Saturday, June 10, 2006

காதல் வளர்சிதை மாற்றம்!




இருண்ட கிணற்றின் சுவர்களில்

எவரும் அறியாமல் கசியும்

நீர்த்தாரைகளைப் போல

என் இதயத்தின் நாளங்களில்

உன் நினைவுகள் கசிகின்றன!

இலையுதிர் காலத்து மரத்தில்

இளைப்பார நிழல் தேடும்

ஊர்க்குருவியைப் போல

என் மனம்

திக்கு தெரியாத மனிதக்கூட்டத்தில்

புறக்கண் மூடி

அகக் கண் திறந்து

தேடி அலைகிறது

என் இதயம் மட்டுமே

அறிந்த முகத்தை!

முகம் தேவை இல்லை உணர

மூச்சுக் காற்றே போதும்

உன் வரவை எனக்கு சொல்ல!

தற்செயலான விழி தீண்டலில்

என் இதயக்கூட்டில்

உறங்கும் உணர்வுகள் சிலிர்த்து

எந்தன் காதல் முகிழ்த்து வளர்ந்ததில்

எந்தன் இதயம் சிதைந்து

சிறைப்பட்ட உணர்வுகள் பொங்கி

பிரவாகம் எடுத்தது கவிதையாக!

நானும் கவிஞன் ஆனேன்!

இது தான் காதல் வளர்சிதை மாற்றமோ!

------------------------------------------------------------------------------------------------

ஒரு பிற்சேர்க்கை!

காதல் வளர்சிதை மாற்றம்! - வவ்வால் 9.2% (11)


இந்த கவிதை தேன்கூட்டின் மாதாந்திர போட்டியில்(ஜூன்) கலந்துகொண்ட ஒன்று,அதிகம் அறிமுகம் இல்லாத எனது வலைப்பதிவையும் படித்து கவிதையை நேசிக்கும் 11 ஆத்மாக்கள் வாக்களித்துள்ளன,அவர்களுக்கு தெண்டனிட்டு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

எனது வலைப்பதிவு மறுமொழியிடப்பட்டவை என தமிழ்மணத்தின் முகப்பில் அடிக்கடி தோன்றி மின்னாது,ஏனெனில் நான் மட்டுறுத்தல் பயன்படுத்தவில்லை,அது வாசகர்களின் மனதை உறுத்தும், பின்னூட்டம் இட்டோமே அது எப்போது வரும் என காத்திருக்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.பின்னூட்டம் இட்டதும் அது உடனே தோன்றுவதை பார்த்து சிறிது மனம் ஆனந்திக்கும் வாசகர்களுக்கு அதனை ஏன் கெடுக்க வேண்டும். ஒரு சிறிய மன நிறைவு கிட்டும் அவர்களுக்கு. அது தான் என்னால் முடிந்த பதில் மரியாதை.

அப்படி இருந்தபோதிலும் 11 வாக்குகள் கிடைத்திருப்பதை எண்ணி ... எண்ணி(11 முறை எண்ணி) மனம் இரும்பூது எய்துகிறது.பேரில்லா உவப்பு அடைகிறது! வெற்றி தோல்விகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை. மேலும் ஆக்கப்பூர்வமாக பின்னுட்டம் இட்ட அன்பர்களுக்கும் நன்றி! வெற்றிப்பெற்றோர்க்கு வாழ்த்துகள்!

51 comments:

நிலா said...

வார்த்தைப் பிரயோகம் நன்று

வவ்வால் said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலா!,இது தான் முதல் வருகையென நினைக்கிறேன் அடிக்கடி வாருங்கள்.

பதிவிற்கு தொடர்பற்ற ஒரு தகவல், நிறப்பிரிகை தங்களது படைப்பு எனத்தெரியாமல் தான் ஒரு பதிவில் குறிப்பிட்டேன்.பிறகு தெரிந்து கொண்டேன்.அது ஒரு நல்ல முயற்சி எனினும் ஒரு பார்வையாளன் ,விமரிசகன் பார்வையில் அப்படி கூறினேன். வேறொன்றும் இல்லை

Ram.K said...

