(நம்மளையும் ஆஸ்கார் விருது வாங்க சொல்லிடுவானோ? அவ்வ்)
ஆஸ்கார் விருதுகள்-2014 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,இவற்றில் இருந்தே 86வது ஆஸ்கார் விழா விருதுகள் முடிவு செய்யப்படப்படும். இவ்வாண்டுக்கான ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இந்திய தயாரிப்புகள் எதுவும் போட்டியில் இல்லை.
ஆஸ்கார் -2014 இறுதி தேர்வுப்பட்டியல்(நாமினேஷன்):
# Best picture
படம்.
(அமெரிக்கன் ஹஸ்டில்- ஹாலிவுட் பில்லா)
American Hustle
Captain Phillips
Dallas Buyers Club
Her
Gravity
Nebraska
Philomena
The Wolf of Wall Street
# Best director
(Martin Scorsese,)
David O Russell, - American Hustle
Alfonso Cuarón, - Gravity
Alexander Payne, - Nebraska
Steve McQueen, - 12 Years a Slave
Martin Scorsese, - The Wolf of Wall Street
# Best actor
படம்.
(Chiwetel Ejiofor, 12 Years a Slave)
Bruce Dern,- Nebraska
Leonardo DiCaprio, -The Wolf of Wall Street
Chiwetel Ejiofor, - 12 Years a Slave
Matthew McConaughey, - Dallas Buyers Club
# Best actress
(அமெரிக்கன் ஹஸ்டில் நாயகி- சிறப்பாக திறமைகளை "வெளிப்படுத்தக்கூடியவர்")
Cate Blanchett, -Blue Jasmine
Sandra Bullock,- Gravity
Judi Dench,- Philomena
Meryl Streep, - August: Osage County
# Best supporting actor
(Barkhad Abdi,-somalia)
Bradley Cooper, - American Hustle
Michael Fassbender, - 12 Years a Slave
Jonah Hill, - The Wolf of Wall Street
Jared Leto,- Dallas Buyers Club
# Best supporting actress
(Jennifer Lawrence, American Hustle- சப்போர்ட்டே தேவைப்படாதவர்)
Jennifer Lawrence, - American Hustle
Lupita Nyong'o, - 12 Years a Slave
Julia Roberts, - August: Osage County
June Squibb, - Nebraska
# Best original screenplay
(nominated for best screenplay(original)
Blue Jasmine
Dallas Buyers Club
Her
Nebraska
# Best adapted screenplay
(nominated for best screenplay-adapted)
Captain Phillips
Philomena
12 Years a Slave
The Wolf of Wall Street
# Best foreign film
படம்.
(ஓமர் படத்தில் ஒரு காட்சி)
The Great Beauty (Italy)
The Hunt (Denmark)
The Missing Picture (Cambodia)
Omar (Palestine)
# Best documentary
படம்.
The Act of Killing
Cutie and the Boxer
Dirty Wars
The Square
20 Feet from Stardom
# BEST DOCUMENTARY(SHORT)
CaveDigger
Facing Fear
Karama Has No Walls
The Lady in Number 6: Music Saved My Life
Prison Terminal: The Last Days of Private Jack Hall
# BEST SHORT FILMS:
Aquel No Era Yo (That Wasn't Me)
Avant Que De Tout Perdre (Just before Losing Everything)
Helium
Pitääkö Mun Kaikki Hoitaa? (Do I Have to Take Care of Everything?)
The Voorman Problem
மேலதிக விவரங்களுக்கு செல்க,
# http://oscar.go.com/nominees
# மைய நீரோட்ட திரைப்படங்கள் (mainstream films)குறித்து நம்ம வெகு சன ஊடகங்கள் விலாவாரியாக நிறைய கதைக்கும்,என்பதால் அதிகம் கவனிக்கப்படாத சில திரைப்படங்கள், குறும்படங்கள்,ஆவணப்படங்கள், அனிமேஷன் வகையறாப்படங்கள் குறித்து கொஞ்சம் பார்க்கலாம்.
மேற்சொன்ன இணையூடக(parallel cinema) வகை கலை படைப்புகளில்,"மத்திய கிழக்கு மற்றும் இஸ்லாமிய" பிரதேச படைப்பாளிகள் ஒரு புதிய அலையாக உருவெடுத்து ஆஸ்கார் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது "கலைப்படைப்புகள்" மீதான இறுக்கமான இஸ்லாமிய பார்வைகள் நெகிழ்வான போக்கில் மாறிவருவதை காட்டுகிறது.
மேலும் இம்மாற்றம் இந்திய கலைப்படைப்பாளிகளுக்கு மவுனமொழியில் உரக்க தெரிவிக்கும் ஒரு பாடமாகவும் கருதலாம்.
