Thursday, June 21, 2007

இன்று உலக இசை நாள் மறக்கப்பட்ட இசை மேதை எம்.எஸ்.வி!

கேள்விக்குறி!

எஸ்.ராமக்கிருஷ்ணன், பிரபலமான சிற்றிலக்கிய எழுத்தாளர், தற்போது வெகுஜன ஊடகங்களாகிய விகடனிலும் தொடர் எழுதுகிறார் கேள்விக்குறி என்ற தலைப்பில், இந்த வார விகடனில் மீதமிருக்கும் வலி என்ற பெயரில் அவரது கட்டுரை வந்துள்ளது அதிலிருந்து என்னை கவர்ந்த ஒரு பகுதி!

எஸ்.ராமகிருஷ்ணனின் நண்பர் கூறியதாக வந்துள்ள பகுதி!

என் நண்பரும் இசை விமர்சகருமான ஷாஜியிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் சொன்னார்...எம்.எஸ்.விச்வநாதன் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்! தென்னிந்தியாவில் ஒவ்வொரு நாளும் எத்தனையோ லட்சம் பேர் அவர் பாடல்களை கேட்டு ரசிக்கிறார்கள்.அவ்வளவு பெரிய இசையமேதைக்கு இது வரை மிகப்பெரிய அங்கீகாரம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. தமிழ்த்திரையுலகின் இசை அரசனாக இருந்த எம்.எஸ்.வி. க்கு இன்று வரை மானில அரசு விருதோ, தேசிய விருதோ கிடைத்தது கிடையாது.பத்மஷ்ரி,பத்மபூஷன் போன்ற விருதுகள் எதற்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. திரையிசை சாதனை மட்டுமின்றி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இசை மைத்தது போன்ற எண்ணிக்கையற்ற சாதனைகள் செய்துள்ள மனிதரையே நாம் தொலைவில் வைத்துதான் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

மக்களின் மனதில் நீங்காத இடம் கிடைத்துள்ள அங்கீகாரம் தவிர வேறு விதங்களில் கெளரவப்படுத்தவோ,சிறப்பு செய்யவோ நாம் மறந்து போனோம். அது சரி அவராக வாய்விட்டுக் கேட்கவா முடியும்? என்றார்.

பசிக்கிறது என்றால் வாய்விட்டுக் கேட்கலாம்.ஆனால செய்த பணிக்காக மரியாதையை எப்படி வாய்விட்டுக் கேட்பது?

நம் வாழ்வுடன் ஒன்றுகலந்து விட்ட கலைஞர்களை,நம் மொழியும் வாழ்வும் உயர்வு பெறப் பாடுபட்ட அறிஞர்களை,வல்லுனர்களை, மூதோர்களை அடையாளம் கண்டு கெளரவப்படுத்த வேண்டியது நமது அடிப்படைச் செயல்பாடு அல்லவா?

எவ்வளவு அலட்சியமாக கடந்த காலத்தையும் , மனிதர்களையும் நம் மக்கள் மறந்து விடுகிறார்கள் என்று பார்த்தால் சற்றே பயமாகவும் , வெறுப்பாகவும் உள்ளது இந்த போக்கு எது வரை செல்லும் நாட்டையும் மறக்கும் வரை செல்லுமோ?

இன்று உலக இசை நாள் , எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ....என்ற பாடல் தான் மனதில் கேட்கிறது.கண்ண தாசன் மற்றும் எம்.எஸ்.வி இணைந்தால் இனிமையான பாடல்கள் தான் , அதை இசை அமைத்தவரோ எங்கேயோ மறக்கடிக்கப்பட்டு விட்டார். எம்.எஸ்.விக்கு பின்னால் வந்த கற்றுக்குட்டி இசையமைப்பளர்கள் எல்லாம் பத்மஷ்ரி விருதுகள் வாங்கியுள்ளார்கள் இவரை மட்டும் கவனிக்காமல் விட்டவர்களை என்ன செய்வது என்பது தான் எனது கேள்விக்குறி?

