(ஹி...ஹி மனதை பொங்க வைக்கும் பொங்கல்!)
தைப்பொங்கலின் இன்சுவையை மென்மேலும் கூட்டும் வகையில் தை முதல் நாளே தமிழ்ப்பொங்கும் தமிழ்ப்புத்தாண்டும் பிறப்பது சர்க்கரை பொங்கலில் தமிழ்த்தேனும் கலந்துண்பதற்கு ஒப்பாகும்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தை முதல் தேதியே தமிழ்ப்புத்தாண்டு என விரிவாக விளக்கும் சில கட்டுரைகள்:
# http://tamilvalluvam.org/KuralArticalPage.asp?Id=13
# http://valavu.blogspot.in/2007/01/blog-post.html
கி.பி 1921 இல் மறைமலை அடிகள் தலைமையில் ஒரு தமிழறிஞர்கள் குழு கூடி , தமிழ்ப்புலவர் திருவள்ளுவரின் பிறந்த ஆண்டினை கணக்கிட்டு , அதன் அடிப்படையில் ஒரு தமிழ் நாட்காட்டி உருவாக்கினார்கள்.
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என எடுத்துக்கொண்டு அது முதல் ஆண்டுக்கணக்கினை துவக்கினார்கள், எனவே இவ்வாண்டு 2012 +31 எனக்கூட்டினால் 2043 வரும்.
தமிழ் மாதங்கள்:
சுறவம்- தை
கும்பம் - மாசி
மீனம் - பங்குனி.
மேஷம் -சித்திரை
விடை- வைகாசி
இரட்டை- ஆனி
கடகம் - ஆடி
மடங்கல்- ஆவணி
கன்னி -புரட்டாசி
துலை - அய்ப்பசி
நலி- கார்த்திகை
சிலை- மார்கழி.
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என முன்னர் நான் இட்ட இடுகை:
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: புத்தாண்டு வாழ்த்துகள்!- தைப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை!
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
*****
பண்டிகைகளும் பயணங்களும்:
உலகம் முழுவதும் நவீன வளர்ச்சியின் தாக்கத்தால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு,மனிதர்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் என்னமோ அனைவரையும் சென்றடையவில்லை என்றே நினைக்க வைக்கிறது ,ஒவ்வொரு முறை மேற்கொள்ளும் விழாக்கால பயணங்கள்!
சில முன் யோசனை முத்தண்ணாக்கள் வெகுஜாக்கிரதையாக பொங்கலுக்கு ஒரு மாதமுன்னரே இருக்கைகளை முன்ப்பதிவு செய்திருந்தார்கள் அவர்கள் பாடு கொண்டாட்டம் தான், ஆனால் தங்கள் புறப்பாடு எப்போது என தீர்மானிக்க இயலாத நடுத்தட்டு மக்கள் ,எப்படியாவது சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்து பொங்கலுக்கு முதல் நாள் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து , அரசையும் ,போக்குவரத்து கழகத்தையும் சுத்த மோசம் என வசைப்பாடிக்கொண்டிருந்தார்கள் :-))
சென்னையில் பேருந்து, தொடர்வண்டி என அனைத்திலும் கால் வைக்க இடமில்லாத அளவுக்கு பிதுங்கி வழிந்தாலும் மக்கள் கொஞ்சமும் அசராமல் எப்படியோ தொற்றிக்கொண்டு ஊர் போய் சேர்ந்தால் போதுமென கிடைத்த கேப்பில் எல்லாம் தங்களை சொறுகிக்கொண்டு , பொங்கல் கொண்டாட ஊர் நோக்கிப்பயணப்படலானார்கள்.
சொந்தமாக கார் வைத்திருந்தவர்கள் வளர்ப்பு நாய் சகிதம் மூட்டைக்கட்டிக்கொண்டு கிளம்பி விட, கார் இல்லாத மக்கள் பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது ரெண்டு பசங்களையும் , பின்னாடி மனைவி, இன்னொரு பையன் என ஏற்றிக்கொண்டு வீரப்பயணம் கிளம்பிவிட்டார்கள். ஒருவர் தனது ஸ்கூட்டரில் மொத்த குடும்பத்தையும் ஏற்றிக்கொண்டு சென்றதையும் பார்த்தேன் , தேசிய நெடுஞ்சாலை 45 இல் இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது,இதனால் எல்லா டோல் கேட்டிலும் பெரும் வரிசை உருவாகி , டோல் கேட்டை கடக்கவே அரைமணி நேரத்திற்கு மேலானது.
