Tuesday, August 21, 2007
சென்னைக்கு பிறந்த நாள்! - Madras day
நாளை 22- 8- 2007 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். 1639 இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக ஃப்ரன்சிஸ் டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்ப நாயக்கர் என்ற அக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.
சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:
1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.
1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.
1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது
1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.
அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.
1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.
1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.
1892 - உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.
1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.
1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்
1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.
1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.
1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி
1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.
1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
26 comments:
வவ்வால்,
சுவாரசியமான தகவல்கள். மிக்க நன்றி.
வெற்றி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை! :-)
நல்ல தகவல் திரட்டி, வவ்வால்!
ஏற்கனவே சென்னை(சென்னப்பட்டினம்) இருந்தது! அதுக்கு மெட்ராஸ் என்று பேர் வைத்து ஒரு அடையாளம் உருவாக்கிய நாள் தானே இது?
Madras Day and not Chennai Day! - சரியா? :-))
வாங்க கண்ணபிரான்,
நன்றி!
சென்னப்பட்டினம், மற்றும் மெட்ராஸ் என்பது ஒரே காலக்கட்டத்தில் புழக்கதில் வந்தது, சென்னப்பட்டினம் உருவான நாள் தான் இது. வெள்ளைக்காரர்கள் கோட்டை கட்ட இடம் வாஙிய நாள் இது!
ஹாப்பி மெட்றாஸ் டே :))
நன்றி அரை பிளேடு,
//ஹாப்பி மெட்றாஸ் டே :))//
repeatee ...
சிங்கார சென்னையின் சிறப்புகளை மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளுங்களேன்! எனக்கு தெரியாத எத்தனையோ தகவல்கள் இருக்கும்!நானும் அறிந்துகொள்வேன்.
MADRE DE DEUS - மாத்ரே - ஸ்பானிஷ்
இங்கே மேரியைக் குறிக்கும். மதராஸுக்கான
ஒரு பெயர்க் காரணம்!
அருமையான நகரம்.
அமெரிக்க யேல் பல்கலைக்கழக நிறுவனரின்
கல்லறை கோட்டை வளாகத்தில் இருக்கிறது!
பச்சையப்ப முதலியார் மட்டுமில்லை என்னுடைய
தாத்தாவும், கூவத்தில் குளித்திருக்கிறார் :-)))
இது இருபதுவின் நடுவில்! கூவம் சுத்தமாகத்தான்
இருந்திருக்கிறது அந்தக் காலத்தில்
ஷெனாய் நகர அருகே சதுப்பு நிலம்(ANNA NAGAR), அங்கெல்லாம்
யாரும் வீடு கட்டப்போவதில்லை
என்று முடிவெடுத்தவர்கள் என் முன்னோர்கள்!
வவ்ஸ்,
முடிவு பண்ணி அடிக்கிறீங்க... தொடர்ந்து நல்ல சரக்குள்ள பதிவுகளையே தருவதுன்னு, நகர்த்துங்க சொல்றேன்.. ;)
ரொம்ப பயனுள்ள பதிவு! நன்றி!!
WoW! Nice Post!
Thanks for sharing!
வாங்க அனானி ,
நல்ல தகவல்கலாக தறிங்க, மெட்ராஸ் என்பதற்கு பெரும்பாலும் இரண்டு காரணம் சொல்றாங்க நீங்க 3 வதா ஒன்றை சொல்லி இருக்கிங்க.
காரணம்1: நிலத்தை இலவசமா தருகிரேன் புதிய ஊருக்கு எங்க அப்பா பெயரான சென்னப்ப நாயகர் பெயரை வைக்கணும் என்று அந்த ராஜா சொன்னாராம், அதனால் அவரை மட ராசா என சொல்லும் விதத்தில் மதராசா பட்டினம் நு சொன்னார்களாம் வெள்ளைக்காரங்க.