37 comments:

Sowmya said...

ulaga isai nal endru oru nal irupathu , ipoothu neengal solli than therium.nandri:)

வவ்வால் said...

வணக்கம் பெபி , வாங்க , நன்றி!

உங்களைத்தான் நினைச்சேன் வந்துடிங்க , பதிவ போட்டு விட்டு உங்களுக்கு சொல்லலாம்னு இருந்தேன். நீங்க மின்னல் வேகம் போங்க.

வடுவூர் குமார் said...

லாபி பண்ணத்தெரியாத MSV??
மறக்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்.

வவ்வால் said...

வணக்கம் வடுவூர் குமார், நன்றி!

உண்மை தான் , விருதுக்கு லாபி பண்ணி எல்லா ஏற்பாடும் செய்து விட்டு எனக்கே ஆச்சரியம் என்னை தேடி விருது வந்து விட்டதுனு தொலைக்காட்சியில் பேட்டி தரும் திறமை எம்.எஸ்.விக்கு மெய்யாகவே இல்லை போலும். அனேகமாக அவரது அந்திமகாலத்தில் விருதுக்கு ஏற்பாடு செய்வார்கள் போல் உள்ளது. அதானே நம்மாளுங்க வழக்கம்!

மாயன் said...
This comment has been removed by the author.
மாயன் said...

எட்டு விளையாட்டு தெரியும்ல? வாங்க வந்து எட்டுபோடுங்க... லைசென்ஸ் கிடைக்குதா பாப்போம்...

மாயன் said...

எட்டு விளையாட்டுக்கு ரெடியா? என்னோட லேட்டஸ்ட் பதிவை பாருங்க...உங்களை அழைச்சிருக்கேன்..

kuthubg said...

aamaam guru ..Msv kandukkama vittutanga..indraiya ilaiya thalaimurai kooda Msv paatta virumbi paaduratha naam chat la kettu kittu irukkom..

வவ்வால் said...

வாங்க ஆலம் , குலாமா , நன்றி!

ஆமாம் எல்லாருக்கும் பிடிக்கும் அவர் பாடல்கள் அங்கிகாரம் தான் இல்லை, அடிக்கடி வாங்க ஆலம்.

தென்றல் said...

/தமிழ்த்திரையுலகின் இசை அரசனாக இருந்த எம்.எஸ்.வி. க்கு இன்று வரை மானில அரசு விருதோ, தேசிய விருதோ கிடைத்தது கிடையாது.பத்மஷ்ரி,பத்மபூஷன் போன்ற விருதுகள் எதற்கும் அவர் பெயர் பரிசீலனை செய்யப்பட்டதில்லை. /

அப்படியா..? அடக் கொடுமையே!

ம்ம்... கலைசேவை புரிந்த த்ரிஷா, சிம்பு லாம் கலைமாமணி குடுக்கிறவங்க இவரைலாம் பரிந்துரைப்பாங்களா?

வவ்வால் said...

வாங்க தென்றல் , வருகைக்கு மிக்க நன்றி!

எம்.எஸ்.வி இரண்டு முதல்வர்களுடன் திரைத்துறையில் பணியாற்றியவர் (மூன்று?) அவருக்கே இந்த கதி என்பது தான் சோகமான நகைச்சுவை!(இதில் என்ன நகைப்பு?) காக்கா பிடிக்க தெரியாதவர் போலும் அவர்.

இந்த ஆண்டு உண்மையான இயல் இசை நாடக கலைஞர்கள் ஒருவருக்கு கூட கலை மா மணி விருது தரப்படவில்லை, விருது துவங்கப்பட்டதே இயல்,இசை நாடக கலைஞர்களுக்கு விருது வழங்க தான், இது வரை எல்லா ஆண்டும் ஒருவராவது விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். விருதை தேர்வு செய்யும் அமைப்பிற்கு பெயர் தமிழ் நாடு இயல் இசை நாடகக்குழு!!??

