தமிழில் கலந்துள்ள பிற மொழிக்கலப்பினை அடையாளம் கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களின் அடுத்த தொகுப்பு.
இதில் பிழையோ அல்லது இன்னும் பல சொற்களோ தங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம், மேம்படுத்தப்படும். நன்றி!
பரவாயில்லை.
இச்சொல் பர்வா நஹி என்ற வட மொழி சொல்லில் இருந்து உருவானது.
பர்வா = கேர் (care), நஹி (nahi)=இல்லை,
பர்வா நஹி என்றால் ஐ டோண்ட் கேர்(i don't care) அல்லது நோ பிராப்ளம் (no problem, no mention)என சொல்வதாகும்.
அதனை அப்படியே தமிழ்ப்படுத்தி பரவாயில்லை என்றாக்கிவிட்டார்கள்.(தெலுங்கில் பர்வாலேது)
பரவாயில்லைக்கு இணைச்சொல் ,
கவலையில்லை,
பொருட்படுத்தவில்லை .
என சொல்லலாம்.
புத்தி.
புத்தி ( buddhi)என்பதும் வடமொழி இதற்கு ஞானம் என வடமொழியில் பொருள்,
buddhi-> buddha->buddhar ->.buddham
புத்தியுடையவர் புத்தர், அதாவது ஞானம் பெற்றவர், ஞானத்தினை உள்ளடக்கமாககொண்ட ஒன்று புத்தகம்.
புத்தியினை புகட்டும் செயல் போதித்தல் இதன் பெயர்ச்சொல் போதை , அதாவது ஞானம். போதி தருமர் , ஏழாம் அறிவெல்லாம் நினைவுக்கு வருமே.
புத்திக்கு இணையான தமிழ்ச்சொல் அறிவு,
ஞானம் என்பது அறிவு என்றாலும் அதில் உச்ச நிலை ஆகும் எனவே அதனை அறிவொளி எனலாம்.
எனவே
#புத்தி (knowledge)- அறிவு
#ஞானம் (wisdom)- அறிவொளி.
* முன்னர் தமிழக துவக்கப்பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்திற்கு அறிவொளி இயக்கம் என்றே பெயரிடப்பட்டிருந்தது, பின்னர் மத்திய அரசின் நிதியுடன் "சர்வ சிக்ஷா அபியான்" என மாற்றம் பெற்றது.
*அறிவொளி என்ற பெயரில் புகழ்மிக்க பட்டிமன்ற நடுவர் ஒருவரும் உள்ளார்.
#போதித்தல்(educate)- கற்பித்தல்
#புத்தகம்(book)- நூல்
---------------
ஐஸ் கிரீம்(ice cream):
ஐஸ்கிரீம் என்பது பால்,சர்க்கரை , மற்றும் சுவையூட்டி இவற்றினை காற்று ,நீர் கலந்த கூழ்ம (colloidal emulsion)வடிவில் உறைவித்து தயாரிப்பது ஆகும். எனவே இதனை ,
உறைகூழ் அல்லது
பனிக்கூழ் அல்லது
குளிர் கூழ் எனலாம்
முதன் முதலில் பனிக்கூழினை உண்ணக்கூடிய கூம்பு வடிவ ரொட்டியில் (cone icecream) வைத்து கொடுத்தது Charles Menches / Arnold Fomachou ஆவார்கள் ,அமெரிக்காவில் கி.பி 1904 இல் World's Fair in St. Louis. இது நிகழ்வுற்றது.
-------------
#சம்பவம் வடமொழி.
நிகழ்வு தமிழ்.
# மனிதன் வடமொழி ,
மனுஷ் , மனுஷன்,- மனிதன்
எனவே சரியான தமிழ் சொல்
மாந்தர்,மாந்தன்.
எடுத்துக்காட்டு:
தொட்டனைத் தூறு மணற்கேணி "மாந்தர்க்கு "
கற்றனைத் தூறும் அறிவு
# நபர் -அரபி,
தமிழ்ச்சொல் - ஆள், அல்லது ஒரு நபர்=ஒருவர்/ஒருவன், சில நபர்= சிலர்
#personality- ஆளுமை.
# பிரபலம் வடமொழி,
இணையான தமிழ்ச்சொல்.
புகழ்ப்பெற்றவர், புகழாளர்,
பிரபல பதிவர் என சொல்லாமல் புகழ்ப்பெற்ற பதிவர் எனலாம் :-))
#சந்தேகம் வடமொழி,
அய்யம் ,அய்யுறுவு என்பதே தமிழ்.
#சந்தோஷம் வடமொழி ,
இணையான தமிழ்ச்சொற்கள்:
மகிழ்ச்சி , குதூகலம்*,களிப்பு, உவகை, பெரு மகிழ்ச்சி எனில் பேருவுவகை எனலாம்,
*களிப்பு என்பதில் இருந்து குதூகளம் என வந்திருக்கலாம் என நினைக்கிறேன், சார்வாகன் கூறியப்படி குதூகலம் என மாற்றியுள்ளேன், சரியான சொல்லினை மீண்டும் சரிப்பார்க்க வேண்டும்.
# சந்திரன் வடமொழி,
நிலா, திங்கள், மதி என்பன தமிழ்.
# சூரியன் வடமொழி,
கதிரவன், பகலவன், ஆகியன தமிழ்.
# அம்மாவாசை ,வட மொழி , அமாவாஸ்ய என்பதில் இருந்து மருவிய சொல்,
நேரடியாக மொழிப்பெயர்த்தால் முதல் வளர் நிலவு நாள் என வரும், இதனை "இருட்மதி நாள்"(நிலவற்ற நாள்) என சொல்லலாம் என நினைக்கிறேன்.
*மதியிலி நாள், ஆக்கம் சார்வாகன்.(மதியிலி நாள் என்றால் முட்டாள் தினம்-ஏப்ரல்-1 என நினைத்துவிட்டால் என்ன செய்வது?)
மேலும் புதுப்பிறை நாள் எனவும் அழைக்கலாம் என நினைக்கிறேன்.
சரியான சொல்லினை தெரிந்தவர்கள் கூறலாம்.
---------------
வலைப்பதிவர் சொல்லகராதி:
பெரும்பாலோருக்கு வலைப்பதிவில் பயன்ப்படுத்தும் வலைப்பதிவு சார்ந்த இணையான தமிழ் சொற்கள் தெரிந்திருக்கும் ஆனாலும் மீண்டும் நினைவுறுத்த எனக்கு தெரிந்த சில சொற்களை தொகுத்துள்ளேன்.
Blog - வலைப்பூ, வலைப்பதிவு
web address-உரல்
link-சுட்டி, தொடுப்பு
comment- மறுமொழி,பின்னூட்டம்,
comment moderation-மறுமொழி மட்டுறுத்தல்
followers-பின் தொடர்பவர்கள்
follow up- பின் தொடர
up load- தரவேற்றம்.
down load-தரவிறக்கம்.
search engine-தேடு பொறி.
mouse-எலிக்குட்டி ,சுட்டுவான்.
keyboard-தட்டச்சுப்பலகை.
hard disk-வன் தட்டு/வட்டு, இறுவட்டு.
dvd-குறுவட்டு.
computer monitor- காட்சி திரை,கணினி திரை.
central processing unit(cpu)- நடுவண் செயல் அலகு,நடுவண் இயங்கலகு,செயலி.