டோல் கேட்:
இவ்வளவு அரும்பாடுப்பட்டு ஊருக்கு வந்தாலும் வழக்கம் போல தொலைக்காட்சிகளில் காட்டப்படும் உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக என கூவிப்போடப்படும் பாடாவதி தமிழ்ப்படங்களையும், தொலைக்காட்சிப்பெட்டிக்கண்டுப்பிடித்த நாள் முதலாக அரங்கேறி வரும் சாலமன் பாப்பையா வகையறாக்களின் என்ன மக்களே நான் சொல்லுறது சரி தானய்யா பட்டிமன்ற பேச்சுக்களையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இதுக்காய்யா படிக்கட்டில தொங்கிட்டு 200-300 கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டீர்கள் :-))
இதுக்கு பேசாமா ஊருல ஊட்டோட இருந்து இருக்கலாமே!
*******
புத்தக சந்தை- 2013: A TEASER.
பொங்கலுடன் சேர்ந்தாற்ப்போல புத்தக திருவிழாவும் வருவது சென்னையின் சிறப்பு எனலாம், ஆனால் அச்சிறப்பே பல நேரங்களில் மண்டையை குடைய வைக்கிறது, என்னிக்கு ஊரு கிளம்புவது என்றே தீர்மானிக்க இயலாத ஆசாமி நான் இதில் என்னிக்கு புத்தக சந்தைக்கு போவது என தீர்மானம் எடுக்க வேண்டிய கூடுதல் சுமை வேறு வந்து மண்டையை குடைந்தால் என்ன தான் செய்வதாம் , வழக்கம் போல இன்று போய் நாளைவானு ஒத்தி வைப்பு தீர்மானம் தேன் :-))
பொங்கல் முடிந்தவுடன் போய் ஒரு ரவுண்டு அடிக்கலாம்னு எழுதப்படாத தீர்மானம் இயற்றியாச்சு , ஒரு வாரத்திற்குள் எல்லா நூல்களையும் கபளீகரம் செய்துவிட மாட்டார்கள் சென்னை வாழ் பெருமக்கள் என்ற ஒரு அபார நம்பிக்கை தான் :-))
சில பழங்கால பதிவர்கள் வழக்கம் போல சுஜாதா தாத்தாவின் கத புத்தகங்களையே காணததை கண்டது போல இன்னும் தொடர்ந்து அள்ளிக்கொண்டிருப்பார்கள் என்பதால் ,மற்ற நூல்கள் எல்லாம் புத்தக சந்தை துவக்க நாளன்று வச்சது வச்ச மாதிரியே இருக்கும் ,இனிமேல் நான் போய் தான் எல்லாத்தையும் கலைச்சு போடணும் :-))
என்ன ஒரு தலைக்கனம்னு நினைக்கலாம், நம்ம பதிவர்கள் எழுதும் புத்தக சந்தைப்பதிவுகளை தொடர்ந்து படிச்சாலே தெரியும் ,எல்லா ஆண்டும் ஒரே மாதிரியே எழுதியிருப்பார்கள் , ஒரு வேளை முன்னர் எழுதிய புத்தக சந்தை பற்றிய பதிவையே காபி&பேஸ்ட் செய்வார்களோ என்னமோ?
வலைப்பதிவுகளின் மூலம் பலப்பதிவர்களும் எழுத்தாளராக அவதாரமெடுக்கும் வேகம் ஆண்டு தோறும் மர்மக்காய்ச்சலை விட வேகமாக பரவுவது ஏற்கனவே அவதாரமெடுத்து எழுத்து சிம்மாசனத்தை ஆக்ரமித்துக்கொண்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கிறது :-))
பல ஒலக எலக்கிய எழுத்தாளர்களின் படைப்புகளை விட அதிகமாக நம்ம பதிவர்களின் நூல்கள் விற்பது , தமிழ் வலைப்பதிவுகள் மற்றும் பதிவர்களின் சாதனை எனலாம்.