//முகம் தேவை இல்லை உணர

மூச்சுக் காற்றே போதும்

உன் வரவை எனக்கு சொல்ல!//

அட ! நல்லாயிருக்கே.

வெற்றிபெற வாழ்த்துக்கள்

வவ்வால் said...

வணக்கம் கெமலியான்!

இது தான் தங்களது முதல் வருகை என நினைக்கிறேன் ,தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி,அடிக்கடி இந்த பக்கம் வந்து செல்லுங்கள்!

Geetha Sambasivam said...

வவ்வால்,
முதல் வருகைக்கு நன்றி. எனக்கு ஆதாரம் திரு உ.வே.சாமிநாத ஐயரின் நினைவு மஞ்சரிதான். அவர் கூறுகிறார், சங்க காலத்தில் கூட மஹாபாரதம் ஒன்று இருந்ததாக. ஆனால் அவர் காலத்திலேயே அதில் சில செய்யுட்கள் தாம் இருந்தனவாம். பிறகு "தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன்" காலத்தில் ஒன்று இயற்றப் பட்டதாகக் கூறுகிறார். அதுவும் வழக்கொழிந்து போகப் பிற்காலத்தில் வந்த "வில்லி பாரதம்" நிலை பெற்றது. அதற்கும் முன் மஹேந்திர பல்லவன் காலத்தில் மஹா பாரதம் இருந்தது என்பதற்கு மாமல்லபுரமே அழியாத சாட்சி. மணிமேகலை புத்த சமயத்தைச் சேர்ந்த நூல் என்பதையும் கண்டு ஆராய்ந்து அவர்தான் பதிப்பித்து இருக்கிறார். மற்றபடி நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமே இல்லை. உங்கள் கருத்து உங்களுக்கு, என் கருத்து எனக்கு. நண்பர்களாகவே இருப்போம். நன்றி.

வவ்வால் said...

நன்றி கீதா சாம்பசிவம் அவர்களே!

தங்களுக்கு பதிலை உங்களது பதிவில் கூறுகிறேன். நட்புடன் இருப்பதையே அனைவரும் விரும்புவர்,நான் கருத்தியல் ரீதியாக தான் கூறினேன் அன்றி வேறு வகையில் அல்ல! மீண்டும் நேரம் கிடைத்தால் என்பதிவிற்கு வந்து கருத்துகள் கூறுங்கள்.மேலான கருத்துகளை நான் எதிர்பார்க்கிறேன்!

நரியா said...

வணக்கம் வவ்வால்,

//இலையுதிர் காலத்து மரத்தில்

இளைப்பார நிழல் தேடும்

ஊர்க்குருவியைப் போல//

உங்கள் எல்லா கவிதைகளிலுமே தவறான இடத்தில் சரியானவற்றை தேடுவது போலவே அமைகிறது.

இதற்கு எதேனும் காரணம் இருக்கிறதா??

நன்றி,
நரியா

வவ்வால் said...

வருகைக்கு நன்றி நரியா!

உங்களுக்கு வார்த்தைகளில் விளக்க முடியும் எனினும் இந்த பாடலை கேட்டீர்களானால் கவிஞர்களின் பார்வை எப்படி மாறுபட்டது என்பது விளங்கும். முரண்பாடுகளைக்கொண்டு விளக்குவது ஒரு வகை.கல்லுக்குள் ஈரம் என்று சொன்னால் உடனே கல்லுக்குள் ஈரம் இருக்குமா எனக் கேட்பீர்களோ?

