(ஹி...ஹி..கண்ணா கரும்பு தின்ன ஆசையா?)
அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!
பாரத நாடு பழம் பெரு நாடு நீரதன் புதல்வர் இந்நிலை மறவாதீர் , இப்பாடல் நமக்கு மட்டும் அல்ல நம்ம ஊரு மாடுகளுக்கும் பொருந்தும், நம்ம நாடு உலகிலே மிக அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை கொண்ட நாடு, இச்சாதனை இன்று நேற்றல்ல பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் சாதனையாகும்.
விவசாயமே பிரதான பொருளீட்டும் தொழிலாக கொண்டு உலகம் இயங்கிய காலத்தில் விவசாயத்தொழிலின் உச்சத்தில் நின்ற நாடு இந்தியா, எனவே உலக அளவில் செல்வ செழிப்பான நாடுகளில் முதலிடத்தில் இருந்தது.
விவசாயம் செய்ய நிலத்துக்கு அடுத்து இன்றியமையாத மூலதனம் கால்நடைகள் ஆகும், கால்நடைகளில் உழவு மாடு, கறவை மாடு, இரண்டுக்கும் பயன்ப்படும் வகை என உண்டு. அனைத்து வகை கால்நடைகளிலும் மிக அதிக எண்ணிக்கையில் உற்பத்தி திறனுடன் இந்தியா விளங்கியதாலேயே விவசாயத்தின் உச்சத்தினை தொட முடிந்தது.
உழவு மாட்டினை உயிருள்ள டிராக்டர் எனலாம், டிராக்டருக்கு எரிபொருள் செலவு செய்தால் உழலாம் ஆனால் உரம் கொடுக்காது, அதே சமயம் உழவு மாட்டுக்கு உணவு கொடுத்தால் உழும், வண்டி இழுக்கும், கறவை மாடுகளின் இனவிருத்திக்கு பயன்ப்படும், மேலும் சாணமானது உரமாகவும் பயன்ப்படும்.
மாட்டுக்கு என தனியாக உணவு உற்பத்தி செய்யத்தேவையில்லை, மனிதர்கள் பயன்ப்படுத்தாத தாவர கழிவுகள், வைக்கோல், பிண்ணாக்கு என எஞ்சியவையே உணவாக பயன்ப்படும், எனவே விவசாய உற்பத்தியில் எந்த பொருளும் விரயமாகாமல் சிக்கனமாக விவசாயம் செய்யலாம்.
(காங்கேயம் காளை,காங்கேயன்=கங்கையின் மைந்தன்,முருகன்)
(சிவப்பு சிந்தி மாடு)
அதிக அளவில் கால்நடைகள் இந்தியாவில் இருந்த போதிலும் பால் உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருக்கிறோம், இதற்கு காரணம் இந்திய மாடுகளின் பால் உற்பத்தி திறன் குறைவாக உள்ளது என நம்ம நாட்டு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், இதனை நிவர்த்தி செய்ய ஐரோப்பிய நாடுகளின் உயர் உற்பத்தி ரக மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு பல திட்டங்களைப்போட்டு செயல்படுத்தி வருகிறது, கேட்பதற்கு மிகவும் நல்ல திட்டம் போல தெரிந்தாலும் உண்மை வேறாக உள்ளதாக பல வேளாண் அறிஞர்களும், உயிர் தொழில்நுட்ப வல்லுனர்களும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.
அது எப்படி எனப்பார்ப்போம்.
அமெரிக்காவில் மாட்டிறைச்சி மற்றும் பால் பண்ணை தொழில் மிகவும் வளர்ச்சியடைந்த ஒரு தொழிலாகும்.
அவர்கள் கூடுதல் இறைச்சி மற்றும் பால் உற்பத்தி பெருக்கத்திற்கு நம்பி இருப்பது இந்திய வகை மாடுகளை தான் என்பது மறைக்கப்பட்ட உண்மையாகும்.
(பிரம்மன் வகை காளை- Bos indicus)
ஐரோப்பிய வகை மாடுகளை Bos taurus என்பார்கள், மறபணு ரீதிய இந்திய மாடுகளை விட தரம் குன்றியவை,இந்திய வகை மாடுகளின் சிறப்பம்சம் என்னவெனில்,
குறைந்த வெப்பமும் தாங்கும், அதிக வெப்பமும் தாங்கும்.இந்திய மாடுகளின் வியர்வை சுரப்பிகளின் எண்ணிக்கை மிக அதிகம் இருப்பதே இதற்கு காரணம்.
மேலும் வெகு அடர்த்தியான உரோமங்கள் உள்ளவை, உரோமங்களுக்கு அடியில் கருமை நிறத்தோல் இருப்பதால் வெப்பத்தினை சீராக பராமரிக்க வல்லவை.
மேலும் பிரம்மன் வகை மாடுகள் தளர்வான மேல் தோலினை கொண்டவை எனவே தேவைக்கு ஏற்ப உடல் மேற்பரப்பினை அதிகரித்து வெப்ப வெளியீடும் அளவை அதிகரிக்க ,குறைக்க வல்லவை.
இவ்வகை மாடுகளின் உடலில் இயற்கையாக ஒருவகை திரவம் சுரக்கும் ,இது பூச்சிகளை இயல்பாக விரட்ட வல்லது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம்.
(சாஹி வால் மாடு)
இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டப்பொழுது ,இந்திய பிரம்மன் வகை மாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன, அவற்றை போஸ் ஈரோப்பியன் வகையுடன் கலப்பினம் செய்தார்கள்,மேலும் நெல்லூர், கிர், கிருஷ்ணாவாலி வகை மாடுகளும் ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் கலப்பினம் செய்யப்பட்டது.
