Sunday, March 31, 2013

என்ன கொடுமை சார் இது-12(இந்த கொடுமைய பத்திலாம் மனித உரிமை கவுன்சிலில் புகார் கொடுக்க முடியாதா,அவ்வ்,ஹி...ஹி)

# இது தப்பா சார்?

(ஓர் அரசு அலுவலகத்தில் ஓர் அதிகாரிக்கும் ஊழியருக்குமிடையே நடைப்பெற்ற கற்பனை உரையாடல்)

அதிகாரி சார் ,கொஞ்சம் நில்லுங்க ,எனக்கு ஒரு டவுட்டு ,அதை உங்களால மட்டும் தான் கிளியர் செய்ய முடியும்..

என்ன கோந்த்சாமி ,காலையிலே உனக்கு டவுட்டா, உன் கடமை உணர்ச்சியை நினைச்சா ,கண்ணு கலங்குது, கேளு..கேளு, உன்னப்போல ஒரு சின்சியர் பெர்சனுக்கு உதவலைனா அப்புறம் என்ன அதிகாரி நான்.

நீங்களே சொல்லுங்க சார், ரேஷன் கடை கெவர்மெண்டு கடைத்தானே?

ஆமாய்யா அதுல என்னா சந்தேகம்?

அப்போ கெவர்மெண்டு கடையில நான் பொருள் வாங்கினா தப்பா சார்?

எவன் சொன்னான்,தப்பேயில்லை.

ஆபிசுக்கு வரும் போதே  வழியில ரேஷன் கடையில வீட்டுக்கா நான் வாங்கின சக்கரைய ஆபீஸுக்கு எடுத்து வந்தா தப்பா சார்?

ச்சே ...ச்சே தப்பேயில்ல ஒனக்கு நல்ல குடும்ப பொறுப்பு இருக்குபா, குட் கீப் இட் அப்!

அந்த சக்கரையில டேஸ்ட் பார்க்க கொஞ்சம் எடுத்து வாயில போட்டுக்கிட்டா தப்பா சார்?

இதுல என்ன தப்பிருக்கு ,நீ காசுக்கொடுத்து வாங்கின சர்க்கரை...நீ கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்கிட்டா என்ன ,மூக்கில போட்டுக்கிட்டா என்ன, எல்லாம் உன் இஷ்டம்யா.

அப்புடி சொல்லுங்க சார், உங்களை தவிர இங்கே யாருக்குமே அறிவில்ல சார்.

ஹி...ஹி தாங்க்ஸ் ,ரொம்ப நல்லவன்யா ...அதான் என்னப்பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்க. நீ எதோ வேலை செஞ்சிட்டிருந்த போல ,சின்சியர் கய் ,யூ கேரி ஆன்!

நீங்க உங்க ரூமுக்கு போங்க சார், நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன்.

(குவார்ட்டர் புட்டியை பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கிறார்)

யோவ் என்னய்யா ,வேலையை ஆரம்பிக்கிறேன்னு சொல்லிட்டு ,சரக்க எடுக்கிற? அதுவும் ஆபீஸ் டைம்ல?

சார் சரக்கு கடையை கெவர்மெண்டு தானே நடத்துது?

ஆமாம்...அதுக்குன்னு.

அப்போ சரக்கும் சக்கரைப்போல கெவர்மெண்ட்டு பொருள் தானே...

ம்ம்...ம்ம் அப்படியும் சொல்லலாம்ம்ம்...ஆனா

என்ன நோனா, கெவர்மெண்டு பொருள் தான் சார், நான் வீட்டுக்கு எடுத்து போறதுக்காக வரும் போதே வாங்கிட்டு வந்தேன், காசு கொடுத்து வாங்கின கெவர்மெண்டு பொருளை வச்சிருக்கிறது தப்பா சார்?

ச்சே சே தப்பேயில்ல, ஆமாம் வீட்டுக்கு எடுத்து போகத்தானே ,வச்சிக்க ,வச்சிக்க ....

ஆனால் கொஞ்சமா டேஸ்ட்  பார்க்க வாயில ஊத்திப்பேன்... நீங்களே சொல்லி இருக்கீங்க, நாம காசுக்கொடுத்து வாங்கின பொருளை டேஸ்ட் பார்க்க நாம சாப்பிட்டா தப்பில்லைனு... இப்போ சொல்லுங்க  , இது தப்பா சார்?

ஙே ...நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே ...அவ்வ்.

டேஞ்சரஸ் ஃபெல்லோ இனிமே இவங்கிட்டே உஷாரா இருக்கணும் ,பீ கேர் ஃபுல்!

என்ன சார் என்னமோ சொன்னிங்களே?

நான் என்னைய சொல்லிக்கிட்டேன், வர்ரட்டா!

(ஹி...ஹி ரொம்ப கொடுமையான எதாவது செய்தி சொல்லணும்னு நினைச்சேன் அப்படி எதுவுமே சிக்கலை, அதான் இப்புடி ஒரு மொக்கையை போட்டேன், நம்ம மொக்கையை விட லோகத்திலே பெரிய கொடுமை உண்டுங்களாண்ணா?)

என்ன கொடுமை சார் இது!

--------------------

# வரிவிலக்கு அரசியல்!
சில ஆண்டுகளுக்கு முன்னர், சென்னை அருகேயுள்ள திருக்கழுக்குன்றத்தினை சேர்ந்த பள்ளிமாணவன் "ஹிதேந்திரன்" இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து ,பின்னர் அவரது உடல் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் உடலுறுப்பு தானம் குறித்து ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

இதனை மையமாக வைத்து மலையாளத்தில் டிராபிக் என்ற படம் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பினை பெற்றது,எப்பவுமே நம்ம ஊரு சரக்குக்கு நம்ம ஊரில் மதிப்பிருக்காது,அதே சரக்கு வெளியூருக்கு போயிட்டு வந்தால் மதிப்பு அதிகமாகிடும்,அதே போல "மலையாள "டிராபிக்" படமும்  தமிழில் "சென்னையில் ஒரு நாள்" என்றப்பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படமும் சுமாரா இருக்குனு கேள்வி. இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே, இதுல என்ன கொடுமையா இருக்குனு கேட்கிறிங்களா ? இருக்கு .

தமிழில் பெயர் வைத்து,தமிழ் கலாச்சாரத்துடன் உள்ள தமிழ்ப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு தமிழகத்தில் உண்டு. ஆனால் இந்த வரிவிலக்கு சென்னையில் ஒரு நாள் தமிழ்ப்படத்துக்கு கொடுக்கப்படவில்லை.

படத்தின் தலைப்பு தமிழில் தான் இருக்கு ,கதையும் கலாச்சாரச்சீர்கேடாக இல்லை, உடலுறுப்பு தானம்னு நல்ல செய்தி தான், சரி ரீ மேக் என்பதாலா என்றால் ஏற்கனவே பல ரீமேக் படங்களுக்கு வரி விலக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

படத்தை தயாரித்தது ராதிகா ஷரத்குமாரின் "ரேடான் டீவி" , ஷரத்குமார் இரட்டை இலையில மூன்றாவது இலையா ஒட்டிக்கிட்டிருக்கிற அரசியல் தலைவர், அப்படி இருந்தும் ஏன் கேளிக்கை வரிச்சலுகை இல்லைனு பார்த்தால், ஹி...ஹி படத்தை வாங்கி வெளியிட்டு இருப்பது சன் பிக்சர்ஸ் ,அப்படிப்போடு அருவாள, ஏற்கனவே கழக குடும்பத்தார் தயாரித்த திரைப்படங்களான ஏழாம் அறிவு, ஓகே.ஓகேவுக்கும் கூட வரிச்சலுகை பிரச்சினை உண்டானது. இப்போ சென்னையில் ஒரு நாளுக்கு.

சன் பிக்சர்ஸ் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஏகப்பட்ட தில்லாலங்கடிகள் செய்து அரசியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டிருந்தாலும், அதற்காக இப்பொழுது ,உடலுறுப்பு தானம் எனும் ஒரு நல்ல கருத்தாக்கத்துடன் வந்துள்ள சென்னையில் ஒரு நாள் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி இல்லாமல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர், இப்படத்திற்கு அரசியல் செய்யாமல் விரைவில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டால் கொஞ்சம் கூடுதல் நாட்கள் ஓடும் வாய்ப்புள்ளது.

