Saturday, October 05, 2013

திரும்பிப்பார்-4: மூடர்கூடம்-1: நிழல் எங்கே?


(இப்படி சாய்வாக படுத்தால் நிழல் விழாதுனு தெரிஞ்சி இருக்கும் போல ஹி...ஹி)


முன்குறிப்பு:

கொஞ்ச நாள் இடைவெளி விட்டுப்போனதால், ஸ்டார்ட்டிங் டிரபிள் ஆகிடுச்சு,எனவே ஆரம்ப பத்திகளில் கொஞ்சம் அனத்தி வச்சிருக்கேன் ,படிக்க சலிப்பூட்டலாம் எனவே கோடிட்ட பகுதிகளுக்கிடைப்பட்ட பகுதிகளை தவிர்த்துவிட்டு ,நேராக பதிவுக்கு செல்ல விரும்புவர்கள் செல்லலாம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சில பல நாட்களாக பதிவெதுவும் எழுத இயலவில்லை... வெட்டி முறிக்கிற வேலையெல்லாம் இல்லை என்றாலும் ஏனோ வெட்டித்தனமாக பதிவெழுதாமல் சும்மா உலாத்திக்கொண்டேயிருந்தேன்,ஆனாலும் பாருங்க நம்ம பாசக்கார சனங்கள் மறந்து விடாமல் நம்ம கடைக்கு வந்து போயிட்டு இருந்தாங்க ,எனக்கே அது பேராச்சர்யமாகத்தான் இருக்கு , நம்மளையும் மதிச்சு நாலுப்பேர் வந்து படிச்சிட்டு போறாங்களே ,அதுவும் பழைய பதிவகளை!

சொன்னா நம்ப மாட்டிங்க,ஆனாலும் நானே சொன்னப்பிறகும் நம்பாம போனிங்கன்னா நல்லா இருக்காது ,எனவே கொஞ்ச நேரம் நம்புணாப்போல ஒரு ஆக்ட் கொடுங்க போதும், கோடான கோடிப்பேர்கள் ஏன் பதிவெழுதவில்லைனு கவலையோட நலம் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க, ஹி..ஹி நம்புற மாதிரியே இல்லையேனு நினைக்கப்படாது...நம்பணும்! அட அதுக்கூட பரவாயில்லைங்க, வேற்றுக்கிரகத்தில இருந்தெல்லாம் ,ஏன் பதிவெழுதவில்லைனு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க, இதையும் நம்ப மாட்டிங்களே, ஏலியன் என்றால் வேற்றுகிரகவாசி தானே? நம்ம பதிவ ஏலியன்ஸ் கூட படிக்கிறாங்க, பின்னூட்டமெல்லாம் போடுறாங்க!(ஹி..ஹி பதிவர் ஏலியன் பின்னூட்டத்தில் விசாரிச்சதை தான் இப்படி சொல்லிக்கிட்டேன்!)

நட்பக்கூட கற்பைப்போல எண்ணும் நல்ல மனசுக்காரன் (அது யாரா? ஹி...ஹி அடியேன் தான்)என்பதால், நண்பர்களின் அவாவிற்கிணங்க மீண்டும் அடியேனது பதிவுலக பரா(அ)க்கிரமங்கள் தொடங்குகிறது, பயணங்கள் முடிவதில்லை!

தொடர்ந்து ஆதரவளித்து ,என்னை(யும்) எழுத வைக்கும் தெய்வங்களான "பதிவுலக அன்பர்களுக்கு" கோடான கோடி நன்றிகள்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இனிமே தான் மெயின் ரீல் ஓடப்போகுது... படிங்க ..படிங்க!

பதிவர் "தி.ந.முரளிதரன்"(http://tnmurali.blogspot.in)பதிவில் உச்சி வெயில் நேரத்தில் ஒரு கட்டமைப்பின் நிழல் தரையில் விழாது என்ற தொடர்பில் ஒரு சிறிய உரையாடலை துவக்கிவிட்டேன் (உண்மையில் உரையாடல் துவங்கிய இடம் நம்பள்கி பதிவாகும்),அப்பொழுது பூமத்திய ரேகைப்பகுதியில் மட்டும் தான் அப்படி நிகழும் என்பதான கருத்தினை  முன் வைத்தார்கள்,இந்தியாவிலும் நிழல் விழாமல் இருக்கும், சிறு குச்சியை வைத்து செய்துப்பார்க்கலாம் என சொன்னதை , நேரடியாக செய்துப்பார்த்து படமெல்லாம் எடுத்துப்போட்டு பதிவிட்டு கலக்கியிருந்தார் "தி.ந.மு".

அதனை ஒட்டி நாமளும் ஒரு "நிழல் பரிசோதனை "செய்து பார்த்து படமெல்லாம் எடுத்தாச்சு ,ஆனால் பதிவாக்க இப்போது தான் முடிஞ்சது, ஹி...ஹி இனிமே சோதனை உங்களுக்கு தான் படிங்க...படிங்க!

பூமி:




நாம் வாழும் பூமியானது சூரிய குடும்பத்தில்(ஹி...ஹி யாரும் மஞ்சத்துண்டு குடும்பத்துடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்) மூன்றாவதாக உள்ள ,உயிர் வாழும் சூழல் உள்ள ஒரே கிரகம் ஆகும்.

முழுக்கோளமாக இல்லாமல் துருவப்பகுதிகளில் தட்டையாக உள்ள "oblate spheroid" வடிவ கோளம், தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது, இந்த சாய்வுக்கும் ஒரு விவாதம் இருக்கு விரைவில் தனியாவர்த்தனமாக சொல்கிறேன்!

சுமார் இருபத்தி நான்கு மணி நேரத்தில் தன்னை தானே சுழன்றுக்கொண்டு ,365.25 நாட்களில் நீள்வட்டப்பாதையில் சூரியனை சுற்றி வருகிறது.

பூமியின் மீது செங்குத்தாகவும், கிடைமட்டமாகவும் கற்பனையான கோடுகள் வரைந்து பகுதி வாரியாக பிரித்து குறிப்பிடுவது வழக்கம்,இம்முறையினை அறிவியல் முறைப்படி முதன் முதலில் செய்தவர் கிரேக்க ரொமானிய வானவியல் நிபுணர் 'தாலமி" (Claudius Ptolemy-AD 90 – c. AD 168)ஆவார்.பிறப்பால் இவர் ஒரு பூர்வீக எகிப்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்க்க ரேகை( longitude):




செங்குத்தாக வரையப்பட்ட கோடுகள், ஒரு கோளம் 360 டிகிரிகளை கொண்டது என்பதால் 360 கோடுகள் வரையப்பட்டுள்ளன. துருவங்களில் குறுகியும், நிலநடுக்கோட்டில் அகன்றும் இருக்கும்.

பூமி ஒரு சுற்று சுழன்றால் =360 டிகிரி

இதற்கு தேவையான நேரம்= 24 மணிகள்

எனவே ஒரு டிகிரி கடக்க ஆகும் நேரம்= 24*60/360
                                                                     =4 நிமிடங்கள்.

எனவே ஒவ்வொரு தீர்க்க ரேகைக்கும்( longitude) இடையே நான்கு நிமிட வித்தியாசம் இருக்கும்.

ஒருவர் கிழக்கு நோக்கி சென்றால் ,ஒவ்வொரு டிகிரி கடக்கும் போதும் நான்கு நிமிடம் முன்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், அதே போல மேற்கு நோக்கி சென்றால் ஒவ்வொரு டிகிரிக்கும் நான்கு நிமிடம் பின்னோக்கி செல்வதாக கொள்ளப்படும், எனவே செல்லும் திசை,கடக்கும் டிகிரிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப நேரத்தினை திருத்தி வைத்துக்கொள்வார்கள்.

180 டிகிரி தீர்க்க ரேகையை "சர்வதேச நாட்க்கோடு என்பார்கள். சர்வதேச நாட்க்கோட்டில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கழித்துவிடுவார்கள், மேற்கு நோக்கி பயணித்தால் ஒரு நாளினை கூட்டிக்கொள்ள வேண்டும். இதனை மையமாக வைத்து "Around the world in 80 dayS' என்ற ஜீல்ஸ்வெர்ன் நாவலில் கதை சொல்லப்பட்டிருக்கும்.

நிழல் விழுமா ,விழாதானு சொல்ல எதுக்கு ,அட்ச ரேகை,தீர்க்க ரேகைனு சுத்தி வளைச்சு சொல்லிக்கிட்டுனு பொலம்பாதிங்க, கொஞ்சம் அடிப்படை சொல்லிட்டா ,பின்னர் சொல்வது எளிதாக புரியும் என்பதாலே சொல்ல விழைகிறேன்!

ஒரு நாளில் பகற்பொழுதின் நீளம் சுமார் 12 மணி நேரம் என வைத்துக்கொண்டால், அதற்கான தீர்க்க ரேகை கோணத்தின் அளவு 180 டிகிரிகள் ஆகும், சூரிய உதயம் 0 டிகிரியில் ஆரம்பித்து , 180 டிகிரியில் அஸ்தமனம் என ஒரு அரைவட்டமாக அமையும் என புரிந்துக்கொண்டால் போதும்.(நாம இருக்கும் இடத்திற்கு ஏற்ப தீர்க்க ரேகை டிகிரி இருக்கும், ஆனால் துருவ வட்டங்கள் நீங்கலாக மற்ற எல்லா இடத்திலும் பகற் பொழுதுக்கு மொத்தம் 180 டிகிரி ,அரைவட்டம் ஆக அமையும், என்பதால், ஆரம்பம் 0,முடிவு 180 டிகிரி என உதாரணமாக சொல்லியுள்ளேன்)

அட்ச ரேகை( Latitude):

கிடைமட்டமாக பூமியின் மீது வரையப்பட்ட கோடுகள், இவை வட்ட வடிவில் பூமியினை சுற்றி அமைந்திருக்கும். துருவத்தில் சிறிய வட்டமாகவும், மையத்தில் பெரிய வட்டமாகவும் இருக்கும்,ஒன்றுக்கொன்று இணையான கோடுகள். மிகப்பெரிய வட்ட வடிவ கோடே "நிலநடுக்கோடு" எனப்படுகிறது.

நில நடுக்கோடு பூமியினை வட,தென் துருவ அரைக்கோளங்களாக பிரிக்கிறது. தீர்க்க ரேகைப்போல 360 டிகிரிகளாக இல்லாமல் வட துருவம் முதல் தென் துருவம் வரையில் 180 டிகிரிகளுக்கு மட்டுமே வரையப்பட்டவை அட்ச ரேகைகள்.

நில நடுக்கோட்டினை  0 டிகிரியாக வைத்து வட துருவ கோளம் 90 டிகிரிகள், தென் துருவ கோளம் 90 டிகிரிகள் ஆகும்.