ஆதாரப்ப்பூர்வமாக Dr. Hilton Briggs, author of Modern Breeds of Livestock என்ற நூலில் இத்தகவல்கள் உள்ளது. இவரது நூலில் உள்ள தகவல் என்னவெனில்,
1849 இல் Dr. James Bolton Davis of Fairfield County, South Carolina, என்பவர் இரண்டு ஜோடி போஸ் இன்டிகஸ் காளைகளை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்து ,கலப்பின முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், இவர் அப்போது துருக்கி சுல்தானுக்கு கால்நடை ஆலோசகராகவும் செயல்ப்பட்டு வந்துள்ளார், இதனால் அங்கும் இந்திய மாடுகள் பரவியது.
பின்னர் 1854 இல் St. Francisville, LA வை சேர்ந்த Richard Barrow என்ற வேளாண் அறிஞரின் சேவையைப்பாராட்டி பிரிட்டீஷ் அரசே ஒரு ஜோடி போஸ் இன்டிகஸ் மாடுகளை அன்பளிப்பாக அளித்துள்ளது,அவர் உருவாக்கிய கலப்பினத்துக்கு பாரோவ் பிரீட் என்றப்பெயர் வைக்கப்பட்டது, பின்னர் படிப்படியாக கலப்பினங்கள் செய்யப்பட்டு இன்றைய அமெரிக்க பிரம்மன் வகை மாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய மாடுகளே இன்றைய அமெரிக்காவின் மாட்டிறைச்சி மற்றும் பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன.
அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் ஆஸ்திரேலியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் மிக அதிக அளவில் இந்திய மாடுகளை கொண்டு உருவாக்கிய கலப்பினங்களே உள்ளன. அவர்கள் சுய உற்பத்திக்கு மட்டுமில்லாமல் இப்பொழுது இம்மாடுகளை இனவிருத்தி செய்ய என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள், மலேசியாவில் உள்ள மாடுகள் அனைத்தும் இந்திய கலப்பின மாடுகளே ஆனால் அனைத்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்வதை ஜெனிட்டிக்கல் பைரசி என்கிறார்கள், இப்போது நாமே நினைத்தாலும் இந்திய மாடுகளை ஏற்றுமதி செய்ய இயலாது, ஏன் எனில் போஸ் இன்டிகஸ் வகை மாடுகளை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில் போன்றவை தங்கள் நாட்டு மாடு என பதிவு செய்துக்கொண்டுள்ளார்கள்.
(இந்திய கிர் வகை பசு-பிரேசிலில் அதிகம் பால் கொடுத்து சாதனை)
பிரேசிலில் கடந்தாண்டு மிக அதிக பால் கொடுத்த மாடு என சாதனை செய்திருப்பது குஜராத்தினை சேர்ந்த கிர் வகை மாடு ஆகும், ஷேரா எனப்பெயரிடப்பட்டுள்ள இம்மாடு ஒரு நாளில் 62 லிட்டர் கறந்துள்ளது.வெப்பமான நாடுகளில் வெப்பத்தினையும் தாங்கி கொண்டு பால் உற்பத்தியும் அதிகம் கொடுக்கும் வகை என்பதால் இவ்வகை மாடுகளை பல நாடுகளும் விரும்புகின்றன.
எனவே பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் மாடுகளுக்கு உலக அளவில் நல்ல சந்தை ஏற்பட்டுள்ளது, உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கறவை மாடுகளை ஏற்றுமதி செய்வதில் பிரேசில் முன்னணி வகிக்கிறது ஆனால் அவை யாவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாட்டினங்கள். இந்தியாவிற்கு தான் அதன் மறபியல் உரிமை உண்டு ,நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டதால் அவர்கள் திருடி தங்கள் பொருளாக அறிவித்துவிட்டார்கள்.
ஆனால் இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு குளிர்நாடுகளான டென்மார்க்,ஹாலந்து, ஆகிய நாடுகளில் இருந்து ஜெர்சி வகை மாடுகளை இறக்குமதி செய்து கலப்பினம் உருவாக்கிக்கொண்டுள்ளோம்.
மேலும் இந்திய மாடுகளில் ஜீன்களில் சர்க்கரை நோயை குறைக்கும் ஏ2 ஜீன் அல்லிகள் உள்ளதாகவும்,ஐரோப்பிய மாடுகளில் ஏ 1 அல்லில்கள் தான் உள்ளது எனவும் இது சர்க்கரை நோய்,உடல் பருமன், மற்றும் இதயநோய்களை அதிகரிக்கும் எனவும் கர்நாலில் உள்ள தேசிய கால்நடை மறபணு ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.
செய்தி:
A recent study by Karnal-based National Bureau of Animal Genetic Resources (NBAGR) showed Indian cows have a rich A2 allele gene which helps them produce healthier milk. The frequency of this A2 allele in Indian breeds is 100 per cent whereas in exotic cattle breeds it is less than 60 per cent. Imported breeds posses A1 allele, which is considered to be associated with diabetes, obesity and cardiovascular
http://news.outlookindia.com/items.aspx?artid=725938
இவற்றை எல்லாம் பார்க்கும் போது அன்றே மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடிய(நடித்த) பாடல் தான் நினைவுக்கு வருகிறது,
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல்காட்டில்
உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் ...
விவசாயி ...விவசாயி!
