Friday, July 06, 2007

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.

நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு "பாட்ஷா"னு ரஜினி சொல்வது போல!)

புகழ்பெற்ற பெயர் - இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் - ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் - காப்பவர் , கிரைஸ்ட் - தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் - ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் - நஸ்ஸிருதின்

அக்பர் - ஜலாலுதின்

ஜெஹான்கிர் - நூருதின்

ஷா ஜெஹான் - குர்ரம்

அவ்ரங்கசெப் - ஆலம் கிர்

நூர்ஜஹான் - மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் - பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் - மணிக்கர்னிகா

பூலித்தேவன் - காத்தப்ப துரை

மருது பாண்டி - மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் - கருத்தப்பாண்டி

ஊமைத்துரை - சிவத்தையா

தீரன் சின்னமலை - தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் - குமரேசன்

பாரதியார் - சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் - கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் - வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் - சூரிய நாரயண சாஸ்திரிகள்

திரு.வி.க - திருவாரூர் .விருத்தாசலம்.கல்யாண சுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி - தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் - ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் - மருதூர், ஜி - கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா - கோமள வல்லி

ரஜினி காந்த் - அனைவருக்கும் தெரியும் "சிவாஜி ராவ் கெயிக்வாட்" என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்று செல்லமாக அழைக்கப்பட்டர்!

இப்படி அதிகம் வெளியில் தெரியாத பெயரைக்கேட்டாலே ச்சும்மா அதிருதுல.. ..

11 comments:

மாயன் said...

நல்லப் பதிவு

Unknown said...

Good one vovval

குமரன் (Kumaran) said...

ஜொசுவா என்பது வேண்டுமானால் ஏசுநாதரின் இயற்பெயராக இருக்கலாம் வவ்வால். அந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் சரியாக நினைவில்லை. ஆனால் ஜெஹோவா என்பது ஏசுநாதரின் பெயர் இல்லை. யூதர்களின் கடவுளுக்கு ஜெஹோவா என்று பெயர். பரலோகத்தில் இருக்கும் பரமபிதா என்று கிறிஸ்தவர்கள் வணங்குவதும் அவரைத் தான் என்று நினைக்கிறேன்.

PPattian said...

அப்போ இனி குர்ரம் பானு பேகம்'த்திற்காக தாஜ் மஹாலை கட்டினார்'னு படிக்க வேண்டியதுதான்.. :))))

வவ்வால் said...

நன்றி மாயன் , செல்வன் ,

----------------------------

குமரன் ,

ஜெகோவா என்பதை தான் ஜோஷ்வா என்று சொல்கிறார்கள். ஹீப்ருவில் "ஷ்" ஒலி கிடையாது , அதே போல "ஸ்" ஒலியும், எனவே ஜெஹோவா என்றார்கள்.ஜெகோவா என்பது யூத கடவுளின் பெயர் தான் , (ஜீசஸ் கிரைஸ்ட் என்ற பெயர் பின்னாளில் சூட்டப்பட்ட ஒன்று),ஜீசஸ் பிறப்பால் ஒரு யூதர் எனவே அவர் பெற்றோர் அப்பெயரை வைத்து இருக்க கூடும். எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த ஏசுனாதர் வரலாற்று படத்திற்கு ஜெஹோவா என்று தான் பெயர் வைத்தார்கள் ஆனால் படம் துவங்கப்படாமலே நின்று விட்டது.ஈ.வெ.ராமசாமி என்ற பெயர் பெரியாருக்கு வைத்தது போல , ஆனால் பெரியார் கடவுள் மறுப்பு இயக்கதை தொடங்கவில்லையா , அதே போல யூத மதத்தின் மூட நம்பிக்கைகளை சாடியவரே ஜீசஸ்.
----------------------------------
பட்டியன் (அதானே உங்கள் பெயர்?)

வருகைக்கு நன்றி, ஆமாம் அப்படியும் கூப்பிடலாம் , மும்தாஜ் ,ஷாஜெகான் குறித்து ஒரு கூடுதல் தகவல்.

ஷா ஜெஹான் என்றால் உலகின் அரசன் என்று பொருள். மும்தாஜ் என்றால் அரண்மனையின் ஒளி எனப்பொருள்.

இதில் சுவாரசியம் அல்லது முரண்பாடு என்னவென்றால், நூர்ஜெஹான் , ஜெஹான்கீரின் மனைவி , ஆனால் அவருக்கு முதல் கணவன் அல்ல ஜெஹான்கீர், முதல் கணவன் பெயர் ஷேர் கான் என்ற பதான் , அவர் மூலம் பிறந்த மகளை தான் (மும்தாஜ் நூர்ஜெஹானின் அண்ணன் மகள்) தனது இரண்டாவது கணவன் ஜெஹான்கீரின் மற்றொரு மகன் ஷரியார் கான் என்பவருக்கு மணம் முடித்து வைப்பார் நூர்ஜெஹான் , காரணம் அரசப்பதவி மற்றும் அதிகாரம் தான் (உறவு முறையில் தனது மகளுக்கும் மகனுக்கும் மணம் முடிப்பது போன்றது இது). ஆனால் அரியணைப்போரில் ஷாஜெஹான் வென்று அரசன் ஆகிவிடுவார்.

Anonymous said...

Lots of good info. I did not know lots of their REAL names.

Radha

வவ்வால் said...

வருகைக்கு நன்றி ராதா,

இது தான் முதல் வருகை என நினைக்கிறேன் அடிக்கடி வரவும்!

இன்னும் கொஞ்சம் ரீல் அன்ட் ரியல் நேம் இருக்கு அவற்றையும் பிறகு போடுகிறேன்!

சிவபாலன் said...

Nice Post!

Very Interesting!

வவ்வால் said...

வாங்க சிவபாலன் ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Prabhu said...

Sir,
Aurangazeb's real name is Abul Muzaffar, Aalam gir is his throne name.

-Prabhu

தமிழ் மொழி said...

அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/05/blog-post_17.html?m=0