Wednesday, November 27, 2013

உலை வாயை மூட முடியுமா?.

(கதிர்வீச்சு கண்ணழகி ...ஹி...ஹி..!)

கி.பி 1986 ஆம் ஆண்டு முன்னால் சோவியத் ஒன்றியத்தில் இருந்த செர்நோபிள் (இன்றைய உக்ரெயின்),அணு மின்நிலையத்தில் ,அணு உலை நான்கில் பராமரிப்பு பணிகளின் போது ஏற்பட்ட "கவனக்குறைவால்" அணு உலை வெடித்து , பலத்த உயிர்ச்சேதமும், பெரும் அணுக்கதிர்வீச்சு மாசும் உருவானது அனைவருக்கும் நினைவிருக்கும்.



சரித்திரத்தில் மிகப்பெரிய அணு உலை விபத்தாக , செர்நோபிள் சம்பவம் கருதப்படுகிறது. அவ்விடத்தில் உள்ள செயல்படாத அணு உலை மூலம் இன்றும் கதிரியக்க பரவல் நடைப்பெறுவதால், அப்பகுதியே மனிதர்கள் வாழத்தகுதியற்றதாக கருதி " மனிதர்கள் இல்லா மண்டலமாக" அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:
----------------------------------------------------------


செர்நோபிள் அணு உலையை மையமாக வைத்து சுமார் 30 கி.மீ ஆரம் அளவில் "மனித சஞ்சாரமற்ற பிரதேசமாக " அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் பெரும்பாலும் பைன் மரக்காடுகளே உள்ளன ,அவையும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு , வாழும் கதிரியக்க மரங்களாக உள்ளன.எனவே பைன் மரக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுமானால், அதன் மூலமும் கதிரியக்கம் காற்றில் பரவும் அபாயம் உள்ளதாம்.


இதற்காக சுமார் 80 தீயணைப்பு வாகனங்கள் எப்பொழுதும் தயாராக செர்நோபிள் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது , கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காட்டுத்தீ உருவாவதை கவனித்து அவ்வப்போது அணைத்தும் விடுகிறார்கள்.


----------------------------------------------

கைவிடப்பட்ட செர்நோபிள் அணு உலை வளாகத்தில் இன்றும் அணு கழிவுகளும்,எஞ்சிய அணு உலை எரிப்பொருளும் அகற்றப்படாமல் உள்ளது, ஏதேனும் இயற்கை சீற்றத்தினால் ,அவை எல்லாம் " கலைக்கப்பட்டால்" காற்றில் கதிரியக்கம் பரவும் அபாயம் உள்ளது ,ஆனால் ஒட்டு மொத்த "அணுவளாக கழிவுகளையும்" அகற்ற போதுமான தொழிற்நுட்பம் இல்லை ,அப்படியே முயன்றாலும் அதற்கு மிக மிக அதிகம் செலவாகும் நிலை.

தற்போதுள்ள நிலையில் கதிரியக்கம் பரவாமல் பாதுகாக்கவே மிக அதிகம் செலவாகிறது,அதனையே ரஷிய அரசால் செய்ய இயலவில்லை. உக்ரெயின் தனி நாடாக பிரிந்து விட்டாலும் , இன்னமும் ரஷியா தான் அணு உலை சமாச்சாரங்களை கவனிக்கிறது. இப்படியே தொடர்ந்தால் , என்றாவது இயற்கை சீற்றத்தினால் "பழுதடைந்த அணு உலை கலைக்கப்பட்டு " உள்ளிருக்கும் அணுக்கழிவுகள் காற்றில் கலக்கலாம், அதனால் உக்ரெயின் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் நிலை, எனவே வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜீ-8 மூலம் நிதி திரட்டி ,செர்நோபிள் உலையில் இருந்து கதிரியக்கம் வெளியாகும் ஆபத்தினை தவிர்க்க ஒரு திட்டம் வகுத்துள்ளார்கள்.



இத்திட்டத்தின் படி சுமார் 1.5 பில்லியன் ஈரோ மதிப்பீட்டில் ஒரு மாபெரும் இரும்பு உறை தயாரித்து , ஒட்டு மொத்தமாக செர்நோபிள் அணு உலையை மூடி சீல் வைத்து விடுவதாகும்.



உலகில் மேற்கொள்ளப்படும் பொறியியல் கட்டுமானங்களிலேயே இது தான் தற்போது மிகப்பெரியது.

அரைவட்ட வடிவக்கூறையாக " இந்த இரும்பு கவசம்" தயாராகிறது.

