ஆழ் நீர் நெல் சாகுபடி என்று ஒரு முறை உள்ளது , பிலிப்பைன்ஸ், தாய்லாந், பர்மா , போன்ற நாடுகளில் அதிகம் , இந்தியாவின் கடலோரம் உள்ள சில தாழ்வான நிலப்பகுதிகளிலும்(w.bengal,kerala) செய்யப்படுகிறது.கேரளாவில் ஆலப்புழா,எர்ணாக்குளம், திரிசூர் பகுதிகளில் அப்படி செய்யப்படும் சாகுபடிக்கு பொக்காலி நெல் என்று பெயர்.
அதிலும் கடலோரமாக உள்ள கழிமுகம் பகுதிகளில் கடல் நீர் புகுந்து தேங்கி உள்ள உப்பு நீரில் பொக்காலி விவசாயம் நடக்கும். இந்த நெல் வகை அதிக உப்பு சகிப்பு தன்மை கொண்டது. வேறு எந்த வகையும் இப்படி தாங்கு திறன் கொண்டது அல்ல.
இம்முறை ஒரு இயற்கை விவசாயம் ஆகும். பூச்சி மருந்து, உரம் பயன்படுத்தபடுவதில்லை.இம்முறையில் நெல்வயலில் மீன், இறால் போன்றவையும் சேர்த்து வளர்க்கப்படும் அவ்வளவு நீர் வயலில் தேங்கி இருக்கும். குறைந்த பட்சம் 30 cm நீர் நிற்கும்.பல இடங்களில் நெல் வரப்புகளுக்கு இடையே படகில் போய் அறுவடை செய்வார்கள்
எப்படி இறால், நெல் சாகுபடி நடக்கிறது எனப்பார்ப்போம்.
நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி அதில் நெல் நடப்படும். இடை உள்ள நீர் தேங்கியுள்ள வாய்க்கால் போன்ற பகுதியில் இறால்,/ மீன் வளர்க்கப்படும். நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் அப்படியே நீரில் விடப்படும் அது மக்கி புழு உருவாக உதவும் அது இறாலுக்கு உணவு. இறால் வெளியிடும் கழிவுகள் நீரில் கலந்து நெல்லுக்கு உரம் ஆகும். இறால் கழிவுகளில் அதிகம் நைட்ரஜன் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்து அது!இவ்வாறு உப்பு நீர் தேங்கி உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதால் அப்பகுதியின் உப்பு தன்மை மேலும் அதிகரிக்கபடாமல் தடுக்கப்படுகிறது.
சராசரியாக 200 கிலோ இறால் கிடைக்கும் ஒரு கிலோ 400 - 500 ரூபாய்க்கு விற்கப்படும். நெல் ஒரு கிலோ 5 - 7 ரூபாய் , இரண்டு டன் வரை நெல் அறுவடை ஆகும்.இதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.
பொக்காலி நெல்வகை - IR 64,
இறால் வகை - வெள்ளை இறால், டைகர் இறால்
கேரள அரசு பொக்காலி நெல் சாகுபடிக்கு தற்போது பல உதவிகளும் , ஆர்கானிக் ஃபார்மிங் என்பதால் பொக்காலி நெல் விற்பனைக்கு சிறப்பு சந்தைகளும் உருவாக்கி தருகிறது.மேலும் அறிவுசார் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது.
17 comments:
இந்த சாகுபடி முறையைப் பற்றி அறிந்து கொண்டேன். நன்றி வவ்வால்.
குமரன்,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
ஆஹா வவ்ஸ், இப்படியெல்லாம் செய்து கொண்டுள்ளார்களா. அசத்தல். தேடிப்பிடித்து வந்து, இங்கு நம்பிக்கையூட்டிதற்கு நன்றிகள் கோடி. வளர்க வும் சேவை :-)
ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள் அடிக்கிறார்கள்.
வாங்க தெ.கா,
ஆமாம் விவசாயத்தில் இப்படி பல ஒன்றுக்கு மேற்பட்ட உற்பத்திகளை புகுத்தி வருவாய் ஈட்ட செய்வதும் நடக்கிறது இதனை " integrated farming and sustainable agriculture " என்பார்கள்.ஆனால் சிலவற்றை செய்ய அதிக பணம் முதலீடு தேவைப்படும். ஆனால் பொக்காலி விவசாயம் செய்ய மிக குறைந்த முதலீடே போதும், அது அங்குள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் மற்ற இடத்தில் எறால் வளர்க்கவென்றால் நீர் நிறைய தேவைப்படுமே!
கருத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
இப்படியும் ஒரு சாகுபடியா? நம்பவே முடியவில்லை. தகவலுக்கு மிக்க நன்றி வவ்வால். கச்சிதமாக விளக்கி இருக்கிறீர்கள்.
மாசிலா,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி! இது போல பல வித்தியாசமான நடைமுறைகள் இன்னும் இந்தியாவில் உள்ளது.
யோகன் ,
பகி அவர்கள் பதிவில் போடுவதற்கு பதில் இங்கு போட்டு விட்டீர்கள் போல தெரிகிறது :-))
வவ்வால்,
Excellent Post!
Thanks A lot!
சிவபாலன் ,
நட்சத்திரத்தின் பாராட்டுக்கு மிக்க நன்றி!
வவ்வால்!
இந்தியாவில் இப்படி ஒரு முறை இருக்கென இப்போதே அறிந்து மகிழ்ந்தேன்.
தென் கிழக்காசியாவில் மிக்கொங் நதி ஓரங்கலில் மிதக்கும் தோட்டங்களைத் தொலைக்காட்சியில் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதில் மீனும் பிடிக்கிறார்கள் (வளர்ப்பில்லை)
ஆனால் இவர்கள் றால் வளர்ப்பும் செய்வது மிக உன்னதம்.
அருமையாகத் தொகுத்து விள்க்கியுள்ளீர்.
யோகன் நன்றி!
மிதக்கும் தோட்டங்களா புதிதாக இருக்கிறதே , தண்ணீர் தேங்கிய சூழலில் நெல் போன்றவை தான் வளரும் , காய்கறி தாவரங்களும் வளருமா?
நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி
கொஞ்சம் விரிவாக விளக்க முடியுமா?
உப்பு சக்தியை எதிர்க்கும் ஒரே நெல் இது என்பது ஆச்சரியமான தகவல்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
குமார்,
நீர் தேங்கிய வயலில் மண்ணை குவித்து ஒரு அகலமான வரப்பு போல உருவாக்குவார்கள் இது போல ஒன்று விடு ஒன்று என வரப்பும் , வாய்க்கால் போன்ற நீர் தேக்கமும் இருக்கும்(ridges and furrow type). அதே போல வயலின் நான்கு புறமும் நீர் சூழ்ந்து இருக்கும்.
மிக்க நன்றி,வவ்வால்.
புரிந்தது.
வவ்வால்!
படங்களுடன் சிறு தகவல்கள் சேகரித்ததும்; ஒரு சிறு பதிவு போட்டு அறிவிக்கிறேன்.
யோகன் நன்றி,
கண்டிப்பாக அது ஒரு வித்தியாசமான பதிவாகத்தான் இருக்கும் . சீக்கிரம் போடுங்கள்!
வலைசரம் வழியாக இங்கு வந்தேன் புதிய விசயம் தெரிந்துக்கொண்டேன் அருமையான பதிவு!!!
Post a Comment