dotEPUB

Monday, May 29, 2006

மெய் தேடல்!



நதியை தேடியலைந்தேன் பாலைவனத்தில்

நல்ல இதயத்தை தேடியலைந்தேன் நகரத்தில்

மெல்லிசையைத் தேடியலைந்தேன் மயானத்தில்


நெருப்பைத் தேடினேன் நீர்க்குடத்தில்

நிலவைத் தேடினேன் அம்மாவாசையில்

நித்திரையை தேடினேன் நீயில்லாமல்

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த பின்னும்!

இருக்குமிடத்தை விட்டு

இல்லாத இடங்களில்

திக்கெட்டு திசையும் தேடினேன்

தேடிக்களைத்தும் தீரவில்லை தேடல்!

மீண்டும் துவங்கியது தேடல்

என்னுள்ளே எதையோ தேடினேன்

எதுவும் கிடைக்கவில்லை ஏமாற்றத்தை தவிர!



15 comments:

நியோ / neo said...
This comment has been removed by a blog administrator.
நரியா said...

வணக்கம் வவ்வால்,

கவிதை நன்றாக உள்ளது.

தவறான இடத்தில் தேடுரீங்க. ஏப்படி கிடைக்கும். "Google" பண்ணி பாருங்க கண்டிப்பா கிடைக்கும் :))

நன்றி,
நரியா

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால்,
உங்க தேடல் நல்லா இருக்குங்க.. இன்னும் கொஞ்சம் முயற்சி இருந்தா, தேடல் இப்படி முழுமை அடையாம இருக்காது - இந்தக் கவிதையைப் போலவே..

இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சு கவிதைக்குப் பக்கமா வரலாம் :)

[பழிக்குப் பழி அல்ல.. நிஜமான அக்கரையோடு :) ]

வவ்வால் said...

வணக்கம் நரியா,

நன்றி! கூகிளில் மனசுகுள்ள இருக்கிறத தேடி கண்டுபிடிக்க ஒரு ஏற்பாடு பண்ண எத்தனை வசதியா இருக்கும் :-))

வவ்வால் said...

வணக்கம் பொன்ஸ்,

தங்கள் வருகைக்கு நன்றி, வளரும் கவிஞன் இவன்,கவிதை புனைய போய் கட்டுரைகள் வந்த கதை எல்லாம் உண்டு இவ்விடம் :-)) எனவே நீங்கள் தாரளமாக சொல்லலாம் பழிக்கு பழி என்று எல்லாம் எடுத்துகொள்ள மாட்டேன்.விமரிசனங்களே பட்டை தீட்ட உதவும்! நான் கவிதைக்கு ரொம்ப தூரமா தான் இருக்கேன் இன்னும் பக்கமா கூட வரலை ஆனா படிக்கிறவங்கள கவித போல இருக்கே,ஒரு வேளை கவிதை தானோ என்று நம்ப வைக்கும் போலி கவிதைகள்!(எல்லாம் போலி ..போலினு பினாத்துறாங்க அதன் பாதிப்போ?)

Chellamuthu Kuppusamy said...

தேடல் சுகமானதா வவ்வால்?
அது சரி..உங்களை வெளவால் என அழைக்கக் கூடாதா?
-குப்புசாமி செல்லமுத்து

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து!

நன்றி! வவ்வால்,வெளவால் என எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்,ஒளவை,அவ்வை ,ஐயப்பன்,அய்யப்பன் போல நான் வவ்வால் என வைத்துள்ளேன்(ஒரு காலத்தில் பெரியார் முன் வைத்த எழுத்து சீர்திருத்தம் இது!)

தேடல் இல்லை என்றால் வாழ்கையில் ருசி இருக்காது ..

பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே...

தேடி தேடி மனது தொலைகிறதே!

இன்னிசை பாடி வரும் எனத்துவங்கும் பாடலில் வரும் இவ்வரிகள்!

எல்லோருக்கும் ஒரு தேடல் உண்டு,அத்தேடல் வலி மிகுந்தது என்றாலும் சுகமானதே.இதில் வெற்றி தோல்வி எல்லாம் பார்க்க கூடாது.வாழ்கையை அர்த்தப்படுத்து கொள்ள தேடல் தேவையே!

Chellamuthu Kuppusamy said...

சரிங்க.. நான் வெளவால்ன்னே கூப்டறேன்...

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

வவ்வாலுக்குள் ஒரு ரோமியோ உட்கார்ந்திருக்கிறான் போல.தொடர்ந்து காதல் தோல்வி கவிதையாகவே வருகிறதே?

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து ,
தங்கள் சித்தம் என் பாக்கியம் ,எப்படி வேண்டுமானலும் அழைக்கலாம்!

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

ரோமியோ எல்லாம் இல்லை ஏதோ என் எண்ணங்களின் வடிகாலாக கவிதை என்ற பெயரில் கிறுக்கி தள்ளுகிறேன்.அதை படிக்கிற மக்கள் தான் பாவம் நொந்து போறாங்க :-))

Unknown said...

யாருங்க நொந்து போறாங்க?No way.
அருமையா எழுதறீங்க.Keep it up

வவ்வால் said...

நன்றி செல்வன்!

இதெல்லாம் ஒரு கவிதையானு நொந்து போறவங்களும் உண்டு ,பாராட்டுவோரும் உண்டு இப்போது தானே கவிதை பழகுகிறேன் போக போக அனைவரும் ரசிக்கும் வண்ணம் கவிதை தீட்டுவேன் என நம்புகிறேன்.

jansi kannan said...

மெய்தேடல் மிகவும் அருமை. சிந்தித்தேன் கவிதையை. ரசித்தேன் கவிதையை. இன்னும் சிந்திக்கவைக்குமோ மெய்தேடல்.