Thursday, June 08, 2006

சாதனை இளைஞர் அப்துல் கலாம்!



இந்திய விமான படையின் சுகோய்- 30.எம்.கே.ஐ என்ற ரஷ்ய தயாரிப்பு மீ ஒலி வேகத்தில்(super sonic fighter jet) பறக்கும் யுத்த விமானத்தில் இந்திய அதிபர் திரு."அவுல் பக்கீர் ஜெயினுலாபிதின் அப்துல் கலாம்" 30 நிமிடங்கள் பறந்து சாதனைப்படைத்துள்ளார்.யுத்த விமானத்தில் பறந்த முதலாவது இந்திய அதிபர் இவரே,இதற்கு முன் நீர் மூழ்கி கப்பலில் 3 மணி நேரம் பிரயாணம் செய்தும் சாதனை படைத்துள்ளார்! வித்தியாசமான ஏவுகனை விஞ்ஞானி நம் நாட்டின் அதிபராக இருப்பது நமக்கெல்லாம் பெருமை தானே!

புனேயில் உள்ள இந்திய விமான படை விமான தளத்தில் இருந்து விங்க் கமாண்டர் அஜய் ரத்தோர் செலுத்த 30 நிமிடங்கள் மணிக்கு 1500 கிலோ மீட்டர் வேகத்தில் கலாம் பயணம் செய்த விமானம் பறந்துள்ளது.திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு 75 வயது ஆகிறது இந்த வயதில் இது ஒரு மகத்தான சாதனையே ,எனவே இளைஞர்கள் எத்தனை சாதிக்கலாம் என எண்ணிப்பார்க்க வேண்டும்! நமது அதிபரின் விருப்பமும் அதுவே இளைஞர்கள் அரிய சாகசம் நிகழ்த்த வேண்டும் ,உயர் தொழில் நுட்பங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என மக்களுக்கு குறிப்பாக இலைஞர்களுக்கு செய்தி விடுத்துள்ளார்!

திரு. அப்துல் கலாம் விஞ்ஞானி மட்டும் அல்ல சிறந்த சிந்தனையாளரும் கூட அவரது அக்னி சிறகுகள்,இந்தியா விஷன் 2020 போன்ற நூல்கள் விற்பனையில் சாதனைப்படைத்தவை!

16 comments:

Anonymous said...

nalla visayam pottirukeenka itk...paaraattanum avare...aana president aa avar seyal paadukal la enakku avalavu thirupthi illa itk...mathabadi avar books ellame nalla irukkum...ethirkaala india nalla irukkanumnu avar studentsa thedi thedi poyi peasuraar... athe paaraattanum...pearusunkala thiruthave mudiyathunu mudivu pannittar pola:P.

வவ்வால் said...

வணக்கம் கீதா!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! அவர் பதவிக்கென்று சில கட்டுப்பாடுகள் உண்டு,குறிப்பிட்ட அளவே அதிகாரம் அதை வைத்துக்கொண்டு திறம்பட செயல்படுகிறார் அதை பாராட்டுவோம்!

Radha N said...

இன்று நேரடி ஒளிபரப்பானபோது, இந்த நிகழ்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைந்தேன். கலாமிடம் என்ன ஒரு துள்ளல், துடிப்பு....ம்ம்.... கலக்கிட்டாருல்ல!!!

நரியா said...

வணக்கம் வவ்வால்.
நல்ல கருத்துக்களை கூறுகிறது இந்த பதிவு. இது சம்பந்தப்பட்ட ஒரு விடியோவிற்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.

http://broadband.indiatimes.com/videoshow/1634743.cms

டாக்டர். கலாமைப்பற்றிய கவிதை ஒன்றை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறோம்!.

நன்றி,
நரியா

வவ்வால் said...

வணக்கம் நாகு!

முதல் முறையாக இந்த பக்கம் வந்து இருக்கிங்க நன்றி, கலாம் அவர்களை 75 வயது இளைஞர் என ச்சொன்னால் மிகையாகாது!

வவ்வால் said...

நன்றி நரியா,

சந்தர்ப்பம் வரும் போது கலாம் அவர்களைப்பற்றியும் கவிதை எழுதுவோம் , தங்கள் விடியோ சுட்டிக்கு நன்றி!

Chellamuthu Kuppusamy said...

ஊழல் நிறைந்தது நம் தேசம்; இங்கு திறமையும் தெளிவான சிந்தனையும் உள்ளவர்கள் மேலே வர முடியாது போன்ற எண்ணங்கள் எல்லாம் கலாம் அவர்களைப் பார்க்கும் போது பொய்த்து விடுகின்றன. அவரைக் குடியரசுத் தலைவராக முன் மொழிந்த சந்திரபாபு நாயுடுவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

-குப்புசாமி செல்லமுத்து

Unknown said...

அருமையான பதிவு வவ்வால்.இவர் பிரதமராக வந்திருக்க வேண்டியவர்.இந்தியா கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

வவ்வால் said...