இந்தியாவில் அனைத்து வகை ஊடக சுதந்திரம் மற்றும் படைப்புலக வசதிகள் ,தொழில்நுட்ப பின் புலங்கள் என வைத்துக்கொண்டு, டிடிஎஸில் செவிப்பறை கிழிய "பஞ்சு டயலாக்குகள்"பேசுவதிலும், நாபிக்கமல குளோஸ் அப்புகளிலும் மட்டுமே மூழ்கி முத்தெடுக்கும் கலையுலக பிரம்மாக்களும்,95 கோடியைக்கொட்டி விசேஷரூபமாக காப்பியடிக்கும் லோகநாயகர்களும் ,தொலைக்காட்சி பேட்டிகளில் மட்டும் "ஹாலிவுட்" தரம் என பீற்றிக்கொள்வதை குறைத்துக்கொண்டு ,உருப்படியாக உலக தரத்தில் கலைப்படைப்புகளை கொடுங்கடா நொண்ணைங்களா என ஒவ்வொரு சராசரி திரை ஆர்வலனும் உரக்க குரல்கொடுக்க நேரிடும் காலம் வெகு தொலைவில் இல்லை என நினைக்கிறேன்.
ஓமர்(பாஸ்தீனம்)
பாலஸ்தீனத்தயாரிப்பான ஓமர் சிறந்த அயல் நாட்டு திரைப்படப்பிரிவில் இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பாலஸ்தீனத்திலிருந்து ஆஸ்கார் நாமினேஷன் இறுதிப்பட்டியலுக்கு தேர்வான இரண்டாவது திரைப்படம், யுத்தம்,ரத்தம் என அன்றாட வாழ்வில் பலப்பிரச்சினைகள் கொண்ட ஒரு தேசத்தில் கலைப்படைப்புகளை இயல்பாக ரசிக்கவோ தயாரிக்கவோ மனநிலை ஒத்துழைக்க வாய்ப்பில்லாத சூழலில் ,இது ஒரு பெரும் சாதனை எனலாம்.
இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரனைக்கொன்றுவிட்ட பாலஸ்தீன இளைஞனுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்குமான இடையிலோடும் பிரச்சினைகளையும்,அவற்றுக்கிடையில் காதலையும் மையமாகக்கொண்டு இத்திரைப்படம் இயங்குகிறது.புரட்சிக்கரமான முத்தக்காட்சியும் படத்திலுள்ளது!
இஸ்ரேலிய குடியுரிமைப்பெற்ற பாலஸ்தீன இயக்குனர் " Hany Abu-Assad" எழுதி,இயக்கி,இணைத்தயாரிப்பும் செய்துள்ளார். இஸ்ரேலிய குடியுரிமை உள்ளவர் இயக்கியப்படம் என்பதால்,இஸ்ரேலியப்படம் என தற்போது இஸ்ரேல் அரசும் சொந்தம் கொண்டாடுகிறது,ஆனால்இயக்குனர், தானொரு பாலஸ்தினியரே என சொல்லி ,நாமினேஷனை பாலஸ்தீன் சார்பாகவே செய்துள்ளார்.
இப்படத்தின் கதையினை நான்கு மணி நேரத்தில் எழுதி,நான்கே நாளில் திரைக்கதை,வசனம் எல்லாம் முடித்துள்ளார்.இவரின் "Paradise Now" என்ற திரைப்படமே இதற்கு முன்னர் 2005 இல் ஆஸ்கார் நாமினேஷனுக்கு தேர்வான முதல் பாலஸ்தீன திரைப்படமென்பது குறிப்பிடத்தக்கது,அம்முறை விருது வாங்க தவறிவிட்டது,இம்முறை ஓரளவு வாய்ப்பிருக்கிறது,ஏன் எனில் மேலை உலக விமர்சகர்கள் போர்ச்சூழல் படங்களை விரும்பக்கூடியவர்கள்,தயாரிப்பு நேர்த்தியாக இருக்குமானால் ஆதரிப்பார்கள், மேலும் வழக்கம் போல சில பல அரசியல் காரணங்களையும் கணக்கில் கொள்ளலாம்.
------------------------
# The Square(எகிப்து)
Jehane Noujaim என்ற எகிப்திய பெண் இயக்கியுள்ளார், எகிப்து அதிபர் ஹோசினி முபாராக்கின் 30 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு எதிராக தாஹிரிர் சதுக்கத்தில் மக்கள் திரண்டு போராடியதையும்,அவர்கள் மீதான ராணுவ தாக்குதலையும், அதன் பின்னான விளைவுகளையும் மையமாக கொண்டு உருவான ஆவணப்படமாகும்.
(Jehane Noujaim )
# Karama Has No Walls
(Sara Ishaq & team)
Sara Ishaq என்கிற யேமனை சேர்ந்த (இளம்)பெண் தயாரித்து இயக்கியுள்ள குறும்படம்.
எகிப்தில் ஏற்பட்ட "அரேபிய வசந்தப்புரட்சியினால்" ஹோசினி முபாரக்" ஆட்சி கவிழ்ந்து ஏற்பட்ட மாற்றத்தின் பின் விளைவாக ஏமனில் ஏற்பட்ட புரட்சியினை மையக்களமாக விவரிக்கும் ஆவணக்குறும்படம் ஆகும்.