பூமி பரப்பில் எந்த ஒரு இடத்தினையும்,அட்ச,தீர்க்க ரேகைகளை குறிப்பிட்டே சொல்லிவிட முடியும், இவை ஒரு கிரிட் ஆக மொத்த பரப்பினையும் பிரிக்கிறது.

வட கோள பகுதி அட்ச ரேகைகள் "+" குறியீடாக அல்லது வடக்கு என குறிப்பிட்டும், தென் கோள அட்ச ரேகைகள் "-" குறியீடாக அல்லது தெற்கு என குறிப்பிட்டும் சொல்லப்படுகிறது.

தீர்க்க ரேகைகளை வைத்து ,கிழக்கு,மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பூமிக்கோளமானது வட கிழக்கு,வட மேற்கு, தென் கிழக்கு,தென் மேற்கு என நான்கு கால் கோளங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அட்சக்கோடுகள் இணையானவனை , எனவே ஒவ்வொரு அட்ச டிகிரிக்கும் இடைப்பட்ட தூரம் 111 மைல்கள். ஒரு டிகிரி என்பது 60 நிமிடங்கள், ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள் என சிறிய அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடத்தின் அட்ச ரேகையை இன்னொரு இடத்தின் அட்ச ரேகையுடன் ஒப்பிட்டு ,இரு இடங்களுக்கும் இடையே உள்ள தொலைவினை கணக்கிட முடியும்.

கடற்பயணத்தின் போது தொலைவினை இப்படித்தான் கணக்கிடுவார்கள். கோணத்தில் சொன்னால் ஆர்க் டிஸ்டன்ஸ் அதனை மைலாகவோ,கிலோ மீட்டராகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு நிமிடம் என்பது 1.57 மைல்கள் ஆகும், இதனையே நாட்டிகல் மைல் என சொல்கிறார்கள்.

சூரியனின் நிலை:

சூரிய உதயம் ,அஸ்தமனம் என ஒரு நாளில் கிழக்கு ,மேற்காக சூரியன் தீர்க்க ரேகை மார்க்கத்தில் பயணிக்கிறான்(இது ஒரு தோற்ற நிகழ்வே ,சூரியன் நிலையானது ,பூமி மேற்கில் இருந்து கிழக்காக சுழல்கிறது என்பதை அனைவரும் அறிவோம்)

அதே போல வடக்கு ,தெற்காகவும் சூரியன் பயணிப்பதாக ஒரு தோற்ற நிகழ்வு உண்டு.

நிலநடுக்கோட்டில் இருந்து 23.5 டிகிரி வடக்கில் செல்லும் அட்ச ரேகையினை கடக ரேகை என்பார்கள், இக்கோடு இந்தியாவின் வழியேயும் செல்கிறது, இந்தியாவை நீள் வாக்கில் சரிபாதியாக பிரிக்கிறது எனலாம்.



கிழக்கே மிசோராமில் இருந்து மேற்கே குஜராத்தின் புஜ் பகுதி வழியாக "கடக ரேகை" செல்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் தான் இந்தியாவின்(நிலப்பரப்பில்) கிழக்கு முனை உள்ளது இந்தியாவின் முதல் சூரிய உதயம் அங்கு தான் நிகழும்,அருணன் = சூரியன், அஜலம்= மலை, கடக ரேகையில் சூரியன் இருக்கும் போது நேராக மலையில் இருந்து எழுவது போல அப்பகுதியில் தெரிவதால் அருணாச்சல பிரதேசம் எனப்பெயர் வைத்திருக்கக்கூடும்.

வடக்கிழக்கு மாநிலங்கள் ஏழுக்கும் அஸ்ஸாம் ஸ்டேண்டர்டு டைம் எனப்பயன்ப்படுத்துகிறார்கள். IST  விட சுமார் இரண்டு மணி முன்னர் இருக்கும்,

(போபால் அருகே சாலையை கடக்கும் கடக ரேகை)

இந்தியா நில நடுக்கோட்டிற்கு வடக்கே உள்ள நாடு ஆகும்.

தென் கோளத்தில் நில நடுக்கோட்டிற்கு தெற்கே 23.5 டிகிரி தெற்கில் செல்லும் கோட்டினை "மகர ரேகை" என்பார்கள். இக்கோடு ஆஸ்திரேலியாவை இரண்டாக பிரித்தவாறு செல்கிறது.

பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்வாக* சுழல்வதாக சொல்லப்படுவதால் , சூரியன் கடக ரேகையில் இருந்து , மகர ரேகைக்கு செல்வது போல ஒரு தோற்ற நிகழ்வு ஏற்படுகிறது.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்நிகழ்வு நடைப்பெறும், அதாவது கடக ரேகையில் இருந்து மகர ரேகைக்கு செல்ல 6 மாதங்கள், பின்னர் அங்கிருந்து மீண்டும் கடக ரேகைக்கு வரும். ஒரு ஆண்டில்  வடக்கு-தெற்கு- வடக்கு என சூரியன் பயணித்து ஒரு சுற்றினை பூர்த்தி செய்கிறது. அதாவது கடக- மகர ரேகைக்கிடைப்பட்ட பகுதிகளின் வழியாக ஆண்டுக்கு "இரு முறை" சூரியன் செல்கிறது.

23.5 டிகிரி கடக ரேகை முதல் 23.5 டிகிரி மகர ரேகை வரையில் மொத்தம் "47" டிகிரிகள் ,இதனை கடக்க ஆறுமாதம் எனில் ஒரு டிகிரியை கடக்க சூரியனுக்கு தேவைப்படும் நாட்கள் எத்தனை?

ஒரு டிகிரி அட்ச ரேகை கடக்க

= (365/2)/47
                                   

 =3.85 நாட்கள்.


ஆண்டுக்கு இரு முறை கடப்பதால் , 2*3.85 நாட்கள்= 7.7 நாட்கள்.

இதன் மூலம் அறிய வருவது என்னவெனில்,

கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட ஒவ்வொரு டிகிரி பகுதியிலும் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு சூரியன் 'நட்டக்குத்தாக' உச்சி வெயில் நேரத்தில் தோன்றுவான் :-))

நாம் கடிகார நேரப்படி பகல்  12.00 மணியை "நண்பகல்" என்கிறோம், இது இந்திய தர நிர்ணய நேரத்தின் படியே , உண்மையில் நாம் இருக்கும் இடத்திற்கு 90 டிகிரியில் சூரியன் தோன்றுவதையே நண்பகல் என சொல்ல வேண்டும். இதனை "solar noon" என்பார்கள்.

சூரியன் வட,தென் கோளத்தில் இருந்தால் முறையே இட,வலமாக ஆனால் தரைப்பரப்பிற்கு 90 டிகிரியில் சூரியன் நண்பகலில் தோன்றும்.

ஆனால் கடக- மகர ரேகை இடையே ஒவ்வொரு இடத்திற்கும் ஆண்டுக்கு சுமார் 7.7 நாட்கள் மிகச்சரியாக உச்சியில் 90 டிகிரியில் தோன்றும் "perfect solar noon" உண்டு!

அது போன்ற நாட்களில் ஒரு கட்டமைப்பின் நிழல் உச்சிவெயில் நேரத்தில் ,கிழக்கு,மேற்கு, வடக்கு,தெற்கு என எந்தப்பக்கமும் விழாது!!!

நம்ம நாட்டில் உள்ள ஒரு இடத்தில் ஆண்டுக்கு 7.7 நாட்களுக்கு உச்சி வெயில் நேரத்தில் நிழல் விழாது எனலாம், ஆண்டு முழுவதும் நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியுமா?

உண்மையில் பார்த்தோமானால் நிழல் விழாத கட்டிடம்/அமைப்பு உருவாக்க முடியாது, தரையோடு தரையாக படுக்க வைத்தால் மட்டுமே சாத்தியம்.

ஆனால் மனித மூளை அபரிமிதமான சிந்தனாசக்தி கொண்டது, கொஞ்சம் கணக்குலாம் போட்டுப்பார்த்தால் செய்ய முடியும் ஆனால் சில நிபந்தனைகளுக்குட்பட்டு என ஆதிகாலத்திலேயே மனிதன் கண்டுப்பிடித்துவிட்டான்.

ஆண்டு முழுவதும்  ஒரு நாளின் குறிப்பிட்ட காலத்திற்கு நிழலே விழாமல் ஒரு கட்டமைப்பினை உருவாக்க முடியும்.

உதாரணமாக ஆண்டு முழுவதும், காலை ஒன்பது மணி முதல் ,மாலை மூன்று மணி வரை நிழல் விழாமல் ஒரு கட்டமைப்பினை கடக- மகர ரேகைக்கு இடைப்பட்ட பகுதிகளிலும், ஏன் அதன் அருகாமை பகுதியிலும் கூட அமைப்பது சாத்தியமே.

கீழ் கண்ட படத்தினை காண்க:




சூரியனின் கதிர்கள் ஒரு பொருளின் மீது விழும் கோணத்தினை "Angle of incident" என்பார்கள். காலை ,மாலையில் சாய்வான கோணத்திலும் , நண்பகலில் செங்குத்தாக 90 டிகிரியிலும் விழும். சூரியனின் கதிர் வீச்ச்சு கோண அளவு 0-180 டிகிரிக்குள் அமையும்.

சூரிய உதயம்,அஸ்தமனம் பொறுத்து கிழக்கு மேற்கான நிகழ்வில் இது தினசரி நடப்பது.

இதே போல வடக்கு -தெற்காக சூரியனின் நகர்வால் இட,வலமாக ஒரு சாய்வுக்கோணம் ஆண்டு முழுவதும் உண்டு, இந்த "Angle of incident" இன் எல்லை 23.5 டிகிரி வடக்கு முதல் 23.5 டிகிரி தெற்கு வரையாகும்.

படம் -1:

காலை சூரிய உதயம் 6 மணி எனக்கொள்வோம், சூரியன் ஒன்பது மணிக்கு தரைத்தளத்தோடு 45 டிகிரி கோணத்தில் கிழக்கில் வானில் இருக்கும்.

ஒரு டிகிரி தீர்க்க ரேகைக்கு 4 நிமிடம் எனில் , ஒரு மணி நேரத்துக்கு 15 டிகிரி தீர்க்க ரேகை, எனவே 6-9 =3 மணி நேரத்தில் 45 டிகிரி எனக்கணக்கு.

கிழக்கில் 45 டிகிரி "Angle of incident" இல் சூரிய கதிரிகள் நேராக உள்ள குச்சி மீது விழுகிறது. எனவே மேற்கு பக்கமாக நிழல் விழும். சூரியன் தென் கோளார்த்தத்தில் இருந்தால் நிழல் தென் மேற்காக விழும்.

படம்:2.

சூரியக்கதிர்கள் விழும் கோணத்தினை '"Angle of incident"  என்பது போல அக்கோணத்திற்கு இணையாக வருவது போல தரையில் உள்ள பொருளை சாய்த்தால் உருவாகும் கோணத்தினை "slope of angle" என்பார்கள்.