(என்னா ஆக்டிங்க் ....என்னா ரன்னிங்க் ...தலிவரு ஆல்வேய்ஸ் ராக்ஸ்)
பிற்சேர்க்கை:
கலப்பினமாக்கலால் அழிந்து வரும் இந்திய நாட்டு மாடுகள் குறித்து முன்னர் இட்ட இடுகைகள்.
1)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-1
2)காணாமல் போகும் நாட்டுக்காளைகள்-2
--------------------
பின்குறிப்பு:
தகவல்கள் மற்றும் படங்கள் உதவி,
கூகிள், விக்கி,
http://www.ansi.okstate.edu/breeds/cattle/brahman/
http://www.ilri.org/InfoServ/Webpub/fulldocs/SmHDairy/chap5.html
http://devinder-sharma.blogspot.in/2012/07/brazil-is-biggest-exporter-of-indian.html
http://agritech.tnau.ac.in/animal_husbandry/animhus_cattle%20_breed.html
இணைய தளங்கள் ,நன்றி!
-----------------------
26 comments:
மாட்டுப் பொங்கல் அன்று பொருத்தமான ஆய்வுக் கட்டுரை.சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல எழுதி இருக்கிறீர்கள்.
கற்றுக் கொண்ட புதிய விஷயங்களில் ஒன்று .Genetic piracy.
வவ்வாலு....
இப்ப இந்தியாவுல நிறைய பாக்கெட் பால் விற்கபடுகிறதே...அவ்வளவு பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது....
அவை உண்மையான பாலா....????
எனக்கு இங்க பலத்த சந்தேகம்.....
நாட்டின் மொத்த மாடுகள் எவ்வளவு....???
உர்ப்பத்திசெயயப்படும் பாலின் அளவு எவ்வளவு...???
நுகர்வு அளவு எவ்வளவு....???
சரியான கணக்கு தனியார் உற்பத்தியாளர்கள் கொடுத்தால்...மாட்டிக்கொல்வார்கள் என்று நினைக்கிறேன்....
இது பற்றி உங்கள் ஆஆஆஆஆஆஆஆஆய்வு கட்டுரை தேவை....
Sir,I am regularly reading your posts.
You are sincere and genuine and researching a lot for every post.
Nowadays,I sincerely think that INDIANS OR BY WHATEVER NAME THEY ARE CALLED IN THIS CONTINENT HAVE LOST THE POWER TO RULE.THEY ARE PERFECT BREEDS OF SUBORDINATES.
THEY CAN FOLLOW ANYBODY,BUT CANNOT LEAD.
THIS BECOMES OUR NATINAL DESEASE.
I THINK OUR RELIGIOUS OUTLOOK IS THE MAIN REASON FOR THIS.
OUR GODS AT LAST SUCCEEDED IN GIVING THIS CURSED LIFE.
கன்னியும் கரும்பும் அருமை. நல்ல சீற்றமான பதிவு...வாழ்த்துகள்.
---மாக்கான்.
முரளி,
வாங்க,நன்றி!
திருவள்ளுவர் திருநாள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.
ஜெனிடிக் பைரசி என்பது ,ஒரு நாட்டின் எதிர்காலத்தினை மிகவும் கடுமையாக பாதிக்க கூடியது, இன்டெலெக்சுவல் பிராப்பரிடி ரைட்ஸ் என்ற கருத்தாக்கம் உருவான பின் ஒவ்வொரு நாட்டின் தொன்மமான மறபியல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகிவிட்டது, இது போன்ற காப்புரிமைகள் வருமுன்னரே மேலைநாடுகள் அனைத்தையும் சேகரித்துவிட்டன, பின்னரே காப்புரிமையை செயல்ப்படுத்தினார்கள், ஏமாந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு இக்காப்புரிமை சட்டத்தால் இழப்பே, அதாவது ஒவ்வொன்றையும் இது இந்திய மறபு என நிறுப்பிக்கவில்லை எனில் நமக்கு சொந்தமில்லை, மன்ஞ்சள், வேம்பு, பாசுமதி அரிசி குறித்தான வழக்கெல்லாம் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
விரிவாக எழுத வேண்டிய ஒன்று நிறைய இருக்கிறது, ஆனால் எப்படி தமிழில் வழங்குவது என தெரியவில்லை, :-))
---------------
நக்ஸ் அண்ணாத்த,
வாங்க,நன்றி!
பால் உற்பத்தி, மற்றும் பதப்படுத்துதல் பற்றிய நிறைய தகவல்கள் ஏற்கனவே தேடி வைத்துள்ளேன், நேரம் அனுமதிக்கும் பொழுது பதிவிடுகிறேன்.
நம் நாட்டில் உற்பத்தி ,நுகர்வு தேவையை விட கூடுதலாகவே இருக்கிறது. நிறைய பயன்ப்படுத்தாமல் வீணாகவே போகிறது.
ஆனால் பாலில் கலப்படம் இருப்பது உண்மையே, முன்னர் மசலா ரகசியம் பதிவில் சொல்லியிருப்பேனே. கலப்படம்ம் செய்யக்காரணம் காசு கொடுத்து பால் வாங்கி விற்காமல் எளிதில் பணம் சம்பாதிக்கவே :-))
-----------------
சண்முகப்பிரியன் சார்,
வாங்க,நன்றி!