(இனியா-மலையாள படங்களில் இயல்பான "திறமையை" காட்டுபவர் சென்னையில் ஒரு நாளிலும் நடித்துள்ளார்)

அரசியல் வாழ்க்கை ஒரு வட்டம் மேல இருப்பவர் கீழ வருவதும்,கீழ இருப்பவர் மேல போவதும் இயல்பே, ஆனால் மேலிர்ந்தவர் கீழ வந்ததும் மேல சென்றவர் பழி வாங்காமல் நடந்து கொள்வதே அரசியல் நாகரீகம்.

அரசியல் நாகரீகம் என்ற சொல்லே வழக்கொழிந்து விடுமோ எனும் நிலையில் தமிழகம் உள்ளதை நினைத்தால் "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என அரசியல் நீதி சொன்ன தமிழகமா இது என கேள்வி எழும்புகிறது!

என்ன கொடுமை சார் இது!

------------------

#காவல் துறை உங்கள் நண்பன்!

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் எல்லாம் ஹோலி கொண்டாடி இருக்காங்க, அட இந்தியா முழுக்க கூட கொண்டாடினாங்க அதுக்கின்னா இப்போனு கட்டைய போடாம கொஞ்சம் கவனியும் மக்களே,

ஹி...ஹி  வழக்கமா ஹோலிய சாக்கா வச்சு பயப்புள்ளைங்க ,பொண்ணுங்க மேல சாயம் பூசுறேனுனு தடவுறதுலாம் கூட நடக்கும் ,அதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான்னு விட்றலாம்.

ஆனால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள மொராதா பாத் நகரை சேர்ந்த "புத் பஜார் தானா காவல் நிலையத்தில்" பணிப்புரியும் சிலப்போலிசாருக்கும் ஹோலி கொண்டாடினா என்னனு ஆசை வந்திருச்சு ,ஆனாப்பாருங்க அன்னிக்கும் அவங்களுக்கு டியூட்டி ,அதுக்குனு ஹோலி கொண்டாடாம விட்ற முடியுமா,சாமி குத்தமாகிடாது? ஒரு தடவை முடிவு செய்துட்டா எங்க பேச்சை நாங்களே கேக்க மாட்டோம்னு உ.பி காவலர்கள் காவல் நிலையத்திலேயே ஹோலி ஹே ஹோலினு கொண்டாடி இருக்காங்க, அடக்கொண்டாட்டம்னா சரக்கு இல்லாமலா, அதுவும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷன் ஹோலினா வியாபாரிகள் தாராளமா ஸ்பான்ஸ்ர் அள்ளி விட்டிருப்பாங்க, எனவே எல்லாம் இஷ்டத்துக்கு தீர்த்தத்தை பருகிவிட்டு ஆனந்த பரவசமாகி ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்து "சகலகலா வல்லவனா" குத்தாட்டம் எல்லாம் போட்டுள்ளார்கள், சிலர் சரக்கு புட்டியை தலையில் வைத்து மாங்குயிலே பூங்குயிலேனு இந்தியில் பாடி கெரகாட்டம் எல்லாம் ஆடி அசத்தியுள்ளார்கள்.

உ.பி காவலர்கள் ரொம்ப நல்லவய்ங்களா இருப்பாங்க போல நாம மட்டும் தீர்த்தம் சாப்பிட்டு இன்பம் துய்த்தால் போதுமா நாளைய சமுதாயமாம் இளைஞர்களும் இன்பம் துய்க்க வேண்டாமா என கரிசனத்துடன், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்களை கூப்பிட்டு சரக்கு கொடுத்து குடிக்க சொல்லி இருக்காங்க, உ.பி மாணவர்கள் உருப்படாதவர்கள் போல சரக்கெல்லாம் குடிக்க மாட்டோம் ,ஆத்தா அடிக்கும்னு அடம்பிடிச்சிருக்காங்க, ச்சே இளைய சமூகத்துக்கே பெருத்த அவமானம்! இதே நம்ம பயப்புள்ளைகளா இருந்தா "மச்சி இன்னொரு குவார்ட்டர் சொல்லேன்னு ஒன்னுமண்ணா கொண்டாட்டத்தில் அய்க்கியமாகி இருப்பாங்க :-))

ஆனாலும் உல்லாச கடமை தவறாத உ.பி. காவலர்கள் அடிச்சு குடிக்க வச்சிருக்காங்க, ச்சே என்ன ஒரு நல்ல மனசு ,நம்ம ஊருலவும் தான் இருக்காங்களே காவலர்கள் ,நான் காசுக்கொடுத்து தீர்த்தம் சாப்பிட்டு வந்தாலும், வழியில நிப்பாட்டி, ஊது ,வாய தொறனு சொல்லி வாயில கூட டார்ச் அடிச்சு டார்ச்சர் செய்றாங்கய்யா அவ்வ்!

காவல் துறை உங்கள் நண்பன்! என தமிழ்நாட்டில் சொல்லி வாயாலே வடை சுடும் நிலையில், நடைமுறையில் செய்துக்காட்டிய உ.பிக்காவலர்களின் நல்ல எண்ணம் புரியாத "பாப்பரசி" மீடியாக்கள் ,காவலர்களின் குத்தாட்டத்தை எல்லாம் காணொளியாக எடுத்து தொலைக்காட்சியில் போட்டுவிட்டதால் , நல்லிதயம் படைத்த கருணை மிகு காவலர்கள் விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

நல்லதுக்கே காலமில்லையா, தான் பெற்ற இன்பம் பெறுக இவ்விளைய சமுதாயம் என சரக்கு ஈந்தோரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சும் கொடுஞ்சமூகத்தினை தட்டிக்கேட்க யாருமே இல்லையா?

அய்யகோ என்ன கொடுமை சார் இது!

செய்தி மூலம்: http://www.dinamalar.com/news_detail.asp?id=678169

நன்றி!
------------------------

# அள்ளு அள்ளு ,தள்ளு தள்ளு!
படத்தில் காண்பது ,சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை NH-45C ஆகும். இந்த இடம் பண்ருட்டி அருகே தென்ப்பெண்ணையாற்றின் அருகே இருக்கும் கண்டரக்கோட்டை(கண்டராதித்த சோழன் கோட்டை என்பதன் திரிபு) என்ற ஊருக்கு அருகில் உள்ளது .இன்னும் நான்கு வழியாக்கப்படவில்லை, அதற்கான டென்டர் விட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாச்சு. இப்போது இருப்பது இரட்டைவழிப்பாதை தான் , ஆனால் படத்தில் பார்த்தால் மாட்டுவண்டி போகும் மண்ப்பாதை போல இருக்கேனு நினைக்கலாம் ...ஹி ..ஹி உண்மையில மண்ப்பாதையே தான்.

 இங்கு தென்ப்பெண்ணையாற்றில் அரசு மணல் அள்ளும் மையம் செயல்படுகிறது , ஆற்றில் இருந்து மணல் அள்ளி அருகே கரையோரம் கொட்டி வைத்து பின்னர் லாரிகளில் ஏற்றி அனுப்புவார்கள். இவ்வாறு தினசரி பல நூறு லாரிகள் இரவும் பகலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிக மணல் லோடுடன் இப்பகுதியில் சாலையில் ஏறி இறங்குவதால் இப்பகுதியில் சில நூறு மீட்டர்களுக்கு சாலையே காணாமல் போயிடுச்சு, அவ்வப்போது மண்ணள்ளி போட்டு நிரவி விட்டுவிடுகிறார்கள். அப்படியான மண்சாலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

மழைக்காலத்தில் நிலமை இன்னும் மோசமாகிவிடும், வாகனங்கள் சேற்றில் சிக்கிவிடும், சிறிய ரக கார்கள் சிக்கி நின்றுவிடும்.  இதுக்குறித்தெல்லாம் யாரும் கவலைப்படுவதாகவே தெரியவில்லை, எப்பொழுதுமே இவ்விடம் புழுதிப்பறக்கும் மண்சாலையாகவோ அல்லது சேற்றுவயலாகவோ தான் இருக்கிறது.

(மணல் குவாரியில் கர்ம சிரத்தையுடன் மண்ணள்ளுகிறார்கள்)

இங்கு கனரக வாகனங்கள்  இயங்குவது அரசுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கும் போது சாலையை அதிக எடை தாங்கும் வகையில் தரமாக போடலாம், அல்லது அளவுக்கு அதிகமாக மணல் லோடு ஏற்றுவதை தடுக்கலாம், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை, பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன் ,2020 இல் இந்தியா தான் வல்லரசு!