"Angle of incident" க்கு ஏற்றார்ப்போல சாய்த்து "slope of angle" வருவது போல வைத்து விட்டால் சூரிய கதிர்கள் பொருளுக்கு இணையான தொடுக்கோணத்தில் விழும்,இந்நிலையில் நிழல் விழாது!!!

படம் இரண்டில் கிழக்கில் 45 டிகிரிக்கு "slope of angle' வருமாறு சாய்ந்து உள்ளதால் நிழல் விழாது.

படம்-3, படம் நான்கில் , சூரியனின் நிலைக்கு ஏற்ப "slope of angle" இல் குச்சி சாய்த்து வைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது.

இப்படி நான்கு திசைக்கும் சாய்த்து கொண்டே இருக்கணுமா? நிரந்தரமாக செய்ய முடியாதா எனலாம்? முடியும்.

இந்நான்கு சாய்வு குச்சிகளையும் உச்சியில் இணைத்தால் தெரியும் வடிவம் என்ன?

ஒரு பிரமிட் போல தெரியுமே?



ஆம் அப்படி இணைத்தால் கிடைக்கும் வடிவமைப்பு பிரமிடே தான், பிரமிடின் பக்கங்களில் "slope of angle" ஐ வடக்கு தெற்காக சூரியன் நகர்வின் அதிக பட்ச எல்லைக்கு ஏற்ப அமைத்து விட்டால் , வடக்கு- தெற்கு நகர்வால் உண்டாகும் நிழல் உருவாகாது, அதே போல அக்கோணத்திற்கு ஏற்ப கிழக்கு -மேற்கில் சூரியன் இருக்கும் போதும் நிழல் விழாது.

உதாரணமாக பிரமிடின் நான்கு பக்கங்களின் "slope of angle" 45 டிகிரி இருப்பது போல அமைத்தால் வருடம் முழுவதும் காலை 9 முதல் மாலை -3 மணி வரையில் நிழல் தரையில் விழாது!

45 டிகிரி "slope of angle" உள்ள பிரமிட்டை சென்னையில் அமைத்தால் வருடம் முழுவதும் 9-3 இடையில் நிழல் விழாது, ஏன் எனில் வடக்கு தெற்கு ஆக சூரிய நகர்வு எப்பொழுதும் 45 டிகிரிக்கு மேல் சென்னையில் இருக்க வாய்ப்பேயில்லை.

சென்னையின் அட்ச ரேகை 13 டிகிரி வடக்கு ஆகும்,சென்னைக்கு வடக்கே கடக ரேகை 23.5 டிகிரியில் உள்ளது, எனவே வடக்கு நோக்கி சூரிய நகர்வு அதிக பட்சம்ம் 10.5 டிகிரிகள் மட்டுமே.

தெற்கில்  மகர ரேகை 23.5 டிகிரியில் உள்ளது அதனுடன் 13 டிகிரியை கூட்டினால் 36.5 டிகிரி மட்டுமே இது 45 டிகிரி "slope of angle' பிரமிடின் கோணத்திற்குள் வந்துவிடுவதால் , ஆண்டு முழுவதும் வடக்கு தெற்கு நிழல் விழாது.

தினசரி 45 டிகிரிக்கு கீழாக சூரியன் கிழக்கு- மேற்கில் இருக்கும் போது மட்டுமே நிழல் விழும்.
அதாவது காலை ஒன்பதுக்கு முன்னாலும், மாலை -3 மணிக்கு பிறகுமே நிழல் விழும்!!!

இதற்கு மேல் பிரமிட் பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் இருந்தால் தொடரலாம், நிழல் கதை இத்தோடு முடிந்துவிட்டது!


இந்த அரிய உண்மையை நான் கண்டுப்பிடிக்கலைங்க, சுமார் கி.மு 2580 இலேயே எகிப்தியர்கள் கண்டுப்பிடிச்சுட்டாங்க.


கிஸா பிரமிட் அப்போது தான் கட்டப்பட்டது. எகிப்தின் கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரியில் பிரமிட் உள்ளது, இது கடக ரேகைக்கு வடக்கே மேல உள்ளதால் சூரியன் எக்காலத்திலும் கெய்ரோ தாண்டி செல்லாது என்பதால் வடக்கு பக்கமாக இருந்து நிழல் விழாது, தெற்கில் இருந்து மட்டுமே சாத்தியம், தெற்கே மகர ரேகை 23.5 டிகிரி + கெய்ரோவின் அட்ச ரேகை 31 டிகிரி கூட்டினால் 54.5 டிகிரி , அந்த கோணம் தான் கிசா பிரமிட்டின் பக்கங்களின்  "slope of angle" ஆகும்.

வடக்கு - தெற்காக சூரியன் நிலைப்பொறுத்து நிழல் தவிர்க்கப்பட்டாச்சு, கிழக்கு- மேற்காக பார்த்தால் 54.5 டிகிரி என்பது சுமார் 9.36 நிமிடம் போல வரும் எனவே காலை 9.36 மணி முதல் மாலை 2.24 வரையில் கிஸா பிரமிடின் நிழல் ஆண்டு முழுவதும் தரையில் விழாது.

எகிப்தியர்கள் அக்காலத்திலேயே வானியல் அறிவில் தேர்ச்சி பெற்றிருந்தற்கு பிரமிட் கட்டமைப்பே சான்றாகும்.

எகிப்தியர்கள் கட்டிடக்கலை, வானியல் ,கணிதம், முக்கோணவியலில் நிபுணர்களாக இருந்ததால் மட்டுமே பிரமிட் போன்ற கட்டமைப்பினை உருவாக்கி இருக்க முடியும்.

நிக்கோலஸ் கோபர் நிகஸ் எல்லாம் சூரியன் மையம், பூமி சுழல்கிறது, கலிலியோ உலகம் உருண்டை என சொல்வதற்குலாம் முன்னரே எகிப்தியர்களுக்கு இவ்வுண்மைகள் தெரிந்துள்ளது.

எனது கணிப்பு என்னவெனில் கிருத்துவ மதப்பரப்பலின் போது எகிப்திய நாகரீகம் மற்றும் அறிவியல் எல்லாம் அழிக்கப்பட்டு , பைபிள் அடிப்படையிலான கருத்தாக்கங்களாக பூமி தட்டை, மையம் என பரப்பிவிட்டிருக்க வேண்டும், பின்னர் மீண்டும் கோபர் நிகஸ்,கலிலியோ போன்றவர்கள் ஆரம்பத்தில் இருந்து ஆய்வை துவக்கி சொல்லி இருக்கக்கூடும்.

எகிப்திய பிரமிட் வடிவில் கட்டமைப்பு அமைத்தால் நிழல் விழுமா என அறிய ,ஒரு சிறிய மாதிரி பிரமிட் ஒன்றினை அட்டையில் செய்து , வெயிலில் வைத்து பார்த்தேன் .

படம்-1:


காலை ஒன்பது மணிக்கு எடுக்கப்பட்டது மிகச்சிறிய அளவில் நிழல் மேற்கு பக்கமாக விழுகிறது. சுமார் 10 மணி அளவில் நிழல் விழவில்லை.

படம் -2:




சுமார் 11.30 அளவில் எடுக்கபட்டது, பக்கவாட்டிலும் நிழல் இல்லை, உச்சி நிலையிலும் நிழல் இல்லை.

# தஞ்சை பெரிய கோயிலின் கோபுரம் பிரமிட் போல சம பக்க முக்கோணங்களை கொண்டிருக்கவில்லை, அதன் உயரம் மற்றும் அடித்தளம் சரியான விகிதத்திலும் இல்லை, மேலும் சதுர அடித்தளமாகவும் இல்லை என்பதால் நிழல் விழும்,ஆனால் வருடத்தில் சுமார் 7.7 நாட்களுக்கு ,தஞ்சையின் அட்சக்கோடு வழியாக சூரியன் கடக்கும் போது ,உச்சிவெயில் நேரத்தில் நிழல் விழாமல் இருக்க வாய்ப்புண்டு!

பிரமிட்:

பிரமிட் என்பது நான்கு முக்கோண பரப்புகள் பக்கங்கள் ஒன்றாக இணைந்து இருக்கும் அமைப்பு, அடிப்பரப்பு செவ்வகம் எனில் எதிர் எதிர் பக்கங்களின் உள்ள முக்கோணங்கள் மட்டுமே சமமாக இருக்கும்.

அடிப்பரப்பு சதுரம் எனில் நான்கு முக்கோணங்களும் சமமாக இருக்கும்.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள "கிஸா: பிரமிட் அடிப்பரப்பு சதுரமாகவும், நான்கு பக்கத்திலும் சம பக்க முக்கோணங்களை கொண்டுள்ளது.



இவ்வாறு ஏன் கட்ட வேண்டும்?

ஏன் எனில் சமபக்க முக்கோணங்களை கொண்ட பிரமிட்டை எவ்வளவு உயரமாக கட்டினாலும் அதன் "slope of angle" 54.5 டிகிரியாக தானாகவே அமைந்து விடும்!!!

தற்போதுள்ள பிரம்மிட்டின் "slope of angle" அளந்து பார்த்தப்போது 51.5 டிகிரி தான் இருக்கிறது என சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள், ஆனால் சிலர் இப்பொழுது உள்ளது பிரமிட்டின் உள்பகுதி ஆகும் இதன் பக்கங்கள் மீது "பாலிஷ் செய்யப்பட்ட" கற்கள் பதிக்கப்பட்டிருந்தது பல நூற்றாண்டுகளில் அவை உதிர்ந்து விட்டது, மேலே போர்த்தப்பட்டிருந்த கற்களின் தடிமனையும் சேர்த்து கணக்கிட்டால் 54.5 டிகிரி இருக்க வாய்ப்புள்ளது. என்கிறார்கள்.

உயரம்-146.5 மீட்டர்கள்.

அடிப்பகுதி சதுரத்தின் அகலம்- 230.4 மீட்டர்கள்

பயன்ப்படுத்தப்பட்ட கற்களீன் எண்ணிக்கை- 2.3 மில்லியன்கள்.

மொத்த எடை -5.9 மில்லியன் டன்கள்.

கட்ட எடுத்துக்கொண்ட காலம் - 20 ஆண்டுகள்.

பயன்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை- சுமார் ஒரு லட்சம்.

மேற் சொன்ன அளவுகளின் படி பார்த்தால் சராசரியாக ஒரு நாளைக்கு 800 டன்கள் கற்களை பிரமிட்டில் பொறுத்தினால் மட்டுமே 20 ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியும். அக்காலத்தில் வாகனங்களோ, கிரேன்களோ இல்லாமல் மனித ஆற்றலை வைத்தே நகர்த்தி , கட்டி இருக்கிறார்கள் என்பதே மிகபெரிய ஆச்சர்யம்.