உங்களைப்போலவே நிறைய பேரு சைளண்ட் ரீடிங் செய்றாங்க,அப்போ அப்போ திட்டியோ,குட்டியோ கருத்து சொன்னால் தானே நாமும் ஒழுங்காத்தான் எழுதுறோம்னு தெரியும் :-))
நீங்கள் சொன்னது முற்றிலும் சரியே, எனது பலப்பதிவுகளிலும் இதே கருத்துக்களையே சொல்லியிருப்பேன்.
//LOST THE POWER TO RULE.THEY ARE PERFECT BREEDS OF SUBORDINATES.//
இது தான் இன்றைய இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணமே, எப்படியாவது ஒரு நிலையான ஊதியமுள்ள வேலைக்கு போயிடணும், அது எவ்வளவு குறைவா இருந்தாலும் சரி ,மாத சம்பள வேலையா இருக்கணும் :-))
மெக்காலே கல்வி முறையின் விளைவுனு சொல்வார்கள்.
அமெரிக்காவுக்கு ஃபிளைட் ஃபுல்லா லோட் போகுது,ஆனால் அவர்கள் யாரும் சாதாரணமான சமூக வலை தலமான ஃபேஸ்புக், துவித்தர், என உருவாக்கவில்லை, ஆனால் அங்கு கல்லூரியை கூட முடிக்காதவர்கள் தான் இதனை செய்தார்கள். கூகிள்,யாகூ எல்லாமே மாணவர்கள் தான், ஏன் மைக்ரோசாப்ட் கூட அப்படித்தான்.
எனவே படிப்பவர்கள் எல்லாம் எப்படியாவது வேலையில் ஒட்டிக்கணும், என்னவோ ஒரு வேலை செய்தால் போதும் ,ஏன் மற்றதை பற்றி நினைக்கனும் என இருக்கிறார்கள்.
தொலதிபர்களோ, ஒரு ரூவா முதலீட்டுக்கு ஒரு ரூவா லாவம் வரணும் என தொழிலை செய்வதால் அவர்களும் புதிதாக எதுவுமே செய்ய துணிவதில்லை.
அம்பாசிடர் கார் தயாரிப்பையே எடுத்துக்கொள்ளுங்கள் ,போட்டியே இல்லாத போது ஓஹோனு விற்பனை ஆச்சு, போட்டிகள் வரும் போது காலத்துக்கு ஏற்ப புதிய கார்கள் தயாரிக்கவில்லை, விற்பனை சரிந்து விட்டது. அவர்கள் ஏன் புதிய மாடல் தயாரிக்கவில்லை என்பதற்குள் தான் இந்திய முதலாளிகளின் ஆட்டுமந்தை புத்தி இருக்கிறது :-))
//THEY CAN FOLLOW ANYBODY,BUT CANNOT LEAD.//
என்ற குணமே காரணம்.
போட்டிகளை சமாளித்து போட்டிப்போடாமல் ,போட்டியாளர்கள் இல்லாமல் செய்துவிட என்ன வழினு தான் யோசிப்பார்கள் :-))
//I THINK OUR RELIGIOUS OUTLOOK IS THE MAIN REASON FOR THIS.
OUR GODS AT LAST SUCCEEDED IN GIVING THIS CURSED LIFE.//
நம்மை மழுங்க வைத்ததில் இந்த மத போதனைகளுக்கும் பெரும்பங்குண்டு.
இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதேன்னு சொன்னாங்க, நம்ம ஆளுங்க பட்டம் பறக்க விட யோசிச்சாங்க ,ஆனால் அமெரிக்காக்காவில் சைக்கிள் ரிப்பேர் செய்ற சாதாரண ஆளுங்க தான் ரைட் சகோதரர்கள் , விமானத்தினை வடிவமைச்சாங்க.
ஆட்டுக்கு வாலை அளந்து வச்சாங்கன்னு சொல்லிக்கிட்டே வெத்தலை இடிச்சாங்க நம்ம ஊரில் ,ஆட்டொ மொபைலில் எந்த அளவும் இல்லைனு , ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் வார்ப்பிரும்பு வேலை செய்த என்சோ ஃபெராரி தான் உலகின் வேகமான கார் எஞ்சினை உருவாக்கினார். இன்னிக்கும் ஃபெராரி கார்னா தனி பேரு தான்.
நம்ம ஊரில எங்க இவன் நம்மளை விட பெரிய ஆளாகிடுவானோனு நினைச்சே அதெல்லாம் செய்ய "ஒரு தகுதி வேணும்" திறமை ரத்தத்துல ஓடணும்னு சொல்லி அடக்கி வச்சாங்க, இன்னிக்கு மொத்தமா நாடே அடங்கிக்கிடக்கு :-))
காலம் காலமாக சொல்லப்படும் கர்ணன் ,ஏகலைவன் கதைகள் சொல்வது இதனை தான்.
அனைத்துM நல்ல பதிவு
Happy Pongal.
"உங்களைப்போலவே நிறைய பேரு சைளண்ட் ரீடிங் செய்றாங்க,அப்போ அப்போ திட்டியோ,குட்டியோ கருத்து சொன்னால் தானே நாமும் ஒழுங்காத்தான் எழுதுறோம்னு தெரியும் :-))"
Indha pathivukku oru Kutu.
KAmal pathiya pathivuku niraya thitu. pothumayya:-}
Sanmugapriyan sir...:-(( alatheenga. Nanum ......ven:-(((
Aravi
I’m present sir,
மனுஷனோ மாடோ இந்தியர்களின் உற்பத்தித்திறன் உலகறிந்தது .
சும்மாவா 120 கோடி உற்பத்தி செஞ்சி வச்சிருக்கோம் .