உயரம் -110 மீட்டர்.

லிபர்ட்டி சிலையை விட உயரமானது,

அகலம்- 257 மீட்டர்.

ஒரு கால்பந்து மைதானமே இவ்விரும்பு கூறையின் கீழ் அமைக்கலாம்.

மொத்த எடை , 29,000 டன்கள்.

எப்படி மூடப்படும் என்பதனை விளக்கும் படங்கள்.

(முதற் பகுதி டோம்)

(டோம்-2)

(இரு பகுதிகள் இணைக்கப்படுகிறது)

(முழுவதும் மூடப்பட்ட நிலை)

இவ்வளவு பெரிய இரும்புக்கூறையை வேறு இடத்தில் செய்துவிட்டு , தூக்கி வந்து அணு உலையின் மீது பொறுத்த முடியாது என்பதால் , சிறு சிறு பாகங்களாக தயாரித்துவிட்டு ,அணு உலைக்கு சில மீட்டர்கள் தொலைவில் வைத்து ஒன்றாக இணைத்து , பின்னர் உலையை மூடி விட திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்.

அணுக்கதிர் வீச்சு நிரம்பிய சூழலில் பல நூறு பேர் உயிரை பணயம் வைத்து அங்கு வேலை செய்துக்கொண்டுள்ளார்கள். பாதுகாப்பு கவசம், பிராணவாயுக் கலன்கள் அணிந்துக்கொண்டு தான் வேலை செய்ய வேண்டும், இது போன்ற பல தடைகள் இருப்பதால் வேலை மெதுவாகத்தான் நடைப்பெற்று வருகிறது.

இவ்வேலையில் தற்போதுள்ள மிகப்பெரிய சவால் , அணு உலையின்  புகைப்போக்கி மிக உயரமாக உள்ளது எனவே அதனை பிளாஸ்மா கட்டிங் முறையில் வெட்டி அகற்ற வேண்டும், அப்பொழுது , சில துண்டுகள் அணு உலையின் மீது விழுமானால் , செயல்படாத அணு உலையில் உள்ள கழிவுகள் மேல் கிளம்பி அனைவரையும் தாக்கும் அபாயம் உள்ளதாம்.

எப்படியும் வெட்டி அகற்றிவிட்டு , மொத்தமாக .இரும்பு உறை போட்டு மூடிவிடுவது தான் ஒரே வழி என்பதால் ,நிதானமாக ஆனால் தொடர்ந்து வேலை செய்துக்கொண்டுள்ளார்கள், இத்திட்டம் 2015 இல் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இரும்பு உறையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளாம், அப்பவும் அணு உலையில் உள்ள கழிவுகள் கதிவீச்சுடன் வீரியமாகவே இருக்கும், எனவே அதற்கு பிறகு என்ன செய்ய உத்தேசம் எனத்தெரியவில்லை.

ஊருல ஒரு சொலவடை சொல்வாங்க உலை வாய மூடினாலும் ஊர் வாய மூடவா முடியும்னு ,ஆனால் அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, அணு உலை வாயை மூடுவது ஊர் வாயை மூடுவதை விட ரொம்ப கஷ்டம்னு :-))

சனங்க தொலைக்காட்சி பார்க்கவும், லைட் எரியவிடவும் மின்சாரம் இல்லைனு ,அணு மின்சாரத்தை உருவாக்கிட்டு ,இப்போ குத்துதே,குடையுதேனு ,எம்புட்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு, இதுக்கு பேசாம மின்சாரமே இல்லாம தீப்பந்தம் புடிச்சுட்டு நிம்மதியா வாழ்ந்திடலாம் போல இருக்கே அவ்வ்!

ஆமாம் நம்ம ஊரிலவும் "அதி நவீன அணு மின் உலைய " கூடங்குளத்திலே கட்டினாங்களே ,அதுக்கதை என்னதான் ஆச்சு, தொறப்பாங்களா ,இல்லை அப்படியே  வேலை நடக்கிறது இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவக்கம்னே கதை ஓடுமா, அதுக்கு பாதிப்பு வந்தா மூடி வைக்க இப்படி "இரும்பு கவச மூடி" எதுவும் செஞ்சு வச்சிருக்காங்களா , ஒன்னுமே தெரியலையே அவ்வ்!

--------------------------------------------

பின்குறிப்பு:

தகவல் மற்றும் படங்கள் உதவி,

http://www.bbc.co.uk/news/magazine-25086097

விக்கி மற்றும் கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
------------------------------------------

20 comments:

Anonymous said...

//இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவக்கம்னே கதை ஓடுமா//

//இன்னும் 15 நாளில் மின் உற்பத்தி துவக்கம்னே கதை ஓடுமா//

நம்ம சாராயனசுனாமி, இன்னும் 10 நாட்களில் மின் உற்பத்தி துவங்கும் னு 2 வருஷத்துக்கு முன்னாடியிருந்தே சொல்லிகிட்டேயிருக்கார். நம்ம மக்கள் தான் பாவம். அவர் கஜினி ரசிகர் நு தெரியாது. 10 நாள் ன்னு சொன்னா 10 வருஷம் னு சொன்ன மாதிரி.

Anonymous said...

//அதி நவீன அணு மின் உலைய//

அவ்வ்...............................

Anonymous said...

யோவ்,
நீர் ப்ளாக் வச்சிருக்கீரா? இல்ல பல்கலைகழகம் நடத்துறீரா ய்யா?
இலக்கியம், வணிகம், பயோ-டெக்னாலஜி, அறிவியல், வானியல், அரசியல் ன்னு ஒன்னையும் விடுறதில்ல.
(அய்யயோ....நந்தவனம் இத படிச்சிருவாரோன்னு பயமா இருக்குதே...)

Excellent Article.
Thanks vavvaal.

Amudhavan said...

நீங்க இதுபோன்ற ஆபத்துக்கள் பற்றியெல்லாம் சின்னக் குழந்தைகளுக்கும் புரிவதுபோல எத்தனை எடுத்துரைத்தாலும் சரி; ஒரு கூட்டம் அதுபாட்டுக்கு "எல்லாத்துலருந்தும் மின்சாரம் எடுத்தாச்சு. இனிமேலும் தேவைக்கு அணுவிலிருந்துதான் மின்சாரம் எடுக்க முடியும்.அதான் அப்துல் கலாமே சொல்லிட்டாருல்ல ஒண்ணும் ஆபத்தெல்லாம் இல்லைன்னு. நீ என்ன அப்துல் கலாமைவிட பெரிய விஞ்ஞானியா?" அப்படின்னு கேட்டுக்கிட்டுத்தான் இருக்கப்போறதுகள். இந்த மொத்தக் கூட்டத்தையும் ஒண்ணு திரட்டி பேசாம செர்நோபிள் பகுதிக்கு அனுப்பி அங்கே அந்த மேற்கூரை இரும்பு உறையைப் போட்டுவிட்டு வருவதற்கான பணிக்கு அனுப்பிவைக்கலாம். இந்தக் குழுவிற்குத் தலைவராக வேண்டுமென்றால் அப்துல் கலாமையே கூட அனுப்பலாம்.

அஞ்சா சிங்கம் said...

// கதிர்வீச்சு கண்ணழகி ///

ஹ்ம்ம் .. இது கட்டாயம் மூடபட
வேண்டியது தான் ....

வவ்வால் said...

வேற்றுகிரகவாசி,

வாரும்,நன்றி!

பத்து நாள் தவணை சொன்னால் தப்பா?

பத்து,பத்து நாளா பத்து தடவை தவணை சொன்னால் தப்பா?

பத்து பத்து நாளா ,பத்துப்பது தடவையா ,பத்து வருஷத்துக்கு தவணை சொன்னால் தப்பா?

சாராயணசுனாமி இப்படித்தான் கேட்பார் அவ்வ்!

# அதிநவீன அணு உலைனு "அணு விஞ்சானியே சொல்லி இருக்கும் போது சந்தேகப்படலாமா, நீர் என்ன அவர விட பெரிய விஞ்சானியானு கேட்பாங்க அவ்வ்!

# ஆனாலும் என்னை யாருக்கிட்டேயாவது கோத்து விட்டு ,மொத்து வாங்க வைக்கலைனா ,உமக்கு தூக்கம் வராதே அவ்வ், ஏற்கனவே என் மேல கொள்ளப்பேரு கொலவெறியில இருக்காங்க,நீர் வேற இப்படி போட்டுக்கொடுக்குறீரே அவ்வ்!

ஹி...ஹி..ஆனாலும் இப்படில்லாம் "புகழ்ச்சியா யராவது பேசினா காதுக்கு குளிர்ச்சியா' தான் இருக்குது...சும்மாவா அரசியல்வாதிங்க "பட்டம் கொடுத்து போஸ்டர் ஒட்டுறாங்க " அவ்வ்!
------------------

அமுதவன் சார்,

வாங்க,நன்றி!