இதில் மேலும் ஆச்சர்ய மூட்டும் தகவல் என்னவெனில் பிரமிட்டின் உயரம்,அகலம் என முடிவு செய்ய பை மதிப்பினை பயன்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

பையின் மதிப்பு 3.14 என 17 நூற்றாண்டில் தான் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொதுவாக சொல்கிறார்கள், ஆனால் கி.மு 2580 இல் பை மதிப்பினை பயன்ப்படுத்தி பிரமிடுகளை எகிப்தியர்கள் கட்டியுள்ளார்கள்.

பிரமிட்டின் சதுர அடித்தளத்தின் சுற்றளவை அதன் உயரத்தால் வகுத்தால் 2π  என வருகிறது.

பிரமிடின் பக்கம்= A

உயரம் =H

எனில் , சுற்றளவு = 4 A

4 A/H =2π

 இதன் மூலம் என்ன உயரம் தேவை என முடிவு செய்து விட்டால் , என்ன அடிப்பரப்பு என கண்டுப்பிடித்து விடலாம், இல்லை , இத்தனை அடிப்பரப்பில் கட்டினால் என்ன உயரம் வரும் என முடிவு செய்துக்கொள்ள முடியும்.

இவ்வளவு கனமான ஒரு கட்டமைப்பினை மணற்பாங்கான இடத்தில் கட்டினால் அதற்கான அஸ்திவாரம் ஆழமாக போட வேண்டும்,ஆனால் அப்படி செய்யவில்லை, மாறாக பாலைவனத்தில் இருந்த ஒரு குன்றினை சமன் செய்து அக்குன்று பிரமிட்டின் உள்பகுதியில் வருமாறு குன்றின் மீதே பிரமிடினை கட்டியுள்ளார்கள். இதனால் நிலையாக பிரமிட் நிற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை.

பிரமிட்கள் மற்றும் எகிப்திய வரலாறு என நிறைய சொல்ல இருக்கிறது அவற்றை பிரிதொரு சந்தப்பத்தில் காணலாம்.
----------------------------------------------------------------------------


நீங்களும் பிரமிட் செய்யலாம்:

தேவையான பொருட்கள்:

# மெல்லிய அட்டை(சார்ட் பேப்பர்)

அட்டையின் அகலம் நாம் செய்ய இருக்கும் பிரமிடின் அடிப்பாக அகலத்தினை போல குறைந்தது மூன்று பங்கு அகலம் இருக்க வேண்டும்.

# பென்சில், காம்பஸ்,ஸ்கேல், கத்திரிக்கோல், ஃபெவிகிவிக், செலொபன் டேப், வெள்ளைக்காகிதம்.

 சமபக்க முக்கோணங்களை உடைய ,சதுர அடிப்பரப்பு கொண்ட பிரமிடினை எளிதாக செய்ய கீழ் கண்ட படத்தில் உள்ளது போல முயற்சிக்கலாம்.



# 10 செ.மீ அடிப்பாகம் கொண்ட பிரமிட் செய்ய , 10 செ.மீ பக்கம் கொண்ட சதுரம் வரையவும். நான்கு பக்கமும் சமமாக இருக்க வேண்டும் ,அப்பொழுது தான் சதுரம் :-))

# ஒவ்வொரு பக்கத்தின் மைய புள்ளியை குறிக்கவும். 5 செ.மி அளவில் புள்ளி வைத்தால் அதான் மையம்.

# நான்கு மைய புள்ளிகளின் வழியாகவும் செல்லு மாறு கோடுகளை வரையவும், கோடுகளின் நீட்சி ஒவ்வொரு பக்கத்திலும் 10 செ.மீ க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

# பிரமிடின் முக்கோணங்கள் சம பக்கம் ஆக நாம் அமைக்க இருக்கிறோம், முக்கோணத்தின் ஒரு பாகம் தான் ,சதுரத்தின் ஒரு பக்கம், எனவே முக்கோணத்தின் மற்ற பக்கங்களும் 10 செ.மீ தான் இருக்க வேண்டும், அப்பொழுது தான் சம பக்க முக்கோணம் ஆகும்.

எனவே 10 செ.மீ அளவினை காம்பஸ் மூலம் எடுத்து , சதுரத்தின் ஒரு பக்கத்தின் முனையில் வைத்து அதன் மையக்கோட்டினை வெட்டவும், அதே போல இன்னொரு பக்கத்தில் வைத்து வெட்டினால் உருவாகும் புள்ளியே ,முக்கோணத்தின் உச்சி ஆகும்.

முக்கோணத்தின் உச்சியினை அதன் அடிப்பாகத்தின் இரு முனைகள் அதாவது சதுரத்தின் பக்கத்தின் முனைகளுடன் இணைத்து கோடு போடவும். இப்பொழுது ஒரு சமபக்க முக்கோணம் சதுரத்துடன் இணைந்து உருவாகி இருக்கும்.

இதனையே மற்ற பக்கங்களுக்கும் செய்யவும்.

# பின்னர் எதிர் எதிர் பக்கமாக உள்ள முக்கோணத்தின் பக்கங்களில் சுமார் 1 செ.மீ வருவது போல பிளாப்கள் வரைந்து கொள்ளவும், இது பக்கங்களை மடித்து ஒட்ட உதவும்.

# படத்தில் கண்டவாறு வரைந்து முடித்த பின் , கத்திரிக்கோல் வைத்து வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

# பின்னர் கோடுகள் மீது ஸ்கேலினை வைத்து உட்பக்கமாக மடித்து விடவும், ஸ்கேல் வைத்து மடித்தால் நேரான மடிப்பு வரும், அப்பொழுது தான் இணைக்க சரியாக வரும்.

# பிளாப்கள் உள்பக்கமாக வருவது போல மடித்து பசை தடவி , அருகில் உள்ள முக்கோணத்துடன் இணைத்து ஒட்டவும்.

ஹி..ஹி பசை காயும் முன்னர் கையை எடுத்துவிட்டால் , தேர்தல் முடிந்தவுடன் பிச்சிக்கொள்ளும் கூட்டணி போல  இரு பக்கங்களும் தனியே பிரிந்து விடும், எனவே செலோப்போன் டேப்பினால் பக்கங்களின் மீது ஒட்டி விடவும் :-))

# அளவுகள் சரியாக இருக்குமானால் நான்கு பக்கங்களையும் இணைத்தால் பிரமிடின் உச்சி (vertex) சரியாக இணைந்து விடும்.  பசையால் ஒட்டியவுடன் ,செலொபன் டேப்பினை வைத்து உச்சிக்கு சற்றுக்கீழே சுற்றி வருவது போல ஒட்டினால் உச்சிப்ப்குதி நெருக்கமாக அமைந்து வரும்.

# இப்போ அழகு செய்ய ஆசைப்பட்டால் வண்ணக்காகிதம் ஒட்டலாம், இல்லைனா வெள்ளைக்காகிதத்தினை ஒட்டினாலே நல்லா பளிச்சுனு அழகா இருக்கும்.

இந்த பிரம்மிட் எகிப்திய தொழில் நுட்பத்தில் உருவானது என்பதால் , இதன் ஸ்லோப் ஆஃப் ஆங்கில் தானாகவே 54.5 டிகிரியில் இருக்கும், சென்னையில் வைத்து என்று இல்லை  கடக ,மகர ரேகைக்கிடையே எங்கே வச்சாலும் காலையில் சுமார் 9.36 முதல் மாலை 2.24 வரையில் நிழலே விழாது!

இதன் தொடர்ச்சியாக பூமி சாய்ஞ்சுக்கிட்டு சுத்துதா ,நேராக சுத்துதா , உண்மையில் எப்படித்தான் சுற்றுகிறது என ஒரு வெட்டி ஆய்வு ஒன்று செய்துள்ளேன் ,அதனை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...
-------------------------------

பின் குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி, விக்கி,கூகிள் இணைய தளங்கள், நன்றி!
--------------------------------------

34 comments:

தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் பிசின் மாதிரி பதிவில் ஒட்டிக் கொண்டீர்களா? அல்லது அவர் வந்து ஒட்டிக் கொண்டாரா என்று தெரியவில்லை. மீண்டும் வலைப் பக்கம் வந்ததற்கு நன்றி! தொடர்ந்து எழுதவும்.

குட்டிபிசாசு said...

//மூடர் கூடம்//

…தலைப்பு ப்ரமாதம். …பதில் சொன்னாலும், இந்தியாவிலும் இது சாத்தியம் என லிங்க் (http://skytonight.wordpress.com/2012/04/14/zero-shadow-day/) கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டாங்க. எப்படியோ பதிவை போட்டு வெளக்கு வெளக்குனு வெளக்கிட்டிங்க.

Anonymous said...

மீண்டும் வலைப் பக்கம் வந்ததற்கு நன்றி!!!!!!!!!!!!!!!!

-கொங்கு நாட்டான்

Anonymous said...

பதிவு அருமை...விஞ்சானியாக திரும்பி வந்ததற்கு வாழ்த்துகள்



-கொங்கு நாட்டான்

Amudhavan said...

மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எப்படியோ நீண்ட நாட்களுக்கு அப்புறமா வந்து பதிவெல்லாம் போட்டுட்டீங்க. சாதாரண விஷயம் பற்றியெல்லாம் பதிவெல்லாம் போட்டா கண்ட பேர்களும் வந்து கண்டதையெல்லாம் எழுதிட்டுப் போயிருவாங்கன்றதுக்காக சுலபமா யாரும் தொடமுடியாத விஷயமாப் பார்த்துத் தேர்வு செய்து பதிவு எழுதி வச்சிருக்கீங்க. சந்தோஷம்.

ஒரு சில சந்தேகம். இந்த அளவுகோல்கள் வைத்துத்தான் வருஷத்துல ஒரேயொரு தடவை மட்டுமே ஒளி விழும்ன்ற மாதிரியான கட்டட அமைப்பெல்லாம் சாத்தியமாகுதா? உதா; கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் வருடத்தின் ஒரே நாள் மட்டும் சரியாக 11;50 வாக்கில் சிறிது நேரத்துக்கு சுடர் போன்ற ஒளி இங்கே விழும்............

பிரமிட்டில் நிழல் விழாமல் இருப்பது சரி. அது வெறும் இயற்கை விதிகளுக்கான சாத்தியக்கூறுகளில் ஒன்று மட்டும்தானா அல்லது ஏதேனும் விசேஷ பயன்கள் உள்ளனவா?
அப்புறம் இந்தப் பதிவின் தொடர்ச்சியில், பிரமிடுகள் கட்டப்பட்ட விதிமுறைகளைக் கூறுவதுடன் நின்றுவிடுவீர்களா அல்லது பிரமிடுகளின் ஆச்சரியங்கள் என்ற தலைப்பில் சொல்லப்படும் விஷயங்கள் பற்றியும் எழுதப்போகிறீர்களா?

காரிகன் said...