ஐயா மாட்டுக்கார வேலா ஐதிங்க்,
விவசாயம் , மாடு, சினிமா இப்படி நீண்டுகிட்டே போகுது உம்ம மேட்டர் ! உமக்குன்னு ஏதாவது தனித்தன்மை (speciality) இருக்குதா சொல்லும். அந்த தலைப்பில ஒரு பதிவு போடும்!
(பின் குறிப்பு : மொக்கை போடுவதும் கடலை வறுப்பதும் உம்மோட தனித்தன்மை ன்னு ஊரறிந்த ரகசியம் எல்லாம் திரும்ப திரும்ப சொல்லாதீர்!
ரவி,
வாங்க,நன்றி!
திருவள்ளுவர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
--------------------
அரவிந்தன் ரங்கநாதன்,
வாங்க,நன்றி!
திருவள்ளுவர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
ஹி...ஹி கொட்டும் ,திட்டும் ,திகட்டாத இன் கரும்பென மனம் மகிழ்விக்கிக்கிறது, பின்ன உங்களைப்போல நக்கீரர்களிடம் பாராட்டு பத்திரமா கேட்க முடியும் :-))
அன்பா திட்டினால் அமிர்தம்னு நினைக்கிறவ்வனய்யா நான்!!!
உன் கண்ணில் நீர் வழிந்தால்னு நீங்களும் கண்ணீர் உகுக்கிறிங்களே, (பேக்கிரவுண்டில் தென்பாண்டி சீமையிலே பாட்டு வேற ஓடுறாப்போல இருக்கு)அழுவாதிங்க ,கண்ண தொடச்சிக்கிட்டு ,எங்கே சிரிங்க பார்ப்போம் ..ம்ம் அப்பிடித்தான் :-))
-------------
அஞ்சா ஸிங்கம்,
வாரும் ,நன்றி!
திருவள்ளுவர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
புத்தக சந்தையை புரட்டிப்போடும் பிசியான வேலைக்கிடையேயும் , கடமை தவறாத அஞ்சா ஸிங்கமே நின் சேவையை பாராட்ட தமிழில் சொற்கள் இல்லை!!!
உண்மையாவே நம்ம உற்பத்தி திறன் ரொம்ப அதிகம், அதுவும் கால்நடைகளின் கன்று ஈனும் திறன் அதிகம்னு தான் நம்ம ஊரு மாட்டை வச்சு வெளிநாட்டில் இனப்பெருக்கம் செய்யறாங்க, அதைத்தான் மறபணு ரீதியாக உயர்ந்தது என சொல்லுகிறார்கள்.
இந்திய கால்நடைகள் கன்று ஈனும் விகிதமும் அதிகம் ஏ-1 அல்லீல்கள் 100 சதவீதம் உருவாகின்றன என்றும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.சராசரியா ஒவ்வொரு மாடும் 15 மாதத்திற்கு ஒரு கன்று போட்டுவிடுகிறதாம்.
-------------------
புல்ஸ் சாமி,
வாரும்,நன்றி!
சரியா மாட்டுப்பொங்கலுக்கு ஆஜராகிட்டீரே :-))
நான் என்ன மருத்துவர் லயன்.எஸ்.காளிமுத்தா ஸ்பெஷாலிட்டி காட்ட :-))
நாம ஒரு சகலகலா வல்லவன்னு சொன்னா ஒத்துக்கவா போறீர் , ஏதோ நமக்கு தெரிந்ததை வைத்து கடைய ஓட்டிக்கிட்டு இருக்கேன்,அது பொறுக்கலையே உமக்கு.
//(பின் குறிப்பு : மொக்கை போடுவதும் கடலை வறுப்பதும் உம்மோட தனித்தன்மை ன்னு ஊரறிந்த ரகசியம் எல்லாம் திரும்ப திரும்ப சொல்லாதீர்!
//
பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிட்டால் நீர் மெது பக்கோடா சாப்பிட வேண்டியது தானே எதுக்கு காண்டாகிறீர் :-))
ஆனாலும் ஒரு அப்பாவிய அபாண்டமா சொல்லாதீர் , அப்பாலிக்கா வைகுண்டத்தில ரிபைண்டு சன்பிளவர் ஆயிலில் போட்டு உம்மை வறுப்பாங்க :-))
த.நா.-1 மக்கள் எல்லாம் நலமா? நான் வரணும்னு பார்த்தாலும் , அல்ட்ரா ஸ்லோ இணையம் வரவிட மாட்டேங்குது.
-----------------
மாக்கான்,
நன்றி!
உங்க பின்னூட்டத்தினை கவனிக்க தவறிட்டேன், மன்னிக்கவும்!
திருவள்ளுவர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
ஹி...ஹி கரும்பை தேடும் எறும்பா இருக்கீங்களே :-))
வவ்வால்!கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்த பதிவு மிகவும் பயனாக உள்ளது.காரணம் மாட்டுப்பால் வித்த காசும் கூட என் படிப்பின் வளர்ச்சிக்கு உதவியதுதான்.ஆனாலும் நான் பால் கறக்கத் தெரியாத பயலாகவே வளர்ந்து விட்டேன்.இப்பொழுது இழந்தவைகளை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.கூடவே அண்ணாமலைப் படம் பார்க்கத்தான் நல்லாயிருக்குது.யதார்த்தம் வேற மாதிரியில்ல இருக்குது.அது போலவே விவசாயிப் படப்பாடலும் கூட.
