இலவசமாக தெனாப்ரிக்காவில் நடக்கும் 20க்கு இருபது உலக கோப்பை போட்டிகளை இணையம் மூலம் பார்க்க வேண்டுமா , அதற்கென sopcast என்ற p2p வகை தொலைக்காட்சி மென்பொருள் ஒன்று உள்ளது அதனை தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும.பின்னர் நேரடி ஒளிபரப்பாக போட்டிகளை தரும் இணைய தொடுப்புகளை சில இணைய பக்கங்களில் தருகிறார்கள் , அதில் ஏதேனும் ஒரு தொடுப்பினை சொடுக்கினால் உங்கள்து சோப்காஸ்ட் தொலைக்காட்சி செயல் பட்டு ஒளிபரப்பினைக்காணலாம். குறைந்த பட்சம் 256 kbps வேகமாவது இருந்தால் ஓரளவு நன்றாக தெரியும். அதிக வேகம் இருந்தால் இன்னும் நலம்.ஆரம்பத்தில் சிறிது நேரம் "buffer" ஆக எடுத்துக்கொள்ளும் பின்னர் தெளிவாக காட்சிகள் வரும்.
சோப்காஸ்ட்டில் உலகக்கோப்பை போட்டிகள் மட்டும் அல்லாது மேலும் பல இலவச தொலைக்காட்சிகளையும் காணலாம்.
சோப்காஸ்ட் இணையத்தளம்: sopcast
நேரடி ஒளிபரப்பு இணைப்பு தளம்; live links
மற்றும் ஒரு இணைப்பு தரும் தளம் , இதில் இங்கிலாந்து, இந்தியா ஒரு நாள் போட்டித்தொடர் என்று போட்டிருந்தாலும் 20க்கு இருபதும் தெரியும், முதல் லின்க் நன்கு வேலை செய்கிறது.
another link
தற்போதைய நிலவரம் ,
வங்க தேசம் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது. முதல் சுற்றிலேயே பரிதாபகரமாக வெளியேறியது மே.தீவுகள்
சுருக்கமான ஆட்ட விவரம்:
மே.தீவு:
தேவோன் சுமித்-51,
சந்திரபால்-37
சாமுவெல்ஸ்-27,
டிவைன் சுமித்-29
மொத்தம்- 164/8
வங்கதேசம் பந்துவீச்சு:
ஹசன் 4/34
ரசாக் 2/25
வங்கதேசம்:
அஷ்ரபுல்-61(27)விரைவான அரைசதம் 20 பந்துகளில்)
அஹ்மத்- 62(49)
மொத்தம் -165/4
மே.தீவுகள் பந்து வீச்சு:
ராம்பால் -2/35
சர்வான் -2/10
10 comments:
வாழ்க நீ எம்மான்...பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க...
TBCD,
எதுக்கு இவ்வளவு உணர்ச்சிவசப்படுறிங்க, இணைப்புலாம் வேலை செய்யுதானு சொல்லுங்க இல்லைனா வேற இணைப்புகள் போடுறேன்.
மின்னஞ்சல் கிடைக்கும்மா..இதை எப்படி பயன்படுத்துவது எப்படி என்று புரியவில்லை...
ஜி.டாக்குன்னு ரொம்ப செளகர்யமா இருக்கும்
ரொம்ப எளிதாச்சே,
முதலில் சோப்காஸ்ட் பிளேயெர் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
//மற்றும் ஒரு இணைப்பு தரும் தளம் , இதில் இங்கிலாந்து, இந்தியா ஒரு நாள் போட்டித்தொடர் என்று போட்டிருந்தாலும் 20க்கு இருபதும் தெரியும், முதல் லின்க் நன்கு வேலை செய்கிறது.
another link//
இப்போது கொடுத்த இந்த லின்க் பயன்படுத்துங்கள்.
அதில் லின்க்1 என்பதை கிளிக் செய்தால் தானாகவே சோப்காஸ்ட் பிளேயர் இயங்கும்.
எனக்கு நன்றாக வேலை செய்கிறது.
இப்பொழுது பாக்க முடிகிறது...
நன்றி...நன்றி...
TBCD,
ஆஹா ஒரு வழியாக கதவு திறந்து விட்டதா , பார்த்து மகிழுங்கள்.
இது மற்றவர்களின் கணினியில் இருந்து வருவதால் சில நாட்களில் சில லின்க்கள் வேலை செய்யும், கூகிளில் சோப்காஸ்ட் கிரிக்கெட் எனத் தேடினால் இன்னும் பல லின்க்கள் கிடைக்கும்.
ஆப்லைன் ஆகிவிட்டதே...:(
ரெப்ரெஷ் கொடுத்து பாருங்கள்(ப்ளே என்பதை ஒரு முறை கிளிக் செய்தால் ரெப்ரெஷ் ஆகும்), இல்லை எனில் அந்த இணைய தளத்தில் உள்ள மற்ற லின்க்கள் முயற்சி செய்யவும்.
எனக்கு இது வரை செயல்பட்டுக்கொண்டுள்ளது.
TBCD,
முதலில் கொடுத்துள்ள live links இல் உள்ள லின்க்1 என்பது வேலை செய்கிறது, இரண்டாவது கொடுத்துள்ளதிலும் லின்க்1 என்பது வேலை செய்கிறது.
Post a Comment