வணக்கம் குப்புசாமி செல்லமுத்து,

//ஊழல் நிறைந்தது நம் தேசம்; இங்கு திறமையும் தெளிவான சிந்தனையும் உள்ளவர்கள் மேலே வர முடியாது போன்ற எண்ணங்கள் எல்லாம் கலாம் அவர்களைப் பார்க்கும் போது பொய்த்து விடுகின்றன//

நூறு சதவீதம் சத்தியமான வார்த்தைகள் குப்புசாமி செல்லமுத்து, மிக சரியாக சொன்னீர்கள். கலாம் போன்றவர்கள் தான் வளரும் தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.இவர் போன்று எந்த ஒரு இந்திய அதிபரும் இல்லை ,இனி இவர் போன்று ஒருவரை நம் நாட்டின் அரசுப்பொறுப்பில் மீண்டும் காண்போமா என்பது கேள்வி குறியே! கலாம் அவர்களது முதல் தவணை அதிபர் பொறுப்பு முடிவுக்கு வர உள்ளது மீண்டும் தேர்வாக இந்திய அரசியல்வாதிகள் காழ்ப்புணர்வு ஏதும் இல்லாமல் ஒத்துழைப்பார்களா தெரியவில்லை!

வவ்வால் said...

வணக்கம் செல்வன்,

//இவர் பிரதமராக வந்திருக்க வேண்டியவர்.இந்தியா கொடுத்து வைத்தது அவ்வளவுதான் //

திறமையின் அடிப்படையில் இந்தியாவில் பதவி எனில் என்றோ நாம் வல்லரசாக மாறி இருப்போம் செல்வன்! இந்திய அரசியலின் சூதாட்டக்கலை தெரியாத கலாம் போன்றவர்களால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்!

கலாம் அவர்கள் M TV இன் யூத் ஐகான் 2006 என்ற தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் அவருக்கு வாக்களிப்பது தான் நம்மால் செய்ய கூடிய கைமாறு. கலாம் போன்றோர் தான் இளைஞர்களின் உண்மையா ரோல் மாடல்!

கலாமிற்கு வாக்களிக்க சுட்டி:http://www.mtvindia.com/mtv/mymtv/events/youthicon/

தங்கள் வலைப்பதிவில் புதிதாக மாற்றம் செய்துள்ளீர்களா , பழைய பின்னூட்டங்களும் காணோம்,பின்னூட்டமிடும் முறையும் மாறிவிட்டது மீண்டும் பழைய முறையிலே உங்கள் வலைப்பதிவை செயல் பட வையுங்கள் செல்வன் அது தான் எளிதாக இருந்தது!

Anonymous said...

anbudaiyeer,

maanbimiku endra vaarthaikku mika mika poruthamana engal muthal kudimakanar , avarudaiya saathanikalil ..kurainthathu 1,00,000 thil 1 pahuthiyaavathu ...muyarchi seyya oru undhuthal kollveeraaha .... uyir maruthuva poriyiyal ( BioMedical Engg)... ethenum seyya naan vizhaithullen .... kaalam nalvazhi paduthtum ...Maanbimiku Kalaam vazhiyil. nandri

nikajo

வவ்வால் said...

வணக்கம் நிகாஜோ!

ஒரு வழியா வந்து சேர்ந்திட்டிங்களா,தங்கள் வருகைக்கு நன்றி! திரு.கலாம் மற்ற அதிபர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டவர். அவர் வழி நின்று தாங்களும் செயல்படுவதாக முடிவு எடுத்து இருப்பது பாராட்டுக்குறியது. தங்கள் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துகள்! மீண்டும் வருக!

மணியன் said...

நான் இன்றுதான் இட பிளாக்கர் மனம் வைத்தது. நம்மிருவர் கருத்தும் ஒருமித்திருப்பது மகிழ்ச்சி. இராமேஸ்வரத்திலிருந்து இராஷ்ட்ரபதிபவன் வரை அவரது பயணத்தின் ஒவ்வொரு அடியும் நினைவில் கொள்ள வேண்டியது இந்திய இளைஞர்களின் கடமையாகும். இன்றைய ஒரு கலாம் நாளை பல்கி பெருகினால் நாம் வல்லரசு ஆவது உறுதி.
எனக்கு MTV இல் ஓட்டு கிடையாது. இருந்தாலும் நல்லதிற்கு பாதகமில்லை என வயதைக் குறைத்து பதிந்து கொண்டு 'கள்ள'ஓட்டு போட்டுவிட்டேன் ;)

வவ்வால் said...

வணக்கம் மணியன்!

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!ஒத்த கருத்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி!

//இன்றைய ஒரு கலாம் நாளை பல்கி பெருகினால் நாம் வல்லரசு ஆவது உறுதி.
எனக்கு MTV இல் ஓட்டு கிடையாது. இருந்தாலும் நல்லதிற்கு பாதகமில்லை என வயதைக் குறைத்து பதிந்து கொண்டு 'கள்ள'ஓட்டு போட்டுவிட்டேன் ;) //

தாங்கள் வாக்களித்தது குறித்து பெரிதும் மகிழ்கிறேன் ,திரு.கலாம் போன்றவர்களை தேர்வு செய்யாமல் போய்விட்டால் அது நம் மக்களின் அறியாமையாக போய்விடும்.தாங்கள் வாக்களித்தது தவறே இல்லை! நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் திரு.கலாம் அவர்களுக்காக சொல்லி வருகிறேன் ,யாரொ ஒரு திரை நட்சத்திரம் ,சின்னதிரை வர்ணனையாளர் விட கலாம் வருவது தான் சரியான தேர்வாக இருக்க கூடும்!

வவ்வால் said...

நன்றி நாகை சிவா!

உங்கள் பதிவைப்பார்த்தேன் , நல்ல வேலை செய்தீர்கள்! M.TV CONTEST இல் நிறையப்பேர் வாக்குப்போடுவார்கள் என நினைக்கிறேன்!

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Villas In Trivandrum