என்ன கொடுமை சார் இது!
----------------

பின்க்குறிப்பு:

தகவல்,மற்றும் படங்கள் உதவி,

விக்கி,கூகிள்,தினமலர் இணைய தளங்கள்,நன்றி!
**********************

28 comments:

Anonymous said...

vovs,

அரசியல் பதிவு எதிர்பார்த்தால்....என்ன கொடுமை சார் இது!


-மாக்கான்

நாய் நக்ஸ் said...

வவ்வ்ஸ்....செம கிழி...படிக்க வந்தவங்களை...
என்ன கொடுமை சார் இது......???????


அது சரி...மினி காரில்தான் இன்னுமும் சுத்துரீரா???????

வந்த பின்னஊட்டத்தை வைத்து இந்நேரம்
பெரிய SUV வாங்கி இருக்கலாம்....

வேற எதுக்கோ சேர்க்கிறீர் போல....

ஒருவேளை நம்ம நட(ராஜ)ர்...வந்து வாங்கித்தருவார் என்று காத்திருக்கிரீரோ??? ____________________________________________________________________________________________


இன்னும் தேடுகிறீர்...

இல்லை தேடி கிடைத்த விஷயத்தை மெயில் அனுப்ப
புது மெயில் ஐடி உருவாக்க தெரியலை போல...
------------------------------------------------------------------------------------------
சாபம்.................

நல்லா இரும்...இரும்...இரும்............!!!!!!!!!?????????????

நாய் நக்ஸ் said...

வெள்ளி,,,சனி,,இன்னிக்கு ஞாயிறு...சொந்த ஊரில் கொண்டாட்டம் செம ஜோர் போல...

யோவ்வ்வ்வவ்வ் வவ்ஸ்...
சொந்தமா காச்சி குடிச்சாச்சி போல....(சுடு தண்ணி).....முந்திரி பழம் குப்பையில கொட்ட வேண்டியது...உம்மால்...திங்கள் முதல் ***********(இங்க அப்படிதான்...அரசு கண்கானிக்குதான்)
********
!?!??!?!?!?!?!??!?!?!

நாய் நக்ஸ் said...
This comment has been removed by the author.
நாய் நக்ஸ் said...

அது சரி...பண்ரூட்டி வழி உமக்கு எதுக்கு??????

ECR...பாண்டி.....அங்க சரக்கு கார்...சீட் கார்ப்பெட் அடில மறைப்பு...
கடலூர்...நெல்லி.கு.ம்.....ஆஹா....ஆஹா....ஆஹா...

இப்படிக்கா ஊரா நீர்?????????

அதான் முந்திரி கொழுப்பு...!!!!!!!

கொழுப்பை...எரிக்கவும்....உடம்புக்கு நல்லது....?????????

நாய் நக்ஸ் said...

என்ன இருந்தாலும் இப்ப எங்க வர போறீர்???

வண்டி ஓட்டி தாம்பரம் போன அயர்ச்சி வேற...

பை....நல் இரவு...விடை பெறுவது.....உங்கள்....
பொருக்கி நம்பர்.1....

(யாரும் போட்டிக்கு கிடையாது...கிளைகள் இல்லை...)

வவ்வால் said...

மாக்கான்,

நன்றி!

இதுவும் அரசியல்ப்பதிவு தானே :-))

அங்கே இங்கேனு எக்கசக்கமா படிச்சுப்புட்டேன் எப்படி எல்லாத்தையும் ஒரு வடிவில் சுருக்குவதுனு தெரியவில்லை, தொடரா போட்டால்,நானே தொடர மாட்டேன் அம்ப்புட்டு சொம்பேறி ,என்ன செய்வதுனு தெரியாம தான் கொஞ்ச நாளா பதிவே போடலை, சரி சும்மா இருக்காம எதையாவது எழுதி வைப்போம்னு இந்த கொடுமை :-))

--------------

நக்ஸ் அண்ணாத.

வாரும்,நன்றி!

உம்ம உண்மையிலே எதுனா வெறிநாய் பிறாண்டிப்புடுச்சா, இந்த பினாத்து பினாத்துறீர்.

படத்த வச்சே சின்னக்கார்னு எப்புடி ஓய் தெரியுது?

பின்னஊட்டத்தை வச்சி ஒரு லிட்டர் டீசல் கூட வாங்க முடியாது :-))

சும்மா கற்பனை பண்ணிக்க வேனாம், நான் தான் சொல்லி இருக்கேன்ல சொல்கிறேன் இரும்.

தாம்பரம் டெய்லியும் தான் போறேன் ,அங்கே போகாம எங்கேயும் என்னால போக முடியாது :-))

பைபாஸ்ல மதுரவாயலுக்கு போயி என்ன செய்ய?

Jayadev Das said...

\\.நீ டேஸ்ட் பார்க்க ஆசைப்பட்டது இதானா ... சர்க்கரை மேட்டரை சொல்லி சரக்கு மேட்டரை ஓபன் பண்ணி கவுத்துட்டானே\\ குடி குடியைக் கெடுக்கும்னு தெரிஞ்சே, அதைக் கட்டுப் படுத்தாமல் மக்களைக் காக்க வேண்டிய அரசே சாராயத்தை வித்தா இது தான் நடக்கும்.

சன் கே.டி. சகோதரர்களுக்கு ஆப்பு வைக்கணும்னா அரசு கேபிளை நன்றாகச் செயப்பட விடலாம் இப்போ செய்வதெல்லாம் சீப்பை ஒழித்து வைத்து கலயானத்தை நிறுத்தப் பார்க்கும் வேலை, இது வேலைக்காகாது.

\\பெரிய விபத்து எதுவும் ஏற்படும் வரையில் அரசு எந்திரம் கண்டுக்கொள்ளாது என்றே நினைக்கிறேன்.\\ ஆற்று மணல் கொள்ளை போவதை விட பெரிய ஆபத்து வேறொன்றும் இல்லை.

Anonymous said...

வவ்ஸ்,

ஹாட்ரிக் பின்னூட்டக்கனவில் ஒரு லோடு கண்டரக்கோட்டை மணலைக் கொட்டிய வவ்வால் ஒழிக....:-)

கொங்கு நாட்டான்.

Amudhavan said...

உங்களின் 'எல்லாமே அரசியல்' பதிவு படித்துவிட்டு அதற்கு மறுமொழி எழுதலாம் என்று பார்த்தால் அது விஸ்வரூபம் விவகாரம் அளவுக்கு விவாதிக்கப்பட்டு நூறு இருநூறு என்றெல்லாம் ஒருநாள் ராத்திரி பூராவும் உட்கார்ந்து படிக்கும் அளவுக்கு கமெண்டுகளைப் போட்டுத்தள்ளியிருக்கிறார்கள். அதில் நூறுக்காக காத்திருக்கும் நண்பர்கள் வேறு.
சரி; அந்தப் பதிவில் நான் சொல்லவந்தது என்னவென்றால் மாணவர்களின் இம்மாதிரியான போராட்டங்களிலெல்லாம் பொதுவாக ஏதாவது அரசியல் கட்சி உள்ளே புகுந்து கபளீகரம் செய்யப் பார்க்கும்.
யாரையும் உள்ளே விடுவதில்லை என்பதில் மாணவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதால் இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது.
சரியான தலைமையோ திட்டமிடுதலோ இல்லாமல் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்பிருக்கிறதே என்று. "அப்படியெல்லாம் இம்முறை நடப்பதற்கு சான்ஸ் இல்லை. ஏனெனில் போராட்டம் நடத்தும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் வழக்கறிஞர்கள். அவர்கள் பின்னணியிலிருந்துதான் சரியான திட்டங்கள் மாணவர்களுக்குத் தரப்படுகின்றன.அதனால் முன்னர்போல் நீர்த்துப்போக வாய்ப்பில்லை" என்றார்கள். இது எந்த அளவு உண்மை என்பதும் தெரியவில்லை.
(அடுத்ததாக எதைப்பற்றிய பதிவு போடப்போகிறீர்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கான அசின் படம் ரெடி பண்ணிவிட்டீர்களா?)

வவ்வால் said...

பாகவதர்,

வாரும்,நன்றி!