வவ்வால்,
மீண்டும் வருக. வாழ்த்துக்கள்.இப்ப அசினை விட்டு நஸ்ரிம்,நயன்தாரா பக்கம் தாவியிருப்பீர்கள் என்று பார்த்தேன். அதெல்லாம் நடக்கிற காரியமா?
பிரமிட் பற்றி ஒரு ஏலியன் தியரி உண்டு. சொல்லப்போனால் அதுவே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. விஞ்ஞானத்தை விட்டு அப்பப்ப கொஞ்சம் அடிக்கடி தென்படற விஷயத்தைப் பற்றியும் எழுதவும்.

Anonymous said...

உலகெங்குமுள்ள தமிழர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ளுவது என்னவென்றால்,

vovalpaarvai.blogspot.com = wikipedia.org + google.com + youtube.com

I shall come up with my comments soon.

”தளிர் சுரேஷ்” said...

மிக விரிவான தெளிவான விளக்கம்! மீண்டும் வலைப்பக்கம் வருகைக்கு வாழ்த்துக்கள்!

ஜோதிஜி said...

உண்மை தான். நான் ஏழெட்டு முறை வந்து வந்து பார்த்துட்டு அப்புறம் பார்ப்பதைக் கூட விட்டுவிட்டேன்.

உங்க பூமி படத்தை பின்னால் இருந்து கொண்டு இங்கே மூவரும் பார்த்துக் கொண்டு என்னை தடுக்க எப்போதும் போல உங்க தலைவியை பார்த்து விட்டு இங்கே வந்துட்டேன்.

மண்ணியல், வானவியல், பேய், பிசாசு, பூதம், வேதியியல், இயற்பியல், கணக்கு, எந்திரவியல், மிண்ணணுவியல், கணினி தொழில் நுட்பம், மின்சாரவியல் போன்ற இந்த துறைகள் என்றால் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே தெரியும் என்பதால்...........

மீண்டும் வந்த அ பே தலைவருக்கு 18 ஆம் சந்து சார்பாக பொன்னாடை போர்த்தி காசை வீணாக்காமல் புத்திசாலியாக மாற என்ன செய்ய வேண்டும்? என்ற இந்த புத்தகத்தை வழங்கி அன்னாரை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்கி விடை பெறுகின்றேன்.

Anonymous said...

//பூமி சாய்ஞ்சுக்கிட்டு சுத்துதா ,நேராக சுத்துதா , உண்மையில் எப்படித்தான் சுற்றுகிறது என ஒரு வெட்டி ஆய்வு ஒன்று செய்துள்ளேன்//

http://esminfo.prenhall.com/science/geoanimations/animations/01_EarthSun_E2.html

This link is useful to your research. (May be, already you would have seen) Click "Show Earth Profile" Button. Then Play Button. Nice visualization.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

GREAT WORK வவ்வால்.நீங்கள் ஜீனியஸ்தான். விரிவான விளக்கங்களுக்கு நன்றி.. கொஞ்ச நாட்களாக காணோமே என்று எதிர்பார்த்திருந்தேன்.மாதிரிகளை உருவாக்கி சோதனை செய்து பார்த்து பதிவிட்டது சிறப்பு. எனது பதிவும் அதற்கு ஒரு காரணம் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருடத்தில் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் நிழல் விழா நிலையை உருவாக்க(பொருளின் கோணத்தை மாற்றி மாற்றி அமைக்கும்போது) ஒரு பலகையில் கிட்டத்தட்ட 180 டிகிரி சுழலும் வண்ணம் ஒரு பென்சிலை பிணைத்து ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறேன். அடுத்த ஆண்டு பதிவுக்கு அதை பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன். நீங்கள் அளித்துள்ள தகவல்களும் விளக்கமும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளவை.
இது போன்ற பதிவுகளை அதிகம் பேர் படிக்க மாட்டார்கள் நினைத்தேன். ஆனால் இது தொடர்பான பதிவை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படித்தது ஆச்சர்யம் அளிக்கிறது.
அடிப்படை வானவியல் நிகழ்வுகளையும் தகவல்ளும் கொண்ட பதிவுகள் உருவாகக் காரணமாக இருந்த நம்பள்கிக்கு நன்றி.

Anonymous said...

அட்ரா சக்க......அட்ரா சக்க.....
நம்ம area-வ touch பண்ணிடீங்க. அப்படியே எங்க இடத்தையெல்லாம் கொஞ்சம் visit பண்ணி ஒரு tour அடிச்சிட்டு (அதாங்க Aliens & Galaxies)அதையும் ஒரு பதிவா போடுங்க (in future).
இந்த subject எனக்கு ரொம்ப பிடிச்ச subject. கலக்கிடீங்க போங்க..
இது பதிவா இல்ல sceince lab ஆ? செய்முறை விளக்கங்களோடு school ல போய் படிச்ச effect கிடைச்சது. பள்ளி பாடபுத்தகத்தில கூட இவ்வளவு தெளிவா இல்லையே...

மொத வாட்டி ஒரு பதிவ இரண்டு தடவ படிக்க வச்சிட்டீங்க. இந்த பதிவு போதும் என் குழந்தைக்கு புரிய வைக்க.

Great..Excellent Research..Only thing I couldn't understand is about that 54.5 degree of pyramid. I thought it was 60 degree for equivalent triangle.

வவ்வால் said...

தி.தமிழிளங்கோ சார்,

வாங்க,நன்றி!

கொஞ்ச நாளா அஞ்ஞாத வாசத்தில் இருந்து வந்தாலும் ,நம்மை உடனே கன்டுக்கிட்டிங்களே நன்றி!

ஹி...ஹி இந்த பக்கம் ஒட்டுச்சோ ,அந்த பக்கம் ஒட்டுச்சோ ,ஆனால் ஒட்டிக்கிச்சு ,எல்லாம் ஒரு கலையுணர்வு தான் :-))
--------------------
குட்டிப்பிசாசு,

வாரும்,நன்றி!

தலைப்புல வச்ச "உள்குத்தை" புரிஞ்சிக்கிட்டிங்களோ,அவ்வ்!

உண்மையில இந்த சமாச்சாரம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவனுக்கான அளவில் ஆனது ,ஆனால் மெத்தப்படிச்சவர்கள் படிக்கிற காலத்தில மனப்பாடம் பண்ணி மங்கலம் பாடிவிட்டதால், இப்போ நாம கிடந்து வெளக்கிட்டு இருக்க வேண்டியதா இருக்கு அவ்வ்!
-----------------

கொங்குநாட்டார்,

வாரும்,நன்றி!

என்னது விஞ்சானியாகிட்டோமா, அப்போ இனிமே நாமளும் "விஞ்சானி நாராயனசாமி" போல தெனம் அறிக்கை விட்டு விளையாடலாமா அவ்வ்!
----------------------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

இதுவே சாதாரணமா பள்ளி மாணவர்கள் அளவிலானது தான், பெரியவங்க எல்லாம் "ரொம்ப பெரிய விடயங்களில்" கவனம் செலுத்துவதால் அடிப்படையில கோட்டை விட்டுறாங்க போல இருக்கு அவ்வ்!

# காந்தி மண்டபத்தில் ஒளி குறிப்பிட்ட நாளில் விழுவது போல செய்ய , டிகிரி,நிமிடம், வினாடி சுத்தமாக கணக்கிட்டு, ஆங்கிள் ஆஃப் சுலோப் வருவது போல ,ஒளி விழ ஓட்டை அமைக்கனும்.

ஆனால் ,சூரியன் வடக்கு- தெற்கு- வடக்கு என ஒரு சுற்று ஆண்டுக்கு செல்வதால் , ஒரே இடத்தின் மீது இரண்டு முறை பயணிப்பதால் ,ஆண்டுக்கு இரு முறை ஒளி விழும், எனவே கூடுதலாக ஏதேனும் மெக்கானிசம் இருக்கலாம்.

# விசேஷப்பயன்கள் இருப்பதாகவே சொல்கிறார்கல். நிழல் விழாது என்பதை கொஞ்சம் மாற்றி சொன்னால், ஒரு நாளுக்கு மிக அதிக நேரம் அனைத்து பக்கங்களிலும் வெயில் படுகிறது எனலாம்.

இதனால் பிரமிட் உள்ப்புறம் வெப்பம்,ஈரப்ப்பதம் ஆகியன கட்டுப்படுத்தப்படுவதாக ஒரு கருத்து சொல்கிறார்கள், எனவ்வே பிரமிட் வடிவ அமைப்பின் உள் இருக்கும் பொருட்கள் எளிதில் வீணாவதில்லை என்கிறார்கள்.

இணையத்தில் நமக்கு தேவையாண அளவில் பிரமிட் செய்து விற்கிறார்கள்,அதை வாங்கி உள்ள காய்கறி இன்னும் கெட்டுப்போகும் பொருள் எல்லாம் வச்சுக்கலாம், ஃப்ரிட்ஜ் இல்லாமலே கெடாமல் இருக்கும்னு சொல்லுறாங்க.

சில பெரும்பணக்காரர்கள் பிரமிட் வடிவில் பெட்ரூம் கட்டி அதில் தூங்குறாங்கலாம்ம், அப்போ ஆயுள் கூடுமாம் :-))

எகிப்திய பாரோக்களின் மம்மி கெடாமல் இருக்க ,பிரமிட் வடிவ கட்டமைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள். மம்மிகளுடன் வைத்திருந்த தேன், தானியங்கள் போன்றவை கெடாமல் அப்படியே இருந்தன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பிரம்மிட் ரகசியங்கள், எகிப்திய வரலாறு என பல்ல சுவையான தகவல்கள் இருக்கு,பின்னர் பதிவிட்டு அலசுகிறேன்.

--------------------

காரிகன்,

வாங்க,நன்றி!

ஹி...ஹி அதிகம் பேராசை படுறதில்லை, அதான் ஒன்றே நன்று என ஒரே படத்தை வச்சிருக்கேன் :-))

ஆமாம் ஏலியன்கள் வந்து கட்டியதாக ஒரு கதையும் இருக்கு, பிரமிடில் உள்ள ஏலியன் போன்ற உருவங்கள் தேர் ஓட்டுவது போல ஓவியங்கள் ,வரைஞ்சு வச்சிருக்காங்க. அதுலாம் பிரமிட் பற்றி தனியா பதிவிடும் போது சொல்லலாம் என நினைத்தேன்.

இதுக்கு முன்னர் ரோசெட்டா கல்வெட்டு பற்றிக்கூட பதிவிட்டு இருக்கேன், பழைய வரலாற்றினை தொடராக "திரும்பிப்பார்" என எழுத ஆரம்பித்தேன் அப்புறம் வழக்கம் போல கிடப்பில் போட்டாச்சு ஹி..ஹி!
-----------------

ராஜ நடராஜன் said...