தொடரும்...
----------------
பின்குறிப்பு:
தகவல் மற்றும் படங்கள் உதவி,
கூகிள், தமிழ் விக்ஷனரி, தமிழ் இணைய பல்கலை, அகர முதலி தளங்கள்,நன்றி!
-------------
57 comments:
வணக்கம் சகோ,
முன்கதைச் சுருக்கம்
தன் முயற்சியில் சற்றும் மனம் தளரா வவ்வாலாதித்தர் மீண்டும் தமிழில் சரியான சொற்களை கொண்டுவர முயற்சித்து பதிவு போட , பலப்பல வேதாளங்கள் சரமாரியாக கேள்விக் கணை தொடுக்க ஆதித்தனார் பதில் சொல்வாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்
*****
பரவாயில்லை=பொருள் படுத்தவில்லை, கவலை இல்லை என்பது சரி என்றாலும் பேச்சு தமிழில் இயல்பாக அதனால் என்ன? அது ஒன்னும் பெரிது அல்ல என சொல்வது உண்டு
**
புத்தி= அறிவு சரி ..இன்னொரு சொல் மதி
#ஞானம் (wisdom)- அறிவொளி.இதை விட கூர்மதி
**
//*அறிவொளி என்ற பெயரில் புகழ்மிக்க பட்டிமன்ற நடுவர் ஒருவரும் உள்ளார்.//
பல் வகை உண்மைகளையும்,பொய்களையும் விளக்கிய அய்யாதானே!
நமக்கு மிகவும் பிடித்தவர்!!
***
குதுகளம் அல்ல குதூகலம்
****
மாதம்= திங்கள்
பௌர்ணமி=முழுமதி நாள்
அம்மாவாசை=மதியிலி நாள்[ ஹி ஹி நம் முயற்சி!!!]
மற்றபடி அனைத்தும் அருமை.
தொடரட்டும் தமிழ்ப்பணி!!
நன்றி!!!
உங்கள் அக்கறை வியக்கவைத்தது. நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.
சகோ.சார்வாகன்,
வாங்க,வணக்கம்,நன்றி!
ஹி...ஹி நாமே பெரிய வேதாளம் நம்மக்கிட்டே வந்தா வேட்டையாடிட மாட்டோம் :-))
பரவாயில்லைக்க்ய் பேச்சுத்தமிழில் ஒன்னுமில்லை, பெரிசா ஒன்னுமில்லை, பெரிதுப்படுத்தாதிங்க எல்லாம் முயற்சித்துப்பார்த்துவிட்டு தான் கொஞ்சம் எழுத்திலும் பயன்ப்படுத்துவது போல இருக்கட்டும் என இவற்றை சொன்னேன்.
# மதியினை நிலாவுக்கு சொல்லியாச்சே என தவிர்த்தேன், மேலும் என்லைட்மெண்ட் என்பதனை கருத்தில் கொண்டே அறிவொளி என்பதனை எடுத்துக்கொண்டேன்.
கூர்மதி என்பது கிட்டத்தட்ட சரியாக இருக்கலாம்.
அறிவு என்பது கற்றலினால் வருவது ஞானம் என்பது உள்ளுணர் அறிவால் வருவது என நினைத்தே கொஞ்சம் "டிவைன்" ஆக இருக்கட்டும் என அறிவொளி எனப்பயன்ப்படுதியுள்ளேன்.
குதுகளத்திற்கு , "தூ" அல்லது "து' ஆ என அய்யம் வந்தது, இப்போ "ல" போட்டு கலம் என்கிறீர்கள்.
"கலம்" என்றால் பாத்திரம் ஆகிடும்னு நினைச்சேன். மாற்றிவிடுகிறேன்.
நான் முன்னர் படித்ததை வைத்தே சிலவற்ரை எழுதியுள்ளேன், இப்போது எல்லாவற்றுக்கும் தேடி சரிப்பார்க்கவில்லை.
எக்காலமிடல்னு கூட படித்த நினைவு. யாராவது சுட்டிக்காட்டினா சேர்க்கலாம் என இருந்தேன்.
# திங்கள் என்பதற்கு மாதம் என்பதும் ஒரு பொருள், நிலவு எனவும் உண்டு,
சோமவார் என வட மொழியில் சொல்வதற்கு இணையாக தான் "திங்கள்' கிழமை என்கிறோம்.
அம்மாவாசைக்கு உங்கள் சொல்லையும் பயன்ப்படுத்தலாம், என நினைக்கிறேன்.
சமஸ்கிருத அகராதியில் அமாவாஸ்யா என்றால் புதிதாக பிறந்து வளர்தல் என பொருள் கொடுத்து இருக்காங்க.
ஏதோ நம்மால் ஆனது.தமிழை நாம் வளர்க்கவில்லை என்றாலும் அழிக்காமல் இருந்தாலே போதும்.
நன்றி!
ஜோதிஜி,
வாங்க,நன்றி!
பதிவுகளில் அவ்வப்போது தமிழாக்கமும் செய்து வந்தாலும் மக்களின் நினைவில் நிற்பதில்லை எனவே இப்படி ஒரு முயற்சி, எனக்கும் சரியாக தெரியாது, புதிதாக கற்பதை பகிர்கிறேன்.அவ்வளவே.
-------
சகோ.சார்வாகன்,
குதூகளம் என வரும் என்றே நினைக்கிறேன்,
ஏன் எனில் மகிழ்ச்சியை களிப்பு எனவும் சொல்வதுண்டு , அதில் இருந்து எக்களிப்பு எனவும் குதூகலம் எனவும் வந்திருக்கலாம் என நினைக்கிறேன் , ஆனலும் நீங்கள் சொன்னபடி மாற்றியுள்ளேன் , வேறு யாரேனும் திருத்தம் சொன்னால் பார்ப்போம்.
மேலும் மகிழ்ச்சிக்கு உவகை, பெரு மகிழ்ச்சி எனில் பேருவகை என்றும் உள்ளது.
//குதூகளம் என வரும் என்றே நினைக்கிறேன், //
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
குதூகலம், பெயர்ச்சொல்.
மகிழ்ச்சி, களிப்பு
மொழிபெயர்ப்புகள்
delight, joy ஆங்கிலம்
**********
University of Madras.
Tamil Lexicon
http://goo.gl/SiHbw
ஹி ஹி ஹி
4. குதூகலம் kutūkalam : (page s231)
மகிழ்ச்சி மிகுதியால் பூரித்தல். இளங்கொங்கை குதுகுலிப்பு (திவ். பெரியாழ். 3, 6, 2).
என்னாது,... சூரியன் வடமொழியா??
வணக்கம் வவ்வால்,
தமிழ் வளர்க்கும் தருமியே நின் புகழ் வாழ்க!
நின் தொண்டு வளர்க!