2011இல் யேமனின் சானா நகர பல்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக தங்கள் அதிருப்தியை தெரிவிக்கும் வகையில் ,பல்கலை கழக வாயில் அருகே கூடாரங்களை அமைத்து போராடத்துவன்ங்கினார்கள், நாளாவட்டத்தில் பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து அருகிலேயே கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் கலந்துக்கொள்ள ஆரம்பிக்க,போராட்டக்குழுவின் பலம்பெருகியது,இவ்விடத்தினை"மாற்றத்திற்கான மைதானம்" என பெயரிட்டு ஆயுதம் தாங்கிய போராளிக்குழுக்களும் ,அமைதிப்போராட்டத்தில் கலந்துக்கொண்டார்கள்,இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு,மார்ச்,18ஆம் நாள்,வெள்ளியன்று அரசப்படைகள் திடீர் என துப்பாக்கி சூடு நடத்தியதில் 53 பேர் உயிரிழந்தார்கள், ஆயிரக்கணக்கில் காயமுற்றனர், இந்நிகழுவுகளையே மையமாக சித்தரித்து , உண்மை சம்ப காட்சிகளுடன் இக்குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இக்குறும்பட தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ள இயக்குனர் முதல் ,அனைவரும் இளைஞர்களே ,பலரும் பெரிய அளவில் முன்னனுபவமில்லாதவர்களே, நம்ம ஊரு குறும்பட இளைஞர்கள் இன்னும் "காமெடி" மட்டுமே செய்துக்கொண்டுள்ளார்கள் ,அவர்களும் வித்தியாசமான வாழ்வியல் சம்பவங்கள்,போராட்டங்களை மையமாக கொண்டு படைப்புகளை உருவாக்கினால் சர்வதேச அளவில் கவனத்தினை ஈர்க்க இயலும்.
# "Dirty Wars: The World Is A Battlefield.(அமெரிக்கா)
Jeremy Scahill என்பவர் இதே தலைப்பில் எழுதிய நூலின் அடிப்படையில், Rick Rowley இயக்கியுள்ள ஆவணப்படம்.
சீரொ டார்க் தர்ட்டி போன்ற திரைப்படங்கள் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை விமர்சிப்பது போல இருந்தாலும், பெரும்பாலும் ராணுவ வீரர்களை,இராணுவ செயல்களை புனிதப்படுத்தும் நோக்கில்,சரியான ஆவணப்படுத்தல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது, ஆனால் இந்த ஆவணப்படத்தில் ஆப்கான்,சோமாலியா,யேமன் எனப்பல நாடுகளில் அமெரிக்க ராணுவம் "Joint Special Operations Command (JSOC)" என்றப்பெயரில் யாரையும் விசாரணையின்றி கொல்லக்கூடிய சர்வதிகாரத்துடன் செயல்ப்படுத்திய ராணுவ நடவடிக்கள்,அதனால் பலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் ஆகியவற்றை துப்பறிந்து ஆவணப்படுத்தி "அமெரிக்க ராணுவத்தின்" உண்மை செயல்பாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது.
நூலாசிரியர் "Jeremy Scahill "அவர்களே இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்டாக இப்படத்தில் நடித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிரான விமர்சனப்பார்வையிருப்பதால் விருது வெல்வது கடினம்,ஆனால் யார் கண்டார் இப்படத்தின் நுண்ணரசியல் எவ்வகை என பொதுவாக சரியாக புரிந்துக்கொள்ள முடியாமல் கூட இருக்கலாம்,எனவே விருதினை வென்றாலும் ஆச்சர்யமில்லை அவ்வ்!
# the voorman problem(பிரிட்டன்)
இயக்கம்-Mark Gill
தயாரிப்பு- Baldwin Li & Lee Thomas
சிறையில் இருக்கும் "voorman" என்ற கைதி தன்னைத்தானே கடவுள் என சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கிறார், இதனை நம்பும் மற்ற சிறைக்கைதிகளால் ,சிறைச்சாலையில் பிரச்சினைகள் வரலாம் எனக்கருதும் ,சிறைக்கண்காணிப்பாளர், ஒரு மருத்துவரை அழைத்து "voorman"க்கு பரிசோதனை செய்து மன நிலைப்பாதிக்கப்பட்டவர் என சான்று வாங்கிவிட்டால் ,மனநல காப்பகத்துக்கு அனுப்பிவிடலாம் பின்னர் ,சிறையில் பிரச்சினைகள் இருக்காது என நினைத்து,ஒரு மருத்துவரை அழைத்து ,"voorman பரிசோதிக்க சொல்கிறார், அப்பொழுது மருத்துவருக்கும் "voorman"க்கும் இடையே நடக்கும் "அன்பேசிவ நான் கடவுள்" உரையாடல்களே படத்தின் மையக்கருவாகும்.
இக்குறும்படத்தில் "ஹாப்பிட்" புகழ் martin freeman ,doctor williams என்ற கதாபாத்திரத்திலும்,mr voorman ஆக tom hollander உம் நடித்துள்ளார்கள்.
ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்ப்பெற்றிருந்தாலும், சிறப்பான கதையம்சம் கொண்டப்படம் என்றால் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க தயங்கமாட்டார்கள் என்பதற்கு இப்படமேஒரு சாட்சியாகும்.