நான் என்னமோ எசப்பாட்டு பாடுறதுக்கு ஆள் இல்லையேன்னு மனுசன் காணாமப் போய்ட்டாரோன்னு நினைச்சேன்:)

ராஜ நடராஜன் said...

பதிவைப் படிக்காமல் பின்னூட்டம் போடுவது இதுவே முதல் முறை என்ற வாக்குமூலத்தோடு எஸ்கேப்....

வவ்வால் said...

சுரேஷ்,

நன்றி!

எல்லாப்பதிவிலும் உங்களுக்கு அறியாத தகவல்கள் எப்படியோ கிடைச்சிடுதே :-))

---------------
தொழிலதிபதிவரே ,

வாங்க,நன்றி!

கடை எப்ப தொறக்கும்னு வந்து ,வந்து பார்த்தீங்களா நன்றி!

# ஓ பசங்க புடைச்சூழத்தான் பதிவெல்லாம் படிக்கிறீங்களா அவ்வ்!

அதான் பிரமிட் செய்முறை விளக்கமெல்லாம் போட்டிருக்கோம்ல , ஒரு பிரமிட் செய்து கொடுத்து "எகிப்திய "மன்னராகிடுறது :-))

#//மண்ணியல், வானவியல், பேய், பிசாசு, பூதம், வேதியியல், இயற்பியல், கணக்கு, எந்திரவியல், மிண்ணணுவியல், கணினி தொழில் நுட்பம், மின்சாரவியல் போன்ற இந்த துறைகள் என்றால் தூரமாய் நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே தெரியும் என்பதால்...........//

வேடிக்க பார்க்கவே இம்புட்டு வச்சிருக்கிங்களா ? பெரிய ஆளாத்தான் இருப்பீங்க போல !

# பொன்னாடையா எங்கே...எங்கே ? என்னாது உங்களுக்கே வாழ்த்த வயதில்லையா அவ்வ்!

காசை வீணாக்காமல் இருக்க புத்தகமா? இதை முன்னரே சொல்லி இருக்கலாம் அவ்வ்! நேத்து தான் ஒரு ஆயிரம் ரூவாக்கு கண்ட புத்தகமும் வாங்கி காச வீணாக்கிட்டேன் அவ்வ்வ்!
---------------------------

வேற்றுகிரகவாசி,

வாங்க,நன்றி!

ஹி..ஹி உள்ளூர் தமிழனே நம்மை ஏறி மிதிக்க தான் ஆசைப்படுறாங்க, இதுல உலகத்தமிழர்களை எல்லாம் கூப்பிட்டால் வெளங்குமா அவ்வ்!

# பதிவில் சும்மா ஒரு பில்ட்- அப்பிற்கு வேற்றுகிரவாசி என்பதை வச்சு சும்மா காமெடி செய்துகிட்டேன் ,தவறாக எண்ணாமைக்கு நன்றி!

சொன்னாப்போல பிரபஞ்சம், வேற்றுகிரக உயிரினங்களின் சாத்தியக்கூறு என்றெல்லாம் பதிவெழுத ஆசைத்தான் ,அவ்வப்போது படிச்சிட்டும் வரதுண்டு,ஆனால் உட்கார்ந்து எழுத தான் முடியலை, பார்ப்போம் என்றாவது ஆரம்பிச்சிடலாம்.

# சமபக்க முக்கோணத்தின் உட்கோணங்கள் தான் தலா 60 டிகிரி. நான் சொல்லி இருப்பது , ஒரு முக்கோணப்பங்கத்தினை தரைக்கு சாய்வாக வைப்பது, பிரமிடின் நான்கு பக்கமும் தலா 54.5 டிகிரி சாய்வு கோணத்தில் இருக்கிறது. ஒரு பலகையை நேராக நிற்க வைப்பது ,சாய்த்து நிற்க வைப்பது போல.

# நீங்க கொடுத்த சுட்டியில் உள்ளது போன்ற அனிமேஷன் தான் பெரும்பாலும் கொடுக்கிறார்கள், ஆனால் இது தெளிவான விளக்கத்தினை அளிக்காது, நாசாவின் இணையதளத்திலேயே அதனை கட்டுரையாக வெளியிட்டும் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் ,பொதுவாக பூமிப்பற்றிய பக்கத்தினை மட்டுமே அனைவரும் படித்துவிட்டு "நாசாவில்' இப்படித்தான் சொல்லி இருக்கு என்கிறார்கள்.

பூமியின் சுழற்சி குறித்து சரியான முடிவே இன்னும் எட்டப்படவில்லை, இன்னும் ஆய்வு செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள், தெளிவாக சொல்லப்படாத பல இருக்கு.

இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளுக்கு 24 மணி நேரம், ஆண்டுக்கு 365 நாள் என்பதில் கூட விவாதம் இருக்கு. நாம் இப்பொழுது சொல்லும் கணக்கெல்லாம் , ஒரு ரிலேட்டிவ் டெர்மில் தான் , பூமியின் அச்சுடன் with respect to sun and a distance star, solar day, stellar day and solar year ,sideral year thats all!

மேற் சொன்ன முறையில் சொல்வதெல்லாம் "துருவங்கள்/பூமி அச்சுக்கு தான் பொருந்தும், பூமியின் மற்றப்பகுதிகளுக்கு அல்ல,ஆனால் எளிதாக இருக்க எல்லா இடத்துக்கும் "ஆவரேஜ்" செய்து விட்டார்கள் என நினைக்கிறேன்!

நம்ம மக்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நான் தான் " மூட நம்பிக்கையோட" இத்தினி நாளா இருந்துட்டேன்!

ஒரு நாளுக்கு 24 மணி நேரமில்லை, ஒரு ஆண்டுக்கு 365 நாள் இல்லைனு சொன்னால் நாசா கூட ஆமாம்னு சொல்லும், அதுக்கு வேற ஒரு ரிலேட்டிவ் கால்குலேஷன் இருக்கு, நாசா விஞ்ஞானிகளே செய்தது தான் அதுவும்.

ஒரு வேளை வருங்காலத்தில் இதெல்லாம் மாத்தி சொன்னால், அன்னிக்கே வவ்வால் இதை சொன்னானேனு உலகம் சொல்லக்கூடும் :-))

ஹி...ஹி சுருக்கமாக சொன்னால் பூமி அச்சு சாய்ஞ்சிருக்க மாதிரி இருக்க சாயாத அச்சு அவ்வ்!

ஒரு பதிவ போட்டு குழப்பிட வேண்டியது தான்!
----------------------

வவ்வால் said...


முரளி,

வாங்க,நன்றி!

//நீங்கள் ஜீனியஸ்தான்//

என்னமோ நானே கண்டுப்பிடிச்சாப்போல சொல்லிக்கிட்டு , இதெல்லாம் ரொம்ப காலமாக இருப்பது, மக்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன் ,கடைசில பார்த்தால் எதுவுமே தெரியாமல் தான் மக்கள் " பிரஸ்தாபித்துக்கொண்டுள்ளார்கள்' என்பது தெரிய வருகிறது.

மக்கள் படிக்கிற காலத்துல இதெல்லாம் படிச்சிருப்பாங்க, ஆனால் எல்லாரும் "மனப்பாடம்" செய்து கக்கிட்டு போயிருப்பார்கள், அதான் மனசில தங்களை போல!

# உங்கப்பதிவு, நம்பள்கி பதிவுலாம் தான் காரணம் ,ஏன் எனில் தெளிவா குழப்பிக்கிட்டு இருந்தீங்க :-))

இந்தக்காலத்தில பசங்க எல்லாம் புரிஞ்சே படிக்கிறதில்லை ,மனப்பாடம் செய்து மதிப்பெண் எடுக்கிற வேலையத்தான் செய்றாங்கனு பொதுவாக அந்தக்கால பெருசுங்க பொலம்புவார்கள்,ஆனால் அந்தக்கால பெருசுங்களும் இதே வேலைய தான் செய்துட்டு வந்திருக்காங்கனு எனக்கு இப்போ தான் புரியுது அவ்வ்!

#//வருடத்தில் எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் நிழல் விழா நிலையை உருவாக்க(பொருளின் கோணத்தை மாற்றி மாற்றி அமைக்கும்போது) ஒரு பலகையில் கிட்டத்தட்ட 180 டிகிரி சுழலும் வண்ணம் ஒரு பென்சிலை பிணைத்து ஒரு மாடலை உருவாக்கி இருக்கிறேன். அடுத்த ஆண்டு பதிவுக்கு அதை பயன்படுத்தலாம் என்று இருக்கிறேன்.//

180 டிகிரி என்பது கிழக்கு மேற்கு அச்சில் எனக்கொண்டால், சூரியன் நேராக இருக்கும் காலமாக தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.

செப்டெம்பர் 21-22 ,மார்ச்21-22 என்பன நம்ம சென்னை பகுதிக்கு அல்ல ,நில நடுக்கோட்டுக்கு, இரவுபகல் சமம் என்பதெல்லாம் நில நடுக்கோட்டுக்கு தான் நமக்கல்ல!

கடக ரேகை நோக்கி செல்லும் போது மே 9-10 ஆகிய நாட்களிலும் , மகர ரேகை நோக்கி சொல்லும் போது ஆகஸ்ட் 20-21 ஆகிய நாட்களிலும் சென்னைக்கு நேர் மேல் சூரியன் இருக்க வாய்ப்புள்ளது.

சூரியனின் அளவை பூமியுடன் ஒப்பிட சூரியன் மிகப்பெரியது என்பதால் சராசரியாக ஒரு டிகிரி அளவு வித்தியாசம் வரைக்கும் நேர்க்கோட்டில் இருப்பதாகவே தோன்றும் எனவே , ஆறு மாதத்திற்கு ஒருக்கா 3.85 நாட்கள் ஒரு டிகிரியில் நேராக தெரியும் என பதிவில் சொல்லி வச்சிருக்கேன்!
--------------------------------

ராச நட,

வாரும் ,வாரும் ,நன்றி!

என்ன பேருலாம் மாத்திட்டிங்க போல,எல்லாம் தொழிலதிபராக மாறியதால் ஏற்பட்ட மாற்றமோ?

வெற்றிப்படிக்கட்டெல்லாம் ஏறியாச்சா? உங்க கடையில் ஒன்னும் தகவலே காணோமேனு பார்த்தேன்.

நாம எங்கே போயிட்டோம், பதிவு தான் எழுதாம கிடந்துச்சு ஆனால் வழக்கம் போல அடுத்தவங்க கடையில சோடா பாட்டில் வுட்டுக்கினு தான் இருந்தேன் :-))

# பதிவைப்படிச்சாலே ரொம்ப தெளிவா பேசுவீர் ,படிக்கலைனா , அம்புட்டு தான் , மண்டைய காய விட்ருவீர் :-))

Gujaal said...

//கிழக்கே அருணாச்சல பிரதேசத்தில் இருந்து மேற்கே //

மிஸோரம்?