கிராமங்களின் ஆண்டான்,அடிமை,சாதிப்பிரிவினைகள்,நவீன இயந்திரமயமாக்கல் போன்றவை கிராமப்புறங்களிலிருந்து மக்களை நகர்ப்புறங்கள் பக்கம் தள்ளிவிட்டதும்,நீர்ப்பிரச்சினை,ரியல் எஸ்டேட் வியாபாரம் என கிராமத்தின் ஆணிவேர் மெதுவாக பலமிழக்க ஆரம்பிக்கின்றது.
இருப்பதையாவது காப்பாற்ற சமூக சமன்பாட்டு நிலையும்,அரசாங்க சலுகைகள்,உதவிகள் அவசியம்.
வங்கி கடன் உதவிகள் எளிதாக்கப்பட வேண்டும்.மழையின்மை,பெரும் மழை போன்ற நியாயமான காரணங்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதும்,குறைந்த வட்டி போன்றவை அவசியமானவை.
ஷண்முகப்ரியன் சார்!நலமாக இருக்கிறீர்களா?
முகம் தொலைத்தால் முகவரியே காணாமல் போய் விடுமென்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல பதிவுலகுக்கும் பொருந்தும்.
பதிவு மட்டுமா இல்ல நம்ம எசப்பாட்டையும் சேர்ந்து படிக்கிறீங்களா:)
ராச நட,
வாரும்,நன்றி!
நம்ம பதிவை படிச்சா டென்சன் தானே உமக்கு ஏறும் :-)) ,எப்படியோ ரிலாக்ஸ் ஆகவும் உதவிட்டேன்!!!
ஆஹா நீங்க அரேபியா போனதால், தமிழ்நாடு ஒரு நிஜமான அண்ணாமலையை இழந்துவிட்டதே :-))
அண்ணாமலையை படத்தினைப்பற்றி வேறு ஒரு கோணத்தில் ஒரு பதிவில் சொல்ல தயாரித்து வைத்துள்ளது உம்ம ஞானக்கண்ணுக்கு தெரிந்துவிட்டதா :-))
விவசாய தொழிலுக்கு அரசின் உதவி அவசியம் தேவை, இங்கு வங்கிகள் கடன் குடுக்க மறுப்பதற்கு சொல்லும் காரணம் பலரும் திரும்ப பணம் கட்டுவதில்லை என்பதே, இதற்கு அடிப்படைக்காரணம்மே விளைச்சலுக்கு கிடைக்கும் விலை ,கடனை அடைக்கவும், விவசாய உழைப்பின் ஊதியமாக ஒரு தொகை அளிக்கவும் பற்றாத நிலை இருப்பதே. நல்ல விலையில் விற்க முடியாத சூழலில் கடனை அடைப்பதை தள்ளிப்பொடுகிறான் , இதனால் அடுத்த சாகுபடிக்கு வெளியில் கடன் வாங்கும் சூழல் என , கடனிலேயே விவசாயிகளின் காலம் போகிறது.
விவசாய உற்பத்திக்கான விலை என்பது மனித ஆற்றல் மதிப்பூதியம் + முதலீட்டினை திரும்ப பெரும் வகையில் இருக்க வேண்டும்.அப்பொழுது தான் கடனை அடைக்க முடியும்.
மற்ற சமூக பிரச்சினைகளையும் அரசு கொள்கை முடிவுகளின் மூலம் களைய வேண்டும்.
----------
ராச நட,
ஷண்முகப்பிரியன் என்ற பெயரை பார்த்ததும் எனக்கு ஒரு டவுட் வந்தது, எனக்கு புகைப்படம் வைத்து அடையாளம் காண தெரியவில்லை, உங்க பின்னூட்டம் வாயிலாக சார் தான் ஒருவர் வாழும் ஆலயம் போன்ற திரைப்படங்களை இயக்கிய ,இயக்குனர் ஷண்முகப்பிரியன் அவர்கள் என உறுதியாகிறது.
ஹி...ஹி ஒருத்தங்களை பார்த்து நீங்க தானே அவங்கன்னு கேட்டால் தர்மசங்கடமாக இருக்கும்னு தவிர்த்துவிடுவேன் , அதனால் தான் கேட்கவில்லை.
மலையோரம் மயிலே விளையாடும் குயிலே விளையாட்டை சொல்லித்தந்ததாரு ...னு ராஜாவின் இசையில் அருமையான பாடல்கள் எல்லாம் இருக்கும் ,ஹீரோயின் கூட அழகாவே இருப்பாங்க ,பிரபு, சிவகுமார் எல்லாம் நடித்த படம்,பாட்டுக்காகவே பேர் வாங்கிய படம் எனலாம்.
நம்ம பதிவை தொடர்ந்து படிப்பதாக சொல்லி இருப்பது மகிழ்வான செய்தி, உம்ம எசப்பாட்டை அறியாதார் இப்பதிவில் யார் :-))
வவ்வ்ஸ்...போன் பண்ண கூட மாட்டீரா.........????????
நிறைய விஷயம் பேசணும்...ஒரு மீஸ்டு கால் தாரும் நான் பேசுறேன்...இன்று இரவு தானே சென்னை....பயணம்....?????
தாவானி எல்லாம் பார்த்தாச்சா...?????
IM VERY SERIOUS....அப்புறம் ...உங்கள் இஷ்டம்....
வவ்வால் said...