இப்பாடல் ஒரு தலை ராகம் என்ற படத்தில் உள்ளது. முரண்பாடான இரண்டை இணைத்து உணர்வை சொல்வது!கவிஞர்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்கள்.(உங்களுக்கு எங்கே இருந்து இப்படிலாம் சந்தேகம் வருது :-)) )

இது குழந்தை பாடும் தாலாட்டு

இது இரவு நேர பூபாளம்

இது மேற்கில் தோன்றும் உதயம்

இது நதி இல்லாத ஓடம்

நடை மறந்த கால்கள் தன்னின்
தடயத்தை பார்க்கிறேன்

வடம் இழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்

சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்!...

இப்பாடல் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று ,அருமையான பாடல்.(இசை & இயக்கம்.ராஜேந்தர்.T)

Geetha Sambasivam said...

வவ்வால்,
என்னுடைய வாதம் மஹாபாரதமும், ராமாயணமும் இந்த நாட்டோடு பின்னிப் பிணைந்தவை என்பது தான். அதற்குத்தான் இளங்கோவடிகளையும், பல்லவரையும் துணைக்கு அழைத்தேன். மேலும் நீங்கள் முன் தேதியிட்டு எழுதப்பட்டவை என்று வேறு கூறி இருக்கிறீர்கள். அதனாலும் அதை மறுத்துச் சொன்னேன். துவாரகாவில் கடலுக்கு அடியில் கிருஷ்ணர் இருந்த துவாரகை கண்டுபிடிக்கப்பட்டு அதன் மாதிரி இப்போது உள்ள துவாரகையில் வைக்கப் பட்டு உள்ளது. மற்றபடி நான் உங்களை என் கருத்தை ஏற்கும்படி வற்புறுத்தவில்லை. ரொம்ப நன்றி வவ்வால். இதை வைத்தாவது என் வலைப்பூவிற்கு வந்தீர்களே.

Geetha Sambasivam said...

அப்புறம் வவ்வால், பல்லவர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. தாமிரப்பட்டயம் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் ஆரம்பித்தது. அதுவும் அவர் காலத்தில் தான் மெய்க்கீர்த்தி என்றும் ஆரம்பித்தது. ராஜ ராஜ சோழன் 10-ம் நூற்றாண்டு என்று நினைக்கிறேன்.

Geetha Sambasivam said...

அப்புறம் வவ்வால்,
திடீர்னு மின் விநியோகம் போய்ட்டதாலே பாதிலே விட வேண்டியதாப் போச்சு. நீங்க சொல்றது மாதிரி இளங்கோவடிகள் 8 அல்லது 9-ம் நூற்றாண்டுனு ஒத்துக்கிட்டாலும் எங்கேயோ இடிக்குதே? சிலப்பதிகாரம் நடைபெற்ற காலம் பூம்புஹார் இருந்திருக்கு. அந்தப் பூம்புகார் அப்புறம் கடலுக்குள் போய் விட்டது. முதலாம் நூற்றாண்டுக்குப் பின் அதைப் பற்றிய குறிப்புக்கள் எதுவும் வரலாறில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிலப்பதிகாரம் நடை பெற்றபோது சோழ மன்னர்கள் செல்வாக்குடன் இருந்த நேரம் வேறு. எனக்குத் தெரிந்து விஜயாதித்தன் காலம் வரை வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் தொல்லை கொடுத்த காரணத்தால் சோழர்களால் தலை எடுக்க வே முடியவில்லை. அந்தச் சமயம் பாண்டிய நாட்டை நெடுஞ்செழியனும் ஆண்டதாகச் சரித்திரம் இல்லை. ஒருவேளை பின்னால் இளங்கோவடிகள் இருந்து எழுதினார் என்று வைத்துக் கொண்டாலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அப்போது இல்லை. அவன் இல்லாமல் இளங்கோவடிகள் எழுதினாரா? அவன் தான் இளங்கோவடிகளுக்கு உதவி செய்தது. அப்போது மலை நாட்டில் மலைவாழ் மக்கள் கண்ணகி சினத்துடனும் அறுபட்ட ஒரு மார்புடனும் வந்ததாகவும், அவளை விண்ணில் இருந்து வந்த விமானம் ஒன்று ஏற்றிச் சென்றதாகவும் அரசனிடம் கூறி அந்த இடத்தில் தான் சேரன் கோவில் கட்டியதாகப் படித்தேன்.இப்போது என்ன செய்யலாம்?