நீங்க சொல்றது என்னவோ உண்மை தான், எத்தன சொன்னாலும், எங்களுக்கு தெரியாதா மனோபாவம் தான் நம்ம மக்களுக்கு என்ன செய்ய?

# // நீ என்ன அப்துல் கலாமைவிட பெரிய விஞ்ஞானியா?" அப்படின்னு கேட்டுக்கிட்டுத்தான் இருக்கப்போறதுகள். //

அய்யய்யோ இந்த இணைய பண்னையார்கள் தொல்லை பெரும் தொல்லை, நீ என்ன சயின்டிஸ்ட்டா, எப்படி சொல்லப்போச்சு, நாங்கல்லாம் 50 வருச சர்வீஸ் போட்டவங்கனு ,சொம்பை தூக்கிட்டு நாட்டாமை பண்ணக்கிளம்பிடுறாங்க அவ்வ்!

செர்நோபிள் கூட வேண்டாம் கூடாங்குளத்துளவோ இல்லை கல்பாக்கத்துலவே வீடு கட்டி குடி வச்சாக்கூட போதும் அவ்வ்!

//இந்தக் குழுவிற்குத் தலைவராக வேண்டுமென்றால் அப்துல் கலாமையே கூட அனுப்பலாம்.//

அவரைப்போன்றவர்கள் எல்லாம் எங்கே போனாலும் கண்ணாடிக்கூண்டு பாதுகாப்பு கிடைச்சிடும் எனவே போய் ,சேவையாற்றிட மாட்டாரா :-))
முன்னால் சனாதிபதினு அரசு பணத்தில் தான் பாதுகாப்பு இன்னும் பல சலுகைகள் பெற்றுக்கொண்டுள்ளதால், அரசுக்கு விசுவாசமாகத்தான் இருக்க ஆசைப்படுவாரு ,அவரு நிலைமை அப்படி. மேலும் பிரதமரின் அறிவியல் ஆலோசகராக செயல்பட்டு அணுகுண்டெல்லாம் வெடிக்க வச்சு , நாட்டின் வலிமைனு சொன்னவரால் எப்படி இப்போ மாத்தி பேச முடியும்?

# அணு உலைக்கு எதிராக போராடுபவர்களின் "சிலத்தவறான" அனுகுமுறையால் அணு உலைத்திட்டம் வெற்றிகரமாக என்றேனும் செயல்ப்படத்தான் போகிறது ,அப்புறம் காலமெல்லாம் பயந்துக்கிட்டே தான் வாழப்போகிறோம். விதி வலியது!!!

அணு ஆபத்து என்பது பொதுமக்கள் அனைவருக்குமே ஆபத்தான ஒன்று ,ஆனால் அணு உலை ,மீனவர் வாழ்வாதாரம் என ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்தே எதிர்ப்பரசியல் செய்யப்பட்டதால், பொதுமக்களின் கவனத்தினை ஈர்க்கவில்லை, இவ்வணு உலை பிரச்சினை என்பது மீனவர்களின் பிரச்சினை ,அதுவும் தென்மாவட்ட மீனவர்களின் பிரச்சினை மட்டுமே என்பது போல ஆகி, தூத்துக்குடி,நெல்லை மாவட்ட பொதுமக்களின் ஆர்வத்தை கூட தூண்டவில்லை. இதற்குள் இன்னொரு சிக்கல் என்னவெனில் "குறிப்பிட்ட நபர்" மட்டுமே போராளியாக காட்டிக்கொள்ள ஆசைப்பட்டதும் ஆகும், வேறு பிரபலமான நபர்கள்(வைகோ,கேஜ்ரிவால், மேதாபட்கர், அருந்ததி ராய் போன்றோர்)உள் நுழைந்து முன்னெடுத்து போராடினால் எங்கே தமது முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என அச்சப்பட்டு ,பிரச்சினையை "கோழி அடைக்காப்பது" போல தன்னை சுற்றியே வைத்துக்கொண்டுவிட்டார்.

தமிழகம் அறிந்த,அல்லது தேசிய அளவில் முன்னெடுத்து செல்லக்கூடியவர்களை அரவணைத்து தேசிய அளவில் கவனம் ஈர்த்து தீவிரமாக போராடி இருக்க வேண்டிய ஒன்றை , இடிந்தக்கரை என்னும் கிராமத்தோடு சுருக்கிவிட்டார்கள்.
-----------------

அஞ்சா ஸிங்கமே,

வாரும்,நன்றி!