காரணம்2: அப்பொழுது இங்கே நிறைய முஸ்லீம் பாட சாலைகள் இருந்தது அவற்றின் பெயர் மதராசா என்பார்கள் அதனால் இப்படி வந்தது என்பார்கள்.
இன்னொன்றும் சொல்வார்கள் முத்து ராசா என்ற மீனவர் தலைவனிடம் இருந்து கடலோரம் அனுமதி வாங்கினார்கள் அதனால் முத்துராசா பட்டினம் மதராஸ் ஆகியது என்றும்.
அந்த கால சுத்தமான கூவத்தில் குளித்த பெருமை உடையதா உங்கள் பரம்பரை , அருமை!
வாங்க தெ.கா,
திட்டம் போட்டெல்லாம் எதுவும் பண்ணலை , எல்லாம் உங்களை போன்றோரின் ஆதரவு தான். நல்லா இருக்குனு சொல்வதே போதும்! நன்றி!
வாங்க சிவபாலன் ,
நன்றி!
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள் நம் அருமைச் சென்னைக்கு.
தகவல்களுக்கு நன்றி வவ்வால்.
வாங்க துளசி கோபால்,
நன்றி , வாழ்த்துவோம் சென்னையை!
சென்னைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இன்னும் யார் யாரெல்லாம் மதராஸ் பெயர்க் காரணம் கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம். கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாய்ங்க!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை :)
நீங்களும் சென்னையா வவ்வால்? :)
வாங்க நாகு,
நன்றி!
நாம எங்கே கண்டு பிடித்தோம் இருக்கிறத சொன்னோம்!
வாங்க கோவினாத்,
நன்றி,
நீங்களும் சென்னை குடிமகன் என்பதில் மகிழ்ச்சி!
மிக நல்ல தகவல்.
தகவலோட , பழங்கால சென்னை படங்களையும், குறிப்பாக கூவம் நதி , சென்னை பல்கலைகழகம், அண்ணா சாலை போன்ற படங்கலையும் போட்டுருந்தால் மிக சிறப்பாக இருக்கும்.
இருப்பினும் தகவலுக்கு நன்றி!
வவ்ஸ்,
அருமையான குட்டித் தகவல்கள். சென்னைக்கு பிறந்தனாள் வாழ்த்துக்கள்!
கூவம் ஒரு 20-30 ஆண்டுகள் முன் வரை சுத்தமாகத்தான் இருந்து இருக்கிறது. நதி வழி வாணிகமும் இதில் நடைபெற்று இருக்கிறது.
ஆனந்த லோகநாதன்,
நன்றி!
பழங்கால சென்னைப்படங்கள் நிறைய இணையத்தில் இருக்கு, எல்லாம் எடுத்து போட பொறுமைதான் இல்லை!
வாங்க தஞ்சாவூரார்,
நன்றி!
இணைந்து வாழ்த்துவோம்.
கூவம் அக்காலத்தில் சுத்தமாகவும், நீர்வழி பயணத்திற்கும் பயன்பட்டுள்ளது. தற்போது தான் நாசமா போய் நாறுது!
வவ்வால்!
அருமையான தகவல்கள்.
கூவத்தில் குளித்ததாக படித்த ஞாபகம்.இன்றும் மனம் வைத்து; வடிகால் அமைத்தால் மாற்றலாம்.
யோகன்
நன்றி,
கூவத்தை சுத்தம் செய்ய 3000 கோடி ஆகும் என ஒரு கணக்கு சொல்கிறார்கள். நல்லா இருந்த நதியை நாசம் பண்ணிட்டு இப்போ எவ்வளவு பணம் தேவைப்பாருங்க. அதோடு அல்லாமல் கூவகரையோர மக்களுக்கு மாற்று இடம் வேறு தரவேண்டும் இல்லை எனில் சுத்தம் செய்வது இயலாது!
சென்னையை புகழ்ந்தது போதும். கொஞ்சம் வரலாற்றுப் பக்கம் திரும்புங்களேன். எதிர்நோக்குகிறேன்.
Post a Comment