அருமை நண்பரே மற்றும் சூரியன் என்பதற்கு ஆதவன் என்றும் பொருள் ஆனால் தமிழ் சொல்லா என தெரியவில்லை விளக்கம்.
இனியவன்..
வணக்கம் வவ்வால்,
தமிழ் வளர்க்கும் தருமியே நின் புகழ் வாழ்க!
நின் தொண்டு வளர்க!
அருமை நண்பரே மற்றும் சூரியன் என்பதற்கு ஆதவன் என்றும் பொருள் ஆனால் தமிழ் சொல்லா என தெரியவில்லை விளக்கம்.
இனியவன்..
மனசாட்சி,
வாங்க,நன்றி!
சூர்யா என்பதில் இருந்து சூரியன்.
வட மொழியில் விகுதி எச்சமாக இருக்கும் நாம ன், ம் போட்டு முடிச்சு தமிழாக்கிடுவோம்.
கிருஷ்ணா - கிருஷ்ணன் போல.
மனசாட்சியும் தமிழ் இல்லை :-))
மன் - மனசு,
சாக்ஷி - சாட்சி
மனசாட்சி என்பதை தமிழில் உள்ளசான்று/உரைஞர் என சொல்லணும் அல்லது சிந்தைசான்று,
---------
இனியவன் ,
வாங்க, நன்றி!
ஆகா என்னை ரொம்ப புகழுறிங்களே, முன்னர் பதிவுகளில் பெரிய தமிழ் புலவர்கள் எல்லாம் இருந்தாங்க,நல்ல ஆய்வுடன் சொல்வார்கள்,இப்போ யாரும் இல்லை சரின்னு நான் கொஞ்சம் மொக்கை போடுகிறேன்.
சூரியனுக்கு மொத்தம் 64 பேரு வட மொழியில் இருக்கு ,
ஆதித்யா, தினகரன்,திவார்கரன்,பாஸ்கரன், போல, ஆதவன் கூட வட மொழியாக இருக்கலாம்.
சரிப்பார்க்கணும்.
சூரியன் மட்டுமல்ல... உதயம் என்ற சொல் கூட வடமொழி சொல் தான்..
வார்த்தை என்ற சொல்லே வடமொழி சொல் தான்.. சொல் என்பது தான் சரி....
நிறைய இருக்கிறது...
தனித் தமிழ் எல்லாம் சரி தான்.. மற்ற மொழி சொற்களை உள்ளடக்கியதால் தான் ஆங்கிலம் இவ்வளவு தூரம் வளர்ந்து உலக மொழியாக கோலோச்சுகிறது...
சிறு மதங்களை தன்னகத்தே கொண்டு வளர்ந்து நிற்கும் இந்து மதம் போல.... ஒத்திசையும் பிற மொழி சொற்களை சிறிது காலம் பயன்படுத்தி தான் ஆக வேண்டியிருக்கும்... மெதுவாக தமிழ் சொற்களை மக்களின் வாழ்க்கையில் கலக்க வேண்டும்.. இந்த பணிக்கு இன்றியமையாதவை ஊடகங்கள் தான்... இது ஒரு பெரிய முயற்சி... முயல்வோம்...
வவ்வால்ஜி ஐஸ்க்ரீம்க்கு எங்கள் தலைவர் கவுண்டமணி வைத்த பெயரை பரீசிலிக்க வில்லையா .....? குளுகுளு கூழ் ...
மாயன்,
வாங்க,நன்றி!
உதயம்,வார்த்தை என நிறைய இருக்கு நான் பெரும்பாலும் சொல் என்றே பயன்ப்படுத்துவது, அவ்வப்போது கலந்தும் எழுதுவேன்,
நான் சொல்லவருவது கலந்து எழுதக்கூடாது என்றில்லை, ஆனால் தமிழில் தேவையான சொற்கள் உண்டு என அறிந்துக்கொண்டு வசதிக்கு எழுதினால் நல்லது என நினைக்கிறேன், அறியாமையில் பயன்ப்படுத்துவது வேறு அறிந்துக்கொண்டு தேவையைக்கருதி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்.
அனைவரும் முயற்சித்தால் முடியும், ஊடகங்களுக்கு இதெல்லாம் கவலையில்லை, அவர்களுக்கு பரபரப்பான செய்திகளே தேவை.
சிலர் ஆரம்பித்தால் பின்னால் தானே மக்களும் வருவார்கள்.
---------
அஞ்சா ஸிங்கமே ,,
வாரும், நன்றி!
ஒரு புகழாளரே வந்து தமிழுக்கு தொண்டாற்றுகிறாரே ...இனிமேல் தமிழ் பிழைத்துக்கொள்ளும்!!!
ஆமாம்ப்பா கவுண்டர் தூம் ததான்னு சொல்லிக்கிட்டே லக்கிமேனில் ஐஸ்கிரீமுக்கு ஒருப்பேரு சொல்வாரேனு மண்டையை பிறாண்டிப்பார்த்தேன் ,நினைவே வரவில்லை.
குளு குளு கூழுக்கு பதிலா குளிர் கூழ் போட்டாச்சுல்ல.
கவுண்டரும் கூழுனு தான் சொல்லிக்கீறார்...தமிழறிஞரா இருப்பாரோ?
வவ்வால்,
பௌர்ணமி - முழுமதி
அமாவாசை - மறைமதி
// சூரியன் வடமொழி,
கதிரவன், பகலவன், ஆகியன தமிழ்.//
ஞாயிறு
//#புத்தி (knowledge)- அறிவு
#ஞானம் (wisdom)- அறிவொளி.//
வடமொழியில்
புத்தி intelligence
ஞான் knowledge
விஞான் wisdom
என நினைக்கிறேன்.
ஞான் என்பதை அறிவு (அறிவது) எனலாம்.
புத்தியை அறிவுத்திறன் அல்லது அறிவுக்கூர்மை எனலாம்.
விஞான் என்பதை மெய்யறிவு எனலாம்.
(தவறிருந்தால் தயவு செய்து சுட்டவும்).
சிந்தித்தல், யோசித்தல் (இரண்டும் வடமொழி) தவிர்த்து think என்ற சொல்லுக்கு தமிழில் என்ன?
குட்டிப்பிசாசு,
வாங்க,நன்றி!
குழப்பக்கூடிய, மற்றும் தமிழ் போல தெரியும் வட மொழிச்சொற்களையே முதலில் சொல்ல வேண்டும் என பவுர்ணமியை விட்டுவிட்டேன்,
முழுமதி, மற்றும் அம்மாவாசைக்கு மறைமதி பயன்ப்படுத்திக்கலாம் என்றே நினைக்கிறேன்.
மறை என்பதற்கு வேதம் என்றும் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
வேதாசலம்=மறைமலை அடிகள்.
கதிரவனுக்கு இன்னும் நிறைய தமிழ்ப்பெயர்கள் இருக்கு, எனக்கு நினைவில்லை, ஞாயிறு நல்ல எளிய சொல், இப்படி மக்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் சொல்லாக எல்லாம் எடுத்து வரிசைப்படுத்திவிடலாம்.