நக்ஸ் அண்ணாத்த,
உங்களுக்கு போன் செய்வது சொந்த செலவில் சூன்யம்னு பதிவுலகம் பூரா பரவிக்கிடக்குங்கோ :-))
நான் புலிக்கே புல்பாயில் வாங்கி கொடுத்தவன் என்றாலும் ,உங்களுக்கு போன் செய்யணும் என நினைச்சாலே முது தண்டு ஜில்லீர்னுது :-))
கண்டிப்பாக ஒருநாள் பேசிடுவோம் ,கொஞ்சம் பொறுங்க!///////////////////////////
அது எல்லாம் சும்மா.....
ஆனா இப்படியா வலிந்து வருபவனை அலட்சியப்படுத்துவது....???????
வெரி bad.....வாழ்வியல்,,, personalty,,,etc,,,etc,,,இது எல்லாம் நம் முன்
கேள்விக்குறியாகி....தொங்கிக்கொண்டு இருக்கிறது...
என்ன மாதிரியான சமுகத்தில் நாம் இருக்கிறோம்...????????
பந்துக்கள்,டாஸ் கிட்ட அதிகம் போவதால் உங்களுக்கு இந்த பாதிப்போ.....??????
:)))))))))))))
ஐயா ஐதிங்க்
// புல்ஸ் சாமி,வாரும்,நன்றி!
சரியா மாட்டுப்பொங்கலுக்கு ஆஜராகிட்டீரே :-)) //
என்ன சாமி மற்ற நாள்ல எல்லாம் வராத போல சொல்றீர்
//நான் என்ன மருத்துவர் லயன்.எஸ்.காளிமுத்தா ஸ்பெஷாலிட்டி காட்ட :-))//
அவரை எல்லாம் ஞாபகம் இருக்குன்னா உமக்கு ரயில்வே ல சீனியர் சிட்டிசன் கன்செஸ்ஷன் தரலாம்
//நாம ஒரு சகலகலா வல்லவன்னு சொன்னா ஒத்துக்கவா போறீர் , ஏதோ நமக்கு தெரிந்ததை வைத்து கடைய ஓட்டிக்கிட்டு இருக்கேன்,அது பொறுக்கலையே உமக்கு.//
அதானே பார்த்தேன் ஏதோ உமக்கு தெரிஞ்சத வச்சி ஒட்டுறீர் அப்போ நீர் எப்படி சகல கலா வல்லவனாக முடியும்
//பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிட்டால் நீர் மெது பக்கோடா சாப்பிட வேண்டியது தானே எதுக்கு காண்டாகிறீர் :-))//
அப்போ முள்ளு இருக்கிறவங்க முட்டலாம்னு சொல்றீரா
//ஆனாலும் ஒரு அப்பாவிய அபாண்டமா சொல்லாதீர் , அப்பாலிக்கா வைகுண்டத்தில ரிபைண்டு சன்பிளவர் ஆயிலில் போட்டு உம்மை வறுப்பாங்க :-))//
வைகுண்டத்துல ரிபைன்ட் சன்பிளவர் ஆயில் எல்லாம் கிடைக்குதா? அங்க இருந்து இறக்குமதி செய்யலாமா
//த.நா.-1 மக்கள் எல்லாம் நலமா? நான் வரணும்னு பார்த்தாலும் , அல்ட்ரா ஸ்லோ இணையம் வரவிட மாட்டேங்குது.//
த . நா - 1 எல்லாம் இப்போ எங்கய்யா இருக்குது ? மூடியாச்சுல்ல?
அது என்ன அல்ட்ரா ஸ்லோ இணையம் இப்ப எல்லாரும் மொபைல் ப்ராட்பாண்ட் ல 7.2 எம்பிபிஸ் ஸ்பீட் ல் போறாங்க நீர் பாழா போன தரை வழி இணைப்பு ல உக்கார்ந்துக்கிட்டு இருக்கீரு
நக்ஸ் அண்ணாத்த,
விடாக்கொண்டனாயிருக்காரே அவ்வ் :-))
//அது எல்லாம் சும்மா.....
ஆனா இப்படியா வலிந்து வருபவனை அலட்சியப்படுத்துவது....???????
வெரி bad.....வாழ்வியல்,,, personalty,,,etc,,,etc,,,இது எல்லாம் நம் முன்
கேள்விக்குறியாகி....தொங்கிக்கொண்டு இருக்கிறது...
என்ன மாதிரியான சமுகத்தில் நாம் இருக்கிறோம்...????????//
என்னய வச்சு காமெடி ..கீமெடி செய்யலையே அவ்வ்வ் :-((
----------------------
புல்ஸ் சாமி,
வாரும், வாரும்,
காணும் பொங்கலன்று காண வேண்டியதை எல்லாம் கண்டீரா, தாங்களும் ,தங்கள் சுற்றமும் ஷேமமா?
எல்லா நாளும் வந்தாலும் மாட்டுப்பொங்கலுக்கு தானே ,பின்னூட்டம் போட்டிங்க :-))
//அவரை எல்லாம் ஞாபகம் இருக்குன்னா உமக்கு ரயில்வே ல சீனியர் சிட்டிசன் கன்செஸ்ஷன் தரலாம் //
ஒரு வேளை தென்னிந்திய புறநகர் மூத்த குடிமக்கள் பயணிகள் நலச்சங்க தலைவரா இருப்பாரோ :-))
எனக்கு குழந்தைகள் பிரிவில் கன்செஷன் வாங்கி கொடும் :-))
//போ நீர் எப்படி சகல கலா வல்லவனாக முடியும் //
ஒரு பேச்சுக்கு கூட ஒத்துக்க மாட்டார்ப்பொல இருக்கே ..அவ்வ்வ்.