இக்குறும்படத்தில் நடிக்க முதலில் ஹாலிவுட் நடிகர் "கெவின் ஸ்பாசியை" அனுகியுள்ளார்கள்,அவருக்கு கால்ஷீட் பிசியாக இருந்தமையால் ,மார்டீன் ஃப்ரீமானை பரிந்துரைத்துள்ளார், படத்தின் கதையினை அவருக்கு மின்னஞ்சல் தான் செய்துள்ளார்கள், நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளக்கதை என அவரும் ஒத்துக்கொண்டுள்ளார், மொத்தம் 3 நாட்களில் முழுப்படமும் எடுத்துவிட்டார்கள். இது போன்ற குறும்படங்களில் நடித்தால் தனிப்பட்ட விருதுகள் கிடைக்காது , ஒட்டு மொத்தமாக "சிறந்த குறும்படம்" என்ற விருது மட்டுமே அளிப்பார்கள்,அது தெரிந்தும் ஒரு நல்ல கதையம்சமுள்ள படைப்பில் பங்குப்பெற வேண்டுமென புகழ்ப்பெற்ற ஹாலிவுட் நடிகர்களும் முன்வருகிறார்கள், ஆனால் நம்ம ஊரிலோ ...அட்டு நடிகர்கள் கூட நான் ரொம்ப பிசினு ஃபில்ம் காட்டிக்கிட்டு அலையிறாங்க அவ்வ்!
----------------------------
பின்குறிப்பு:
# பிழைதிருத்தம் மற்றும் இன்னும் சில மேம்பாடுகள்,சேர்க்கைகள் விரைவில் செய்யப்படவுள்ளது,பொறுத்தருள்க!
# தகவல் மற்றும் படங்களுதவி,
# http://oscar.go.com/nominees
# http://www.imdb.com
# http://www.theguardian.com/film/filmblog/2014/jan/16/oscars-nominations-2014-liveblog-academy-awards
# http://dirtywars.org/
# http://www.thevoormanproblem.com/
# http://karamahasnowalls.com/about-2
மற்றும் விக்கி & கூகிள் இணைய தளங்கள்,நன்றி!
----------------------------------------
16 comments:
/என பீற்றிக்கொள்வதை குறைத்துக்கொண்டு ,உருப்படியாக உலக தரத்தில் கலைப்படைப்புகளை கொடுங்கடா நொண்ணைங்களா என ஒவ்வொரு சராசரி திரை ஆர்வலனும் உரக்க குரல்கொடுக்க நேரிடும் காலம் //
அப்படியே சொல்லிட்டாலும்... இந்த படங்களையே காப்பி அடிச்சிட்டு ஆஸ்கார் அமெரிக்க படங்களுக்கு அமேரிக்கா கொடுக்கும் விருதுன்னு வெக்கமே படாம சொல்லுவாங்க.. இதுல ஆஸ்கார் நாயகன்னு பட்டம் வேற..
ஆஸ்கர் பிலிம்ஸ் பேரை காப்பி ரைட் பிரச்சனைனால மாதத்தின மாதிரி இந்த ஆஸ்கார் நாயகன்னு போட்டுகிரவங்க மேல கேஸ் எதுவும் போடா முடிஞ்சா நல்லாருக்கும்..
Saturn730
நல்ல பதிவு.. வாழ்த்துக்கள்..
saturn730
அதிகமாக ஆபாசங்களை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போல் தோன்றுகிறது. :-(
சனி 730,
வாங்க,நன்றி!
நல்லப்பெயர்! ஹி...ஹி நாம ஒரு "முனி"!!!
//இந்த படங்களையே காப்பி அடிச்சிட்டு ஆஸ்கார் அமெரிக்க படங்களுக்கு அமேரிக்கா கொடுக்கும் விருதுன்னு வெக்கமே படாம சொல்லுவாங்க.. இதுல ஆஸ்கார் நாயகன்னு பட்டம் வேற.. //
அதனால தான் உலக அளவில் ,அனைத்து தரப்பும் கலந்து கொள்ளும் பிரிவு படைப்புகளை உதாரணம் காட்டியிருக்கேன், அப்பிரிவுகளில் கலந்துக்கொண்டு "கிழிக்கலாமே" நம்ம லோகநாயகர்கள் அவ்வ்!
# ஆஸ்கார் கமிட்டிக்கு இதை எல்லாம் கவனிக்க நேரமில்லை, ரஹ்மான் ஆஸ்கார் வாங்கின பின் லோகநாயகரின் அடிப்பொடிகள் இப்பொழுதெல்லாம் "ஆஸ்கார் நாயகன்"என சொல்லிக்கொள்ளவே கூச்சப்படுகிறார்களாக்கும் :-))
--------------------------
திரு.சுபி.சுவாமிகள்,
வாங்க,நன்றி!
உலக கலைப்படைப்புகளை பற்றி சொன்னால் அதுல போயி ஆபாசம்,கீபாசம்னு சொல்லிக்கொண்டு, இதை எல்லாம் கலைக்கண் கொண்டு ரசிக்கணும்.
இப்பத்தான் ஏதோ அரபிய உலகம் கலை மீதான இறுக்கங்களை தளர்த்திக்கொண்டு வருது அது பொறுக்கலையே உங்களுக்கு அவ்வ்!
உலக ஓட்டத்துக்கு ஏற்ப ஓடணும், இல்லைனா பின் தங்கிடுவோம்!