ஞானம் என்பதற்கு அறிவு என்றாலும் நாம் பயன்ப்பாட்டில் அதனை உயர்வான இடத்தில் வைக்கிறோம்,நன்றாக படிக்கும் மாணவனை புத்திசாலி என்கிறோம் ஆனால் ஞானி என்பதில்லை.
ஞானி என்றால் கற்றலின் மூலம் மட்டும் இல்லாமல் உள்ளிருந்து தன்னிச்சையாக ஒரு அறிவு வெளிப்படுத்அல் என்பதாக கருதுவதால் "ஞானத்தினை" விஸ்டம் என்பதற்கு ஒப்பிட்டேன்.
இன்டெலிஜென்ஸ் கூட அப்படித்தான் ...ஞானம் ,புத்தி என சொல்ல முடியாது, நுண்ணறிவு என மொழியாக்கம் செய்து ஏற்கனவே பயன்ப்பாட்டில் உள்ளது.
காவல் துறையில் உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவை நுண்ணறிவுப்பிரிவு என சொல்கிறார்கள்.
விஸ்டம் ->என்லைட்மெண்ட்- ஞானம்- அறிவொளி எனலாம்
புத்தி - அறிவு ,
புத்தர் என்ற பெயரே புத்தியில் இருந்து என சொல்லிவிட்டு ஆனால் அது ஞானம் என சொல்லக்காரணம் இப்போது உள்ள பயன்ப்பாட்டின் அடிப்படையிலே.
"வி" என்றால் உயர்வான என பொருள், விஞ்ஞானம் என்றால் உயர்வான அறிவு எனாலாம்,
சயீண்டிஸ்ட்- விஞ்ஞானி - அறிவியலாளர் என பயன்ப்பாட்டில் இருப்பதால் அப்படியே பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிந்தனை , யோசித்தல் வட மொழி , ஆனால் எளிதாக நினைவு, நினைத்தல் என சொல்லலாம் தமிழில்.
I think therfore i am-நான் நினைக்கிறேன் எனவே நான்
i feel - நான் உணர்கிறேன் ...
நினைவு,உணர்தல் எல்லாம் தமிழ் என்றே நினைக்கிறேன் :-))
இது போல மேலும் சுட்டிக்காட்டினால் தான் சரியான ஒன்றை அடையாளங்காண முடியும், எனவே சொல்ல தயங்க வேண்டாம், நான் மட்டும் என்ன தமிழ் அறிஞன என்ன.
ஆங்காங்கே பிறாய்ந்து தேற்றுவது தானே :-))
புலம்= அறிவு
புலம்- புலமை- புலவர்
புலவர் என்றால் அறிஞர் ,
எனவே இன்டெலிஜென்ஸ் - நுண்ணறிவு- நுண்புலம் என சொல்லலாம்.
நல்லதொரு முயற்சி! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
அன்னையின் ஆசி! பாப்பாமலர்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_8.html
சோலார் ரிக்ஷா! கடலில் அடங்கும் ஆம்ஸ்ட்ராங்க! கூகுள் டூடுள்! கதம்பமாலை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_1615.html
@வவ்வால்
குறள் : இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்
பொருள் : வருண்
உபகாரி,
அன்னாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
என்ன கடை வெள்ளையடிச்சு அன்னப்பறவை மாதிரியே இருக்குது!அன்னத்துக்குப் போட்டியா குளிர் கூல் வேற.
நாங்க தலைப்பு வைத்தால் மட்டும் கிழவி.இவங்க படமே போட்டாலும் குமரிதான்:)
பர்வா நஹியை விட முஸ்கில் நஹி என்பதே நடைமுறை பேச்சு வழக்கில் இருக்கிறது.
சரக்குதான் கைவசம் இருக்குதே!அப்புறம் ஏன் (நான் தமிழில் சம்ஸ்கிருதம் மாதிரி) ஆங்கிலத்தை அப்படியே சாப்பிடுவேனாக்கும்ன்னு எழுதி வாங்கி கட்டிகிட்டீங்க:)
ஒருத்தர் இதில் குறள் உபகாரம் வேற:)
ராச நடராசரே,
வாரும்,நன்றி!
உம்மை எல்லாம் என்ன செய்றது,ஆரம்பத்தில நான் இதே வெண்ணிற ஆடையில் பதிவை வைத்திருந்தேன், வாய்க்கா சரியில்லை, வரப்பு சரியில்லைனு மாத்த சொன்னீர், அப்படியே வரவங்க எல்லாம் மாத்து ,மாத்துன்னு சொல்லி உலகம் உருண்டைனு பழைய சட்டையே துவைச்சு புது சட்டைனு மாட்டிட்டேன், அடுத்து யாரு வந்து என்ன சொல்லப்போறாங்களோ?
நாம போட்டு இருப்பது கொஞ்சும் வாளைக்குமரி :-))
காண்டெக்ஸ்டில் பேசறதுன்னா இன்னும் பிடிபடவில்லை போல, தமிழில் பரவாயில்லை என்பதன் மூலம் வடமொழின்னு சொல்லவே பர்வா நஹி சொன்னா ,முஸ்கில் நஹி ,குச் நஹின்னு சொல்லிக்கிட்டு , இது தமிழ் பற்றிய பதிவு!
நீங்க வேற சரக்கு இருக்கேன்னு சொல்லிக்கிட்டு, தமிழ் பற்றி பதிவு போட்டால் " வேஸ்ட் ,தமிழ் தெரியும்னு காட்ட ஒரு பதிவு" என்கிறார்கள், நாம எதாவது சொன்னால் என்ன அவமதிப்பு செஞ்சீட்டிங்கன்னு பொலம்புறாங்க, ஆனால் அவங்க செஞ்ச அவமதிப்பு என்னனே தெரியாமல்.
இதுல ஆங்கிலத்தை பயன்ப்படுத்த மாட்டேன்னு சொன்னா ஓடி வந்து கும்மிட மாட்டாங்க, மேலும் நாம கலந்து எழுதுவது பேச்சு நடைக்கு தான் ஆனால் தமிழ் தெரியாமல் அல்லனு என்னிக்கு புரிஞ்சுக்க போறாங்க :-))
என்னமோ வாங்கிக்கட்டிக்கிட்டேன்னு சொல்றிங்க, ஒரு லுங்கி கூட கிடைக்கவில்லை கட்டிக்க :-))
உங்களுக்கு எல்லாம் அமெரிக்க பங்காளிகள் போன்றவர்கள் தான் சரிப்பட்டு வரும் :-))
வவ்வால்,
உண்மையில் நீங்கள் கூர்மதிக்காரர்தான்.
வலைபதிவுகள்தான் தமிழை வளர்க்க அடுத்த கட்டதிற்கு எடுத்த செல்ல உதவும் என நினைக்கிறேன்.
nhm எழுதிதான் தமிழுக்கு, தமிழ் அரசியல்வாதிகளை விட மாபெரும் புரட்சி செய்தது என நினைக்கிறேன்.