சிம்பு,திரிஷா எல்லாம் ஆஸ்கர் வாங்க தகுதியானவர்கள்!!?? அவர்களுக்கு கலைமாமணி தேவையா என்ன?

என்ன கொடுமை சார் இது!

G.Ragavan said...

வவ்வால், இந்தப் பதிவில் நீங்கள் சொல்வது அத்தனையும் எனது ஆதங்கங்களே. உழைக்கத் தெரிஞ்சா மட்டும் போதுமா? பொழைக்கத் தெரிய வேண்டாமா?

ஒரு விஷயம் சொல்றேன். மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.
http://gragavan.blogspot.com/2007/07/3-1.html
இந்தப் பதிவுலயே இளையராஜா பதிவுக்கும் தொடுப்பு இருக்கு.

தமிழ்த்தாய் வாழ்த்து பத்தி இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.
http://isaiarasi.blogspot.com/2007/06/03.html

// அனேகமாக அவரது அந்திமகாலத்தில் விருதுக்கு ஏற்பாடு செய்வார்கள் போல் உள்ளது. அதானே நம்மாளுங்க வழக்கம்! //

:( இது நடந்தாலும் நடக்கலாம். ஒவ்வொரு பேட்டியிலையும் பாலசுப்ரமணியம் சொல்வாரு. எம்.எஸ்.விக்கு பாரத ரத்னா விருதுகள் குடுங்கன்னு. ஆனா அதுக்கு அவர் என்ன செஞ்சாருன்னு சொல்ல மாட்டாரு. நாலஞ்சு பேட்டீல இத பாலு சொல்லக் கேட்டுட்டேன். :(

// அப்படியா..? அடக் கொடுமையே!

ம்ம்... கலைசேவை புரிந்த த்ரிஷா, சிம்பு லாம் கலைமாமணி குடுக்கிறவங்க இவரைலாம் பரிந்துரைப்பாங்களா? //

அடடே! சிம்பு த்ரிஷா போன்ற உயர்ந்தவர்களுக்கு விருது இவருக்குத் தேவையா? வேண்டவே வேண்டாம். உண்மையான இசையன்பர்களின் அன்பு என்றும் மெல்லிசை மன்னருக்கு உண்டு.

அவருக்காக ஒரு வலைப்பூ தொடங்கும் எண்ணமும் உண்டு. விரைவில் நடக்கும். அதில் கலந்து கொள்ள வருகின்றீர்களா வவ்வால்?

வவ்வால் said...

வாங்க ராகவன் ,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

//மூனு சுரத்துல ஒரு ராகம் மகதி. அதுல ராஜா ஒரு தெலுங்குப் பாட்டு போட்டாராம். அதை மேடையில சொல்லி....விளக்கி...டீவியில வருது. ஆனா பாருங்க. அந்த ராகத்த மொதமொதலாப் போட்டது எம்.எஸ்.வி. அதை எடுத்து இந்தப் பதிவுல சொல்லீருக்கேன்.//

ஆஹா இளையராஜா அந்த வேலை எல்லாம் செய்து இருக்காரா , நான் கேள்விபடாத தகவல் ,ஏற்கனவே சிம்பொனி போடாமலே போட்டதாக வெற்று பெருமை அடித்துகொண்டு இருக்கார் ராஜா இதில் அறிவு திருட்டு வேறா?

//அவருக்காக ஒரு வலைப்பூ தொடங்கும் எண்ணமும் உண்டு. விரைவில் நடக்கும். அதில் கலந்து கொள்ள வருகின்றீர்களா வவ்வால்?//

நல்ல முயற்சி , கண்டிப்பாக வருகிறேன் ராகவன்.

