Friday, August 24, 2007

அரசியல் சதுரங்கம்!


சேலம் ரயில்வே கோட்டம் அமையும் வரை ,நாளை முதல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களை இரவுபகலாக மறியல் செய்யப்போவதாக வீரப்பாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது தன்னிச்சையான ஒன்றாக இருக்க முடியாது கட்சி தலைமை உத்தரவிட்ட பின்னரே சொல்லி இருப்பார்.

இத்தனை நாளாக இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் வேகம்? கூட்டணிக்குள் இருந்து கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இராமதாசின் கட்சியை சேர்ந்த வேலு தான் ரெயில்வே இணையமைச்சர். இப்படி போராட்டம் நடத்துவதன் மூலம் ராமாதாசிற்கு எரிச்சல் ஊட்டும் சாதுர்யமாக கூட இருக்கலாம்.

இராம தாசு அளித்த மருந்தினையே கலைஞர் அவருக்கு திருப்பி தருகிறார் போலும்.இதன் மூலம் இணையமச்சர் வைத்து கொண்டே ஒரு ரயில்வே கோட்டம் கூட வாங்கி தரமுடியவில்லை என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சாணக்கியர் கலைஞர்! தமிழக அரசினை விமர்சித்தது போல் , ஏன் மத்தியில் கேட்கவில்லை என்று கேட்காமல் கேட்கிறார்!

இரண்டு கட்சிகளும் மத்தியில் கூட்டணியில் உள்ளன , ரயில் கோட்ட விவகாரத்தில் ராமதாசர் சத்தம் காட்டாமல் இருக்கும் போது , தி.மு.க சார்பில் போராடுவதால் , இது நாள் வரை மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சியை விமர்சித்தேன் என்று அவர் சொல்லியது தவறு என்றும் காட்ட வசதியாகப்போய்விட்டது கலைஞருக்கு.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறார் கலைஞர்!இது நாள் வரை தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

ஆனால் இதில் மகா கடுப்பு "பனம் கொட்டை தலையன்" லாலுவின் போக்கு தான், நிர்வாக ரீதியாக செய்யப்படும் ரயில்வேயின் உள்விவகாரம் இது , எற்கனவே அறிவிப்பும் செய்த ஒன்று, அதற்கும் பிறகும் கேரளாவும் , தமிழ் நாடும் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இப்படி ஏற்கனவே எத்தனையோ கோட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏதோ புதிதாக செய்வது போல ஏன் இந்த தயக்கம்.இவரை எல்லாம் நிர்வாக இயல் தந்தை என அதற்குள் மீடியாக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.

4 comments:

Unknown said...

இவர்கள் செய்யும் அரசியலில் சேலம் கோட்டம் வராமல் போய்விடுமோ என்ற கவலை இருக்கிறது வவ்வால்.இரண்டு மாநில அரசியல்வாதிகளும் ஓவராக ஆட்டம் கட்டினால் அப்புறம் கமிட்டி,கமிசன் என்று போட்டு சேலம் கோட்டத்தை ஊறுகாயாக்கி விடுவார்கள்.

கோவையிலிருந்து பெங்களூர் போகும் இண்டர் சிட்டி எக்ஸ்பிரசை சேட்டன்கள் எர்ணாகுளம் வரை நீட்டித்து கோவை மக்களின் வயிற்றெறிசலை கொட்டிக் கொண்டார்கள்.சேலம் கோட்டம் வந்துதான் இவர்களுக்கு ஆப்படிக்க வேண்டும்.

வடுவூர் குமார் said...

தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
இன்று காலைச் செய்தியில்" மத்தியில் காங்கிரஸ்" அரசு கவிழும்- பா.ஜா.கா அறிவிப்பு.
அது மத்தியில் இங்கு தமிழ்நட்டின் உள்,கூடிய விரைவில் நாடகங்கள் அரங்கேற்றப்படும்.

வவ்வால் said...

செல்வன் ,

அதற்கு தான் லாலு விரைவாக செயல்பட வேண்டும் என்று, சும்மா இரண்டு மாநில அரசியல்வாதிகளுக்கும் நல்லவர் போல , கண்டுக்காம வழ வழா னு ஏதோ பேசுகிறார். இது ரெயில்வே சம்பந்தப்பட்டது , பிரிக்கிறதுனு முடிவு பண்ணியாச்சு அவ்வளவு தான் சொல்லிட்டு சட் புட்டுனு வேலைய ஆரம்பிக்காம, இதுக்காக புதுசா தண்டவாளமா போடனும்.

அரசியல்வாதிகள் பேச ஆரம்பிச்சா நிறுத்த மாட்டாங்க அப்புறம் இது முல்லை பெரியாறு, காவிரி போல சாகா வரம் பெற்ற பிரச்சின்னை ஆகிடும்!

வவ்வால் said...

வாங்க குமார்,

நித்திய கண்டம் , பூரண ஆயுசு தான் மத்திலும் ,மாநிலத்திலும் , அதான் ரெண்டு இடத்திலும் இருக்கும் மேல் மட்டம் எல்லாவற்றிலும் ஏகத்திற்கும் தடுமாறுது.

ஆனா மருத்துவருக்கு பதவிய விட மனசு வராது. ரெண்டு தலைவர்களும் காலைக்கட்டிக்கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்த தவளை, எலி போல தான் ஆகப்போறாங்க.

யார் யாருக்கு வேட்டு வைப்பார்கள் என பார்ப்போம்!