பதிவர்களின் சில படைப்புகளும் இவ்வாண்டு அச்சுவடிவில் வெளியாகின்றன ,அவைப்பற்றி,
பிரபலப்பதிவர் திருப்பூர் ஜோதிஜி லோகநாயகரை விட பெரிய ஆளா இருப்பார் போல ,அவரோட டாலர் நகரம் எனும் நூலை பொங்கல் ரிலீஸ் இல்லைனு சனவரி 27 அன்று திருப்பூரில் வெளியிடுகிறார் :-)),
வாழ்த்துக்கள் ஜோதிஜி!
மேலதிக தகவல்களுக்கு ஜோதிஜியின் வலைப்பதிவினை காண்க,
http://deviyar-illam.blogspot.in/2013/01/blog-post_13.html
#பலப்பதிவர்களின் வலைப்பதிவுகளை தொகுத்து எதிர்க்குரல் என்ற பெயரிலும் ஒரு நூல் வெளியாகிறது. கொஞ்சம் "மார்க்க"மான நூலாக அச்சிலும் கொண்டு வந்திருப்பார்கள் போல , "Tag line" உம் இஸ்லாமோ போஃபியா VS இஸ்லாமியப்பதிவர்கள் என ஒரு மார்க்கமாக இருக்கு :-))
எதிர்க்குரல் நூல் வெளியீட்டு குழுவினருக்கும் வாழ்த்துக்கள்!
மேலதிக தகவல்களுக்கு பதிவர் சிராஜின் வலைப்பதிவினை காண்க,
http://vadaibajji.blogspot.in/2013/01/vs.html
# மேலும் சிலப்பதிவர்களின் நூல்களும் வெளி வருகின்றன என தகவல்கள் உலா வருகின்றன,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
---------------------
18 comments:
Vavvaalu.....
Call me in
9043257501.......
Pongal kondaaduvom......
Immuraiyaavathu.......!!!!!
வணக்கம் நண்பரே,
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் பொங்கல், இத்ர மாநிலங்களில் மகர சங்கராந்தியோடு கும்ப மேளாவும் இந்த சம்யத்தில் வந்து உள்ளது.
தகுந்த பாதுகாப்பு,சுகாதார நடவடிக்கைகளை கும்பமேளா கூட்டத்தில் ஏற்பாடு செய்வார்கள் என எதிர்நோக்குவோம்!!.
இயற்கையை போற்றும் பண்டிகை என்பதால் நமக்கும் மகிழ்ச்சியே!!.
பொங்கல் த்மிழர்(களுக்கும்) திருநாள்,இதர இந்திய சகோக்களுக்கும் பெருநாளே!!
தைத்திருநாள் தமிழ்ப் புத்தாண்டா? என்பதும் வழக்கமான விவாதமே!!.
ம்ம்ம்
**
போக்குவரத்தில் கவனம் தேவை!!.
**
பதிவர்கள் கருத்துகளை புத்த்கம் ஆக்குவது நன்மையே!!.
மெல்லத் தமிழ் இனி வாழும்!!
நம் சகோ ஜோதிஜி புத்தகம் வாங்கி விடுவோம்.வாழ்க வள்முடன்!!
(பரிணாமத்தின்?) எதிர்க்குரல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹி ஹி அவங்களும் வாழ்க வளமுடன்.
//இஸ்லாமோ போஃபியா VS இஸ்லாமியப்பதிவர்கள் என ஒரு மார்க்கமாக இருக்கு //
யாரைச் சொல்ராங்க?? ஹி ஹி நெ(?)ஞ்சைத் தொட்டு சொல்லுங்க!!
பதிவுலகில் என்னை விட அனைவருமே நல்லவராக இருப்பதாக எனக்கு ஒரு பிரமை!!
மீண்டும் பொங்கல்,மகர சங்கராந்தி வாழ்த்துக்கள்!!
நன்றி!!
பொங்கல் வாழ்த்துக்கள்.
புத்தக அறிமுகத்துக்கும் நன்றி!
