ரொம்ப நாளாக சர்வேசர் ஒரு பதிவை போட்டு கடல் ஏன் உப்பா போச்சுனு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கார் , இணையத்துல் விடை கிடைக்கும் என தெரிந்தும் அவர் பகுத்தறிவை நம்பாமல் கடவுளை கேட்கிறார் நான் எனக்கு தெரிந்த பகுத்தறிவை வைத்து (இணையத்தின் உதவியுடன்) ஒரு விளக்கம் சொல்கிறேன்.
கடல் உருவானது எப்படி:
ஆதி காலத்தில் பூமி உருவான போது வெகு சூடாக இருந்தது. அப்பொழுது நீராவிப்படலம் எங்கும் சூழ்ந்திருந்தது. பூமி குளிரும் போது அந்நீராவியும் குளிர்ந்து பெரு மழை பெய்து பள்ளமான இடங்களை நிறைத்தது அதுவே கடல் .
கடல் உப்பானது ஏன்:
1)ஆரம்பத்தில் பூமி வெப்பமாக இருந்தது எனப்பார்த்தோம், மழை பெய்து குளிரும் போது ,வெப்பமான கடல் அடி மட்டத்தில் நீர் வினை புரியும் போது பல தாதுக்கள் அதில் எளிதில் கறையும். அதனாலும் உப்பு சேர்ந்தது.
2)கடலில் நீருக்குள் பல எரிமலைகள் இருக்கின்றன , அவை வெளியிடும் லாவக்கள் மற்றும் வாயுக்களில் இருக்கும் தாது உப்புகள் நீரில் கலந்து உப்பு தன்மையை அதிகரிக்கும்.
3)கடல் வாழ் ஜீவாராசிகள் கடலில் இறந்து மக்கி தாதுக்களை சேர்க்கும்.
4)கடலுக்கு நதிகளும் நீரை கொண்டுவந்து சேர்க்கிறது. அவ்வாறு வரும் போது எண்ணற்ற தாதுக்களும் அடித்து வரப்படுகிறது, அவையும் உப்பு தன்மையை அதிகரிக்கும்.
மேலும் கடலில் தான் நதிகள் கலக்கின்ற , கடலில் இருந்து எந்த நதியும் பிறப்பதில்லை இதனால் நீர் வெளியேற்றம், சேர்ந்த உப்பு என எதுவும் வெளியேறது.
சூரிய வெப்பத்தின் மூலம் ஆவியாதல் தான் கடலில் இருந்து நீர் போகும் ஒரே வழி.அவ்வாறு ஆவியாகும் போது , உப்புக்கள் எடுத்து செல்லப்படாது கடலில் தங்கும். பின்னர் மழையாக நிலப்பகுதியில் பெய்து தாதுக்களுடன் மீண்டும் கடலில் சேரும். இது போன்ற நீர் சுழற்சி பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக நடந்து கடல் நீரில் உப்பு தன்மை மிகுந்து விட்டது. கடலில் நீர் சேரும் விகிதத்தில்ஆவியாதல் தவிர வேறு வழியில் நீர் வெளியேறி கொண்டு இருந்து இருந்தால் உப்பு தன்மை மிகுந்து இருக்காது.
தற்போது கடலில் இருந்து உப்புகள் எடுக்கும் வீதமும் , சேரும் வீதமும் சம அளவில் இருப்பதால். கடல் நீரின் உப்பு ஒரு சம நிலைப்பு விகிதத்தில் இருக்கிறது.
கடல் மட்டும் அல்லாது சில ஏரிகளும் நீர் வெளியேற்றம் இல்லாது , ஆவியாதல் மட்டுமே நீர் இழப்பு என இருப்பதால் உப்பு மிகுந்து இருக்கிறது.great salt lake , dead sea ஆகியவை கடல் நீரை விட அதிகம் உப்பு அளவினைக்கொண்டுள்ளது.
கடல் நீர் உப்புக்கரிப்பது போல் மனிதர்களின் கண்ணீரும் , வியர்வையும் உப்பு கரிப்பது ஏன்?
கண்ணீர்:
கண்ணீர் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வருகிறது. அதில் உப்பு வரக்காரணம். நம் உடலில் இருக்கும் உப்பு தான்.நம் உடலில் உள்ள செல்கள் , மற்றும் அதன் வெளிப்புறத்தில் உள்ள திரவங்களில் உப்பு இருக்கும். உள், வெளி உப்பு அடர்த்திக்கு ஏற்ப செல் உள் நீர் பரிமாற்றம் நடக்கும். எனவே தான் லாக்ரிமல் சுரப்பிகளில் இருந்து வரும் திரவம் ஆன கண்ணீரில் உப்பு இருக்கிறது!
