வெயிலில் நிற்கும்
மரங்கள் தரும்
நிழலில் நடக்கிறார்கள் மனிதர்கள்!
நானோ நிழலை புறக்கணித்து
வெயிலில் நடக்கிறேன்,
எனக்கென துணையாய்
பின் தொடரும்
என் நிழலை புறக்கணிக்க
என்னாலாகாது!
எனக்கு தெரிந்த
புறக்கணிப்பின் வலி
என் நிழலுக்கு தெரிய வேண்டாம்!
பின்குறிப்பு:-
கண்டிப்பாக இதை கவிதை என நான் கூறவில்லை வாசிப்போர் அப்படி நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!
5 comments:
பின்குறிப்பு நன்றாக இருந்தது... :)))))))))))) ச்சும்மா தமாசுக்குதான், கவிதை நல்லாதாங்க இருக்கு. நிறைய புறக்கணிப்ப சந்திருச்சிருக்கீங்களோ?
வவ்வால்
உங்கள் நிழல் உங்களை தொடரக்கூட ஒரு வெளிச்சம்
தேவைப்படும்
எதையோ எதிர்ப்பார்த்து பழகும்
மானிடரிடையே
நமக்கும் எதையும் எதிர்ப்பார்க்காத நட்போ, உறவோ கிடைக்கக்கூடும்...
தேடிப்பாருங்கள்...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பட்டியன்,
புறக்கணிப்பை எதிர்கொள்ளாத மனிதர் யார் தான் இங்கு இருக்கிறார்கள். உணர்வுஅகளை வெளிப்படுத்த கவிதையும் ஒரு கருவி அவ்வளவே.
--------------------------------
மாயன் , வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
//உங்கள் நிழல் உங்களை தொடரக்கூட ஒரு வெளிச்சம்
தேவைப்படும்//
அந்த வெளிச்சம் இருக்க வேண்டும் என்ப்தால் தான் வெயிலில் நடக்கிறேன் என்ற பொருளில் எழுதியுள்ளேன்!
எதையும் எதிர்பாராத நட்பை தேடி தான் திரிகிறேன் , தேடல் இல்லாத வாழ்கை பொருள் தராது , தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்தாலும் தேடலை நிறுத்த மாட்டேன்!
நன்றாகதான் இருந்தது
சந்திரவதானா ,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
Post a Comment