//Pongal kondaaduvom......//
பொங்கல் சாப்பிட்டதோடு கொண்டாட்டத்தை முடிச்சுக்கணும். சரியா...:-)
உங்கள் தமிழ் உணர்வைப் பாராட்டுகின்றேன். தமிழ்ப் புத்தாண்டு எது என்பதில் உங்களோடு மாறுபடுகின்றேன். சித்திரை தொடக்கமே தமிழ் புத்தாண்டு என்பது எனது கருத்து. காரணம் பல விஷயங்களில் தமிழர் பண்பாட்டில் சமஸ்கிருதம் நுழைந்தது போன்றே தமிழ் மாதங்களின் பெயரிலும் நுழைந்து ஆக்கிரமிப்பு நடந்து விட்டது.
எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பொங்கல் அன்னைக்கும் பதிவு! உம்ம கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா? அவ்!
தமிழக உழைக்கும் வர்க்கத்துக்கு ஒருநாள் அதிக லீவு கிடைக்கறது உம்ம மாதிரி ஆளுகளுக்கு பொறுக்கல. பொங்கலையும் புத்தாண்டையும் ஜாயின் பண்ணி உட்டு ஒருநாள் லீவை குறைக்கலாம்ன்னு பாக்குறீர்... உடனே அன்னிக்கு அம்பேத்கர் பொறந்த நாளுங்காதீர். பிரைவேட் கம்பனிகாரனுவ அதுக்கெல்லாம் மசீவானுகளா? மத்தபடி தமிழன் புத்தாண்டை ஜனவரி 1க்கு மாத்தி பலநாள் ஆயிடுச்சு. தமிழ் புத்தாண்டை உங்களை மாதிரி பதிவர்களுக்கு பதிவு போட நல்லா யூஸ் ஆவுது, அதோட சரி.
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்! மாட்டுப் பொங்கலுக்கு என்னா பெசலு? பீப் பிரியாணி? (மாடுகளுக்கு நிரந்த ஓய்வு திட்டம்)
உங்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
எதிர் குரல் புத்தக கண்காட்சிக்கு வந்தபோது முதல் ஆளாக நான் பார்த்தேன் .
சுவனபிரியன் ஆஷிக் அகமது பதிவுகள் மற்றும் ஆமீனா பதிவுகள் என்று நிறைய பதிவுகள் இருந்தது .
சிராஜ் பதிவு ஒன்றுகூட இல்லை .:-(
எனிவே வாழ்த்துக்கள் ...........
யோவ் நக்சு நாய் பொங்கல் கொண்டாடியாச்சா ................?
அஞ்சா சிங்கம் said...
யோவ் நக்சு நாய் பொங்கல் கொண்டாடியாச்சா ................?/////////////////////////////
யாருயா வள்ளுவரை இன்றைய தேதிக்கு பிறக்க சொன்னா????????
நாம பேசாம வேற ஸ்டேட்-ல பிறந்திருக்கலாம்....
நாய் பொங்கல்....அமோகமாக....கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்...அடுத்து நாய் விரட்டு....!!!!!!!
யோவ்வ்வ்வ்வ் செல்வின்....
வௌவாலு...கடையை நம்ம கிட்ட தர்ச்சமயத்துக்கு வாடகைக்கு விட்டிருக்கார்...வா...நாம எல்லாரும் சேர்ந்து பொங்கல் கொண்டாடுவோம்...
நக்ஸ் அண்ணாத்த,
நன்றி!
ஊர்ல மாட்டிக்கிட்டு இருக்கேன் , வீட்டோட முடங்கி கிடக்கேன் , ஒரு நாள் சந்திப்போம்ஜி!
மாட்டுப்பொங்கல் மற்றும் நாய் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
------------
சகோ.சார்வாகன்,
வாங்க நன்றி!
தமிழனுக்கு தைப்பொங்கல் மற்றோர்க்கு சங்கராந்தி அவ்வளவு தான். வாழ்த்துவோம் அனைவரையும்!
பொங்கல் வாழ்த்துக்கள், மற்றும் திருவள்ளுவார் திருநாள் வாழ்த்துக்கள்.
ஜோதிஜி நூலை பார்சல் அனுப்ப சொல்லுங்க, ஒரு வாசகர் கேட்டாலும் அனுப்பனும்ல :-))
# நெஞ்ச தொட்டு சொல்லுனு சொல்வத்இல் ஏதோ உள்குத்து இருக்காப்பல தெரியுதே ?
ஹி...ஹி ஆமாம்ஜி எல்லாம் நம்மை விட நல்லவங்கன்னு பேரு வாங்கி வச்சிடுறாங்க , நமக்கு தான் ஒரே குஷ்டமா ச்சே கஷ்டமா போயிடுது :-))
-----------
சு.பி.சுவாமிகள்,
வாங்க,நன்றி!