அரசாங்கமே வருவாய்க்கு சரக்கை தானே நம்புது, இதில படத்தில சரக்கடிக்கிற சீன் வந்தா மட்டும் எச்சரிக்கை வாசகம் போடணுமாம் :-))

அரசாங்கம் சரக்கு விக்கிறதோட ,நுகர்வோரையும் ஏமாத்துது, ஒரு குவாட்டருக்கு 5 ரூபா எக்ஸ்ட்ரா,கேள்விக்கேட்டா சரக்கு கிடைக்காது, அதை விட கொடுமை இப்போ ஒன்னு நடக்குது, எந்த அரசுமதுபான பாரிலும் உட்கார்ந்து சரக்கடிச்சா அதுக்கும் காசு(பெரும்பாலான இடங்களில்),ஏதோ ஒரு சில இடங்களில் தான் ,உட்கார காசுக்கேட்காம இருக்காங்க,இதைப்பத்தி பின்னர் பதிவு போடுகிறேன்.

# அரசுக்கேபிள் நடத்துவதில் சட்ட சிக்கல்னு சொல்லி வேண்டும்னே இழுக்கிறாங்க, ஆனால் மெத்தப்படிச்ச வழக்கறிஞர்கள் எல்லாம் கையில இருக்கும் போது வழிக்கண்டுப்பிடிக்க தெரியலை, ஹி...ஹி நானே அப்பிரச்சினைக்கு வழி சொல்லிடுவேன் ஆனால் யாரும் என்னக்கேட்க மாட்டேங்கிறாங்க :-))

# மணல் அள்ளாமலும் இருக்க முடியாது ,ஏன் எனில் கட்டுமானத்தொழில் பாதிக்கும், மணல் விலை ஏறிடும்,ஆனால் அதிகப்படியான மணலை அள்ளுகிறார்கள்,அதனை தடுக்க வேண்டியவர்களே வேடிக்கை பார்க்கிறார்கள். எல்லாமே அரசியல் தான்.
----------

மாக்ஸ்,

வாரும்,

என்ன இந்த சலிப்பு சலிச்சுக்கிறீர், வாழ்க கோஷம் விட ஒழிக கோஷம் கேட்டால் காதுக்கு குளிர்ச்சியா இருக்கும் எனக்கு :-))

இந்த பதிவில ஹாட்ரிக் பின்னுட்டம் போட்டால் கை சுலுக்கிடுமா, சும்மா போடும்,அடுத்து நீர் ஆவலுடன் எதிர்ப்பார்த்த அரசியல் பதிவு வருது, இப்போ எப்படி எழுதுவது என திங்கிங்.
-----------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி மெஹா சீரியல் போல பின்னூட்டம் இழுத்துக்கிட்டே போயிடுச்சு, மக்களும் ஆர்வமாக ,வண்டிய 100 வரிக்கும் தள்ளிக்கிட்டு வந்துட்டாங்க.

நீங்க சொன்னது போல மாணவர்களின் பெற்றோர் வழக்கறிஞராகவும் இருந்து வழிக்காட்டி இருக்கலாம்,ஆனால் அவர்களுக்கும் ஒரு அரசியல் பின்ப்புலம் இருக்கும்.

இப்போதைய போராட்டம் தன்னிச்சையாக அரசியல் இல்லாமல் கூட இருக்கலாம்,ஆனால் இதன் பலனை கவனமாக ஒரு இயக்கம் அறுவடை செய்துவிடும் சாத்தியமே உள்ளது.

மாணவர் போராட்டம் ஈழப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அஜண்டாவுடன் மட்டுமில்லாமல்,காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாகவும் கவனமாக கொண்டு செல்லப்படுவதை கவனித்தாலே புரிந்துக்கொள்ள முடியும்.

இப்போ மத்தியில் காங்கிரஸ் தான் ஆள்கிறது இன்னும் ஒரு ஆண்டுக்கு அவர்கள் இருப்பார்கள் எனும் நிலையில்,மாணவர்கள் வைக்கும் கோரிக்கையை யார் சர்வதேச அரங்கில்,ஐநாவில், மனித உரிமைக்கவுன்சிலில் பேச போகிறார்கள்,காங்கிரஸ் தானே, கோரிக்கையும் எழுப்பிவிட்டு ,காங்கிரஸையும் தமிழ்நாட்டில் இருக்க விடமாட்டோம்னு போராடினால் ,கோரிக்கையை கேட்பார்களா? கோரிக்கையை செயல்ப்படுத்த அழுத்தம் கொடுக்கனும் என்பதை விட காங்கிரசை எதிர்க்கனும் என்பதே பிரதானமாகிக்கொண்டுள்ளது, இது எப்படி நிகழ்காலத்தில் ஈழப்பிரச்சினைக்கு தீர்வை தரும், இது வரும் நாடாளுமன்றத்திற்கு பிறகு தீர்வை உருவாக்க என்பதாகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சியிடம் தான் அப்போ புதிதாக கோரிக்கையை வைக்கணும் ,இப்போ வைக்கும் கோரிக்கைக்கு வேலையே இல்லை,எனவே மாணவர்கள் தேர்தலுக்கு அப்புறமும் போராடனும், அப்படி போராடினால் விடுவார்களா? விடை தெரியாக்கேள்வி?

1967 இல் இந்தியை எதிர்க்கிறோம்னு மாணவர்களை திரட்டினார்கள், காங்கிரசை விரட்டினார்கள்,ஆனால் தேர்தல் முடிந்தவுடன் அதே காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அண்ணா தலைமையிலான அரசு ஏன் வழங்கியது?

அதற்கு பின்னர் 1971 பொது தேர்தலிலும் திமுக -காங்கிரஸ் கூட்டணி தான்.பின்னர் மீண்டும் 1981, 2004 என இன்று வரைக்கும் கழகம் காங்கிரஸ் உடன் தான்.

இந்தியை எதிர்க்கிறோம்னு காங்கிரசை எதிர்த்து சிறை சென்ற உயிர் விட்ட மாணவர்களின் கொள்கை என்ன குப்பைக்கூடைக்கா?

ஆட்சி மாற்றம் ஏற்பட மட்டுமே மாணவர் எழுச்சி ,மற்றபடி கொளகையை நிறைவேற்ர அல்ல ,இதான் அரசியல்!

# நீங்களும் அடுத்து என்ன பதிவு என்பதை என்ன படம்னு ஆர்வமாக இருக்கிங்களே :-))

ரசிகர் வட்டம் பெருசாகிட்டே போவுது :-))

கூகிளாண்டவரை நம்பினோர் கைவிடப்பார், கவலையே வேண்டாம் மஜாவா படம் போட்டிறலாம் :-))

Anonymous said...


//மாக்ஸ்,

வாரும்,

என்ன இந்த சலிப்பு சலிச்சுக்கிறீர், வாழ்க கோஷம் விட ஒழிக கோஷம்//


பெயரை மாற்றி போட்டுவிட்டீர்....


கொங்கு நாட்டான்.

Anonymous said...

Interesting.......

நன்கு சுவாரசியத்தோடு பிரச்சனைகளை அலசியிருக்கிரீர்கள்.

சிறிய பதிவாக இருப்பதால், இன்னும் அருமை.

வேகநரி said...

//வவ்வால் said... மாணவர்களின் பெற்றோர் வழக்கறிஞராகவும் இருந்து வழிக்காட்டி இருக்கலாம்//

வவ்வால், நீங்களே ஒரு வழக்கறிஞர் என்று வைச்சுக்குவோம். உங்களுக்கு ஒரு பையன் பெறந்து அவன் மாணவனாக வந்ததும் தமிழகத்தில் இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனைக்காக போராட போகிறான் என்று வைச்சுக்குவோம். நீங்க அவனுக்கு ஆலோசனை சொல்லி பொட்டு வைச்சு அனுப்புவிங்களா?

Anonymous said...

வவ்வால்,

நம்ம "சோக" நரி எப்பவோ எங்கேயோ மாணவர்களால் "பாதிக்கப்பட்டிருப்பார்" போலயே.....கடந்த இரண்டு வார காலம் எல்லோருடைய பதிவிலும் ஊளை வைத்து இருந்தது...சினிமா விமர்சனதையும் விடவில்லை அங்கும் ஒரே சவுண்ட்டு....என்னாச்சி...நரிக்கு என்னாச்சி....

---கொங்கு நாட்டான்.


வவ்வால் said...

கொங்குநாட்டார்,

ஆஹா சொன்னது நீரோ? மாற்றி சொல்லிட்டேன், இருவரும் ஒன்றுப்போல பேசுறிங்களே, எதாவது அண்டர்கிரவுண்ட் கனெக்‌ஷன் ஓடுதோ?

ஒழிக கோஷம் கேட்டாலும் எனக்கு காது குளிருது ,எனவே சத்தமாவே சொல்லும்.