அஞ்சா ஸிங்கம்னு பேரு வச்சுக்கிட்டு "கதிர்வீச்சை" பார்த்துப்பயப்படுறாப்போல தெரியுதே , ஹி...ஹி அழகிய கதிர்வீச்சு அழிக்காது ,எனவே கவலை வேண்டாம் :-))

"காக்க காக்க கத்ரினா காக்க

நோக்க நோக்க நயந்தாரா நோக்க...

பார்க்க பார்க்க மலபார் மயிலு பார்க்க"

என உமக்காக ஒரு ஸ்பெஷல் தயாரிச்சு இருக்கேன் இதை சொன்னா எந்த கதிர்வீச்சும் தாக்காது :-)) ,

காரிகன் said...

வவ்வால்,
செர்நோபிலை வெடிக்கக் காத்திருக்கும் அணுகுண்டு என்று சொல்வதுண்டு. யுரோப் ஒரு மரணப் படுக்கையின் மீது அமர்ந்திருக்கிறது என்று கூட சொல்லலாம். அணு உலையின் கதிர் வீச்சை சுலபத்தில் அடக்கிவிட முடியாது என்பது அதை கண்டறிந்தவர்களே தெரிவிக்கும் உண்மை. நமக்கு நாராயண சாமி அப்துல் கலாம் போன்ற "விஞ்ஞானிகளே" போதும். பதிவை படிக்கும் விதத்தில் தெளிவாக எழுதியதற்கு பாராட்டுக்கள்.

Amudhavan said...

\\இதற்குள் இன்னொரு சிக்கல் என்னவெனில் "குறிப்பிட்ட நபர்" மட்டுமே போராளியாக காட்டிக்கொள்ள ஆசைப்பட்டதும் ஆகும், வேறு பிரபலமான நபர்கள்(வைகோ,கேஜ்ரிவால், மேதாபட்கர், அருந்ததி ராய் போன்றோர்)உள் நுழைந்து முன்னெடுத்து போராடினால் எங்கே தமது முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என அச்சப்பட்டு ,பிரச்சினையை "கோழி அடைக்காப்பது" போல தன்னை சுற்றியே வைத்துக்கொண்டுவிட்டார்.

தமிழகம் அறிந்த,அல்லது தேசிய அளவில் முன்னெடுத்து செல்லக்கூடியவர்களை அரவணைத்து தேசிய அளவில் கவனம் ஈர்த்து தீவிரமாக போராடி இருக்க வேண்டிய ஒன்றை , இடிந்தக்கரை என்னும் கிராமத்தோடு சுருக்கிவிட்டார்கள்.\\

வவ்வால், மேம்போக்காக நடைபெறும் நிகழ்வுகளை மட்டும் வைத்துப் பார்க்கும்போது நாம் இப்படியொரு முடிவுக்கு வருவது எளிதுதான். உங்களின் இந்தக் கேள்வியே எனக்கும் தோன்றியதுண்டு. இதனை ஒரு சிலரிடம் நானும் கேட்டதுண்டு. கிடைத்த பதில் உவப்பானதாக இல்லை.
இடிந்த கரையிலிருந்து போராடுபவர்கள் அவர்களுடைய ஆதரவுக்காகவும், இதனை ஒரு தேசிய விவகாரமாக எடுத்துச் செல்லவும், பலரையும்- நாம் நினைக்கின்ற இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் உட்பட, தொடர்பு கொண்டுதான் வருகிறார்கள் எனவும், 'இவர்களுடைய' தரப்பு என்பது அவர்கள் கூப்பிட்ட அன்றைக்கு அங்கே சென்று ஒருநாள் அவர்களுடன் உட்கார்ந்திருந்துவிட்டு ஊடகங்களுக்கு ஏதோ இரண்டுவார்த்தைச் சொல்லிவிட்டு வந்துவிடுவதாக மட்டுமே இருக்கின்றது என்றே அறிகிறேன். திரு சுப.உதயகுமார் நிறையப்பேரை, நிறையப் பிரமுகர்களை, அவராகவே அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.கட்சி சார்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு இயக்கங்கள், பல்வேறு சமூக நிறுவனங்கள் என்று தேடித்தேடி அவரே நேரடியாகவே தொலைபேசி செய்துகொண்டுதான் இருக்கிறார் என்பதையும் அறிவேன். இவர்கள்தாம் தொலைபேசியில் மட்டும் வாழ்த்துச் சொல்லிவிட்டு ஜகா வாங்கிவிடுகிறார்கள் என்றும் கேள்விப்படுகிறேன்.
அதனால் தமக்கு விசுவாசமாகவும், தாம் சொல்வதைக் கேட்கும் மக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் போராடிக்கொண்டிருப்பது இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