பிராப்ல பதிவர்கள், இந்த தமிழ் சொற்களை பயன்படுத்தினால், மற்ற பதிவர்கள் அவர்களை சுட்டு ஒட்டி எழுதுவார்கள். நல்ல சொற்கள் பயன்பாட்டிற்கு வரும்
நன்றி.
நரேன் ,
வாரும்,.நன்றி!
என்ன இப்படி சொல்லிட்டீர், தமிழ் ஒரு கவிதை மொழி , இதெல்லாம் வலைப்பதிவில் எழுதுவது சுய விளம்பரம் :-))
ஏதோ எனது சுயவிளம்பரத்திற்காக தமிழ் என சொல்லி ஜல்லி அடிக்கிறேன் , அதைப்போய் வலைப்பதிவுகள் மூலம் தமிழ் வளர்க்கலாம் என நம்பிக்கிட்டு :-))
நம்ம மக்கள் மகா ரோஷமான்கள் அவர்கள் என்ன வேண்டுமானலும் சொல்வார்கள் நாம் திருப்பி சொல்லிவிட்டால் அவமரியாதை என சொல்வார்கள், மரியாதை என்பது கொடுத்து பெறுவது என்பதை அறியாத அறிவு சீவிகள் :-))
எ.கலப்பை தான் எனக்கு தெரிந்து முதல்எளிய தமிழ் செயலி,இன்றும் பெருமளவில் பயன்ப்படுகிறது, என்.எஹெம் உம் இப்போது பெருமளவில் பாவிக்கப்படுகிறது.
இணையத்தில் தமிழ் வளர சில பல தன்னார்வளர்களின் லாப நோக்கற்ற உழைப்பே காரணம் ,அவர்கள் இல்லாமல் தமிழ் பதிவுகள் இவ்வளவு முன்னேறி இருக்காது.அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
பதிவர்கள் முன்னெல்லாம் தமிழில் சில சொற்களை புழங்க என முயற்சிப்பார்கள், அதற்கு மற்றவர்களும் ஒத்துழைப்பார்கள், இப்பொழுதோ தமிழ்ப்படுத்த வேண்டாம்,அது தீவிரவாதம் என்பதான கருத்தாக்கம் வளர ஆரம்பித்துவிட்டது.
பின்னூட்டம், உரல் ,சுட்டி, தொடுப்பு என அறிமுகப்படுத்தி அதனை பரவலாக்கியப்பதிவர்களும் அப்போதெல்லாம் இருந்தார்கள், ஒருவர் ஒரு தூய தமிழ் சொல் சொன்னால் போட்டிப்போட்டுக்கொண்டு இன்னொரு தூய சொல்லில் பதில் சொல்ல ஆர்வம் காட்டுவார்கள்,மீண்டும் அத்தகைய நிலை பதிவுலகில் வரவேண்டும்.
நீங்களும் பின்னூட்டு இடும் இடத்தில் எல்லாம் நான்கு தமிழ் சொல்லை தூவி வரவும்!!!
காட்டு தீயென எட்டு திக்கும் பரவட்டும் தமிழ் :-))
(சிரிப்பான் போடவில்லை எனில் என்னைப்பார்த்து நீர் சிரித்தாலும் சிரிப்பீர்)
வவ்வால்,
////இணையத்தில் தமிழ் வளர சில பல தன்னார்வளர்களின் லாப நோக்கற்ற உழைப்பே காரணம் ,அவர்கள் இல்லாமல் தமிழ் பதிவுகள் இவ்வளவு முன்னேறி இருக்காது.அவர்களுக்கு நன்றி சொல்வோம்.////
உண்மையில் அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
மற்ற துறைகளில், தமிழ் முன்னேற தன்னார்வளர்கள் காரணமாக இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள் என நினைக்கிறேன். அரசாங்கம், மற்றும் கழகங்கள் ஒன்று செய்ததாக தோன்றவில்லை.
தமிழ், தமிழ் என்று பெரும் போராட்டங்கள்- தீக்குளிப்பு, போலீஸ் அடி உதை உட்பட- மூலம் ஆட்சி பிடித்து, அக்மார்க் தமிழ் ஐந்து முறை ஆட்சியில் அமர்ந்தும், பட்டபடிப்பையும் பட்டமேற்படிப்பையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலை - மருத்துவம் பொறியியல் படிப்பு உட்பட.
கவிதை பாடுவதையும், மேடையில் பேசுவதையும், முரசொலியில் எழுதுவது மட்டும்தான் தமிழ் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.
திறமையுள்ள, தமிழக சரித்திரம் இதுவரை கண்டிராத தலைவர் என்றால், பத்து வருடங்களில், அனைத்து துறைகளில் தமிழை வளர்த்திருக்கலாம்.
நானாவது தமிழை நன்றாக எழுத முடிந்திருக்கலாம் :))))
தமிழை மற்ற துறைகளில் வளர்க்காத வக்கற்ற திறமையில்லாத தலைவர்கள்.
நன்றி.
நரேன்,
வாரும்,நன்றி!
இணையத்தில் தமிழ் மற்றும் தமிழ் கணிமை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு தன்னார்வளர்களின் பங்கே பெருமளவுக்கு காரணம் அரசு , அலுவலங்களின் மீது தமிழ் வாழ்க என நியான் லைட் வைப்பதோடு சரி :-))
இப்போது தமிழ் எழுத்துருக்களின் பயன்ப்பாட்டில் இருக்கும் சிக்கலை தீர்க்க ஒரு வழி முறையினை பரிந்துரைத்தும் அரசு அதனை அங்கீகரிக்காமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது என்றால் அரசின் தமிழ் ஆர்வம் என்ன என்பது புரிந்திருக்கும்.
//தமிழ், தமிழ் என்று பெரும் போராட்டங்கள்- தீக்குளிப்பு, போலீஸ் அடி உதை உட்பட- மூலம் ஆட்சி பிடித்து, அக்மார்க் தமிழ் ஐந்து முறை ஆட்சியில் அமர்ந்தும், பட்டபடிப்பையும் பட்டமேற்படிப்பையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டிய நிலை - மருத்துவம் பொறியியல் படிப்பு உட்பட.//
நீங்கள் சொன்னது போல செய்திருக்கலாம் ஆனால் அதில் ஒரு நடைமுறை சிக்கல் இருக்கிறது, தமிழில் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு செல்லவில்லை என்றாலும் பிற மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லும் நிலை உள்ளது அப்போது கடினமாக இருக்கும், எனவே தமிழில் படித்தால் தமிழ் நாட்டில் வேலை உத்த்ரவாதம் என ஒரு நிலை உருவானால் மட்டுமே தமிழ் வழியில் பொறியியல்,மருத்துவம் கொண்டு வர முடியும்.
அப்படி செய்யாமல் தமிழ் வழி உயர் படிப்பினை மட்டும் கொண்டு வந்தால் , மாட்டு வண்டியில் மாட்டினை முன்னால் கட்டாமல் பின்னால் கட்டியது போலாகிவிடும் :-))
அருமை அருமை வளரட்டும் உங்கள் "அகராதி" பணி.