வவ்வால்,
திருவாளர் ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த படைப்பு கண்டிப்பாக ஆஸ்கார் வாங்கும். அவர்தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப் போகிறாரே? ஏன் கவலை? அப்பறம் இன்னொன்று விஸ்வரூபம் பார்ட் டூ படத்தின் போஸ்டர் கூட the rock என்ற படத்திலிருந்து அப்படியே சுடச் சுட சுடப்பட்டது. (வெளங்கிரும்). ரஹ்மான் வாங்கின ஆஸ்கார் விருதோடு மன நிறைவு அடையவேண்டியதுதான்.(அதையும் காசு கொடுத்து வாங்கினார் என்று இணையத்தில் பேச்சு)
வவ்வால்,
திருவாளர் ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த படைப்பு கண்டிப்பாக ஆஸ்கார் வாங்கும். அவர்தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப் போகிறாரே? ஏன் கவலை? அப்பறம் இன்னொன்று விஸ்வரூபம் பார்ட் டூ படத்தின் போஸ்டர் கூட the rock என்ற படத்திலிருந்து அப்படியே சுடச் சுட சுடப்பட்டது. (வெளங்கிரும்). ரஹ்மான் வாங்கின ஆஸ்கார் விருதோடு மன நிறைவு அடையவேண்டியதுதான்.(அதையும் காசு கொடுத்து வாங்கினார் என்று இணையத்தில் பேச்சு)
\\இஸ்ரேலிய பாதுகாப்பு படைவீரனைக்கொன்றுவிட்ட பாலஸ்தீன இளைஞனுக்கும், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்குமான இடையிலோடும் பிரச்சினைகளையும்,அவற்றுக்கிடையில் காதலையும் மையமாகக்கொண்டு இத்திரைப்படம் இயங்குகிறது\\
\\எகிப்து அதிபர் ஹோசினி முபாராக்கின் 30 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு எதிராக தாஹிரிர் சதுக்கத்தில் மக்கள் திரண்டு போராடியதையும்,அவர்கள் மீதான ராணுவ தாக்குதலையும், அதன் பின்னான விளைவுகளையும் மையமாக கொண்டு உருவான\\
\\எகிப்தில் ஏற்பட்ட "அரேபிய வசந்தப்புரட்சியினால்" ஹோசினி முபாரக்" ஆட்சி கவிழ்ந்து ஏற்பட்ட மாற்றத்தின் பின் விளைவாக ஏமனில் ஏற்பட்ட புரட்சியினை மையக்களமாக விவரிக்கும்\\
வவ்வால் நீங்கள் இங்கே குறிப்பிட்டிருக்கும் கதைக்களன்கள் வெறும் குறும்படங்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மெயின் படங்களே இம்மாதிரியான கதைக்களன்களைக் கொண்டுதான் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் வெளியாகின்றன. அதனை மிகுந்த சிரத்தையோடும் அர்ப்பணிப்போடும் வியப்புறும் சாகசங்களோடும் கூடவே கலைநயம் சேர்த்தும் எடுக்கிறார்கள். பின்னர் அவற்றைப் போட்டிக்கு அனுப்பும் போது அவை ஆஸ்கார் முதல் அனைத்துப் பரிசுகளையும் பெறுவதற்குத் தகுதியுடையவையாய் ஆகின்றன.
இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இப்படி நம் நாட்டில் நடந்த எந்த விஷயத்தை வைத்துக்கொண்டு படமெடுத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அப்படியே யாராவது எடுக்கமுனைந்தாலும் அதற்கு அரசாங்கத்திலிருந்து ஆயிரத்தெட்டு தடைகள்....!
அதனால் அம்மாதிரியான சிரமங்களையெல்லாம் மேற்கொள்ளாமல் அங்குவந்த படங்களின் டிவிடிக்களை வைத்துக்கொண்டுதானே காட்சி காட்சியாய் எடுக்கிறார்கள்- இந்தியப் போர்வையோ தமிழ்நாட்டுப் போர்வையோ போர்த்திவிட்டு. அப்புறம் எப்படி ஆஸ்கார் பற்றி நினைப்பது?
அதையும் மீறி ஒருவர் ஆஸ்கார் பெற்றுக்கொண்டு வந்தால் அதனை எத்தனைப்பேர் கொண்டாடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் பெற்றது பற்றி ஒருவர் இணையத்தில் எழுதியிருந்தார்.'ஆஸ்கார் என்பது வெறும் ஒரு பேப்பர் வெயிட். அவ்வளவுதான்' என்று. அந்தப் பேப்பர் வெயிட்டை அவர்கள் சிலாகிக்கும் ஒருவருக்கு இணையத்தில் இருக்கும் அவரின் தாசானுதாசர்கள் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் காசுபோட்டு(ஏனெனில் அது காசுகொடுத்து வாங்கப்பட்டதுதானாம்.) வாங்கிக்கொடுக்க வேண்டியதுதானே.
தமிழ்நாட்டிற்கு இன்னொரு ஆஸ்காரைக் கொண்டுவரப்போகிறவர் யார் என்பது ஐம்பதுகோடி ரூபாய்க் கேள்வி.