தூரத்திலிருக்கும் மக்களுக்கு எது எப்படிப்போனால் நமக்கென்ன நமக்கு மின்சாரம் வந்தால் போதும் என்ற நினைப்பு மட்டுமே இருக்கிறது. மக்களின் இந்தச் சிந்தனைக்கு எதிராக நாம் செயலாற்றினால் ஓட்டுப்போய்விடும் என்று அரசியல் கட்சிகள் நினைப்பதுதான் 'தலைவர்கள்' ஒதுங்குவதற்கான உண்மையான காரணம்.
இந்த நிலைமையில்தான் பாவம் அந்த மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

Anonymous said...

இந்தியாவிடம் உதவி கேட்டு இருக்கலாம்...இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் ராக்கெட் மினியேட்சர் மாடலை வெங்கி காலடியில் வச்ச மாதிரி...சின்ன இட்லி சட்டி மூடி ரெடி பண்ணி திருப்பதில வச்சு ஒரு பூஜை போட்டா எல்லாம் இன்ப மயம்....இதுகூட ருஷ்யாகாரனுக்கு தெரியல...தொழில்நுட்பம் தெரிஞ்சு என்ன பயன் "விஞ்சாண அறிவு" இல்லையே...

மத்தபடி பதிவு அருமை....

---கொங்குநாட்டான்

பால கணேஷ் said...

Padithu mudithathum adivatril -nam naattu anu ulaikalai ninaithu- oru bageer! full deatils with photos - ungal uzhaippu bramikka vaikuthu vavval!

Anonymous said...

இது என் நண்பர் சொன்னது.
(செய்தியின் உண்மை பற்றி என்று எனக்கு தெரியவில்லை)

ரஷ்ய விஞ்ஞானிகள் கல்பாக்கம் அணு உலையை install செய்யும் போது, அவர்களுக்கு, சாப்பாட்டுக்கு மீன் வழங்கப்பட்டதாம். அவர்கள் எங்கிருந்து இந்த மீன்கள் பிடிக்கப்பட்டன என்று கேட்டிருக்கிறார்கள். வழங்கியவர்கள் கல்பாக்கம் கடல் என்று கூறியிருக்கிறார்கள். அதன் பின் அந்த விஞ்ஞானிகள் அந்த மீன்களை சாப்பிடவில்லையாம். தூக்கி போட்டு விட்டார்களாம்.

நமது Future Generation-ஐ ஆபத்தில் வைப்பது பெரிய முட்டாள்தனம். அதுவும் ஒரேடியாக போய்விட்டால் கூட பரவாயில்லை. ஆனால் உடல் ஊனத்தோடு பிறப்பது, மனித வாழ்க்கையில் கொடுமையிலும் கொடுமை. போபாலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை இன்னும் நீடிக்கிறது. ஆனானப்பட்ட ஜப்பானே திணறிக்கொண்டிருக்கிறது.
பெரிய பெரிய அணு விஞ்ஞானிகளே certificate கொடுக்கும்போது, பொது மக்களுக்கு பயத்தை போக்க இதே மாதிரி இன்னொரு அணு உலையை செய்து டெல்லி பாராளுமன்றத்து பக்கத்தில் வைத்துவிடலாமே!

வவ்வால் said...

காரிகன்,

வாங்க,நன்றி!

மரணப்படுக்கையின் விபரீதம் உணர்ந்து தான் ஜி-8 நாடுகள் சொந்தமாக்க காசுப்போட்டு வேலை செய்யுது,அணு உலைக்கட்டின ரஷியா கையில காசு இல்லைனு கைய விரிச்சிடுச்சு, நமக்கு இப்படி ஒரு நிலை வந்தா யாரும் வர மாட்டாங்க அவ்வ்.

# படிக்கிற மாதிரி இப்போத்தான் எழுதக்கத்துக்கிட்டேனா அவ்வ்!

நன்றி!
------------------
அமுதவன் சார்,

மீள் வருகைக்கு நன்றி!