அடுத்து அரசியல் அலப்பரை தான், ஆனால் பெரிய அக்கப்போரு வருமோனு பார்க்கிறேன்,வரலாற்று உண்மைகளை பேசக்கூட பயப்படும் நிலையில் என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்னு கவலையா கீது அவ்வ்!
----------

வேற்றுகிரகவாசி,

நன்றி!

கொடுமைகளை ரொம்ப நீட்டி முழக்கினா மக்கள் கடுப்பாயிடுவாங்கலே அதான் சுருக்கமாக சொல்லிட்டேன்.

ஆனாலும் நன்றாக இருக்குனு ரசித்தமைக்கு நன்றி!
-------------

வேகநரி,

வாரும்,நன்றி!

உம்ம கொள்கை என்னனு எனக்கு புரியுது, ஆனால் அதை சொன்னால் அப்படிலாம் இல்லைனு சொல்லிடுவீர் :-))

சரி என்னக்கேட்டால் ,நான் அனுப்பி வைப்பேனு தான் சொல்வேன்,ஏன்னா நானே இப்படிலாம் படிக்கிற காலத்தில செய்த ஆளுதான் :-))

என்னோட கவலை ,மாணவர்களை கொண்டு ஒரு பொது கருத்தினை மக்கள் மத்தியில் விதைத்து அரசியல் அனுகூலம் தேட அரசியல் சக்திகள் திட்டமிடுகின்றன, நம்ம ஊரில் காலம் காலமாக இதான் நடக்குது,இதனை மறுத்து இதெல்லாம் தன்னிச்சையானது என சொல்வது தம்மை தாமே மனசை தேற்றிக்கொள்ள சொல்வதே.

? said...

@வவ்வால்,

மொழி சார்ந்த இனக்கொள்கை முட்டாள்தனமானது, சிங்களவர்களும் ஈழத்தமிழரும்தான் தொப்புழ்கொடி உறவுகள், தமிழகத் தமிழரும் ஈழத்தமிழரும் அல்ல என மரபணு ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன எனவும் முந்தய பதிவொன்றில் வாதிட்டேன். அதை நிரூபிப்பது போல சிங்கள வரலாற்றினை அற்புதமாக எழுதியுள்ளார் வியாசன் http://tinyurl.com/cqtndgw படித்தீரா? (உடனே வழக்கம் போல் இலங்கை வரலாறு தெரியாம அரைவேக்காடு பதிவு போட்டுவிட்டார் என அடித்துவிடாதீர்!)

அவர் எழுதியுள்ளது போலவே தமிழ்நாட்டில் பங்காளிகளான சோழரும் பாண்டியரும் அடித்து கொண்ட போது, சோழர் ஈழப்பகுதிகளை ஆண்டதால் அங்குள்ள தமிழரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள். இந்த உறவை எதிர்க்கும் விதமாக சிங்களரும் பாண்டியரும் நெருங்கிய உறவு கொண்டு, படை உதவி மட்டுமல்லாது பெண் கொடுத்து பெண் எடுத்து நெருங்கிய உறவினராக இருந்தார்கள். ஆக தற்போதைய தமிழ் வெறியர்களின் டெஃபனிஷன் படி முதல் தமிழன துரோகிகள் - சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியன்ஸ்தான். :) ஒரே பாண்டிய ரத்தம்தான் சிங்கள உடம்பிலும் மதுரை தமிழரின் உடம்பிலும் ஓடுகிறது.

இதேமாதிரிதான் இங்கிலாந்துடன் உலகப் போர்களில் ஈடுபட்ட ஜெர்மனியிலிருந்து வந்ததுதான் இங்கிலாந்து ராஜகுடும்பம். ஆக பழய வரலாறுகளைப் பார்த்தால் இப்படிதான் ஒன்னுக்கொன்னு பின்னிகிட்டு இருக்கும். இங்கிருந்து தமிழன் போய் இந்தோனேசியாவை ஆளவில்லையா? ஆக இனபாசம் டோட்டல் வேஸ்ட். இதை பயன்படுத்தி தற்போது மாணவர்களை பகடையா ஆக்குவதைப் போலத்தான், அரசியல்வாதிகள் இனவாதத்தை மக்களை தூண்டி முட்டாளாக்கி ஆட்சிக்கு வருகிறார்கள், அது சிங்கள பாசிசமாக இருந்தாலும் தமிழ் பாசிசமாக இருந்தாலும் விளைவு மக்களின் முட்டாள்தனமும் சொல்லனாத் துயரும்தான். மனிதனை மனிதனாக மட்டும் பார்த்தால் இத்துயரில்லை.

naren said...

வவ்வால்,
கேரள, எல்லா விதத்திலும் வள்பபானதாகத்தான் இருக்கிறது ))

மாணவர்களின் போராட்டத்தை இன்னொரு வகையிலும் பார்க்கலாம்.
தற்போதிய போராட்ட நிகழ்வுகள் அனைத்தும் ”புர்ச்சி தலைவி அம்மாவின்” கடைக் கண் பார்வை அன்பினால் அப்படியே தொடர்கிறது. சாது மிரண்டால், அரசாங்க ஊழியர்கள் நடத்திய போராட்டம் என்ன ஆனதோ, அதேதான் இன்றைய மாணவர்கள் போராட்டம் ஆகிவிடும்.

தனித் தமிழ்நாடு வேண்டும் என போராட்ட உந்துதலில் கோஷமிடும் மாணவர்கள், முந்தைய தனித்தமிழ் நாடு என்று போராடிய அனைத்துவித இயக்க தோழர்கள், அவர்களின் இயக்க நிலைமையை சிந்திக்க வேண்டும். அவர்களை விட, மன வலிமை, உத்வேகம், அனைத்தையும் எதிகொள்லும் திறன் இருந்தால் அதற்காக போராடட்டும். இப்போராட்டதிற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எந்தவித வரவேற்பு அளிப்பார்கள்? யாரும் வீரபாண்டி கட்டப்பொம்மன் படம்போல போருக்கு வழியனுப்ப மாட்டார்கள். புர்ச்சி அம்மாவின் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்பதால் போராடும் வரை போராடுவோம் என்ற நிலையில் மாணவர்கள். பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

புர்ச்சி அம்மாவிற்கு, இருக்கும் ஒரே குடைச்சல், பெங்களூரு நீதிமன்றத்தில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்குதான். அதை, தன் ஆதரவினால் ஆட்சி செய்யும் மத்திய அரசால்தான் ”தீர்க்க” முடியும் என நினைக்கிறார். அதனால், எவ்வளவு பாராளாமன்ற உறுப்பினர்களை பெற முடியுமோ அவ்வளவு பெற முயல்வார். அதற்காகதான் இப்போது நடக்கும் எந்த போராட்டமானாலும் பாதிப்பு வராத ஆதரவை தருகிறார், ஒடுக்கும் நடவடிக்கையை தவிர்க்கிறார்.

மாணவர் போராட்டம், ஈழமக்களுக்கு தற்போதிய சூழ்நிலைக்கு எந்த வகையில் நன்மை தரும் என்று ஆரம்பித்து படிப்படியாக முன்னேறலாம். ஆனால் அப்படி போராட மாணவர்கள் தயாராகவும் அவர்களை வழிநடத்தவும் யாரும் இல்லை.

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,நன்றி!

//மொழி சார்ந்த இனக்கொள்கை முட்டாள்தனமானது, சிங்களவர்களும் ஈழத்தமிழரும்தான் தொப்புழ்கொடி உறவுகள், தமிழகத் தமிழரும் ஈழத்தமிழரும் அல்ல என மரபணு ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன எனவும் முந்தய பதிவொன்றில் வாதிட்டேன். அதை நிரூபிப்பது போல சிங்கள வரலாற்றினை அற்புதமாக எழுதியுள்ளார் வியாசன் http://tinyurl.com/cqtndgw படித்தீரா? (உடனே வழக்கம் போல் இலங்கை வரலாறு தெரியாம அரைவேக்காடு பதிவு போட்டுவிட்டார் என அடித்துவிடாதீர்!)
//

எனக்கு வரலாறே தெரியாது ,தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இலங்கையில் இருந்து குடியேறியவர்கள் :-))

உங்களின் கவனத்திற்கு,நீங்கள் சொன்னப்பதிவில் உள்ளது வெகு கொஞ்சமே, பலவும் சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது, மேலும் இதெல்லாம் நானே பல பதிவுகளில் பின்னூட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்,அதெல்லாம் உங்கள் கவனத்திற்கே வந்திருக்க வாய்ப்பில்லை.

