Monday, October 09, 2006

மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்



மீண்டும் வவ்வால் அவதரித்து விட்டான்!

வணக்கம் நண்பர்களே!

நகர்ப்புரத்தில் சுற்றுப்புறம் மாசடைந்துவிட்டதால் ஒரு மாறுதல் வேண்டி சிறிது காலம் வனவாசத்திற்கு சென்று விட்டேன்.ஆனால் வவ்வாலை என் நேசமிகு வலைஞர்கள் வலை வீசி தேடி வருவதாகவும், வவ்வால் இல்லாமல் வலைப்பதிவுலகம் சுரத்தின்றி தொய்ந்து விட்டது விரைந்து வந்து எங்களை எல்லாம் காத்தருள வேண்டும் என்று கைப்பேசி குறும் செய்தி(எஸ்.எம்.எஸ்),மின்னஞ்சல், தொலை ஒளி நகல் (ஃபேக்ஸ்),தந்தி, அஞ்சல் அட்டை போன்ற பலவற்றின் வாயிலாகவும் விடாத அழைப்புகள் வந்தமையால் அன்பர்களின் அழைப்பிற்கு செவி மடுத்து, என் வனவாசத்தை பாதியில் முடித்துக்கொண்டு மீண்டும் தமிழை காக்க ஓடொடி வந்து விட்டேன்.

என் உடல் பொருள் ஆவி எல்லாம் அர்ப்பணித்து தொய்ந்து விட்ட வலைப்பதிவு உலகிற்கு முட்டு கொடுத்து நிமிர்த்துவதே எனது தலையாயப் பணி என்பத்தை தட்டச்சு விசைப்பலகை மீது ஓங்கி அறைந்து உறுதி கூறிக்கொள்கிறேன்.

அவ்வப்போது அஞ்சாத வாசம் சென்றாலும் எப்பொழுதெல்லாம் தமிழுக்கு தொய்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் வவ்வால் அவதரிப்பான்!(தலைமறைவு ஆனதும் இல்லாமல் . இதுல ஓவர் அலம்பல் வேறயா அடங்குய்யா)
சரி இத்தோட நிப்பாட்டிப்போம் இல்லைனா நம்ம பதிவ படிக்கிற ஒண்ணு ரண்டு மக்களும் ஓடிப்போய்டுவாங்க ..ஹே ஹெ..ஹே மீண்டும் வவ்வால் இம்சைகள் தொடறும்...

13 comments:

Unknown said...

வவ்வாலே வருக, வருக

இப்படிக்கு
(தமிழ்)செல்வன்

வவ்வால் said...

வணக்கம் வாங்க செல்வன்!
நன்றி! இப்போ தான் உங்கள் அப்சல் தூக்கு தண்டனை ரத்து செய்யலாமா பதிவு படிச்சேன் ,சரி பின்னூட்டம் போடலாம்னு என் மூளையை பிறாண்டிக்கிட்டு இருந்தேன் இங்கே பார்த்தா உங்க பின்னூட்டம். ஜூ.வி.ல கூட வந்து இருக்கு ஜென்ராம் தூக்கு வேணாம்னு எழுதி இருக்கார்! விரிவா ஒரு பின்னூட்டம் போடுகிறேன்

இலவசக்கொத்தனார் said...

மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துக்கள். செல்வனுக்குப் பின்னூட்டம் போட்டுட்டு அப்படியே நம்ம பக்கமும் வாங்க. :)

வவ்வால் said...

வாங்க இ.கொ,
வணக்கம், நன்றி! பீனிக்ஸ் பறவை போன்று எரித்தாலும் உயிர்தெழுவான் வவ்வால்.அட்டகாசங்கள் மீண்டும் தொடரும் கபர்தார்!

உங்கள் பக்கத்துல வந்து தொங்கிட்டு போறேன் கவலைப்படாதிங்க(சன்மானமா ரெண்டு விதை இல்லா பேரிச்சம் பழம் எடுத்து வைங்க)

வவ்வால் said...

வாங்க கீது!

நன்றி,வணக்கம்.

என் மீள் படைஎடுப்பு பதிவு பார்த்து சிரிச்சிங்களா நான் தீவிரமா அதை தத்துவம்னு வகைப்படுத்தினதை இப்படி மானபங்கம் படுத்திடிங்களே அய்யகோ ஆண்டவா! என்னே கொடுமை.!

வெளிகண்ட நாதர் said...

மறுஅவதாரம், இப்பொழுது எந்த வேஷம், ராமனாகவா, கிருஷ்ணனாகவா, வாழ்த்துக்கள்!

பொன்ஸ்~~Poorna said...

எங்கடா காணோமேன்னு நினைச்சிகிட்டிருந்தேன். வழக்கம் போல் வலைப் பதிவு சூடு பிடிக்கும் போது வந்துட்டீங்க :) வாழ்த்துக்கள் :)

வவ்வால் said...

வணக்கம் வெ.நாதர்!

நன்றி!

நாம் ஒரு அவதாரம் அல்ல தசவதாரம் !

வவ்வால் said...

அம்மா பொன்ஸ்1

நன்றி! வழக்கமா சூட்ட கிளப்புற நானே சூடாகிவிட்ட பிறகும் வராம இருந்த நல்லா இருக்குமா.வர வேண்டிய நேரத்துல வந்துடுவோம்ல!

Anonymous said...

voval,
thanmbikkai venum.anal inthalvukalla. lol.irukattum .vovalin mugam nangal paarkum neram ungal thanmbikkikku 100 mathipen.enna readya?vaarrungal meendum. kosukadiyaga illamal thamizh koorum nalulagirkku oru thoonai vilanga vaarungal.neraiya ethirparkirom ungalidam.karuthupoo malara vaazhthukal .kavithaiyaal kalakka kaikulakalgal.happy writing .natpudan veena.

வவ்வால் said...

வாங்க வீணா,

யானைக்கு இருக்கு தும்பிக்கை எனக்கு இருக்கு நம்பிக்கை ! ... இதில் என்ன தவறு! உங்கள் ஆசிர்வாதம் ஒன்று இருந்தால் போதும் இமயமும் எனக்கு ஒரு கடுகு தான் .... எழுதி கலக்குறது சிலர் ... கலக்கி எழுதுறது இந்த வவ்வால் மட்டும் தான் !

Anonymous said...

Welcome back

வவ்வால் said...

நன்றி கீரா, தாங்களும் மீண்டும் வருக , எங்கே ஆளையே பார்க்க முடியலை?