காரிகன்,
வாங்க,நன்றி!
//ஒலக நாயகன் எடுக்கும் அடுத்த படைப்பு கண்டிப்பாக ஆஸ்கார் வாங்கும். அவர்தான் ஒரு ஹாலிவுட் படம் இயக்கப் போகிறாரே? ஏன் கவலை? //
நமக்கெதுக்கு கவலை,அதெல்லாம் அவாள் கவலை :-))
தமிழ் சினிமாவை விட ஹாலிவுட்டில் படமியக்க வாய்ப்பு பெறுவது "எளிது" அல்லது முறையாக நடக்கும்,ஸ்பீல்பெர்க்கிற்கு மெயில் அனுப்பினால் பதில் வரும்(நான் மெயில் அனுப்பி இருக்கிறேன், யாரோ ஒருவர் பொறுப்பாக பதில் சொல்வார்கள்), நமக்கான அப்பாயிண்ட்மெண்ட் பெறுவது முயற்சித்தால் சாத்தியம்.
#// the rock என்ற படத்திலிருந்து அப்படியே சுடச் சுட சுடப்பட்டது. //
விளங்கிடும், ராக் என்றப்படம், குதிரையில் இருந்து ஈட்டிப்போல தூக்கிட்டு வந்து குத்தும் படமாச்சே, அரச பரம்பரை இல்லாதவன் ,அரச பரம்பரை வீரவிளையாட்டுல "அரசபரம்பரைனு போலியா சொல்லி கலந்துப்பான்,பின்னர் கர்ணன் போல நிஜமாக நைட் ஹூட் கொடுப்பார் ஒத்தக்கண் ராசா" அந்த படம் தான் சொல்றிங்களா?
The Rock - The Hero will rise or bornஎன டேக் லைன் போட்டிருக்கும் :-))
எப்படியோ பழைய படம் கதை போஸ்டர்னு சுடுவதில் வல்லவராவே இருக்கார் சகலகலா வல்லவன் :-))
-------------------------
அமுதவன் சார்,
வாங்க,நன்றி!
//வெறும் குறும்படங்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பாலான மெயின் படங்களே இம்மாதிரியான கதைக்களன்களைக் கொண்டுதான் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் வெளியாகின்றன. அதனை மிகுந்த சிரத்தையோடும் அர்ப்பணிப்போடும் வியப்புறும் சாகசங்களோடும் கூடவே கலைநயம் சேர்த்தும் எடுக்கிறார்கள். பின்னர் அவற்றைப் போட்டிக்கு அனுப்பும் போது அவை ஆஸ்கார் முதல் அனைத்துப் பரிசுகளையும் பெறுவதற்குத் தகுதியுடையவையாய் ஆகின்றன.//
நீங்கள் சொன்னது உண்மை, மெயின் பிக்சரில் பெரும்பொருட்செலவில் எடுப்பார்கள், எனவே அதனை சொல்லாமல், மிக குறுகிய செலவில் எடுத்ததை உதாரணம் காட்டினேன்.
#//இந்தியாவில் அல்லது தமிழகத்தில் இப்படி நம் நாட்டில் நடந்த எந்த விஷயத்தை வைத்துக்கொண்டு படமெடுத்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்? அப்படியே யாராவது எடுக்கமுனைந்தாலும் அதற்கு அரசாங்கத்திலிருந்து ஆயிரத்தெட்டு தடைகள்....!//
நம்ம நாட்டவிட தடை மிகுந்த இடத்தில இருந்து இப்படங்கள் வந்திருக்கு.
மூஞ்ச மூடாம ஏன் பொண்ணு வருதுனு ஷூட்டிங் ஸ்பாட்லவே கலாட்டா செய்வாங்கா அங்கே அவ்வ்!\
நம்ம நாட்டில தியேட்டரில் ரிலீஸ் செய்யிறாப்போல எடுத்தால் தான் கஷ்டம், நேராக அவார்டுக்குனா எப்படி வேண்டுமானாலும் எடுத்தாலும் "கேட்க நாதியில்லை"
எனவே அரசு தொல்லைனு சொல்வதெல்லாம் "கப்சா" அதை எல்லாம் நம்பனுமா?
ஓமர் படம் 75 லட்சம் செலவில் தான் எடுக்கப்பட்டது. அந்த தொகைலாம் சந்தானம் வச்சு காமெடி சீன் எடுக்கவே நம்ம ஊரில் காணாது :-))
நாம சொன்னப்படமெல்லாம் சம்பந்தப்பட்ட நாட்டில பொதுப்பார்வைக்கே வரலை, எல்லாம் அயல்நாடுகளில் தான் திரையிடப்பட்டது.எனவே உள்நாட்டு " தடை"எனசொல்வதெல்லாம் நாம எடுக்காம இருக்க சொல்லும் சப்பக்கட்டு :-))
ஒரு பாட்டு அல்லது சன்டைக்காட்சிக்கே ஒரு கோடி செலவு செய்யும் மங்கூஸ் மண்டையன்கள் ஏன் ஒரு டாக்குமெண்டரியை நல்லா எடுத்து விருதுக்கு அனுப்ப கூடாதாம்? ஏன்னா எவனுக்கும் விருப்பமில்லை!
//ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் பெற்றது பற்றி ஒருவர் இணையத்தில் எழுதியிருந்தார்.'ஆஸ்கார் என்பது வெறும் ஒரு பேப்பர் வெயிட். அவ்வளவுதான்' என்று. அந்தப் பேப்பர் வெயிட்டை அவர்கள் சிலாகிக்கும் ஒருவருக்கு இணையத்தில் இருக்கும் அவரின் தாசானுதாசர்கள் எல்லாரும் ஆளுக்குக் கொஞ்சம் காசுபோட்டு(ஏனெனில் அது காசுகொடுத்து வாங்கப்பட்டதுதானாம்.) வாங்கிக்கொடுக்க வேண்டியதுதானே.//
அப்படி சொன்னவங்க,தேசிய விருது வாங்கினதும் அப்படினு சொல்லிக்கிட்டா தேவலை :-))
#//தமிழ்நாட்டிற்கு இன்னொரு ஆஸ்காரைக் கொண்டுவரப்போகிறவர் யார் என்பது ஐம்பதுகோடி ரூபாய்க் கேள்வி.//
ஒரு டாலர் 61.016 ரூபாய்,எனவே ஒரு மில்லியன் டாலர் =61 கோடிகள் ரூபாய் கேள்வி என சொல்லனும் :-))
போறப்போக்கை பார்த்தால் ,நான் தான் ஆஸ்கார் வாங்கிட்டு வரனும்போல :-))
---------------------------------------
பிழை திருத்தம்,
பத்து மில்லியன் டாலர் என வர வேண்டும்,
ஒரு மில்லியன் டாலர் = 6.1கோடி,
பத்து மில்லியன் டாலர் = 61 கோடி
தலைவா (இது விஜய் பட தலைப்பு இல்லை. சும்மா...பாசம்...பாசம்....),
நான் கொஞ்சம் late attendence.
100 நாளை கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிற (எங்கேன்னு கேட்கப்படாது அவ்வ்...) வ.வா.ச. படத்திற்கு oscar விருது கிடைக்கலன்னா oscar விருதுக்கே அவமானம்....ஹி...ஹி...
கலைத்தாகம் மிகுந்தவர்கள் ஆச்சே நம் இந்திய திரையுலகினர். பீடி, பீர் குடிக்கறது தான் நினைவுக்கு வருது :))
100 கோடி 200, 400 கோடி வசுல் என்று சொல்றாங்களே எப்படின்னு தான் புரியலை. இப்ப ஒரு வீணாப்போன படம் இந்திய திரை வரலாற்றிலேயே முதல் முறையாக 500 கோடி வசுலிச்சிறுக்காம். :(
சூப்பர் ஸ்டார் கஜினியின் படத்தில் அவர் செத்துபோகிற மாதிரி சீன் வந்து, அவரது ரசிகர்கள் அதை எப்போது சாதாரணமாக எடுத்துக் கொண்டு படத்தை ரசிக்கிறார்களோ அப்போது தான், நாம் ஆஸ்கார் பற்றி நினைக்கவே ஆரம்பிக்க வேண்டும்.
அசீத்தும், விசய்யும் எப்போது ஒரு சராசரி மனிதனாக தனியாக வந்து T.Nagar இல் சாதாரணமாக ரோட்டில் நடந்தோ அல்லது சாதாரண ஹோட்டலில், ஈ மொய்க்கிறது போல மொய்க்கப்படாமல், நம்மை போல, காபி குடிக்க முடிகிறதோ, அப்போது தான் நாம் ஆஸ்கார் பற்றி நினைக்கவே ஆரம்பிக்க வேண்டும்.
காதல், நட்பு, வில்லன். நமது 98% படங்களும் இதை சுற்றியே வலம் வருகிறது. இதை தாண்டி நாம் யோசிக்க வேண்டும். அப்படி வித்தியாசமாக ஏதாவது படம் வந்தால் கூட, (Example: மூடர் கூடம் - போன வருஷம் என்னை கவர்ந்த ஒரே படம்). மக்கள் ரசிப்பதில்லை. ஒரே வாரம் கூட தியேட்டரில் ஓடாது. வ.வா.ச. போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடும்.
வேலையை முடித்து விட்டு, ஒய்வு நேரத்தில் சினிமா பார்க்காமல், முதல் மூன்று நாளைக்குள் பார்த்து விடவேண்டும் என்று, தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, படத்தை பார்க்க தியேட்டரில் காத்து கிடக்கிற முட்டாள் ரசிகன் இருக்கும் வரை, இந்த நிலைமை தான் இருக்கும்.
வேற்றுகிரகவாசி,
வாரும்,நன்றி!
பாசக்கார கிரகவாசியா இருக்காப்பல, நம்மளையும்"தலைவனாக்கிட்டாப்டி அவ்வ்!