Anonymous said...

romba nalla irukku itk...innum niraiya kavithaikal ezhuthe vazhthukal.

வவ்வால் said...

வணக்கம் வேதா!

இதுதான் தங்களது முதல் வருகை என நினைக்கிறேன் ,தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,அடிக்கடி வாங்க!

வவ்வால் said...

வாங்க கீதா,
ஒரு வழியா வந்தாச்சா,நன்றி மீண்டும் வருக, கவிதைகள் தான வரும் நானாக முயற்சிப்பதில்லை, தோன்றும் போதெல்லாம் தவறாமல் பதிவிடுகிறேன்!

வவ்வால் said...

வணக்கம் கீதா சாம்பசிவம்!

நீங்கள் கேட்டது இளங்கோவடிகளுக்கு எப்படி தெரிந்தது மகாபாரதம் என, அந்த கேள்வியே அர்த்தமற்றது அதனால் தான் அவ்வாறு சொன்னேன்!

மேலும் இது போல கால நிர்ணயம் செய்வதில் இலக்கியங்கள் சரிவராது என்பதால் தான் முன் தேதியிட்ட ஒன்று என சொன்னேன். விஞ்ஞான புனைவு படங்களில் 2000 ஆண்டில் எடுக்கும் போதே கி.பி.3000 என டைட்டில் கார்டு போட்டு படம் காட்டுவார்கள் பிற்காலத்தில் படம் வந்த ஆண்டைப்பார்க்காமல் பார்த்தால் அதனை கி.பி.3000 ஆண்டு என தவறாக சொல்வதாகிவிடுமே!

துவாரகை கதையே உறுதியாக யாரும் சொல்லவில்லை,அதனை ஆழ்கடல் அகழ்வாரய்வு செய்து நிருபிக்கவில்லை.கடந்த பி.ஜே.பி ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி ஒரு ஆய்வு செய்ய சொன்னதாக சொல்லி ஒரு அறிக்கை சமர்ப்பித்தார் அதனை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் கடல் கொண்ட நகரங்கள் கண்டிப்பாக எல்லா கடலோரத்திலும் உண்டு ஆனால் அதனை கிருஷ்ணாவின் பிறப்பிடம் என கூறுவது இந்துத்வா வாதம் என மறுத்துவிட்டார்கள்.

//பல்லவர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. தாமிரப்பட்டயம் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் ஆரம்பித்தது//

பல்லாவர் காலத்திலேயே தாமிர பட்டயம் உண்டு ,சிம்மவிஷ்னு(555கி.பி - 590கி.பி) காலத்தைய தாமிர பட்டயங்கள் அருங்காட்சியகத்தில் உள்ளது.

மதுரையை நெடுன்செழியன் ஆண்ட காலம் கிபி.765 - கிபி.815 ,எனவே சிலப்பதிகார காலம் என்பது இது தான் , இலக்கியம் என்பதால் ,சரியான கால வரையை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் எழுதப்பட்டிருக்கலாம். விஜயலாய சோழன் கி.பி 850 இல் இருந்து இரண்டாவது சோழ சாம்ராஜ்யத்தை நிறுவினான். இரண்டாவது சோழர்கள் கிபி 1173 வரை ஆண்டுள்ளார்கள்.

//இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அப்போது இல்லை. அவன் இல்லாமல் இளங்கோவடிகள் எழுதினாரா? அவன் தான் இளங்கோவடிகளுக்கு உதவி செய்தது//

இளங்கோவடிகள் சேர மன்னன் செங்குட்டுவனின் தம்பி ஆவார் .மூத்தவர் இருக்க இளையவன் அரசன் ஆவன் என நிமித்திகர் சொன்னதால் அவர் வாக்கை பொய்யாக்க இளங்கோ(meaning young prince) துறவரம் பூண்டார். அவர் கவிதை புனைய யாரும் உதவ வேண்டியதில்லை. மேலும் முதல் கண்ணகி கோட்டம் எழுப்பியது சேரன் செங்குட்டுவனே!கனக விஜயர்களை கல் சுமக்க வைத்தது அதற்கு பின்னரே! எனவே இவை தான் உண்மையான கால கட்டம் இலக்கியத்தில் காலங்கல் முன் பின்னாக மாறி இருக்கும் என்பதே நான் சொல்ல வந்தது.

Geetha Sambasivam said...

வவ்வால்,
"சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோ அடிகள் மன்னர் மகன் என்றும், சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும், பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த கதைகளையும், ஆய்வாளர்களின் கருத்தையும் முற்றிலும் நிராகரித்து, இளங்கோவடிகள் வணிகக்குலத்தில் பிறந்தவர் என்று இளங்கோவடிகள் யார்? என்ற நூலில் மெய்ப்பித்தவர் தொ.மு.சி.ரகுநாதன்.(திரு தொ.மு.பாஸ்கரத் தொண்டைமானின் உடன் பிறந்த தம்பி) இந்த நூலுக்கு இது வரை யாராலும் மாற்றுக் கருத்தை வைக்க முடியவில்லை. ஈரோட்டில் அவருக்கு 2001-ம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்பட்டது."
எழுதியது: பாரதி ரகுநாதன். பக்கம் 291. 4-வது பாரா.
புத்தகம்; கலைமாமணி பாஸ்கரத் தொண்டைமான் நூற்றாண்டு மலர்.
Sri T.M.C. Ragunathan has so far held many responsible posts and positions including member of the Advisory Boad for Tamil for Sahithya Acadami (1988-93), member of the Senate, Manonmaniam Sundaranar University, Tirunelveli (1993-95) and member of Jury for Sahithya Akademi Award in Tamil, 1994.
Page 290-Same book.
Ragunathan's monumental work Ilangovadikal yaar, an inter disciplinary, Marxist socio-historical analysis of the first great Tamil epic CHILAPPATHIKARAM, IS REGARDED AS A THOUGHT-PROVOKING STUDY OF THAT EPIC, EXPLORING MANY MYTHS WOVEN AROUND IT.
It is also from the same book page no 289 para-3.

பொன்ஸ்~~Poorna said...

வவ்வால், வார்த்தைப் பிரயோகம் நல்லா இருக்குங்க..

இது தேன் கூடு போட்டிக்கான பதிவுன்னு குறிச்சிருக்கலாம்ல.. மக்கள் புரிஞ்சி படிப்பாங்க..

அப்புறம், போட்டிப் பதிவுல இந்த இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் போட்டி தேவையா?!!

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

தங்கள் வருகைக்கும் ,கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாங்க. வார்த்தைகளை வளைப்பதில்லை தானாக வந்து விழுவது தான்! சில சமயம் நன்றாவும் பல சமயம் ஏதோ போல் வரும் :-))

போட்டிப்பதிவு என்றெல்லாம் போட்டு முன்னிறுத்த விரும்பவில்லை.இயல்பாக வந்து படிப்போர் படிக்கட்டுமே என விட்டுவிட்டேன்!

அந்த இளங்கோவடிகள் சமாச்சாரம் ,நான் கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவில் பின்னூட்டம் இட்டதிற்கு இங்கே அவர்கள் பதில் கூறிவிட்டார்கள் எனவே நானும் இங்கே பதில் கூற வேண்டிய நிலை. இந்த பதிலை எல்லாம் அவர்கள் பதிவிலும் போய் போட்டு விட்டேன்,இனிமேல் நேரடியாக அங்கேயே பதிலைப் போட்டு விடுகிறேன்!