வியர்வை:
வியர்வை உடலை குளிரவைக்க உதவும் ஒரு தகவமைவு. வியர்வையும் உடல் சுரப்பிகளில் இருந்து தான் வெளியேறுகிறது அதிலும் நம் உடலில் இருக்கும் உப்பு இருக்கும், மேலும் உடல் செயல் படுவதால் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும் யூரியாவும் கலந்து வரும் அதனால் வியர்வையும் உப்பு கரிக்கும்! அதிக வியர்வையினால் உடல் உப்பு சத்தை இழந்து உடல் தளர்ச்சி , தசை பிடிப்பு ஏற்படும் அப்பொழுது அதனை ஈடு செய்ய உப்பு சத்துள்ள திரவங்களை உட்கொள்ள வேண்டும்.
11 comments:
வவ்வால், தன்யனானேன்.
என் சந்தேகத்தை தீர்த்து வைக்கல ஆனா.
நான் கேட்டது (கடவுளால் படைக்கப் பட்டதோ, தானா வந்ததோ) இயற்கை இவ்ளோ அழகா டிஸைன் ஆயிருக்கு. கடல் நீர் மட்டும் ஏன் உப்பா படச்சான்.
மத்த விஷயங்களுக்கெல்லாம் ஒரு காரணம் கற்பிக்க முடியுது (பெரிய மரத்துல புளியங்கொட்டை மாதிரி சின்ன காய்கள், சின்ன செடியில பெரிய காய்கள் -பூசனிக்காய் மாதிரி).
இந்த கடல் தண்ணி மேட்டர் இடிக்குது.
என் பதிவில் அனானி ஒருவர் சொன்னது - கடல் தண்ணி நல்ல தண்ணியா இருந்திருந்தா, சாக்கடையாகியிருக்கும். உப்பு இருப்பதால், பாசி பூச்செயெல்லாம் வாழாம க்ளீனா இருக்காம். scientificaaவும் இது ஓ.கேவா?
வாங்க சர்வே,
நன்றி,
//கடல் தண்ணி நல்ல தண்ணியா இருந்திருந்தா, சாக்கடையாகியிருக்கும். உப்பு இருப்பதால், பாசி பூச்செயெல்லாம் வாழாம க்ளீனா இருக்காம். scientificaaவும் இது ஓ.கேவா?//
இதுவும் தவறே, கடல் பாசி கேள்விப்பட்டது இல்லையா. கடலிலும் அனைத்து விதமான நுண்ணுயிர்களும்,பூச்சிகளும் இருக்கிறது. செங்கடல் சிவப்பாக இருக்க காரணமே ரெட் அல்கே எனப்படும் பாசி தான். நிறைய பிளாங்டன்கள் கடலில் உண்டு.
கடல் நிலப்பரப்பை விட அதிகம், மேலும் கடலில் நீரோட்டம் , அலைகள் இடப்பெயர்வு இவற்றால் கடலில் சேரும் மாசுகள் இடம் கடத்தப்பட்டு விடும்.
சில இடங்களில் கரையோரம் கடல் நீர் நாற்றம் அடிப்பதை பார்த்து இருக்கிறேன் அந்த அளவு கழிவினை கலக்கிறார்கள்.
எண்ணைக்கப்பல்கள் விபத்தில் உடைவதால் ஏற்படும் எண்ணைக்கசிவால் கடல் மாசடைந்து மீன்கள் இறந்து அப்பகுதியே நாற்றமடிக்கும். பெரிய கடல் ஆனாலும் இப்படி ஆவது உண்டு!
கடல் சாக்கடை ஆகாமல் இருக்க காரணம் அதன் பரந்த அளவே!
இங்கு குடிக்கக்கூட கடல் தண்ணீரை தூய்மைப்படுத்தி உபயோக்கிறார்கள்.
ஒரு விஷயம,் பதிவுக்கு சற்று தள்ளி இருக்கும்.
சிங்கப்பூர் குடிநீரில் தன்னிறைவு அடைந்துவிட்டது தெரியுமா?
இந்த விஷயத்தை ஊன்றிப்படித்தால் பல சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வரும்.
வாங்க குமார் ,
நன்றி,
கடல் நீர் குடி நீர் ஆக்கும் நுட்பம் பழசு தான் , இந்தியாவில் அதற்காகும் செலவை நினைத்து தயங்குகிறார்கள்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு அது ஒரு சமாச்சாராமா, வளைகுடா நாடுகள் அனைத்தும் இப்படி தானே தண்ணி எடுக்கிறாங்க.
சென்னைக்கு இப்படி ஒரு திட்டம் இதோ வரேன் அதோ வரேனு தண்ணிக்காட்டிக்கிட்டு இருக்கு , எப்போ வரும்னு தெரியலை!
இதில் ஒரு காமெடி என்னனா , கடல் நீர் குடி நீர் ஆக்கும் கருவிகளை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்கிறார்கள்,சென்னையிலும் தயாரிக்கிறார்கள்.
