Wednesday, May 24, 2006

இழப்பதற்கு ஏதுமில்லாதவன்!



விலகி சென்றாய் விறகாய் எரிந்தேன்

மீண்டும் வந்தாய் மெழுகாய் உருகினேன்!

கடந்து சென்றாய் கண்கள் மூடி கல்லாய் இருகினேன்!

காலம் முழுதும் காத்து நின்றேன்

காலம் என்னை தின்றது

கவலை என்னை கொன்றது!

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று!

8 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

மரணம் கூட நெருங்க மறுத்தது

இழப்பதற்கு ஏதும் இல்லாதவன்

இதயத்தையும் இழந்தவன் இவனென்று
கொடிய மரணத்தையும் கருணையுள்ளதாக காட்டிய நல்ல வரிகள்.நல்ல கருத்து. அன்பன் தி ரா ச

Sowmya said...

இழப்பதற்க்கு ஏதும் இல்லாதவன்..
இதயத்தையும் இழந்தவன் இவன் என்று..

இந்த இரு வரிகள் மரணம் கூட யோசிக்கிறது..
நீ யோசிக்கவில்லை என்று பொருளை தருவதாக கொள்ளலாமா..!!

நரியா said...

வணக்கம் வவ்வால்,

கிட்ட வந்தாலும் பேஜார், விலகி சென்றாலும் பேஜார் என்றால் உங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளி என்ன தான் செய்வாள்? பேஜார் ஆவாள் :))

நன்றி,
நரியா

Chellamuthu Kuppusamy said...

இங்கே காணும் கவிதைகள் பிற பதிவுகளில் நான் கண்ட உங்களது பின்னூட்டங்களைப் போலவே இரசிக்கச் செய்கின்றன.

-குப்புசாமி செல்லமுத்து

வவ்வால் said...

வணக்கம் தி.ரா.ச.

இது தான் தங்கள் முதல் வருகை என நினைகிறேன். தங்கள் வருகைக்கு நன்றி! அருமையாக சுட்டி காட்டினீர்கள்!

வவ்வால் said...

வணக்கம் செளமியா,

நன்றி , மரணம் கூட இரக்கம் கொள்ளும் அளவுக்கு பரிதாபகரமான நிலையில் இருக்கிரான்.மரணம் கூட கருணைக் காட்டுகிறது ..நீ காட்டமாட்டாய எனக்கொள்ளலாம்.

வவ்வால் said...

வணக்கம் நரியா,

நன்றி!,பேஜார் ஆனது கள்ளி இல்லை கள்ளன் ,உள்ளர் கவர் கள்வனின் உள்ளமே கொள்ளைப் போனதால் பேஜார் ஆகிட்டான் :-))

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, அடிக்கடி இந்த பக்கம் வாங்க!