Gujaal said...

அருமையான இடுகை.

Anonymous said...

உலகம் உருண்டையல்ல, அது உருளைக்கிழங்கு போல கோக்குமாக்கான உருவம் உடையது.

பார்க்க
http://www.bbc.co.uk/news/science-environment-12911806

முதல் காணொளியை உருட்டிப் பாருங்கள். இந்துமாக்கடலில் தமிழகத்துக்குத் தெற்கே ஒரு பெரிய டொக்கு (பள்ளம்) இருக்கிறது. லெமூரியாங்கறாங்களே, அது எப்போதோ புவியியல் மாற்றத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாமோ?

இங்கேயும் காணலாம் http://www.youtube.com/watch?v=lzDGvyiJ0rc

எழிலருவி said...

Nicely explained..
small doubt.
//வடக்கு - தெற்காக சூரியன் நிலைப்பொறுத்து நிழல் தவிர்க்கப்பட்டாச்சு, கிழக்கு- மேற்காக பார்த்தால் 54.5 டிகிரி என்பது சுமார் 9.36 நிமிடம் போல வரும் எனவே காலை 9.36 மணி முதல் மாலை 3.36 வரையில் கிஸா பிரமிடின் நிழல் ஆண்டு முழுவதும் தரையில் விழாது.//

is it 9.36 to 3.36 or 9.36 to 2.24?
(0600h+3.36)to(1800h-3.36)

வவ்வால் said...

குஜால்,

வாங்க,நன்றி!

வடக்கிழக்கு மாநிலங்கள் எல்லாம் பற்றியும் படிச்சிட்டு ,ஒட்டுக்கா கடசீல எழுதுனதுலது குழம்பிடுச்சு.

இந்தியாவின்(மெயின் லேண்டில்) கிழக்கு கடைக்கோடி முனை அருணாச்சல்,முதல் சூரிய உதயம் அங்கு தான்,கடக ரேகை அங்கு இல்லை ,சுமார் 2 டிகிரி தான் வித்தியாசம்,அய்ஸ்வால்(மிசோராம்) பக்கம் தான், மேப்பில் அதான் காட்டியிருக்கேன்,ஆனால் எழுதும் போது அருணாச்சலே மனசில ஒட்டிக்கிட்டு வந்திடுச்சு அவ்வ்!

பிழை திருத்தம் செய்துவிடுகிறேன்,இன்னும் பிழைகளை கவனிக்கவே இல்லை,எழுதியதை அப்படியே வலையேற்றிவிட்டேன்!
----------------
அனானி,

பூமி கோளம்னு நானும் சொல்லவில்லை, ஒப்லேட் ஸ்பீராய்ட் என்று போட்டுள்ளேன்.தோராயமா ஒரு கோளம்னு வச்சுக்கிட்டு சொன்னால் தான் டிகிரி கணக்கில் விளக்க எளிதாக இருக்கும்.

மேலும் நம்ம வின்வெளி ஆய்வுகள் மூலம் காட்டும் படமெல்லாம் துல்லியமான படங்களும் அல்ல,எல்லாம் ரேடியோ டெலெஸ்கோப் சிக்னல்களை கம்பியூட்டர் மூலம் இமேஜ் ஆக மாற்றியவையே,அல்கோரிதம்,கணினி திறன் பொறுத்து ஒரு படம் கிடைக்கும்.

நீங்க போட்டிருப்பது கிராவிட்டி சென்சார் படம்,அது வச்சு வடிவம் சொல்வது சரியா வராது.

ஏற்கனவே நாசா "Gravity Recovery and Climate Experiment (GRACE) system" இதே போல படம் எடுத்து காட்டியிருக்கு.

http://www.csr.utexas.edu/grace/gallery/gravity/ggm01_asia.html

இதுலாம் கிராவிட்டி மாடல் தான் ,சரியான வடிவத்தினை காட்டாது.
-----------------------
எழிலருவி,

வாங்க,நன்றி!

ஹி..ஹி 3.36 மணிய கழிக்காம ,மாலைக்கும் கூட்டிட்டேன்.,மாலையில் 2.24 வரையில் என்பதே சரியானது.நன்றி!

Anonymous said...

பதிவு அருமை.


++++மாக்கான்

கலாகுமரன் said...

நீங்க சொன்னமாதிரி பழைய கண்டுபிடிப்புகளை மறந்திட்டு, மறச்சிட்டு முதல்லேருந்து ஆரம்பிச்சிருக்காங்க. திருத்தங்களை பதிவில் திருத்திவிடலாமே. புதுசா படிக்கிறவங்க கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சாதான் விளங்கிக்க முடியும். விளக்கமான தெளிவான ஆராய்சி எனக்கு பிடிச்சிருக்கு. வெறும் புத்தக அறிவு மட்டுமே போறாது என்பதையும் உங்க பதிவு உணர்த்துகிறது.

வவ்வால் said...

கலாகுமரன்,

வாங்க நன்றி!

நான் தரவுகளை பார்த்து பார்த்து எழுதுவதில்லை,படிச்சிட்டு நினைவில் இருந்து அப்படியே எழுதிடுவேன்,இதனால் கொஞ்சம் ஆழமா பதிந்தவை (பிழையெனினும்)தானா வந்துடுது அவ்வ்.

கடைசியா பிழைத்திருத்தத்தின் போது தான் சரி செய்வேன்,இம்முறை அதுவும் செய்யலை,இப்போ திருத்திட்டேன்(ஹி...ஹி சோம்பல் தான்)

# மிகப்பழங்காலத்திலும் பல அறிவியல் கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்திருக்கு, பின்னர் அடுத்து வரும் ஆட்சியில் அழிந்து /அழிக்கப்பட்டு மீண்டும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிச்சு இருக்காங்க, இதுல கிருத்துவம் ,இஸ்லாம் எல்லாம் ஏகப்பட்ட கோல்மால் செய்து இருக்கு.

இந்திய மதங்களும் இந்த வேலையை செய்திருக்கு.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கப்பதிவு, நம்பள்கி பதிவுலாம் தான் காரணம் ,ஏன் எனில் தெளிவா குழப்பிக்கிட்டு இருந்தீங்க //பூமித்தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதால் , சூரியனை விட்டு விலகி இருக்கும் வட துருவம் , அடுத்த 24 மணிநேரத்தில் சூரியன் இருக்கும் பக்கம் வந்துவிடுமே,// என்று தெளிவாக குழப்பிவிட்டு தெளிய வைக்காமல் விட்டுவிட்டீர்களே!
நீங்களும் கொஞ்சம் குழம்பி விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

முரளி,

//Replies

வவ்வால்September 23, 2013 at 1:11 PM

பிழை திருத்தம்,

துருவம் என்பதை "கோளார்தம்" என கொள்க./

அந்த பின்னூட்டத்திற்கு கீழ அப்போவே திருத்தம்னு போட்டிருந்தேனே அதனை இப்போ காப்பி& பேஸ்ட் செய்யும் போது கூட கவனிக்கலையோ அவ்வ்.

நேரம் மற்றும் நாளினை கூட சரிப்பார்த்துக்கொள்ளலாம், எல்லாம் உங்கப்பதிவில் தான் இருக்கு!


இன்னும் கூட தெளிவாக சொல்கிரேன்,

வட கோளர்த்ததின் ஒரு பகுதி சூரியனை பார்த்து இருக்கும் போது இன்னொரு பகுதி அதற்கு எதிர்ப்புறம் தானே இருக்கிறது, அது மீண்டும் சூரியனை அடுத்த 24 மணி நேரத்துக்குள் பார்த்துவிடும் (12 மணி நேரத்தில் மாறிவிடும் அடுத்த 12 மணி நேரம் சூரியனை பார்த்தே இருக்கும், அதுவே பகல்)

இதனை தான் சொல்லியுள்ளேன்.

மேலும் நிழல் குறித்து ஈக்னாவிகஸ் வைத்தும், நிலநடுக்கோடு வைத்தும் நீங்களிருவரும் குழப்பி தான் சொல்லி இருக்கிறீர்கள்.அதற்கான விளக்கம் இந்தப்பதிவில் கொடுத்தாயிற்று. நிழலினை தவிர்க்க முடியும்னும் காட்டியாயிற்று,அதில் சந்தேகம் இருக்கிறதா?

இப்பொழுது சொன்னது பூமி சுழற்சி,அச்சு சாய்வுக்கு, அதனை அடுத்தப்பதிவில் தான் விளக்க இருக்கிறேன் ,அப்போது புரிந்து கொள்ளலாம்.

நிழல் குறித்தான சந்தேகம் இருந்தால் இப்பதிவில் கேட்கலாம். சுழல் அடுத்து வருகிறது. நன்றி!
---------------

மாக்ஸ்,

வாரும்,நன்றி1

என்ன ஸ்பாம் பொட்டில குந்திட்டீர் ,தற்செயலாப்பார்த்துவிட்டு , இங்கே தூக்கி போட்டேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நான் சொன்னதை விட நீங்கள் சொன்னது இன்னும் குழப்பமே. நான் குறிப்பிட்டது துருவத்தின் குறிப்பிட்ட முனையை.(அதையும் குறிப்பிட்டிருக்கிறேன். )அதை சுற்றியுள்ள பகுதியை அல்ல. நீங்கள் அதை கோளார்த்தம் என்று சொல்லி சமாளித்து விட்டீர்கள். நீங்கள் அங்கு சொன்னது படிப்பவர்களுக்கு மேலும் குழப்பத்தையே ஏற்படுத்தும். நீங்கள் சொன்னதை வைத்து என்னைப் போன்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் எனபதை விளக்க ஒரு gif படத்தை உருவாக்க நினைத்தேன். நேரமின்மை காரணமாக அதை உருவாக்கி விளக்கத்தில் இணைக்க முடியவில்லை பூமி அச்சின் சாய்வைப் பற்றி படத்தையும் அடுத்த பதிவில் வெளியிட்டிருந்தேன். உங்களுக்கான விளக்கங்களை அடுத்த பதிவில் கொடுத்திருந்தேன். பார்க்கவில்லை என நினைக்கிறேன். சரியாகத் கணினியில் தெரியவில்லை என்று சொல்லி இருந்தீர்கள்.
எளிமையாகப் புரிவதை உங்கள் புத்திசாலித் தனத்தால் கடினமாக்குகிறீர்கள் . அதுதான் ரொம்பஅறிவாளியா இருக்கக் கூடாது ஹிஹிஹி

வவ்வால் said...

முரளி,

என்ன இப்படி இருக்கீங்க அவ்வ்!

துருவம் சாய்ஞ்சு இருக்குனா,அப்போ எல்லா மக்களும் துருவத்தில இருக்காங்களா? இல்லை துருவத்தில மட்டுமா சீசன் மாறப்போகுது?

வட, தென் கோளார்த்தத்தில் தான் சீசனல் சேஞ்சஸ் வருது,எனவே அதனை தானே கணக்கில் எடுக்கணும்?