Chellamuthu Kuppusamy said...

நல்லா இருக்குங்க வவ்வால்...

வவ்வால் said...

நன்றி குப்புசாமி செல்லமுத்து ,அடிக்கடி வாங்க!

வவ்வால் said...

நன்றி வண்ணத்துபூச்சி!

இது தான் முதல் வருகை என நினைக்கிறேன் அடிக்கடி வாங்க!

காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாரும் இல்லை ... என்று இருக்கிற காலத்தில மீண்டும் காதலிக்க ஆசையா , வாய்ப்பு கிடைச்சா விட்றாதிங்க :-))

வவ்வால் said...

-- test --

மனதின் ஓசை said...

கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்

Chellamuthu Kuppusamy said...

sure batman!!

வவ்வால் said...

வணக்கம் மனதின் ஓசை!

உங்கள் பெயரே கவித்துவமாக இருக்கிறது! இது தான் தங்கள் முதல் வருகை என நினைக்கிறேன் ,தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,அடிக்கடி வாங்க!

வவ்வால் said...

நன்றி குப்புசாமி செல்லமுத்து!

பேட்மேன், ஆ ஹா ..ஹா நான் எப்போதும் நாட் அவுட் பேட்ஸ்மேன் :-))

கதிர் said...

"இருண்ட கிணற்றின் சுவர்களில்

எவரும் அறியாமல் கசியும்

நீர்த்தாரைகளைப் போல"


அருமையா வார்த்தைகளை போட்டுருக்கீங்க. உவமைகள் நன்றாக இருந்தாலும் எல்லா கவிதைகளை போல இதிலும் சோக வாடை வீசுவதுதான் பொருத்தமாக இல்லை. பொதுவாக காதல் கவிதை என்றாலே சோகத்தை தவிர வேறு எதையும் சிந்திக்க தவறுகிறது என்னும் கருத்தே மேலோங்குகிறது உங்களிடத்திலும். நல்ல உற்சாகமான் கவிதைகளை எழுத வாழ்த்துக்கள்

அன்புடன் தம்பி

மு.கார்த்திகேயன் said...

நல்ல கவிதை..வவ்வால் அவர்களே

manasu said...

//"இருண்ட கிணற்றின் சுவர்களில்
எவரும் அறியாமல் கசியும்
நீர்த்தாரைகளைப் போல"//


எனக்கும் இந்த வரிகள் பிடித்திருந்தது.நல்ல இருக்கு வவ்வால்...

வவ்வால் said...

வணக்கம் தம்பி!

இதுதான் தங்களது முதல் வருகை என நினைக்கிறேன் ,கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அடிக்கடி வாங்க!

சோகம் இல்லாத வாழ்கை ஏது சோகத்தையும் வார்த்தைகளில் வடிக்கும் போது இன்பம் ஆகும், உற்சாகமான கவிதைகளும் படைக்கலாம் தானாக வரும் போது தான் படைக்கமுடியும். எனது நினைவோட்டங்களை தான் இது வரை எழுதுகிறேன்.எதிர்காலத்தில் அப்படி எழுதலாம் ,எவர் அறிவார்?

வவ்வால் said...

வணக்கம் கார்திகேயன் முத்துராஜ்!

முதல் வருகை என நினைக்கிறேன் ,தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.அடிக்கடி வாருங்கள்.

வவ்வால் said...

வணக்கம் மனசு!

மிக்க நன்றி,மீண்டும் வாருங்கள். தங்களைப் போன்றோரின் ஊக்கமூட்டும் சொற்கள் எழுத தூண்டும் ஒருவரை!

வெளிகண்ட நாதர் said...

கவிதை நல்லா இருக்கு, வவ்வால்!