நீங்க சொன்னது போல இருந்தால் பரவாயில்லை, மற்றவர்களின் இயலாமைனு ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் மத்திய அரசை எதிர்த்து செய்யப்படும் போராட்டம் வெற்றிப்பெற வேண்டுமெனில் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவு தேவையல்லவா? ஆனால் அப்பகுதி மீனவ மக்களில் ஒருப்பகுதியினரை மட்டுமே திரட்டி செயல்ப்பட்டால் எப்படி வெற்றிப்பெற முடியும்.

மீனவர்களிலேயே ஒரு பிரிவான முக்குவர்கள் சமூகம் போராட்டத்துக்கு ஆதரவில்லை, பரதவர்கள் பிரிவில் தான் ஆதரவு என ஏன் பிரிவினைகள்?

மேலும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பொதும்மக்களிடையே கூட ஆதரவு திரட்டப்படவில்லை. போராட்டங்கள் பெரிய அளவில் நடத்தப்பட்டால் தானே வெற்றிக்கிட்டும்.

மேலும் ஆரம்பக்காலங்களில் அணு உலைக்கு எதிராக போரடியவர்களை எல்லாம் புறக்கணித்து செயல்ப்படுவதாக பரவலாக பேச்சும் நிலவுகிறது.

ஆரம்பத்தில் கூட நின்ற பாலபிரஜாபதி அடிகள் கூட ஒருக்கட்டத்தில் உதயகுமார் அவர்களின் செயல்பாடை விமர்சித்து விலகிக்கொண்டார்,என போராட்டத்தில் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஒரு "அடையாள போராட்டமாகவே "செல்வதேனோ?

கடந்த தேர்தலின் போது தொடர் போராட்டத்திற்கு விடுமுறை விட்டுவிட்டு வாக்களிக்க சென்றார்கள், அப்படி வாக்கு போட்ட அம்மையார் அரசு தான் இன்று அடக்குமுறையும் ஏவுகிறது அவ்வ்.

கடந்த தேர்தலின் போது "தேர்தல் புறக்கணிப்பு" என்ற ஆயுதத்தினை பிரயோகித்து இருந்தால் போராட்டம் வெற்றியடைந்திருக்க கூடும், இனிமே அடுத்த பொதுத்தேர்தல் வரும் போது தான்,ஆனால் அதுக்குள்ள அணு உலை முழு மூச்சாக இயங்கிடக்கூடும்.

எதிர்ப்பு தெரிவிப்பதும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தால் தான் வெற்றியடையும்.
---------------

கொங்கு நாட்டார் வாரும் ,நன்றி!

ஓவர் குசும்பு, வெங்கி "ராமம் போட்டு , பொட்டு வச்சு பொங்கல் சாப்பிடுறாவாளுக்கு தான் அருள்ப்பாலிப்பார் , ரஷ்யாக்காரன் நாத்திகனாச்சே, வேண்டும்னா , வடகலை அய்யங்காரா கன்வெர்ட் ஆக்கிட்டு , வெங்கிக்கிட்டே சேவிச்சுக்க சொல்லிடலாமா அவ்வ்!
-----------

பால கணேஷ் ,

வாங்க,நன்றி!

அணு உலைப்பத்திப்பேசினால் தான் பெரியவங்களாம் வராங்க :-))

நம்ம நாட்டுல எல்லாமே கட்ட முடியும் ,செய்ய முடியும்,ஆனால் பரமாரிக்க மாட்டாங்க,ஆசியாவிலே பெரிய பேருந்து நிலையமா கோயம் பேடை கட்டினாங்க,ஆனால் அதோட சரி பராமரிப்பு பல்லிளிக்குது ,அதே போல தான் ,நம்ம ஊர் அணு உலைகளும் இருக்கும்.

கல்பாக்கம் அணு உலையிலவே சுனாமி வந்தப்போது 200 பேரு செத்துட்டாங்க, அதுக்கு அப்பரமா தான் அங்கே சுனாமி தடுப்பு சுவரே கட்டினாங்க. எனவே எல்லாம் நடந்தப்பிறகு தான் நாம நடவடிக்கையே எடுப்போம் அவ்வ்.

# ஹி...ஹி உண்மைய சொன்னா ,இந்தப்பதிவுக்காக அதிமா உழைக்கலாம் இல்லை, மொழிமாற்ற வேலை தான் ...!

-----------------
வேற்றுகிரகவாசி,

வாரும் நன்றி!

அப்படியான சம்பவம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை, கல்பாக்கம் அணு உலை ரஷ்ய தொழில்நுட்பம் இல்லை, அமெரிக்க தொழில் அணு உலையின் மாதிரியை வச்சு ,இந்தியாவே செய்தது,எனவே ரஷ்ய விஞ்சானிகள் வந்திருக்க வாய்ப்பில்லை.