# நான் அடுத்தப்பதிவில் இதனை விளக்குக்கிறேன் என சொல்லி இருக்கேன், பொறுக்கவும், அப்போ தெரியும் இத்தினி நாளா எப்படி ஒரு ஜெனிரிக் விளக்கத்தினை சொல்லிக்கிட்டு வந்திருக்காங்க,அதையும் நம்பிட்டு இருந்தோமேனு?

உண்மையில் சொல்லப்போனால் நீங்கள் விளக்கம்னு சொல்லி கொடுத்தீங்களே அது சரியல்லனு "உங்க ஃபேவரிட் நாசாவுக்கும்" தெரியும்,ஆனால் சிம்பிளாக சொல்லிட்டு போவோம்னு அதை சொல்லி வச்சிருக்காங்க,நாசாவின் இணைய தளத்திலும் பிற வானியல் ஆய்வு தளங்களிலும் நான் சொன்னவற்ரையும் போட்டு வச்சிருக்காங்க, என்ன 'பொது புத்தியில் இருக்கவங்க" அதனை தேடி படிக்கிறது இல்லை அவ்வளவே!

# ஒரு சிம்பிள் பேசிக் கேள்வி , மொமெண்ட் ஆஃப் இனர்ஷியா படி ஒரு நிலையில் இருக்கும் (இயக்கத்திலும்) பொருள் ஒன்று புற விசை செயல்படாத வறையில் நிலை மாறாது என்பதை நம்புறிங்களா?

அப்படினா பூமி சுத்தி வரும் போது வட கோளர்த்தமும்,தென் கோளார்த்தமும் தானாக எப்படி சூரியனை பார்த்து மாறும், அதுவும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை?

சாய்ஞ்ச அச்சுனு சொன்னால் எந்தப்பக்கமாக சாய்ந்து இருக்கோஅதே பக்கமாக தான் சாய்ந்து இருக்கனும் ,அவுட்டர் அர்பிட் பக்கமா சாய்ந்திருதால்,எல்லா நிலையிலும் அவுட்டர் ஆர்பிட் பக்கமா தான் அச்சு சாய்ந்து இருக்கனும், ஆனால் பூமியின் அச்சு நீங்களாம் சொல்லும் படத்தின் படி ஒரு தடவை அவுட்டர் ஆர்பிட் பார்த்தும் இன்னொரு தடவை இன்னர் ஆர்பிட் பார்த்தும் இருக்கே ஏன்?

உங்க கிட்டே எர்த் மாடல் இருந்தா , அதை சுத்திவிட்டுட்டு ,அதை கையில எடுத்துக்கிட்டு ஒரு வட்டம் போட்டு வாங்க,அச்சு இடம்,வலமா தானா மாறுதானு பாருங்க :-))

இதுக்கு வேற ஒரு விளக்கம் இருக்கு அதை தான் நான் சொல்லி இருக்கேன்,விரிவாக பின்னர் பதிவில் காணலாம், நீங்க நினைக்கிறாப்போல வானவியலில் எல்லாத்தையும் நாசா கண்டுப்பிடிச்சுடலை,இன்னும் ஆய்வுகள் நடக்குது, பலவும் கொஞ்சம் கொஞ்சமா தான் உறுதி ஆகுது, அதுவரைக்கும் "பாடப்புத்தகம் டைப்"ல ஒரு விளக்கம் கொடுத்து வச்சிருக்காங்க.

பூமி அச்சு எப்பொழுதும் 23.5 டிகிரி சாஞ்சு இருக்குமானு கேட்டால் ,நாசா விஞ்சானி பதில் சொல்லாமல் ஹி...ஹி அது வந்து என்னனானு ,.நான் சொன்னாப்போலத்தான் சொல்லுவார் :-))

# நான் உங்கப்பதிவை படிக்கலைனு எப்போ சொன்னேன், பின்னூட்டமிட முடியலைனு தான் சொன்னேன், மொபைலில் உங்கப்பதிவை படிச்சுட்டு தான் பதில் சொல்லி இருந்தேன்.

உங்கப்பதிவின் பின்னூட்ட பொட்டி தெரியவே மாட்டேங்குது ,பிரவுசரில், எதாவது டெம்ப்ளேட் மாற்றம் செய்தீர்களோ என்னமோ?

# இந்த காலத்திலேயே ஒரு மாற்றுக்கருத்து சொன்னால் இவ்வளவு எதிர்ப்பு வருதே, கலிலியோ,கோபர்நிக்கஸ் காலத்துல அவங்க எல்லாம் என்னப்பாடுப்பட்டிருப்பாங்க அவ்வ்!

நீங்களே கூகிள் செய்து பார்த்தாலும் நான் சொன்னது போன்ற ஆய்வுகளை பற்றி தெரிஞ்சுக்கலாம், கூகிள் என்ன எனக்கு மட்டும் தான் அப்படிலாம் இணைய தளத்தினை காட்டுதா என்ன?

R.Gopi said...

This is for your information.. Tomorrow you should not blame that u r not updated.....

வருகிற 16 ஆம் தேதி முதல் 30 ஆம்தேதி வரை பாண்டியில் தொட்டால் தொடரும் படப்பிடிப்பு தொடர்கிறது. முழுக்க, முழுக்க ஆக்‌ஷன் ப்ளாக்குகளுக்காக செல்கிறோம்.

வவ்வால் said...

கோபி,

வாங்க,நன்றி!

அந்த ஒலகப்பட ஷுட்டிங்க நான் பார்த்தேயாகனும்னு நினைக்கும் "உங்க நல்ல" உள்ளத்துக்கு நன்றி அவ்வ்!

பாண்டியில் எந்த பொந்தில நடக்குதோ?

வழக்கமா பாண்டி யுனிவர்சிட்டி பக்கம் பொம்மியார் பாலையம் போல எடத்துல இருக்க செம்மண் கரட்டுல தான் பாட்டு ,தீவிரவாதி சண்டைக்காட்சிலாம் எடுப்பாங்க அங்கப்போறதே சல்லைப்புடிச்ச வேலையாச்சே,நடக்கனும் அவ்வ்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வவ்வால் சார்,

//ஒரு சிம்பிள் பேசிக் கேள்வி , மொமெண்ட் ஆஃப் இனர்ஷியா படி ஒரு நிலையில் இருக்கும் (இயக்கத்திலும்) பொருள் ஒன்று புற விசை செயல்படாத வறையில் நிலை மாறாது என்பதை நம்புறிங்களா?

அப்படினா பூமி சுத்தி வரும் போது வட கோளர்த்தமும்,தென் கோளார்த்தமும் தானாக எப்படி சூரியனை பார்த்து மாறும், அதுவும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை?

சாய்ஞ்ச அச்சுனு சொன்னால் எந்தப்பக்கமாக சாய்ந்து இருக்கோஅதே பக்கமாக தான் சாய்ந்து இருக்கனும் ,அவுட்டர் அர்பிட் பக்கமா சாய்ந்திருதால்,எல்லா நிலையிலும் அவுட்டர் ஆர்பிட் பக்கமா தான் அச்சு சாய்ந்து இருக்கனும், ஆனால் பூமியின் அச்சு நீங்களாம் சொல்லும் படத்தின் படி ஒரு தடவை அவுட்டர் ஆர்பிட் பார்த்தும் இன்னொரு தடவை இன்னர் ஆர்பிட் பார்த்தும் இருக்கே ஏன்?// ஒரு புறம எப்படி சாய்ந்து இருக்கிறதோ அதே நிலையில் தான் ஆறுமாதம் கழித்தும் சாய்ந்து சாய்ந்து இருக்கிறது என்பதைத்தான் நானும் சொல்லி இருக்கிறேன். எல்லா நாட்களிலும் அச்சினி நிலையை கொடுக்காகலாக வரைந்தால் அவை வெவ்வேறு தளத்தில் அமைந்த இணை கோடுகளாக இருக்கும் என்பதையும் சொல்லி இருக்கிறேன்.சூரியனை நோக்கி அச்சு மாறுவதில்லை. சுற்றுப்பாதையின் மறுபக்கம் செல்லும்போது அவ்வாறு தோன்றுகிறது. உதாரணத்திற்கு ஒரு தென்னை மரம் கீழக்கு திசையில் இருக்கும் உங்களை பார்த்து சற்று சாய்ந்தவாறு உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள் அதை சுற்றி மறுபுறம் மேற்கு திசைக்கு வந்தால் மரத்தின் சாய்வு உங்களை நோக்கி யா இருக்கும்?( தென்னை மரம் அல்லவா சுற்றவேண்டும் என்று கேட்டு விடாதீர்கள்?) இதைத்தான் அச்சின் முனை ஆறு மாதத்திற்கு பிறகு சூரியனை நோக்கியும் விலகியும் இருப்பதாக சொன்னேன். ஆறாவது மாதத்தில் சட்டென்று இது நடைபெறுவதாக நான் சொல்லவில்லை. நீங்கள் குறிப்பிட்ட நியுட்டனின் முதல் விதிக்கு எதிராக இதில் ஏதுமில்லை.! அனிமேஷன் படங்களும் வீடியோக்களும் இணையத்தில் நிறைய இருக்கின்றன அத்தனையும் தவறு என்று சொன்னால் நான் என்ன சொல்ல முடியும்? அச்சின் வடமுனை முனை ஆர்பிட்டின் உட்புரமாகவே இருந்தால் எப்படி இருக்கும் என்பதையும் படத்தின் மூலம் காட்டி இருக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//உங்க கிட்டே எர்த் மாடல் இருந்தா , அதை சுத்திவிட்டுட்டு ,அதை கையில எடுத்துக்கிட்டு ஒரு வட்டம் போட்டு வாங்க,அச்சு இடம்,வலமா தானா மாறுதானு பாருங்க // சுற்றுதலும் சுழல்தலும் பல்வேறு விதங்களில் நடக்க வாய்ப்பிருக்கு. glob வச்சு அது சூரியனை எப்படி சுத்துதுங்கிறதை ஈசியா காமிக்க முடியும். வேற மாதிரியும் சுத்திக் காமிக்க முடியும். ஆனால் உண்மையில் இப்படித்தான் சுத்துதுன்னு தெரியப் படுத்த முடியும்.
செய்தும் காண்பித்திருக்கிறேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

# இந்த காலத்திலேயே ஒரு மாற்றுக்கருத்து சொன்னால் இவ்வளவு எதிர்ப்பு வருதே, கலிலியோ,கோபர்நிக்கஸ் காலத்துல அவங்க எல்லாம் என்னப்பாடுப்பட்டிருப்பாங்க அவ்வ்!//
நல்ல காலம் பாஸ் கலீலியோ கொபர்நிகஸ் காலத்தில நீங்க இல்ல. தப்பிச்சாட்டாங்க ஹிஹிஹி (சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா ) .