நீங்க வாழ்த்துனது , திருவள்ளுவரே வாழ்த்துனா போல :-))
எதிர்க்குரலில் உங்க குரலும் ஒலிக்குதுன்னு சிங்கம் சொல்லிக்கிறார், வாழ்த்துக்கள்!
பொங்கல்(ள்) சாப்பிட்டு கொண்டாடுவார் நக்ஸ் :-))
------------
தி.தமிழிளங்கோ சார்,
வாங்க,நன்றி!
தமிழ் உணர்வு என்பது அனைவருக்கும் உள்ளதே, ஏதோ ஒரு பிலாக் இருக்குனு நாம காட்டிக்கிறோம் -))
உங்கள் தமிழ் உணர்வை உங்க பேரே சொல்லுமே, நாளில் என்ன இருக்கு ,அனைவருக்கும் கொண்டாட ஒரு காரணம் தேவை, நான் இப்படி இருந்தால் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன், உங்கள் உணர்விலும் தவறில்லை, பொங்கல் வாழ்த்துக்கள்!!!
-----------
நந்தவனம்,
நன்றி!
நான்ன் ரொம்ப லேட்டு :-))
அவனனவன் ஓவர் டைம் வேலைப்பார்த்து பதிவு எழுதுறாங்க :-))
வருடம் 365 நாளும் விடுமுறையா இருந்தா கூட நல்லா இருக்கும்னு நினைப்பான்க மக்கள் :-))
மஞ்சத்துண்டும் விடுமுறை தின கொண்டாட்டம்னு ட்டிவில நிகழ்ச்சி போட்டு கடமையை செய்ய்வாருல்ல :-))
மாட்டுப்பொங்கல்,மனித பொங்கல், என எல்லா பொங்கல் வாழ்த்துகளும் சொல்லிக்கிறேன் :-))
-----------------
ஈசி காலண்டர்,
நன்றி ,பொங்கல் வாழ்த்துக்கள்!
-----------------
அஞ்சா ஸிங்கம்,
நன்றி!
முதல் பிரதியே நீர் தான் வெளியீட்டிரா அப்போ பிராபல்யம் தான் :-))
சிராஜ் இடுகைகள் எதுவும் இல்லையா, இல்லைனாலும் ஊருக்கு உழைப்போம்னு விளம்பரம் செய்கிறார், வருங்கால திட்டமிருக்கும் :-))
சு.பி.சுவாமிகள் இடுகை இருக்கா அப்போ வியாபாரம் பிச்சிக்கும்!!!
-----------
நக்ஸ் அண்ணாத்த,
வள்ளுவர் என்னா சொல்லிக்கிறார்னா,
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
அதாவது இன்னிக்கு வள்ளுவர் பொறந்த நாளுன்னு தெரிஞ்சா முத நாளே உஷார் செய்துக்கணும்னு சொல்லிக்கிறார் :-))
நக்ஸ் அண்ணாத்த இங்கெ ஒரு ஜல்லிக்கட்டு விடுவார் போல இருக்கே, மிருகவதை தடுப்பு சட்டத்தில புடிச்சு போட்டிரலாம் :-))
--------------------
போன்நாச்சும் பண்ணுறது....
பதிவுலகம் மூலமாக புத்தகமாக வளர்ச்சி பெற்ற டாலர் நகரம்,எதிர்க்குரலுக்கு எனது வாழ்த்துக்கள்.
வவ்சு!உங்களை யாரோ யமாகாபீடியான்னு சொல்லியிருந்தாங்களே?இன்னா அர்த்தம்?
ஒருவேளை பீடியான் என்று யாரோ ஒளிஞ்சிருந்து பார்த்தாங்களோ:)
தமிழ் மாதங்கள்,தமிழ் சொல் அகராதி போன்ற பதிவுகளை புத்தகமாக்கும் எண்ணம் இருந்தால் சொல்லுங்கள்.தேத்திடலாம்.