உம் யாரங்கே கொண்டு வாருங்கள் ஒரு பொற்கிழி.
உங்கள் தொண்டு வளரட்டும் புலவரே.
ஸாரி - மேலும் சற்று ஆரய்ந்ததில் நான் குறிப்பிட்ட தளம் அசலானதே! என் பின்னூட்டத்தை இக்னோர் செய்க.
சரவணன்
சரவணன்,
வாங்க நீங்களே சரிப்பார்த்தாச்சுன்னு நினைக்கிறேன் ,அப்போ அந்த பின்னூட்டம் எடுத்து விடுகிறேன்.
சந்தேகம் இருக்கும் போது .
.co.in or nic.in என முடியும் முதன்மை இணையதளம் போய் அங்கிருந்து சம்பந்தப்பட்ட இணைப்புக்கு செல்லுங்கள்.
பான் கார்டு பற்றி அறிய
https://nsdl.co.in/
என்ற தளத்திற்கு சென்று பின்னர்
tax information network என்ற link அழுத்தி நீங்கள் சொன்ன தளத்திற்கு செல்லலாம். எனவே சந்தேகப்பட தேவை இல்லை.
ஆனாலும் என் மேல உங்களுக்கு அபார நம்பிக்கை தான், உங்கள் நம்பிக்கைக்கு நன்றி!
அறியாதவரே,
வாங்க ,நன்றி!
அகராதி புடிச்சவன்னு ஊருக்குள்லே நாளு பேரு சொல்றாங்க, இதுல நீங்க வேற :-))
பொற்கிழியா? ...சொக்காய கிழிக்காம விட்டா போறாது , ஆனாலும் நீங்க என்னை ரொம்ப புகழுறிங்க :-))
இப்படி நாளு பேரு ஆதரவு கொடுத்தா பாழுங்கிணத்துல கூட கண்ணை மூடிக்கிட்டு குதிக்கலாம், :-))
நன்றி!
வவ்வால்,
////எனவே தமிழில் படித்தால் தமிழ் நாட்டில் வேலை உத்த்ரவாதம் என ஒரு நிலை உருவானால் மட்டுமே தமிழ் வழியில் பொறியியல்,மருத்துவம் கொண்டு வர முடியும்.///
என்னது!!! தமிழ்நாடு இன்னும் லோகத்தில் வல்லரசு ஆகவில்லையா?? அப்போ, நான் கனவுலோகத்தில் சஞ்சரிக்கிறேனா?? தேனாறும் பாலாறும் ஓடுகிறது என தாத்தா சொன்னது, அம்மா சொன்னது எல்லாம் பொய்யா??
அடப்பாவமே!! அப்போ லோகநாயகரை ஜோலிவுட்லே கூப்பிட்டாக என்று அடித்துவிட்டதை, தமிழ்நாடு வல்லரசு ஆகிவிட்டது என பிரம்மை பிடித்தது தவறோ.
இன்னும் நல்ல கனவு காணணும் போல.
வவ்வால்,
அந்த பெயரிலி மறுமொழி அடியேனதுதான்.
இந்த பின்குறிப்பை சேர்த்து அதனுடன் படிக்கவும்.
நன்றி.
நரேன்,
ஜூனியர் அப்துல்கலாமே வாரும் :-))
பெருசாயில்ல இருக்கு கெனவு, இன்னும் இந்தியாவுக்கே வல்லரசு கெனவு பலிக்க காணோம், அதுக்குல்ல தமிழ்நாடு வல்லரசுன்னு சொல்லிக்கிட்டு ,இதுக்கு தான் மாநிலத்துக்கு எல்லாம் நாடுன்னு வர்ராப்போல பேரு வைக்கக்கூடாது :-))
எதுக்கும் வி.காந்தின் வல்லரசு குறுவட்டு வாங்கி நலு தபா கண்ணு கொட்டாம பார்க்கவும் ...அருப்புக்கோட்டை அய்யாக்கண்னுன்னு தேவாயனி கச்சைக்கட்டி ஆடும் :-))
//உண்மையில் நீங்கள் கூர்மதிக்காரர்தான்//
@நரேன்!அதான் குத்துற போதே கூர் தெரியுதே.
அமாவாஸ்ய என்பதற்கு பயன்பாட்டில் உள்ள ஒரு அரிய தமிழ் சொல் மறைமதி நாள் என்பதாகும், பௌர்ணமி என்பதற்கு முழுமதி நாளாகும் ... !!!
நல்லதோர் பதிவு சகோ ... !!!
ராச நடை,இக்பால் செல்வன்,
தங்கள் வருகைக்கும் ,கருத்திற்கும் ,நன்றி!
அண்ணாத்த ரொம்ப வெவரம சொல்லுகினிங்க ரொம்ப சபாஸ்.ஆனா நம்ம சென்ன செம்தமிளுக்கு அர்த்தம் சொல்லிக்க முடியுமா? சொல்லுங்க பாப்போம் "ஒரு தபா","கீது", "சோறு தூண்டிய","அப்பாலபோ","ஜகா","இஸ்துகினு","பேஜாரு","மருவாத".
வவ்வால் நண்பரே அருமையான தமிழ் அர்த்தங்கள். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் புகுந்துவிட்ட இந்நாளில் நமது தாய் மொழியான தமிழை முடிந்த வரையிலும் சரியான உச்சரிப்புடனும்,வார்த்தையுடனும் பேச வேண்டும். மேலே சொன்னது போல்; தமிழ் சிறிதுசிறிதாக மருவி கொச்சை மொழியாகிவிட்டது.மற்றம் தேவை பலரும் மற்ற முயற்சிசெய்கின்றனர். அதில் உங்களின் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.
அறிவு,
வாங்க,நன்றி!
சென்னை சொல்லாடலில் பல மொழி கலந்திருக்கும், நீங்கள் சொன்ன சிலவற்றில் தமிழ், பாராசீகம், சமத்கிருதம், இந்தி எல்லாம் இருக்கு, இன்னும் சில சொற்களும் சேர்த்து பதிவாக இட்டு விடுகிறேன், பின்னூட்டத்தில் சொன்னால் நிறைப்பேர் படிப்பதில்லை.
முன்னர் எல்லாம் நிறைய பதிவர்கள் தமிழ் சார்ந்து பதிவுடுவார்கள், அவர்கள் எல்லாம் ஓய்வெடுக்க போயிட்டாங்க, இப்போ கவர்ச்சியான பதிவுகளே அதிகம் தலை தூக்கி இருக்கின்றன.
மீண்டும் கொஞ்சம் பேர் இப்படி ஒருங்கிணைந்தால் பதிவும், தமிழும் செழிப்படையும்.
நீங்களும் தெரிந்த சொற்களை சொல்லுங்க, அல்லது சொற்களை எடுத்து கொடுங்க, பயன்படும்.நன்றி!