சமீபத்தில் கூட ஜோதியின் பதிவில் இலங்கையின் நாகர்கள் பூர்வீகம் குறித்து ஒரு பின்னூட்டமிட்டேன், ஆனால் பாருங்க இதெல்லாம் நீங்க சொன்னப்பதிவுக்கு முன்னரே :-))

//வவ்வால்March 25, 2013 at 2:15 PM
ஜோதிஜி,

புதுசா ஒரு தொடர் ஆரம்பிச்சுட்டிங்களா, பலே!!!

நல்லா இருக்கு ஆனால் வழக்கம் போல ஆங்காங்கே சில முரண்கள் முட்டுது ,கண்ணைக்கட்டுது :-))

மேற்கொண்டு போங்க, எப்படி போகுதுனு பார்த்துட்டு ,சண்டைய ஆரம்பிக்கிறேன் :-))

// அருகில் உள்ள இந்த கண்ணீர்த் தீவுக்கு ஒரு காலத்தில் நடந்தே போயிடலாம்ன்னு சொன்னா நீங்க நம்புவீங்களா?
//

ஹி...ஹி இதை ரொம்ப நாளுக்கு முன்னர் சொல்லப்போய் எல்லாம் பிலு பிலுனு புடிச்சுக்கிட்டு ஆதாரம் காட்ட சொல்லிட்டாங்க.

வேதாரண்யத்தில் உள்ள வேதரண்யஷ்வர் என்ற சிவன் கோவிலுக்கு வழிப்பட இலங்கையில் இருந்து கோடியக்கரை வழியாக கடலில் நடந்தே வருவார்கள் என நான் கேள்விப்பட்டதை சொன்னேன் , அதற்கு ஆதாரமெல்லாம் இருக்கானு தெரியலை, அக்கோவிலுக்கு இன்றும் தர்மகர்த்தாவாக இருப்பது இலங்கை சைவ ஆதினமடத்தவரே.

அந்தக்கோயில் கதவு மூடி இருந்துச்சாம் திருநாவுக்கரசர் பாட்டுப்பாடியே திறக்க வச்சார்னு புராணம் உண்டு.

// 3000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள ஒரு இனத்தையே அழித்து முடித்தாகி விட்டது. //

3000 ஆண்டுகளா என உறுதியாக சொல்ல முடியாது ,ஆனால் இலங்கைக்கும் ,தமிழுக்கும்,தமிழர்களுக்கும் நீண்ட தொடர்புண்டு,

நமது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட நாவலந்தீவு, நாகத்தீவு,மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு என்பது எல்லாம் இலங்கை தான்னு சொல்லுறாங்க. பல்லவர்கள் நாக இளவரசிக்கும், சோழ அரசனுக்கும் பிறந்த வாரிசுனு கூட கதை இருக்கு.


வரலாற்று ,இலக்கிய ரீதியாக நிறைய இருக்கு,ஆனால் முறைப்படி ஆய்வுகள் செய்யப்படவில்லை,யாராவது செய்து இருக்கலாம்,வெளியில் தெரியாமல் இருக்கிரதோ என்னமோ.//

இலங்கை இந்திய தொடர்புகள் பற்றி பலவிதமான வரலாற்று ,இலக்கிய குறிப்புகள் இருக்கு, ஆனால் எது மிகச்சரியானது என அறுதியிட்டு கூறவியலாது.

வவ்வால் said...

# மரபணு ரீதியாக சிங்களர்களும்- ஈழத்தமிழர்களும் தான் தொப்புள் கொடி உறவு, தமிழக தமிழர்களை விடனு எப்படி கண்டுப்புடிச்சீங்க?

ஹி ...ஹி அப்போ ஈழத்தில் இருப்பவர்களுக்கு தமிழ் எப்படி தெரிய வந்தது,எல்லாம் தமிழிணைய பல்கலையில் ஆன்லைனில் தமிழ் படிச்சிருப்பாங்களோ :-))

# உங்களுக்காக கூடுதலாக ஒரு தகவலும் கொடுக்கிறேன், சிங்களர்களுக்கும் கர்நாடகத்தவருக்கும் தொப்புள்கொடி உறவுண்டு, கர்நாடகத்தில் தமிழக பல்லவர்கள் வழிவந்த பூர்வகுடிகளின்(பல்லால அரச வம்சம்- பெல்லாரி என்ற ஊருக்கும் அதனால் அப்பெயர்)வழித்தோன்றல்களே இலங்கையில் சிங்களர்களாக மாறினார்கள் எனவும் ஒரு கூற்றுண்டு.

அப்புறம் பல்லவர்களே தமிழர்கள் கிடையாது ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்னு வேற சொல்லுவாங்க :-))

கொங்கன் கடற்கரைப்பகுதி நாகவம்ச அரசவழி,நாகரதன் மக்கள் என்பார்கள் இலங்கையும் நாகவம்சம் என தொடர்பு.

தமிழ்நாட்டில் நகரத்தார் என வணிகர்களை சொல்கிறார்களே அது நாகரதன் என்பதன் திரிபு எனவும் சொல்கிறார்கள், தமிழக நகரத்தார் வம்சத்தின் பூர்வீகம் பூம்பூகார், அங்கிருந்து இலங்கைக்கு வர்த்தக தொடர்பு நீண்டகாலமாக உண்டு, மணிமேகலையில் சொல்லப்படும் மணிப்பல்லவ தீவு என்பது இலங்கை எனவும் கூறுகிறார்கள்.

மேற்கே கொங்கன் கடற்கரையில் இருந்து , கிழக்கே சோழமண்டல கடற்கரைக்கு வந்து இலங்கைக்கு தொடர்பு போகுது :-))

இதிலெல்லாம் பல ஆண்டுகள் முன் பின்னாக குழப்புவது வழக்கம்.எனவே தெளிவற்ற கருத்துக்களாக இருக்கும்.

இதெல்லாம் வச்சே பதிவு போட்டுக்கொண்டிருக்கலாம் தான், ஆனால் இதுக்கெல்லாம் ஆதாரம்னு உறுதியாக எதுவும் இல்லையே, இன்னும் தெளிவா படிச்சா பதிவாக்கலாம்னு நினைப்பேன் ,அப்படியே காலம் போயிடுது :-))

# நீங்க சொல்லும் பாண்டிய-சிங்கள கதையெல்லாம் மகாவம்ச கதையாச்சே?

பாண்டியர்களின் நட்புறவை சொல்லுறிங்க,அது இல்லாம தனியா யா வேற ஒருக்கதையும் இருக்கு. அது தெரியுமோ?

பாண்டிய மன்னன் ஶ்ரீமார சிரிவல்லபாவும் இலங்கையின் போர் தொடுத்து ஆண்டு இருக்கிறான்.

எனவே எல்லா தமிழ்நாட்டு மன்னர்களும் அவர்கள் காலத்தில் தங்கள் ஆதிக்கத்தை காட்ட இலங்கை மீது போர் தொடுத்து ஆண்டுள்ளார்கள்.

#அப்புறம் சக்ரவர்த்தி அசோகர் ,சங்கமித்திரை, மகேந்திரன் என தனது வாரிசுகளை இலங்கைக்கு அனுப்பினார் என வருவதால் எப்படியும் காலம் 2000 ஆண்டுகளுக்கு மேல் போயிடுவதால் , தமிழக இலக்கியங்கள் சொல்வதை விட பழமையாகிவிடுகிறது ,எனவே காலக்குழப்பம் நிறைய வரும்.

#

//மொழி சார்ந்த இனக்கொள்கை முட்டாள்தனமானது, //

நேஷனாலிட்டி மற்றும் எத்தினிசிட்டி வித்தியாசம் தெரியாம ,நீங்க மொழி இனவாதம்னு எல்லாம் பேசுவதால் மேற்கொண்டு என்ன பேசி உங்களுக்கு புரிய வைக்க?

வவ்வால் said...

நரேன்,

வாரும்,நன்றி!

கேரளத்தின் "வளம்" வியக்க வைக்கிறது :-))

//மாணவர்களின் போராட்டத்தை இன்னொரு வகையிலும் பார்க்கலாம்.
தற்போதிய போராட்ட நிகழ்வுகள் அனைத்தும் ”புர்ச்சி தலைவி அம்மாவின்” கடைக் கண் பார்வை அன்பினால் அப்படியே தொடர்கிறது. சாது மிரண்டால், அரசாங்க ஊழியர்கள் நடத்திய போராட்டம் என்ன ஆனதோ, அதேதான் இன்றைய மாணவர்கள் போராட்டம் ஆகிவிடும்.
//

அஃதே,அஃதே!

