விடியலை நோக்கி
இரவுக்கும் விடியலுக்கும் இடையே நிறுத்தி சென்று விட்டாய்இரவு தொடருமா விடியல் வெளிச்சம் தெரியுமா?யாதொன்றும் அறியாமல் அந்தகாரத்தில் மூழ்கி கிடக்கிறேன்சுவர்க்கோழியின் ரீங்காரம் செவிகளில் எதிரொலிக்க!உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என
இருளைப்புசித்து உறங்காமல் இருக்கிறேன் விடியுமென!
10 comments:
"உன் புன்னகையால் சிறு மெழுவர்த்தி ஏற்றுவாய் என
இருளைப்புசித்து உரங்காமல் இருக்கிறேன் விடியுமென!
intha varighal migha arumaiyagha vullathu..kavaithai yellam supera varuthu.
வாங்க கீரா வணக்கம்
தவறாம படிக்கறிங்க போல நன்றி, எல்லாம் தான தோனுறத கிறுக்கிறேன் ,நல்லா இருக்குனு சொன்னா சந்தோஷம் தான்.
உங்களுக்கு எதுக்குங்க மெழுகுவர்த்தி வெளிச்சம் எல்லாம்? அந்தகாரம் தானே வவ்வாலுக்குப் பிடிக்கும்னு சொல்லுவாங்க!!:))
இந்தக் கவிதைகளைக் கொஞ்சம் படிபடியாக உடைத்துப் போட்டால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்
வணக்கம் வவ்வால்,
இந்த மாதிரி தனிமையிலே உங்களை விட்டதர்க்கு நீங்கள் உங்க காதலிக்கு நன்றி சொல்ல வேண்டும். இரவுக்கும் பகலுக்கும் நடுவில் உங்களை விட்டது நீங்கள் நங்கு த்யானம் செய்து மகானாவதற்கு தான் என நினைக்கிறேன்:))
நன்றி,
நரியா
வாங்க அம்மா பொன் ஸ்.
தங்கள் வருகைக்கு நன்றி! வவ்வால் என்ற அந்தராத்மா அந்தகாரத்தில் தொங்கி கொண்டு இருந்தாலும் அவ்வபோது சராசரி உணர்வு தலை தூக்கி வெளிச்சம் நாடுகிறதே!
வரிகளை இன்னும் கொஞ்சம் உடைத்து போடலாம் என்கிறீர்கள் அப்படியும் சில கவிதைகளில் செய்துள்ளேன்,ரொம்ப உடைத்து போட்டால் சில சமயம் பொருள் மாறி விடுகிறது
வணக்கம் நரியா!
இப்போலாம் ரொம்ப ஆர்வமா வலைப்பதிவு மேய்கிறீர்கள் போல் உள்ளது!.நான் மகான் அல்ல நரியா, வாழ்கை என்னை மனிதனாக வைத்து இருந்தாலே போதும்.இப்படி நீங்க பாட்டுக்கு மகான் சொல்லிட்டு போய்டுவிங்க அப்புறம் அருள் வாக்கு கேட்டு ஒரு கும்பல் என்ன தொரத்தினா, தமிழ் கூறும் நல் உலகம் ஒரு நல்ல கவிஞ்சனை!!?? இழந்து விடுமே!
கவிதை அருமை.
My 2 cents
அடுத்தவர் நமக்கு விடியலை தருவார்கள் என நினைத்தால் தப்பு.
நாமே அதை வரவழைத்துக்கொள்ள வேண்டும்.
விடுங்க செல்வன்... வெளவாலுக்கு மனிதத் தத்துவமெல்லாம் சொல்லிக்கிட்டு...
நகைச்சுவையாக நினைத்து பின்னூட்டம் போடுகிறேன்.. மற்றபடி நல்ல கவிதை..
- குப்புசாமி செல்லமுத்து
வணக்கம் செல்வன்,
தங்கள் வருகைக்கு நன்றி! ஒளி விளக்காயினும் சிறு தூண்டுகோல் வேண்டும், அது போல ஒரு விளக்காய் இருக்கட்டுமே அவளின் புன்னகை!
வணக்கம் குப்புசாமி செல்லமுத்து!
தங்கள் வருகைக்கு நன்றி! ஹா ... ஹா .. நல்ல நகைச்சுவை உணர்வு தான்!
Post a Comment