@நரேன் என பின்னூட்டம் போடனும்.இல்லாட்டி அனானியா வந்து ஆவியா அலையனும்.இரண்டுமில்லாம அனானியும் போட்டு,நரேனும் நாந்தான் போட்டதின் ஒரே பலன் அமெரிக்க பங்காளி வவ்வால் பறக்குதான்னு பார்ப்பதுதான்:)
எப்படியோ பொம்பளைக சாடை பேசுவது மாதிரியா இரண்டு முகமூடிகளும் பேசிக்கொண்டா சரிதான்.நமக்கும் பொழுது போகனுமில்ல!
ராச நடராசர்,
இது எதுக்கு? எங்களுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாதா? வழக்கம் போல சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு.
எவனாது சண்டைப்போட்டா அதில் ஒரு குரூர சந்தோஷம் உங்களுக்கு, நீங்க நேர இறங்கி சண்டை போடணும் இல்லைனா கம்முனு இருக்கணும்.
எனக்கு எப்போ எங்கே வச்சு கெடா வெட்டணும்னு தெரியும் வெட்டிக்கிறேன்.
விட்டா பின்னூட்டம் போடறதே குரூர சந்தோசம்ன்னு சொல்வீங்க போல இருக்குதே:)
என்னமோ பழமொழி சொல்ற மாதிரி இருக்குது.
இணைவதில்தான் மகிழ்ச்சி.குப்புற திரும்பி படுத்துக்கொள்வதில் அல்ல.
ராச நடராசர்,
இந்தப்பதிவில் ஏதோ கொஞ்சம் உருப்படியா பின்னூட்டம் வருது,அதிலும் மொக்கை போடணும்னு நிக்குறிங்களே,
பொழுது போகணும்னு கொள்கை விளக்கம் சொல்லிட்டு அப்படியே பல்டி அடிங்க :-))
என்ன வச்சும் பிராபல்யம் ஆகலாம்னு ஒரு முயற்சியில் இருக்கு ஒரு லூசு அதை வந்து இங்கே பேசிக்கிட்டு இருங்க.
நான் மொக்கையா ஒரு பதிவு போடுறேன் ,அப்போ வந்து 1000 பின்னூட்டம் வேண்டுமானாலும் சம்பந்தமே இல்லாமல் போடுங்க!
நுண்புலம் - already in use i guess. i've heard something like.."nulaimaan nunpulam..."
@வவ்வால்,
தமிழ் புலவர்கள் விவாதத்தில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் "என்ன கொடுமை சார் இது-8" என்ற பதிவில் வவ்வால் அவர்களுக்கு பதில் புன்னுடத்தை தாமதமாக இன்று தான் வெளியிட்டுள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
அனானி,
பதிவு மற்றும் பின்னூட்டங்களை சரியாகப்படிக்கவும். நன்றி!
-------
உபகாரி,
உங்க கடமை உணர்வுக்கு அளவே இல்லையா, , அப்பின்னூட்டம் படித்தேன்,நன்றி,வணக்கம்!
வவ்வால்,
சகோ.ராசநடைராச என்ன சொல்கிறார். தயவுசெய்து கொஞ்சம் விளக்கமுடியுமா???
நரேன்,
வாரும்,
"ராச நடைராச" என பாலிண்ட்ரோம் ஆக்கிட்டிங்களே அவரை :-))
இப்போ தெரியுதுங்களா அன்னாரோடு எம்புட்டு கஷ்டப்படுறேன்னு, இப்படித்தான் சாடையாவே பேசுவார்,நாமா புரிஞ்சுக்கணும்.
அது ஒன்னுமில்ல, நீர் ஒரு அநாமதேய பின்னூட்டும் , பின்னர் அந்த பெயரிலி நான் தான் என சேர்த்து வாசிக்கவும் போட்டீரே அதை வச்சு அக்கப்போரு மோட்டார் மவுத் சயிண்டிஸ்டு ஒரு பதிவு போட்டு இருக்கு, என்னமோ ரகசியம் கண்டுப்பிடிச்சாப்போல , எனக்கு ஒன்னியுமே பிரியலை இதுல என்ன ரகசியம் கண்டுப்பிடிச்சாருன்னு அதை காபி செய்து போட்டு பாருங்கள் வவ்வாலின் லட்சணம்னு பதிவு சொல்லிக்கிட்டு இருக்கு ஓய்.
எனக்கு எதால சிரிப்பதுன்னே தெரியாத ஒரு துன்பியல் நகைச்சுவையா இருக்கு :-))
கூடவே ராச நட ராசவும் என்னமோ பெரிய தேவ ரகசியம் போல சாடையாக என்னமோ பேசிக்கிட்டு இருக்கார், வர்ர வர நாட்டில எதுக்கெல்லாம் பிரச்சினைய கிளப்புவாங்களோன்னு பீதியா இருக்கு ...முடியலை ...அவ்வ்வ்!!!!
வவ்வால்,
///"ராச நடைராச" என பாலிண்ட்ரோம் ஆக்கிட்டிங்களே அவரை///
ஹா..கவனிக்க மாட்டீங்கனு நினைச்சேன்.
அடியேனின் மறுமொழியை பிரபலமாக்கிய பதிவின் சுட்டியை தந்தால், வட்டியோட கடன்பட்டவனாவேன்.
Post - இடுகை. பதிவுலகில் இடுகையை பலர் தவறாக பதிவு என்றே குறிப்பிடுகிறார்கள்.
பரவாயில்லை- கேடு இல்லை, தரக்கேடு இல்லை இத்தூய தமிழ் சொல் மலையாளத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதை இராம.கி அவர்கள் சொன்னதாக நினைவு.
வௌவால் புகழ்ப்பெற்ற பதிவர் :)) சரியா?
சந்தோஷம் என்பதற்கு தமிழில் பல பெயர்கள் இருந்தாலும் பெரும்பாலும் மகிழ்ச்சி என்பது பொருத்தமாகமே அமையும்.
உதயம் என்பதும் சூரியன் என்பதும் வடமொழி.
தமிழ் வளர்க்கும் மங்கையின் படம் போட்டிருந்தா குளிர்ச்சியா இருந்திருக்கும். கூரிய ஒருமுக பார்வை கொண்ட உங்களுக்கு புரிஞ்சிருக்குமுன்னு நினைக்கிறேன் :))
குமரன், இராகவன் இணைந்து நடத்தினார்கள் அப்புறம் அதில் கோவி, ஞானவெட்டியான் போன்றோர் சேர்ந்தார்கள். இப்ப அந்த பதி்வே இல்லை. எல்லாம் அந்த குமரனுக்கு தான் தெரியும்.
வவ்வால்,
கண்டுபிடித்துவிட்டேன்.
ஹா..ஹா..ஹா...ஹா...ம்ம்ம்ம்.
நன்றாக சிரிக்க வைத்துவிட்டார். நானும் பிரபல மறுமொழியாளன்.
என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை.
லாக் இன் செய்யாமல் போட்ட மறுமொழிக்கு, நாந்தான் அப்படி போட்டேன் என்று சொன்னதக்கு, ஒரு அக்கப்போரா. அந்த மறுமொழி நாம் விவாதித்த-மேற்படிப்பு தமிழில் இருக்க வேண்டுமென்றால் வேலைவாய்ப்பு தமிழகத்தில் கிடைக்கவேண்டும் அது வல்லரசானால்தான் முடியும்- விடயத்தின் தொடர்ச்சியே. நீக்கிய மறுமொழி என்ன provoking கமெண்ட் என்று தெரியவில்லை.