1970 இல் எம்.எஸ்.விக்கு கலைமாமனி தறப்பட்டது அது ஒன்று தான் இன்னாள் வரை அவர் பெற்று இருக்கும் ஒரே அரசு விருது என நினைக்கிறேன். வேறு எந்த தேசிய விருதும் தரப்படவில்லை ரஹ்மானுக்கு எல்லாம் பத்மஷ்ரி எல்லாம் தந்து விட்டார்கள்.ரஹ்மானுகு தந்தது தவெறென்று சொல்லவில்லை ஆனால் அவரை விட பல மடங்கு மூத்தவர் இசை மேதை ஆயிற்றே எம்.எஸ்.வி

நானானி said...

அவ்ருக்கு கொடுக்கலை..கொடுக்கலை என்று சொல்லி சொல்லியே கொடுத்ததைவிட அதிக உயரத்தில் தூக்கி வைத்திருக்கிறோம். இந்த லிஸ்டில் டி.எம்.எஸ்., சுசீலா ஆகியவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். லதா மங்கேஷ்கருக்கு எந்தவிதத்தில் குறைந்துவிட்டார்?

Sud Gopal said...

இந்த விஷயத்தில் வடக்கு எப்போதும் வாழ்கிறது.தெற்கு தேய்ந்துகொண்டுதான் இருக்கிறது.தமிழ்,தெலுங்கு உச்ச நட்சத்திரங்களுக்குக் கூட பத்மவிபூஷண் கொடுத்தாச்சு..

மஞ்சள் துண்டு மகான் மனசு வச்சா நடக்கலாம்..ஒண்ணா ரெண்டா..நாப்பாதாச்சே;-)

இந்த லிஸ்டிலே வாணிஜெயராமையும் சேர்த்துக்கிட வேண்டியது தான்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பூனைக்கு மணி கட்டுவது யார்?
மிக நாயமான கேல்விகளைக் கேட்டுள்ளீர்.
பதில் கூறவேண்டியவர்கள்
கூறுவார்களா??/

G.Ragavan said...

// சுதர்சன்.கோபால் said...
இந்த விஷயத்தில் வடக்கு எப்போதும் வாழ்கிறது.தெற்கு தேய்ந்துகொண்டுதான் இருக்கிறது.தமிழ்,தெலுங்கு உச்ச நட்சத்திரங்களுக்குக் கூட பத்மவிபூஷண் கொடுத்தாச்சு..

மஞ்சள் துண்டு மகான் மனசு வச்சா நடக்கலாம்..ஒண்ணா ரெண்டா..நாப்பாதாச்சே;-) //

ஐயா மனசு வெச்சா கண்டிப்பா நடக்கும். அவரு சொல்லித்தான தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைச்சாரு மெல்லிசை மன்னர். அதுக்காகவாவது செய்யலாம். ஆனா செய்வாருன்னு தோணலை.

// இந்த லிஸ்டிலே வாணிஜெயராமையும் சேர்த்துக்கிட வேண்டியது தான்.. //

அவங்கள ஏற்கனவே சேத்தாச்சே. மொதப் பாட்டுலயே தான்சேன் விருது. பொறுக்குமா? வெரட்டி விட்டுட்டாங்க. வாணி ஜெயராம் ஒரு பாட்டு பாடீட்டாங்களாம் மீராங்குற படத்துல.அடுத்த பாட்டுக்கு இசையமைத்த பண்டிட் ரவிசங்கர் கூப்டப்போ லதா மங்கேஷ்கர் முடியாதுன்னுட்டாராம். வாணி பாடுன பாட்டையும் இவரையே பாட வெச்சாத்தான் வருவேன்னு சொன்னாராம். ரவிசங்கர் அப்படியான்னு கேட்டுக்கிட்டு எல்லாப் பாட்டையும் வாணி ஜெயராமையே பாட வெச்சாராம். அவரு இசைமேதை. ஆனா மத்த இசையமைப்பாளர்கள் அப்படியில்லையே. தங்கச்சியக் கட்டுனவரு....அப்படி இப்பிடின்னு உறவுக்காரங்களாப் போய்ட்டாங்க. அதுனால வாணியக் கண்டுக்கலை.