இதுக்கு முன்ன இந்தியாவில் அமைக்கப்பட்ட அணு உலைகள் எல்லாம் அமெரிக்கா, கனடா, ஃபிரான்ஸ் ஒத்துழைப்பில் , கூடங்குளம் தான் ரஷ்ய கூட்டு , மீடியாவில் அதிக எதிர்ப்பு கிளம்ப இதுவும் ஒரு காரணமாகும்.

மேலும் இன்ஸ்டால் செய்யும் நிலையில் கடலில் கதிரியக்கம் பரவ ஏது வாய்ப்பு,அணு உலை இயங்க ஆரம்பித்த பின் என்று சொன்னாலாவது பொறுத்தமாக இருக்கும்.

ஆனால் இப்போ மீன் சாப்பிடுற சென்னை வாசிகளுக்கு தான் ஆபத்து அவ்வ்!

என்ன செய்ய நமக்கு தான் ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரியாச்சேனு மீன் சாப்பிடுறொம் அவ்வ்!
------------------

தேன் நிலா said...

மிக இயல்பாக சொல்லியிருக்கிறீர்கள்..! ஒவ்வொரு வரியையையும் நிறுத்தி, நிதானமாக படித்தேன்.. பகிர்வினிற்கு மிக்க நன்றி ஐயா..

===================

வணக்கம்...

நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

சரியா...?

உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

அப்போ தொடர்ந்து படிங்க...

ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

Ant said...

கூடங்குளதிலேயே மின்வெட்டு:


http://tamil.oneindia.in/news/tamilnadu/bomb-blast-indinthakarai-6-killed-3-injured-188256.html

Anonymous said...

பிரான்சில் ஏதும் அணு உலைப் பிரச்சினை வந்ததுண்டோ? அவர்கள் கமுக்கமா 50% மின்சாரத்தை அணு உலைகளிலிருந்தே பெற்று வருகிறார்கள்.

Anonymous said...

Those who support nuclear power plant, Please look at the below link.

http://tamil.oneindia.in/news/india/bhopal-gas-tragedy-the-fight-continues-188721.html

Think of our future generation

வவ்வால் said...

சுப்புடு,

வாங்க நன்றி!

நிதானமாக படித்ததற்கு சிறப்பு நன்றிகள்!
உங்கப்பதிவு பார்க்கிறேன்( எல்லா இடத்திலும் உன்க விளம்பரமாத்தான் இருக்கு அவ்வ்)
------------

அனானி அண்ணாத்த,
நன்றி!

என்கிட்டே கேட்ட நேரத்தில ,கூகிள்கிட்டே கேட்டு இருக்கலாம் அவ்வ்.

எந்த அணு உலையா இருந்தாலும் 100% பாதுகாப்பா அமைக்கவே முடியாது, இன்னும் சொல்லப்போனால், சுமார் 10 % ரேடியேஷன் லீக் இருக்கும், எனவே தான் ஒதுக்குப்புறமான இடத்திலும், வேலை செய்பவர்களுக்கு , சுழற்சியில் பணி நேரம் ஒதுக்குவார்கள், இதன் மூலம் ரேடியேஷன் வீச்சை உடல் தானாக சரி செய்துக்கொள்ளும்.


அணு உலைகளில் இயல்பாக இருக்கும் குறைபாடுகள் பற்றி முன்னர் எழுதிய பதிவு,

http://vovalpaarvai.blogspot.in/2011/11/blog-post_2722.html

-----------------

ant (எறும்பு?)

நன்றி!

அந்த செய்திலாம் தெரியாத காட்டுல இருக்கேன்னு நினைச்சிட்டின்களோ அவ்வ்.

ஜூவில கூட புலனாய்வு செய்து கட்டுரை போட்டிருக்கு.

அது தாது மணல் விவகாரத்தில் வெடிச்ச குண்டாம்.
-------------------

வேற்றுகிரகவாசி,

வழக்கமா நம்ம நாட்டில எதுக்கும் இழப்பீடு வாங்க முடியாது, வழக்கு போட்டாலும் வாய்தா வாங்கியே கொன்னுடுவான்க,காசுக்கு ஆசைப்படும் வழக்கறிஞர்கள் இருக்கும் வரையில் , என்ன வேண்டுமானாலும் நாட்டில செய்யலாம் அவ்வ்!

aavee said...

உங்கள் பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.. வாழ்த்துகள்.

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by the author.