ஹி...ஹி "மலபார் ஆத்மி"னு ஒரு கட்சிய ஆரம்பிச்சு வர்ரத்தேர்தலில் போட்டிப்போட்டு ஆட்சிய புடிச்சிரலாமா :))
# வவாசா போன்ற ஒலகக்கலைப்படைப்புக்குலாம் "ஆஸ்கார்" சுச்சுபி, நல்லா பெர்சா அம்பாசடர் காரே கொடுக்கலாம் அவ்வ்!
#சூப்பர் ஸ்டார் என்னிக்கு உலகவிருதெல்லாம் பத்தி பேசியிர்க்கார், அவதரித்ததே ஆஸ்கார் வாங்கத்தான் என்பதாக கதைக்கும் லோகநாயகர் போன்றோர் என்னிக்கு ஆட்டைய போட்டு படம் எடுக்கிறத நிப்பாட்டுறாங்களோ அன்னிக்கு தான் விருதப்பத்திலாம் நாம நினைக்க முடியும்.
# //அசீத்தும், விசய்யும் எப்போது ஒரு சராசரி மனிதனாக தனியாக வந்து T.Nagar இல் சாதாரணமாக ரோட்டில் நடந்தோ //
கொளுத்துற வெயிலா இருந்தாலும் கோட்டுப்போட்டுக்கிட்டு தான் நடப்பேன்னு அசித் அடம்ப்பிடிப்பாரே அவ்வ்!
விசய் தனியா நடக்க சொன்னா எப்பூடினு அப்பவும் அப்பார் கையப்புடிச்சுக்கிட்டு தான் ,நடப்பார்,அத என்னமோ தண்டியாத்திரைப்போனதா நினைச்சுக்கிட்டுஅவங்கப்பார் "நான் காந்தி,என்ற மகர்"நேரு"னு பேட்டிக்கொடுத்தாலும் கொடுப்பாரு,நெனைக்கவே கிலியா கீது அவ்வ்!
நம்ம மக்கள் எல்லாம் சினிமாவில 5செகண்ட் வந்தவனா இருந்தாக்கூட கூட்டம் கூடி வேடிக்கைப்பார்ப்பாங்க அவ்வ்!
#//காதல், நட்பு, வில்லன். நமது 98% படங்களும் இதை சுற்றியே வலம் வருகிறது. இதை தாண்டி நாம் யோசிக்க வேண்டும். //
இத சொன்னதுக்கு பதிலா ஒரே அடியாக தமிழ்சினிமாவில படமே எடுக்கக்கூடாதுனு சொல்லி இருக்கலாம்,இதை எல்லாம் விட்டா வேறப்படம் எடுக்க தெரியாதே இவனுங்களுக்கு அவ்வ்!
# // (Example: மூடர் கூடம் - போன வருஷம் என்னை கவர்ந்த ஒரே படம்). மக்கள் ரசிப்பதில்லை. ஒரே வாரம் கூட தியேட்டரில் ஓடாது. வ.வா.ச. போன்ற படங்கள் 100 நாட்கள் ஓடும்.//
மூடர்க்கூடமே "அட்டாக் தி கேஸ் ஸ்டேஷன்" தானே,இப்படியே சுட்டுக்கிட்டு இருந்தா ,எப்பவும்"கனவாகவே" தான் போகும்.
#//வேலையை முடித்து விட்டு, ஒய்வு நேரத்தில் சினிமா பார்க்காமல், முதல் மூன்று நாளைக்குள் பார்த்து விடவேண்டும் என்று, தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, படத்தை பார்க்க தியேட்டரில் காத்து கிடக்கிற முட்டாள் ரசிகன் இருக்கும் வரை,//
ஹி...ஹி இப்பக்கொஞ்சம் பரிணாம வளர்ச்சியடைந்து,மொத நாள்,மொத காட்சிப்படம் பார்த்துட்டு, தல மாஸ், தளபதி மாசுனு இணையத்தில விமர்சனம் எழதி புழதிய கிளப்பிட்டு இருக்காங்க :))
---------------------
குறும்பன்,
வாரும்,நன்றி!
எதையோ குடிச்சு"தாகம்" தணிச்சா சரி தான்,நம்மநெத்தம் குடிக்காம இருந்தா போறாதா அவ்வ்!
#//100 கோடி 200, 400 கோடி வசுல் என்று சொல்றாங்களே எப்படின்னு தான் புரியலை. இப்ப ஒரு வீணாப்போன படம் இந்திய திரை வரலாற்றிலேயே முதல் முறையாக 500 கோடி வசுலிச்சிறுக்காம். :(//
அதெல்லாம் ஹவாலாப்பணம்,கறுப்புபணப்பரிமாற்றத்தை செய்யுறதுக்கு சொல்லப்படுவது, தோண்டினால் ஏகப்பட்ட "மர்மங்கள்" வெளிவரும்.
//அன்றாட வாழ்வில் பலப்பிரச்சினைகள் கொண்ட ஒரு தேசத்தில் கலைப்படைப்புகளை இயல்பாக ரசிக்கவோ தயாரிக்கவோ மனநிலை ஒத்துழைக்க வாய்ப்பில்லாத சூழலில் ,இது ஒரு பெரும் சாதனை எனலாம்.//
ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இப்படியெல்லாம் அங்கே நடக்கின்றது?
அமெரிக்கன் ஹஸ்டில் நாயகி- சிறப்பாக திறமைகளை "வெளிப்படுத்தக்கூடியவர்"
.............. பார்த்தாலே தெரியுது bro...
Post a Comment