ILA (a) இளா said...

//மஞ்சள் துண்டு மகான் மனசு வச்சா நடக்கலாம்..ஒண்ணா ரெண்டா..நாப்பாதாச்சே;-)//
இதை நாமே ஒரு மனுவா கலைஞர் கைக்கு கொண்டு போனா என்னங்க? ஒரு பதிவை போடுறதை விட இப்படி ஏதாவது பண்ணலாமே. நாமும் ஒரு மணி கட்டி பார்ப்போமா?

வவ்வால் said...

வாங்க நானானி, நன்றி!

மக்கள் மனதில் இடம் இருந்தாலும் அரசின் அங்கீகாரம் என்பது , அளிக்கப்படாத வரையில் ஒரு உறுத்தலாக தானே இருக்கும்.

சுசிலா, டி.எம்.எஸ் எல்லாம் அவர்களின் உச்சத்தில் இதனை சரியாக கவனித்து லாபி பண்ணாமல் இருந்து விட்டார்கள். லாபி பண்ணாமல் எதுவும் கிடைக்காது அழுத பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்.

வவ்வால் said...

யோகன் நன்றி!

கருவாட்டு ருசிகண்ட அரசியல் பூனைகளாச்சே மணி அடிச்சாலும் மண்டைல அடிச்சாலும் ஏறாது!

வவ்வால் said...

வாங்க சுதர்சன் கோபால்,நன்றி!

//மஞ்சள் துண்டு மகான் மனசு வச்சா நடக்கலாம்..ஒண்ணா ரெண்டா..நாப்பாதாச்சே;-)//

உங்க ட்ரைவியா பேட்டை ல கூட நிறைய இசை தகவல்கள் படித்து இருக்கேன்.

இந்த வடக்கு , தெற்கு கலை உலகிலும் ரொம்ப அதிகம் , அதை எல்லாம் இந்த மஞ்சள் துண்டு மகான் கண்டுக்க மாட்டார், அரசியல் ரீதியாக பிரச்சினை வந்தால் மட்டுமே வடக்கு வாழ்கிறது என கூப்பாடு போடுவார்.

இல்லை என்றால் சிவாஜிக்கு கடைசி வரை சிறந்த நடிகர் விருது கிடைக்காமல் பண்ணுவார்களா,(எம்,ஜி.ஆருக்கு ரிக்க்ஷாகாரனில் நடித்தற்காக சிறந்த நடிகர் விருது இதை எங்கேப்போய் சொல்வது!) இதில் ஒரு கொடுமை அவர் நடித்த படத்தை வடக்கே ரிமேக் செய்து விருதெல்லாம் வாங்கி இருக்கிறார்கள்.

இப்போது தான் தெற்கு பக்கம் சில விருதுகள் வருகிறது, ஆனால் அந்த காலத்திய கலைஞர்கள் தான் எதிலும் சேறமுடியாமல் தனித்தீவாக அல்லாடுகிறார்கள்.

வவ்வால் said...

வாங்க ராகவன் ,நன்றி!

கலைஞர் பிறந்த நாள் என்றால் போய் மாலை போடனும் ,கவியரங்கம் நடத்தி வாழும் வள்ளுவரேனு கவிதைப்பாடனும் அதெல்லம் செஞ்சா தான் சிபாரிசு பண்ணுவார் இவங்களுக்கு எல்லாம் , கலைமாமணியோட திருப்தி பட்டுக்க சொல்வார்!

வவ்வால் said...