வவ்வால் said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!

நன்றி அடிக்கடி வாங்க,இப்படி எப்போதாவது அத்தி பூத்தார் போல் வருவதா?

ALIF AHAMED said...

கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

வவ்வால் said...

வணக்கம் மி.மின்னல்!

இது தான் முதல் வருகையென நினைக்கிறேன்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி,அடிக்கடி வாங்க!

Doctor Bruno said...

// அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தனும் ஸ்கேன் ,எக்ஸ் ரே எல்லாம் இல்லை வாங்கி தாங்க கேட்பாங்க ஆன 10 நாளிலே அதை மூடிட்டு பழுதாகிடுச்சு//

I would like to discuss regarding this point of you.

Fwe Questions

1. What to do when the machine in GH gets repaired. You should know that we cannot pay the electrician in Cash. That has to be repaired only by the concerned person and it takes time

The fault is due to the clerical staff who delay in getting the work done and clearing the bills and not doctors.

Please understand

Ram.K said...

நான் தங்களை அழைத்திருக்கிறேன்.

http://tamiltheni.blogspot.com/2006/06/blog-post_20.html

Chellamuthu Kuppusamy said...
This comment has been removed by a blog administrator.
பொன்ஸ்~~Poorna said...

ஆறிப் போகிறதுக்குள்ள ஆறைப் போடுமைய்யா!!

இன்னும் நாலு சேர்ந்து ஆறு பேர் அழைச்சாத் தான் போடுவீரோ?

முபாரக் said...

//இருண்ட கிணற்றின் சுவர்களில்
எவரும் அறியாமல் கசியும்
நீர்த்தாரைகளைப் போல//

நன்றாக இருக்கிறது

ஒவ்வொரு வரிகளுக்கும் இடையில் இருக்கும் பெரிய இடைவெளி அசௌகரியத்தை உண்டுபண்ணுகிறது.

காதல் வளர்ச்சியான மாற்றம்தானே, சிதைவு அல்லவே :-)

சலிக்காமல் இதயம் துடித்துக்கொண்டிருந்தாலும் இதயம், இதயக்கூட்டில், இதயம் கசிந்து... என்று இதயம் திரும்பத்திரும்ப வருவது சற்றே சலிப்பாய் இருக்கிறது :)


கடைசி இருவரிகளும் கவிதையை சட்டென்று மலினப்படுத்திவிடுகிறது.

எனினும் இளைப்பாற நிழல் தேடும் ஊர்க்குருவியைப்போன்ற பதங்கள் அழகு.

வாழ்த்துக்கள்!

உங்கள் பின்னூட்டங்களின் ரசிகன் :)

சினேகமுடன்,
முபாரக்

வவ்வால் said...

வணக்கம் தமிழா தமிழா!

நாளை உன் நாளே(நாளைக்கழித்து யார் நாள் :-)) ) என்று என்னை பாராட்டி வாழ்த்து கூறியதற்கு நன்றி.இதான் முதல் வருகை என நினைக்கிறேன்,அடிக்கடி வாங்க!

வவ்வால் said...

வணக்கம் முபாரக்!

மிக அருமையாக படித்துப்பார்த்து விமரிசனம் செய்துள்ளீர்கள். நன்றி!

விதை முளைக்கிறதென்றால் அது முழு விதையாகவே இருக்கமுடியுமா தன்னை சிதைத்து கொண்டே முகிழ்த்து வெளிவரும்.அதே போன்று தனது முந்தைய நிலைமாற்றத்தையே வளர்சிதைவாக கொள்ள வேண்டும். அதனை சிதைவு என்ற அழிவாக பார்க்க இயலாதே. சாதரணமாக நாம் வளரும் போது உள்ளங்கைகளில் தோல் உரியும் அது போல தான் ஒரு பாலகனின் இதயதோல் உரித்து உள்ளிருக்கும் வாலிபன் வெளிப்படுகிறான் காதல் வயப்படும் போது!

வரிகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருந்தால் அது படிக்க சிரமமாக இருக்கும் என்றே கொஞ்சம் இடைவெளி விட்டு வரிகள் அமைக்துள்ளேன்.

காதல் உணர்வு இதயப்பூர்வமானது எனவே இதயம் அதிகம் வருகிறது.அறிவுக்கு அங்கே இடமில்லையே! விழியில் விழுந்து இதயம் நுழைபதல்லவா காதல்!

//கடைசி இருவரிகளும் கவிதையை சட்டென்று மலினப்படுத்திவிடுகிறது//

கடைசி வரிகள் கவிதையை மலினப்படுத்த அல்ல ,கொடுத்த தலைப்பை தொட்டுக்காட்டி முடிக்கவே,அவ்வாறு எழுதினேன்.

மேலும் கண்ணதாசனின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்

"பால்ப் போல் சிரிப்பதில் பிள்ளை
பனிபோல் அணைப்பதில் அன்னை
கவிஞன் ஆக்கினால் என்னை"

அதுபோன்று நானும் தற்செயலாகவே தோன்றி அவ்வாறே முடித்தேன் தலைப்பும் ஒத்துழைத்தது.

இந்தக்காலத்தில் தடுக்கினால் கவிஞர்கள் அதைப்படிக்க தான் ஆள் கிடைப்பதில்லை :-))

உங்களைப்போன்றவர்கள் படித்துப்பார்க்க வருவதே ஒரு ஊக்கம்! பின்னூட்டங்களின் ரசிகரா புதுசா இருக்கே ! தொடர்ந்து வருகைதாருங்கள். நன்றி!

நட்புடன்
வவ்வால்

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்!

பொறுத்தருளுங்கள் சரக்கு இல்லாம என்னத்த எழுதுறதுனு ஆழமா மண்டைய பீராய்ஞ்சுகிட்டு இருக்கேன் இன்றோ நாளையோ போட்டு விடுகிறேன் என் ஆறை.(சிவாஜி மாதிரி வந்து எனக்கு யாரவாது எழுதி தந்த நல்லா இருக்கும் சொக்கா!)

Unknown said...

அருமையான கவிதை வவ்வால்.கலக்குகிறீர்கள்.

யாத்ரீகன் said...

நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்....

வவ்வால் said...

வணக்கம் செல்வன்!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

வவ்வால் said...

வணக்கம் யாத்ரிகன்!

//மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு.. //

என்னங்க பந்திக்கு முந்திக்க வேண்டாமா ,எங்கேயாவது தீர்த்த யாத்திரை போய் இருந்திங்களா தாமதமா வந்து டிரெயின தவற விட்டுடிங்க! கவலை வேண்டம் அடுத்த டிரெயின்ல நான் துண்டு போட்டு ஒரு இடம் புடிச்சிடுறேன் வந்து கலக்குங்க!

வாழ்த்திற்கும் வருகைக்கும் நன்றி! (அப்பாடா ஒரு போட்டியாளர் குறைந்தது ஒரு வகையில் நமக்கு நல்லது தான் :-)) )

கண்டிப்பா உங்க வலைப்பதிவு வருகிறேன். சில வலைப்பதிவுகள் படித்து இருக்கேன் பின்னூட்டம் இடவில்லை என நினைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

ஆறு பதிவு எங்கே?!!!

Anonymous said...

சிறைப்பட்ட உணர்வுகள் பொங்கி

பிரவாகம் எடுத்தது கவிதையாக!

நானும் கவிஞன் ஆனேன்!


நல்லாயிருக்கே

வவ்வால் said...

வணக்கம் காண்டிபன்!

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! அடிக்கடி வாங்க! பழைய பதிவு என்பதால் உடனடியாக உங்கள் பின்னூட்டம் பார்க்க இயலவில்லை!