))

உங்கள் செயல்வேகம் கண்டு செயலற்றுப்போனேன், நன்றி,நன்றி!

இப்ப தேதியை பழையபடி மாற்ற என்ன செய்யனும்னு ஒரு வழி சொன்னீங்கன்னா அப்படியே செய்துவிடுவேன்.

தருமி said...

//தேதியை பழையபடி மாற்ற என்ன செய்யனும்னு ஒரு வழி சொன்னீங்கன்னா //

இந்த தடவை போனா போகுதுன்னு பொழச்சி போக உட்டுர்ரோம்.

வவ்வால் said...

தருமிய்யா,

இன்று போய் நாளைவா என்பது போல இத்தோடு பொழைச்சுப்போன்னு வாயில்லா ஜீவன் வவ்வாலுக்கும் ஜீவகாருண்யம் காட்டும் உங்கள் கருணை உள்ளத்திற்கு மிக்க நன்றி!!!

Unknown said...

"நீ ஒரு நடமாடும் யமாகாபீடியா" சகோதரா யமாக பிடியா என்றால் என்ன

ஜோதிஜி said...

OLD BUT GOLD

Senthil said...

அபூர்வ தகவல்களை!?? அள்ளித்தருவதில் வல்லவன்யா நீ!