வாங்க இளா, நன்றி,

//இதை நாமே ஒரு மனுவா கலைஞர் கைக்கு கொண்டு போனா என்னங்க?//

நாம மனு கொடுத்தா உடனே அதை கேட்டு செய்ய அவர் மனு நீதி சோழன் பாருங்க , ஆனாலும் ஊதுர சங்க ஊதி வைப்போம் என்ற கதையாக முயற்சி செய்தால் தப்பில்லை தான்!

SurveySan said...

மேட்டர லேஸுல விடக் கூடாதுங்க.

நம்ம அரசாங்கம் பண்றது, சின்னபுள்ளத் தனமா இல்ல இருக்கு.

பெட்டிஷன் க்ரியேட்டிட்டேன். நம்மால முடிஞ்சது. பாப்போம் எங்க போவுதுன்னு!

பெட்டிஷன் இங்கே

வவ்வால் said...

நன்றி சர்வேசன்,

இப்படி கூட்டமா குரல் கொடுத்தால் தான் தொல்காப்பிய பூங்காவில குந்தி இருக்க திருகுவளைக்காரர்க்கு கேட்கும்!

Anonymous said...

லேட்டஸ்ட் அடிஷன்!
நம்மால முடிஞ்சது.
MSVக்காக ஒரு பெட்டிஷன்.
படிச்சுட்டு sign பண்ணுங்க! உடனே!
தகவலை பரப்பவும்!

http://www.petitiononline.com/msv2008/petition.html

Anonymous said...

MSV ஒரு இசை சகாப்தம்

வல்லிசிம்ஹன் said...

MSV SIR maathiri varaathu. I know how much we were disappointed when he was pushed back, in the late 80s.
Even if (assuming)he was old and we had to usher in new blood and all that nonsense.
But he was one who brought so much good music into our lives.
Thank you so much for this post.

வவ்வால் said...

நன்றி,
அனானி, திகிலன்,

வல்லிசிம்ஹன். ஒரு காலக்கட்டம் இருக்கு கலைஞர்களுக்கு அதன் பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள். ஆனாலும் அவ்வப்போது இசையமைப்பார்கள், ஆனால் எம்.எஸ்.வி போல அடியோடு ஒதுக்கப்படுவதில்லை.
நன்றி!

SurveySan said...

Petition சூடு பறக்குது.

240 so far.

http://www.petitiononline.com/mod_perl/signed.cgi?msv2008&1

Anonymous said...

Why should we all cry that MSV is not given any award by the Govt at Centre and in State.The acclamation from his fans are much more valuable than the awards from Govt.I will tell an interesting event happened in the life of Genius Thodi Rajarathnam Pillai(Famous Piper)When someone asked him of all the awards he received in his life which is the best one.He quipped that when he was playing in a street procession once, the light boy who used to lift the gas lights in those kind of procession, said Saabash when he played an important brigha and this is the best compliment he has received in his life.The interviewer asked him that he has also received the award from President and why he chose not to name it as the best. Mr.Pillai immediately said that was given on someone recommendation and he has not heard my music. When thousands and thousands of fans like us pay rich tribute to MSV daily and that is the real recognition for a Creative Genius of MSV's calibre.

Anonymous said...

msv ?

ஓகை said...

வவ்வால், இந்தப் பதிவுக்கு மிக நன்றி.

ராஜ நடராஜன் said...

இப்பத்தான் உங்களைப் பத்தி ஒரு பதிவு போட்டுட்டு தபால் அனுப்பிட்டு வந்தா உங்களோட எம்.எஸ்.வி பதிவு.எம்.எஸ்.வி அவர்களின் இசை இன்னும் பல தலைமுறைக்கும் போய்ச் சேரும்.

வவ்வால் said...