நக்ஸ் அண்ணாத்த,
உங்களுக்கு போன் செய்வது சொந்த செலவில் சூன்யம்னு பதிவுலகம் பூரா பரவிக்கிடக்குங்கோ :-))
நான் புலிக்கே புல்பாயில் வாங்கி கொடுத்தவன் என்றாலும் ,உங்களுக்கு போன் செய்யணும் என நினைச்சாலே முது தண்டு ஜில்லீர்னுது :-))
கண்டிப்பாக ஒருநாள் பேசிடுவோம் ,கொஞ்சம் பொறுங்க!
-------------
ராச நட,
வாழ்த்துக்கள் உரியவர்களுக்கு சென்றடையும் என நம்புவோம், இப்படி வாழ்த்து சொன்னா மட்டும் போதுமா, அப்படியே ஒவ்வொரு புக்கிலும் தலா நூறு வாங்கிப்போடுறது, ஜோதிஜி புக்கு 100 வாங்கினா உங்களுக்கு "அதிகம் படிச்சவர்"னு ஒரு சான்றிதழ் வேற கொடுத்து கவுரவம் செய்வாங்களாம் :-))
சின்ன வயசில ஒருத்தர் சைக்கிள் ஸ்டேண்ட் போட சோம்பல் பட்டுக்கிட்டு என் சைக்கிள பிடியா என்றார், நானும் பிடித்தேன் அன்னில இருந்து என்சைக்கிளோ பீடியானு சொன்னாங்க, அப்பாலிக்க கொஞ்சம் வளர்ந்ததும், ஒருத்தர் யமஹா பைக்கை ஸ்டேண்ட் போட சோம்பல் பட்டு என்னை பிடிக்க சொன்னார் ,பிடிச்சேன் உடனே யமாஹாபீடியானு சொல்லிட்டாங்க :-))
புத்தகமா ஆக்கும் அளவுக்கு சரக்கு இல்லையே, ஒரு வேளை நிறைய சேர்ந்தால் முயற்சிக்கலாம், அது வரைக்கும்
"கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின், பிணி பல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து." என ...
பாட்டுப்பாடும் வானம் பாடி நாம் தான் ...என பாடிக்கொண்டிருப்போம் :-))
வவ்வால் said...
நக்ஸ் அண்ணாத்த,
உங்களுக்கு போன் செய்வது சொந்த செலவில் சூன்யம்னு பதிவுலகம் பூரா பரவிக்கிடக்குங்கோ :-))
நான் புலிக்கே புல்பாயில் வாங்கி கொடுத்தவன் என்றாலும் ,உங்களுக்கு போன் செய்யணும் என நினைச்சாலே முது தண்டு ஜில்லீர்னுது :-))
கண்டிப்பாக ஒருநாள் பேசிடுவோம் ,கொஞ்சம் பொறுங்க!///////////////////////////
அது எல்லாம் சும்மா.....
ஆனா இப்படியா வலிந்து வருபவனை அலட்சியப்படுத்துவது....???????
வெரி bad.....வாழ்வியல்,,, personalty,,,etc,,,etc,,,இது எல்லாம் நம் முன்
கேள்விக்குறியாகி....தொங்கிக்கொண்டு இருக்கிறது...
என்ன மாதிரியான சமுகத்தில் நாம் இருக்கிறோம்...????????
பந்துக்கள்,டாஸ் கிட்ட அதிகம் போவதால் உங்களுக்கு இந்த பாதிப்போ.....??????
:)))))))))))))
sorry/
i am waiting for buyer meeting.
Not possible tamil fonts.
thanks my dear
ஜோதிஜி,
வாங்க,நன்றி!
ஆஹா கடமைக்கு நடுவேயும் இணைய சேவையா ,புல்லரிக்குது!!!
பொங்கல் சமயத்தில் ரொம்ப அலைச்சலில் மாட்டிக்கிட்டேன் ,இல்லைனா இன்னும் விரிவாக எழுதியிருப்பேன்.
உங்க நூல் எந்த கடையில கிடச்சாலும் வாங்கிடுறேன்,அப்போ தானே உங்களை கலாய்க்க வசதியா இருக்கும் :-))
புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைப்பெற வாழ்த்துக்கள்.
Post a Comment