இதனையே முந்தைய பதிவிலும் அலசினேன்.

எல்லாமே அரசியல்.

கான்கிரஸ் இலங்கைக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது(செய்தால் சொந்த செலவில் சூன்யமாக அதுவும் மாட்டிக்கொள்ளும்)

ஆனால் மாணவர்கள் இப்போது வைத்துள்ள கோரிக்கைகளை செயல்ப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பதுவும் காங்கிரசே, செய்ய மாட்டாங்கன்னு தெரிஞ்சே கோரிக்கை வைப்பதுவும், பின்னர் அவங்களை எதிர்த்தே கோஷமிடுவதும், எக்கசக்க முரணாக இருக்கு அவ்வ் :-))

எனவே இப்போராட்டம் என்பது தேர்தல் வரைக்கும் தான் ,அப்புறம் வரும் ஆட்சி(யாராக இருந்தாலும்) கோரிக்கை வைத்து தொடருமா?
ஒன்னுமே விளங்காம நாமும் சவுண்டு விட்டு வைப்போம்னு எல்லாம் பேசிட்டு இருக்காப்போல எனக்கு தெரியாது.

எனக்கும் யாரையும் நம்ப முடிவதில்லை, எல்லாமே நரிக்கூட்டமா இருக்காப்போலவே தெரிகிறது.

சரி வாங்க நாமும் குரல் விட்டு வைப்போம் இல்லைனா இணைய சேகுவேராக்கள் தமிழின துரோகினு சொல்லிடுவாங்க :-))
-----------

கொங்குநாட்டார்,

நரிக்கு எங்கோ சூடு வச்சிருப்பாங்க போல :-))

? said...

//எனக்கு வரலாறே தெரியாது //

அப்படி வாரும் வழிக்கு. விக்கீபீடியாவை படித்து விட்டு ஐராவதம் மகாதேவன் ரேஞ்சுக்கு ஒருத்தனுக்கும் வரலாறே தெரியலன்னா எப்புடி?

//பாண்டிய மன்னன் ஶ்ரீமார சிரிவல்லபாவும் இலங்கையின் போர் தொடுத்து ஆண்டு இருக்கிறான்.//

அவனெல்லாம் ரொம்ப லேட்டு.அவன் காலம் கிபி 830–862. ஆனா பாண்டுவில் ஆரம்பித்து 6 பாண்டிய அரசர்கள் கிபி-யிலேயே இலங்கையில் கடை போட்டு உள்ளார்கள். படையெடுத்தானுகளோ நட்புறவுடன் இருந்தார்களோ ஆனா விடயம் என்னவெனில் பாண்டியருடைய ரத்தம் சிங்கள இனத்தில் உள்ளது என்பதுதான். அவர்கள் போட்டதை குடும்ப சண்டை என வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

மற்றவற்றை மகாவம்ச கதை என ஒதுக்கினாலும் இலங்கையின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் காலத்தின் ஆட்சியாளனான சிங்கள அரசனான (?) பண்டித பராக்கிரமபாகுவின் பாட்டன் பாண்டியனே. அது மட்டுமல்ல பிற்பாடு 18 ம் நூற்றாண்டு வாக்கில் மதுரையில் நாயக்கர்களின் ஆட்சி வந்த போதும் சிங்களர்கள் நாயக்கர்களுடன் மணஉறவு கொண்டுள்ளனர். அப்படி நிறுவப்பட்டதுதான் கண்டி ராஜவம்சம். ஆக மதுரைத்தமிழ் - சிங்களம் சேம் பிளட்! இதை மரபணு ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துவதுதான் அழகு.சிங்களம் = வங்கம் + தமிழ்+ லோக்கல் மரபணுக்கள். பார்க்க உமது பேவரைட் விக்கீபீடியா!


//நேஷனாலிட்டி மற்றும் எத்தினிசிட்டி வித்தியாசம் தெரியாம ,நீங்க மொழி இனவாதம்னு எல்லாம் பேசுவதால் மேற்கொண்டு என்ன பேசி உங்களுக்கு புரிய வைக்க?//

அடங்கொன்னியா, முந்தய பதிவொன்றில் நான் உம்மகிட்ட போட்ட போட்ட பிட்டை திருப்பு எங்கிட்டயே போட்டு தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையே மிஞ்சிட்டீர். நீரொல்லாம் அரசியல் பதிவு போடுறதை விட்டுபிட்டு அரசியல்ல குதிச்சால் நல்லா சில்லரை தேத்தாலாம் ஒய்!

? said...

//சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட நாவலந்தீவு, நாகத்தீவு,மணிமேகலையில் வரும் மணிபல்லவத்தீவு என்பது எல்லாம் இலங்கை தான்னு சொல்லுறாங்க. பல்லவர்கள் நாக இளவரசிக்கும், சோழ அரசனுக்கும் பிறந்த வாரிசுனு கூட கதை இருக்கு.//

ஆங், பாண்டியனுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டே இலங்கையின் படையெடுத்தது போலயே, நீங்க சொன்ன மாதிரி சிங்கள ரத்தம் உள்ளதாக கருதப்படும் பல்லவனுங்களும் இலங்கை மீது படையெடுத்து உள்ளார்கள்.

வரலாறு நன்றாக பதிவு செய்யப்படும் இக்காலத்திலேயே தனது நலன் காக்க, இவ்வளவு திரிபு வேலைகள் செய்து வரலாற்றை மறைக்கும் ஆட்கள் இருக்கும் போது அக்காலத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பது ஊகிக்க முடியாதது அல்ல!

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,

ஐராவதம்,அமராவதினுலாம் சொல்லுறிங்க ,ஒரே கேராக்கீது.

ஏன் அதோட நிப்பாட்டிப்புட்டிங்க, அப்படியே அமர்த்யா சென்,ரோமிலா தாப்பர்,ராமச்சந்திர குகா, கே.ஏ.நீலக்கண்ட ஷாஸ்திரி,புளுடார்க்,அரிஸ்டாட்டில்,ஹிரோட்டடஸ்,டாலமினு அடுக்கி இருந்தீங்கன்னா, நான் அப்படியே பிலாக்கை இழுத்து மூடிப்புட்டு காசி,ராமேஷ்வரம்னு பரதேசியா ஓடிப்போயிருப்பேன்ல :-))

பாண்டியன் ரத்தம் கலந்துச்சு என்பதற்கா பாண்டியன் எப்படி தமிழினத்துரோகியாவார்கள், ரத்தக்கலப்புலாம் நடந்தப்பின்னும் தற்காலத்தில் தமிழர்களை அழிக்க நினைக்கும் ,இனப்படுகொலை வெறியர்களான சிங்களர்கள் தான் தமிழினத்துரோகி ஆவார்கள்.

# முன்னர் நீங்க போட்ட பிட்டு தான் ஆனால் அது பினாத்தல் பிட்டு, எத்தினிசிட்டினா என்னனு புரிஞ்சிக்காம போட்டது ,அதுவே புரியாமல் மொழி இனவாதம் முட்டாள் தனம்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களேனு சொன்னது.

நிலம் சார்ந்த இனவாதத்தில் பல்மொழி இருப்பதால் ,ஒரு இனம் என்பதை மிகத்தெளிவாக வரையறுக்க மொழியே பயன்ப்படும் என்பதால் ,குறிப்பிட்ட இனம் என கூற மொழி மிக அவசியம். மொழியை பின் தள்ளினால் அதை விடபெரிய நிலம் சார்ந்து உருவாவது பேரின வாதமாகிவிடும்.

உங்களுக்கு இனம் என்றால் என்ன? அதன் பண்புகள் என்னனே புரியலையே அவ்வ்.

உங்களுக்கு நல்லா தெரிஞ்ச பிரிட்டீஷ் நில இனப்பிரதிகளான இங்கிலீஷ்,ஸ்காட்டிஷ்,ஐரிஷ் வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் மொழியே, ஏன் மிக நன்கு வளர்ச்சியடைந்த நாட்டிலேயே மொழியை பின் தள்ள முடியாமல் போக காரணம் என்னனு சிந்தித்துப்பார்க்கவும்.