அப்படி நான் மறுமொழி போட்டு என்ன சாதித்தது விட்டேன் என்றும் புரியவில்லை.
சமபந்தப்பட்ட இடுக்கை தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. இப்படி பெரியமனுஷ சயிண்டிஸ்ட் இப்படியா சில்லரைத்தனமாக ஆராய்ச்சி செய்வது.
நல்ல விஷயங்கள்...
1) ஈயடிக்கும் எனது தளத்திற்கு வருகைகள் அதிகரித்துள்ளது.
2)இந்த இடுக்கையின் சுட்டியை அளித்துள்ளார்.
3) கடைசியில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
ராசநடை அங்கே சென்று நன்றாகவே கல்லா கட்டியிருக்கிறார்.
வவ்வால் உங்களை பார்க்கிறதுக்கே ரொம்ப பயமாயிருக்கு.
நரேன்,
வாரும்,
ஹி...ஹி வவ்வாலுக்கு மீ ஒலி பார்வை உண்டு ,மத்தவங்க கவனிக்காம விடுவேனா?
நீர் தான் சர்வலோக சஞ்சாரியாயிறே கண்டுப்பிடிப்பீர்னு நினைச்சேன், பதிவின் அடியில் ஒரு தொடுப்பும் போட்டு இருந்தாரே, ஒழு வழியா புடிச்சு படிச்சீரா, எனக்கு ஒரு மண்ணும் விளங்கலை, என்ன சொல்ல வர்ரார்னு என் சின்னம் சிறு மூளைக்கு விளங்கலை உமக்கும் விளங்கலையா?
அப்போ ராச நடையரை கேட்டா விளக்கம் கிடைக்கும் என நினைக்கிறேன்,அவர் தான் எல்லாம் புரிந்தார் போல பேசிக்கிட்டு இருக்கார் :-))
//சமபந்தப்பட்ட இடுக்கை தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. இப்படி பெரியமனுஷ சயிண்டிஸ்ட் இப்படியா சில்லரைத்தனமாக ஆராய்ச்சி செய்வது.//
அதே தான் ,சரியா ஓட்டை காலணாவ இருப்பார் போல :-))
மேலும் நீக்கப்பட்ட பெயரில்லா பின்னூட்டு இன்னொருவர் பான் கார்டு பற்றி இட்டது, அவரே எடுக்க சொல்லிட்டார்னு அடுத்த பின்னூட்டு படித்தாலே தெரியும், மேலும் என்னுடைய பதிலும் பார்த்தால் புரியும்.
என்னை பற்றி ரொம்ப திங்க் பண்ணி அவருக்கு நட்டு லூசா போயிடுச்சு போல :-))
------
என்னைப்பார்த்தா அம்புட்டு டெர்ரராவ இருக்கு :-))
அடியேன் பீர் வடியும் பாலகன் சாமி!
----------
குறும்பன்,
வாங்க,நன்றி!
ஆமாம் ஒரு தனி ஆக்கம் இடுகை, ஒட்டு மொத்தமாக பதிவு என்று சொல்லணும், ஆனால் பொதுவாகவே பதிவு அதிகம் பயன்ப்பாட்டில் இருக்கு.
கேடில்லை, தரக்கேடில்லை என்பது கொஞ்சம் அழுத்தமாக ,இருக்கே, ஆனால் பயன்ப்படுத்தலாம் என நினைக்கிறேன்.
//வௌவால் புகழ்ப்பெற்ற பதிவர் :)) சரியா?//
ஹி...ஹி நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.
குமரன்,இராமகி இன்னும் பலரும் அப்போது தமிழ் குறித்து நன்கு உரையாடுவார்கள்,இடுகை இடுவார்கள், இப்போ காணோம்.
நானும் போய் வம்பு வளப்பேன் :-))
சரி யாரும் இல்லைனு நானே ஆரம்பிச்சுட்டேன், நான் ரொம்ப ஆழமாக இறங்கவில்லை பெரும்பாலும் புழக்கத்தில் உள்ள பிரமொழி சொற்களை அடையாளங்காணும் ஒரு முயற்சி எனலாம்.
சூரியன் ,உதயம் எல்லாம் வடமொழின்னு தான் சொல்லி இருக்கேன்.
நன்றி!
உன் பங்காளி பருண் எங்ககிட்ட கதருறாரு பாரு.
வந்து ரசிக்கவும்.
அவர் கமெண்ட் நீக்கினால் அனைத்து கமெண்ட்ஸ்ம் இங்க காப்பி பேஸ்ட் பண்ண படும்.
:-)
முத்தால்ப் பையா!//////
அட சீ எட்ட போ.உன் டெஸ்ட் இப்படியா?
நீ வேற பெரியண்ணன் கலாச்சாரத்தில
இருக்க.ஆம்பிளைகிட்ட வந்து முத்தம் கொடுத்துகிட்டு.
நீ என்னத்தை கண்ணையா தானே?
இல்லை
என்னடி முனியம்மா நடராஜ்ஆ?
ஆ.ஆங்.பருண்.
எங்க போஸ்ட் இன்னும் நிறைய இருக்கு.
அதையும் உங்க அறிவியல் ஆய்வுக்கு
எடுத்துக்கொள்ளலாமே?
விரைவில் ஒபாமா கூப்பிட்டு வச்சி ""சிறந்த பெரியண்ணன் மகன்""
விருது தருவாரில்ல?
இப்ப இனி எந்த வேலையும் செய்யாம இப்படியே டான்ஸ்
ஆடுவியாம்.நாங்க ரசிப்போமாம்.
:-)
டெலிட் பண்ணுற வேலை வச்சிக்காத
சொல்லிப்புட்டோம்.
டெலிட் பண்ணனும்ம்னா எங்க காலை பிடிச்சி கதறினா பெர்மிசியன் தருவோம்.
இல்லாட்டி கமெண்ட் பாக்ஸ்ஐ மூடு.
:-)
நீ டெலிட் பண்ணா உன் பங்காளி
வவ்வால் கிட்ட இந்த கமெண்ட்ஸ் எல்லாம் போடப்படும்.
எப்படி வசதி?
முட்டாள் பையர்,
என்னய்யா வேலை இது,அந்த மோட்டர் மவுத்து எதுனா ஒளரும் அதை இங்கே போட்டுக்கிட்டு ,நான் மொக்கையா பதிவு போடும் போது ஒன்னுமில்லை, இங்கே வேண்டாம்.
வேற எங்காவது மாட்டும்யா அப்போ கும்முக்கிலாம்.
வவ்வால் மாமா.சுபி சாமி எங்ககிட்ட வேற வந்து மாட்டிக்கிட்டாரு வாங்களேன்.
:-)
அவர் பதிவில் போய் கொஞ்சம் விளையாடுவோம்.
வௌவால் என்பதே சரியென எண்ணுகிறேன்
Post a Comment