சூரி,

//When thousands and thousands of fans like us pay rich tribute to MSV daily and that is the real recognition for a Creative Genius of MSV's calibre.//

நீங்க சொல்வதெல்லாம் சரி தான், அதுலாம் மன திருப்திக்கு சொல்லிக்கலாம், ஆனால் ஒரு அரசு அங்கீகாரம் என்பது தேவை தானே, இவரை விட பின்னால் வந்தவர்கள் எல்லாம் பல விருதுகளை வாங்கிக்கொண்டு இருக்கும் போது , இவருக்கு மட்டும் இல்லையே என்பது தான் கேள்வி.

--------------------------------
அனானி?
----------------------
ஓகை,
இது பழைய பதிவு ,சிலர் பின்னூட்டம் போட்டதால் இப்போ மேல வந்திருக்கு .

------------
நட்டு,
உங்கள் பதிவைப்பார்த்தேன், நன்றி!

இப்பதிவு ஓராண்டுக்கு முன்னர் போட்டது , இப்போவும் இதுக்கு பின்னூட்டங்கள் வந்திட்டு இருக்கு, சர்வேசன் அடிக்கடி அப்டேட் செய்வார்.

-----------------------------------

Amudhavan said...

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பின்னர் பாராட்டுதான் என்றாலும் பின்னூட்டம் போடலாமா என்று யோசித்தேன். சரியான விஷயங்களை எப்போதுமே ஆதரிக்கவேண்டும் என்பதால் ஆதரித்து இங்கே எழுதுகிறேன்.

எம்எஸ்வியை மட்டுமல்ல அவருடன் சேர்ந்து ராமமூர்த்தியையும் பாராட்டவே வேண்டும். ராமமூர்த்தி பிரிந்துபோனபின்னரும் தனிஒருவராக பதினைந்து இருபது வருடங்கள் ஆட்சி செய்தவர் எம்எஸ்வி. இணைய தலைமுறையினர் பெரும்பாலும் இளையதலைமுறையினராகவே இருப்பதால் இவர்களுக்கு கருத்துத் தெரிவதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவே மாட்டேன் என்றும் அப்படி தெரிந்துகொண்டாலும் அதனை மதிக்கவே மாட்டேன் என்றும் அடம்பிடிப்பதுதான் இன்றைய பிரச்சினை.
இவர்களுக்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததுகூட நேற்றைக்கோ முந்தைய நாளோ நடந்தது என்றால்மட்டுமே ஒப்புக்கொள்வார்கள். எம்எஸ்வி பற்றி இணையத்தில் நானும் ஆர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் காரிகன் என்ற மூன்றுபேர் மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று கருதிக்கொண்டு இங்கு வந்து பார்த்தால் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதுவே சந்தோஷமாக இருக்கிறது.
ஆனாலும் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குள் வந்து கால்பந்து பற்றிப் பேசுவது போல்தான். உலகில் கால்பந்துக்கான ரசிகர்கள்தாம் அதிகம் என்றபோதிலும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கிரிக்கெட்டை ரசிக்கும் ரசிகர்கள்தானே அதிகம்.... அதுபோல்தான் இணையத்திலும். விஷயமே புரியாமல் இளையராஜா புகழ் பாடுபவர்கள்தாம் இங்கே அதிகம்.ஆனாலும் இந்த இடத்தில் நின்றுகொண்டு முன்னோர்கள் பற்றிப்பேசுவதுதான் உற்சாகமாக இருக்கிறது. அதைத்தான் செய்யப்போகிறேன்.
தங்களுக்கு என் பாராட்டுக்கள். நன்றி.

காரிகன் said...

வவ்வால்,

ரொம்ப லேட்டா வர்றேன். அதனால என்ன? மேட்டர் தானே முக்கியம்?

இந்த அளவுக்கு எம் எஸ் வி மேலே பரிவு காட்டுவீங்கன்னு நெனக்கல. உங்களோட பழைய பதிவுகள படிக்க ஆரம்பிச்சிருக்கேன். அப்பப்ப இதுபோல காமெண்ட்ஸ் வந்தா அதிர்ச்சி அடைய வேண்டாம்.