# //ஆங், பாண்டியனுங்க கல்யாணம் பண்ணிக்கிட்டே இலங்கையின் படையெடுத்தது போலயே, நீங்க சொன்ன மாதிரி சிங்கள ரத்தம் உள்ளதாக கருதப்படும் பல்லவனுங்களும் இலங்கை மீது படையெடுத்து உள்ளார்கள்.//

எல்லா தமிழக மன்னர்களும் தங்கள் படைவலிமையைக்காட்ட இலங்கை மீது போர்த்தொடுத்தார்கள் என சொல்லிவிட்டேனே. அப்புறம் என்ன ?

? said...

//உங்களுக்கு இனம் என்றால் என்ன? அதன் பண்புகள் என்னனே புரியலையே அவ்வ். உங்களுக்கு நல்லா தெரிஞ்ச பிரிட்டீஷ் நில இனப்பிரதிகளான இங்கிலீஷ்,ஸ்காட்டிஷ்,ஐரிஷ் வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் மொழியே, ஏன் மிக நன்கு வளர்ச்சியடைந்த நாட்டிலேயே மொழியை பின் தள்ள முடியாமல் போக காரணம் என்னனு சிந்தித்துப்பார்க்கவும்//

அவர்களுக்குள் மொழி வேறுபாடு மட்டும் அல்ல. அவர்கள் வேறு பழங்குடி இனத்திலிருந்து தோன்றிவர்கள். குறிப்பாக இங்கிலீசுகாரனுவ வெளியிலிருந்து வந்து ஆட்டைய போட்டவர்கள். இவர்களுக்குள் நிலம் சார்ந்த வேறுபாடும் உண்டு (அதாவது உம்ம கருத்துப்படி பேரினவாதமாம்!).மொழி இன்று முக்கிய பிரச்சனை அல்ல. இப்போது எல்லா இனத்தவரும் அதிகமாக ஆங்கிலமே பேசுகிறார்கள். குறிப்பாக சுதந்திர நாடான ஐயர்லாந்தின் ஆட்சி மொழியாகவும் மற்றும் அதிக மக்களால் பேசப்படும் மொழி ஆங்கிலமே.

ஆனா அவனுக மொழிக்காக அடிச்சிகிட்டாலும் பெரியார் சொன்னதுதான நினைவுக்கு வருது - முட்டாள்தனம் என்பது தமிழனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல!

//பாண்டியன் ரத்தம் கலந்துச்சு என்பதற்கா பாண்டியன் எப்படி தமிழினத்துரோகியாவார்கள்//

பாண்டியன்கள் துரோகிகள் நான் சொன்னதாக எழுதவில்லை. சரியாக படிக்கவும். இப்போது தமிழ் பாசிச கும்பல் சிங்களம் என்று சொன்னாலே அடிக்குறானவ. அவனுக கருத்துப்படி எடுத்துக் கொண்டால் சிங்களவர்களுடம் மண உறவு கொண்டதாலேயே பாண்டியர்கள் துரோகி ஆகிவிடுவார்கள் என்றேன்.

//நான் அப்படியே பிலாக்கை இழுத்து மூடிப்புட்டு காசி,ராமேஷ்வரம்னு பரதேசியா ஓடிப்போயிருப்பேன்ல :-))//

அரசியல்வாதின்னு சொன்னதும் நம்மூர் தலைவர்கள் ராஜனாமா பண்ணீட்டு போயிருவேன்னுன்னு பயமுறுத்த மாதிரியே ஆரம்பிச்சுடீங்க பாருங்க. உம்ம விட்ட இப்படி பல்சுவை பதிவு, அதுவும் பயமுறுத்தாத சுலப தமிழில் எழுத ஆள் உண்டா சாமி?

ஆனாலும் பின்னூட்டம் போட்டே பலரை ஓட்டி விட்ட புண்ணியவான் நீங்கள். உங்க ஓடிப்போயிருவேன் டயலாக் படித்ததும் இந்த காமடி சீன் நினைவுக்கு வந்தது என்சாய்!

http://www.youtube.com/watch?v=4Zlkpccw7q4

குறிப்பா 6.30 க்கு அப்புறம் வர்ற ஐசரி டயலாக்கை கவனியும். ;)

வவ்வால் said...

நந்தவனம்,

வாரும்,

அயர்லாந்தில் எல்லாம் பிரச்சினை வெடிச்சு,ஒரு தீர்வு உருவாகி,இப்போ எல்லாம் ஆங்கிலம் படிப்போம்னு தானே படிக்கிறாங்க, இங்கே இன்னும் எந்த தீர்வும் வரவில்லை, ஒரு தனிநாடு/மாகாணம் கிடைச்சு அப்புறம் அவங்களே சிங்களம் படிச்சா படிச்சிட்டு போகட்டுமே.

இந்தி வேண்டாம்னு போராடின தமிழ்நாட்டில இப்போ இந்தி படிக்காமலா இருக்காங்க, திணிப்புக்கும், விரும்பி படிப்பதற்கும் வித்தியாசம் இருக்குல்ல?

முட்டாள் தனம் உலகம் முழுக்க இருக்கவே செய்யுது,ஆனால் வெள்ளைக்காரன் செஞ்சா அது முட்டாள் தனம் இல்லைனு நம்புறது வழக்கா போச்சு :-))

# துரோகிகள் ஆகிடுவாங்கன்னு சொல்லிடுவாங்கனு ,நீங்களா சொல்லிக்கிட்டா எப்பூடி,அது நீங்களே நினைப்பதால் தானே? அதான் நான் சொன்னது.

# ஐஜி எனக்கு தெரியும் ரேஞ்சில , பேரை சொல்லி பயம்முறுத்தினா என்ன செய்ய ,ஏதுடா வம்பா போச்சுனு ஓட வேண்டியது தான்.

அப்புறம் எதாவது சொன்னால் வரலாறு.காம்ல இருந்து ஐராவதம்,அமராவதினு ஆதாரமா கொட்டிட மாட்டிங்களா :-))

# என்னால ஓடிப்போனவங்கன்னு யாரும் இல்லை,ஆனால் ஓடிப்போக முடிவெடுத்ததும்,காரணம் சொல்ல நான் கிடைச்சிட்டேன் போல :-))

# ஐசரி வேலன் போல சங்கூ ஊத தயாரா இருக்கிங்க போல,ஆனால் ஐசசியை கூப்பிட்டு வச்சு கவுண்டர் குமுறினத பார்க்கலை போல :-))

நாமளும் கவுண்டர் போல தான் மடக்கி வச்சு குமுறிடுவோம்ல :-))

வேகநரி said...

சகோ நந்தவனத்தான், இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் சிங்களவர்களும் தமிழர்கள் மாதிரி இந்தியாவுடன் தொடர்புடையவர்கள் என்று சொன்னதும் வியாசன் வேறு வழியின்றி சிங்களவர்களும் ஈழத்தமிழரும் தொப்புழ்கொடி உறவுகள் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்.பொதுவா இவங்க ஆதரவாளர்கலெல்லாம் சிங்களவங்க காண்டுமிரண்டி இனம் சேர்ந்து வாழவே முடியாது என்று தான் சொல்லி திரிபவர்கள். தமிழக சீமான் வகைகளை குளிர்விக்க வியாசன் - இந்திய ப‌ல‌ம்வாய்ந்த‌ பார்ப்ப‌ன‌ர்க‌ளைத் - என்று ஜாதி பாவித்திருக்கிறார். ஆனால் உலகத்தின் சிறந்த தமிழ் பெண்மணிகள் என்று ஜெயலலிதாவை ஒரு பதிவில் எழுதியிருந்தார். அப்போ பர்ப்பன ஜாதி வரவில்லை. வெளிநாட்டில் இருந்து ஈழம் கேட்கும் கூட்டத்திடம் நான் கண்டது கடுமையான இந்திய விரோதம்.ஆனால் தமிழகத்திற்குள் வரும் போது மட்டும் இந்திய விரோதம் பார்பன ஜாதியை மட்டும் தாக்குவதாக வேடமிடும். மற்றது இந்தியாவின் வெளியுறவு கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்று இவர்கள் பாடம் சொல்லி தருவார்கள்.

வளரும்கவிதை / valarumkavithai said...

அசின் ரசிகருக்கு அவ்வ்வ் நன்றி.
உங்க கேரக்டரப் புரிஞ்சிக்கவே முடியலயே... உலகப் பிரச்சினையிலிருந்து உள்ளுர் மணல் கொள்ளை வரைக்கும் எழுதுறீங்க.. நடுவுல நம்ம அசினைக் கொணாந்து விட்டுர்ரீங்க...?