கற்றது கையளவு ,கல்லாதது கூகிள் அளவு :-))
#நல்லவேளை முட்டலாமானு சொன்னதோட விட்டார் :-))
//வைகுண்டத்துல ரிபைன்ட் சன்பிளவர் ஆயில் எல்லாம் கிடைக்குதா? அங்க இருந்து இறக்குமதி செய்யலாமா //
சூரியனே ஆகாசத்துல தானே இருக்கு ,அப்போ சூரிய காந்திப்பூ வைகுண்டத்தில இருக்காதா? அதை வச்சு எண்ணையாட்டி எடுத்திருப்பாங்க :-))
பால் கடலையே கடைஞ்சவங்களுக்கு எண்ணையாட்ட தெரியாதா?
#த.நா-1 ஐ மூடினாலும் ,மக்களுக்கு ஆடிய கையும் , பாடிய வாயும் சும்மா இருக்காதே, புதுசா ஒரு இடத்தில முகாம் போட்டிருப்பாங்களே , அதை சொல்லுங்க போய்ப்பார்ப்போம்.
# நீர் சொல்லும் வேகமெல்லாம் 3 ஜீ அலைக்கற்றை, நான் சொல்வது ஆ.ராசா புகழ் 2 ஜி அலைக்கற்றை , 5 கேபி பிஸ் வேகம் மட்டுமே :-))
Vavvs....
No story...pl....
Call me....immediatly.....
9043257501
நக்ஸ் அண்ணாத்த,
மன்னிக்கவும்,நான் நானாகவே எப்பொழுதும் இருக்க நினைப்பவன், உங்களை தொடர்புக்கொள்ள நான் நினைக்கும் பொழுது தொடர்புக்கொள்கிறேன், அப்பொழுது உங்களுக்கு விருப்பம் இருந்தால் பேசலாம்.
no hard feelings , cheers!!!!
வணக்கம், கட்டுரை அருமை. ஆனால் இதில் ஒரு பிழை உள்ளது.
"உழவு மாட்டினை உயிருள்ள டிராக்டர் எனலாம், டிராக்டருக்கு எரிபொருள் செலவு செய்தால் உழலாம் ஆனால் உரம் கொடுக்காது, அதே சமயம் உழவு மாட்டுக்கு உணவு கொடுத்தால் உழும், வண்டி இழுக்கும், கறவை மாடுகளின் இனவிருத்திக்கு பயன்ப்படும், மேலும் சாணமானது உரமாகவும் பயன்ப்படும்."
உழவு மாடு இனவிருத்திக்கு பயன்படாது. ஒருமாட்டை உழவுக்கு பயன்படுத்த அதற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வது வழக்கம். அவ்வாறு செய்யாத மாட்டை அடக்குவது மிகவும் கடினம்.
நன்றி.
ஜீவானந்தம்,
வருகைக்கு நன்றி!
//உழவு மாடு இனவிருத்திக்கு பயன்படாது. ஒருமாட்டை உழவுக்கு பயன்படுத்த அதற்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வது வழக்கம். அவ்வாறு செய்யாத மாட்டை அடக்குவது மிகவும் கடினம்.
//
நீங்க யாரோ சொன்னதை வச்சு சொல்லுறிங்கன்னு நினைக்கிறேன்.
எங்கள் குடும்பத்தில் பல மாடுகள் வளர்த்துள்ளோம், எந்த உழவு மாட்டையும் "castrate" எனப்படும் காயடித்தல் செய்தது இல்லை.
கொம்பு வெட்டப்பட்டு, உடலில் சூடு வைத்த தழும்புள்ள மாடுகளை கண்டிருக்கலாம், அவையே கேஸ்ட்ரேட் செய்யப்பட்ட மாடுகள், இதனை சிலர் மட்டுமே வணிகப்பயன்ப்பாட்டிற்காக செய்வார்கள், கிராமங்களில் செய்வதில்லை, விருப்பப்பட்டால் இனவிருத்தியும் செய்யும் வகையிலே மாடுகள் வளர்க்கப்படும், சிலர் மட்டுமே "பொலிக்காளை" என இன விருத்திக்காக வளர்ப்பதுண்டு.
நாங்கள் வளர்த்த மாடுகள் எல்லாம் இயல்பானவையே.காளைகள் இனவிருத்திக்கும் பயன்படும், பசுக்கள் எல்லாம் கன்று ஈன வல்லவை. எங்களிடம் இருந்த கடைசி பசு மாட்டையும் சில மாதங்களுக்கு முன்னர் தான் விற்றோம், காரணம் பராமறிப்பு செய்ய இயலாமை.
நம்ம ஊரில எங்க இவன் நம்மளை விட பெரிய ஆளாகிடுவானோனு நினைச்சே அதெல்லாம் செய்ய "ஒரு தகுதி வேணும்" திறமை ரத்தத்துல ஓடணும்னு சொல்லி அடக்கி வச்சாங்க, இன்னிக்கு மொத்தமா நாடே அடங்கிக்கிடக்கு :-))
முகம் தொலைத்தால் முகவரியே காணாமல் போய் விடுமென்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல பதிவுலகுக்கும் பொருந்தும்.
ONE COMMENTS SHARE WITH PLUS
ஜோதிஜி,
வாங்க,நன்றி!
ஒரே நேரத்தில் வளைச்சு வளைச்சு படிக்கிறிங்க போல,நன்றி!
பகிர எல்லாம் கேட்கணுமா, நீங்க பகிர்ந்தால் ,இன்னும் நாலுப்பேருக்கு சென்றடையும், நன்றி!
Post a Comment