Out of the Topic. The Reverse Osmosis Technology which is used for water purification is invented by an an Indian and Now Israel is the one Master in that. We need to Recycle / Reuse the water in our country especially in the south. Singapore is doing the same and if you see during raining in Singapore, the water is collected through out the singapore through canals and reserved in the reservoir. Not even a single drop of water is wasted. Even though they r buying the water from Malaysia, they r purifying it and selling back to Malaysia at a higher price! - Arun
அனானி ,
நன்றி!
சவ்வூடு பரவல் கண்டுபிடித்தது அல்லது அம்முறையில் நீர் சுத்திகரிப்பு செய்வது எதனை இந்தியர் கண்டு பிடித்தார் என்று சொல்ல வருகிறீர்கள்.
எதுவாக இருந்தாலும் பெருமையே, புதிய தகவல் இது!
சென்னையில் தயாரிக்கப்படும் நீர் சுத்திகரிப்பு கருவிகளுக்கு உலக அளவில் நல்ல பெயர் , ஆனால் நாம் வெளிநாட்டிடம் ஏலம் விடுகிறோம்.
நீர் சுத்திகரிப்பு, மறு சுழற்சி எல்லாம் வரும் காலங்களில் கட்டாயம் ஆகும் இந்தியாவிலும்!
வவ்வால் !
கழிவுகள் என்றாலே கரிக்கும் போல் உள்ளது. கடல் பூமி விட்ட கண்ணீரும் வேர்வையுமோ?
கடல் நீரென்றில்லை. நன்னீர் கூட சுத்திகரித்துக் குடிக்குமளவுக்கு மாசுபடுத்திவிட்டோம். பாரிசின் செயின் நதி 60 களில் மக்கள் நீராடியுள்ளார்கள். இன்று இயலாது. ஆனால் இந்த நீரைச் சுத்தம் செய்தே ;குடிநீராக வழங்குகிறார்கள். அதுபற்றிய விளக்கம் பார்த்தேன்...இதையா? குடிக்கிறோம் என மனம் கூறியது.தமிழ்நாடு; வட இலங்கை இந்தக் கடல் நீரைப் பயன் படுத்துவதை ஆரம்பித்தே ஆகவேண்டிய காலம் வெகுதொலைவில் இல்லை.
தமிழ்நாடு இயந்திரம் தயாரிப்பது எனக்குப் புதிய செய்தி.
வாங்க யோகன் ,
நன்றி,
ஊருக்கு ஒரு கூவம் இருக்கும் போல!
பெருகி வரும் நீர் தேவையை கணக்கில் கொண்டால் ,விரைவில் கடல் நீர் குடி நீர் ஆக்கும் முறைக்கு தான் அனைவரும் மாற வேண்டும்.
//தமிழ்நாடு இயந்திரம் தயாரிப்பது எனக்குப் புதிய செய்தி.//
இந்தியாவில் எல்லா சிறப்பானவையும் செய்வார்கள் மேல் நாட்டினரின் பயன்பாட்டிற்காக , இங்கே எல்லாம் வழக்கம் போல தண்ணி லாரிக்கு பிளாஸ்டிக் குடத்தோட காத்திருப்பாங்க!
இதில் ஒரு காமெடி என்னனா , கடல் நீர் குடி நீர் ஆக்கும் கருவிகளை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு விற்கிறார்கள்,சென்னையிலும் தயாரிக்கிறார்கள்.
தார்மீகமாக கோபம் வருகிறது.
குமார் ,
இதைக்கேட்டா இன்னும் அதிகமாகவே கோபம் வரும் , இந்தியாவில் இருக்க எந்த கம்பெனியும் தமிழ் நாட்டில் கொண்டுவர இருந்த கடல் நீர் குடி நீர் ஆக்கும் திட்டத்தில் ஏலம் கேட்க முடியாதபடி. ஏலத்தின் விதிகளை மாற்றி வைத்திருந்தார்கள்.
கடைசியில் ஒரு ரஷ்யன் அரசு நிறுவனம் ஏலத்தை எடுத்தது , அதையும் தட்டிக்கழித்தார்கள், அப்பொது அவன் நேரா கோர்ட்ல போய் சொல்லிட்டான் எங்க கிட்டே "கட்டிங்க்" கேட்டாங்க , இது அரசு சார்ந்த நிறுவனம் தர முடியாது சொன்னோம் அதான் ஆரம்பத்தில் ஒத்துக்கிட்டு இப்போ கேன்சல் செய்றாங்க அதை எங்களுக்கே தர உத்தரவு இடனும் கேட்டாங்க , அதனாலேயே அந்த திட்டம் நின்னு போச்சு.
இப்போ கூட பேரம் பேசிட்டு படியாம தான் தள்ளி போவுது அத்திட்டம்.
நல்ல தகவல்.
Post a Comment